[0:00]ஒரு நாள் கடல்ல இருக்கிற ஒரு குட்டி மீனு, தான் அம்மா மீன் கிட்ட போயி, அம்மா, நாம உயிர் வாழ்றதுக்கு தண்ணி ரொம்ப முக்கியம்ன்னு சொல்றாங்களே, அந்த தண்ணி எங்க இருக்கு அப்படின்னு கேட்டுச்சாம். அதுக்கு அம்மா மீனு, இதோ நம்மள சுத்தி இருக்கே, இதுதான் தண்ணி அப்படின்னு சொல்லுச்சாம். தண்ணி இருக்குன்னு சொல்றீங்க, ஆனா எதுவுமே என் கண்ணுக்கு தெரியலையே. சரி, நான் போய் அப்பா கிட்ட கேட்கிறேன் அப்படின்னு சொல்லி அவங்க அப்பாட்ட போய் கேட்டுச்சாம். அவங்க அப்பாவும் அதே பதில சொல்ல இந்த குட்டி மீனுக்கு ஒண்ணுமே புரியல. அந்த வழியா ஒரு சுறா மீன் வர, அதுகிட்டயும் இந்த குட்டி மீனு இதே கேள்வியே கேட்டிருக்கு. உடனே சுறாமீன் இந்த குட்டி மீனை தன் தோள்ள சுமந்துட்டு கடலுடைய மேல் பகுதிக்கு வந்து நீந்துச்சாம். தண்ணியில இருந்து வெளியில வந்ததும், இந்த குட்டி மீன் மூச்சு விட முடியாம திணறுச்சாம். உடனே சுறாமீன் கடலுக்குள்ள மூழ்கிடுச்சு. இப்ப இந்த சுறா மீன் குட்டி மீனை பார்த்து இப்ப புரியுதா இதுதான் தண்ணி அப்படின்னு சொல்லுச்சாம். நம்மள சுத்தி எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கு. ஒரு நாள் அது இல்லாம போகும் போதுதான் அதனுடைய அருமை தெரியுது. இது போன்ற குட்டி குட்டி கதைகளை கேட்க டைட்டில் பக்கத்துல இருக்கிற இந்த லிங்கை கிளிக் பண்ணி பாருங்க.

1 minute story | 1 நிமிடக் கதை | motivational story in tamil | short story | Tamil story |
Thagaval Thalam
1m 0s150 words~1 min read
YouTube auto captions
Transcript source
YouTube auto captions
This transcript was extracted from YouTube's auto-generated caption track. The transcript below is server-rendered so it can be read, searched, cited, and shared without opening the original YouTube player.
Pull quotes
[0:00]ஒரு நாள் கடல்ல இருக்கிற ஒரு குட்டி மீனு, தான் அம்மா மீன் கிட்ட போயி, அம்மா, நாம உயிர் வாழ்றதுக்கு தண்ணி ரொம்ப முக்கியம்ன்னு சொல்றாங்களே, அந்த தண்ணி எங்க இருக்கு அப்படின்னு கேட்டுச்சாம்.
[0:00]அதுக்கு அம்மா மீனு, இதோ நம்மள சுத்தி இருக்கே, இதுதான் தண்ணி அப்படின்னு சொல்லுச்சாம்.
[0:00]சரி, நான் போய் அப்பா கிட்ட கேட்கிறேன் அப்படின்னு சொல்லி அவங்க அப்பாட்ட போய் கேட்டுச்சாம்.
[0:00]அந்த வழியா ஒரு சுறா மீன் வர, அதுகிட்டயும் இந்த குட்டி மீனு இதே கேள்வியே கேட்டிருக்கு.
Use this transcript
Related transcript hubs
Watch on YouTube
Share
MORE TRANSCRIPTS


