[0:08]ஓம் சரணாகத தீனார்த பரிரான பராயணே சர்வஸ்யாத்திகரே தேவி நாராயணி நமோஸ்துதே. வணக்கம் நேயர்களே, இது மகாலட்சுமி ஜோதிடம் வழங்கும் காலச்சக்கரம். உங்கள் அன்பு ஜோதிடர் ஸ்ரீராம் ஜி பேசுகிறேன். அனைவரும் நலமுடன் இருக்கிறீர்களா? நன்றாகத்தான் இருப்பீர்கள். நன்றாக இருக்க வேண்டும். இன்றைய காணொளியில் நாம் காண இருப்பது புகழ் மற்றும் செல்வம் தரும் புஷ்கராம்சம். இந்த புஷ்கராம்சம் என அழைக்கப்படும் புஷ்கர நவாம்சம் பற்றிய சில புரிதல்கள். இந்த புஷ்கர நவாம்சம்னா என்ன? எதனால அது சிறப்பு பெறுகிறது அப்படிங்கறதை பார்ப்போம். பொதுவாகவே பார்த்தீங்கன்னா யோகங்கள் அப்படிங்கிற அடிப்படை வந்து ஜோதிட சாஸ்திரத்தில் ராசி கட்டத்துல கிரகங்களின் இணைவை பொறுத்துதான் வரும். இரண்டு கிரகங்கள் நல்ல விதமா இணைந்தால் யோகம். குரு சந்திரன் யோகம், கஜகேசரி யோகம், சிவராஜ யோகம், தர்மகர்மாதிபதி யோகம் இது எல்லாமே இருவேறு கிரகங்களின் இணைவு. இப்ப உங்க ஜாதகத்துக்கு ஒன்பதாம் அதிபதியும் பத்தாம் அதிபதியும் இணையும்போது தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுறது. குருவும் சூரியனும் இணைந்தோ அல்லது பார்த்த நிலையில சிவராஜ யோகம் ஏற்படுறது. சந்திரனுக்கு குரு கேந்திரத்தில் அமரும்போது கஜகேசரி யோகம் ஏற்படுறது. குரு சந்திர யோகம் ஏற்படுறது. சந்திர கேந்திரத்துல செவ்வாய் அமரும்போது சந்திரன் மங்கள யோகம் ஏற்படுறது. குருவும் சுக்கிரனும் சேர்றது ஒரு வித யோகத்தை தர்றது. புதனும் சுக்கிரனும் சேர்றது அஷ்டலட்சுமி யோகத்தை தர்றதுங்கறது எல்லாமே இந்த கிரகங்களின் சேர்க்கையினால வரும். இந்த கிரகங்களுடைய சேர்க்கை எல்லாம் இல்லாம ராசி கட்டத்தில் ஒரு கிரகம் அமர்ந்த நட்சத்திர பாதாச்சார அடிப்படையில் கிடைக்கக்கூடிய ஒரு யோகம் தான் புஷ்கராம்சம். புஷ்கர நவாம்ச யோகம். புஷ்கர நவாம்சத்துல ஒரு கிரகம் அல்லது லக்னம் அமையப்பெற்றால் நீங்கள் கொடுத்து வைத்தவர். புரியுதுங்களா? லக்னமே ஒருத்தருக்கு புஷ்கர நவாம்சத்துல அமைந்துனா தன்னுடைய முயற்சிகளால் மாபெரும் வெற்றிகள் பெறும் மனிதரா மாறுவார். தனதிபதி ஒருத்தருக்கு புஷ்கர நவாம்சத்துல அமைந்ததுனா பொருள் ஈட்டி பெரும் புகழை ஈட்டும் தன்மை கொண்டவரா இருப்பாரு. பூர்வ புண்ணியாதிபதி ஒருத்தருக்கு புஷ்கர நவாம்சத்துல இருந்ததுன்னா நல்ல குழந்தைகள், கௌரவமிக்க செயல்கள், அந்தஸ்து போன்றவற்றை பெற்று பெருவாரு. ஏழாம் அதிபதி ஒருத்தருக்கு புஷ்கர நவாம்சத்துல இருந்துச்சுனா வாழ்க்கை துணை கூட்டாளிகளினால் மிகப்பெரும் நன்மைகளை பெறுவார். எட்டாம் அதிபதி ஒருத்தருக்கு புஷ்கர நவாம்சத்துல இருக்குன்னா அவர் ஜாதகப்படி ஆயுள் தீர்க்கமாகி அன்ய தேசத்தில் வசித்து திடீர் தனவரவு, அதிஷ்டம், பொருளாதாரம், முன்னேற்றங்களை பெறுவார். சோ லக்னாதிபதி சுயமுயற்சி. இரண்டாம் அதிபதி தனத்தால் வெற்றி. மூன்றாம் அதிபதி புஷ்கர நவாம்சத்துல இருக்கும்போது நல்ல நண்பர்கள், கூட்டு, பங்குதாரர்கள் உதவியால் வெற்றி. நான்காம் அதிபதி புஷ்கர நவாம்சத்துல இருக்கும்போது கல்வி, சொத்துக்கள், சுகத்தினால் வெற்றி. ஐந்தாம் அதிபதி புஷ்கர நவாம்சத்துல இருக்கும்போது குழந்தைகளால் கௌரவமிகு செயல்களால் வெற்றி. ஆறாம் அதிபதி ஒருத்தருக்கு புஷ்கர நவாம்சத்துல இருக்கிறார் அப்படிங்கற போது எதிரிகளால் வெற்றி. எதிரிகளாலேயே வெற்றி. நம்மளை எதிர்க்கிறது யாருங்கிற பவர்ஃபுல்லான ஆளாலயே வெற்றி கிடைக்கிறது. நல்ல வேலை கிடைக்கிறது முன்னேற்றம் அடையறது. ஏழாம் அதிபதிங்கிற போது வாழ்க்கை துணை எட்டாம் இடங்கறது திடீர் தனவரவு அதிஷ்டம். பாக்கியாதிபதி புஷ்கர நவாம்சத்துல இருக்கிறது கொடுத்து வைத்த அமைப்பின் உச்சக்கட்டம். பாக்கியாதிபதிங்கிறவர் போய் புஷ்கர நவாம்சத்துல உட்கார்ந்திருக்கிறார் அப்படின்னா நீங்கதான் அதிஷ்டசாலி உலகத்திலேயும் தொட்டதெல்லாம் பொன்னாகும் யோகம். மிடாஸ் டச்ன்னு சொல்லுவாங்க இல்லையா தொட்டதெல்லாம் பொன் எல்லாத்துலையும் வெற்றியை தரக்கூடிய வாய்ப்பு. பத்தாம் அதிபதி ஒருத்தருக்கு புஷ்கர நவாம்சத்துல இருக்கும்போது தொழிலினாலேயே அறியப்படும் யோகம். தொழில் அதிபர் ஆகுறவங்களுடைய நிறைய பேர் ஜாதகத்துல பத்தாம் அதிபதி புஷ்கர நவாம்சத்துல ரொம்ப அற்புதமா அமைந்திருப்பார். லாபாதிபதி புஷ்கர நவாம்சத்துல அமையறதுங்கறது எல்லாவற்றிலும் யோகம், எல்லாவற்றிலும் லாபம். உங்களுடைய அபிலாசைகள் அனைத்தும் பூர்த்தி செய்வது ஒன்றுக்கு மேற்பட்ட வாய்ப்புகள் கிடைப்பது. விரையாதிபதி புஷ்கர நவாம்சத்துல அமையும்போது நல்ல விரயங்கள், சுப விரயங்கள், கௌரவமான செயல்பாடுகள், அந்நிய தேசத்தில் வசிப்பதுங்கற மாதிரியான பலன்களை கிடைக்கும். அப்படி பார்க்கும்போது 12 வீட்டுக்கு உரியவர்களில் யார் வேண்டுமானாலும் புஷ்கராம்சத்தில் அமரலாம். ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள், அதிகப்படியான கிரகங்கள், அதிகப்படியான அமைப்புகள் புஷ்கராம்சத்தில் அமையப்பெற்றவர்கள் அரசனுக்கு நிகரான வாழ்வை பெறுகிறார்கள். இது நிதர்சனமான உண்மை. ஜாதக கட்டத்துல கிரகங்கள் வலிமை குறைந்த நிலையில் இருந்தாலும் கூட இந்த புஷ்கராம்சம் பெறும்போது இழந்த வலிமையை கிரகங்கள் மறைமுகமாக மீட்டுவிடும். புரியுதுங்களா? இந்த புஷ்கராம்சத்துக்கான புஷ்கர நவாம்சத்திற்க்கான நட்சத்திர பாதங்கள் எவைங்கிறதை முதல்ல பார்த்துரலாம். 27 நட்சத்திரங்கள் இருந்தாலும் கூட ஒரு சில நட்சத்திரங்களுக்கு மட்டுமே அதிலேயே ஒரு சில பாதங்களுக்கு மட்டும் தான் இந்த யோகத்தை ஞானிகள் வழங்கி இருக்கிறார்கள். மொத்தம் பார்த்தீங்கன்னா 27 நட்சத்திரம் ஒன்பது கிரகங்களின் அடிப்படையில் செயல்படுகிறது என்றால் கூட ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் நான்கு பாதங்கள் அடிப்படையில் பெருக்கும்போது 108 பாதங்கள் இதுல வருது. ஒரு நட்சத்திரம் நான்கு பாதங்கள் கொண்டது. 108 பாதங்கள் மொத்தம் உண்டு. ஒன்பது கிரகங்களின் அடிப்படையில் இவை இயங்கினாலும் மொத்தமே வெறும் 24 பாதங்கள் மட்டும் தான் புஷ்கராம்சத்துல வரும். புரிஞ்சதுங்களா? இதுல அஸ்வினி, மகம், மூலம் என்கின்ற கேதுவின் நட்சத்திரங்கள் ஈடுபடுவதில்லை. புஷ்கர நவாம்சத்துக்கு கேதுவின் நட்சத்திரங்கள் பொருந்தி வராது. அதாவது இதை நீங்க சரியா புரிஞ்சுக்கணும். ஒரு கிரகம் கேதுவுடைய நட்சத்திரத்துல இருக்கும்போது புஷ்கர நவாம்சம் பெறாது அப்படித்தான் அது அர்த்தமே தவிர. கேதுவுடைய நட்சத்திரங்களான அஸ்வினி மகம் மூலத்துல ஒருத்தர் பிறந்தார்னா அவருக்கு புஷ்கராம்சம் இருக்காதுன்னு அர்த்தம் இல்லை. புரிஞ்சுதா டிஃபரென்ஸ். சோ ஒரு கிரகம் கேதுவின் நட்சத்திரத்துல இருந்தால் புஷ்கராம்சம் பெறாது. அடுத்து செவ்வாயினுடைய நட்சத்திரத்துல இருந்தாலும் புஷ்கராம்சம் பெறாது. செவ்வாயினுடைய நட்சத்திரங்களான மிருகசீரிடம் சித்திரை அவிட்டம். இந்த நட்சத்திரத்துல ஒரு கிரகம் அமரும்போதும் புஷ்கராம்சம் அந்த கிரகத்துக்கு கிடைக்காது. அதற்கு அடுத்தது புதனுடைய நட்சத்திரங்களான ஆயில்யம், கேட்டை, ரேவதியில இருக்கும்போதும் ஒரு கிரகம் புஷ்கர நவாம்சத்தை பெறாது. புரிஞ்சதுங்களா? அப்ப மீதி உள்ள கிரகங்களின் அதாவது மூணு கிரகம் இதுலயே போயிட்டுது. மீதி உள்ள ஆறு கிரகங்களின் நட்சத்திரங்களில் இரண்டிரண்டு பாதங்களை கொண்டவன் சூரியனும், குருவும். சூரியனும் குருவும் தங்களுடைய இரண்டு இரண்டு பாதங்களை புஷ்கராம்சத்துக்கு கொடுக்கிறார்கள். எது அப்படிங்கறதை பார்ப்போம். சூரியனுடைய நட்சத்திரங்கள்ல கார்த்திகை, உத்திரம், உத்திராடத்தின் ஒன்று நான்காம் பாதத்தில் அமரும் கிரகங்கள் புஷ்கர நவாம்சத்தை பெறும். இந்த நவாம்சத்துல இந்த இரண்டு பாதங்கள் பார்த்தீங்கன்னா தனுசு மற்றும் மீனம்ங்கிற குருவினுடைய வீட்டில கிடைக்கும். புரிந்ததுங்களா? சூரியனுடைய ஒன்றாம் பாதம் அதாவது சூரியனுடைய நட்சத்திரங்களின் ஒன்றாம் பாதமும், நான்காம் பாதமும் புஷ்கர நவாம்சத்தில் ஈடுபடும். குருவினுடைய நட்சத்திரங்களில் இரண்டாம் பாதமும், நான்காம் பாதமும் புஷ்கர நவாம்சத்தில் கிடைக்கப்பெறும். புரியுதுங்களா? புனர்பூசம், விசாகம், பூரட்டாதி என்று சொல்லக்கூடிய குரு பகவானுடைய இரண்டு நட்சத்திரங்களும், மூன்று நட்சத்திரங்களும் புஷ்கர நவாம்சத்தில் அவருடைய இரண்டாம் பாதமும் நான்காம் பாதமும் இருக்கும். ஒரு உதாரணம் எடுத்துக்குவோமே உதாரணம் சொன்னாதான் உங்களுக்கு டக்குனு புரியும். இப்ப விசாக நட்சத்திரம் இரண்டாம் பாதத்துல ராகு இருக்கார் துலாத்துல. சரியா? விசாக நட்சத்திரம் இரண்டாம் பாதத்துல ராகு இருக்கிறார் அப்படின்னா ஆட்டோமேட்டிக்கா அவர் நவாம்சத்துல ரிஷபத்துக்கு போவார். இப்போ இந்த ராகு தசை உங்களுக்கு புஷ்கர நவாம்சத்தில் ஈடுபட்ட ராகுவாக செயல்படும். நல்ல பலன்களை மிகுதியாக தரும். புரிஞ்சதுங்களா? அதே விசாக நட்சத்திரம் நான்காம் பாதம் விருச்சிகத்தில் ராகு இருக்கார். இப்போவும் அவர் புஷ்கர நவாம்சத்துல கடகத்துக்கு போவார். இங்கேயும் அவர் சுப பலன்களை செய்ய கடமைப்பட்டவர் ஆவார். இது நுணுக்கமா ஜோதிட பலன்கள் தெரிஞ்சுக்கறதுக்கு உதவும். ஆக சூரியனுடைய நட்சத்திரங்களின் ஒன்று நான்காம் பாதமும் குருவினுடைய நட்சத்திரங்களின் இரண்டு மூன்றாம் பாதமும் சனி மற்றும் சந்திரனுடைய நட்சத்திரங்களின் இரண்டாம் பாதம் மட்டும். உதாரணமா ரோகிணி, அஸ்தம், திருவோணம். இந்த மூன்று நட்சத்திரங்களின் இரண்டாம் பாதம். இப்ப கன்னியில ஒரு கிரகம், அஸ்த நட்சத்திரம் இரண்டாம் பாதத்துல இருக்கிறது என்றால் அது புஷ்கர நவாம்சத்தில் இருக்கிறதா அர்த்தம். திருவோண நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில் ஒரு கிரகம் இருக்குதுனா அது புஷ்கர நவாம்சத்தில் இருக்கிறதா அர்த்தம். ரோகிணி நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில் கிரகம் இருக்குனா அது புஷ்கர நவாம்சத்தில் இருக்கிறதா அர்த்தம். இந்த மூன்றும் இந்த மூன்று நட்சத்திரங்களின் இரண்டாம் பாதமும் ரிஷபத்துல சுக்கிரனுடைய இயற்கை சுபரான சுக்கிரனுடைய வீட்டுல விழும். புரிஞ்சதுங்களா? அப்ப உங்கள் லக்னப்புள்ளையே இந்த நட்சத்திரத்தில் விழுந்தாலே நீங்க புஷ்கர நவாம்சத்தில் இருக்கிறீங்கன்னு அர்த்தம். கடும் முயற்சி செய்து சாதாரண குடும்பத்தில் பிறந்தால் கூட மிகப்பெரும் சக்கரவர்த்தி ஆகறதுக்காக நீங்க பாடுபடுவீங்க அப்படிங்கறது நிதர்சனமான உண்மை. சனி பகவானுடைய நட்சத்திரங்களான பூசம், அனுசம், உத்திரட்டாதி. இந்த மூன்று நட்சத்திரத்தின் இரண்டாம் பாதங்களும் புஷ்கர நவாம்சத்துல வரும். அப்ப பூச நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில் ஒரு கிரகம் இருந்தாலும், அனுச நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில் ஒரு கிரகம் இருந்தாலும், உத்திரட்டாதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் ஒரு கிரகம் இருந்தாலும் புஷ்கர நவாம்சத்தில் இருப்பதாக கணக்கில் கொள்ள வேண்டும். புரிஞ்சதுங்களா? இந்த மூன்று இரண்டாம் பாதங்களும் எங்க வரும்னு கேட்டீங்கன்னா கன்னியில வரும். நவாம்சத்தில் கன்னியில் இருக்கும். இந்த கிரகங்கள் அதாவது பூசம் இரண்டாம் பாதம், அனுஷம் இரண்டாம் பாதம், உத்திரட்டாதி இரண்டாம் பாதத்தில் ஒரு கிரகம் இருந்தால் அது நவாம்சத்துல கன்னியில இருக்கும். இந்த அமைப்பு புஷ்கர நவாம்சத்தை உங்களுக்கு கொடுக்கும். இதற்கு அடுத்தபடியாக சுக்கிரனின் நட்சத்திரங்களான பரணி, பூரம், பூராடம். சுக்கிரனுடைய நட்சத்திரங்களான பரணி, பூரம், பூராட நட்சத்திரத்தின் மூன்றாம் பாதங்கள் புஷ்கர நவாம்சத்துல வரும். அப்ப பரணி நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் ஒரு கிரகம் இருந்தாலும், பூர நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் ஒரு கிரகம் இருந்தாலும், பூராட நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் ஒரு கிரகம் இருந்தாலும் அல்லது லக்னம் அங்கே ஆரம்பித்தால் உங்களுடைய அந்த கிரகமானது புஷ்கர நவாம்சத்தில் நவாம்சத்தில் துலாம் வீட்டில இருக்கும். புரிஞ்சதுங்களா? நவாம்சத்தில் துலாத்தின் மனையில் அவர் அமர்ந்திருக்கும் விதியை பெற்றிருப்பார். சோ இந்த அடிப்படையில உங்களுக்கு யோக பாக்கியதிகள் வேலை செய்யும். அப்ப இந்த கிரகம் இந்த அமைப்புல இருந்துச்சுன்னா உங்களுக்கு புஷ்கர நவாம்சத்தில் இருக்கு குறைகளை நிவர்த்தி செய்து நிறைகளை வாரி வழங்குதுன்னு அர்த்தம். இதற்கு அடுத்தபடியா பார்த்தீங்கன்னா ராகுவினுடைய நட்சத்திரம். ராகுவினுடைய நட்சத்திரமான திருவாதிரை, சுவாதி மற்றும் சதயம்.
[10:07]இந்த திருவாதிரை, சுவாதி, சதயத்தின் நான்காம் பாதத்தில் அமரும் கிரகங்கள் புஷ்கர நவாம்சத்தில் இருக்கும். இது நவாம்ச கட்டத்தின் அடிப்படையில குருவினுடைய வீட்டுக்கு போகும். மீனத்துக்கு போகும். புரிஞ்சதுங்களா? அப்ப இந்த அடிப்படையில புஷ்கர நவாம்சம் பிரித்தளிக்கப்பட்டிருக்கிறது. உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் இந்த புஷ்கர நவாம்சத்தில் அமையப்பெற்றிருந்தால் நீங்க கொடுத்து வைத்தவர். ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் அமைய பெற்றவர்கள் அதிகம் கொடுத்து வைத்தவர்கள். நான்கு ஐந்து கிரகங்கள் புஷ்கர நவாம்சத்தில் அமையப் பெற்றவர்கள் பிறப்பால் எத்தகைய நிலையில் இருந்தாலும் உயர்ந்த அந்தஸ்தை நிச்சயமாக தன் வாழ்நாளில் பெற்று விடுவார்கள். உங்கள் லக்னத்திற்கு பாவியாகி பாதகாதிபதியாகி மார்காதிபதியான தசை நடத்தும் கிரகங்கள் கூட புஷ்கர நவாம்சத்தில் அமையப் பெற்றிருக்கும்போது கூடுமானவரை நற்பலன்களை செய்ய கடமைப்பட்டவர்கள் ஆவார்கள். கூடுமான வரை நல்ல பலன் இருக்கும் அந்த திசையில. ஒரு சில காரகவிய ஏமாற்றங்களை நீங்க சந்திச்சாலும் கூட கூடுமானவரை நற்பலன்கள் மிகுதியாக இருக்கும் வாய்ப்புகள் உண்டாகும். புரியுதுங்களா? இயற்கை சுபர்களின் வீடுகளுக்குள் இந்த ரகசியங்களை நம் ஞானிகள் ஒளித்து வைத்திருக்கிறார்கள். சோ லக்னம் முதல் 12 வீடுகள்ல யார் புஷ்கர நவாம்சத்தில் இருந்தாலும் அந்த வீட்டின் நற்பலன்கள் உங்களுக்கு மிகுதியாக கிடைக்கும். லக்னமே புஷ்கர நவாம்சத்தில் அமையும் போது அல்லது லக்னாதிபதி புஷ்கர நவாம்சத்தில் அமரும்போது நீங்கள் சிறிதும் முயற்சி குன்றாத நபராக வாழ்வியலில் போராற்றி வெற்றிக் கொடியை நாட்டியே தீருவீர்கள் என்று கூறி மீண்டும் ஒரு காணொளியில் உங்களை வந்து சந்திக்கும் வரை உங்களிடமிருந்து அன்புடன் விடைபெற்றுக் கொள்வது உங்கள் அன்பு ஜோதிடர் ஸ்ரீராம் ஜி நன்றி வணக்கம்.



