[0:00]மார்க்கரி இவன் உங்கள் ஈவென்ட்ஸ எங்கலோட பிளான் பண்ணுங்க இப்போவே ஸ்கிரீன்ல தெரியிற நம்பருக்கு கால் பண்ணுங்க
[0:16]ஓம் சரணாகத தீனார்த்த பரித்திராண பராயனே சர்வர்த்திகரே தேவி நாராயணி நமோஸ்துதே வணக்கம் நேயர்களே இது மகாலட்சுமி ஜோதிடம் வழங்கும் காலச்சக்கரம் உங்கள் அன்பு ஜோதிடர் ஸ்ரீராம்ஜி பேசுகிறேன் அனைவரும் நலமுடன் இருக்கிறீர்களா? நன்றாகத்தான் இருப்பீர்கள் நன்றாக இருக்க வேண்டும் இன்றைய காணொளியில் நாம் காண இருப்பது தனுசு நன்மைகள் மட்டும் ஒவ்வொரு லக்னத்தினுடைய பாசிட்டிவ் பக்கங்கள் அதாவது நல்ல விஷயங்களை மட்டும் தொடர்ச்சியா பார்த்துட்டு வரோம் அந்த வகையில இன்றைக்கு தனுர் லக்னம் இந்த தனுர் மண்டலத்தை பத்தி சொல்லணும்னா இது வந்து காலபுருஷனுடைய பாக்கிய ஸ்தானம் காலபுருஷனுடைய அதிர்ஷ்டங்களை பாக்கிதையை முன்னேற்றத்தை தரக்கூடிய ஸ்தானம் ஒன்பதாம் வீடு இந்த வீட்டுக்கு அதிபதியா வரவர் பாருங்க குரு பகவான் இருக்கிற நவகிரகங்களிலேயே பெரிதாக நெகட்டிவ்வான பலன்களை தராத ஒரு கிரகம்னா குருதான் சில பேருக்கு இதுல கருத்து வேறுபாடு இருக்கும் சார் கன்னி லக்னம் மிதுன லக்னம் ரிஷப லக்னம் துலா லக்னங்களுக்கு எல்லாம் குரு கெட்டவர் இல்லையா அப்படின்னு உண்மைதான் ஆனா ஆதிபத்திய ரீதியான கெட்டவர் மட்டும்தான் அவர் ஆதிபத்தியம்னா அந்த வீடு அவர் பெற்றிருக்கிற வீடுகள் ரீதியான கெடுதல் மட்டுமே அவருக்கு உண்டானதே ஒழிய குருங்கிற ஒரு கெட்டவராக மாட்டார் பாவியாக மாட்டார் அப்ப இந்த தனுர் வீடு குருவின் மூலத்திரிகோண ஆட்சி வீடு மற்றும் சௌமிய வீடு இயற்கை சுப வீடு அப்ப அதீதமான நற்பலன்கள் ஒழிந்திருக்கக்கூடிய வீடுகள்ல தனுசும் ஒன்னு சோ இந்த தனுசு வீட்டில நெகட்டிவ்வான விஷயம்ங்கிறது ரொம்பவுமே குறைவுனுதான் நம்ம சொல்லணும் ஏன்னா இது இந்த வீட்டுல அமர்ந்திருக்கிற கிரகங்களின் அடிப்படையில ஒருவரின் அதிர்ஷ்டம் பாக்கியம் முன்னேற்றம் பொருள் வெற்றிகள் தீர்மானிக்கப்படும் இந்த இடத்துல கடுமையான பகை பெறும் நிலையில ஒரு கிரகம் கூட இருக்காது அப்படிங்கறது ஒரு சூட்சமமான உண்மை மாதங்கள்ல இது வந்து மார்கழி மாதத்தை குறிக்கக்கூடிய வீடு தனுர் மண்டலம் பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா சொல்லி இருக்கிற வசனமும் அதுவேதான் மாதங்களில் நான் மார்கழியாக இருக்க ஆசைப்படுகிறேன் எல்லாருடைய நம்ம நாட்டுல மூணு பெரிய மதங்கள் இருக்குனா எல்லாருடைய மதங்கள் சார்ந்த மிகச்சிறந்த நல்ல நாள் வரக்கூடியது இந்த மார்கழி மாதத்துல இருக்கும் அப்படி ஒரு அற்புதமான வீடு தனுர் மண்டலம் தனுர் மண்டலம் பார்த்தீங்கன்னா யாகசாலைல எரியக்கூடிய நெருப்பை குறிக்கும் யாகசாலைல புனிதமான நீர் ஒரு கும்பாபிஷேகம் நடக்கிற இடம் ஒரு கிரக பிரவேசம் நடக்கிற இடம் ஒரு யாகசாலை வளர்க்கிற இடத்துல இருக்கக்கூடிய நெருப்பை குறிக்கும் அக்னி தத்துவ வீடு இது சோ இது புனிதத்திலும் புனிதமான இடம் இந்த வீட்டுல ஒன்பது கிரகங்களுமே நன்மைகள் செய்ய கடமைப்பட்டவர்களே ஆகிறாங்க அந்த வகையில வந்து பார்த்தீங்கன்னா இந்த வீட்டின் மிக நற்பலன்கள் அப்படிங்கிறது இங்க உட்கார்ந்திருக்கிற கிரகத்தினுடைய காரகத்துவம் உங்களுக்கு கண்டிப்பாக ஏதாவது ஒரு வகையில உங்களுடைய அதிர்ஷ்டத்தை வளர்ச்சியை முன்னேற்றத்தை கொடுக்கும் உதாரணமாக சூரியன் தனுசுல உட்கார்ந்து இருக்கார் அப்படின்னா ஆட்டோமேட்டிக்காவே தகப்பன் தகப்பனாதி வர்க்கம் அரசு அரசாங்கம் அரசு வேலைகள் பவர்ல உள்ளவங்க மூலமா நன்மைகள் சித்தப்பா பெரியப்பா உறவு நிலை சிறப்பாகிறது தாயார் மாமனார் மாமனார் உறவு நிலை நல்லா இருக்குதுங்கிற மாதிரி அந்த சூரியனுடைய காரகத்துவம் பூரா உங்களுக்கு பெஸ்ட்டா இருக்கும் நல்ல சம்பாத்திய வலிமை உள்ள ஜாதகங்கள்ல சூரியன் தனுசுல இருக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் சந்திரன் இங்க உட்கார்ந்துட்டு இருக்கும்போது பார்த்தீங்கன்னா தாயார் தாயாதி வர்க்கத்தினால நன்மைகள் பிரயாணம் அதன் மூலம் கிடைக்கக்கூடிய ஆதாயம் நீர் சம்பந்தப்பட்ட பொருள்கள்ல ஆதாயம் விவசாயம் விளைநிலங்கள் கால்நடைகள்னால முன்னேற்றங்கள்னு அப்படி நல்ல பலன்களை கொடுத்துருவாரு சோ சந்திரனுக்கும் இந்த வீடு சிறப்பு செவ்வாய் இங்க உட்காரும்போது மருத்துவம் மருத்துவத்துறை கன்ஸ்ட்ரக்ஷன் பிசினஸ் அதுல சாதிக்கிறது சகோதர வர்க்கத்தின் மூலமா நல்ல ஆதாயம் கிடைப்பது நல்ல நண்பர்கள் ஏற்படுறது யூனிஃபார்ம் சர்வீஸஸ்ல சக்சஸ் பண்றது ரியல் எஸ்டேட் தொழில்ல பெரிய லெவல்ல முனுக்கு வரதுங்கிற மாதிரி அவரும் கொடுத்துருவாரு புதன் இங்க லக்னத்துல தனுசுல உட்கார்ந்துட்டு இருக்கும்போது பார்த்தீங்கன்னா இந்த லக்னத்துக்கு ஒரு பாதகாதிபதி மாரகாதிபதி கேந்திராதிபதி எல்லாம் எடுத்துட்டாலும் கூட அறிவுசார் விஷயங்கள்ல ஜாதகரை வெற்றி கொள்ள வைப்பார் அம்மான் வழி உறவுகள் அதாவது தாய் மாமன் அத்தை மாமனார் மாதிரியான உறவுகள் மூலமா வெற்றி வாகை சூடுவது நல்ல அத்தை மாமா உறவு கிடைக்கக்கூடிய யோகிதைகள் கல்வியினால மேன்மை இளமையிலேயே நல்ல புத்திசாலித்தனம் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துவது எழுதுவது இயங்குவது இயக்குவதன் மூலமா வெற்றியை தருவது இந்த தனுர் லக்னத்தினுடைய மிகப்பெரிய சிறப்பே என்னன்னா கொடுத்து அழகுவாக்கும் தன்மை கொண்டது கொடுத்து அழகுவாக்கது அப்ப இந்த லக்னத்தில பிறந்தவங்க மோஸ்ட்லி வந்து பெருசா மத்தவங்களை வந்து வஞ்சிச்சோ சூழ்ச்சி பண்ணியோ டெக்னிக்கலாவோலாம் போக மாட்டாங்க ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்ட் கேரக்டர் கோவம் மூக்கு மேல இருக்கும் ஆனா குணமுள்ள கோபம் அப்படின்னு அதை சொல்லணும் கொஞ்சம் மிலிட்டரி ஆபீசர் மாதிரிதான் நடந்துக்குவாங்க பொருளை எடுத்தா எடுத்த இடத்துல இருக்கணும் வச்சா வச்ச இடத்துல இருக்கணும்னு ஆனா எல்லாமே ஒரு கண்டிப்புடு அதாவது அரவணைப்புடன் கூடிய கண்டிப்பை வெளிப்படுத்தும் ராசி நம்ம வீட்டு நம்ம சின்ன பிள்ளைகளை பார்த்தா வாத்தியார்களை ஞாபகத்துல வச்சுக்கங்க அவங்களுடைய கண்டிப்பு எப்படிப்பட்டது நம்மள ஒழுங்குபடுத்துறதுக்கான கண்டிப்பு இல்லையா அதுதான் தனுர் தலைமை நீதிபதிகளையும் மடாலயங்களையும் அறிவுசார் இடங்களையும் அதிகாரமான ஸ்தூலங்களையும் நீதிமன்றத்தையும் குறிக்கக்கூடிய வீடும் தனுசுதான் அறிவு அரசர்களை உருவாக்கக்கூடிய இடம் இது நிதி நிர்வாகம் சம்பந்தப்பட்ட துறைகளை தேர்ந்தெடுக்கக்கூடிய இடமும் இதுதான் பேங்க் வங்கி சாரா இடங்கள் பைனான்சியல் செக்டார்ஸ் கந்துவட்டி மாதிரியான தொழில்கள் இதெல்லாம் குறிக்கிற கிரகமும் குருதான் இந்த வீடுதான் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியான்னு சொல்றாங்க இல்லையா அந்த இடம் தனுசு பாராளுமன்றக் கட்டிடம் தனுசு சுப்ரீம் கோர்ட் தனுசு சோ இந்த வீடு உயர்ந்த பதவியில் இருக்கிறவங்களையும் உயர்ந்த இடத்திலிருந்து மக்களை கண்காணிக்கிறவங்களையும் கட்டுப்படுத்துறவங்களையும் குறிக்கிற வீடாக வருது சுக்கிரன் இங்க இருக்கும்போது வாழ்க்கை துணையினால ஆதாயம் பொருளாதார வெற்றி பெண்களுக்கு உபயோகப்படுற மாதிரியான தொழில்கள் மனைவி வந்து சொத்தோட வந்து சேரக்கூடிய யோகிதைகள் படிச்ச வேலைக்கு போகக்கூடிய வாழ்க்கை துணை கிடைக்கக்கூடியது அழகான பெண் மனைவியாக அமையக்கூடிய யோகிதே அந்த மாதிரி பெண் பெண் சார்ந்த விஷயங்கள்ல ஆதாயத்தையும் நன்மைகளையும் கொடுத்திருக்கக்கூடியதா வரும் சூரியன் சந்திரன் செவ்வாய் இருந்தாலும் சரி புதன் சுக்கிரன் இருந்தாலும் சரி சிறப்பு குரு இருந்தால் கேட்கவே வேண்டாம் அவர் அந்த வீட்டுக்கே ஆதிபத்தியம் பெறக்கூடியவர் நல்ல சம்பாத்திய வலு வலிமை முன்னேற்றம் பாக்கியம் நல்ல தகப்பன் அதிர்ஷ்டம் பேராற்றல் உயர்கல்வி ஒழுக்கம் ஒழுக்கத்தினால சிறப்பை பெறும் யோகிதைகள் போன்றவற்றை கொடுத்துருவாரு சோ இதுவும் ஒரு சிறப்பான அமைப்புதான் குருவுக்கு அவருக்கு அது ஆட்சி மூலத்துறைகவனம் வீடுங்கறதுனால ஈவன் சனி பகவான் நீங்க உட்கார்ந்தாருனா பாத்தீங்கன்னா நல்ல வேலை அதனால உழைப்பு அதன் மூலம் முன்னேற்றம் நல்ல வேலைக்காரங்க அமையறது பெரிய பெரிய நிறுவனங்களை இவங்க வேலை செய்றது அல்லது நிறுவுங்கல நடத்துறது பூமி அடியில இருந்து கிடைக்கக்கூடிய பொருள்கள்னால் ஆதாயம் உயிரை கொடுக்கிற வேலைக்காரங்க அமைஞ்சு அதன் மூலம் நீங்க வாழ்க்கையில வளர்ச்சி அடையக்கூடிய அமைப்பு சோம்பல் குணத்தை குறைத்து சுறுசுறுப்பை அதிகப்படுத்தி அதன் மூலம் வெற்றி பெறும் யோகிதைகளையும் தனுர் மண்டலத்துல சனி உட்காரும்போது கொடுத்துருவாரு ராகு கேதுக்களுக்கும் இது மோசமான வீடு இல்ல ராகு அமர்ந்தாலும் உங்களுக்கு வெளிநாட்டு வாழ்க்கை கம்ப்யூட்டர் துறைல புலமை அந்நிய தேசத்துல டாலர்கள்ல சம்பாதிப்பதற்கான யோகிதைகள் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி நானோ டெக்னாலஜி ரோபோட்டிக் இன்ஜினியரிங் மாதிரியான துறைகள் மருத்துவத்துறையில சாதிப்பது மருந்து உபகரணங்களை தயார் பண்ணி அதுல பெரிய ஆளா ஆகுறதுங்கற மாதிரியான அமைப்பை கொடுப்பார் கேது அமர்ந்தார்னா ஞான மார்க்கத்தின் வழிகாட்டுதல்கள் இறை வழிபாட்டின் மூலமா கிடைக்கக்கூடியது ஆன்மீகம் சார்ந்த தொழில்கள் அதுல நல்ல இது மத பிரவசங்கம் செய்யக்கூடிய அமைப்பு மத குருமார்களா அறியப்படுவது நல்ல உயர்ந்த மருத்துவரை உருவாக்குறது கைச்சிறந்த கைச்சேர்ந்த ராசிகரமான மருத்துவர் அதாவது கைராசி டாக்டர்ன்னு சொல்லுவாங்க இல்லையா அதையெல்லாம் கொடுக்கக்கூடிய அமைப்பு கேது கொடுப்பார் நல்ல ஞானவானை உருவாக்குவார் பக்தி மார்க்கத்திலேயே வாழ்க்கையில வெற்றி அடையற அமைப்பை கேது வந்து தனுசுல உட்காரும் போது கொடுப்பார் சோ ஒன்பது கிரகங்களுமே இந்த வீட்டுல பாசிட்டிவ்வான பக்கத்தை வெளிப்படுத்துபவை இந்த வீடே ஒரு பாசிட்டிவ் எனர்ஜியான வீடு என்ன ஒரே விஷயம் இது ஒரு உபய லக்னம் அப்ப இந்த உபய லக்னத்தினுடைய பலவீனம் இதுக்குள்ள இருக்கும் இந்த இடத்துல உட்கார்ந்திருக்கிற கிரகங்கள் எல்லாமே பாசிட்டிவ் பக்கத்தை வெளிப்படுத்தும்னாலும் கூட அது 50% தான் வெளிப்படுத்தவே முடியும் அந்த வீட்டின் தன்மையே அது மாதிரிதான் இந்த லக்னக்காரங்களும் அப்படித்தான் 50% வெற்றியாளர்களை உருவாக்குற அதே தனுசு லக்னம் 50% தோத்து போறவங்களையும் கடைசி வரைக்கும் லைஃப்ல செட்லயே ஆகாதவங்களையும் உருவாக்கும் 55 வயசுல கேட்பார் நான் புதுசா ஒரு தொழில் தொடங்கலாமா அப்படின்னு தனுசு லக்னம் 65 வயசுல கேட்பார் நான் சம்பாதிச்சாதான் என் பிள்ளைகளை கல்யாணம் பண்ணி கொடுக்க முடியும் இன்னும் நான் செட்டிலே ஆகல தனுசு சோ இந்த மாதிரி செட்டில் ஆகாத அமைப்பையும் தனுசு கொடுக்கும் புரிஞ்சுதுங்களா எல்லா பாசிட்டிவ் பக்கத்துக்கு பின்னாடி ஒரு நெகட்டிவ் ஒளிஞ்சுட்டு இருக்கு உபய லக்னங்களுடைய பலவீனம் என்ன தனக்கு கிடைக்கும் வலிமையான விஷயங்களை தக்க வைத்துக் கொள்ளும் தகுதியற்றவை அது தொடர்ந்து வந்து லைஃப் லாங்கா ரன் பண்ண முடியாதவை நல்ல பதவியோ நல்ல அந்தஸ்தோ நல்ல பொருளாதார வெற்றியோ நல்ல வாழ்க்கை துணையோ நல்ல சமுதாய மரியாதையோ கிடைக்கும் அதிகாரம் பதவி அந்தஸ்து எல்லாமே கொடுக்கக்கூடிய ஆனா அதை இவங்க தக்க வச்சுக்க மாட்டாங்க நடுவுலயே செய்யக்கூடாத வேலைகளை செஞ்சு லூசுல விட்டுருவாங்க இந்த உபய லக்னத்துக்காரங்க எல்லாருக்குமே புரியும் அவர்களுடைய வாழ்க்கையில 40 வயசு 50 வயசு கடந்தட்டவங்க உபய லக்னக்காரங்க இருந்தீங்கன்னா யோசிச்சு பாருங்க எவ்வளவு நல்ல விஷயங்கள் உங்களுக்கு இந்த பிரபஞ்சமும் இயற்கையும் கொடுத்துச்சு அதையெல்லாம் நீங்க தக்க வச்சுக்கிங்களான்னு உங்களை நீங்களே கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறி மீண்டும் ஒரு காணொளியில் உங்களை வந்து சந்திக்கும் வரை உங்களிடமிருந்து அன்புடன் விடைபெற்றுக் கொள்வது உங்கள் அன்பு ஜோதிடர் ஸ்ரீராம்ஜி நன்றி வணக்கம்



