[0:00]வாப்பா தம்பி வாப்பா தம்பி. மேல ஏறுப்பா, அண்ணன் இருக்கான்ப்பா, மாமா இருக்கான்ப்பா, நான் உதவி பண்றேன்ப்பா. இப்படிதாங்க உங்க வாழ்க்கையில ஒரு ஆள் உதவி பண்றது மாதிரியே பேசிட்டு இருப்பாங்க. நம்மளும் அவங்களை நம்பி நம்பி இப்ப உதவி பண்ணுவாங்க, அப்ப உதவி பண்ணுவாங்க, நம்ம வாழ்க்கையை கரை சேத்திருவாங்க அப்படின்னு நம்பிக்கிட்டே இருப்போங்க. ஒரு கையில ஹெல்ப் பண்றது மாதிரி ஹெல்ப் பண்ணுவாங்க. ஆனா மறு கையில நீங்க முன்னேறாத அளவுக்கு உங்களை வீழ்த்திக்கிட்டே இருப்பாங்க. அது நமக்கு தெரியாது, கண்ணுக்கே தெரியாது. அவங்க ஒருவேளை உங்களுக்கு உதவி பண்றேன்னு சொல்லாம இருந்திருந்தால், நீங்களே தட்டு தடுமாறியாவது வாழ்க்கையில முன்னேறி இருப்பீங்க. ஆனா பொய்யான வார்த்தைகளை சொல்லி சொல்லி நீங்களும் அதை நம்பி நம்பி உங்க வாழ்க்கை மண்ணா போச்சுங்க. அதனால அவரு வருவாரு, இவரு வருவாரு, எனக்கு ஹெல்ப் பண்ணுவாரு அப்படின்னு ஒரு மாய பிம்பத்துல உங்க வாழ்க்கையை வாழ்திடாதீங்க. எப்பொழுது உன்னையே நீ நம்புகிறாயோ அப்பொழுது உலகம் உன்னை மதிக்கிறது. எப்பொழுது மற்றவனை நீ நம்புகிறாயோ அப்பொழுது உலகமே உன்னை மிதிக்கிறது. உன்னையே நம்பு இந்த உலகம் உனக்கானது.

உன்னையே நம்பு- உலகமே உனக்கு Jayaseelan IDAS #motivation #succesrules #hardwork
Jayaseelan IDAS
59s123 words~1 min read
Auto-Generated
Watch on YouTube
Share
MORE TRANSCRIPTS


