[0:01]அனைவருக்கும் வணக்கம் இந்த செல்போன் பாதுகாவலி என்ற YouTube சேனலில் உங்களை அன்போடு வரவேற்கிறேன்
[0:27]அன்னை மரியா பல விதத்திலும் குடும்பங்களுக்கு துணையாக இருக்கிறாள் அன்னை மரியா திக்கற்றவர்களுக்கு ஒரு வழிகாட்டியாய் இருக்கிறாள் கருணையின் நிறைகுடமாகவே இருக்கிறாள் ஒவ்வொரு குடும்பத்திலும் தினமும் பல்வேறு விதமான பிரச்சனைகள் இவர்களுக்கெல்லாம் அன்னை மரியா மிகப்பெரிய ஆதரவாக இருக்கிறாள் இன்று நாம் சிந்திக்க எடுத்துக் கொண்ட தலைப்பு இயேசுவின் முதல் சீடர் அன்னை மரியாள் தான் ஒரு சீடர் என்றால் நிச்சயமாக ஒரு குரு இருக்க வேண்டும் அப்போது அன்னை மரியாளின் குரு யார் இயேசு கிறிஸ்து இயேசு பிறப்பதற்கு முன்பாகவே அந்த வார்த்தை வானதூதரிடமிருந்து அந்த வார்த்தையை கேட்டவுடனேயே அன்னை மரியாள் தன்னை ஒரு சீடராகவே பாவித்துக் கொண்டாள் ஒரு சீடருக்கு உண்டான பணிவும் இரக்கமும் பொறுப்பும் அதை எடுத்துக்கொண்டாள் வானதூதர் அவருக்கு தோன்றி நீ ஒரு மகனை பெறுவாய் அவனுக்கு இயேசு என்று பெயரிடுவாய் அவர் உலக மீட்புக்காக பாடுபடுபவராய் இருப்பார் என்று சொல்லும்போது அன்னை மரியாள் நான் கணவனை அறியேனே என்கிறார் மீண்டும் வானதூதர் இதை உறுதிப்படுத்துவதற்காக இன்னொரு நிகழ்ச்சியையும் கூறுகிறார் எலிசபெத் அவர் கருவுற்று இருப்பதை இங்கே சொல்கிறார் அவருக்கு இது ஆறாம் மாதம் என்று குறிப்பிடுகிறார் அன்னை மரியாள் மகிழ்ச்சி உருகிறாள்
[5:27]நான் கடவுளினுடைய அடிமை என்று சொல்லி அங்கேயே தன்னுடைய சீடத்துவத்தை எடுத்துக் கொள்கிறார் அன்று முதலே எடுத்துக்கொள்கிறார் உடனடியாகவே ஒரு சீடருக்கு உண்டான பண்புகளை ஒரு சீடனுக்கு உண்டான பொறுப்புகளை எடுத்துக்கொண்டு உடனேயே எலிசபெத்தை சந்திக்கப் போகிறாள்
[6:33]பைபிளும் அது சம்பந்தமான நூல்களும் குறிப்பிடுகின்றன அன்னை மரியா ஏழு நாட்களாக நடந்து சென்றாள் எலிசபெத்தை காண்பதற்காக உண்மையிலேயே அன்றைய நாள்பொழுதே தன்னுடைய சீடத்துவத்தை எடுத்துக்கொள்கிறார் அன்னை மரியாள் அன்று தொடங்கிய சீடத்துவம் கல்வாரி மலைவரை அவர் தொடர்ந்தார் இயேசு பிறந்து வளர்ந்து அதன் பின்னர்தான் இயேசுவின் சீடர்கள் வந்தார்கள் ஆனால் அன்னை மரியாளோ இந்த வார்த்தையை தான் ஒரு குழந்தையை பெறப்போகும் அந்த உன்னதமான வாழ்த்தினை அந்த செய்தியை கேட்டவுடனேயே தன்னுடைய தன்னுடைய சீடத்துவத்தை தொடங்குகிறார் அன்பானவர்களே நாமும் இயேசுவின் சீடர்களாகத்தான் இருக்கிறோம் ஆனால் உண்மையான சீடர்களாக இருக்கிறோமா என்பதை நாம் சிந்திக்க வேண்டிய சில கட்டாயங்களில் இருக்கிறோம் இன்று காலத்தின் கட்டாயத்தினால் நாம் மது மயக்க மருந்து செல்போன் சமூக வலைத்தளங்கள் இன்று நம்மை அலைக்கழிக்கின்றன நம்முடைய வாழ்க்கையிலிருந்து நம்மை பிரழச் செய்கின்றன தவறுகளிலேயே நாம் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம் ஒரு சங்கிலி தொடர்பு போல தவறுகளிலேயே நாம் பயணித்துக் கொண்டிருக்கின்றோம் ஆனால் நம்மை விடுவிப்பதற்கு அன்னை மரியாள் தினமும் முயன்று கொண்டிருக்கிறாள் நாம் அதை தட்டிவிட்டுக்கொண்டு மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் இதே தவறுகளிலேயே போய்க்கொண்டிருக்கிறோம் சிறிது நேரம் ஒதுக்கி அன்னை மரியாளிடம் நம்முடைய வேண்டுதல்களை வைத்து அன்னை மரியாளைப் பின்தொடர்ந்து அன்னை மரியாளின் பக்தி முயற்சி நாம் வருவோமானால் அன்னை மரியாள் நம்மை எல்லா வித கட்டுகளிலிருந்து விடுவித்து விடுவாள் செல்போன் மோகத்தால் இன்று பல குடும்பங்கள் சீரழிந்து கொண்டிருக்கின்றன பெரும்பாலானவர்கள் சிக்கல்களை வெளியே சொல்ல முடியாமல் இருக்கிறார்கள் குடும்ப உறவுகளை நிர்ணயிப்பதில் இல்லை என்றால் அதை வளர்ப்பதில் கணவன் மனைவி உறவு பெரிதாக இருக்கிறது ஆனால் இந்த கணவன் மனைவி உறவை இல்லாமல் செய்வதில் இந்த மது போதை மருந்துகள் சமூக வலைத்தளங்கள் இந்த முன்ரும் முக்கியமாக காரணிகளாக இருக்கின்றன விரைவாக நாம் அன்னை மரியாளின் பாதத்தில் திரும்பி வருவோமானால் நிச்சயமாக இழந்ததை எல்லாம் நாம் மீட்டு எடுத்துவிடலாம் அன்னை மரியாள் நம்மை தள்ளிவிட மாட்டாள் காத்துக் கொண்டிருக்கிறாள் அன்னை மரியாள் தன் கரங்களை நீட்டிக்கொண்டே தான் இருக்கிறாள் பெரும்பாலான அன்னை மரியாளின் படங்களை நாம் சுருபங்களை இல்லை என்றால் படங்களை பார்ப்போமானால் கைகளை விரித்த வண்ணமே இருக்கிறாள் இது ஒரு அறிகுறியாக கூட நாம் எடுக்கலாம் அன்னை மரியாள் நம்மை கரம்பிடித்து வழிநடத்த காத்துக் கொண்டிருக்கிறாள் நாம்தான் இடம் கொடுக்க மாட்டோம் நாம் ஒதுங்கி விடுகிறோம் அன்பானவர்களே மீண்டும் நாம் அன்னை மரியாளின் பக்கம் திரும்பி வருவோம் வாழ்க்கையை இனிய சோலைவனம் ஆக்குவோம் வாழ்க்கை வாழ்வதற்காகத்தான் வாழ்க்கையை வாழ்ந்து முடிப்பதற்காகத்தான் நாம் இந்த உலகத்திற்கு வந்திருக்கிறோம் வாழ்க்கையை மகிழ்ச்சியோடு சமாதானத்தோடு ஒவ்வொரு தாத்தா பாட்டி பெற்றோர் சிந்தித்து பாருங்கள் உங்கள் பேரக்குழந்தைகளை கையில் எடுத்து அந்த கொஞ்சும் அந்த நாட்களை அதைவிட மகிழ்ச்சியானது வேறு என்ன இருக்கிறது இந்த வாக்கியங்கள் எல்லாம் நமக்கு ஆயுள் முழுவதும் சந்தோஷம் தருபவை சந்தோஷமான வாழ்க்கையை நிறைவாக கொண்டாடுவோம் நிறைவான வாழ்வில் பயணிப்போம் அன்னை மரியாளின் துணையோடு நன்றி



