[0:00]தீயவா நீ என் தூயவா அத்தியாயம் 6. என்ன சார் இது துளசியை விஷம் வச்சு கொல்லவே செஞ்சுட்டான். இவன்லாம் மனுஷனா. இவனை போய் ஹீரோன்னு சொல்றீங்க. அவ பொழச்சிக்குவாளா மாட்டாளா. என்று தியாகியோ இயக்குனர் முகத்தை பாவமாக பார்த்துக் கொண்டிருக்க. இதுக்கே எவ்வளவு வருத்தப்படுறியே இன்னும் அவ பார்க்க வேண்டியது நிறைய இருக்கு. இன்னைக்கு செத்திருந்தா கூட நிம்மதியா போய் சேர்ந்திருப்பா. அவ வாழ்க்கையில என்னெல்லாம் பார்க்க கூடாதுன்னு இருக்கோ அது எல்லாத்தையும் பார்க்க போறா. அன்னைக்கு ஐயோ இந்த சாவு எனக்கு வந்தராதான்னு யோசிப்பா. ஆனா அந்த சாவு அவளுக்கு அவ்வளவு சீக்கிரமா வந்துராது. நல்ல வேலை சார் இதெல்லாம் கற்பனை கதை. இந்த மாதிரி ஒருத்தன் உண்மையிலேயே இருந்தா யோசிச்சு பார்க்கவே முடியல. அப்ப துளசி உயிரோடுதான் இருக்காளா? நான் சொல்றேன் வீடியோ மேக் பண்ணு. என்றதுமே தியாகி பெருமூச்சு விட்டு லேப்டாப்பை பார்த்தான். இரவு குளித்து விட்டு டவலால் தலையை துவட்டிக் கொண்டே தீயவன் மாடிப்படியில் இறங்கி வந்தான். போனை எடுத்து காதில் வைத்தவன் என்னடா காரியத்தை முடிச்சிட்டியா? என்று பலராம்க்கு போனை போட. ஆமா தீயவா கொடுத்து ஒரு மணி நேரத்துக்கு மேல ஆயிடுச்சு. எப்படியும் வேலை செஞ்சிருக்கும். முடிஞ்சிருக்குமா? முடிஞ்சிருக்கும்னுதான் நினைக்கிறேன். நடுராத்திரி அசப்பில்லாம கொண்டு போய் டிஸ்போஸ் பண்ணிடுறேன். குட் என்று போனை வைத்து விட்டு சாப்பாட்டு மேஜையில் வந்து அமர்ந்த தீயவன் பேசியதை அறைக்கு உள்ளிருந்து தேவகி கேட்டுக்கொண்டுதான் இருந்தார். மகன் செய்யும் அயோக்கியத்தனங்களை எல்லாம் கண்ணால் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். ஆனால் வாய் பேச முடியவில்லை என்பதை விட தாய் என்ற ஸ்தானத்தில் அவன் முன் நிற்கும் அருகதை இல்லை என்று நினைத்துதான் அவன் என்ன சொன்னாலும் வாயை பொத்திக்கொண்டு நகரவேண்டியது உள்ளது. காரணம் ஒரே ஒரு காதல். காதலித்து தன் கற்பை கொடுத்தவனுக்கு ஒரு குடும்பம் இருக்கிறது என்று அறியும்போது வயிற்றில் இவன் உதித்து விட்டான். இந்த பிள்ளையை வைத்துக்கொண்டு எங்கே போவது என்று தெரியவில்லை. எனக்கு வப்பாட்டியா இருந்துக்க உனக்கும் உன் பிள்ளைக்கும் பாதுகாப்பா இருக்கேன். என்று கூறியவர் பேச்சை மீறி நான் புரட்சிப்பேன் என்று வெளியே எல்லாம் போக முடியவில்லை. அரசியல் பலம் கொண்ட அவரை தாண்டி எப்படி வாழ விட்டு விடுவார் அவர்? பயந்தே அவர் ஆசைக்கு எல்லாம் அடிபணிந்து போக வேண்டியதாகிவிட்டது. தனி பெண்ணாக இருந்திருந்தால் எங்கேயாவது ஓடியாவது போயிருக்கலாம். இவனை வைத்துக் கொண்டு அவர் கண்ணிலிருந்து தப்பிப்பது எல்லாம் முடியாமல் போனது. தேடியே அந்த ஸ்ரீ வாசத்தை ஏற்றுக் கொண்டார். இதோ இன்று மகன் முன்னால் ஒவ்வொரு நாளும் அவன் பேசும் பார்க்கும் பார்வையில் வதைப்படுகிறார். இட்லி இருக்கு சூடா பூரி இருக்கு சார் என்று பணிப்பெண் அவன் முன்னால் வந்து நிற்க, ஜூஸ் மட்டும் போதும். என்றதும் அவனுக்கு ஜூஸ் கொண்டு வந்து பணிப்பெண் கையில் கொடுக்க, போனை பார்த்துக் கொண்டே அதை வாயில் வைக்கப் போனான். எங்கிருந்துதான் வந்தாலோ கண்ணாடி குடுவையை தட்டி விட்டு விட்டாள் அவன் மனைவி. அவன் கையில் இருந்த கோப்பை சிதறி தரையில் விழ, அப்பா தெய்வமே ஐத்தா அத குடிக்காதீங்க அதுல விஷம் இருக்கு என்று பதறிக்கொண்டே நின்ற துளசியை அவன் கண்ணை சுருக்கி பார்க்க தூக்கம் வராமல் உலாத்திக் கொண்டிருந்த பலராமோம் ஏதோ ஒரு உருவம் காற்றை விட வேகமாக தன் நண்பன் வீட்டை நோக்கி ஓடவும் யார் என்று யோசனையில் துப்பாக்கியை தூக்கிக் கொண்டு ஓடி வந்தவனுக்கு அருகே வந்ததும் தான் தெரிந்தது அது துளசி என்று. என்ன அதுக்குள்ள செத்து மேலோகம் போய் ஆவியா வந்துட்டாளா என்று அவன் யோசனையாகவே உள்ளே பார்த்துக் கொண்டிருக்க. ஐத்தா நான் குடிச்ச குளுகுளு நீர்ல நஞ்சு கலந்து இருக்கு. அதேதான் இதுவும். இதுலயும் இருக்கும். குடிக்காதீங்க. அதான் தட்டி விட்டுட்டேன். எதையோ சாதித்த உணர்வில் கணவனின் முகத்தை பார்த்தாள். நல்ல வேலை கடவுள்தான் என்னை இங்க அனுப்பி விட்டு இருக்கார் போல இருக்கு. உங்க உசுர காப்பாத்துறதுக்காகதான் வந்திருப்பேன் போல. யாரோ உங்க உசுருக்கு கன்னி வச்சிருக்காங்க. கொஞ்சம் பார்த்து சூதானமா இருங்க ஐத்தா. எப்படி உயிரோட வந்த? அந்த விஷம் உள்ள ஜூஸை குடிச்சியா இல்லையா? என்றதுமே துளசி அதிர்ந்து போய் கணவனை பார்க்க, உனக்கு விஷத்தை வச்சு கொல்ல சொன்னதே நான்தான். குடிச்சியா இல்லையான்னு கேட்டேன் என்று கோபமாக அவளை தீயவன் முறைக்க அவள் எச்சில் விழுங்கினாள். மீதி விஷத்தை கலந்து தருவேன். சத்தமில்லாம குடிக்கிற. புரியுதா? ம்ஹூம் எல்லாரும் வெளிய போங்க. ஏய் நீ மட்டும் இங்க நில்லு. வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் எல்லாருமே வேகமாக வெளியேற அரண்மனை கதவை இழுத்து மூடிய தீயவனோ, விஷம் என்ன ஏமாத்திருச்சு. இந்த வாட்டி துப்பாக்கி இது என்னை ஏமாத்தவே செய்யாது. சத்தமில்லாமல் சாகுற. புரியுதா? தீயவன் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு அவளை நோக்கி வர எச்சில் விழுங்கிய துளசியோ மெல்ல பின்னால் நகர ஆரம்பிக்க, விஷத்தில இருந்து தப்பிச்சுட்ட ஆனா இந்த குண்டுல இருந்து எப்படி தப்பிக்கிறேன்னு பார்க்கிறேன். ஐயையோ ஐத்தா அப்படி எல்லாம் செஞ்சுபுடாதீங்க. பயமா இருக்கு. துளசி நடுங்கிக் கொண்டே பின்னே எட்டு வைக்க தீயவன் முன்னே எட்டு வைத்து அவளை நெருங்கினான். உனக்கு வாழணும்னு ஆசை இருந்தா ஓடிடு. இல்ல என் கையாலதான் சாவ. ஏன் இப்படி பண்றீங்க ஐத்தா? நீங்கதான் எல்லாம்னு நினைச்சு உங்களை தேடி வந்திருக்கேன். இப்படி கொல்ல நினைக்கிறீங்களே தப்பில்லையா என்றவளின் கழுத்தை நெறிக்கப் போனவனோ, சேய் உன்னை தொடக்கூட எனக்கு அருவருப்பா இருக்குன்னு சொல்றது உனக்கு புரியல. எரிச்சல் வரவைக்காத. துப்பாக்கி குண்டை வாய்க்குள்ள இறக்கிடுவேன். என்ன அவ்வளவு எளிசாலாம் கொன்னுற முடியாதா ஐத்தா? அப்படி நான் சாகணும்னு அந்த கடவுள் நினைச்சிருந்தா 10 மாசத்துல என்னை நாக பாம்பு தீண்டுச்சு. அப்ப கூட பொழச்சு வந்துட்டேன். அம்மைக்கு ஏழு பேர்ந்து செத்து எட்டாவது நான் பிறந்தேன். சாவ ஜெயிச்சு பிறந்தேன். அப்படித்தான் 11 வயசுல மலையில நின்னுட்டு இருக்கும் போது கால்வழிக்க கீழே விழுந்துட்டேன். அப்பவும் எனக்கு எதுவும் ஆகல. எல்லாம் எதுக்காக இதோ உங்க கூட வாழணும்னுதான் கடவுள் என்னை அனுப்பி வச்சிருக்காரு. உங்களுக்குத்தான் அது தெரியல என்று அலறிக்கொண்டு கீழே விழுந்தாள் துளசி. அவள் பேச்சை ரசிக்க முடியாமல் பிடித்து தீயவன் தள்ளி விட தரையில் பொத்தென்று விழுந்து கிடந்தவள் அப்போதும் வாயை மூடும் எண்ணம் இல்லை போலும். இப்ப உங்களுக்கு கோபம். கோபம் குறைந்ததும் என் மேல உங்களுக்கு நேசம் வந்துரும். சத்தியமா சொல்றேன் என்னைக்காவது ஒரு நாள் அவள் பேச்சை தடை செய்யும் விதமாக துப்பாக்கி குண்டுகள் அவளை சுற்றி சுற்றி தெரிக்க ஆ என துளசி கோழிக்குஞ்சு போல் நடுங்கி தரையில் சுருண்டு படுத்துக் கொண்டாள். குண்டுகள் சத்தம் இல்லாதும் போகவும் அது வந்து தன்னை துளைக்காது போகவும். என்ன இன்னும் இரத்தம் வரல. வலிக்கல நான் சாகலையா என்று துளசி கண்ணை திறந்து பார்க்க ஏதோ ஒரு உருவம் அவளை மறைத்து பாதுகாத்து வைத்திருந்தது. துளசியை மறைத்து அவளுக்கு அரணாக தேவகி நின்று கொண்டிருந்தார். அவளை கொல்வதற்காக சுட ஆரம்பித்தவன் எதிரே வந்து மறைத்துக் கொண்டிருந்த தன் தாயை எரிச்சலாக பார்த்தவன் பார்வையை முதல்முறையாக எதிர்கொண்ட தேவகியோ, உன்னை பெத்த கூலிக்கு எனக்கு இருக்க இடம் கொடுத்த திங்க சோறு கொடுத்த உன் தாயிங்கிற அங்கீகாரம் கொடுத்து மரியாதையா வச்சிருக்க. இதையெல்லாம் நான் சொல்லலப்பா நீ சொன்னதுதான். அதுக்கு நன்றி. ஆனா உன்னை பெத்ததுக்கு கூலி நான்தாயா கேட்கணும். நீயா கொடுக்கக் கூடாது. என்ன வேணும்? உன்னை பெத்ததுக்கு கூலியா இந்த பொண்ணோட உசுர விட்டுடு. அவளை பேசி சமாதானம் பண்ணி ஊருக்கு அனுப்பி வச்சுடுறேன். ஒரு பொண்ணோட சாபத்தையும் பாவத்தையும் வாங்கிக்காதையா. இத்தனை நாள் நீ கொன்னவன்க எல்லாருமே நல்லவங்களான்னு எனக்கு தெரியாது. ஆனா உன் உசுர காப்பாத்த ஓடி வந்து நின்னா பாரு இந்த பொண்ணு உசுரை காவு வாங்கிடாதையா உன் கால்ல விழுறேன் என்று தேவகி மகனை கையை எடுத்து கும்பிட. என்னை பெத்ததுக்கு என்ன கூலி கொடுத்து அந்த கடனை அடைக்கலாம்னு நினைச்சேன். நீயே கேட்டு வாங்கிக்கிட்ட. அவ மறுபடியும் என் கண்ணு முன்னாடி வந்தா அப்ப யார் பேச்சையும் நான் கேட்க மாட்டேன். சொல்லி புரிய வச்சு அனுப்பு என்று விட்டுப் போகும் மகனை பெருமூச்சு விட்டு பார்த்த தேவகியோ அவன் தலை மறைந்ததும் துளசியை நோக்கி திரும்பினார். துளசிக்கு பயம்தான். மிரண்டு போய்தான் இருந்தாள். யாருக்குத்தான் உயிர் மீது பயம் இருக்காது. ஆனால் போகும் கணவன் முதுகை எச்சில் விழுங்கி பார்த்துக் கொண்டே ரொம்ப ரொம்ப கோவக்காரரா இருக்காரே. இவரை சமாளிச்சு இவர் கூட வாழ்ந்து ம் ரொம்ப கஷ்டம்தானோ என்றவளை புலம்ப. ரொம்ப ரொம்ப கஷ்டம்தான் என்று தேவகியின் குரலில் அப்போதுதான் திரும்பி தன் மாமியாரை பார்த்தாள். வெள்ளை புடவையில் சாந்தமான முகத்தோடு அதிர்ந்து பேசக்கூட தெரியாத பெண்ணாக தேவகி நின்றார். தேவகியும் தன் மருமகளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார். அழகு அவள் முகத்தில் இருந்ததோ இல்லையோ அகத்தில் இருந்தது. அதை கண்டுகொண்டார் அவர். எல்லா அடங்கா காளைக்கும் ஒரு மூக்கணாங்கயிறு தேவை. இவ்வளவு கோபப்பட்டு அவன் தாயை தக்கை என்று குதிக்கும் போது கூட உன் கூடதான் இருப்பேன். என்ன செய்ய முடியும் உன்னால செய்யடா என்று நின்றாளே. என் மகனுக்கு கையிறு கட்ட இவளால் முடியும் என்று தோன்றினாலும் பாவம். அதற்காக அவள் உயிரை மாய்க்க மனமில்லை அவருக்கு. எங்கேயாவது போய் உயிரோடு இருந்துவிட்டு போகட்டும் அவள். இந்த கொலைகார பாவியின் கண்முன்னால் இருந்து தினம் தினம் சாவதற்கு பிழைத்து போகட்டும் என்று காப்பாற்றி விட்டு விட்டார். ஆனால் அவளுக்கு அது மக்கு மண்டையில் போய் உறைக்க வேண்டுமே. வந்தா மலை போனா மயிறு என்பது போல வாழ்ந்தால் ஐத்தானோடு வாழ்ந்தே தீருவேன். செத்தாலும் அவர் கையால் சாவேன்னு தீர்மானம் எடுத்து வீட்டுக்குள் நுழைந்தாள் போலும். அவனோடு வாழ்வாளோ இல்லையோ மனதால் சாவது உறுதி. தொடரும். இதனுடைய அடுத்த அத்தியாயம் நாளை இரவு 7 மணிக்கு வந்துரும் கேட்க தவறாதீர்கள் மக்களே. தீயவா நீ என் தூயவா விடைபெறுகிறேன் நான் உங்கள் ஆர்.ஜே தியா.

தீயவா6 @SUJACHANDRANAUDIONOVELS
SUJA CHANDRAN AUDIO NOVELS
8m 24s1,066 words~6 min read
YouTube auto captions
Transcript source
YouTube auto captions
This transcript was extracted from YouTube's auto-generated caption track. The transcript below is server-rendered so it can be read, searched, cited, and shared without opening the original YouTube player.
Pull quotes
[0:00]அவ வாழ்க்கையில என்னெல்லாம் பார்க்க கூடாதுன்னு இருக்கோ அது எல்லாத்தையும் பார்க்க போறா.
[0:00]இரவு குளித்து விட்டு டவலால் தலையை துவட்டிக் கொண்டே தீயவன் மாடிப்படியில் இறங்கி வந்தான்.
[0:00]குட் என்று போனை வைத்து விட்டு சாப்பாட்டு மேஜையில் வந்து அமர்ந்த தீயவன் பேசியதை அறைக்கு உள்ளிருந்து தேவகி கேட்டுக்கொண்டுதான் இருந்தார்.
[0:00]மகன் செய்யும் அயோக்கியத்தனங்களை எல்லாம் கண்ணால் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்.
Use this transcript
Related transcript hubs
Watch on YouTube
Share
MORE TRANSCRIPTS


