[0:08]Language of Homeopathy (LOH) Homeopathy in Multi Dimensional Perspective பண்முகப் பார்வையில் ஹோமியோபதி Polychrest Remedies 04. Bryonia Alba Complete Picture இன்னைக்கு நம்ம பார்க்கப்போற ரெமடி வந்து பிரியோனியா ஆல்பா. முடிந்த அளவுக்கு ஒரு கம்ப்ளீட் பிக்சர் பார்க்கலாம். இந்த மருந்தை எல்லாமே அதிகமாக நாம் பயன்படுத்தி இருக்கோம். இது பயன்படுத்தாதவங்க யாருமே இருக்க மாட்டாங்க. இந்த கொரோனா பீரியட்ல ஆசனிக்கா ஆல்பம் போல பிரியோனியாவையும் ரொம்ப பேர் பயன்படுத்தி இருக்காங்க. இந்த பிரியோனியா பற்றி இன்னைக்கு நம்ம கொஞ்சம் டீடைலா பார்க்கப்போறோம். பிரியோனியா வந்து ரோசிஏ டேங்கிற சப் கிளாஸ்ல, வைல்ட் லைன்ஸ்ங்கிற ஆர்டர்ல இருக்கிற ஒரு தாவரம். இதுதான் பிளான் சார்ட்ல சொல்லப்பட்ட விஷயம். இதனுடைய இன்னர் ஏஜ் வந்து சைல்ட் ஹுட். ஏன் இதெல்லாம் சொல்றேன்னா, உங்களுக்கு பின்னாடி சில விஷயங்களுக்கு காரணம் தெரியாமல் இருக்கும். அது இந்த இன்னர் ஏஜ்ல இருந்து நம்ம புரிஞ்சுக்கலாம் அதுக்காக தான். இதுக்கு எர்த் எலமெண்ட் அதிகம். எர்த்னாவே நல்லா தெரியும் மெட்டீரியலிஸ்ட்னு அர்த்தம். பணம், பாதுகாப்பு, சேஃப்டி, ஸ்டெபிலிட்டி இதுதான் அவங்களுடைய தாரக மந்திரம். அதனால கிட்டத்தட்ட இது பார்த்தீங்கன்னா ஃபோர்த் ரோவோட சம்பந்தப்பட்டது மினரல் திங்கத்துல. இவங்களுக்கு வந்து ஒரு லீடர்ஷிப் குவாலிட்டி இருக்காது. இவங்களுக்கு பிரச்சனை என்னன்னா தன்னுடைய ஒர்க்ல நடக்குற சிக்கல்தான் உங்களுடைய எல்லா பிரச்சனைக்கும் காரணமாக அவங்க கருதுவாங்க. ஒர்க்ல இருக்கிற ப்ராப்ளம் அப்படின்னு சொன்னா, ஒர்க் வந்து இவங்களுக்கு ஏத்தாப்ல, இவங்க நினைச்ச மாதிரி எந்த டிஸ்டர்பன்ஸும் இல்லாம நடக்கணும். எந்த தொந்தரவும் இல்லாமல் நடக்கணும். அதனால்தான் அவர்சன் டு பீயிங் டிஸ்டர்ப்டுங்கிறது பிரயோனியால முக்கியமாக காணப்படுது. எந்த தொந்தரவும் இல்லாமல் அமைதியாக நிம்மதியாக இருக்கணும்கிறதுதான் பிரியோனியாவுடைய பெரு ஆசை. அப்படி ஏதாவது தொந்தரவு வந்துச்சுன்னு சொன்னா, அவங்களுடைய ஒர்க் பாதிக்கப்படும். அதனால அது ரிலேட்டடான ஸ்டெபிலிட்டி, சேஃப்டி, செக்யூரிட்டி எல்லாமே பாதிக்கப்படும். அதனால இவங்க வந்து மணி ஓரியன்டட் பீப்பிள், பிசினஸ் ஓரியன்டட் பீப்பிள். இவங்களை பொதுவாக நாம் எந்த கேட்டகிரில வைக்கலாம்னு சொன்னா ஹார்ட் ஒர்க்கர் அப்படின்னு எடுத்துக்கலாம். கடுமையான பிசினஸ்ன்னு சொல்லுவாங்க இல்லையா, பழங்காலத்து பிசினஸ் மாதிரிதான் இவங்க பார்ப்பாங்க. இப்ப இருக்கிற மாடர்ன் பிசினஸ்லாம் அவங்க எடுத்துக்க மாட்டாங்க, அந்த ரிஸ்க்கையும் எடுத்துக்க மாட்டாங்க. ரொம்ப ஸ்பெக்குலேட்டிவ்வாவும் இருக்க மாட்டாங்க, மினிமம் ரிஸ்க் தான் எடுப்பாங்க. விராட்ரம் ஆல்பம் மாதிரி ஒரு எக்ஸ்ட்ராவேகன்ஸ் இருக்காது. அவங்க தன்னுடைய சோசியல் பொசிஷன் விழுந்துருச்சு அப்படின்னு நினைப்பாங்க. பிரியோனியா இருப்பதை தக்க வைத்துக்கொள்ள வேண்டும், எந்த தொந்தரவும் இல்லாமல் வாழ்க்கையை ஓட்ட வேண்டும் என்று நினைப்பாங்க. அங்க வந்து வெராட்ரம் ஆல்பத்துல இந்த சோசியல் பொசிஷனை பார்க்கக்கூடிய ஆட்கள். கல்கேரியா ஃப்ளூரிகம் எடுத்துட்டீங்கன்னா, அவங்களுக்கு வந்து தான் சேகரித்த பணம் எல்லாவற்றையும் மிச்சப்படுத்தி பாதுகாப்பா வச்சிருக்கணும். ஃபியூச்சர்ல ஏதாவது பிரச்சனை வந்துச்சுன்னா, நாம எதிர்கொள்ளணுமேன்னு நினைப்பாங்க. ஏன்னா இந்த ஃப்ளூரின்னுடைய அந்த பெர்மனன்ட் ஜாப் இல்லாததுனால. நிரந்தர ஒரு வேலை இல்லாததுனால, தான் ஃபியூச்சர்ல ஏதாவது வேலையிலிருந்து நீக்கப்பட்டாலோ, இல்ல வேலை கிடைக்காமல் போனாலோ, அதற்கான வாய்ப்பு இல்லாமல் போனாலோ, உடனே அந்த மிச்சப்படுத்திய ரூபாவை வைத்து நாம வாழ்ந்து கொள்ளலாம்னு நினைக்கக்கூடிய ஒரு ஆள்தான் கல்கேரியா ஃப்ளூரிகம். இங்கே பிரியோனியா அதே போல ஃபியூச்சர் பத்தி நினைக்கக்கூடியதுதான், சேஃப்டி, செக்யூரிட்டி அண்ட் ஸ்டெபிலிட்டியை நினைக்கக்கூடியதுதான். ரெண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்னன்னா பிரியோனியா வந்து கான்ஸ்டன்ட்லி இட் வில் வொர்க் இன் பிசினஸ். கல்கேரியா ஃப்ளூரிகம் எதை நோக்கி மையப்படுத்தி இருக்குன்னா தனக்கு நிரந்தரமான ஒரு வேலை கிடைக்கலைங்கிறது மையமாக எடுத்திருக்கும். பிரியோனியா ஒரு வேலை கிடைக்கலைன்னா இன்னொரு வேலைக்கு போயிருவாங்க. இன்னொரு பிசினஸை மாத்திக்குவாங்க. பிசினஸ் மேனேஜ் பிசினஸ் மாத்திக்கிட்டே இருப்பாங்க. ஆனால் சேஃப்டியை ரொம்ப எதிர்பார்ப்பாங்க. விராட்ரம் ஆல்பம் போல சேஃப்டி பார்க்காம ஒரு எக்ஸ்ட்ராவேகன்ஸா செய்யக்கூடிய ஒரு ஆள் அல்ல பிரியோனியா. இதை நம்ம நல்லா தெரிஞ்சுக்கணும். பிரியோனியா, கல்கேரியா ஃப்ளூரிகம், வெராட்ரம் ஆல்பத்தை புரிந்து கொண்டோம்னா நம்ம பிரியோனியாவை நல்லா அண்டர்ஸ்டாண்ட் பண்ண முடியும். பிரியோனியா வந்து எப்பொழுதுமே மினிமம் ரிஸ்க் தான் எடுப்பாங்க. அதனால ஸ்பெக்குலேஷன் எடுத்துக்கிட்டீங்கன்னா அவங்க அன்றாட டிரேடிங் இருக்கு இல்லையா அந்த மாதிரியெல்லாம் ஈடுபட மாட்டாங்க. வாங்கி வச்சிட்டு நல்ல விலை வரும்போது விக்கிறது, அந்த மாதிரியான ஷேர் மார்க்கெட் பிசினஸ் தான் அவங்க பார்த்துட்டு இருப்பாங்க. ஸ்பெக்குலேட்டிவ் டிரேட் தான் அவங்களுக்கு அவ்வளவு ஒத்துவராது. ரொம்ப ரிஸ்க் எடுக்க விரும்ப மாட்டாங்க. இந்த எல்ஐசி ஏஜென்ட்டா இருக்கிறது, ரெப்ரசன்டேட்டிவ்வா இருக்கிறது, ஒரு சின்ன பிசினஸ் பண்றது, டிரேடிங் பண்றது இந்த மாதிரியான வேலைகளை அவங்க வந்து ரொம்ப சின்ன சின்ன சிறு தொழில்கள் இருக்கு பாருங்க. கடின உழைப்புடன் கூடிய சிறு தொழில்கள். அம்பானி போல ரிலையன்ஸ் கம்பெனி போல அதானி குரூப்பை போல எல்லாம் அவங்க செயல்பட மாட்டாங்க. ஏன்னா இன்னர் ஏஜ் வந்து ரொம்ப கம்மி. அந்த இன்னர் ஏஜ்க்கேத்த ரிஸ்க் தான் அவங்களால எடுக்க முடியும். இதுதான் ரொம்ப முக்கியமான பிரியோனியாவ பத்தியான அவங்களுடைய பிசினஸ் டாக்டிக்ஸ். அவங்க மெட்டீரியலிஸ்ட், பியூர் மெட்டீரியலிஸ்ட் அதனாலதான் எர்த் எலிமெண்ட் அதிகமாக இருக்கு. பியூர் மெட்டீரியலிஸ்ட் அப்படின்னு எடுத்துட்டீங்கன்னா ரொம்ப முக்கியமான ஒரு விஷயம் என்னன்னா எமோஷனல் பிளேன் அதிகமாக இருக்காது. ஒரு என்டர்டைன்மென்ட் இருக்காது அவங்களுக்கு. லைஃப்ல ஒரு சந்தோஷம் ஆடல், பாடல் அந்த மாதிரியான எதுவுமே இருக்காது. சதா வேலை, பிசினஸ், மணி, சேஃப்டி, செக்யூரிட்டி இது தவிர வேறு எந்த சிந்தனையும் அவங்களுக்கு இல்லாத ஒரு பொருள் முதல்வாதி. வீட்டுல அக்கறை செலுத்துவாங்க, ஃபேமிலி மெம்பர்ஸ் மேல அக்கறை செலுத்துவாங்க, அவங்களோட ஹெல்த் மேலேயும் அக்கறை செலுத்துவாங்க. எதுக்குன்னு சொன்னா, அவங்க ஹெல்த் ஏதாவது பாதிச்சுச்சுன்னா அதுக்கு செலவு செய்ய வேண்டியது வந்துரும். அதனால முன்ஜாக்கிரதையா அவங்களை சரி பண்ணிக்கணும்னு நினைப்பாங்க. அதே போல தன்னுடைய ஹெல்த்லேயும் அக்கறை செலுத்துவாங்க. ஏன்னா பிசினஸ் எதுவும் பாதிக்கப்படக்கூடாது. அவங்களுக்கு என்னன்னா இம்மீடியட்டா எல்லாம் ரெக்கவர் ஆகி பிசினஸ்ல இன்வால் ஆகி பிசினஸ் எந்த வகையிலும் ஸ்தம்பிக்கக் கூடாதுன்னு நினைக்கக் கூடியவங்க. அவங்களுடைய டாக் இன் கிளினிக்கல் ரூம் எப்படி இருக்கும்னா பிசினஸ் லைக்கா தான் இருக்கும். குறிப்பாக சொன்னா, சார் இந்த ஸ்கேன் இது அதெல்லாம் எடுக்கணுமா? விலை அதிகமே, ஏற்கனவே ரொம்ப செலவு இருக்கு அப்படின்னு சொல்லுவாங்க. சார் ஏற்கனவே சஃபரிங்ல இருக்கேன். நீங்க ஏதாவது மருந்து கொடுத்து அதிகமாக்கிடாதீங்க. ஏன்னா நான் வேலைக்கு போகணும். எனக்கு வேலை இல்லாமல் இருந்தா எனக்கு சம்பாத்தியம் இல்லாமல் போயிரும். அதனால பார்த்துக்கங்கம்பாங்க. அதுபோல பார்கெயினிங் இருக்கும். இது எல்லாமே வந்து கிளினிக்கல் ரூம்ல பிரியோனியா எப்படி பிஹேவ் பண்றாங்கங்கிறதை நம்ம தெரிஞ்சுக்கணும். இந்த பிரியோனியாவை நல்லா புரிஞ்சுக்கணும் அப்படின்னு சொன்னா, நாம முதல் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னன்னு சொன்னா அவங்களுக்கு டிசையர் வந்து அன்லிமிட்டட். ஒரு அளவுலாம் இருக்காது. இவ்வளவுதான் டிசையர் அவ்வளவுதான் டிசையர் அப்படின்னுலாம் இல்லை. அன்லிமிட்டட் டிசையர். அந்த ரூப்ரிக் எடுத்து பார்த்துட்டீங்கன்னா, டிசையர்ஸ் ஃபுல் ஆஃப் டிசையர் இன்டெஃபினேட். டிசையர்ஸ் ஃபுல் ஆஃப் டிசையர்ஸ் மோர் தென் சி நீட்ஸ். டிசையர்ஸ் ஃபுல் ஆஃப் டிசையர்ஸ் அன் அட்டைனபிள் திங்ஸ் டிசையர் ஃபார். பாருங்க எவ்வளவு ஆசை பாருங்க. ஆசைக்கு எல்லையே இல்லாத அளவுக்கு ஆசை. ஆசையினுடைய உச்சபட்சம் இதுதான் நிறைந்திருக்கு. இது ரெண்டு ஆஸ்பெக்ட்ல இருக்கு. தே டிசையர் சம் திங் வென் ஆஃபர்டு தே ரிஜெக்ட்ஸ். ஏன்னா அவங்களுடைய ஆசைங்கிறது ஒரு குறிப்பிட்ட பொருளை சார்ந்தது இல்லை. அதனாலதான் அவங்களுடைய டிசையர் வந்து ஒரு முடிவற்றதாக இருக்கும் ஃபர்ஸ்ட் பாயிண்ட். அவங்களுடைய டிசையர்ல எடுத்து பார்த்துட்டீங்கன்னா இன்டிஸ்டின்க்ட் டிசையர், பட் நோஸ் நாட் வாட். அது என்னவாக இருக்கும்னு அவங்களுக்கு தெரியாது. இந்த ரெண்டு ஆஸ்பெக்ட் இது வந்து ஸ்டமக் சேப்டர்ல எழுதி இருப்பான். அப்ப இந்த ரெண்டு ஆஸ்பெக்டையும் நீங்க பாத்தீங்கன்னாவே தெரிஞ்சுக்கலாம். பிரயோனியாவோட ஆசை பேராசை. அதனால ஆவரேஜ்ல ரொம்ப முக்கியமான ஒரு மருந்தாக பிரியோனியா காணப்படுது. இந்த பிரியோனியாவை வந்து ஒரு பெண் தன்மை உள்ள ஒரு மருந்து. அப்படின்னா அதனுடைய இன்னர் ஏஜ் தான் அதை குறிக்குது. அந்த செடியே எடுத்து பார்த்தீங்கன்னா ஒரு சாஃப்ட் டிஸ்யூல ஆன செடி. கொடிபோல பரவ அந்த பரவுதல் எப்படி இருக்குன்னா அந்த தண்டு இருக்கு இல்லையா அதுக்குமா அது பரவுற அந்த கொடிக்கும் சம்பந்தமே இல்லாத அளவுக்கு இருக்கும். அந்த அளவுக்கு லார்ஜ் பெரிய கொடியாக இருக்கும். காய்களும் எண்ணில் அடங்காத அளவுக்கு காய்களை காய்க்கும். அதனுடைய திசையர் பாருங்க எப்படி இருக்குன்னு பாருங்க. ஆனால் அதனுடைய தண்டு இருக்கு பாருங்க அது வந்து ரொம்ப மெலிசாகவும் அவ்வளவு பலமில்லாதது போல் இருக்கும். அதனுடைய காய் பார்த்தீங்கன்னா அதிகமாக இருக்கும். இந்த செடியினுடைய தண்டு அந்த கொடி எல்லாம் பார்த்தீங்கன்னா 50 கிலோ இருந்துச்சுன்னா இது 150 கிலோ 100 கிலோ இருக்கும். அதிகமாக அதனுடைய ஃப்ரூட்ஸ் இருக்கும். அந்த அளவுக்கு பிரியோனியா இருப்பதனால் தான் சுருக்கமாக சொல்லணும்னா அதனுடைய செடியும், அது காய்க்கும் காயும் பார்த்தீங்கன்னா டிஸ்ப்ரபோஷனேட்டா இருக்கும். அதனுடைய ஸ்ட்ரென்த்ல அதனுடைய வெயிட்ல. அதேபோலதான் அதனுடைய ஆசையான அது செய்யிற வேலை எல்லாம் சாதாரண வேலைதான். ஆனால் அதனுடைய ஆசை பேராசையாக இருக்கும். அதனாலதான் அது பெண் தன்மையோட ஒப்பிட்டு பேசுறாங்க சில ஆத்தர்ஸ். அதுக்கு மிக முக்கியமானது என்னன்னா எப்படி பெண் தன்மை அப்படின்னு தெரிஞ்சிக்கிறதுக்கு டெலூஷன் வொர்க் அகாம்பிளிஷ் ஹெர் வொர்க் சி கேன் நாட். சி கேன் நாட் அகாம்பிளிஷ் ஹெர் வொர்க்னு அர்த்தம். இந்த சிங்கிறது இங்க வந்து ஃபெமினின் ஜென்டர குறிக்குது. இந்த ஃபெமினின் ஜென்டர்ங்கிறது பிசிக்கலா புரிஞ்சுக்க வேண்டாம். பவர் ரிலேட்டடா புரிஞ்சுகிட்டா நல்லது. இப்ப ஒரு மேல்னா இதுதான் இதுதான் இருக்கும். அவங்களுக்கு ஒரு வரையறை, ஒரு டார்கெட் எல்லாமே இருக்கும். இதை வச்சுதான் அவங்க வந்து இந்த மாதிரி வேலை செய்யணும், அப்படி வேலை செய்யணும்னு ஒரு செயல் திட்டங்கள் இருக்கும். ஆனால் ஃபீமேலுக்கு அப்படி இருக்காது. ஏன்னா அவங்களுடைய விருப்ப பொருள் என்பதை எல்லை கடந்ததாக இருக்கும். அவனுடைய ஆசையே பேராசையாக இருக்கும். அதுபோலதான் பிரியோனியா தன்னுடைய சப்ஜெக்டிவ் விருப்பமாக அது இருக்கும். அது ஒரு பிலீஃப் சிஸ்டம் அப்படியாக சில ஆத்தர்கள் இதை சொல்றாங்க. இதை பிரியோனியாவைப் பத்தியான மிக முக்கியமான அவதானிப்பு. பிரியோனியாவோட வொர்க் எப்படி இருக்கும் அப்படின்னு கேட்டீங்கன்னா, ஆன்சைட்டி பெட் டிரைவிங் அவுட் ஆஃப் பெட். படுத்துட்டு இருக்கும்போதே ஒரு பதட்டம் வந்துரும். வேலை இருக்கே நம்ம அதை செய்யணுமே, செய்ய உடனே கிளம்பணுமே. இவ்வளவு டார்கெட் இருக்கே, இவ்வளவு ப்ரொடக்ஷன் பண்ணணுமே, நம்ம உடனே வேலை செஞ்சு முடிக்கணும்ங்கிறதுல ஆன்சைட்டி பெட் டிரைவிங் அவுட் ஆஃப் பெட். பெட் கெட் அவுட் ஆஃப் பெட் வாண்ட்ஸ் டு. அடுத்து டெலிரியம் பெட் எஸ்கேப்ஸ் ஜம்ப்ஸ் அப் சடன்லி ஃப்ரம். எஸ்கேப் அட்டம்ஸ் டு ஜம்ப்ஸ் அப் சடன்லி ஃப்ரம் பெட். ரெஸ்ட்லெஸ்னஸ் பெட் டிரைவிங் அவுட் ஆஃப். ரெஸ்ட்லெஸ்னஸ் பெட் டாசிங் அபௌட் இட். ஜம்பிங் பெட் அவுட் ஆஃப். இவ்வளவு ரூப்ரிக் இருக்கு. இதெல்லாம் எதை காட்டுதுன்னு சொன்னா, தான் நிம்மதியாக படுக்க முடியாதுங்கிறதை காட்டுது. ஏன்னா வேலையே சதா நினைச்சிட்டு இருக்கிறதுனால, அதனாலதான் டாக்ஸ் ஆஃப் பிசினஸ்ல மிக முக்கியமானது, டாக்ஸ் ஆஃப் மணில மிக முக்கியமான ஒரு மருந்து. பிரியோனியாவுடைய ஒரு மிக முக்கியமான ஒரு சிம்டம் இருக்கு டாக்ஸ் ஆஃப் ஹோம்னு சொல்லி. எல்லாரும் என்ன நினைச்சுக்கிறாங்கன்னா, அவங்க டிஸ்டர்ப் பண்ணக் கூடாது அப்படின்னு வீட்டுல போய் படுத்துக்கணும்னு நினைக்கிறாங்க அப்படின்னு நினைச்சுக்கிறாங்க. ஆனால் அதல்ல காரணம். அவங்க வந்து தன்னுடைய பிசினஸ் பார்ட்டை தான் ஹோமாக நினைக்கிறாங்க. தேர் ஹோம் இஸ் பிசினஸ். பிசினஸ் பிளேஸ் இஸ் தேர் ஹோம். இப்படி இருக்கறதுனால, அவங்களுக்கு வந்து எப்பொழுதுமே தான் வீட்டுல இருந்தா கூட வீட்டுக்கு போகணும்னு நினைக்கிறாங்க பார்த்தீங்களா?
[11:11]அதுதான் அந்த வீடுங்கிறது பிசினஸ் பிளேஸ்ங்கிறது அர்த்தம். அது ரூப்ரிக்ல சொல்லிருக்காங்க டெலூசன் ஹோம் அவே ஃப்ரம் ஹோம் ஹி இஸ் மஸ்ட் கெட் தேர். அது அர்த்தமே என்னன்னா தான் வீட்டுல இருந்தா நோறு வீட்டுக்கு போகணும்னு நினைக்கிறது எதுன்னா அந்த பிசினஸ் பார்ட். அதே மாதிரி அது வைசி வெர்சாவா எடுத்துக்கலாம். எந்த சூழல்லன்னு சொன்னா, தன்னால் எதுவுமே முடியாத ஒரு சூழல் இருக்கு பார்த்தீங்களா? பிசினஸ் ஃபெயிலியர், தான் நினைச்ச மாதிரி அடைய முடியலை, தன்னோட ஃபேண்டசிஸ் ஃபுல்ஃபில் ஆகலை. தன் உடம்பு ஒத்துழைக்கலை அந்த மாதிரி இடத்துல அவங்க பிசினஸ்ல இருந்து திருப்பி வீட்டுக்கு வர மாதிரி கூட அவங்க நினைக்கலாம். அதனாலதான் லீஸ்ட் மோஷன் அக்ரவேஷன் அப்படிங்கிறதை அந்த இடத்துல நாம உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். இன்னொரு ரூப்ரிக் இருக்கு பாருங்க டெலூசன் ஹோம் அவே ஃப்ரம் ஹோம் ஹி இஸ். டெலூசன் ஹோம் அவே ஃப்ரம் ஹோம் ஹி இஸ். தான் வீட்டுல இருக்கும்போதே வீட்டுக்கு வெளியே இருக்கிறதாக அவங்க நினைக்கிறாங்க. அப்ப விச் இஸ் தேர் ஹோம் அப்படின்னு கேட்டீங்கன்னா பிரியோனியா ஹோம் இஸ் ஒர்க்கிங் பிளேஸ்னு அர்த்தம். ஹோம் டாக்ஸ் ஆஃப் ஹோம், ஹோம் டிசையர் டு கோ, டெலிரியம் ஹோம் வாண்ட்ஸ் டு கோ. இதுல இருந்து பிரியோனியா யாருன்னு உங்களுக்கு தெரிஞ்சிரும். அவங்க தன்னுடைய பிசினஸ் பிளேஸ தான் மிக முக்கியமான வீடாகவும், அது கோவிலாகவும் நினைக்கிறாங்க. தன்னுடைய தொழிலைத்தான் தெய்வமாக நினைக்கிற ஒரு பிரியோனியா. மத்ததெல்லாமே அவங்களுக்கு செகண்டரி தான். இதுதான் பிரியோனியாவோட மிக முக்கியமானது. இதுல நக்ஸ் வாமிக்க கூட நம்ம ஒப்பிட்டு பார்த்தீங்கன்னா நக்ஸ் வாமிக்க வந்து எடுத்த காரியத்தை முடிச்சிருவாங்க. அவங்களால முடிக்க முடியும். ஆனால் இங்க பிரியோனியால வேலை எல்லாம் செய்யும் எல்லாமே இருக்கும். அவங்களுடைய ஆசை பேராசையாக இருப்பதுனால் இன்டெஃபினிட்டா இருக்கிறதுனால. முடிவற்று இருக்கிறதுனால, இன்டிஸ்டின்க்ட்டா இருக்கிறதுனால, அவங்களால முடித்து விட்டோம்ங்கிற ஒரு திருப்தி நிலை இருக்காது. இதுதான் பிரியோனியாவை நம்ம தெரிஞ்சுக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம். ஸ்பியர் ஆஃப் ஆக்ஷன் எந்த ஏரியானு பார்ப்போம். அதனுடைய ரீஜியன் ஆஃப் வொர்க் அப்படிங்கிறது பார்த்தீங்கன்னா சர்க்குலேஷன், லிவர், சீயரஸ் மெம்பிரேன், ப்ளூரா, பெரிகார்டியம், ஜாயின்ட்ஸ், அப்டமன், அப்புறம் லிம்ஃபாடிக்ஸ், செல்லுலார் டிஸ்யூ அண்ட் சைனோவில் மெம்பிரேன்ஸ். இது ரைட் சைடு ரெமடி ஹார்ட் பேஷன்ட் தெர்மலி ஹார்ட். இதனுடைய மொடாலிட்டி எடுத்துட்டீங்கன்னா, லீஸ்ட் மோஷன் அக்ரவேஷன் எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு மொடாலிட்டி. ரைசிங் அப் எந்திரிச்ச உடனே பிரச்சனையா ஆயிரும். ஸ்டூப்பிங் அப்படிங்கறது பிரியோனியாவோட முக்கியமான மொடாலிட்டி. காஃபிங், எக்ஸர்ஷன் இதெல்லாம் அக்ரவேஷன். டீப் பிரீதிங் அக்ரவேஷன். டிரை கோல்ட் ஆர் ஹீட் இதுவும் அக்ரவேஷன். பிகமிங் ஹார்ட் இன் ரூம். ஹார்ட் வெதர், டிரிங்கிங், ஈட்டிங் அக்ரவேஷன், வெஜிடபிள்ஸ் அக்ரவேஷன். ஏர்லி மார்னிங் அக்ரவேஷன். பெட்டர்னு எடுத்துட்டீங்கன்னா பிரஷர் அமலிரேஷன். லேயிங் ஆன் பெயின்ஃபுல் பார்ட்ஸ். பேண்டேஜஸ், கூல் ஓபன் ஏர், குயிட்டா இருக்குறது, க்ளவுடி வெதர் அண்ட் டாம் டேஸ். இதெல்லாம் வந்து பெட்டரா இருக்குறது. டிராயிங் நீஸ் அப் இதுவும் பெட்டர். ஹீட் டு இன்ஃப்ளேம்டு பார்ட்ஸ் ஹீல்ஸ் பெட்டர். டிசண்டிங் இறங்கும்போது வலி அதிகமாகும். சிட்டிங் அப் கோல்ட் ஃபுட் அண்ட் டிரிங்க்ஸ் வந்து அமலிரேஷன். இதுதான் வந்து அதனுடைய மொடாலிட்டி. அடுத்து நம்ம பார்க்க வேண்டியது அதனுடைய கீ நோட் சிம்டம் என்ன அப்படிங்கிறத பார்க்கணும். கீ நோட் எடுத்துட்டீங்கன்னா. ஃயர் ஆஃப் பாவர்ட்டிங்கிறது அதனுடைய கீ நோட். அது மைண்ட் சிம்டத்திலயே நம்ம பேசியிருக்கோம். டாக்ஸ் கண்டினியூஸ் அபௌட் பிசினஸ். கான்ஸ்டன்ட் ஒரியிங் அபௌட் மணி. இதுதான் பிரியோனியாவுடைய டிரேட் மார்க். இரிட்டபிலிட்டி வென் டிஸ்டர்ப் வாண்ட்ஸ் டு பி லெட் அலோன். இது ஒரு கீ நோட். வார்ம் பிளட்டட் பீப்பிள், வார்ம்த் அண்ட் சம்மர் அக்ரவேஷன், கூல் ஓபன் ஏர் அண்ட் கோல்ட் டிரிங்க்ஸ் வந்து அமலிரேஷன். எய்ல்மெண்ட்ஸ் ஃப்ரம் சில்லிங் வென் ஓவர்ஹீட்டட். வென் வார்ம் வெதர் ஆக்ட்ஸ் செட்ஸ் இன் ஆஃப்டர் கோல்ட் டேஸ். டைஜெஸ்டிவ் டிரபுள்ஸ் ஃப்ரம் பீன்ஸ், கேபேஜ், பிரட் இது எல்லாமே இருக்கு ஃப்ளாட்டலன்ட் ஃபுட். மோஷன் அக்ரவேஷன், ரெஸ்ட் அண்ட் வென் குயட் அமலிரேஷன், பிரஷர் அமலிரேஷன். லேயிங் ஆன் பெயின்ஃபுல் சைட். எக்ஸசிவ் டிரைனஸ் ஆஃப் மியூகஸ் மெம்பிரேன். உதட்டிலிருந்து ஏனஸ் வரைக்கும் டிரைனஸ் இருக்கும். அடுத்து தர்ஸ்ட் ஃபார் லார்ஜ் குவாண்டிட்டிஸ் ஆஃப் கோல்ட் வாட்டர். குடிச்சிக்கிட்டே இருப்பாங்க தண்ணி. தாகம் தீராது. ஸ்ட்ரெட்சிங் பெயின், கட்டிங் பெயின், ஸ்டாப்பிங் பெயின், பிச்சிங் பெயின் இது எல்லாமே பிரியோனியாவுக்கு உண்டு. வெட் வெதர் அமலிரேஷன், பர்ஸ்பிரேஷன் அமலிரேஷன். வேர்த்தா நல்லா இருக்கும், டார்க்கு வேர்க்கும். பிசினஸ் பீப்பிளுக்கு தான் வேர்க்கும். வேலை செஞ்சுட்டு இருக்கவங்களுக்கு தான் வேர்க்கும். அதனால உங்களுக்கு வேர்வை வந்து இதமாக இருக்கும். வலிகள் வந்து சில சமயம் பர்ஸ்டிங், ஸ்பிளிட்டிங் ஆர் ஹெவி கிரஸிங் ஹெட்டேக் இருக்கும். டிரை வெரி பெயின்ஃபுல் காஃப். இப்ப நம்ம பிரியோனியாவோட கேசஸ் பார்த்தா கொஞ்சம் நல்லா இருக்கும். இதுல குறிப்பாக நர்சிங் வுமன் இருக்காங்க பாருங்க, அவங்களுக்கு மிக முக்கியமான மருந்தாக பிரியோனியா இருக்கு. இந்த பால் கட்டிக்குதுன்னு சொல்லுவாங்க பாருங்க மேஸ்டைடிஸ். பால் வந்து கட்டிக்கும் அப்படியே பார்த்தீங்கன்னா ரெட் கலராக பியூர் ரெட் இல்ல கொஞ்சம் அப்படியே இன்ஃப்ளேம் ஆன மாதிரி இருக்கும். அதனால ஃபீவர் கூட வரும் மில்க் ஃபீவர் மாதிரி வரும் பெல்லடோனால இருக்கு இல்ல அது போல மில்க் ஃபீவர் கூட வரலாம். இப்படி ஒரு கேஸ் நான் இப்ப பிராக்டிஸ் பண்ணிட்டு இருக்க ஆரம்பத்துல இருந்த நிலை. அவங்க வீட்டை விட்டு வெளியே வர முடியலை. ஏன்னா அவங்களால நடக்க கூட முடியலை. பிரஸ்ட்டை பிடிச்சுக்கிட்டே இருக்க வேண்டியது இருக்கு. பிரஸ்ட்டை வந்து ரெண்டு கையாலும் பிடிச்சுக்கிட்டே இருக்க வேண்டியதா இருக்கு. படிக்கட்டுல இறங்க முடியாது, நடக்க முடியாது. சின்ன அதிர்வு கூட வலிக்குது. போன உடனே என்ன மாதிரி வலிக்குது, ஹெவினஸ்ஸா இருந்தது. டெலூஷன் பாடி பார்ட்ஸ் ஆர் ஹெவி பிரஸ்ட் அப்படின்னு எடுத்துட்டீங்கன்னா பிரியோனியா மிக முக்கியமான மருந்து. ஏற்கனவே இந்த மில்க், பால் வந்து கட்டிக்கிறது, நர்சிங் உமனுக்கான மருந்து பிரியோனியா அப்படிங்கிறது தெரியிறதுனால, லீஸ்ட் மோஷன் அக்ரவேஷன் இருப்பதனால, நான் வந்து பிரியோனியா தான் கொடுத்தேன். 30ல அப்ப வந்து 30 கொடுத்து பிராக்டிஸ் இருக்கிறதுனால 30 கொடுத்தேன். அவங்களுக்கு வலிகள் படிப்படியாக குறைஞ்சு அடுத்த நாளே கன்சிடரபிளாக வலி வந்து குறைஞ்சிருச்சு. டூ டேஸ்ல பார்த்தீங்கன்னா நார்மல் சைஸுக்கு பிரஸ்ட் வந்துருச்சு. பெயின் எதுவுமே இல்லை, அந்த இன்ஃப்ளமேஷன் எதுவுமே இல்லை. இதுதான் பிரியோனியாவை நம்ம புரிந்து கொள்ளக்கூடிய விஷயம். இன்னொரு கேஸ் இவருக்கு வந்து ரிங் வார்ம், கிராயின் ஏரியால இருக்கு. இவர் வந்து இடியாப்பம் விக்கிறவர். இவருடைய வேலையே எப்படின்னா காலையில இடியாப்பம் எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டு வைஃப்ட உதவியுடன் ரெடி பண்ணிட்டு அதை எடுத்து ஒவ்வொரு வீடாய் போய் விக்கப் போயிருவாரு. வித்துட்டு காலையில ஏர்லி மார்னிங் ஏழு டூ எட்டுக்குள்ள வித்துட்டு எட்டு எட்டரைக்குள்ள வித்துட்டு திருப்பி வந்து திருப்பி இடியாப்பம் செஞ்சுட்டு திருப்பி போய் விக்கப் போயிருவாரு. இதுபோல ஈவினிங் இதே மாதிரி செய்வாரு, நைட்டும். ஒரு நாளைக்கு நாலு டைம் இந்த மாதிரி ரவுண்ட்ல இருப்பாரு. அவங்க வைஃப் சொல்லுவாங்க ஏன் உடம்பை கெடுத்துக்கிறீங்க. ஒரு தடவை காலையில ஒரு தடவை, நைட்டு ஒரு தடவை வித்தா போதாதா? ஏன் ரெண்டு தடவை போறீங்க அப்படின்னா, எனக்கு வேலை செய்யாமல் இருக்க முடியாது, எனக்கு சம்பாதிக்காமல் இருக்க முடியாது. நான் எப்பொழுதுமே பிஸியா இருக்கணும். அந்த வார்த்தை ரொம்ப முக்கியம் பிஸிங்கிறது பிரியோனியால கீ நோட். பிஸியா இருக்கணும். எப்பொழுதும் நான் வேலை பார்த்துகிட்டே இருக்கணும் அப்படின்னு சொல்ற ஒரு சுபாவம் உள்ளவர். இதெல்லாம் என்கிட்ட வந்து சொல்றாரு. அவருக்கு வந்து நான் பிரியோனியா தான் கொடுத்தேன். ரிங் வார்மே பிரியோனியால கேட்குதுன்னா பாருங்க. மேக்சிமம் பிரியோனியா அதிகமாக கேட்காது. இந்த ரிங் வார்முக்கு என்னைப் பொறுத்தவரைக்கும் அதிகமாக கேட்காது. திருப்பி வந்து சில சமயம் வந்து ரிலாப்ஸ் ஆச்சுன்னா ரிங் வார்ம் நோசோட் கொடுப்பேன். கொடுத்துட்டு அப்புறம் பிரியோனியா கொடுத்தோ இல்ல வேற மருந்து எதும் கொடுத்தாலும் அழகாக பெர்மனன்ட் க்யூர் கிடைச்சிரும். ஆனால் இந்த கேஸ்ல வெறும் பிரியோனியா தான் கொடுத்தேன். நோசோட் எதுவுமே கொடுக்கல. கம்ப்ளீட் க்யூர் ஆயிருச்சு. இது பிரியோனியா எப்படி ரிங் வார்ம்ல ஒர்க் ஆனதுக்கான அடிப்படை. இந்த அடிப்படையை நான் வந்து பிசிக்கல் சிம்டத்துல இருந்து எடுக்கல. மெண்டல் சிம்டத்துல இருந்து எடுத்தேன். அப்புறம் இன்னொரு பேஷன்ட் என்னன்னா தலைவலி. வலி வரும் போதெல்லாம் அப்படியே தலையை அப்படியே பிடிச்சுக்குவாரு. அது குறிப்பாக வந்து எப்படின்னா கண்ணை திறக்கவே முடியலைங்கிறாரு. க்ளோசிங் ஐ அமலிரேஷன். எப்படி தலை வலிக்குது அப்படின்னு கேட்டா கின்னுன்னு இருக்கு அப்படின்னு சொல்றாரு. கின்னுங்கிற வார்த்தையை நமக்கு ஆம்பிகியஸ் வேர்ட். அது நம்மளால் புரிஞ்சுக்க முடியாது. அது வந்து பொதுவாக சாதாரண மனிதர்கள் பேசக்கூடிய ஒரு வார்த்தை. அது ஒரு மெடிக்கல் டெர்மாக எடுத்துக்க முடியாது. கின்னுன்னா என்ன மாதிரி இருக்குன்னு திருப்பி கேட்டபோது, ரத்தம் எல்லாம் அங்க போய் அப்படியே ஃபுல்லா அடைச்சிருக்கு சார்ங்கிறார். இப்ப ஃபுல்னஸ் ஆஃப் ஃபோர்ஹெட். நெத்தி ஃபுல்லா இருக்கிறதுங்கிறதை புரிந்து கொண்டு தலையை கூட இப்படி ஆட்ட முடியலை சார். சின்ன அசைவு கூட செய்ய முடியலை. கண்ணை மூடிக்கிட்டு அப்படியே படுத்துட்டு இருந்தா நல்லா இருக்கு. குயட் வாண்ட்ஸ் டு பி. லீஸ்ட் மோஷன் அக்ரவேஷன். இந்த ஃபுல்னஸ் ஆஃப் ஃபோர்ஹெட் இதை மூணையும் வச்சுக்கிட்டு நான் பிரியோனியா கொடுத்து அந்த பேஷன்ட்ட சரி பண்ணேன். இன்னொரு கேஸ் இது எப்படின்னு பார்த்தீங்கன்னா அவருக்கு வந்து இருமல் அதிகமாக இருக்கும். இரும்பும்போதெல்லாம் பெயின் அதிகமாகும். டிரை காஃப் அண்ட் ஹார்ட் வறட்டு இருமல். கொடூர இருமல்னு சொல்லுவாங்க இல்லையா அந்த மாதிரின்னு வச்சுக்கோங்க. ஆனால் தண்ணி குடிச்சாலோ சாப்பிட்டாவோ இருமல் அதிகமாகும். பாருங்க இந்த கேஸ் பாருங்க எப்படி இருக்குன்னு பாருங்க. அவருக்கும் எப்படின்னா எப்படி இருந்தா நல்லா இருக்கும்னு கேட்டா, சார் படுத்தா நல்லா இருக்கு, நிம்மதியா இருக்கு. அதே மாதிரி உட்கார்ந்தாலும் நல்லா இருக்கு. ஆனால் அசையவே கூடாது. ஒரு ஈஸி சேர்ல உட்கார்ந்தா எப்படி இருக்கும் அப்படி உட்கார்ந்தால் நல்லா இருக்கும். ஆனால் என்னால படுக்க முடியலை சார். படுத்தா இருமல் வந்துருது. எந்திரிச்சு உட்கார வேண்டியதா இருக்கும். காஃப் கேஸ்லயே நான் வந்து இந்த கீ நோட் சிம்டத்தை தான் மையமாக எடுத்து நான் வந்து பிரியோனியா கொடுத்தேன். அவருடைய லைஃப் சிச்சுவேஷன் எதுவுமே பார்க்கல. அவர் பிசினஸ் லைக்கா இருக்காரு. மணி லைக்கா இருக்காரு. சேஃப்டி அண்ட் செக்யூரிட்டியை பார்க்கிறாரு எதுவுமே பார்க்கல. வெறும் கீ நோட்டை மட்டும் எடுத்துட்டு நான் மருந்து கொடுத்தேன். அற்புதமாக பிரியோனியா உதவியா இருந்துச்சு. நான் சிக்ஸ்ல பொட்டன்சியில கொடுத்தேன். இன்னொரு லேடி அவங்களுக்கு இடுப்பு வலி லம்பாகோ. எப்படிமா வலிக்குது அப்படின்னு கேட்டா, அவங்க சொல்ற குத்துற மாதிரி வலிக்குதுங்கிறாரு. பிரியோனியாவோட மிக முக்கியமான ஒரு சென்சேஷன் வந்து ஸ்ட்ரெச்சிங் பெயின். என்ன செஞ்சா பெட்டரா இருக்கு அப்படின்னு கேட்டா, சார் படுத்திருந்தா நல்லா இருக்கு, படுத்து திரும்ப முடியலை. படுத்திருந்தா உட்கார்ந்துட்டு அப்புறம்தான் நான் திரும்ப முடியும். அப்படியே திரும்ப முடியலை அப்படின்னு சொன்னாங்க. இந்த ஒரே ஒரு கீ நோட்டை மட்டும் வச்சுக்கிட்டு, அந்த ஸ்ட்ரெச்சிங் பெயின்ங்கிற சென்சேஷன் எடுத்துட்டு நான் பிரியோனியா கொடுத்தேன். பிரியோனியா கொடுக்கும்போது அவங்க நார்மலாக அந்த பெயின் எல்லாம் போய் நல்லா ஆயிட்டாங்க. அக்யூட் டிசீஸ்ல எப்படின்னா பிரியோனியா வந்து பெல்லடோனா, அக்குனைட் மாதிரி இருக்காது. அப்படியே சடன் ஆன் செட் அப்படியே டிக்லைன். அந்த இன் பிட்வீன் பீரியட் இருக்கு பாருங்க டிக்லைன் அண்ட் அசண்டிங். அந்த இடத்துல வந்து வயலன்ட் பெயின்ட் இருக்கும். இது பெல்லடோனா அண்ட் அக்குனைட். பிரியோனியா எப்படி இருக்குன்னா ஸ்லோ ஆன் செட் அப்படியே போயிட்டே இருக்கும். அப்படியே போயிட்டு இருக்கும். அது வந்து குறையிறதுங்கிறது இருக்காது. அப்படியே போய் மோசமான ஒரு நிலைக்கு போயிரும். இதுதான் பிரியோனியாவுடைய ஃபேஸ்.
[22:24]அதனுடைய வேகம். அது அப்படித்தான் நோய் நிலையை உண்டாக்கும். இதுலதான் பெல்லடோனாவுக்கும் அக்குனைட்டுக்கும் பிரியோனியாவுக்கும் உள்ள வித்தியாசம். இன்னொரு கேஸ் அந்த லேடிக்கு வந்து காலையில் எந்திரிச்ச உடனே மூக்குல ரத்தம் வரும். இது எப்பப்பல்லாம் நடக்கும் அப்படின்னு சொன்னா எப்பப்பல்லாம் மென்சஸ் வரலையோ அப்பப்பல்லாம் மூக்குல ரத்தம் வரும். அதாவது இன்ஸ்டெட் ஆஃப் மென்சஸ் எபிஸ்டாக்சிஸ் மூக்குல இருந்து அப்படியே ரத்தமா வரும். அது காலையில எந்திரிச்சா அதிகமாகும். இதை வச்சுதான் அவங்களுக்கு பிரியோனியா கொடுத்து சரி ஆச்சு. அவங்க இந்த பிசினஸ் அது இதுதெல்லாம் எதுவுமே பேசல. வெறும் இந்த கீ நோட்டை மட்டும் வச்சு மருந்து கொடுத்திருக்கேன். இன்னொரு மிக முக்கியமான ஒரு கேஸ் என்னன்னா ஆப்ஸஸ் இன் மேமய். ஃபைபுரோ அடினோமயசிஸ், மாஸ்டைடிஸ் இருக்கு பாருங்க மில்க் செக்ரீஷன் ஆகி அப்படியே வந்து பால் கட்டிக்குது பாருங்க. அது வந்து ஹார்ட் ஸ்டோனி ஸ்வெல்லிங் இருக்கும். அப்படியே கல்லு போல ஆயிரும். ஆனால் இந்த ஆப்ஸஸ் வந்து இங்க ஃபைபுரோ அடினோமாவாக இருக்கட்டும், பெனின் டியூமரா இருக்கட்டும் பிரஸ்ட்ல அது கொஞ்சம் அப்படியே நகரற மாதிரி இருக்கும். அவ்வளவு ஹார்ட்டாக இருக்காது. இப்படி ஒரு கேஸ்க்கு பிரியோனியா கொடுத்திருக்கேன். இது வந்து பேனர்ஜி ப்ரோட்டோக்கால்ல இருந்து எடுத்து நான் கொடுத்திருக்கேன். தொடர்ந்து ஒரு 15 நாள் கம்ப்ளீட்டாக கொடுத்துட்டு அப்படியே நிப்பாட்டிட்டேன். டெய்லி ஒரு டோஸ் 30ல ஒரு 15 நாள். அப்படியே நிப்பாட்டிட்டேன். நிப்பாட்டிட்டு அவர் வந்து ஒரு மன்த்துக்கு கொடுக்க சொன்னாரு. நான் 15 நாளோட நிப்பாட்டிட்டேன். அடுத்த ரெண்டு மாசம் கழிச்சு பார்க்க சொல்லும்போது அவங்களுக்கு அந்த பிரஸ்ட் ஸ்வெல்லிங்கே இல்லை. அந்த ஆப்ஸஸே இல்லை. ஸ்கேன் எடுத்து பார்த்தபோது சுத்தமாக அந்த ஆப்ஸஸே இல்லாம போயிருச்சு. அதனால ஃபைபுரோ அடினோமாவுக்கும் கூட நாம இதை பயன்படுத்தலாம் பிரியோனியா இனிஷியல் ஸ்டேஜ்ல. நான் பார்த்ததிலேயே பிரியோனியா வந்து ஒரு காம்ப்ளிகேட்டட் கேஸ்ல நான் கொடுத்திருக்கேன். அது வந்து ப்ளூரசி. இந்த ப்ளூரஸில வந்து அவங்க ரொம்ப வித்தியாசமான சிம்டம்கள் எல்லாம் சொன்னாங்க. ஏற்கனவே நான் சொன்ன மாதிரிதான் அவங்களுக்கு வந்து டீப் பிரீத் எடுக்கணும்னு நினைப்பாங்க. எடுத்தா நல்லா இருக்கும்னு நினைப்பாங்க. ஆனால் டீப் பிரீத் எடுத்தா காஃப் வந்துரும். படுக்கணும்னு நினைப்பாங்க, படுத்தா வந்து அதிகமாகும். எந்திரிச்சு உட்கார வேண்டியது வந்துரும். அதேபோல ஸ்டூப்பிங் முன்னாடி இப்படி குனிஞ்சா இருமல் அதிகமாகும். தண்ணி குடிச்சா, சாப்பிட்டா இருமல் அதிகமாகும். கீ நோட் எல்லாமே பிரியோனியால உள்ள எல்லா கீ நோட்டும் வந்து ப்ளூரஸியா நிக்குது. இந்த கேஸ்ல வந்து நான் எந்த வகையான மைண்ட் சிம்டத்தையும் பார்க்காம டைரக்டாக இது ப்ளூரசி கேஸ்னு தான் தெரிஞ்சது. ஏன்னு கேட்டா இந்த செஸ்ட் அப்படியே பிடிச்சுக்கிறாங்க. ஏங்க அப்படி பிடிச்சிருக்கீங்கன்னா அது தொங்குனா வலிக்குதுங்கறாங்க. இரும்புனா சின்ன அதிர்வு வந்தா கூட அப்படி வலிக்குதுங்கிறாரு. வேற எதுவும் யோசிக்கல. பிரியோனியா சிக்ஸ்ல கொடுத்தேன். நல்லா கன்சிடரபிளாக குறைஞ்சது. அதுக்கு அடுத்து பாத்தீங்கன்னா 15 நாள் கழிச்சு 100 தடவை ஒரு டோஸ் கொடுத்தேன். அதுக்கு அடுத்து ஒரு இன்னொரு 15 டேஸ் கழிச்சு ஒரு டோஸ் கொடுத்தேன். மொத்தம் மூணு டோஸ்ல நல்லா நார்மலாகி ப்ளூரசி இல்லாம போயிட்டாரு. இது ஒரு கம்ப்ளீட் க்யூர் கேஸ். மார்னிங் எந்திரிச்ச உடனே அவங்களுக்கு அதிகமாகும். அதேபோல ஒரு கேஸ் கொடுத்திருக்கேன். ஃபர்ஸ்ட் வந்து டயரியா வருது. அந்த கேஸ்ல பார்த்தீங்கன்னா காலையில எந்திரிச்ச உடனே அவருக்கு டயரியா வரும். நம்ம என்ன பண்ணுவோம் ஆலோஸ் கொடுப்போம், சல்பர் கொடுப்போம். அப்படித்தான் நானும் சல்பர் ஃபர்ஸ்ட் கொடுத்தேன். அப்புறம் அவருடைய மைண்ட் சிம்டத்தை எடுத்து பார்த்தா பிசினஸ் லைக்கா இருந்தது. இங்க கீ நோட்ல பார்த்தீங்கன்னா ஆன் ரைசிங் டயரியால பார்த்தீங்கன்னா பிரியோனியா இருக்கும். இப்ப பிரியோனியா கொடுத்த உடனே அரெஸ்ட் ஆயிடுச்சு. அப்புறம் இன்னொரு கேஸ்ல வந்து கான்ஸ்டிபேஷன் கேஸ். ஸ்டூல் வந்து ரொம்ப ஹார்ட், டிரை. அவங்க வந்து எப்படி சொல்றாங்கன்னா, ஒரே வறட்சியா இருக்கு அப்படிங்கறாங்க. அதாவது இந்த டிரைனஸ் ஆஃப் மியூகஸ் மெம்பிரேன் பாருங்க அதனுடைய கழிவை கூட வந்து டிரை ஆக்கிடும். ஆக்சுவலா வந்து அசிஃப் பர்ண்டுன்னு அவங்க சொல்ல வேண்டிய வார்த்தை அவங்களால அதை சொல்ல தெரியல. தீஞ்ச போல வந்திருக்கு அப்படின்னு சொல்லி சொல்ல முடியாது அவங்களால. அப்படி சொல்றதுக்கான அந்த மொழி வராது கரெக்டா. ஆனால் அது நம்ம ஹோமியோபதியில டாக்டர்கள் ப்ரூவிங்ல இருந்ததுனால அந்த வார்த்தை வந்திருக்கு. அதை நோட் பண்ணிருக்காங்க கீ நோட்டாக. நாம இப்படித்தான் புரிஞ்சுக்க முடியும். அவங்க டிரைங்கிற வார்த்தையை தான் சொல்லுவாங்க. அவ்வளவு வரட்சியாக, ஹார்ட்டாக, பெரிய ஸ்டூலாக ரொம்ப கஷ்டப்பட்டு வெளியே வர வேண்டியதா இருக்கு. முக்கியமா பார்த்தது என்னன்னா இந்த உதடு எல்லாமே வந்து வரட்சியாக இருக்கு. லிப்ஸ் எல்லாம் அப்படியே உரிச்சு விட்டுருக்காரு. இதையும் பார்த்தேன். எங்க பண்ணதுன்னா சார் தண்ணி தாகம் அதிகமாக எடுத்து எப்ப பார்த்தாலும் வரட்சியாக இருக்கு. இங்கிருந்து இது வரைக்கும் வரட்சியாக இருக்கு. நமக்கு ஈஸியா வந்துருச்சு கேஸ் பிரியோனியா. பிரியோனியா கொடுத்து தான் அது சரி ஆச்சு. இப்படி பிரியோனியாவை பத்தி நம்ம ஃபுல்லாக படிச்சுக்கலாம்.



