[0:00]اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمة لك والملك لا شريك لك
[2:40]அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வினுடைய மிகப்பெரும் கிருபையினால் புனித ஹஜ் பயணத்தை மேற்கொள்ளக்கூடிய ஹாஜிகள், அவர்களுக்கான
[3:10]பயண வழிமுறைகள் அதை பற்றிய சிறப்புகள் அடங்கிய இந்த விழாவிற்கு வருகை தந்திருக்கக்கூடிய ஹாஜிகளை, ஹாஜாக்களே உங்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ. சலாத்துக்கு கொஞ்சம் சவுண்டா பதில் சொல்லுங்களேன். அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வினுடைய கிருபையும் அல்லாஹ் நமக்கு கொடுக்கக்கூடிய வாய்ப்புகளில் ஒன்றாக அல்லாஹ் தேர்ந்தெடுத்த ஒரு பயணத்தை மேற்கொள்ளக்கூடிய ஹாஜிகளுக்கான வழிகாட்டுதல், நெறிமுறைகள், தர்பியா எனும் பயிற்சிகளையும் நாம் இங்கே தருவதற்காக வேண்டி ஒன்று கூடியிருக்கின்றோம். ஆரம்பமாக குர்ஆன் வசனத்தை ஓதி இன்ஷா அல்லாஹ் இந்த மஜ்லிஸ் துவக்கி வைக்கப்படும்.
[3:59]இன்ஷா அல்லாஹ் அடுத்தடுத்தது
[4:06]உலமா பெருமக்களுடைய அறிவுரைகளுக்கேற்ப இந்த விழா இன்ஷா அல்லாஹ் இனிதே நிறைவடையும். ஹாஜிகள் இந்த விழாவில் உள்ள அனைத்து நேரங்களையும் சரியாக செலவிட்டு இன்ஷா அல்லாஹ் உங்களுடைய பயடான இந்த நேரத்தை பொன்னான நேரமாக கருதிக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றது. ஆரம்பமாக அல்குர்ஆன். அஊதுபில்லாஹி மினஷ் ஷைத்தானிர்ரஜீம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். குல் சத்தக்கல்லாஹு ஃபத்தபியூ மில்லத்த இப்ராஹீமா ஹனீஃபா வமா கான மினல் முஷ்ரிக்கீன். இன்ன அவல பைத்தின் உழிலின் நாஸிலல்லதி பிபக்கத்த முபாரக்கவ் வஹுதன் லில் ஆலமீன். ஃபிஹீ ஆயத்தும் பையினாத்தும் மக்காமு இப்ராஹீம். வமன் தகலஹூ கானா ஆமினா. வல்லாஹி அலன்னாசி ஹஜ்ஜுல் பைத்தி மனிஸ்ததாஅ இலைஹி சபீலா. வமன் கஃபர ஃபஇன்னல்லாஹ கனியுன் அனில் ஆலமீன். சதக்கல்லாஹுல் அளீம். அல்ஹம்துலில்லாஹ். இந்த சபையினுடைய ஆரம்பமாக நமக்கெல்லாம் பயண அனுபவங்களில் மிக அதிகமாக அனுபவங்களை பெற்ற எனது ஆசிரியர் தந்தை தமிழகத்தில் மிகப்பெரிய ஆலிம்களில் ஒருவாக கருதப்பட்ட பி.எஸ்.பி ஜைனுலாபுதீன் ஹஜ்ரத் அவர்களுடைய தாமத் பரக்காத்துஹூ முன்னாள் முஹ்த்தமிம் முதல்வர் வேலூர் பாக்கியாத்து ஸாலிஹாத் அரபிக் கல்லூரியினுடைய அவர்களுடைய மகனார் பி.இஸட் பரக்கத் அலி ஃபாஸில் பாக்கவி ஹஜ்ரத் அவர்கள் தங்களுக்கு அறிவுரை வழங்குவார்கள்.
[6:57]அல்லாஹும்ம ஸல்லி அலா சையதினா முஹம்மதின் வஅலா ஆலி சையதினா முஹம்மத் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம் வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதுன் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரிக்த அலா இப்ராஹீம் வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதுன் மஜீத். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ. அல்ஹம்துலில்லாஹ். அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலிஹி ஹாத்தமின் நபிய்யீன் வஅலா ஆலிஹித் தையிபீன் வஅஸ்ஹாபிஹித் தாஹிரீன் வல் முஃமினீன வல் முஸ்லிமீன குல்லிஹிம் அஜ்மஈன் அம்மா பஅத். ஃபகத் காலல்லாஹு தஆலா ஃபீ கலாமிஹில் கதீம் வல் ஃபுர்கானில் மஜீத் அஊதுபில்லாஹி மினஷ் ஷைத்தானிர்ரஜீம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். வல்லாஹி அலன்னாஸி ஹஜ்ஜுல் பைத்தி மனிஸ்ததாஅ இலைஹி சபீலா. காலன் நபிய்யு ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். மன் அராத ஹஜ்ஜ ஃபல் யுஅஜ்ஜில். சதக்கல்லாஹுல் அலிய்யுல் அளீம். வஸதக்க ரசூலுஹுன் நபிய்யுல் கரீம். வனஹ்னு அலா தாலிக்க மினஷ் ஷாஹிதீன வஷ் ஷாகிரீன். வல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். அன்பிற்குரியவர்களே, அருமை சகோதரர்களே. புனிதமிக்க காபாவை காண வேண்டும் என்கிற ஆசையிலே, ஆர்வத்திலே, காதலிலே அதற்கான நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஹாஜிகளே, ஹாஜா மார்களே
[8:53]உண்மையிலேயே அல்லாஹ்வினுடைய மிகப்பெரும் அருளும், கருணையும், கிருபையும் இந்த சஃபர் நசீபாகுவதற்கு மிகப்பெரும் பாக்கியம் வேண்டும். இது எல்லோருக்கும் கிடைக்கின்ற பாக்கியம் அல்ல. இந்த சஃபரை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அல்லாஹ் ஜல்ல ஷானு ஹூ வத்தஆலா யார் ஹஜ் செய்ய பாக்கியம் பெற்று
[9:30]அவர் அந்த ஹஜ்ஜிலே வைத்து எந்த வகையான அருவருக்கத்தக்க செயல்களை செய்யாமல் பாவங்கள் புரியாமல் தன்னுடைய மனைவியாக இருந்தாலும் கூட பேணுதலாக இருந்து ஹஜ்ஜை முடிக்கின்றாரோ, அவர் விஷயத்திலே நபி அவர்கள் சொன்ன வார்த்தை என்ன தெரியுமா? கரகஅ அவர் திரும்புகின்றார் அன்ரு பிறந்த குழந்தையாக திரும்புகிறார் என்றார்கள். இந்த ஒரு வாக்கியம் தொழுகையாளிகளுக்கு இல்லை, நோன்பாளிகளுக்கு எல்லாம் இல்லை. ஹாஜிகளுக்கு மட்டும் சொல்லப்பட்ட ஒரு அருள் பாக்கியம் நிறைந்த வார்த்தை. யார் ஹஜ் செய்கிறாரோ, பாவங்கள் புரியாமல், தன்னுடைய மனைவியிடத்திலும் கூட மிக கவனமாக இருந்து பேணுதலாக இருந்து ஹஜ்ஜை செய்துவிட்டு திரும்புகிறாரோ, அவர் அன்று பிறந்த குழந்தையை போல திரும்புகிறார்.
[10:51]இந்த பாக்கியமுள்ள ஒரு வார்த்தை வேறு எந்த அமலுக்காவது சொல்லப்பட்டிருக்கிறதா? இல்லை. ஆனால் அதே நேரத்தில் யாருக்கு ஹஜ் செய்கிற பாக்கியம் கிடைத்து, நல்ல பண வசதி இருந்தும், ஆரோக்கியம் இருந்தும், சென்று வருகிற பாதையும் சிறப்பாக இருந்தும், யார் ஹஜ் செய்யவில்லையோ, அவர் யூதராக இறந்தால் என்ன, அவர் கிறிஸ்தவராக இறந்தால் என்ன என்றார்கள். ஹஜ் செய்தவரை பிறந்த குழந்தையை போல என்றார்கள். ஹஜ் செய்யவில்லை என்றால் அவனுடைய இறப்பை சொல்கிறார்கள். பிறப்பை சொன்னார்கள் உயர்த்தி, இறப்பை சொல்கிறார்கள் இவ்வளவு கடுமையாக. பிறகு சொன்னார்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யாரெல்லாம் ஹஜ்ஜுக்கு செல்கிறார்களோ, அவர்களது சுய இஷ்டத்தில் எல்லாம் செல்வது கிடையாது. நீங்கள் எல்லாம் ஹஜ்ஜுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள் என்றால், இது அல்லாஹ்வினுடைய அழைப்பு, அந்த அழைப்புக்கு நீங்கள் பதில் தருகிறீர்கள். எனவேதான் ஹாஜிகளுக்கு நபி அவர்கள் சொன்ன வார்த்தை, வஃப்துள்ளாஹ் என்றார்கள். அல் ஹாஜ்ஜு வல் உம்மாரும் வஃப்துள்ளாஹ். ஹஜ் செய்யக்கூடிய ஆண்களாக இருக்கட்டும், பெண்களாக இருக்கட்டும், உம்ரா செய்யக்கூடிய ஆண்களாக இருக்கட்டும், பெண்களாக இருக்கட்டும். அல்லாஹ்வினுடைய அழைப்பை ஏற்று வந்த விருந்தாளிகள். அந்த விருந்தாளிகள் என்ன கேட்டாலும் நான் தந்து விடுவேன். அவர்களிடத்தில் பாவம் மன்னிப்பு கேட்டால் பாவத்தை மன்னித்து விடுவேன். ஹஜ்ஜுக்கு முன்னால் செய்த எல்லா பாவங்களையுமே ஹஜ் செய்த காரணத்தால் மன்னிக்கப்பட்டு விடும். இப்படிப்பட்ட ஒரு அமல் உண்டா? நினைத்துப் பாருங்கள் எந்த ஒரு அமலுக்காவது யூனிஃபார்ம் இருக்கிறதா? ஆனால் இந்த அமலுக்கு யூனிஃபார்ம். இஹ்ராம் என்கிற ஒரு யூனிஃபார்ம். ஆலமேலிபாஸ். அத்தனை பேரும் அவர்கள் ஏழையாக இருந்தாலும், பணக்காரராக இருந்தாலும், கறுப்பராக இருந்தாலும், சிவப்பாக இருந்தாலும், எந்த நாட்டைச் சார்ந்தவராக இருந்தாலும், இஹ்ராம் உடைய உடை ஒரே அமைப்பிலே உடுத்துகிறோம். அது எவ்வளவு பெரிய பாக்கியம் தொழுகைக்கு என தனி உடை உண்டா? நோன்பாளிகளுக்கென தனி உடை உண்டா? இல்லை. ஆனால் ஹாஜிகளுக்கு அல்லாஹ் தனியே உடை தந்து மகிழ்விக்கிறான் என்றால், என் தந்தை அவர்கள் எனக்கு இஹ்ராம எடுத்துத் தரும்போது அழுதார்கள். நான் கேட்டேன் எதற்காக அழுகிறீர்கள் என்று. இல்லை ஹயாத்தோடு இருக்கும்போதே கஃபன் துணியை உங்க கையில கொடுக்கிறேனேன்னு சொன்னார்கள். அப்ப அந்த இஹ்ராமை உடுத்துகிற நேரத்தில் அந்த எண்ணம் வர வேண்டும். நாம் ஹயாத்தோடு இருக்கும்போதே கஃபனுடைய உடையை உடுத்திப் பார்க்கிறோம். மூத்து கபல அன் தமூத்து. நபிகள் சொன்னார்கள் நீ மரணிப்பதற்கு முன்பாகவே மரணத்தை நீ மரணிப்பதற்கு முன்பாகவே மரணத்தை நீ ஒரு தடவை பார்த்துக் கொள் என்றார்கள். அதுதான் ஹஜ். அப்பொழுது மரணத்தை நினைத்துக் கொண்டே இருப்பது அவனை ஷஹீதாக மரணிக்க வைக்கும் என்றார்கள். அவன் படுக்கையில் மரணித்தாலும் அல்லாஹ் அவனை ஷஹீதாக எழுப்புவானாம். மரணத்தை நினைத்துக் கொண்டே இருந்து மரணித்தவர்.
[15:19]இப்பொழுது இஹ்ராமுடைய உடையை கையில் வாங்கும்போது நான் உனக்கு கஃபனுடைய உடை அல்லவா தருகிறேன். என் பிள்ளையை ஹயாத்தோடு இருக்கும்போதே நாம் மய்யத்தா பார்க்கிறேனே என்றார்கள். தன்னை மய்யத்தாக பார்க்க வேண்டும். அந்த எண்ணம் தான் கஃபனுடைய உடையிலே இருக்கிறது. இஹ்ராமிலே இருக்கிறது. அப்படியென்றால் எந்த ஒரு அமலுக்கும் தனித்த உடை கிடையாது. ஆனால் இதற்கு இருக்கிறது. பெண்களுக்கு அவர்கள் நிய்யத் தான். முகத்தை திறந்து வைக்க வேண்டும்.
[16:06]அவர்களுக்கு இஹ்ராம் உடை என்று தனியாக கிடையாது. முகத்தை திறந்து வைத்திருக்க வேண்டும். அதே நேரத்தில் நிய்யத் வைக்க வேண்டும். ஆனால் அந்த முகத்தை திறந்து வைப்பதை கூட இங்க கவனியுங்கம்மா. அல்லாஹ்வுக்காக கவனியுங்க. வந்த நோக்கம் வீணா இடக்கூடாது. நினைத்துப் பார்க்கிறோம். அன்னை ஆயிஷா அம்மா கேட்டார்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லத்துட்ட யா ரசூலல்லாஹ் உங்க சஹாபிகள் எல்லாம் பக்கத்துல இருக்காங்களே. என்ன முகத்தை திறந்து இருக்க சொல்றீங்களே? எனக்கு ரொம்ப வெட்கமா இருக்கு. நான் முகத்தை திறந்து இருக்க முடியுமா என்னால? என்னால தாங்க முடியல யா ரசூலல்லாஹ்னு. அப்ப நபிகள் சொன்னார்கள் ரெண்டு குச்சியை ரெண்டு குச்சியை இந்த முடிக்குள்ள சொருகிக்க இங்க ஒரு குச்சி, இங்க ஒரு குச்சி சொருகி மேல துணியை போட்டுக்க, முகத்துல படக்கூடாது அவ்வளவுதான் என்றார்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். ஆனால் இன்று மிக அழகாக வந்துவிட்டது கேப் வந்துவிட்டது. பெண்களுக்கென அந்த கேப்பிலே எதை தைக்கப்பட்டு வருகிறது? எவ்வளவு அழகான வசதி இன்று வந்துவிட்டது. அதை பெண்கள் பேணனும். முகத்தை திறந்து இருக்கணும் என்ற அனுமதி இருந்தாலும் ஆயிஷா அம்மாவுடைய ஒரு சுன்னத் இருக்கிறது. அந்த சுன்னத் ஒவ்வொரு பெண்ணிடத்திலும் இருக்கணும். அங்கே ஹஜ்ஜுக்கு வருகிற போது இயல்பாகவே எவருடைய உள்ளத்திலும் கெட்ட எண்ணம் வராது. ஏனென்றால் காபா முன்னால் இருக்கிறது. புனித ஸ்தலம் யாருடைய உள்ளத்திலும் கெட்ட எண்ணம் வரதுக்கு வாய்ப்பே இல்லை வரவும் கூடாது. அதனாலதான் ஆண்களும் பெண்களும் எல்லாம் ஒண்ணாவே தவாஃப் செய்றோம். இருந்தாலும் கூட அந்த நேரத்தில் முகத்தை மறைத்திருக்கிறார்கள் ஆயிஷா அம்மா. ஆனால் அந்த துணி முகத்துல படக்கூடாது. அதுதான் நபிகள் தடை செய்தது. இன்னைக்கு கேப் அழகாக தயாரித்து, அந்த கேப்புக்கு மேல வர்ற மாதிரி இன்னைக்கு விக்குது. அதை நாம வாங்கிட்டு போகணும். வருத்தமான விஷயம் என்னவென்றால் அங்கே எல்லாமே ஹாஜிகள் தானே என்று இந்த ஹாஜி அந்த ஹாஜா மாட்டை சாதாரணமா பேசுகிறார். அந்த ஹாஜா அம்மா இவர்ட்ட சாதாரணமா பேசுறாங்க. அத ஒரு குற்றமாவே கருதாத ஒரு நிலை அங்கே உண்டாகிறது. ஆனால் அது எவ்வளவு பெரிய பேணுதல் மிக்க இடம் பேணுதலை கையாள வேண்டிய இடம். அந்த இடத்தில் வைத்து அவர்கள் சகஜமாக அந்நிய ஆண்கள், அந்நிய பெண்கள் என்ற எந்த பாகுபாடும் இல்லாத ஒரு குடும்பமாக மாறி விடுகிறார்கள். நாங்கள் எல்லாம் ஹஜ் செஞ்சோம் ஒண்ணா. இல்லை இல்லை அங்கேயும் சென்றாலும் நாம் அதை பேணத்தான் வேண்டும். இன்னும் சொல்லப்போனால் அங்கேதான் ரொம்ப பேணணும். அந்த இடத்துல ரொம்ப கவனமாக இருக்கணும். அதனால அந்நிய ஆணாக இருந்தால் அங்கேயும் அவர் அந்நிய ஆண் தான். அந்நிய பெண் அங்கேயும் அந்நிய பெண் தான். அந்த இடத்திலேயும் நாம் கோஷா பர்தாவை மிக அழகாக பேணி கொள்ள வேண்டும். ஆக இந்த அமல் இருக்கிறதே இதற்கென ஒரு தனி உடையை நமக்கு தந்த அமல். எந்த ஒரு அமலுக்காவது வஸியத் நஸியத் இருக்கிறதா என்றால் இல்லை. ஒருவர் தொழுகைக்கு போகிறார். நான் வஸியத் செஞ்சிக்கிறேன், நான் நஸியத் செஞ்சிக்கிறேன்லாம் சொல்றது இல்லை. அல்லாஹ்வுடைய அழைப்பு வந்தா நேரா பள்ளிக்கு போயிருவார். ரமழான் வந்தா உடனே நோன்பு வைப்பார். வஸியத்தும், நஸீஹத்தும் உள்ள ஒரே அமல் ஹஜ் தான். வஸிய செய்யணும். எப்படி ஒரு மனிதன் கடைசி நிமிடத்தில் செய்கின்ற அந்த வார்த்தைகளுக்குப் பிறகுதான் வஸியத் மரண சாசனம். அவர் மரணிக்கப் போகிறார் கொஞ்சம் தெளிவு இருக்கிறது என்றால் எனக்கு வரவேண்டிய பணம் இது, நான் தரவேண்டிய பணம் இது, இன்னென்ன காரியத்தை இப்படி எல்லாம் செய்து கொள்ளுங்கள். நான் சொல்லுகின்ற விஷயத்தில் மாற்றம் செய்யாதீர்கள் என்றெல்லாம் குடும்பத்தார்கள் சொல்லுவதற்கு பெயர் என்ன? வஸியத்.
[21:52]பிறகு நஸீஹத்தையும் செய்யணும். நான் இறந்த பிறகு நீங்கள் எல்லாம் உங்களுக்கு மத்தியில பிளவுபட்டு போயிடாதீங்க. நான் இறந்த பிறகு தொழுகை இல்லாத முஸீபத் உள்ள வீடாக ஆயிடாதீங்க. நான் எப்படி இந்த உலகத்தில் இருக்கும்போது பேணுதா இருந்தேனோ அந்த மாதிரி நீங்களும் இருங்கள் என்று நஸீஹத்தையும் செய்யணும். ஒரு மரணிக்கக் கூடியவர் எப்படி நஸீஹத் செய்யணும் வஸியத் செய்யணுமோ அதே மாதிரி ஹஜ்ஜுக்குப் போற நேரத்திலயும் வஸியத்தும் செய்யணும் நஸீஹத் செய்யணும். நபி அவர்கள் சொன்னார்கள் வஸிய செய்ய வேண்டிய ஒரு அமல், நஸீஹத் செய்ய வேண்டிய அமல். நான் அங்கே தவாஃப் செய்து கொண்டிருக்கிறேன். நீங்கள் இங்கே கடகடவென திரிஞ்சுகிட்டு இருக்காதீங்க. நான் கேட்கிற துஆவெல்லாம் கபூல் ஆகணும்னு சொல்லி நீங்க துஆ செய்யுங்க. நான் அங்க இருக்கிறேன் நான் சஹி சலாமத்து நான் திரும்பணும்னு துஆ செஞ்சுக்கிட்டு இருங்க. என்னுடைய அங்க ஹஜ்ஜு உடைய அமல்கள் எல்லாம் லேசாகணும் அப்படின்னு நீங்க துஆ செய்யுங்க. எந்த அசம்பாவிதங்களும் ஏற்பட்டடக்கூடாது. எந்த அசோகரியங்களில் நான் சிக்கிவிடக்கூடாது. ஹாஜிகள் யாருமே சிக்கிக்கூடாதுன்னு துஆ செஞ்சுகிட்டு இருங்க என்று நஸீஹத் செய்யணும். பிறகு வீட்டிலுள்ள விஷயங்களை வஸியத்தும் செய்யணும். பெரியவங்களை நான் படிக்க வெச்சிருங்க. சின்னவனா இந்த மாதிரி ஆக்கிருங்க. இதை அவருக்கு கொடுத்துருங்க. இதை இவர்ட்ட கொடுத்துருங்க. இதை அவருக்கே சொந்தப்படுத்திடுங்க எல்லாத்தையும் சொல்லணும். ஆனால் நம்ம இன்னைக்கு வஸியத்தும் செய்றது இல்லை, நஸீஹத்தும் செய்றது இல்லை. காரணம் அந்த அளவுக்கு ஹஜ்ஜுடைய அமல் லேசாயிருச்சு என்றார்கள். ஒரு காலத்துல ரொம்ப கஷ்டமா இருந்தது அல்லவா? ரொம்ப லேசாயிருச்சு ஒரு வருஷத்துல நாலு உம்ரா அஞ்சு உம்ரா சாதாரணமா போயிட்டு வந்துட்டு இருக்கிறனால அட நான் பார்க்காத உம்ராவா. அட நான் செய்யாத ஹஜ்ஜான்ற மாதிரி ஆயிருச்சு. ஆனால் ஒரு காலம் எனக்கு ஞாபகம் இருக்கிறது. ஒரு 30 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு ஹாஜியை வழி அனுப்புவதாக இருந்தால் வழி அனுப்பப்படுகின்ற ஒரு இபாதத் ஹஜ்ஜு உடைய இபாதத். வரவேற்கின்ற இபாதத் இந்த இபாதத். எந்த இபாதத்திலயும் வழி அனுப்புறதும் கிடையாது வரவேற்கிறதும் கிடையாது. ஆனால் இதுல வழி அனுப்பு விழா இருக்கிறது. அதே நேரத்தில் வரவேற்கின்ற விழாவும் இருக்கிறது. நபிகள் சொன்னார்கள் ஒரு ஹாஜி வருகை தந்தால் அவருக்கு ஸலாம் சொல்லுங்கள், முஸாஃபஹா செய்யுங்கள், அவரிடத்தில் பாவம் மன்னிப்பு தேடச் சொல்லி கேளுங்கள், துஆவை பெற்றுக் கொள்ளுங்கள் அவர் வீட்டுக்குள்ளே நுழைவதற்கு முன்பாக என்றார்கள். ஆனால் இவர் வீட்டுக்குள்ள நுழைஞ்சு நாலு வாரம் கழிச்சு தான் வந்து ஹஜ்ரத் நான் உம்ராவுக்கு போயிட்டு வந்தேன் ஹஜ்ரத். நான் ஹஜ்ஜுக்கு போயிட்டு வந்தேன்னு சொல்றார். எப்பங்க நீங்க போனீங்க போனதே தெரியலையே எங்களுக்கு. தெரிவித்து அனைவரிடத்திலும் துஆவை பெற்று அனைவருடைய நல்ல ஆசையோடு செல்ல வேண்டிய பயணம் தான் இந்த பயணம். இப்படி ஒரு அமல் வேறு எந்த அமலும் கிடையாது. இந்த அமலுக்கு மட்டும் தான் அல்லாஹ் அப்படி வைத்திருக்கிறான். வேறு எந்த அமலிலேயும் இந்த சிறப்பை வைக்கவில்லை. அவ்வளவு உயர்ந்த சிறப்புக்குரியது. ஒரு ஹாஜி நாலு ஹாஜிக்கு மாலையை போட்டு அந்த ஹாஜியினுடைய கிட்டத்தட்ட ஒரு நம்ம போனா ரிட்டர்ன் வரமாட்டோம்னு தெரியுது. நம்மள இவங்க அனுப்பி வைக்கிறத பார்த்தா அப்படித்தான் தெரியுது என்ற அளவுக்கு ஒரு உணர்வு ஏற்படும். ஆனால் இன்னைக்கு அந்த மாதிரி உணர்வு எல்லாம் ஏற்படவே இல்லை. சுகுசா போயிட்டு சுகுசா திரும்பிடுறோம். சந்தோஷமா போயிட்டு சந்தோஷமா. ஆனால் அந்த காலத்திலே அப்படிதான ஒரு நிலை இருந்தது.
[27:12]ரயில்வே ஸ்டேஷன்ல பார்த்தீங்கன்னு சொன்னா ஸ்தம்பிச்சு போகும் அப்படியே. பொதுஜனங்கள் எல்லாம் பார்த்து ஆச்சரியப்பட்டு போவாங்க இப்படி ஒரு அழகான மார்க்கமாக இருக்கிறதே. இவர்களுடைய வணக்கம் இவ்வளவு உயர்வாக இருக்கிறதா ஆச்சரியத்தில உறைஞ்சு போவாங்க அந்த சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனை பார்த்தீங்கன்னா பெட்டிகள் ஃபுல்லா ஒரே மாலையாக இருக்கும். ஹாஜிகள் அனுப்பற நேரத்துல உங்களுக்கு ஒரு துஆ செய்வாங்க. கூட இருக்கிறவங்க எல்லாம் அழுவாங்க. ஹாஜியும் அழுவாரு. இங்க இருந்து அங்க போய் அங்க கொஞ்ச நாள் தங்கியிருந்து பிறகு அங்க இருந்து போய் எங்க இருக்கிறாரே என்ன நடக்குது இருக்கிறாரா? இல்லையா? அவருக்கு சௌகரியமா? இல்ல அசோகரியமா? அவர் நல்ல நிலைமையில் தான் இருக்கிறார். எந்த தகவலுமே வராது. அப்படி ஒரு காலத்தில் செய்த ஹஜ் எப்படிப்பட்ட ஹஜ்ஜா இருந்திருக்கும் நினைச்சு பாருங்க. அல்லாஹ் நமக்கு இவ்வளவு லேசாக ஆக்கிட்டான். அதற்கு முன்பாக ஒரு ஹஜ்ஜு உடைய காலம் இருந்தது. அது என்ன தெரியுமா? கப்பல்ல தான் போய் ஆகணும். அப்படி கப்பல்ல போற நேரத்துல போய் சேரவே முடியாது. அப்படி நிறைய பேருடைய உடல் இடைப்பட்ட இடத்திலேயோ அவர்கள் இறந்து விடுவார்கள். ஜனாஸா தொல வைத்து கடலிலே போடுவார்களாம். கடைசியாக ஜித்தாவிலே போய் இறங்குற நேரத்திலே மருத்துவர்களின் குழு உள்ள வரும். வந்து அத்தனை ஹாஜிகளையும் செக் பண்ணி உள்ள போறதுக்கு தகுதியுள்ளவரை மட்டும்தான் உள்ள அனுப்போம். மற்றவர்களை எல்லாம் அதே கப்பல்ல ரிட்டர்ன் அனுப்பிடுவோம். இதையெல்லாம் நான் எதற்காக சொல்கிறேன் என்றால் ஹஜ்ரத் என்ன இப்படி பயமுறுத்துறீங்க ஹஜ்ரத் என்று கேட்காதீங்க. பயமுறுத்தவில்லை அல்லாஹ் நமக்கு எவ்வளவு நேமத் செய்திருக்கிறான் என்பதை நாம பாக்கணும். எவ்வளவு நேமத் செய்திருக்கிறான். இதை நாம ஆசைப்பட்டதுனால செஞ்சுட முடியாதுங்க. எத்தனையோ கோடி கோடியா வச்சிருக்காங்க ஹாஜியே இன்னும் செய்யல. ஹாஜ் என்னங்க உம்ரா கூட செய்யல. உம்ரா இன்றைக்கு அவ்வளவு அதிகமாகிவிட்டது. நாம நினைக்கிறோம் ₹25 ல ஹஜ் செஞ்சிருக்காங்க. ₹30 ல ஹஜ் செஞ்சிருக்காங்க. ₹3000 ல ஹஜ் செஞ்சிருக்காங்க. ₹12000 ல ஹஜ் செஞ்சிருக்காங்க. ₹25000 ல செஞ்சிருக்காங்க. இன்னைக்கு ஒரு சொத்த வித்தா தான் ஹஜ்ஜே செய்ய முடியும். ஒரு சொத்த வித்தா தான் ஹஜ் செய்ய முடியும் என்ற நேரத்தில அன்னைக்குள்ள ஹாஜிகளை விட இன்னைக்கு தான் அதிகமாக இருக்கிறான். ஏங்க ஒரு சொத்தவே வித்தா தான் உம்ரா செய்ய முடியும். ஹஜ் செய்ய முடியும் என்ற அளவுக்கு வந்த பிறகோ அங்க இருக்கிற கூட்டத்தை பார்த்தா என்ன தெரியுது தெரியுமா? காசெல்லாம் ஒரு மண்ணும் இல்லைங்க எனக்கு. ஹஜ் வேணும்ங்க எனக்கு. காசெல்லாம் பெருச இல்லை, என் சொத்தெல்லாம் பெருச இல்லை, எனக்கு எதுவும் தேவையில்லை எனக்கு உம்ரா செய்யணும்ங்க, நான் ஹஜ் செஞ்சாகணும்ங்க, மௌத் வந்தாலும் பரவாயில்லை நான் அங்கதாங்க போய் மௌத் ஆகணும். இந்த மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள் என்று தான் தெரிகிறது. இல்லை என்றால் இவ்வளவு கூட்டம் இருக்குமா? ரொம்ப காஸ்ட்லியா ஆயிடுச்சு எல்லாரும் பயக்கதான் செஞ்சாங்க. டிராவல்ஸ் வச்சிருக்கிறவங்க எல்லாம் பயந்தாங்க. இன்னும் நிறைய எல்லாரும் பயந்தாங்க. என்னடா இவ்வளவு காஸ்ட்லியா ஆயிடுச்சே இனி ஹாஜிகள் வந்து புக் ஆக மாட்டாங்கன்னு. நிறைய புக் ஆகுறாங்க. அதிகமாக அதிகமாகத்தான் புக் ஆகுறாங்க. எப்படி ரேட் அதிகமாக அதிகமாக ஜூவல்ஸ் கடை எல்லாம் நிறைஞ்சு வெளியுது. என்னடான்னு கேட்டா இதைவிட கூடி போச்சுனா என்ன செய்றதுன்னு வந்திருக்காங்க. அப்ப இதை விட கூடி போச்சுனா போக முடியாம போயிருமோ. காபாவை பார்க்காம கபூருக்கு போறதா? காபாவை பார்க்காம மௌத் வரதா? அந்த மௌத் அங்கேயே வரட்டும். பரவாயில்லை என் சொத்த வித்தாலும் பரவாயில்லை. என் எனக்குரிய அனைத்தையும் தர்றதுக்கு நான் ரெடியா இருக்கிறேன். நான் ஹஜ்ஜுக்கு போய் ஆகணும். உம்ரா செஞ்சாகணும். இந்த எண்ணம் வந்திருக்கிறது என்றால் என்ன தெரிய வருகிறது? அவர்கள் காசை காசாவே கருதவில்லை. பணத்தை பணமாகவே கருதவில்லை. அவர்கள் பகட்டு வாழ்க்கை வாழவே விரும்பவில்லை. ரப்புனுடைய தர்பார்ல போய் அங்கேயே மௌத் ஆயிரலாம்ன்ற அளவுக்கு தான் ரெடியா போறான். ரெடியா போறாங்க. உண்மையிலேயே ஹஜ்ஜினுடைய ஃபல்சஃபா அதுதான் பெரியவர்களே. எப்படி ஏர்போர்ட்ல அனுப்பி விடுறோம்.
[33:17]அனுப்பிவிட்ட பிறகு பிளேட் பறக்கறத கூட நம்மளால பார்க்க முடியறது இல்லை. ஒரு குறிப்பிட்ட தூரம் உள்ள அனுப்பணும் அப்படின்றது இதுக்கு மேல நம்ம இருந்து என்ன செய்ய? அவங்க இமிகிரேஷன் எல்லாம் பார்த்துக்கோங்க எல்லாம் பார்த்துக்கோங்க பிளேட் பறந்து போகும். போய் சேர்ந்த பிறகு தகவல் தருவாங்க. நம்ம இங்க நிக்கிறது வேஸ்ட் நம்ம போயிரலாம் நம்ம. என்று இருக்கிறவங்களை எல்லாம் கலப்பி கூட்டிட்டு வரமா இல்லையா? இதே மாதிரிதான் கபூர் குழியில வெச்சு அடக்கன பிறகு இதுக்கு மேல இங்க இருந்து என்னங்க செய்ய? வாங்க போலாம். இனி அவருக்கு கேள்வி கணக்கு போ கொடுத்த எல்லாம் அங்க நடக்கும். நாம இருந்துட்டு இருக்கிற ஆளை என்ன பயன்? நம்ம போவோம். இதே நிலைதான் ஹஜ்ஜிலேயும். அப்ப ஹஜ் என்பது அவனை மௌத்தினுடைய சிந்தனையை முழுக்க முழுக்க அவனது கல்லிலே அவனுக்கு உணர்த்தக்கூடிய ஒன்றுதான் இந்த ஹஜ்ஜு உடைய சஃபர் என்பது. அந்த உணர்வுகளோடு ஹஜ் செய்யணும். அந்த ஹஜ்ஜு தான் மௌத் வரைக்கும் நம்மள ஹாஜியாகவே இருக்க வைக்கும். ஹஜ்ஜினுடைய அந்த பிரதிபலன்கள் எல்லாமே நமது வாழ்க்கையில் இருக்கும்படி ஆக்குன்றதை நாம மறந்துடக்கூடாது.
[35:09]முர்ஷிது ஆலம ரஹ்மத்துல்லாஹி அலைஹி. ஹுசைன் அஹமது மதனி ரஹ்மத்துல்லாஹி அலைஹிங்கறாங்களே. தேயுபந்துனுடைய முன்னாள் முத்தரிசாக இருந்து அவர்கள் மிகப்பெரும் ஒரு அந்தஸ்த்திலே இருந்தவர்கள் ஷேஃபுல் ஹதீஸாக இருந்தவர்கள் ஹுசைன் அஹமது மதனி ரஹ்மத்துல்லாஹி அலைஹி. சுதந்திர போராட்டத்திலும் கூட அவர்கள் ஈடுபட்டவர்கள். அவர்களுடைய பிள்ளைகள் தான் அஸ்ஹாத் மதனி, அர்ஷத் மதனி என்றெல்லாம் இன்றும் கூட பொலிடிக்ஸ்ல எல்லாம் இருக்கிறார்கள். ஜம்இய்யத்துல் உலமா ஹிந்தினுடைய தலைவராக அவருடைய மகனார் ஹுசைன் அஹமது மதனி ரஹ்மத்துல்லாஹி அவர்கள் யாரேனும் ஹஜ் செஞ்சுட்டு வந்தாங்கன்னு சொன்னா பேரிச்சம்பழம் கொடுத்தா அத்தரை கொடுத்தா அவங்களுக்கு மிஸ்வாக்க கொடுத்தா தஸ்பிஹ் மணியை கொடுத்தா கேப்பாங்களாம் இதெல்லாம் எங்க வாங்குனீங்கன்னு கேப்பாங்களாம். இந்த பேரிச்சம்பழம் எங்க வாங்குனீங்க? மக்காவிலையும் கிடைக்குது, மதீனாவிலையும் கிடைக்குது. இந்த தஸ்பிஹ் மக்காலையும் கிடைக்குது, மதீனாவிலையும் கிடைக்குது. நீங்க எங்க வாங்குனீங்கன்னு கேப்பாங்களாம். உடனே அவர் சொல்லுவாரு மதீனாவுல வாங்கினேன். அல்ஹம்துலில்லாஹ் மதீனாவுலேயே அப்படின்னு சொல்லிட்டு வாங்கிக்குவாங்க. வாங்கிட்டு சொல்லுவாங்களாம் மதீனத்து மனதிலே வந்த பேரிச்சம்பழமா இது? இது மதீனாவில் உள்ள கடையில் தொங்க விடப்பட்டிருந்த தஸ்பிஹ் மணியாயுது. நபியவர்களுடைய ரவ்லாவிலே பட்ட காத்து இந்த மரத்திலே பட்டு அந்த பழம் அல்லவா என்னிடத்தில் வந்திருக்கிறது. அவ்வளவு போற்றி புகழுவாங்களாம்.
[37:16]அந்த பேரிச்சம்பழத்தை எடுத்து கல்லை ஒத்திக்குவாங்களாம். அந்த பேரிச்சம்பழத்தை ரெண்டு மூணு துண்டா துண்டாக்கி அந்த காலத்துல அவ்வளவுதான் கொண்டு வர முடிஞ்சது. இன்னைக்குள்ள நிலைமையே வேற. நாங்க ரெண்டாவது ஹஜ்ஜுக்கு போன நேரத்துல ஒரு அஞ்சு வாலிபர்கள் ஒண்ணா சேர்ந்து வந்திருந்தாங்க. இந்த அஞ்சு பேரும் என்ன செய்தாங்க? மஷோரா எதுவுமே இல்லை. ஒவ்வொருத்தரும் வாங்கின பேரிச்சம்பழத்தை ஒவ்வொருத்தரும் எவ்வளவு பேரிச்சம்பழம் வாங்கி இருப்பாங்கன்றிங்க? 10 kg 10 kg ன்னு வாங்கி இருப்பாங்க 15 kg வாங்கி இருப்பாங்க. அந்த பேரிச்சம்பழம் எல்லாத்தையும் ஒரே பெட்டியில அடுக்கினாங்க. அஞ்சு பேருடைய பேரிச்சம்பழத்தையும் ஒண்ணா அடுக்கினா பார்க்கிறதுக்கு சவப்பெட்டி மாதிரி ஆகி போச்சு. அதை கொண்டு வந்து நிருக்க வந்த இடத்துல இது என்னன்றத பார்க்காத வரைக்கும் நான் லக்கேஜ் போடமாட்டேன்னு சொல்லிட்டான். பார்க்கிறதுக்கு ஒரு ஆளை படுக்க வெச்ச மாதிரி இருக்கு. உடனே அதை லக்கேஜ் போட சொன்னா லக்கேஜ் போட்டா எங்கேயோ போகுது. 10 15 kg ன்னு சொன்னான். அப்ப கடைசியா அவன் சொன்னான் ஒன்னு உங்க லக்கேஜை கொண்டு போங்க. இல்லையா உங்க லக்கேஜ் எல்லாம் இங்க விட்டு போட்டு பேரிச்சம்பழத்தை கொண்டு போங்க. உடனே அந்த பேரிச்சம்பழத்தை போட்டுட்டு லக்கேஜ் போட்டு கொண்டு வந்தாங்க.
[39:27]இதெல்லாம் ஹஜ்ஜில நமக்கு கிடைக்கிற மிகப்பெரும் ஒரு பாடம். உங்களை அழைத்துச் செல்லக் கூடியவர்களை அணுகி அவர்களுடைய யோசனைகளை கேட்டுதான் ஒவ்வொரு விஷயத்திலும் ஈடுபடணும். நீங்களாக உங்களுடைய முதிர்ச்சியிலே நீங்களாக உங்களுடைய அனுபவத்தில் ஈடுபட்டறக்கூடாது. ரொம்ப கவனமா இருக்கணும். அப்போ ஹுசைன் அஹமது மதனி ரஹ்மத்துல்லாஹி அவர்கள் அந்த கொடுக்கிற அந்த பேரிச்சம்பழத்தை ரெண்டு மூணு துண்டா துண்டாக்கி அதை வந்து தன் மாணவர்கள்ட்ட சொந்தக்காரங்களுக்கு எல்லாம் கொடுத்து விடுவாங்களாம். ரொம்ப பாசம். மதீனா என்றால் அழுவார்கள், மக்கா என்றால் அழுவார்கள். இன்னைக்கு ஹாஜிகள் எல்லாம் அரஃபால இருப்பாங்கல்ல. இன்னைக்கு ஹாஜிகள் எல்லாம் முஸ்தலிஃபால தூங்கிக்கிட்டு இருப்பாங்கல்ல. இன்னைக்கு ஹாஜிகள் எல்லாம் மினவுல இருப்பாங்கல்ல. அழுவாங்களாம். அங்கே ஹஜ்ஜுக்கு சென்றுவிட்டால் இங்கே ஹாஜிகளுடைய நினைப்பு தான்.
[40:51]அல்லாஹ் பார்த்தான் உங்களுக்கு இவ்வளவு முஹப்பத்தா? அப்படின்னா நான் ஒண்ணு செய்யட்டுமா என்று மதீனா மாநகரத்திலே மஸ்ஜிது நபவிலே நபியவர்களுடைய ரவ்லாவுக்கு பக்கத்திலே கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் அரபகத்து மக்களுக்கு தர்ஸ் நடத்தக்கூடிய பாடம் நடத்தக்கூடிய தகுதியை தந்து அந்த அந்தஸ்த்தை உயர்த்தி மஸ்ஜிது நபவிலே இருந்து பாடம் நடத்தும் பாக்கியம் பெற்றவர்கள் ஹுசைன் அஹமது மதனி ரஹ்மத்துல்லாஹி.



