[0:00]பாண்டிய நாட்டில் உள்ள ஒரு சிற்றரசன் முத்தமிழ். அவருக்கு புதுசா தென்னந்தோட்டம் அமைக்க ரொம்ப ஆசையா இருந்துச்சு. அரண்மனைக்கு பக்கத்திலேயே உள்ள நிலத்தை பயன்படுத்தி புதுசா நிறைய தென்னை மரங்களை நட்டாரு. தென்ன மரங்களை பாதுகாக்க அரண்மனையில சேவகனா வேலை செஞ்ச சிவம்ன்ற காவலனை பணியில அமர்த்துனாரு. சிவம் நல்ல வேலைக்காரனா இருந்தாலும், அவன் ஒரு முட்டாள். இரவு பகலா அந்த தோட்டத்தை காவல் காத்த சிவம் ஒரு நாள் சோர்வடைஞ்சுட்டான். தென்னை மரங்களை பத்திரமா பாத்துக்கிறதுதானே என்னோட வேலைன்னு யோசிச்ச சிவம் எல்லா மரங்களையும் புடுங்கி தன்னோட வீட்டுக்கு எடுத்துட்டு போயிட்டான். தென்னை மரங்களை பார்வையிட வந்த அரசருக்கு நடந்த நிகழ்ச்சியை கேட்டு ஆச்சரியமாவும் சிரிப்பாவும் இருந்தது. யாருக்கு என்ன வேலை கொடுத்தா நல்லபடியா முடிப்பான்னு தெரியாம உன்கிட்ட வேலை கொடுத்தது என்னோட தப்புதான் நினைச்சாரு அரசர். இதைதான் திருவள்ளுவர் இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல் என்றார். இதன் பொருள் ஒரு காரியத்தை ஒருத்தர் எப்படி செஞ்சு முடிப்பான்றத தெரிஞ்சுகிட்டு அவர்கிட்ட அந்த காரியத்தை ஒப்படைக்கணும்.

Thirukural short story tamil |திருக்குறள் கதை #thirukkural #thiruvalluvar #storiesforkids
StOrY wItH sUhA
1m 1s116 words~1 min read
Auto-Generated
Watch on YouTube
Share
MORE TRANSCRIPTS


