[0:03]இந்தியாவிலிருந்து US ஸ்டாக் மார்க்கெட்டில் இன்வெஸ்ட் பண்ணனும்னு யோசிச்சுக்கிட்டீங்கன்னா அதாவது டைரக்ட் ஸ்டாக்கா, Apple, Google, Amazon, Tesla இந்த மாதிரியான கம்பெனிஸ வாங்கணும்னாலும், இல்ல Nasdaq 100, S&P 500 மாதிரியான இன்டெக்ஸை வாங்கணும்னாலும் எப்படி நம்ம ஆரம்பிக்கணும் என்னென்னலாம் நம்ம பாக்கணும் என்னென்னலாம் தெரிஞ்சு வச்சுருக்கணும்ன்ற எல்லா விஷயத்தையுமே டீடெயிலா இந்த வீடியோல கவர் பண்ணுவோம்.
[0:19]என்னோட ஓவர் ஆல் இன்வெஸ்ட்மென்ட் போர்ட்போலியோல US ஸ்டாக்ஸ்ல மட்டுமே சிக்னிபிகன்ட்டா இன்வெஸ்ட் பண்ணிருக்கேன்.
[0:23]இந்த இன்வெஸ்ட்மென்ட்டும் கடந்த ஒரு வருஷத்துல நல்ல ரிட்டர்ன்ஸையே கொடுத்துருக்குன்னு சொல்லலாம். கடந்த ஒரு சில வருஷமாவே இந்த AI-க்கும், செமிகண்டக்டஸ்க்கும் எக்ஸப்ஷனலான டிமாண்ட் அதிகமாயிட்டே போகுது.
[0:32]அதனால இதுல இருக்கக்கூடிய வளர்ச்சியும் அதிகமா இருந்துட்டு வருது. இன்ஃபாக்ட் இந்த ரெண்டு ETF-யும் ஒரு சில மாசத்துக்கு முன்னாடி தான் இன்வெஸ்ட் பண்ண ஆரம்பிச்சேன்.
[0:37]வெறும் அஞ்சாறு மாசத்துல கிட்டத்தட்ட 30% 40% சொல்லிட்டு இதுல இருந்து மட்டுமே ரிட்டர்ன்ஸ் வந்துருக்கு.
[0:42]இதை அப்படியே இந்தியன் மார்க்கெட்ஸ் கூட கம்பேர் பண்ணோம்னா கிட்டத்தட்ட ஒரு வருஷமா ஃபிளாட்டா இருக்குன்னே சொல்லலாம்.
[0:46]இந்த வீடியோல எக்ஸாக்ட்டா நான் எப்படி இன்வெஸ்ட் பண்ணிட்டு வரேன் என்னென்ன ETF-ஹோல்ட் பண்றேன் நீங்க US மார்க்கெட்டில இந்தியாவிலிருந்து இன்வெஸ்ட் பண்ணனும்னா எப்படி பண்ணனும்ன்றதை ஆக்சுவல் டெமோவோட டீடைலா பாப்போம்.
[0:56]வணக்கம் என் பேர் பூசன், இந்த சேனல் ஃபைனான்ஸ் பூசன். ஃபர்ஸ்ட் அண்ட் ஃபோர்மோஸ்ட் இந்த வீடியோல வரக்கூடிய எல்லா விஷயங்களும் எஜுகேஷனல் பர்பஸ்காக மட்டும்தான்.
[1:03]எதுவுமே இன்வெஸ்ட்மென்ட் அட்வைஸ் கிடையாது. நீங்க இன்வெஸ்ட் பண்ண போறீங்கன்னா உங்களோட ரிசர்ச்சை நீங்க பண்ணிட்டு ப்ராப்பரான சாய்ஸை மேக் பண்ணுங்க.
[1:07]முதல்ல ரொம்ப ஃபண்டமெண்டலான ஒரு கேள்வியை அட்ரஸ் பண்ணுவோம். இந்தியன் இன்வெஸ்டர்ஸ் எதுக்காக US மார்க்கெட்டில் இன்வெஸ்ட் பண்ணனும்?
[1:12]இதை புரிஞ்சாதான் நம்ம இன்வெஸ்ட் பண்ணனுமா வேணாமான்ற டெசிஷனே நம்மளால எடுக்க முடியும்.
[1:16]இப்போ US மார்க்கெட்டில் இன்வெஸ்ட் பண்றதுனால மார்க்கெட்டோட வளர்ச்சி மட்டுமே இல்லாம அதோட கரன்சி அப்ரிசியேஷனால ரெண்டு பெனிஃபிட் கிடைக்கும்.
[1:22]அதாவது ரொம்ப சிம்பிளா ஒரு உதாரணம் சொல்லணும்னா 2020 பீரியட்ல US டாலருக்கு எதிரா இந்திய ரூபாயோட மதிப்பு கிட்டத்தட்ட ₹70, ₹73.
[1:29]இன்னைக்கு அதே ஒரு டாலர் ₹90-யும் தாண்டி மேல போயிருக்கு. அப்படின்னா என்ன அர்த்தம்?
[1:33]இந்த அஞ்சு வருஷ பீரியடில் மட்டும் 20-ல இருந்து 25% இந்திய ரூபாய் டிப்ரிசியேட் ஆயிருக்கு.
[1:38]அதாவது ஒரு நபர் இந்த பீரியட்ல ஏதோ ஒரு US ஸ்டாக்ஸில் இன்வெஸ்ட் பண்ணி அதுல இருந்து ரிட்டர்னே கிடைக்கலைன்னாலும் இந்த கரன்சி அப்ரிசியேஷனால மட்டுமே 20-ல இருந்து 25% ரிட்டர்ன் கிடைச்சுருக்கும்.
[1:46]யூஸ்வலா US மார்க்கெட்ஸ் இந்தியன் மார்க்கெட்ஸை விட அதிகமான ரிட்டர்ன் கொடுக்கும். அதுக்கு மேல இந்த கரன்சி அப்ரிசியேஷனும் சேர்ந்தா இன்னும் அதிகமான ரிட்டர்ன் இருக்கும்.
[1:53]டேட்டாவோட சொல்லணும்னா 2010-ல் ஒரு நபர் இந்தியாவில் இருக்கக்கூடிய நிஃப்டியில் இன்வெஸ்ட் பண்ணிருந்தாருன்னா கிட்டத்தட்ட மூணுல இருந்து நாலு மடங்கா அவருக்கு ரிட்டர்ன்ஸ் கிடைச்சிருக்கும்.
[2:00]இந்த மூணுல இருந்து நாலு மடங்குன்றதே நமக்கு அதிகமா இருந்தாலும், இதே பணத்தை US-ல் இருக்கக்கூடிய S&P 500 இன்டெக்ஸில் போட்டிருந்தா கிட்டத்தட்ட எட்டுல இருந்து ஒன்பது மடங்கு ரிட்டர்ன் வந்துருக்கும்.
[2:08]சோ பேசிக்கா மார்க்கெட் ரிட்டர்ன்ஸோடு சேர்ந்து கரன்சி அப்ரிசியேஷனும் கூடவே கிடைக்கும்.
[2:13]சோ டாலரோட ஹிஸ்டாரிக் பர்ஸ்பெக்டிவ்ல சொல்லணும்னா 1991-ல் ₹20, ₹25-னு இருந்த டாலர், இன்னைக்கு ₹90-யும் தாண்டி போயிருக்கு.
[2:19]இன்ஃபாக்ட் ஒவ்வொரு வருஷமும் டாலரும் அப்ரிசியேட் ஆயிட்டேதான் போகுது.
[2:23]வெறும் மார்க்கெட் ரிட்டர்ன் படி பார்த்தாலும் US மார்க்கெட் இந்தியாவை விட சிக்னிபிகன்ட்டாவே இருக்கு.
[2:29]இன்ஃபாக்ட் குறைவான வாலட்டைலிட்டியில் இந்த அதிக ரிட்டர்ன் அங்க கிடைக்குது. இது எல்லாத்துக்கும் மேல உலகளவில் மிகப்பெரிய கம்பெனிகள் எல்லாமே அதாவது இன்னோவேஷனில் டாப் லீடர்ஸா இருக்க எல்லா கம்பெனிஸ்மே US-லதான் இருந்துட்டு இருக்கு.
[2:37]அதாவது இந்தியாவில் ஏதா ஒரு பெரிய AI கம்பெனியோ செமிகண்டக்டரோ தேடினா ஒண்ணு கூட நம்மளுக்கு கிடைக்காது.
[2:41]ஆனால் டே டு டே நம்ம லைஃபில் யூஸ் பண்ணக்கூடிய எல்லா டெக்குமே US-ல இருந்து வந்ததுதான்.
[2:45]இன்ஃபாக்ட் நம்ம இப்போ பாத்துட்டு இருக்க YouTube-வே Google-ஓட சப்ஸிடியரிதான்.
[2:48]அதே மாதிரி WhatsApp, Instagram இது எல்லாமே Meta-ஓடது. நம்ம யூஸ் பண்ற OS Microsoft-து.
[2:52]போன் Apple-து. இந்த மாதிரி உலகத்தில் இருக்க எல்லா பெரிய கம்பெனியும் AI-யிலும் செமிகண்டக்டரிலும் லீடிங்காக இருக்கக்கூடிய Nvidia-வும் அங்கதான் இருக்கும்.
[2:59]சோ உலகத்திலேயே இருக்கக்கூடிய டாப் 10 லார்ஜஸ்ட் பப்ளிகிலி லிஸ்டெட் கம்பெனிஸ்ல ஒன்பது கம்பெனி அங்கதான் இருக்கும்.
[3:04]இன்ஃபாக்ட் இந்தியாவோட மொத்த மார்க்கெட் கேப்பை அவங்க மார்க்கெட் கேப் கூட கம்பேர் பண்ணா ரொம்ப ரொம்ப குறைவா இருக்குன்னே சொல்லலாம்.
[3:09]இது எல்லாத்துக்கும் மேல ப்ராப்பரா குளோபல் டைவர்சிஃபிகேஷன் வேணும்னா அதாவது இந்தியன் மார்க்கெட்டுக்கும் US மார்க்கெட்டுக்கும் கோ ரிலேஷன் கொஞ்சம் குறைவாதான் இருக்கும்.
[3:16]அதாவது US-ல ஏறிட்டே இருக்குனா இந்தியா ஃபிளாட்டா இருக்கறதுக்கும் வாய்ப்பு இருக்கு.
[3:19]இன்ஃபாக்ட் இந்த வருஷம் எடுத்தீங்கன்னாலே இந்தியன் மார்க்கெட்ஸ் கம்ப்ளீட்டா ஃபிளாட்டா இருந்ததுன்னு சொல்லலாம்.
[3:23]இதே அங்க இருக்கக்கூடிய Nasdaq 100 எடுத்தீங்கன்னா கிட்டத்தட்ட 20% ரன் அப் கொடுத்திருக்கு.
[3:27]சோ இந்த குளோபல் டைவர்சிஃபிகேஷனுக்கும் US மார்க்கெட்டை கன்சிடர் பண்ணிதான் ஆகணும்.
[3:30]இப்போ டிரெடிஷனலா இந்தியாவில் இருந்து US-ல் இன்வெஸ்ட் பண்ணனும்னா ரெண்டு ஆப்ஷன்ஸ் இருந்தது.
[3:33]ஒன்னு ETF-ஸ் வழியாக பண்ணிட்டு வரலாம் அப்படி இல்லனா மியூச்சுவல் ஃபண்ட்ஸ் வழியாக பண்ணலாம். இது ரெண்டுமே இந்தியன் பேஸ்டு ETF அண்ட் மியூச்சுவல் ஃபண்ட் தான் மென்ஷன் பண்ணிட்டு இருக்கேன்.
[3:41]அதாவது உதாரணத்துக்கு சொல்லணும்னா இந்தியாவில் இருக்கக்கூடிய ஏதோ ஒரு AMC ஒரு ETF-அ ரன் பண்ணுவாங்க.
[3:45]இப்போ Motilal Oswal-ல இருந்து Nasdaq 100-க்குன்னு தனி ETF இருக்கு.
[3:48]சோ பேசிக்கா இவங்க என்ன பண்றாங்க இந்தியாவில் இருந்து US-ல் இருக்கக்கூடிய அந்த இன்டெக்ஸை அப்படியே ரெப்ளிகேட் பண்ண ட்ரை பண்றாங்க.
[3:54]அப்படி இல்லைன்னா ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் இருக்கும். அதாவது மியூச்சுவல் ஃபண்ட் ஃபார்ம்ல US-ல் இருக்கக்கூடிய ஒரு Nasdaq 100 ETF-அ அண்டர் லேயிங்காக வச்சு அதை ரேப் பண்ணி நம்மளுக்கு விப்பாங்க.
[4:02]அப்படின்னா என்ன அர்த்தம் வெளிநாட்டில் இருக்கக்கூடிய ஒரு ப்ராடக்ட்டை ரீபேக்கேஜ் பண்ணி அது மேல எக்ஸ்ட்ரா தனியா எக்ஸ்பென்ஸ் ரேஷியோ போட்டு அதை நம்மளுக்கு சேல் பண்ணிட்டு வருவாங்க.
[4:09]ஆனால் இந்த ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ்ல புது இன்வெஸ்ட்மென்ட்ஸை RBI லிமிட்னால நிறுத்தி வச்சிருப்பாங்க.
[4:13]அதாவது RBI இந்தியாவில் இருந்து ஓவர்சீஸில் இன்வெஸ்ட் பண்றதுக்குன்னு சொல்லிட்டு இன்டஸ்ட்ரி வைடா ஒரு லிமிட் வச்சிருப்பாங்க.
[4:18]அதாவது ₹7 பில்லியன் வரைக்கும் லிமிட் வச்சிருக்காங்கன்னா இந்த லிமிட்டில் மொத்த இன்ஃப்ளோ வந்துருச்சுன்னா அதுக்கப்புறம் புது இன்வெஸ்ட்மென்ட் பண்ண முடியாது.
[4:24]இந்த லிமிட்டை 2024-ல் நம்ம பிரீச் பண்ணிருந்தோம்.
[4:27]அதாவது நிறைய இன்வெஸ்டர்ஸ் வெளிநாட்டில் இன்வெஸ்ட் பண்ணனும்னு இந்த ஃபண்ட்ஸில் இன்வெஸ்ட் பண்ண இந்த லிமிட்டை கடந்துருச்சு.
[4:31]அதனால புது இன்வெஸ்ட்மென்ட்ஸை எல்லா AMC-ஸும் ஸ்டாப் பண்ணிட்டாங்க.
[4:34]சில AMC-ல எக்ஸிஸ்டிங் SIP-யை கண்டினியூ பண்ண விட்டாங்க அதுக்கப்புறம் அதையுமே நிறுத்திட்டாங்க.
[4:39]இப்போ இந்த ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் ரூட் நிறுத்தப்பட்டாலும் இன்னுமே ETF ரூட் ஓப்பனாதான் இருக்கு.
[4:42]அதாவது US-ல் இன்வெஸ்ட் பண்ணனும்னா இந்த Motilal Oswal-ஓட MON100 ETF-ல் நம்மளால இன்வெஸ்ட் பண்ண முடியும்.
[4:47]ஆனால் இங்கேயுமே ஒரு பெரிய பிரச்சனை இருக்கு. இந்த ETF Nasdaq 100-அ அப்படியே ட்ராக் பண்ணனும்ன்றதை ஃபாலோ பண்ண நினைச்சாலும் அங்க ஒரு ப்ரீமியம் உருவாயிரும்.
[4:54]ப்ரீமியம்னு சொல்லும்போது என்ன அர்த்தம்? அதாவது சிம்பிளா சொல்லணும்னா Nasdaq 100 ₹100-க்கு விக்குதுன்னு வச்சுக்குவோம்.
[4:58]அதை நீங்க இந்த ETF வழியாக வாங்குனீங்கன்னா ₹120 கொடுத்து தான் உங்களால வாங்க முடியும்.
[5:01]அதாவது வாங்கும்போது தேவையெல்லாம் எக்ஸ்ட்ரா 20% வரைக்கும் ப்ரீமியம் கொடுத்து வாங்குற நிலைக்கு ஒரு பாயிண்ட்டில் வந்திருந்தது.
[5:08]இதுக்கும் முக்கியமான காரணம் அந்த லிமிட் தான் சொல்லணும். ஏன்னா புது இன்ஃப்ளோஸை இந்த ETF ஆட் பண்ண முடியாது.
[5:12]எக்ஸிஸ்டிங்காக இருக்க டிமாண்ட் அண்ட் சப்ளை காரணமா அதாவது நிறைய பேர் வாங்கணும்னு யோசிச்சிட்டு இருக்கதுனால டிமாண்ட் அதிகமாயிட்டே போகுது.
[5:19]அந்த வெறும் டிமாண்ட்னாலயே இதுல எக்ஸ்ட்ரா ப்ரீமியம் ஃபார்ம் ஆயிட்டே வருது.
[5:22]இந்த டிஸ்கிரபன்ஸினால உங்களால கரெக்டான ப்ரைஸில் Nasdaq 100-அ வாங்க முடியாது. இன்ஃபாக்ட் இந்த கான்செப்டை டீடெய்லா எக்ஸ்பிளைன் பண்ணியே தனியா ஒரு வீடியோ போட்டிருக்கேன் அதோட லிங்க்கையும் மேல கொடுக்கிறேன்.
[5:30]MON100 மாதிரியான ETF-ஸ்ல தனியா இன்வெஸ்ட் பண்ணிட்டு வரீங்கன்னா கட்டாயமா செக் பண்ணி பாருங்க இல்லைனா தேவையில்லாத ப்ரீமியம் கொடுத்து வாங்கிட்டு இருக்கமா ஆகும்.
[5:36]என்னைக்காவது அந்த ப்ரீமியம் டிஸ்ப்பியர் ஆச்சுனா தேவையில்லாம லாஸ் ஆகுறதுக்கும் வாய்ப்புகள் அதிகம்.
[5:39]சோ இந்த பிரச்சனைகளை அவாய்ட் பண்றதுக்கு அதாவது சுத்தி வளைச்சு US மார்க்கெட்டில் இன்வெஸ்ட் பண்றதுக்கு பதிலா அதுக்கு டைரக்ட்டாவே நம்ம அங்க இன்வெஸ்ட் பண்ணிட்டு போயிடலாம்.
[5:45]ஒரு பாயிண்ட் ஆஃப் டைம்மில் நானுமே MON100 மாதிரியான ETF-லயோ இல்ல இங்க இருக்கக்கூடிய Nasdaq 100 ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ்லயோ தான் இன்வெஸ்ட் பண்ணிட்டு இருந்தேன்.
[5:50]ஆனால் இந்த லிமிட்டோட பிரச்சனையினாலயும் இல்ல இந்த ETF-ல் இருக்கக்கூடிய ப்ரீமியம் இஷ்யூனாலயும் இதை கம்ப்ளீட்டா எக்சிட்டும் பண்ணிட்டேன்.
[5:56]அதுக்கு பதிலா டைரக்டாவே US-ஓட இன்டெக்ஸஸையும் ஸ்டாக்ஸையும் வாங்க ஆரம்பிச்சிருந்தேன்.
[6:00]நான் கரண்ட்டா யூரோப்பில் இருக்கதுனால இங்க இருக்கக்கூடிய ப்ரோக்கர்ஸான TradeRepublic-கோ இல்ல Degiro மாதிரியான பிளாட்ஃபார்ம்ஸ்ல நான் இன்வெஸ்ட் பண்ணிட்டு இருந்துட்டு இருக்கேன்.
[6:06]பர்டிகுலரா நான் இருக்கக்கூடிய கண்ட்ரில ஸ்டாக் இன்வெஸ்டிங்க்கு கேப்பிடல் கெயின்ஸ் டாக்ஸேஷனும் கிடையாது.
[6:10]அப்படின்னா வரக்கூடிய மொத்த ரிட்டர்ன்ஸில் டாக்ஸே கட்டாம நான் மொத்தமா யூஸும் பண்ணிக்கலாம்.
[6:14]இப்போ இந்தியாவில் இருந்து US ஸ்டாக் மார்க்கெட்டில் டைரக்டா எக்ஸ்போஷர் வேணும்னா மல்டிபிள் பிளாட்ஃபார்ம்ஸ்ல ஒரு மோஸ்ட் பாப்புலர் பிளாட்ஃபார்ம்னு சொன்னனா INDmoney-யை சொல்லலாம்.
[6:21]இங்க உங்களால US-ல் இருக்கக்கூடிய டைரக்ட் ஸ்டாக்ஸையும் ETF-சையும் அப்படியே அக்சஸ் பண்ண முடியும்.
[6:25]அதுவும் US டாலர் பேஸ்டாவே உங்களால எக்ஸ்போஷரும் எடுக்க முடியும்.
[6:28]அதனால கரன்சி கெயின்ஸும் உங்களால கேப்சர் பண்ண முடியும். இங்க இருக்கக்கூடிய ETF-க்கு RBI-யோட இந்த இன்டஸ்ட்ரி வைட் மியூச்சுவல் ஃபண்ட் லிமிட் இருக்குல்ல அதெல்லாம் அப்ளிகபிள் ஆகாது.
[6:35]அதாவது நீங்க இன்வெஸ்ட் பண்ணிட்டு வரீங்கன்னா திடீர்னு ஸ்டாப் பண்ணுவேன் RBI லிமிட் ஹிட் ஆயிடுச்சுன்னுலாம் சொல்ல மாட்டாங்க.
[6:39]ஆனால் இன்டிவிஜுவல்ஸ் ஒவ்வொருத்தருக்கும் தனியா ஒரு RBI லிமிட் இருக்கும்.
[6:42]இதை LRS லிமிட்னு சொல்லுவாங்க. அதாவது ஒரு பர்டிகுலர் வருஷத்துல 2,50,000 டாலர் வரைக்கும் ஒரு இன்டிவிஜுவல் வெளிநாட்டில் இன்வெஸ்ட் பண்ண முடியும் எந்த பிரச்சனையுமே இல்லாமல்.
[6:50]2,50,000 டாலர்ன்றது ஒரு வருஷத்துக்கு கிட்டத்தட்ட ₹2 கோடிக்கு சமம்.
[6:53]சோ அந்த லிமிட் வரைக்கும் ஒரு இன்டிவிஜுவாலால் ஃப்ரீயா வெளிநாட்டில் இன்வெஸ்ட் பண்ணிட்டு இருக்க முடியும்.
[6:57]சோ இதை தவிர்த்து புது இன்வெஸ்ட்மென்ட்ஸ்க்குன்னு சொல்லிட்டு தனியா எந்த ரெஸ்ட்ரிக்ஷன்ஸும் கிடையாது.
[7:00]இப்போ நிறைய பேருக்கு இந்தியாவில் இருந்து US-ல் இன்வெஸ்ட் பண்ணனும்னா டாக்ஸேஷன் எப்படி இருக்கும்னு சொல்லிட்டு நிறைய குழப்பங்கள் இருக்கும்.
[7:04]அதையுமே இந்த வீடியோல இன்னும் கொஞ்ச நேரத்துல கவர் பண்ணுவோம்.
[7:07]அதுக்கு முன்னாடி ஆக்சுவலா இன்வெஸ்ட் பண்ணனும்னா ஸ்டெப் பை ஸ்டெப் எப்படி பண்ணலாம்ன்ற டெமோவை முதல்ல பாத்துருவோம்.
[7:12]இந்தியாவிலிருந்து US ஸ்டாக்ஸில் இன்வெஸ்ட் பண்றதுக்கு மல்டிபிள் ஆப்ஷன்ஸ் இருக்கு.
[7:15]அதுல ரொம்ப பாப்புலரான ஒரு ஆப்ஷன்தான் இந்த INDmoney பிளாட்ஃபார்ம். சோ இந்த ஆப்பை உங்களால டைரக்டா பிளே ஸ்டோரில் இருந்தோ ஆப் ஸ்டோரில் இருந்தோ டவுன்லோட் பண்ண முடியும்.
[7:22]டவுன்லோட் பண்ணதுக்கு அப்புறமா நம்மளோட மொபைல் வெரிஃபிகேஷனும் ஈமெயில் வெரிஃபிகேஷனும் முடிக்கிற மாதிரி இருக்கும்.
[7:26]இதை முடிச்சீங்கன்னா எல்லா ப்ரோக்கர் அக்கவுண்ட் மாதிரியும் உங்களுக்கு KYC ப்ராசஸும் நடக்கும்.
[7:29]அதாவது நம்மளோட PAN கார்டு, பேங்க் அக்கவுண்ட், ஆதார் இது எல்லாத்தையும் வெரிஃபை பண்ணி அக்கவுண்ட் ஓப்பன் பண்ணி கொடுப்பாங்க.
[7:34]இப்போ அக்கவுண்ட் ஓப்பன் ஆனதுக்கு அப்புறம் உள்ள போயிட்டு தனியா நம்ம US-கான டிரேடிங்கை ஆக்டிவேட் பண்ற மாதிரி இருக்கும்.
[7:38]அங்க இன்டர்நேஷனல் டிரேடிங்கை ஆக்டிவேட் பண்ணனுமான ஆப்ஷன் இருக்கும்.
[7:42]இதை ஆக்டிவேட் பண்ணுனாதான் நம்மளால US ஸ்டாக்ஸை வாங்கி விக்க முடியும்.
[7:45]இது பிஹைண்ட் தி சீன்ஸ் எப்படி ஒர்க் ஆகுனு புரிஞ்சுக்கணும்னா இப்போ நம்ம இன்டர்நேஷனல் டிரேடிங்கை ஆக்டிவேட் பண்ணும்போதே US-ல் இருக்கக்கூடிய ஒரு ப்ரோக்கர் கூட இவங்க டைஅப்பில் இருப்பாங்க.
[7:51]இதைத்தான் பார்ட்னர் ப்ரோக்கர்னு சொல்லுவாங்க. இந்த கேஸில் DriveWealth LLC-ன்றதுதான் இந்த கம்பெனி.
[7:56]சோ பேசிக்கா உங்களுக்கு இங்கேயும் ஒரு அக்கவுண்ட் ஓப்பன் பண்ற மாதிரி இதைப்பற்றி நம்ம பெருசா கவலைப்படணும்ன்ற அவசியம் கிடையாது.
[8:01]எல்லாத்தையும் INDmoney-யே மேனேஜ் பண்ணிக்கும். ஆனால் இங்க நம்ம இன்னொன்னு புரிஞ்சுக்க வேண்டியது இதுல SIPC-னு ஒரு இன்சூரன்ஸும் கொடுப்பாங்க.
[8:07]அதாவது 5,00,000 டாலர் வரைக்கும் நம்ம இன்வெஸ்ட்மென்ட்ஸ்க்கு ஒரு இன்சூரன்ஸ் இருக்கும். அதாவது அந்த பார்ட்னர் ப்ரோக்கரே மூடப்பட்டாலும் நம்மளோட இன்வெஸ்டட் பணத்தை திரும்பி கொடுக்குறதுக்குதான் இந்த இன்சூரன்ஸ் உதவியா இருக்கும்.
[8:14]சோ பிஹைண்ட் தி சீன்ஸ் நீங்க இந்தியாவில் இன்டர்நேஷனல் டிரேடிங்கை ஆக்டிவேட் பண்றீங்கனா அங்க US-ல் இருக்கக்கூடிய ஒரு கம்பெனி மூலமா வாங்கிட்டு இருக்கீங்கன்றது அர்த்தம்.
[8:21]இப்போ இந்த INDmoney-ல் இன்வெஸ்ட் பண்ணனும்னா நம்மளோட ஃபண்ட்ஸை டெபாசிட் பண்ற மாதிரி இருக்கும்.
[8:25]அதை டெபாசிட் பண்றதுக்கும் இந்த பேங்கிங்களுமே ரெண்டு வழி இருக்குன்னு சொல்லலாம்.
[8:28]ஒன்னு இவங்க இந்தியாவில் ஒரு பேங்க் கூட பார்ட்னராக இருப்பாங்க.
[8:31]இந்த கேஸில் அது Federal பேங்க். சோ Federal பேங்க் அக்கவுண்ட் மூலமா நீங்க எல்லாமே பண்றீங்கன்னா உங்களுக்கு சில சலுகைகள் இருக்கும்.
[8:36]பர்டிகுலரா சொல்லணும்னா டைரக்டா UPI மூலமா உங்களால ஃபண்டை டெபாசிட் பண்ண முடியும்.
[8:40]அதுவும் இன்ஸ்டன்ட்டாவே டிரான்ஸ்ஃபர் செய்யப்படும். சார்ஜஸும் எதுவும் இருக்காது. இதே இதர பேங்க்ஸ் வழியாக நீங்க பண்றீங்கனா உங்களோட டெபாசிட்டுக்கு டைம் எடுக்கும்.
[8:46]அதாவது எட்டுல இருந்து 48 மணி நேரத்துக்குள்ள டைம் எடுத்துதான் டெபாசிட் பண்ணுவாங்க.
[8:49]நெட் பேங்கிங் மட்டும் தான் சப்போர்ட் பண்ணுவாங்க அதுவும் ஒவ்வொரு பேங்க்கை பொறுத்து சார்ஜஸும் இதுக்கு மாறுபடும்.
[8:52]இப்போ இந்த ஆப் மூலமா இன்வெஸ்ட் பண்ணும்போது நம்ம இந்திய ரூபாய் டெபாசிட் பண்ணனும்னா ஆட்டோமேட்டிக்கா அதுவே US டாலரா கன்வெர்ட்டும் செய்யப்படும்.
[8:59]அந்த கரன்சி கன்வெர்ஷனுக்கு ஏதாவது சார்ஜஸ் இருந்தாலும் அதையுமே நம்மளால இங்கயே பார்க்க முடியும்.
[9:03]இப்போ ஆக்சுவலா US-ல் இருக்கக்கூடிய ஒரு ஸ்டாக்கோ இல்ல ETF-ஓ எப்படி வாங்கலாம்ன்றதை டெமோவாக பார்ப்போம்.
[9:07]இப்போ இன்வெஸ்ட் பண்ணனும்னு ஆரம்பிக்கிறீங்கன்னா என்னைப் பொறுத்தவரைக்கும் S&P 500 இன்டெக்ஸோ இல்ல Nasdaq 100 இன்டெக்ஸில் இருந்து ஆரம்பிக்கலாம்.
[9:12]Nasdaq 100-அவே உதாரணத்துக்கு எடுத்துக்கலாம். இப்போ இங்க Nasdaq 100-ளுமே ரொம்ப ஃபேமஸான ETF-னு சொல்லனும்னா QQQ ETF-னு சொல்லுவாங்க.
[9:19]இது பேசிக்கா Invesco-ன்ற ஃபண்ட் ஹவுஸ் மூலமா Nasdaq 100 இன்டெக்ஸை ரிப்ளிகேட் பண்றதுக்காக கிடைக்கிற ETF.
[9:23]இதுதான் ரொம்ப ப்ராமினன்ட்டான ETF-னு சொல்லலாம். இங்க அந்த ETF-ஓட ஹிஸ்டாரிக்கல் பெர்ஃபார்மன்ஸ் சார்ட்டை நம்மளால பார்க்க முடியும்.
[9:28]டிஃபரண்ட் டைம் பீரியடை செட் பண்ணி எப்படி பெர்ஃபார்ம் பண்ணிருக்கு என்ன ரிட்டர்ன் கொடுத்திருக்குன்றதை நம்மளால கிளியரா பார்க்க முடியும்.
[9:32]கடந்த ஒரு வருஷத்துல கிட்டத்தட்ட 14% கொடுத்திருக்கு. Nasdaq எடுத்தா அப்படியே பார்த்தீங்கனாலும் அதுவும் 14% ரிட்டர்ன் தான் கொடுத்திருக்கு.
[9:38]இதுவும் இந்த வீடியோவை ரெக்கார்ட் பண்ணும்போது ப்ராப்ளலி நீங்க ஒன்னு ரெண்டு நாள் கழிச்சு பாக்குறீங்கன்னா ஒன்னு ரெண்டு பர்சண்டேஜ் மாறி இருக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு.
[9:42]அப்படியே நம்ம கீழ போனோம்னா அதோட எக்ஸ்பென்ஸ் ரேஷியோவும் நம்மளால பார்க்க முடியும்.
[9:45]எப்பவுமே ஒரு ஃபண்ட் சூஸ் பண்றோம்னா அதோட எக்ஸ்பென்ஸ் ரேஷியோ குறைவா இருக்கறது ரொம்பவுமே முக்கியம்.
[9:48]இங்க 0.2 தான் இருக்கு. இது கம்மியான நம்பர்னு சொல்லலாம். இன்னும் கீழ போனோம்னா இந்த ETF-க்கும் S&P 500-க்கும் கம்பேரிசனும் போட்டுருக்காங்க.
[9:55]மோஸ்ட் கேசஸ்ல S&P 500-அட அதிகமா ரிட்டர்ன் தான் Nasdaq ரீசன்ட் டைம்ஸில் கொடுத்துட்டு இருக்கு.
[9:59]மூணு வருஷ பீரியட்ல எடுத்தீங்கன்னா கிட்டத்தட்ட டபுள்னே சொல்லலாம். அப்படியே இன்னும் கீழ போனா இந்த ETF-ல் இருக்கிறதிலேயே அதிகமா இருக்கக்கூடிய ஸ்டாக் அலக்கேஷன் என்னன்னு பார்க்க முடியும்.
[10:06]இங்க Nvidia, Microsoft, Apple, Google, Broadcom-னு சொல்லிட்டு எல்லாமே பெரிய பெரிய டெக் கம்பெனிஸ்.
[10:11]ஒருவேளை ETF-ல் இன்டிவிஜுவலா ஸ்டாக் வாங்கணும்னு யோசிச்சீங்கன்னாலும் அந்த ஸ்டாக்கை சர்ச் பண்ணினாலும் இதே மாதிரி இன்ஃபர்மேஷன் வரும்.
[10:16]இப்போ உதாரணத்துக்கு Google எடுத்துப்போம். Google-ஓட பேரண்ட் கம்பெனி பேரு Alphabet. சோ Alphabet-அ கிளிக் பண்ணீங்கன்னா Google-அ பாக்குற மாதிரி இங்க Google ஷேருக்கான எல்லா டீடெயில்ஸையும் நம்மளால பார்க்க முடியும்.
[10:24]அதோட ஹிஸ்டாரிக்கல் பெர்ஃபார்மன்ஸ், வேல்யூவேஷன் எப்படி இருக்கு அந்த வேல்யூவேஷன் ட்ரெண்ட் எப்படி இருக்கு இன்டஸ்ட்ரி கூட கம்பேர் பண்ணும்போது எப்படி இருக்குன்ற எல்லா இன்ஃபர்மேஷனையும் பார்க்க முடியும்.
[10:31]இங்க ஒரு இன்ட்ரஸ்டிங்கான பாயிண்ட் பார்ப்போம். இப்போ எப்போ குறைவான P/E-ல் இருக்கோ அப்போ நம்ம வாங்கணும்னா நல்ல வேல்யூவேஷனில் வாங்குறோம்னு அர்த்தம்.
[10:36]இதே உதாரணத்தை எடுத்துக்கோங்களேன் இந்த ஜூன் மாசம் எல்லாம் எடுத்தோம்னா இருக்கிறதிலேயே குறைவான P/E-ல் Google இருந்திருக்கு.
[10:41]அந்த பாயிண்டில் யாராவது வாங்கிருந்தாங்கனா இப்போ அந்த சார்ட்டில் போய் கம்பேர் பண்ணுவோம்.
[10:45]அந்த இடத்தில் கிட்டத்தட்ட 160, 170 டாலர்லதான் இருந்திருக்கு. இன்னைக்கு அப்படியே டபுள் ஆயிருக்கு. லிட்ரலா ஆறே மாசத்தில் 100% ரிட்டர்ன்.
[10:51]அதுவும் Google மாதிரியான பெரிய கம்பெனி கூட இந்த மாதிரி ரிட்டர்ன் கொடுக்கும்ன்றதுதான் வேல்யூவேஷன் பார்த்து ப்ராப்பரா இன்வெஸ்ட் பண்றதுல நமக்கு கிடைக்கக்கூடிய ஆப்பர்சுனிட்டிஸ்.
[10:58]இப்போ இந்த Google ஸ்டாக் ப்ரைஸை எடுத்துக்குவோம். ஒரே ஒரு ஸ்டாக்கோட விலை கிட்டத்தட்ட 300 டாலர்ல இருக்கு. அதாவது இந்திய ரூபாயில் கணக்கு பண்ணா ₹25,000-க்கு மேல இருக்கும். அதாவது ஒரு ஸ்டாக் வாங்கவே இவ்வளவு செலவு பண்ணனுமான்ற கேள்வி நிறைய பேருக்கு இருக்கும்.
[11:07]ஆனால் இந்தியன் மார்க்கெட் மாதிரி இல்லாமல் US-ல் இந்த மாதிரியான ப்ரோக்கர்ஸ் ஃபிராக்ஷனல் ஷேர்ஸையும் வாங்க விடுவாங்க.
[11:11]அப்படின்னா என்ன அர்த்தம்னா நீங்க இப்போ ₹5000 இருக்குனா வெறும் ₹5000-க்கும் Google-அ வாங்க முடியும்.
[11:17]சோ உங்களுக்கு ஒரு யூனிட்டுக்கு பதிலா அந்த ₹5000-க்கு என்ன ஈக்குவலன்ட் அமௌன்ட் வருமோ அதை மட்டும் கொடுத்திருப்பான்.
[11:21]இப்போ 0.3-ஓ இல்ல 0.2-ஓன்னு சொல்லிட்டு குறைவான யூனிட் கிடைக்கும்.
[11:24]சோ கொஞ்சம் கொஞ்சமா ₹5000, ₹5000-னு வாங்கிட்டே வந்தீங்கன்னா ஏதோ ஒரு பாயிண்ட்டில் ஒரு யூனிட்டுக்கு மேல வாங்கிருப்பீங்க.
[11:28]சோ லிட்ரலா வெறும் ஒரு டாலரில் இருந்தே உங்களோட இன்வெஸ்ட்மென்ட்ட இதை ஆரம்பிக்க முடியும்.
[11:32]சோ வாங்கும்போது ஷேரோட குவாண்டிட்டி போட்டு வாங்கலாம் அப்படி இல்லைன்னா அமௌன்ட்டை போட்டு வாங்கலாம்.
[11:36]இப்போ ஃபிராக்ஷனல் ஷேர்ஸ்லாம் வாங்குறோம்னா அமௌன்ட்டை போட்டு வாங்கினா தான் ஃபிராக்ஷனலா வாங்க முடியும்.
[11:39]இல்லை எனக்கு கிளியரா தெரியும் ரெண்டு யூனிட் வாங்க போறேன் நாலு யூனிட் வாங்க போறேன் நான் ஷேர் கவுண்ட்டை போட்டு வாங்கிக்கலாம்.
[11:42]நீங்க ரொம்ப நாளா US ஸ்டாக்ஸில் இன்வெஸ்ட் பண்ணனும்னு நினைச்சட்டு இருக்கீங்கன்னா அதுக்கான லிங்க்கும் டிஸ்கிரிப்ஷனில் இல்ல கமெண்ட்டில் கொடுக்கிறேன் செக் பண்ணி பாருங்க.
[11:48]அதே மாதிரி இந்தியாவுக்கும் US-க்கும் டைம் ஜோன் டிஃபரன்ஸ் இருக்கும். US-ல் காலைல என்றப்போ நமக்கு நைட் அப்படி கணக்கு பார்க்கும்போது US-ஓட மார்க்கெட் ஹவர்ஸ் நம்மளோட நைட்லதான் வரும்.
[11:55]அதுவும் பர்டிகுலரா 7:00 மணிலிருந்து ஆரம்பிச்சு கிட்டத்தட்ட 1:30, 2:00 மணி வரைக்கும் ஆப்பரேட் ஆகும்.
[12:00]ஆனால் இந்தியன் மார்க்கெட் மாதிரி இல்லாமல் US-ல் ப்ரீ மார்க்கெட், ஆஃப்டர் மார்க்கெட் ஹவர்ஸும் அக்சஸ் செய்யப்படும்.
[12:04]அதாவது நீங்க இந்த 7:00-ல இருந்து 1:30-க்கு தான் வாங்கணும்னு அவசியம் கிடையாது.
[12:07]அதுக்கு முன்னாடியும் ஆர்டர் பிளேஸ் பண்ணலாம் அதுக்கப்புறமும் ஆர்டர் பிளேஸ் பண்ணலாம். இப்போ என்னோட ஃபாரின் ஈக்விட்டி போர்ட்போலியோ எடுத்தோம்னா பெரும்பாலான இன்வெஸ்ட்மென்ட்ஸை ETF வழியாகதான் பண்ணிட்டு இருக்கேன்.
[12:13]அதுலயும் Nasdaq 100-ம் S&P 500-ம் தான் அதிகமான இன்வெஸ்ட்மென்ட் இருக்கும்.
[12:17]அதைத் தவிர்த்து ஒரு AI பேஸ்டு இன்டெக்ஸும் இல்ல செமிகண்டக்டர் பேஸ்ட்டா இருக்கக்கூடிய ETF-லயும் இன்வெஸ்ட் பண்ணிருப்பேன்.
[12:22]இதை தவிர்த்து ஒரு கான்ட்ரரியன் பெட்டாக சைனா இன்டெக்ஸிலும் இன்வெஸ்ட் பண்ணிருப்பேன்.
[12:25]இன்டிவிஜுவல் ஸ்டாக்ஸ்னு பார்த்தோம்னா Google-லதான் இருக்கிறதிலேயே ஹையஸ்ட் ஹோல்டிங் இருக்கும்.
[12:28]இதை தவிர்த்து ASML, Novo Nordisk, Amazon மாதிரியான இதர இன்டிவிஜுவல் ஸ்டாக்ஸும் ஹோல்ட் பண்றேன்.
[12:32]இப்போ நான் இன்வெஸ்ட் பண்ணிட்டு வர ஒரு ETF-அ மட்டும் ஓப்பன் பண்ணி பார்க்கலாம்.
[12:35]அது ஓப்பன் பண்ணனும்னா இப்போ பர்டிகுலரா இந்த செமிகண்டக்டர் ETF-அ ஓப்பன் பண்ணிருக்கோம்.
[12:38]இதுக்குள்ள எல்லாமே செமிகண்டக்டரில் எதெல்லாம் லீடிங்காக இருக்கும் எதனால் நல்ல மூவ்மென்ட் வரும்னு ஃபண்ட் மேனேஜர் நினைக்கிறாரோ அதை ரீஷஃபுல் பண்ணிக்கிட்டே இருப்பாங்க.
[12:46]சோ பேசிக்கா எல்லாமே நல்ல கம்பெனிஸ்தான் இருக்கு. இப்போ இதே மாதிரி இந்தியாவில் AI பேஸ்ட்டாக ஒரு ETF வாங்கணும்னு நினைக்கிறீங்கன்னா அதே INDmoney ஆப்பில் போயிட்டு AI-க்குனு இருக்க ETF-அ சர்ச் பண்ணி பார்க்கலாம்.
[12:53]இங்க iShares-ல இருந்து AI Innovation Tech-னு சொல்லிட்டு ஒரு ETF இருக்கு.
[12:57]அதோட சிம்பிள் பேர் BAI. இதுக்குள்ள போய் பார்த்தீங்கனாலும் AI-ல டாமினன்ட்டா லீடிங்காக இருக்கக்கூடிய கம்பெனிஸை மட்டும் ஹோல்ட் பண்ணிட்டு வரோம்.
[13:03]இப்போ உதாரணத்துக்கு Broadcom, Nvidia, Meta, Microsoft, Google, Snowflake-னு சொல்லிட்டு பெரிய பெரிய கம்பெனிஸை ஹோல்ட் பண்ணிட்டு வரோம்.
[13:09]இந்த மாதிரி ETF-ஆக வாங்குறதுல என்ன அட்வான்டேஜ்னா ஒரே ஒரு கம்பெனியில் நம்ம பணத்தை போட்டு அந்த கம்பெனி மொத்தமே ஸ்டாக் கீழே விழுந்ததுன்னா நமக்கு நஷ்டம் ஏற்படும்.
[13:16]ஒருவேளை டைவர்சிஃபைடாக இந்த மாதிரி போட்டோம்னா அதுவும் ப்ராப்பராக ஆப்பர்சுனிட்டி இருக்குன்னு தெரிஞ்சு போட்டோம்னா நம்மளால நல்ல ரிட்டர்னே பார்க்க முடியும்.
[13:22]ஆனால் ஒரு ரொம்ப முக்கியமான டிஸ்க்ளைமர். நீங்க செமிகண்டக்டரிலோ இல்ல AI பேஸ்டாவோ ஏதோ ஒரு ட்ரெண்ட் பேஸ்ட்டை ஃபாலோ பண்றீங்கனா அது பீக்கில் இருக்கும்போது மாட்டிக்காதீங்க.
[13:29]அப்படி மாட்டீங்கனா உங்களுக்கு நஷ்டம் ஏற்படுறதுக்கும் வாய்ப்பு இருக்கு. இன்ஃபாக்ட் என்னோட போர்ட்போலியோல என்னென்ன ஸ்டாக்ஸ் வாங்குறேன், ETF-ஸ் இன்வெஸ்ட் பண்றேன்.
[13:35]எதுக்காக வாங்குறேன்ற ரேஷனலோட எல்லாத்தையுமே லேர்னர்ஸ் மெம்பர் கம்யூனிட்டியில் ஷேர் பண்ணிட்டு வர்றேன்.
[13:39]இது உங்களோட இன்ட்ரஸ்ட்டாக இருக்குன்னு தோணுச்சுன்னா சேனல் பேஜில் இருக்க ஜாயின் பட்டனை யூஸ் பண்ணியோ இல்ல கமெண்ட்டில்ல டிஸ்கிரிப்ஷனில் இருக்க லிங்கை யூஸ் பண்ணி ஜாயின் பண்ண முடியும்.
[13:45]இதை ஒன்னு ரெண்டு மாசம் ட்ரை பண்ணிட்டு உங்களுக்கு இன்ட்ரஸ்ட் இல்லைனா எப்போ வேணாலும் ஸ்டாப்பும் பண்ணிக்கலாம்.
[13:49]சோ சிம்பிளாக உங்களோட போர்ட்போலியோவை வச்சுக்கணும்னா S&P 500-ம் Nasdaq 100-ம் ரொம்பவுமே போதுமானது.
[13:54]அதை தாண்டியும் நல்ல ஸ்டாக்ஸ் வாங்கணும்னு யோசிச்சீங்கன்னா Google, Amazon, Microsoft இந்த மாதிரி ரொம்ப பெரிய பிளேயர்ஸ் நல்ல வேல்யூவேஷனில் கிடைக்கும்போது ஃபாலோ பண்ணி வாங்கிக்கலாம்.
[14:01]ETF-ஏ வாங்குறீங்கனாலும் அதோட சார்ஜஸ் குறைவா இருக்கா, எக்ஸ்பென்ஸ் ரேஷியோ குறைவா இருக்கா அதோட டிராக்கிங் ரெக்கார்ட் எப்படி இருக்குன்றதை எல்லாத்தையும் பார்த்துட்டு வாங்கிக்கோங்க.
[14:08]இப்போ இந்தியாவில் இருந்து US-ல் இன்வெஸ்ட் பண்றீங்கன்னா ஒரு டாக்ஸ் ரூலை பற்றி கட்டாயமா தெரிஞ்சாகணும்.
[14:11]ஒரு வருஷத்துக்கு நீங்க ₹10 லட்சத்துக்கு மேல வெளிநாட்டில் இன்வெஸ்ட் பண்றீங்கன்னா ₹10 லட்சத்துக்கு மேல எவ்வளவு அமௌன்ட் போனாலும் அந்த அமௌன்ட்டில் 20% TCS பிடிப்பாங்க.
[14:19]TCS-ன்றது Tax Collected at Source. அதாவது நீங்க ₹10 லட்சத்துக்கு மேல ₹1 லட்சம் இன்னும் இன்வெஸ்ட் பண்ணனும்னு நினைக்கிறீங்க மொத்தமா ₹11 லட்சம் பண்ணனும்னு நினைக்கிறீங்க.
[14:26]அந்த எக்ஸ்ட்ரா ₹1 லட்சத்துக்கு 20% TCSனா ₹20,000-அ டாக்ஸா ஆல்ரெடி பிடிச்சிருப்பாங்க.
[14:32]ஆனால் நீங்க வருஷம் முடியும்போது ITR ஃபைல் பண்ணி அந்த காசை கவர்மென்ட் கிட்ட இருந்து திரும்பி வாங்கிக்கலாம்.
[14:36]ஆனால் எப்பவுமே எக்ஸஸ்ஸாக நம்ம பண்ணும்போது இந்த TCS பிடிக்கப்படும்ன்றதை மறக்கக்கூடாது.
[14:40]அதே மாதிரி ஃபாரின் ஈக்விட்டிக்கான கேப்பிடல் டாக்ஸையும் கிளியராக புரிஞ்சுப்போம்.
[14:43]இப்போ யூஸ்வலா இதை ரெண்டாக பிரிச்சிருப்பாங்க. ஷார்ட் டேர்ம் கேப்பிடல் கெயின், லாங் டேர்ம் கேப்பிடல் கெயின்.
[14:46]இப்போ ரெண்டு வருஷத்துக்கு மேல நீங்க ஹோல்ட் பண்ணீங்கன்னா அதை லாங் டேர்ம்னு சொல்லுவாங்க அதுக்கு கம்மியான டாக்ஸ் ரேட் தான் வரும்.
[14:51]இந்த கேஸில் 12.5% டாக்ஸ் பிடிப்பாங்க. அதாவது நீங்க வாங்கி வித்து லாபம் பார்த்திருந்தீங்கன்னா அந்த லாபத்துக்கு மட்டும் 12.5% பிடிக்கப்படும்.
[14:58]இது எல்லாமே வரக்கூடிய லாபத்து மேலேயே தவிர மொத்த அமௌன்ட் மேல கிடையாது.
[15:01]சோ குறைவான டாக்ஸ் கட்டணும்னா லாங் டேர்ம் ஹோல்ட் பண்ணுவோம். சோ குறைஞ்சது ரெண்டு வருஷமாவது ஹோல்ட் பண்ணிட்டு அதுக்கப்புறமா செல் பண்ணிக்கோங்க டாக்ஸ் குறைஞ்சிரும்.
[15:07]அதே மாதிரி இந்தியன் மார்க்கெட்டுக்கும் US மார்க்கெட்டுக்கும் கோ ரிலேஷன் கம்மியா இருக்கும்.
[15:10]அதாவது இந்தியன் மார்க்கெட் கீழே விழுந்துட்டு இருக்கும்போது US மார்க்கெட் நல்லா பெர்ஃபார்ம் பண்ணிட்டு இருக்கும்.
[15:14]இதனாலதான் குளோபல் டைவர்சிஃபிகேஷன் கட்டாயமா தேவை. இந்த மாதிரி இருக்கக்கூடிய ரொம்ப பெரிய டெக் கம்பெனிஸான Google, Amazon, Apple, Microsoft, இதிலெல்லாம் இன்வெஸ்ட் பண்ணனும்னாலும் US மார்க்கெட்டிலதான் அதை பண்ண முடியும்.
[15:23]சோ சிம்பிளாக ஒரு போர்ட்போலியோவை உருவாக்குறீங்கன்னா 40% Nasdaq 100 ஃபண்டும், 30% S&P 500-ம் மீதி 30% உங்களுக்கு என்ன ஸ்டாக் வேணுமோ வாங்கிக்கலாம்.
[15:31]சோ ஒரு சின்ன அமௌன்ட்டில் இருந்தே US மார்க்கெட்டில் இன்வெஸ்ட் பண்ணனும்னு நினைக்கிறீங்கன்னா INDmoney ஆப்பை செக் பண்ணி பாருங்க.
[15:35]அதுக்கான லிங்கை டிஸ்கிரிப்ஷனிலும் கமெண்ட்டிலும் விடுறேன். எதில் இன்வெஸ்ட் பண்றீங்கனாலும் புரியாத விஷயத்தில் ஒரு ரூபாய் கூட போடாதீங்க.
[15:40]கிளியராக புரிஞ்சுகிட்டு கொஞ்சம் கொஞ்சமா இன்வெஸ்ட் பண்ண ஆரம்பிங்க. அதே மாதிரி டைவர்சிஃபைடான ETF-ஸை ஃபோகஸ் பண்ணுங்க.
[15:45]தப்பான இன்டிவிஜுவல் ஸ்டாக்ஸில் போய் மாட்டிக்காதீங்க. இதுவரைக்கும் இந்த வீடியோவில் பார்த்த இன்ஃபர்மேஷன் உங்களுக்கு யூஸ்ஃபுல்லாவோ இல்ல புதுசாவோ இருக்குனு தோணுச்சுனா இந்த வீடியோவை லைக் பண்ணிருங்க.
[15:51]இந்த சேனலுக்கு இதுவரைக்கும் சப்ஸ்கிரைப் பண்ணலனா சப்ஸ்கிரைப் பண்ணிட்டு அந்த பெல் ஐகானை கிளிக் பண்ணி ஆல்-அன்ட்ற செலக்ட் பண்ணீங்கனா இந்த சேனலில் போடுற புது வீடியோஸ்ஸோட நோட்டிஃபிகேஷன் உடனே வந்து சேரும்.
[15:57]நன்றி மக்களே.



