[0:00]ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆரா வில் ஹெல்த் மிக்ஸ் ஆரா வில் டாட் இன் என்ற வெப்சைட்டில் இருந்து வாங்கலாம். அக்கா, ஒரு ரூபாய் ஷாம்பு பத்து கொடுங்க அக்கா. அ என்ன பண்ணி என்ன பிரயோஜனம். நானும் தலைக்கு சீரம் போடுறேன், ஆயில் போடுறேன், ஷாம்பு போடுறேன். ஆனாலும் முடி கொட்டிக்கிட்டேதான் இருக்கு. இருந்தாலும் என் ஆறுதலுக்காக நான் தேய்ச்சுகிட்டு இருக்கேன். எதுச்சே தலைல கூட கை வைக்க முடியல அக்கா. பத்து முடி பச்சக்குன்னு வந்துருது. ஏன் தம்பி, வண்டிய கழுவிக்கிட்டே இருந்தோம்னா வண்டி எப்படி ஓடும்? வண்டிக்கு பெட்ரோல் போட்டாதானே ஓடும்? அந்த மாதிரி உங்க முடிக்கு பெட்ரோலே இந்த சூப்பர் ஃபுட் ஏழும் தான். இதை நான் சொல்லல, முடிக்குன்னு இருக்க டாக்டஸ்ஸே சொல்றாங்க. நிறைய பேருக்கு முடி கொட்டுனதுக்கு அப்புறம் இந்த ஏழு ஃபுட்டையும் சாப்பிட்டதுக்கு அப்புறம் முடி வளருமாம். இது நீங்க யூஸ் பண்ற சீரம், ஆயில் இதெல்லாம் விட விலை ரொம்ப கம்மி. எக்கோ எக்கோ எக்கோ நீங்க சொல்றதெல்லாம் கேட்கும்போதே எனக்கு முடி வளர ஃபீல் வந்துருச்சே. இருங்க அக்கா நான் நோட் பண்ணிக்கிறேன் ஒவ்வொண்ணா சொல்லுங்க. கண்டிப்பா சொல்றேன். இன்னைக்கு தேதிக்கு நிறைய பேருக்கு முடி கொட்டுறதுக்கான முக்கியமான காரணம் என்னன்னா சத்து கம்மியா இருக்கிறதுதான். அதனாலதான் டாக்டர்ஸ் இந்த ஏழு சத்தை நம்ம எடுத்துக்கிட்டோம்னா சத்து கிடைச்சுரும்னு சொல்றாங்க. இந்த ஏழு பொருள்ல நான் நாலாவதா ஒரு பொருள் சொல்லுவேன். அது ரொம்ப கம்மியா மில்லிகிராம் அளவுதானே தேவைப்படும்? ஆனா அது நிறைய வேலை செய்யும். ஒவ்வொண்ணா சொல்றேன் கரெக்டா நோட் பண்ணிக்கோங்க. சொல்லுங்க அக்கா இப்ப எப்படி நோட் பண்றேன்னு பாருங்க. ஃபர்ஸ்ட் பொருள் இந்த முட்டை. நம்ம முடியே 90% கேரட்டின் அப்படின்ற ஒரு புரோட்டீனாலதானே ஆனது. அதனால முடிக்கு புரோட்டின் ரொம்ப அவசியம். நம்ம உடம்புல இருக்க மசிலுக்கு, ஹார்ட்டுக்கு, பிரைனுக்கு எல்லாத்துக்குமே புரோட்டின் தேவை. நம்ம புரோட்டின் ரொம்ப கம்மியா எடுத்துட்டோம்னா இந்த ஃபங்ஷனுக்கே நம்ம புரோட்டின் பயன்படுத்திரும். அப்ப முடி வளர புரோட்டின் இல்லாம போயிரும். அதனால இந்த புரோட்டீன கட்டாயம் எடுத்துக்கிட்டாதான் முடி வந்து வளரும். அதே மாதிரி ரொம்ப ரேரா ஒரு சிலருக்கு பயோடின் குறைபாடு இருக்கும். அது ரொம்ப ரேராதான் இருக்கும். அந்த பயோட்டின்ன்ற சத்துமே இந்த முட்டையில இருக்கு. சோ இந்த முட்டை சாப்பிடுறது மூலமா முடி வளரும். இதான் ஃபர்ஸ்ட் பொருள். அப்ப முட்டை. அடுத்து? இந்த முட்டை மட்டும் இல்லாம பன்னீரு, தயிரு, பீன்ஸ், சுண்டலு, பச்சைப்பயிறு, வேர்க்கடலை, ராஜ்மா இதுலயும் எல்லாத்துலயுமே புரோட்டின் இருக்கு. சோ இதெல்லாம் கலந்து கலந்து ஒரு நாளைக்கு நீங்க எடுத்துக்கிட்டீங்கன்னா ஒரு நாளைக்கு தேவையான புரோட்டின் கிடைச்சுரும். அந்த புரோட்டின் உங்க முடி வளர்ச்சிக்கு கண்டிப்பா ஹெல்ப் பண்ணும். ஏன் அக்கா நீங்க சொன்ன முட்டை விலை கம்மி தானா? அதை டெய்லி எடுத்துக்கிறேன். அப்புறம் அந்த பயறு இது எல்லாமே வந்து கேப்ல கேப்ல எடுத்துக்கிறேன். எல்லாம் கரெக்ட்டாதான இருக்கு? அடுத்த விஷயத்தை சொல்லுங்க. ரெண்டாவது பொருள் முருங்கைக்கீரை. முருங்கைக்கீரை எதுக்காக அப்படின்னா நம்மளுடைய ஒவ்வொரு முடிக்கும் வேர் இருக்கும். அந்த வேருக்கு ஆக்சிஜன் வேணும். ஆக்சிஜன் இருந்தாதான் முடி நல்லா வளரும். ஆக்சிஜன் எங்க இருந்து கிடைக்கும்? அயன் மூலமா தான் கிடைக்கும். நம்ம இரத்தத்துல ஹீமோகுளோபின் இருக்கும். ஹீமோகுளோபினுக்கு அயன் தேவை. சோ அயன் இருந்தாதான் நம்ம ஒவ்வொரு முடியோட வேர்க்காலுக்கும் நம்மளுக்கு ஆக்சிஜன் கிடைக்கும். அந்த அயனுக்காக இந்த கீரை எடுத்துக்கலாம். முன்னாடியே சொன்ன ராஜ்மா, சுண்டலு, வெந்தயம் எல்லாத்துலயுமே இருக்கு. அக்கா இந்த இரும்புச்சத்துதான் சுவரொட்டி நான்வெஜ்ல எல்லாம் இருக்குல? அதையுமே நீங்க வாரத்துல ஒரு தடவை, ரெண்டு தடவை எடுத்துக்கோங்க. இந்த மாதிரி தினமும் கீரையும் இந்த சுண்டல் இதெல்லாம் சேர்த்துக்கிட்டீங்கன்னா உங்களுக்கு அயன் கிடைச்சுரும். ஏன்னா 90% பேத்துக்கு அயன் டிபிசியன்சி இருக்கு. முக்கியமா பெண்களுக்கு நிறைய இருக்காம். இப்ப நீங்க நான்வெஜ் எடுத்துக்கிட்டீங்கன்னா அப்படியே சாப்பிட்டுக்கலாம். இப்ப இதே நீங்க வெஜ்ஜா எடுத்துக்கிட்டீங்க அப்படின்னா அப்ப இது கூட கண்டிப்பா இந்த கொய்யாப்பழமும் சாப்பிடணும். ஏன்னா இது வந்து விட்டமின் சி. கொய்யாப்பழம், நெல்லிக்காய், எலுமிச்சம்பழம். இந்த மூணுலயுமே விட்டமின் சி நிறைய இருக்கு. சோ இந்த மாதிரியான வெஜிடேரியன்ல இருந்து நம்ம அயன் எடுத்துக்கணும்னா கூட இந்த விட்டமின் சி யும் சேர்த்து சாப்பிட்டோம்னாதான் இதுல இருக்க அயன் நம்ம பாடிக்கு நல்லா அப்சர்வ் ஆகும். அதனால இதை செய்யும்போது ஒரு அரை மணி நேரத்துக்கு முன்னாடியோ பின்னாடியோ இந்த மாதிரி பொருளும் சாப்பிட்டுக்கோங்க அப்பதான் இரும்புச்சத்து நிறைய கிடைக்கும். அப்ப முடிக்கு முருங்கைக்கீரை. அப்ப மூணாவது பொருளு? மூணாவது பொருளு ஃப்ரீ. நீங்க சும்மா போய் அங்க போய் நில்லுங்களேன் மூணாவது பொருள் கிடைச்சுரும். அங்க போய் நின்னா ரோட்ல வண்டி வந்துரும் அக்கா. இல்லப்பா ஓரஞ்சாரமா நின்னீங்க அப்படின்னா சன்லைட்ல இருந்து உங்களுக்கு விட்டமின் டி கிடைக்கும். அதே மாதிரி காளான்லயும் விட்டமின் டி இருக்கு. முட்டையிலயே விட்டமின் டி இருக்கு. ஆனா இயற்கையா எந்த காசும் இல்லாம நம்மளுக்கு சன்லைட்ல இருந்து விட்டமின் டி கிடைக்கும். தம்பி நம்ம தலையில முடி வந்துட்டு மூணு ஸ்டேஜ்ல இருக்கும். ஃபர்ஸ்ட் ஸ்டேஜ் என்னன்னா அனாகேன்னு சொல்லுவாங்க. அது வளர்ந்துட்டு இருக்க ஸ்டேஜ். ரெண்டாவது கேட்டஜன்னு சொல்லுவாங்க. வளர்ந்து முடிச்சுட்டு கம்முன்னு இருக்கும். மூணாவது ஸ்டேஜ் வளர்ந்து முடிஞ்சு அது உதிர்ற ஸ்டேஜ். சோ இந்த மாதிரி மூணு நிலைமையில இருக்கும். இப்ப இந்த விட்டமின் டி என்ன பண்ணும்னா இந்த ஒவ்வொரு ஸ்டேஜ் போறதுக்கும் ஹெல்ப் பண்றதே இந்த விட்டமின் டி தான். அதே மாதிரி நம்மளுடைய முடியோட வேரை ஆரோக்கியமா வச்சுக்கிறது இந்த விட்டமின் டி தான். சோ விட்டமின் டி இல்ல அப்படினாலும் அதனாலயும் முடி கொட்டும். அதனால இந்த விட்டமின் டி யும் நீங்க எடுத்துக்கணும். அப்புறம் ஸ்ட்ரெஸ் ஆகக்கூடாது. நிறைய பேரு முடி வளரல வளரலன்னு அதுக்கே ஸ்ட்ரெஸ் ஆகுறாங்க. அதனால இன்னும் நிறைய முடி கொட்டும். இந்த ஸ்ட்ரெஸ் ஆகுறதுனால கார்ட்டிசால்ன்ற ஹார்மோன் நம்ம உடம்புல அதிகமா சுரக்கும். அது சுரந்தா என்ன ஆகும்னா வளர்ற முடி எல்லாத்தையுமே அது உதிர நிலைக்கு தள்ளி விட்டுரும். அதனால ஸ்ட்ரெஸ் ஆகுறத கம்மி பண்ணிக்கோங்க. நீங்க பொருளெல்லாம் எடுத்துக்கிறீங்களா அதனால உங்களுக்கு கண்டிப்பா முடி வளந்துரும். அதான் இதெல்லாம் சாப்பிட்டா முடி வளந்துரும்னு சொல்லிட்டீங்கல இதுக்கு மேல என்ன ஸ்ட்ரெஸ் இருக்க போகுது. அடுத்து நாலாவது பொருளை சொல்லுங்க. நாலாவது பொருளு எள்ளும் பம்கின் சீட் அதாவது பூசணி விதையும் இது ரெண்டுலயுமே ஜிங்க் இருக்கு. ஜிங்க் என்ன பண்ணும்னா நம்ம முடி வளர்றது பார்த்தீங்களா அந்த இடத்தை வந்து ஸ்கால்ப்ன்னு சொல்லுவாங்க. அந்த ஸ்கால்ப்ப ஆரோக்கியமா வச்சுக்க இந்த ஜிங்க் வந்து ஹெல்ப் பண்ணுது. அதே மாதிரி முடி வளர்ச்சிக்கு புரோட்டின் ரொம்ப முக்கியம்னு சொன்னோம்ல அந்த புரோட்டினுக்கு ஜிங்க் தேவைப்படுது. அப்ப ஜிங்க் நம்ம எடுத்துக்கிறது மூலமா முடி வளரும். அஞ்சாவது வால்நட்டும் ஃபிளாக் சீடும். வெஜிடேரியன் சோர்ஸ்ல ஒமேகா 3 அதிகமா இருக்கிறது இது ரெண்டுலதான். இப்ப நான்வெஜ்னு எடுத்துக்கிட்டீங்கன்னா சின்ன சின்ன மீன்கள்ல இது அதிகமா இருக்கும். இது என்ன பண்ணுது நம்ம முடிக்கு அப்படின்னா நம்ம முடியோட வேர் பகுதி இருக்குல்ல அதை நல்லா சாஃப்டா வச்சுக்கும். இந்த ஸ்கால்ப்பை நல்லா ஹைட்ரேட்டடா அதாவது ஈரப்பதமா வச்சுக்கும். இன்ஃப்ளமேஷன் வராம பார்த்துக்கும். இதெல்லாம் பண்றதுனால முடி ஆரோக்கியமா இருக்கும். முடி நல்லா வளரும். அதுக்கு இந்த ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் ஹெல்ப் பண்ணுது. ஆறாவது பீட்ரூட். பீட்ரூட்ல நைட்ரேட்னு ஒரு சத்து இருக்கு. இது நம்ம பாடில போய் நைட்ரிக் ஆக்சைடா மாறும். அப்படி மாறும்போது பிளட் சர்குலேஷன் அதிகமாகும். பிளட் சர்குலேஷன் அதிகமாகனா நம்முடைய முடியோட வேர் பகுதிக்கு நிறைய ரத்த ஓட்டம் போய் ஊட்டம் கிடைச்சு முடி வளந்துரும். ஏக்கா இத்தனை நாளா முடி நல்லா வளர்றதுக்கு புரோட்டீனும் இரும்புச்சத்து இருந்தா போதும்னு நான் நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா இப்பதான் தெரியுது முடி நல்லா வளர்றதுக்கு அது மட்டும் போதாது. ஒமேகா 3, ஜிங்க், விட்டமின் எல்லாம் வேணும்னு. ஆமா அது கூடவே ஆறாவது பொருள் என்ன அப்படின்னா நீங்க கீரை சாப்பிடலாம் புரோட்டின் சாப்பிடலாம். என்ன சத்தான பொருள் வேணா சாப்பிடலாம். ஆனா அதுக்கு நம்முடைய வயிறு கட் ரொம்ப ஆரோக்கியமா இருக்கணும். அந்த கட்டை பாதுகாக்கறதுக்கு தயிரு. சோ இந்த தயிரு பழைய சோறு எதெல்லாம் வந்து கட் பாக்டீரியாவை நல்லா வச்சுக்குமோ அந்த மாதிரி உணவு சாப்பிடணும். நம்ம கட்ல பிரச்சனை வராம பார்த்துக்கணும். ஒரு சில பேருக்கு எப்பவுமே வயிறு மொந்துன்னு இருக்கும். கான்ஸ்டிபேஷன் பிராப்ளம் இருக்கும். இதெல்லாம் சரி பண்ணாதான் நம்ம சாப்பிடுற சாப்பாட்டுல இருக்க எல்லா சத்தும் நல்லா இரத்தத்துல உரிஞ்சு அந்த ரத்தம் ஃபாலிகிள்க்கு போயிட்டு நம்மளுக்கு முடி வளர்ச்சிக்கு ஹெல்ப் பண்ணும். ஏக்கா இவ்வளவு தெரிஞ்ச உனக்கு கணக்கு தெரியல பாத்தியா தயிர் வந்து ஏழாவது பொருளு அக்கா. ஓ மாத்தி சொல்லிட்டேனா தம்பி நீங்க கரெக்டா எல்லாம் கவனிக்கிறீங்களாங்கறத செக் பண்ணேன். அய்யய்யோ பரவால எல்லாம் கரெக்டாதான் கவனிக்கிறீங்க. இப்ப நான் சொன்ன சூப்பர் ஃபுட் இந்த ஏழையும் கூட வேற என்ன என்னல்லாம் பண்ணனும் அப்படின்னா தண்ணி நிறைய குடிக்கணும். ஏன்னா தண்ணி நல்லா குடிச்சாதான் பிளட் சர்குலேஷனுக்கு ரொம்ப ஹெல்ப் பண்ணும். அதே மாதிரி ஸ்ட்ரெஸ்ஸே கூடவே கூடாது. தூக்கம் ரொம்ப அவசியம் ஏன்னா நைட் தூங்கும்போதுதான் நம்மளுக்கு ஒரு சில அத்தியாவசியமான ஹார்மோன் எல்லாம் சுரக்குது. சோ அதுவுமே முடி வளர்ச்சிக்கு ஹெல்ப் பண்ணும். சோ தூக்கம் ரொம்ப முக்கியம். எக்சர்சைஸ் தினமும் ஒரு அரை மணி நேரம் முக்கால் மணி நேரம் பண்ணீங்கன்னா அதுவே ஸ்ட்ரெஸ் இல்லாம பாத்துக்கும். அதுவே உங்க பாடிக்கு ரொம்ப ஹெல்ப் பண்ணும். அதுக்கப்புறம் இந்த கெட்ட பழக்கம்லாம் இருந்துச்சு அப்படின்னா இந்த தம் அடிக்கிறது, சரக்கடிக்கிறது அதெல்லாம் கொஞ்சம் நிறுத்தனும் ஏன்னா அதுவுமே நம்ம ஹேர் குரோத்துக்கு சப்போர்ட் பண்ணாம போயிரும் அத நிறுத்திடுங்க. கெட்ட பழக்கமா அச்சி அச்சி அந்த பழக்கம்லாம் எனக்கு இல்லைக்கா. சரி சரி சரி இந்த கெட்ட பழக்கம் உங்களுக்கு இல்லை. ஆனா இந்த ஜங்க் ஃபுட், ப்ராசஸ் ஃபுட் இதெல்லாம் சாப்பிடுவீங்கதானே? இதெல்லாம் சாப்பிடுறதுனாலயும் உங்களுக்கு முடி கொட்டுறதுக்கு வாய்ப்பு இருக்கு. அதனால இந்த ஜங்க் ஃபுட், ப்ராசஸ் ஃபுட் இந்த மாதிரியான பேக்டு ஐட்டம்ஸ் எல்லாமே முடிஞ்ச அளவுக்கு சாப்பிடாம இருக்கறது நல்லது. இப்ப நான் சொன்ன காகறி பழங்கள் இதெல்லாம் சாப்பிட்டீங்கன்னாவே முடி வளரக்கு ஹெல்ப் பண்ணும். இந்த முடி வளரதை பொறுத்த வரைக்கும் ஒரு பொருள் மேஜிக் ஃபுட் அப்படின்னுலாம் கிடையவே கிடையாது. முடி வளரக்கு இத்தனை பொருள் தேவைப்படுது சோ இது எல்லாமே சாப்பிட்டாதான் உண்மையாவே உங்களுக்கு சத்து கிடைக்கும். ஆனா இன்னைக்கு தேதிக்கு நம்ம எல்லாம் என்ன பண்றோம்? கலோரியா தான் எடுத்துக்கிறோம். காலையில இட்லி சட்னி, மதியானம் நிறைய சாப்பாடு கொஞ்சம் குழம்பு கொஞ்சம் காய், அப்புறம் நடுவுல ஒரு சிப்ஸ் சமோசா அப்புறம் நைட் திரும்பி ஒரு தோசை ஒரு சட்னி இப்படி சாப்பிட்டோம்னா கலோரிதான் அதிகமா இருக்குமே தவிர சத்து கம்மியாதான் இருக்கும். அதனாலதான் டாக்டர்ஸ்லாம் சத்த போகஸ் பண்ணீங்கன்னாவே முடி கொட்டாது முடி வளரும்னு சொல்றாங்க. இதை தாண்டி நிறைய முடி கொட்டுது அப்படின்னா கண்டிப்பா ஹாஸ்பிடல்ல போய் தான் பாக்கணும். ஜெனடிக் பிராப்ளமாவும் இருக்கும் அவங்களும் போய் ஹாஸ்பிடல்ல தான் போய் பாக்கணும். பொதுவா இந்த நியூட்ரியன்ஸ்லாம் எடுத்துக்கிட்டா கண்டிப்பா முடி வளரும். சூப்பர் அக்கா இப்பதான் எனக்கு தெளிவா புரியுது. நான் கூட இந்த முடி கொட்டுறத வந்து ஒரு அழகு பிரச்சனைனு நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா உடம்புக்குள்ள தேவையான சத்து இல்லங்கறதுனாலதான் முடி கொட்டுதுங்கறது இப்பதான் எனக்கு கிளியரா புரியுது. சரிக்கா எல்லாம் சொல்லிட்டீங்க அப்படியே இந்த ஏழு பொருளை சாம்பிள் கொடுத்தீங்கன்னா டெஸ்ட் பண்ணி பார்த்துட்டு கொடுத்துருவேன். சாம்பிள்கா இதை இப்ப கொடுக்கிற சாம்பிள்.

Super Food: அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு 7 அற்புத உணவுகள்🔥|Hair Growth Expert Shares Top 7 Secrets
Theneer Idaivelai
8m 34s1,277 words~7 min read
YouTube auto captions
Transcript source
YouTube auto captions
This transcript was extracted from YouTube's auto-generated caption track. The transcript below is server-rendered so it can be read, searched, cited, and shared without opening the original YouTube player.
Pull quotes
[0:00]ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆரா வில் ஹெல்த் மிக்ஸ் ஆரா வில் டாட் இன் என்ற வெப்சைட்டில் இருந்து வாங்கலாம்.
[0:00]நிறைய பேருக்கு முடி கொட்டுனதுக்கு அப்புறம் இந்த ஏழு ஃபுட்டையும் சாப்பிட்டதுக்கு அப்புறம் முடி வளருமாம்.
[0:00]எக்கோ எக்கோ எக்கோ நீங்க சொல்றதெல்லாம் கேட்கும்போதே எனக்கு முடி வளர ஃபீல் வந்துருச்சே.
[0:00]இன்னைக்கு தேதிக்கு நிறைய பேருக்கு முடி கொட்டுறதுக்கான முக்கியமான காரணம் என்னன்னா சத்து கம்மியா இருக்கிறதுதான்.
Use this transcript
Related transcript hubs
Watch on YouTube
Share
MORE TRANSCRIPTS


