[0:00]அதாவது பொதுவா வந்து தவாஃப் முடிச்சுட்டு மக்காமு இப்ராஹீம் கிட்ட நின்னு தொழுகுறது சுன்னத். மக்காமு இப்ராஹீம் கிட்ட நின்னுதான் அதை தொழ சொல்லி இருக்காரு அப்படின்னு அல்லாஹு அக்பர் அங்க போய் தக்பீர் கட்டக்கூடாது.
[0:10]ஒன்னு உங்களுக்கு அடிபடும் இல்லைனா உங்களால இன்னொரு ஹாஜிக்கு அடிபடும். நான் தொழ சொல்லி இருக்கேன், இப்படித்தான் நான் தொழுவுவேன் அப்படின்னு நம்ம என்ன செய்யக்கூடாது, அடம் பிடிக்கக்கூடாது.
[0:20]ஒரு அமலை செய்வது பர்ல், ஒரு அமலை செய்வது சுன்னத், ஒரு அமலை செய்வது முஸ்தஹப். ஆனா அடுத்தவங்களுக்கு சிரமம் கொடுக்காமல் இருக்கிறது வாஜிப். யாருக்கும் நம்ம சிரமம் கொடுக்கக்கூடாது.
[0:31]யாரையும் கஷ்டப்படுத்தக்கூடாது. நம்மால ஒருத்தர் பாதிக்கப்படக்கூடாது. அதையும் நம்ம என்ன செய்யணும் பார்த்து பார்த்துதான் ஒவ்வொரு விஷயத்தையும் அட்ஜஸ்ட் பண்ணனும்.
[0:38]அப்ப துல்ஹஜ் பிறை ஒன்பது அறபாவுடைய நாள்ல சூரியன் உச்சத்துக்கு போற நேரத்திலிருந்து குருபுஷம்ஸ் சூரியன் மறைகின்ற நேரம் வரை அறஃபாவில் தங்கி இருக்க வேண்டும்.
[0:50]அரஃபால நம்ம முதல்ல என்ன செய்யணும்ன்னா, அரஃபாவிற்கு போன உடனே லுஹருடைய நேரம் வந்த பிறகு லுஹரையும் அஸரையும் ஜம்மு கஸ்ராக லுஹர் ரெண்டு ரக்காத், அஸர் ரெண்டு ரக்காத் ஜமாஅத்தாக இமாம் அங்க நின்று தொழ வைப்பார்கள். லுஹரையும் அஸரையும் தொழுது முடிக்கிறோம்.
[1:07]தொழுது முடிச்சுட்டு சாப்பாட்டுடைய வேலைகள் எல்லாம் முடிஞ்ச பிறகு நமக்கு தெரிந்த எல்லா திக்ருகளையும் ஓதணும். அப்துல்லா தீன் மௌலானா சொன்ன மாதிரி, நீங்க மூன்றாவது கலிமாவை நூறு தடவை ஓதணும்.
[1:17]நான்காவது கலிமாவை நூறு தடவை ஓதணும். குளியாவுடைய காஃபிரூன் சூரா நூறு தடவை ஓதணும். ஸலவாத்துக்களை நூறு ஆயிரம் தடவை ஓதணும். அஸ்தஃபரல்லாஹு அலீம் வாதூபு இலை இஸ்திஃபாரை நூறு தடவை ஓதணும்.
[1:29]இந்த திக்ருகளை எல்லாம் நாம் நூறு நூறு நூறு முறைகள் ஓதிக்கொண்டே இருக்கணும். கடைசியாக அஸருடைய நேரம் முடிந்து அந்த அஸருடைய நேரம் முடிந்து மஃக்ரிபுடைய நேரம் வரும் பாருங்க. அந்த மாலைப்பொழுது முழுக்க நீங்க துஆ செய்யணும், துஆ செய்யணும், துஆ செய்யணும்.
[1:44]நம்முடைய அத்தனை துஆக்களையும் கேட்கணும். துஆக்கள் ஒப்புக்கொள்ளப்படுகின்ற மிக முக்கியமான நேரம் ஹஜ்ஜினுடைய காலகட்டத்தில அந்த அரஃபாவினுடைய பொழுது. நமக்கு எவ்வளவோ தேவைகள் இருக்கிறது.
[1:54]கஷ்டங்கள் இருக்கிறது. கவலைகள் இருக்கிறது. நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. நம்முடைய பிள்ளைகளுக்காக, மனைவி மக்களுக்காக, நம்முடைய பெற்றோர்களுக்காக நம்மை விட்டு மரணித்து சேர்ந்துவிட்ட நம்முடைய பெற்றோர்கள் எத்தனையோ பேர். அவங்க ஹஜ் செய்யாமல் இருந்திருப்பாங்க.
[2:08]நம்முடைய தாய் தந்தைகளை இந்த ஹஜ் செய்யக்கூடிய பாக்கியம் கிடைக்காமல் இருந்திருக்கும். அவங்க வாழ்ந்த காலமெல்லாம் நம்ம படிக்கணும். என் பிள்ளை படிக்கணும். என் பிள்ளை வந்து நல்ல வேலைக்கு போகணும். என் பிள்ளைக்கு நல்ல திருமணம் முடிச்சு வைக்கணும்.
[2:18]என் பிள்ளைக்கு அதை சேர்க்கணும். என் பிள்ளைக்கு இதை சேர்க்கணும்னு சொல்லிட்டு அப்படித்தான் வாழ்ந்திருப்பாங்களே தவிர, அவங்க ஹஜ் போகணும்னு நினைச்சிருக்க மாட்டாங்க.
[2:27]கடைசி வரையும் அவங்க ஹஜ் போக வேண்டும் என்று நினைத்திருந்தால், ஹஜ் செய்திருக்க முடியும். ஆனா அவங்களுடைய நிய்யத் எல்லாம் எப்படி இருந்திருக்கும்? என் பிள்ளைக்கு சேர்க்கணும்.
[2:35]என் பிள்ளைக்கு அதை வாங்கி கொடுக்கணும். என் பிள்ளைக்கு இதை வாங்கி கொடுக்கணும் என்று தங்களுடைய கடமைகளை கூட செய்யாமல் நமக்காகவே வாழ்ந்த அந்த பெற்றோர்களுக்காக வேண்டி எவ்வளவு முடியுமோ அவ்வளவு அந்த சீதேவிகளுக்காக நாம் துஆ செய்யணும்.
[2:47]இன்னைக்கு நம்ம ஹஜ் போகிறோம். அவங்க அன்னைக்கு நம்மை வளர்த்து ஆளாக்கி உருவாக்கினால்தான் நம்ம ஹஜ்ஜுக்கு போறோம் இன்னைக்கு. அவங்க அவங்க அன்னைக்கு வந்து அவங்களுடைய வாழ்க்கையை அவங்களுடைய சந்தோஷத்தை நினைச்சிருந்தாங்கன்னு சொன்னால் இன்னைக்கு நம்ம இந்த அளவுக்கு படிச்சிருப்போமா? இந்த பொருளாதாரம் நமக்கு வந்திருக்குமா என்று சொல்ல முடியாது.
[3:03]அதனால நம்முடைய பெற்றோர்களுக்காக அதிகமாக துஆ செய்யுங்க. உங்களுடைய பெற்றோர்களுக்காக அதிகமாக கேளுங்க. அவருடைய சொர்க்கத்துக்காக அதிகமாக கேளுங்க. அவங்களுக்காக எவ்வளவு ஓதி ஈஸால் சவாப் செய்ய முடியுமோ அவ்வளவு விஷயங்கள் அவங்களுக்காக ஓதி ஈஸால் சவாப் செய்யுங்க.
[3:17]அவ்வளவு துஆக்கள் ஒப்புக்கொள்ளப்படுகின்ற மிக முக்கியமான இடம் அந்த அரஃபாவினுடைய மைதானம். உங்களுடைய பிள்ளைகளுக்காக கேளுங்க. இப்படி நம்ம துஆ செஞ்சுட்டு அரஃபாவிலேயே தங்கி இருப்போம். சூரியன் மறைகின்ற வரை.
[3:28]சூரியன் மறைந்த பிறகு அரஃபாவிலிருந்து புறப்பட்டு முஸ்தலிஃபாவுக்கு போகணும். பிறை ஒன்பது காலைப்பொழுது முடிஞ்சு போச்சு.
[3:37]சூரியன் மறைந்த பிறகு எங்கு போகணும் அரஃபாவிலிருந்து முஸ்தலிஃபாவிற்கு போகணும். அரஃபாவிலிருந்து முஸ்தலிஃபா அப்படிங்கிறது கிட்டத்தட்ட ஒரு நான்கு ஐந்து கிலோமீட்டர் தூரம் உள்ள ஒரு பகுதி.
[3:48]ஆனா இந்த நான்கு ஐந்து கிலோமீட்டர் தூரத்தை வந்து கடக்குறதுக்கு ஒரு மணி நேரம் ஆகலாம், ரெண்டு மணி நேரம் ஆகலாம், மூணு மணி நேரம் ஆகலாம், நாலு மணி நேரம் ஆகலாம். உங்களுடைய பஸ்ஸை பொறுத்து, சூழ்நிலையை பொறுத்து, கூட்டத்தை பொறுத்து போய் சேர்றதுக்கு ஏழு மணி ஆகலாம், எட்டு மணி ஆகலாம், ஒன்பது மணி ஆகலாம், நைட் பத்து மணி கூட ஆகலாம் முஸ்தலிஃபா போய் சேர்றதுக்கு.
[4:08]நாலு கிலோமீட்டர் தானே ஹஜ்ரத் சுத்தி போய்ரக்கூடாதா? குறுக்கு வழியில போய்ரக்கூடாதா? குறுக்கு வழியெல்லாம் அங்க ஒண்ணும் கிடையாது. ஏதாவது வேற டாக்ஸி பிடிச்சு போயிடமுடியாதா? ஒண்ணும் போக முடியாது.
[4:15]அங்க நம்ம ஹஜ்ஜுல இந்த குறுக்கு வழியை நம்ம தேடவே கூடாது. நேரான வழி. அது லேட்டானாலும் அதுதான் சரி. எது சரியோ அதை செய்யுங்க.
[4:23]இப்படி பண்ணிடக்கூடாதா ஹஜ்ரத்? அப்படி போய்ரக்கூடாதா? இங்க போறதுக்கு இந்த பேரிக்கட்டை இப்படி தள்ளி விட்டா இப்படி போயிடலாமே. அப்படி தள்ளி விட்டு போற வேலை ஜம்ப் பண்ற வேலை எல்லாம் அங்கே பண்ணக்கூடாது.
[4:33]என்ன ரூல்ஸ் சொல்லப்பட்டிருக்கோ, என்ன கவர்மெண்ட் அவங்க அப்படி செய்றாங்களே. யாரு எப்படி வேணா செஞ்சுட்டு போயிட்டும். நான் சரியாத்தான் செய்வேன். நான் முறையாக தர்தீபாகத்தான் இருப்பேன் அப்படிங்கிற மாதிரி முடிந்தவரை அடுத்தவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் இருக்கணும்.
[4:45]அப்ப எத்தனை மணி ஆனாலும் முஸ்தலிஃபா எத்தனை மணிக்கு போய் சேர்ந்தாலும் முஸ்தலிஃபா போன பிறகுதான் மஃக்ரிபையும் இஷாவையும் நம்ம தொழுகணும்.
[4:55]அதாவது லுஹரோடு அஸரை முற்படுத்தி தொழுதுட்டோம். இஷாவுடைய பக்தோடு மஃக்ரிபை பிற்படுத்தி தொழுவோம். ரெண்டுமே ஜம்மு தக்தீம் ஜம்மு தாக்கினு அரபியில சொல்லுவாங்க.
[5:05]அஸரை முற்படுத்தியும் மஃக்ரிபை இஷாவோடு சேர்த்தும் தொழக்கூடிய தொழுகை அங்க மட்டும்தான். மஃக்ரிபை முஸ்தலிஃபால போய் ரெண்டு அமல் செய்யணும்.
[5:13]மஃக்ரிபையும் இஷாவையும் தொழுகணும். தொழுது முடிச்சுட்டு ஷைத்தானுக்கு கல்லடிப்பதற்கு தேவையான எழுபது கற்களை அங்கிருந்து எடுத்துக்கணும்.
[5:24]எடுத்துக்கணும் அப்படிங்கிறது மட்டும் நல்லா ஞாபகம் வச்சுக்கங்க. அங்கேயே அடிக்கிறதுக்கெல்லாம் தேடக்கூடாது. அங்க அடிக்கிற வேலை அங்க இல்லை. ஷைத்தானுக்கு நாம வந்து உம்ராலாம் என்ன செய்வோம்ன்னா இங்கதான் ஷைத்தானுக்கு கல்லடிக்கிற கல்லை எடுக்கணும்னு சொல்லிட்டு அப்படியே போய்விடுவோம். அப்படியே ஃப்ளொவா போயிருவோம்.
[5:37]உடனே ஹஜ்ரத் திருத்துங்க. என்னங்க? கல்லை எடுத்து கல்லை அடிச்சுட்டு போய்விடுவோம். கல்லை எடுக்க சொன்னீங்களே. உம்ரால இல்லைங்க. அது ஹஜ்ஜுலங்க. ஷைத்தானுக்கு கல்லை எடுக்கிறதுதான் எடுக்கணும் அப்படினு ஒண்ணு ஒண்ணு சொல்ற மாதிரி ஆயிடும்.
[5:47]அப்ப ஷைத்தானுக்கு கல்லடிப்பதற்கு தேவையான எழுபது கற்களை எங்கே எடுக்கணும்? முஸ்தலிஃபால எடுத்து வச்சுக்கணும். அதுக்குன்னு ஒரு பை இருக்கும். அந்த பையில என்ன செய்யணும்? அந்த கற்களை போட்டு என்ன செய்யணும்? எழுபது கற்களை சேகரிச்சு வச்சுக்கணும்.
[5:58]மஃக்ரிபையும் இஷாவையும் தொழுதுவிட்டு ஷைத்தானுக்கு கல்லடிப்பதற்கு தேவையான எழுபது கற்களை எடுத்து வைத்துவிட்டு நம்ம பேசாம ரெஸ்ட் எடுத்து படுத்துற வேண்டியதுதான்.
[6:08]தொழுதுட்டு திக்ருல இருக்கலாம். கொஞ்ச நேரம் திக்ருல இருந்துட்டு படுத்துருங்க. இப்போ மினால ஏசி கூடாரத்தில தங்கி இருப்பீங்க.
[6:16]அரஃபால ஓரளவு ஏர்கூலர் கூடாரத்தில தங்கி இருப்பீங்க. முஸ்தலிஃபால தரையில எங்க இடம் கிடைக்குதோ அங்க ஒரு பெட்ஷீட்டை போட்டு படுத்துற வேண்டியதுதான். அங்கே தனி ரூமு எனக்கு அந்த வியூவா இருக்கிற மாதிரி உள்ள ரூமு. ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல ரூமு. லிஃப்டுக்கு பக்கத்திலேயே ரூமு. கிச்சனுக்கு பக்கத்திலேயே ரூமு.
[6:31]பெட் இந்த சைஸ்ல வேணும் அப்படின்னு எந்த ரெக்யூஸ்ட்டும் அங்க கிடையவே கிடையாது. எத்தனையோ பெரிய லட்சாதிபதியாக இருந்தாலும் கோடீஸ்வரராக இருந்தாலும் எவ்வளவோ பெரிய பணக்காரராக இருந்தாலும் ரப்புக்கு முன்னால் இறைவா உனக்கு முன்னால் நான் அடிமை என்கின்ற முழு அடிமைத்தனத்தை.
[6:44]ரப்பே உனக்கு முன்னால் என்னிடத்தில் ஒன்றுமே இல்லை. என்கிட்ட எத்தனையோ லட்சம் கோடிகள் என்னிடத்தில் பணம் இருக்கிறது. நான் கூப்பிட்டால் எனக்கு வந்து வேலை செய்வதற்கு எத்தனையோ நபர்கள் இருக்கிறார்கள். நான் இந்த வீட்டிலே அந்த வீட்டிலே எனக்கு எத்தனையோ வீடுகள் இருக்கிறது. எப்படி வேண்டுமானாலும் நான் சுகமாக இருக்கலாம்.
[7:05]அப்படிங்கிற அத்தனை வசதிகள் இருந்தாலும் கூட ரப்பே இதோ உன் கடமையை நிறைவேற்றி நான் தரையில் படுத்திருக்கிறேன் என்று முழுக்க முழுக்க இறைவனுடைய அடிமைத்தனத்தை வெளிப்படுத்துகின்ற மிக முக்கியமான இடம் அந்த முஸ்தலிஃபாவினுடைய அந்த தரை.
[7:20]அங்க தரையிலதான் படுத்தாகணும். இடம் கிடைக்கிற இடத்தில் படுத்திருக்கணும். படுத்து படுத்துட்டு எட்டு முடிஞ்சிருச்சு. ஒன்பது முடிஞ்சிடும். அடுத்த நாள் பத்தாவது நாள். காலையில எந்திரிச்சு நம்ம என்ன செய்யணும்ன்னா பிறை பத்து வந்துரும்.
[7:35]பிறை பத்தன்னைக்கு ரெண்டு நான்கு முக்கியமான அமல்களை செய்யணும். பிறை பத்து நாலு முக்கியமான அமல் செய்யணும். இங்கே பிறை பத்து வருதுன்னு வைங்க. அடுத்த நாள் பிறை பத்து இங்கே வருமல்ல? பெருநாள் அலைக்கை இங்க.
[7:47]இங்கே பிறை பத்து வந்தா என்ன செய்வோம்? பெருநாள் அன்னைக்கு என்ன பண்ணுவோம்? அழகா தொழுவோம். குர்பானி கொடுப்போம். நல்ல கறி சாப்பிடுவோம். நல்லா இருப்போம். அங்க பிறை பத்து ஹாஜிகளுக்கு ரொம்ப முக்கியமான நாள். அது ரொம்ப ரொம்ப ரொம்ப முக்கியமான நாள்.
[8:00]அங்க சாப்பிடுறதுக்கு அன்னைக்கு நேரம் இருக்காது. அன்னைக்குதான் ஹஜ்ஜை முடிக்கிற நாள். அவ்வளவு முக்கியமான அமல்கள் அந்த நான்கு அமல்களையும் நம்ம செய்யணும்.
[8:07]என்ன செய்யணும்? முதல்ல நம்ம கல்லை எடுத்து வச்சோம் பாருங்க. பெரிய ஷைத்தான் ஜம்ரத்துல் ஆகபா என்று சொல்லுவார்கள். பெரிய ஷைத்தானுக்கு மட்டும் ஏழு கற்கள் வீசணும்.
[8:17]இறைவா உன்னை திருப்திப்படுத்துவதற்காக, ஷைத்தானை கோபப்படுத்துவதற்காக, உன்னை திருப்திப்படுத்துகிறேன். ஷைத்தானை கோபப்படுத்துகிறேன் என்று சொல்லி அந்த அரபியில அந்த துஆவை சொல்லி தருவார்கள். அந்த துஆவை சொல்லி ஏழு கற்களை ஜம்ரத்துல் ஆகஃபால எறியணும்.
[8:33]ஏழு கல் அடிச்சுட்டு அதற்கு பிறகு உங்களுக்காக குர்பானி கொடுப்பதற்காக அதற்கான வேலை நடந்துகிட்டு இருக்கும். அடுத்து குர்பானி அங்கே கொடுப்பார்கள்.
[8:42]இரண்டாவது இரண்டாவது கல் அடித்த பிறகுதான் குர்பானி. தர்தீப் அதுல ரொம்ப முக்கியம். இரண்டாவது குர்பானி கொடுக்கப்படும். குர்பானி உங்களுக்கு கொடுக்கப்பட்டுவிட்டது.
[8:52]உங்களுடைய பேர்ல குர்பானி கொடுத்தாச்சு அப்படிங்கிற தகவலை உங்களுக்கு டெண்ட்ல சொல்லுவார்கள். குர்பானி கொடுத்தாச்சு அப்படின்னு இரண்டாவது விஷயம் முடிஞ்சுருச்சுன்னா குர்பானி கொடுத்த தகவலுக்கு பிறகு மொட்டை அடித்து இஹ்ராமை நம்ம கழற்றணும்.
[9:06]எப்ப கட்டின இஹ்ராம்? பிறை ஏழு இரவே கட்டிருப்பீங்க. ஏழு இரவு, எட்டு இரவு, ஒன்பது இரவு, பத்து இரவு. அந்த பத்து அன்னைக்கு மதியம் தான் அந்த இஹ்ராமை கழட்டற மாதிரி இருக்கும். கிட்டத்தட்ட மூன்று நாட்கள் நீங்க இஹ்ராம்லயே இருந்திருப்பீங்க.
[9:20]அந்த இஹ்ராமை ஹஜ்ஜு முடியறது எப்ப? பெரிய ஷைத்தானுக்கு கல்லடித்த பிறகு குர்பானி கொடுத்த பிறகு அதற்குப் பிறகு மொட்டை அடித்து இஹ்ராம் களைந்து நம்ம நார்மல் டிரஸ்ஸுக்கு வருவோம்.
[9:33]இப்ப அது குர்பானி கொடுத்துட்டாங்கற தகவல் வந்த பிறகுதான் மொட்டை அடிக்கணும். அவசரப்படக்கூடாது. கொடுத்தாச்சா? கொடுத்தாச்சா? அப்படின்னு போன் அடிச்சிக்கிட்டே இருக்கக்கூடாது. கொடுத்தாச்சா? கொடுத்த உடனே அவங்க சொல்லுவார்கள்.
[9:44]அங்கே ஒரு பேர், ரெண்டு பேர் இல்லையே. லட்சோபலட்சம் மக்கள் இருக்கிறார்கள். அத்தனை லட்சம் மக்களுக்கும் பாத்துக்கங்க. பக்ரித் அன்னைக்கு ஆடு இருக்கிறவர் பத்து ஆடுதான் இருப்பார். அவரையே பிடிக்க முடியாது. அன்னைக்கு அவர்தான் ஹீரோ. ஆடு இருக்கிறவர்தான் ஹீரோ.
[9:57]வரீங்களா பாய் பாய். வாங்க பாய். மத்த நாள்ல அவர் திரும்பி பாப்போமா? அன்னைக்கு அவர்தான் ஹீரோவா இருப்பார். எவ்வளவு வேணா அவருக்கு பணம் கொடுக்க ரெடி. ஏன்னா, அவர் அறுத்து கொடுக்கணுமே. அது அந்த 12 மணிக்கு உள்ள 10 மணிக்கு உள்ள கரியா வரணுமே.
[10:08]அப்ப கரியா வந்தாதானே அது ஒரு மணிக்கு பிரியாணியா வரும் அப்படினு அந்த எவ்வளவு ஸ்பீடா இருப்போமோ இந்த ஸ்பீடு எல்லாம் அங்கே எடுக்க முடியாது. அங்கே முடியும் பொழுது தகவல் சொல்லப்படும்.
[10:17]தகவல் சொன்ன பிறகுதான் நீங்க மொட்டை அடிக்கணும். மொட்டை அடிச்சு இஹ்ராமை கலைஞ்சு நார்மல் டிரஸ்ஸுக்கு வந்துருவோம். அதற்கு பிறகு நாலு நான்கு அமல்கள்ல நான்காவது அமல் தவாஃபியாரா காபால போய் செய்யணும்.
[10:30]தவாஃபியாரா தவாஃபும் செய்யணும். ஸஃபாமர்வால செய்யணும். நார்மல் டிரஸ்ல நார்மல் டிரஸ்ல போய் செய்வீங்க. இப்ப இதுல என்னன்னா ரெண்டு முக்கியமான விஷயத்தை நீங்க கவனிக்கணும். முஸ்தலிஃபால இருந்து பிறை பத்தன்னைக்கு கிளம்பறீங்க பாருங்க. காலையில எந்திரிச்சு கிளம்பறீங்க இல்ல?
[10:44]மினாவுக்கு போறீங்களா? ஜம்ராத்துக்கு போறீங்களா? ரெண்டு வேவா பிரிச்சு விடுவாங்க. ஒரு பக்கம் மினாவுக்கு போய் இருக்கிற பேக் எல்லாம் வச்சுட்டு ஷைத்தானுக்கு கல்லடிக்க போகலாம். அல்லது நேரா ஷைத்தானுக்கு கல்லடிக்கிற இடத்துல போய் கல்லை அடிச்சுட்டு அப்புறம் மினாவுக்கு வரலாம். அல்லது அஜீஸியால பில்டிங் போகலாம்.
[11:02]அப்படி நிறைய மாறும் அந்த இடத்துல. நம்ம என்ன செய்யணும்னு உங்கட்ட இருக்கிற அமீர் உங்களுக்கு வழிகாட்டுவாங்க. இந்த இடத்துல முஸ்தலிஃபால இருந்து நீங்க கிளம்பும் பொழுது வயசானவங்க, பெண்கள் ஓரளவு அந்த லொகேஷன் எல்லாம் தெரியாதவங்க, எனக்கு போன் எல்லாம் பார்க்க தெரியாதுங்கிறவங்க, தனியாக வந்திருப்பவர்கள், அவ்வளவா நாலேட்ஜ் எனக்கு கிடையாது.
[11:20]நான் யார்கூடயாவது சேர்ந்துதான் போக வருவேன் அப்படின்னு உள்ளவங்க தயவு செஞ்சு உங்களுடைய குரூப்பையோ, உங்க கூட வந்திருக்கிறவங்களையும் நீங்க பிரிஞ்சிடவே கூடாது. எந்த நாள்ல பிரியக்கூடாது? இவ்வளவு நாள் உங்களோடு தான் இருப்பீங்க.
[11:30]இந்த பத்தன்னைக்கு காலையில கிளம்பறீங்க பாருங்க. மஷர் மைதானம் மாதிரி அத்தனை லட்சம் ஹாஜிகளும் கிளம்புவார்கள். அங்கே உங்கள் உங்களை யாரையும் பார்த்துக் கொள்கிறார்கள் கைய அந்த இடத்துல மட்டும் விட்டுறாதீங்க.
[11:40]மினாவுக்கு போனாலும் சரி, நேரா ஜம்ராத்துக்கு போனாலும் சரி. அங்கே சூழ்நிலைகளை பொறுத்து. அந்த இடத்துல நீங்க பிரிஞ்சுட்டீங்கன்னா விவரம் இல்லாதவங்க, அந்த அளவுக்கு தெரியாதவங்க திரும்ப நீங்க மினால எங்கே தங்கி இருந்தீர்களோ அந்த டெண்ட்ட உங்களுக்கு அவ்வளவு ஈஸியா கண்டுபிடிக்க முடியாது.
[11:57]நீங்க ஒரு பக்கம் தேடணும். உங்களை நாங்க ஒரு பக்கம் தேடணும். தேடிக்கிட்டே அங்கே போய்ரும் காலங்கள். அதனால தயவு செஞ்சு அந்த இடத்துல பொறுமையாக கூட இருக்கிற வாலண்டியர்ஸ், உங்களுடைய பொறுப்புதாரிகள் உங்களுடைய அமீர்கள், உங்களுடைய குடும்பத்தினுடைய முக்கிய பொறுப்பாளர்களோடு சேர்ந்து போங்க.
[12:12]கொஞ்சம் வேகமா போக வேண்டியது வேகமா போங்க. மெதுவா போக வேண்டியது மெதுவா போங்க. வேடிக்கை பார்த்துட்டு கூட்டத்தை குரூப்ப விட்டுறாதீங்க. அந்த இடத்துல கொஞ்சம் கவனமா இருங்க. அதே மாதிரி நீங்க தவாஃபியா செய்ய போகிறதும் பிறை பத்தா, பதினொண்ணா எப்படி போகலாம்? கூட்டம் எப்படி இருக்கு? அங்கே டிரான்ஸ்போர்ட் எப்படி கிடைக்குது அப்படிங்கிற விவரத்தையும் உங்களுக்கு சொல்லுவார்கள்.
[12:32]அவங்க என்ன அமீர்கள் என்ன சொல்கிறார்களோ அதை ஃபாலோ பண்ணி போய் தவாஃபியா செஞ்சுட்டு வாங்க. எங்கே போனாலும் நம்ம நைட் எங்க வரணும்? திரும்ப மினாவுக்கு வரணும்.
[12:39]பிறை பத்து இரவு வந்து மினால தங்கணும். இப்படி போயிட்டு வர்ற இந்த இடத்துலதான் நம்ம கொஞ்சம் மாட்டிக்குவோம். மினா இங்கே இருக்கு. ஜம்ராத் பார்க்கிற தூரத்துல இருக்கிற மாதிரிதான் தெரியும்.
[12:49]ஆனா போறது ஒரு வரி, வர்றது ஒரு வழி அங்கே இப்படி பார்த்தீங்கன்னா ஒரு 10 கிலோமீட்டர் சுத்தி போயிட்டு வர்ற மாதிரி இருக்கும். அதுல வந்து எப்படி போகணும்? எங்கே போகணும்? திரும்ப எப்படி போறது அப்படிங்கிற வழிகளை என்ன செஞ்சுருவாங்கன்னா ஹாஜிகள் விட்டுருவார்கள். அதை கொஞ்சம் கவனமாக இருக்கணும்.
[13:03]அல்ஹம்துலில்லாஹ் பிறை பத்து முடிஞ்சிரும். நான்கு அமல்களை செஞ்சு முடிச்சுட்டோம். பிறை பதினொன்னு, பிறை பன்னெண்டு, பிறை பதிமூணு மூன்று நாட்களும் மூணு ஷைத்தானுக்கு மட்டும் கல்லடிக்கணும். ஜம்ரத்துல் ஊலா, ஜம்ரத்துல் உஸ்தா, ஜம்ரத்துல் ஆகஃபாதான்.
[13:17]ஏழு ஏழு கல், இருபத்தி ஒரு கல். பதினொன்னுக்கு இருபத்தி ஒரு கல். பன்னெண்டுக்கு இருபத்தி ஒரு கல். பதிமூணுவுக்கு இருபத்தி ஒரு கல். மொத்தம் அறுபத்தி மூணு கல்லு. பத்தன்னைக்கு ஒரு ஷைத்தானுக்கு மட்டும் ஏழு கல்லை அடிச்சுட்டீங்க.
[13:30]எழுபது கற்கள் முஸ்தலிஃபால எடுத்த எழுபது கற்களையும் அடிக்கணும். பிறை பதினொன்னுக்கும், பன்னெண்டும், பதிமூணுவும் நிறைய அமல்கள் எல்லாம் எதுவும் கிடையாது. மூணு ஷைத்தானுக்கு போய் கல்லடிச்சுட்டு வர்றதுதான் வேலை.
[13:40]வேற வந்து ரெஸ்ட் எடுத்துக்கிட்டு இருக்க வேண்டியதுதான் மினால. அல்ஹம்துலில்லாஹ். துல்ஹஜ் பிறை எட்டு, துல்ஹஜ் பிறை ஒன்பது, பத்து, பதினொன்னு, பன்னெண்டு, பதிமூணு இந்த ஆறு நாட்கள் இந்த அமல்கள் மட்டும்தான் ஹஜ்ஜு.
[13:52]இதை தாண்டி சுன்னத்துக்கள் இருக்கிறது. முஸ்தஹபுகள் இருக்கிறது. என்ன ஓத வேண்டும் என்று இருக்கிறது. என்ன செய்யக்கூடாது என்று இருக்கிறது. இன்ஷாஅல்லாஹ் அன்னைக்கு அன்னைக்கும் உங்களுக்கு உலமாக்கள் வழிகாட்டுவார்கள். இவ்வளவுவும் எனக்கு கொஞ்சம் புரியலையே ஹஜ்ரத் அப்படின்னு கூட நம்ம பயப்பட தேவையில்லை.
[14:06]மினாவுக்கு முன்னாடி பயான் வைப்பார்கள். மினால போய் என்ன செய்யணும்? முதல் நாள் உங்களுக்கு சொல்லித்தருவார்கள். மினால வச்சு அடுத்த நாள் அரஃபால நீங்க என்ன செய்யப்போறீங்க? மினால வச்சு உலமாக்கள் உங்களுக்கு சொல்லுவார்கள்.
[14:17]அரஃபால வச்சு பயான் பண்ணுவார்கள். அடுத்த நாள் நம்ம என்ன செய்யப் போறோம்னு அப்பப்ப அடுத்தடுத்த நாள் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று மீண்டும் உங்களுக்கு தெளிவாக உலமாக்கள் வழிகாட்டுவார்கள். அல்லாஹ் சுபஹானுல்லாஹ் ஹஜ்ஜும் மப்ரூராக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக அல்லாஹ் நம்முடைய ஹஜ்ஜை அல்லாஹ் ஆக்கி அருளுவானாக.
[14:34]ஆஃபியத்தோடும், சிகத்தோடும், சலாமத்தோடும் அல்லாஹ் நம்முடைய பயணத்தை அல்லாஹ் அமைத்து தருவானாக. அடுத்த வருடம் ஹஜ்ஜுக்காக நிய்யத்து வைத்திருக்கிற அத்தனை ஹாஜிகளுக்கும் வரக்கூடிய காலங்களில் அல்லாஹ் ஹஜ்ஜை நசீபாக்குவானாக. ஆமீன் ஆமீன் வஹிர தவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
[14:50]அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வுடைய கிருபையினால் ஹஜ்ஜுடைய நாட்களின் அமல்களைப் பற்றி ஹஜ்ரத் அவர்கள் மிகத் தெளிவாக நமக்கு எடுத்துரைத்தார்கள். அல்லாஹுத்தஆலா அவர்களுக்கு மென்மேலும் பரக்கத் செய்வானாக. அடுத்ததாக, உம்ரா சம்பந்தமாக அதிகமான பல ஆயிரம் ஹாஜிகளுடைய துஆக்களைப் பெற்ற ஹஜ்ரத் அவங்க இன்ஷாஅல்லாஹ் பயான் செய்ய இருக்கிறாங்க.
[15:21]ஹஜ் என்பது மூன்று வகை. ஹஜ் எத்தனை வகைங்க? ஹஜ்ஜில் உள்ள அமல்கள் சம்பந்தமான பேசல. ஹஜ்ஜே எத்தனை வகை? மூன்று வகை. ஹஜ்ஜை இஃபராத் ஹஜ்ஜ் மட்டும் செய்யக்கூடிய ஒரு இபாதத். ஹஜ்ஜுக்காக வேண்டி இஹ்ராம் கட்டி ஹஜ்ஜை நிறைவேற்றுவது. இதுக்கு மட்டும் என்னது? இதுக்கு பேரு ஹஜ்ஜை இஃபராத். இன்னொன்று ஹஜ்ஜை கிரான். ஹஜ்ஜை கிரான்.
[15:51]ஹஜ்ஜையும் ஒரு இஹ்ராம் கட்டி உம்ரா செய்யறது அதே இஹ்ராமோட சேர்த்து ஹஜ்ஜையும் செய்யறது. இதுக்கு பேரு ஹஜ்ஜை கிரான். இன்னொன்னு ஹஜ்ஜை தமத்துஃ. உலகில் இருக்கக்கூடிய அதிகமான ஹாஜிகள் 90% என்று சொல்லக்கூடிய 90% ஹாஜிகள் ஒரு 17 லட்சம் 20 லட்சம் இந்த வருஷம் ஹஜ் செய்ய வர்றாங்கன்னு சொன்னா, அந்த ஹாஜிகளில் 17 லட்சம் அளவுக்கு ஹாஜிகள் செய்யக்கூடிய ஹஜ் இந்த தமத்துஃ.
[16:28]ஹஜ்ஜை தமத்துஃ. இன்ஷாஅல்லாஹ் நம்மளும் என்னதான் செய்யப் போறோம்? ஹஜ்ஜை தமத்துஃ செய்யப் போறோம். ஹஜ்ஜை தமத்துஃ என்றால் என்ன? ரெண்டு வகையான இஹ்ராம். முதல் இஹ்ராம் இங்கிருந்து இன்ஷா அல்லாஹ் புறப்படும்போதே நம்ம இஹ்ராமோட போவோம். நிய்யத்து வைக்க வேண்டிய இடத்தில் வைப்போம்.
[16:45]உம்ராவைச் செய்வோம். உம்ரா செய்ததற்குப் பிறகு முடி களைந்து இஹ்ராமை களைந்து விடுவோம். இஹ்ராமை களைந்ததற்குப் பிறகு ஹஜ்ஜுடைய நாள் வரும். அந்த நாளில் திரும்பவும் என்ன செய்வான்? இஹ்ராம் கட்டுவான்.
[16:58]ஹஜ்ஜுக்காக வேண்டி இஹ்ராம் கட்டி அந்த ஹஜ்ஜை முடிப்போம். ரெண்டு இஹ்ராம் கட்டி உம்ராவையும் ஹஜ்ஜையும் நிறைவேற்றுவதற்குப் பேரு ஹஜ்ஜை தமத்துஃ. ஒரே இஹ்ராம்ல உம்ராவையும் ஹஜ்ஜையும் செஞ்சா அதுக்கு பேரு ஹஜ்ஜை கிரான். ஒரு இஹ்ராம் கட்டி ஹஜ்ஜை மட்டுமே செஞ்சா அதுக்கு பேரு ஹஜ்ஜை இஃபராத்.
[17:21]இந்த மூன்று வகையில நம்ம செய்யக்கூடிய ஹஜ்ஜுக்குப் பேரு என்னங்க? ஹஜ்ஜை இன்னொரு தடவை சொல்லுங்களேன். பக்கத்துல உள்ளவங்களுக்கு கேட்கிற மாதிரி சொல்லுங்க. ஹஜ்ஜை தமத்துஃ. அப்ப ஹஜ்ஜை தமத்துஃ எப்படி? நீங்க அதிகமான ஹாஜிகள் உம்ரா செஞ்சவங்களா இருக்கலாம்.
[17:39]அதிகமான ஹாஜிகள் எப்படி இருப்பாங்க? உம்ரா செஞ்சவங்க இருப்பாங்க. புதுசா உம்ராவுக்கு வரக்கூடியவங்க ஹஜ்ஜு செய்றதுக்கு வரக்கூடியவங்களும் இருக்காங்க இதுல. அப்ப உம்ராவுக்கு வந்தவங்களுக்கு இது ரொம்ப லேசா இருக்கும். ஏன் முதல்ல எடுத்த உடனே என்ன செய்யப் போறான் இன்ஷா அல்லாஹ்?
[17:55]என்ன செய்யப் போறோம்ங்க? ஹஜ்ஜை தமத்துஃனா எப்படி? ஒரு இஹ்ராம் கட்டிட்டு போய் உம்ரா முடிச்சுட்டு ஓய்வெடுத்துட்டு அதுக்கு அப்புறம் என்ன செய்வோம்? ஹஜ்ஜு செய்வோம். அந்த வகைதான் இப்ப இன்ஷாஅல்லாஹ் உலகில் இருக்கக்கூடிய அதிகமான ஹாஜிகள் செய்யக்கூடிய ஹஜ் ஹஜ்ஜை தமத்துஃ. அந்த வகையில் தான் நம்மளுடைய குரூப்பும் செய்யக்கூடிய ஹஜ் ஹஜ்ஜை தமத்துஃ. இன்ஷாஅல்லாஹ்
[18:18]முதல்ல இஹ்ராம் கட்டுவோம். உம்ரா செய்வோம். அடுத்த இஹ்ராம் கட்டுவோம். ஹஜ்ஜு செய்வோம். அல்லாஹுத்தஆலா நம்முடைய இந்த ஹஜ்ஜுடைய பயணத்தில் இருக்கக்கூடிய இந்த அமல்களுடைய நாட்களுடைய அமல்களின் நன்மைகளை நமக்கு பரிபூரணமாக தந்தருளுவானாக. அடுத்ததாக நமக்கு மௌலானா மௌலவி அல்ஹாஃபில் மதீனா ராஜா ஹஜ்ரத் அவர்கள் நமக்கு சிறிது உம்ராவை சம்பந்தமாக மிகச் சுருக்கமாக நமக்கு தெளிவானதாக எடுத்துரைப்பார்கள். அதன்பிறகு இன்ஷாஅல்லாஹ் கேள்வி பதில். அதன்பிறகு இன்ஷாஅல்லாஹ் துஆ ஹாஜிகள் இன்ஷாஅல்லாஹ் கவனமாக கேளுங்கள்.
[18:56]அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ. அல்ஹம்துலில்லாஹ். அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். வலாக்கிபத் முத்தகீன். அஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அலா சையதினா நபினா மௌலானா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். அம்மாபாத்.
[20:41]அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வுடைய கிருபையில இந்த வருடம் ஹஜ்ஜுக்கு செல்வதற்காக வேண்டி நம்முடைய குரூப்பில் இருக்கக்கூடிய ஹாஜிமார்கள் இந்த இடத்தில் வந்து கிட்டத்தட்ட 10:30 மணிக்கு ஆரம்பித்து ஒரு மணி ஆகப்போகுது. இவ்வளவு நேரம் இருந்தும் கூட ஒரு ஹாஜி கூட அசரல. அல்ஹம்துலில்லாஹ்.
[21:10]எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே. இந்த தெம்பை அல்லாஹ் ஹஜ்ஜுடைய நாளில் மக்காவிலும் மதீனாவிலும் இருக்கின்ற பொழுது இதே தெம்பை ஆரோக்கியத்தை எல்லாம் கொடுத்து அங்கே செய்யக்கூடிய அமல்களைச் செய்து அந்த நன்மையை பெறக்கூடிய நல்ல மக்களாக அல்லாஹ் ஆக்கி தந்தருளுவானாக.
[21:33]ஹஜ்ஜுக்குச் செல்ல இருக்கக்கூடிய ஹாஜிமார்கள் அதுபோல் அவருக்குத் துணையாக வந்திருக்கக்கூடிய அல்லாஹ்வுடைய நல்லடியார்கள் யார் யாரெல்லாம் தல்பியாச் சொன்னோமோ போகக்கூடிய ஹாஜிமார்கள் இந்த வருடம் அடுத்த வருஷம் போகக்கூடிய ஹாஜிமார்கள் நிய்யத் வைத்தவர்கள் எல்லோருக்கும் ரூஹு போவதற்கு முன்பு அல்லாஹ் ஹஜ்ஜுடைய பாக்கியத்தை அல்லாஹ் நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் நம்முடைய பிள்ளைகளுடைய சந்ததிகளுக்கும் அல்லாஹ் நசீபாக்கித் தருவானாக. ஆமீன்.
[22:11]ரூஹு போவதற்கு முன்பு கண்மணி நாயகம் ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஸியாரத் செய்யக்கூடிய நசீபைப் அல்லாஹ் நமக்கும் நம்மளுக்கு நம்முடைய பிள்ளைகளுக்கும் நம்முடைய பிள்ளைகளுடைய சந்ததிகளுக்கும் அல்லாஹ் நசீபாக்கித் தருவானாக. ஆமீன்.
[23:05]இன்ஷாஅல்லாஹ் இங்கிருந்து நாம உம்ராவுக்காக வேண்டி ஹஜ்ஜுடைய நேரத்துல உம்ராவுக்காக வேண்டி நிய்யத் வைத்து இஹ்ராம் அணிந்து கொண்டு இன்ஷாஅல்லாஹ் நாம் என்ன செய்வோம்? தல்பியாவோடு இன்ஷாஅல்லாஹ் நாம புறப்படுவோம்.
[23:23]இந்த தல்பியாவோடு புறப்படுகின்ற பொழுது நபி அவர்கள் விஷயத்தை நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். மூன்று பேருடைய துஆவை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். எத்தனை பேருடைய துஆங்க? ஒண்ணும் சொல்ல மாட்டிங்களேன். மூன்று பேருடைய துஆவை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்.
[23:41]ஒன்று பாதிக்கப்பட்டுருடைய துஆ ஏற்றுக் கொள்ளப்படும். இரண்டு பிரயாணத்தில் செல்லுகின்ற பொழுது அந்த துஆ ஏற்றுக் கொள்ளப்படும். மூன்று இஹ்ராமுடைய நிலையில் கேட்கக்கூடிய துஆ ஏற்றுக் கொள்ளப்படும்.
[24:00]தலபியா ஓதிக்கொண்டு இஹ்ராமுடைய நிலையில் ஃபிளைட்ல ஏறி ஜித்தாவுக்கு இன்ஷாஅல்லாஹ் நாம் இறங்குவோம். இந்த இஹ்ராமுடைய நிலையில் நாம் என்ன செய்யணும்? தல்பியாவை ஓதிக்கொள்ளணும்.
[24:18]தல்பியா ஓதுவதற்கு முடியவில்லை. கொஞ்சம் சிரமமாக இருந்தது என்று சொன்னால் குர்ஆனை ஓதிக்கொள்ளணும். அது ஓதுவதற்கும் நமக்கு கொஞ்சம் சிரமமாக இருந்தது என்று சொன்னால் திக்ருகளையும் ஸலவாத்துக்களையும் ஓதிக்கொள்ள வேண்டும். ஏனென்று சொன்னால் பிரயாணத்தில் கேட்கக்கூடிய துஆவையும் இஹ்ராமுடைய நிலையில் இருக்கக்கூடிய இந்த இரண்டையும் அல்லாஹ் நமக்கு ஒரே நேரத்தில் அல்லாஹ் நமக்கு தந்திருக்கிறான்.
[24:50]அந்த சமயத்தில் நாம் என்ன செய்து கொள்ள வேண்டும்? இறைவா, எனக்கு நீ ஹஜ்ஜுக்காக வேண்டி நசீபாக்கி கொடுத்த இறைவா. எங்களுடைய பயணங்களை லேசாக்கி கொடுத்து உம்ராவையும் லேசாக்கி கொடுத்து ஹஜ்ஜையும் எனக்கு லேசாக்கி தருவாயாக. எந்தெந்த இடமெல்லாம் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் என்று எங்கள் நபி அவர்கள் எங்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்களோ.
[25:17]அந்த இடத்தில் எங்களுடைய காலைப் பதிக்கின்ற பொழுது எங்களுக்கு ஆரோக்கியத்தைத் தந்து இபாதத் செய்வதற்கு எங்களுக்கு நீ நசீபாக்கித் தருவாயாக என்று துஆ செஞ்சுட்டு மறந்துவிடாமல் இந்த துஆ கேட்கணும். என்னுடைய உஸ்தாத் அவர்கள் சொல்லிக் கொடுத்தார்கள். ஒவ்வொரு நேரத்திலும் எப்பொழுதெல்லாம் துஆ ஏற்றுக் கொள்ளக்கூடிய நேரம் வருகிறதோ அல்லாஹ்விடத்திலே அழுது கேட்கச் சொல்லியிருக்கிறார்கள்.



