Thumbnail for MIASMS-மயாசங்கள்-01# திறன் வளர்ச்சிக்கான ஒரு ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல் # டாக்டர் சரவணகுமார்-மதுரை by LANGUAGE OF HOMOEOPATHY

MIASMS-மயாசங்கள்-01# திறன் வளர்ச்சிக்கான ஒரு ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல் # டாக்டர் சரவணகுமார்-மதுரை

LANGUAGE OF HOMOEOPATHY

22m 5s2,462 words~13 min read
Auto-Generated

[0:09]மியாசத்தை பத்தி பேசுவோம். மியாசம்ங்கறது போன டிஸ்கஷன்ல பாண்டுரங்கன் சார் வந்து அது இட் இஸ் எ பேஸ் அப்படின்னு சொன்னாரு. அதுக்கு ஒரு ஜியோகிராபி, டோபோகிராபி இந்த மாதிரி வாழ்க்கை முறை இது எல்லாமே அவர் குளிட்டு காட்டினாரு. சாந்தி மேடம் என்ன பண்ணாங்கன்னா ரியாக்ஷன் பத்தி பேசினாங்க. ரியாக்ஷன் தான் மியாசம் அப்படிங்கறத கோட்டிட்டு காட்டுனாங்க. அதுக்கு உதாரணமாக ஸ்ரீதரன் சார் சில எக்ஸாம்பிள்ஸ் எல்லாம் சொன்னாரு. இது போக வந்து நம்முடைய இதை அப்லோட் பண்ணி இருந்தபோது வாட்ஸ்ப்லயும் சில டிஸ்கஷன் நடந்துச்சு. அது இன்னைக்கு திருமூலர் வரைக்கும் நின்னுட்டு இருக்கு. இப்ப இது எல்லாமே சிறப்பானது. இதுல யாரையும் யாரையும் குறை சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அவங்கவங்க கருத்தை அவங்கவங்க படித்ததை அவங்கவங்க பரிமாறுகிறாங்க. இதுல எல்லாமே சரியாக தான் இருக்கிறதாக நான் நம்புறேன். ஆனால் நாம என்ன பண்ணனும்னு சொன்னா என்னதான் ஹனிமன் சொல்லி இருக்காருங்கறத நம்ம பார்க்கணும். அதை பார்க்க தவறீட்டோம்னு வச்சுக்கோங்க, அப்புறம் மியாசத்தை புரிந்து கொள்ள முடியாம போயிரும். திருப்பி என்ன பண்ணிரும்னா நம்ம மூணு குணாதிசயத்துக்குள்ள தான் மியாசம் இருக்குது. தமஸ் குணம், சாத்விக் குணம், ரஜோ குணம் இதுக்குள்ள தான் மியாசத்தை சொல்லி இருக்காங்க. ஃபைவ் எலிமென்ட் குள்ள தான் மியாசத்தை சொல்லி இருக்காங்க. இது போல பல்வேறு கருத்துக்கள் கோட்பாடுகள் எல்லாமே வருது. இது எல்லாம் வெளிய இருந்து தான் படித்த சேகரித்த விஷயங்களை இதுல பொருத்தி பார்த்து சொல்லுவது. ஆனால் கிரானிக் டிசீஸை நம்ம படிக்கிறது இல்லை. ஆர்கனான நம்ம பார்க்கிறது இல்லை. அப்படி பார்த்தாலும் படிக்கிறது இல்லை. நமக்கு தெரிந்த விஷயத்திலிருந்து நாம பேசிறோம். இது நல்லதா கெட்டதா என்ற விவாதத்துக்கு நான் போகல. ஆனால் இது ஒரு வகையில் ஆரோக்கியமான ஒரு விவாதத்தை நோக்கிப் போகுதுங்கிறதுல சந்தேகம் இல்லை. நாம இப்ப என்ன பண்ணுவோம்னா ஹனிமன் என்னதான் மியாசத்தைப் பத்தி பேசி இருக்காரு. அப்படிங்கிற ஒரு கோடிலிருந்து தொடங்குறது நல்லதாக இருக்கும்னு நான் நம்புறேன். அவர் கிட்டத்தட்ட என்ன பண்றாருன்னா எல்லா சிம்டத்தையும் சேகரித்து அதுல இருக்கிற அந்த கேரக்டர்ஸ்டிக் சிம்டத்தை எல்லாம் டோட்டாலடி ஆக்கி மருந்து கொடுத்து பார்த்தா குணமாகுது. பல்வேறு கேஸ்ல பல்வேறு கேஸ்ல ஃபெயிலியர் ஆகுது. இல்லனா குணமாயிட்டு திருப்பி திருப்பி வருது. இது எதற்குன்னு சொல்லி தான் ஆய்வு பண்றாரு. அப்படி ஆய்வு பண்ணும்போது வெறும் சிம்டங்கள் மட்டும் பத்தாது. கலெக்ஷன் ஆஃப் சிம்டம் மட்டும் பத்தாது. வெறும் கேரக்டரிஸ்டிக் டோட்டாலிட்டி மட்டும் எடுத்து வச்சிட்டு மருந்து கொடுத்தா பத்தாது. அதை தாண்டி ஏதோ ஒரு பண்டமெண்டலா ஒன்னு இருக்கு. அப்படின்னு சொல்றாரு. சோ தேர் இஸ் எ பபண்டமெண்டல் காஸ் இருக்கு அப்படின்னு சொல்றாரு. அதுதான் ஆல் த பீனி அப்படின்னு சொல்றாரு. தமிழ்ல ஒரு நல்ல வார்த்தை பிணி நோக்காடுனு சொல்லுவாங்க பாத்தீங்களா ஆல் த பிணி பல நாட்களாக இருக்கிற ஒரு பிணி. அது இருக்கிறதாக அவர் சொல்றாரு. அந்த பண்டமெண்டல் காஸை நம்ம தெரிஞ்சுக்கிட்டா தான் குணமாக்க முடியும்ங்கறதுனால அந்த பண்டமெண்டல் காஸை கண்டுபிடிப்பதற்கு தான் அவர் 12 வருஷம் போராடி இருக்காரு. இந்த பண்டமெண்டல் காஸ் என்னங்கறது தான் நாம இங்க டிபேட்டாக பேசிட்டு இருக்கோம். அந்த வகையில பாண்டுரங்கன் சார் வந்து அது ஒரு பேஸ் அப்படின்ற வார்த்தையை பயன்படுத்திருக்காரு. எல்லாத்தையும் நாம் பாசிட்டிவா பேசி பழகணும். அந்த அர்த்தத்துல தான் அவர் என்ன அர்த்தத்துல சொல்லியிருக்காருங்கறத நம்ம எடுத்துக்க வேண்டாம். அவர் சொன்னதை இங்க ஒப்பிட்டு பார்க்கும் போது சரியாக இருக்கும். அதே மாதிரி ரியாக்ஷன் பேட்டன் தான் காரணம் அப்படின்னு மேடம் சொல்றாங்க. அப்ப ரியாக்ஷன்கிறது என்ன? ஏதோ ஒன்றிலிருந்து தான் வர்றது. ரியாக்ஷனுக்கு முன்னாடி ஒன்னு இருக்கு. ஆனா ரியாக்ஷன் தான் வெளிப்படுத்தும் எல்லாத்தையுமே. அப்ப ஏதோ ஒன்று பாக்கி இருக்கிற மாதிரி தெரியுது. அப்ப எது. இந்த டிபேட்ல இருந்து தான் நாம பார்க்கணும். நமக்கு தெரியாத விஷயத்தில் இருந்து பார்க்க கூடாது. வாட் இஸ் டிசீஸ்னு கேட்டா இட் இஸ் எடீரேஜ்மென்ட் ஆஃப் வைட்டல் போர்ஸ்ங்குறாரு. ஹனிமன் சொல்றது இட் இஸ் எடீரேஜ்மென்ட் ஆஃப் வைட்டல் போர்ஸ்னு சொல்றாரு. ஃப்த் அபோரிசத்துல என்ன சொல்றாரு? கிரானிக் கேஸ்ல ஃபண்டமெண்டல் காஸை பார்க்கணும்னு சொல்றாரு. அப்ப டீரேஜ்மென்ட் ஆஃப் வைட்டல் போர்ஸ் அப்படிங்கும்போது ஏதோ எனர்ஜி வந்து ஒரு உருமாற்றம் அடைந்திருக்கு. ஒரு மாற்றத்துக்கு உட்பட்டிருக்கு. டீரேஞ்ச் ஆயிருக்கு. அந்த ஆற்றல் தான் என்னன்னு பார்க்கணும். அதுதான் மியாசமா. அப்ப ஆற்றல்னா என்ன? அதைப் பத்தி நமக்கு பேசி ஆக வேண்டியது இருக்கு. ரியாக்ஷன்னா என்ன? அது எங்கிருந்து வருதுங்கறத பேசி ஆக வேண்டியது இருக்கு. வெறும் ரியாக்ஷன் மட்டும் போதுமா? அதுவும் நாம பேசியாக வேண்டியது இருக்கு. அப்ப மியாசம் மட்டும் போதுமா அது கூட ஏதாவது இருக்கா? ஏன்னா அவர் என்ன சொல்றாரு? ஹனிமன் சிம்டத்தை எல்லாம் வச்சு மட்டும் மருந்து எடுத்தா பத்தாது. ஒரு ஃபண்டமெண்டல் காசையும் வச்சுக்கணும். அப்ப ரெண்டும் தேவைப்படுதுன்னு சொல்றாரு. இதனுடைய உன்னத நிலை சிம்டத்தினுடைய உச்சமும் இருக்கு இல்லையா அதையும் பார்க்கணும். மியாசத்தினுடைய உச்சபட்சத்தையும் பார்க்கணும்.

[5:07]இது ரெண்டையும் பார்க்கும் போது தான் இன்றைய காலகட்ட அறிவியல் அடிப்படையில் நம்ம பார்க்கும் போது மட்டும் தான் மியாசத்தை முழுமையாக புரிந்து கொள்ள முடியும் என்று நான் நம்புறேன். இதை ஒட்டி நீங்க பேசுங்க. இப்ப நம்ம வந்து எப்படின்னா இப்படிப் பாருங்க அப்படிப் பாருங்க இந்த மாதிரியான விஷயத்துக்கே போக வேண்டாம். நாம என்னன்னா மியாசத்தை தெரிந்து கொள்வதற்கு நாம என்ன செஞ்சா நல்லா இருக்கும் அப்படின்னு யோசிங்க. ஏன்னா மியாசமே பார்க்காத மருந்தை எடுத்து ரொம்ப பேர் குணமாகி இருக்காங்க. சில சிஸ்டம் சில மெத்தடாலஜி வந்து மியாசத்தையே கண்டுகிறது இல்லை. அவங்களுக்கும் நல்ல ரிசல்ட் கிடைக்குது. மியாசத்த பார்க்கிறவங்களுக்கும் ரிசல்ட் கிடைச்சிருக்கு. மியாசத்தை பார்க்குறவங்களுக்கு தோல்வியும் கிடைச்சிருக்கு. மியாசத்தை பார்க்காதவங்களுக்கும் தோல்வி கிடைச்சிருக்கு. அதனால எது சரியானது எது தப்பானது அப்படிங்கிறதுக்கு பதிலாக ட்ரூத்னு ஒன்னு இருக்கு இல்லையா அதை நோக்கி போகணும் இல்லையா? அதுக்கான முயற்சியில் ஈடுபடுங்கன்னு சொல்றேன். ஹனிமன் என்ன சொன்னார்னா சிம்டம் மட்டும் பத்தாது ஒரு ஃபண்டமெண்டல் காச பார்க்கணும்னு சொல்றாரு. நம்ம இந்த இடத்துல வந்து என்ன பண்ணிடுறோம்னா சிம்டத்தை மட்டும் பார்த்து மருந்து கொடுக்கிறோம். போத் பிசிகல் அண்ட் மெண்டல் சிம்டத்தை மட்டும் பார்த்து மருந்து தர்றோம். சிலவங்க வந்து வெறும் மெண்டல் சிம்டத்தை மட்டும் பார்த்து தர்றாங்க. சக்சஸ் நடக்குது ஃபெயிலியரும் நடக்குது. மியாசத்தை பார்க்கிறதே இல்லை. அவங்களுக்கும் நல்ல ரிசல்ட் கிடைக்குது. இவங்களுக்கும் அதே மாதிரி மியாசத்தை பார்க்கிறவங்களுக்கும் நல்ல ரிசல்ட் கிடைக்குது. அப்ப மியாசங்கிறது என்ன? மியாசத்தை பார்த்தாலும் பார்க்கலனாலும் சில ரிசல்ட் கிடைக்குது. இதெல்லாம் காரணம் என்ன? இந்த மாதிரி கேள்விகளை முதல் உங்களுக்குள்ள எழுப்பிக்கிட்டு ஒரு அனுபவ ரீதியான ஒரு படிப்புக்கு வாங்கன்னு சொல்றேன். திருப்பி நாலேட்ஜை சேகரிக்காதீங்க. அவர் இதை சொல்லி இருக்காரு இவர் இதை சொல்லி இருக்காரு இவர் இதை பண்ணிருக்காரு அதை பண்ணி இருக்காரு இதை பண்ணி இருக்காரு. இப்படியே போவதனால தான் என்ன ஆகுதுன்னா நாம மியாசம்னா என்னன்னே புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். வெறும் நாலேட்ஜை வந்து சேகரிச்சுக்கிட்டே இருக்கிறோம். நமக்கு அனுபவமே வரலையே. இல்லன்னா மெத்தட் சொல்லித்தாங்க டெக்னிக் சொல்லித்தாங்க. நாங்க அதை வச்சிட்டு மருந்து எடுத்துக்கிறோம் அப்படிங்கிற எளிமையான சூத்திரத்துக்கு வர்றோம். இதுல இருந்து மாறுபட்ட ஒரு சிந்தனைக்கு நம்ம வரணும். அதுதான் இந்த கிளாஸ் உடைய நோக்கம். ஸ்ரீதர் சார் வந்து நல்ல லீட கொடுப்பார். ராஜன் சங்கரன் ஒப்பிட்டு நல்ல கருத்துக்களை சொல்லி இருக்காரு. ஆனால் இந்த இடத்துல தொடங்குறதோட இதோட கொஞ்சம் கீழ கீழ் மட்டத்திலிருந்து மேல போனா தான் நல்லா இருக்கும். ஹனிமன் வந்து மியாசத்தை வந்து மூணா சொல்றார். சோரா சைக்கோ சிப்லிடிக். இந்த சோராங்குறது நான் வெனரியல் டிசீஸ் நல்லா பாத்துக்கோங்க. நான் வெனரியல் டிசீஸ். சைக்கோசிஸ் அண்ட் சிப்லிஸ் வந்து வெனரியல் டிசீஸ். இதுதான் ஆரிஜின்னு சொல்றாரு. இங்கிருந்துதான் அவர் பிரிக்கிறார் நோயை. செக்சுவலி ட்ரான்ஸ்மிட்டட் டிசீஸ் ரெண்டு இருக்கு அது சைக்கோசிஸும் ஆர் சிப்லிசிஸும். இன்னொன்னு வந்து செக்சுவலி ட்ரான்ஸ்மிட்டட் டிசீஸ் அல்லாத ஒன்று அப்படின்னு சொல்றார். மொத்தம் மூணுதான் அவர் வைக்கிறாரு. இதுதான் இந்த மியாசத்தினுடைய ஆரிஜின்னு சொல்றாரு. அவர் எடுத்தது பேத்தாலஜில இருந்து எடுத்திருக்காரா நான் பேத்தாலஜில இருந்து எடுத்திருக்காரா? இவ்வளவுதாங்க. இங்கிருந்து தொடங்குங்கன்னு சொல்றேன். ஹோமியோபதினா பேத்தாலஜி பேசக்கூடாதுன்னு ஒரு தியரியை கொண்டு வந்தராதீங்க தயவு செய்து. இப்படி எல்லாம் பேசுவதற்கு ஆள் இருக்காங்க. அவர் எடுத்தது இதுதான். சோராங்கறது எதிலிருந்து எடுத்தாரு ஸ்கேபிஸில் இருந்து எடுத்தாரு. குணரியா இருந்து எடுத்ததுதான் சைக்கோசிஸ். சிபிலிடிக். அந்த இதிலிருந்து எடுத்தது தான் சிபிலிடிக் மியாசம் உள்ள இது. அப்ப குணரியாவிலிருந்து எடுத்ததுனால அது சைக்கோசிஸ் ஆகுது. அப்ப சோரிக்னா என்ன சைக்கோசிஸ்னா என்ன சிபிலிடிக்னா என்ன அப்படின்னு பார்க்கணும். சோராங்கறது அரிப்பு. ஸ்கேபிஸ் என்ன பண்ணும்? உடம்புல பரவிச்சுனா அரிக்க ஆரம்பிச்சிரும். அப்படியே இச்சிங். ஆனால் அது டீப்பர் பேத்தாலஜி உண்டாக்காது. குணரியா ஃபார்ம் ஆச்சுன்னா என்னது கட்டிகள் அதிகமா வர ஆரம்பிச்சிரும். குறிப்பா ஜெனட்டல் ஏரியாவுல அதிகமான கட்டிகள் வர ஆரம்பிச்சிரும். அதுதான் பிற்காலத்துல நமக்கு நம்மல்லாம் பார்க்கிறோம் இல்லையா வாட்ஸ்அப் பார்க்கிறோம். இந்த கட்டி மாதிரி ஒரு வெளிய ப்ரொஜெக்ட் ஆகுது. இது சைக்கோசிஸ் இல்லன்னா லைபோமா இது சைக்கோசிஸ். எது எது ப்ரொஜெக்ட் ஆகி எது எது கீழாய்டு வருது இது சைக்கோசிஸ். எல்லாமே நம்ம சொல்றோம். அடுத்து சிப்லினோம் அப்படிங்கறது டெஸ்ட்ரக்டிவ். அந்த ஜெனட்டல் ஏரியாவுல கிருமிகள் வந்து அந்த டிஸ்யூ எல்லாம் காலி பண்ணிரும். டெஸ்ட்ரக்டிவ் ஆக்கிரும். அழிச்சிரும். இது வந்து சிப்லினோம். சிபிலிடிக் மியாசம் டயபடிக்ல கேங்கரின் உண்டாகுது இல்லையா? லெப்ரசிலும் அப்படியே கால்ல அழுகி போகுது இல்லையா அதெல்லாம் சிபிலிடிக் ட்ரைட் உள்ளது. இது பேத்தாலஜிக்கல் லெவல்ல உள்ள ஒரு அண்டர்ஸ்டாண்டிங் ஆப் மியாசம். பேத்தாலஜி இருக்குன்னு சொன்னா அதுக்கேத்த ஒரு மனசு இருக்கணும் இல்லையா? அதான் ஹையர் லெவல். இம்மெட்டீரியல் லெவல் இது மெட்டீரியல் லெவல். அப்ப அரிப்பு உள்ளவனுக்கு என்ன மாதிரியான மனநிலை இருக்கும்? கட்டி உள்ளவனுக்கு என்ன மாதிரி மனநிலை இருக்கும்? அழுகி டிஸ்யூ எல்லாம் அழுகி டெஸ்ட்ரக்டிவா ஒருத்தனுக்கு மனநிலை என்னவா இருக்கும் அப்படின்னு பார்த்தீங்கன்னா சோரா, சைக்கோ, சிபிலிடிக் புரிந்து கொள்ள முடியும். இது ஆரிஜின் பேஸ் எங்கிருந்து வருதுன்னா பியூர் பேத்தாலஜில இருந்து வருது. இந்த மைக்ரோப்ஸ் மைக்ரோபயாலஜி வர்றதுக்கு முன்னாடியே ஹனிமன் இதைப்பத்தி பேசுறாரு. இதெல்லாம் அவசியமில்லை வெறும் சிம்டத்தை பார்த்துட்டு நாலு மைண்ட் சிம்டத்தை பார்த்துட்டு மருந்து கொடுத்துட்டு போக வேண்டியதுதானே அப்படின்னு உங்க குரல் கேட்குது. ஆனால் இதெல்லாம் தெரிந்து கொள்ளக் கூடிய கடமை கடப்பாடு நமக்கு இருக்கு. இப்ப ஒரு ஆர்கன் சுருங்குது இப்போ சிருசிஸ் ஆஃப் லிவர், சிருசிஸ் ஆஃப் கிட்னி அப்படின்னு சொல்றாங்க. ஒரு ஆர்கன்சுருங்குறது ஹைபர்ட்ரோபினு இருக்கும்போது என்லார்ஜ்மென்ட் ஒரு லிவர் என்லார்ஜ்மென்ட், ஃபேட்டி லிவர் ஹைபர்ட்ரோபி அப்படின்னு சொல்லுவாங்க. இந்த சுருங்குறது ஆர்கன் விரிவடையறது இதைப்பத்தி மியாசத்தை பத்தி பேசலாம். ரெண்டுமே ஒன்னுதான் சார். ஒன்னொன்னா சொல்றேன் நீங்க புரிஞ்சுக்கோங்க. இந்த இடத்துல ஒரு அடிபட்டு இருக்கு கையில. என்ன பண்ணும்? அதுவே இயற்கையாக அதே குணமாக்குவதற்கான எல்லா முயற்சியையும் அது ஈடுபடும். நமக்கு சுத்தி ஒரு அரிப்பு உண்டாகும். அப்படியே தோல் வரும் அப்படியே எல்லா சேஞ்சுகள் நடக்க ஆரம்பிக்கும். அதை மூடிக்கக்கூடிய ஒரு பக்குவ நிலை இருந்துச்சுன்னா என்ன ஆகும்? அது மூடிடும். சின்ன ஸ்காரோட போயிரும் இல்லாட்டி ஸ்கார் இல்லாமலேயே போயிரும். இது வந்து ஒரு சோரிக் நிலை. சும்மா ஆயின்மென்ட் போட்டா போதும் இல்லன்னா எண்ணெய் வச்சா போதும் இல்ல அதே தன்னைத்தானே குணப்படுத்திக்கணும். இதுக்கு பெரிய போராட்டமெல்லாம் இல்லை. அதை பத்திரமா பாதுகாத்துக்கிட்டா போதும். கொஞ்சம் ஆழமாக டெப்தா விழுந்துருச்சுன்னு வச்சுக்கோங்க. அது மூடுவதற்காக போராடி பார்க்கும். முடியாத போது எக்ஸ்ட்ரா சதையை போட்டு மூடும். பச வந்துரும் தானே அதான் தழும்பாக வருது. அது மூட முடியலைன்னா என்ன ஆகுது உள்ளுக்குள்ள அழுக ஆரம்பிக்குது. உள்ளுக்கு வந்து சலம் பிடிக்க ஆரம்பிக்குது. பஸ் பார்மேஷன் அது இது எல்லாம் உண்டாகுது. எதுக்காக இந்த இடத்துல உண்டாகுது? மத்த இடத்துல பரவக்கூடாதுன்னு இங்க உண்டாக்குது. இதுதான் டிஜெனரேட்டிவ் ப்ராசஸ். இதை சரியாக நம்ம பார்க்கலன்னு வச்சுக்கோங்க அது டெஸ்ட்ரக்டிவ் ஆகி அழிஞ்சு போயிரும். அதே மாதிரி லிவர் இருக்கு பாருங்க. லிவர் ஃபங்ஷன் நார்மலா இருந்துச்சுன்னா பிரச்சனை இல்லை. அதை நீங்க ஆல்கஹால் சாப்பிட்டு சாப்பிட்டு சாப்பிட்டு பாத்தீங்கன்னா அப்படியே சுருங்கி போச்சுன்னா என்ன ஆகும்? அதனுடைய செயல்பாடுகள் இழந்துரும். அழுக வேண்டிய அவசியம் இல்லை. அது செயல்பாடுகள் இழப்பது என்பதே ஒரு அழிவுதான் அது ஒரு சிபிலிடிக் ட்ரைட் தான். ஒரு கிளாண்ட் இருக்கு அந்த கிளாண்ட் சொழலை சொழலை ரொம்ப பெருசாகி கடைசில அது என்ன ஆகும்? அதோட பங்க்ஷனை இழந்துரும். முதல் அது வீக்கமா இருக்கும்போது சைக்காடிக்கா இருக்கும். அது வீங்கி வீங்கி வீங்கி என்ன ஆச்சு? உள்ளுக்கு சலம் பிடிக்க ஆரம்பிச்சிருச்சுன்னா டிஜெனரேட்டிவ் ஆயிருது. கடைசில அது எங்க போய் விழும் அழுகல் போய் நின்ரும். சிலவங்களுக்கு அது பெரிய கட்டியோட அப்படியே நின்னுக்கும். இட் இஸ் மோர் ஆஃப் சைக்காடிக். சார் புரிஞ்சுக்கிட்டீங்களா? ஒரு சின்ன கட்டி இருக்கு அந்த கட்டி அப்படியே பெருசாகி பெருசாகி என்ன ஆகும்? அப்படியே பெரிய சைஸுக்கு வந்து கடைசில பார்த்தீங்கன்னா கேன்சர்னுவான். அப்ப என்னன்னா செல்லு வந்து புறல் ஃபெடரேட் ஆகி ஆகி அந்த இடம் பெரிய லெவலுக்கு ஆயிரும். உடம்பெல்லாம் அப்படியே அதிகமான கட்டிகள் வர ஆரம்பிச்சிரும். அதனோட சைஸ் எல்லா இடத்திலயும் பரவ ஆரம்பிச்சிரும். மெட்டாஸ்டாசிஸ் ஆக ஆரம்பிச்சிரும். அப்ப அது என்னது? தன்னுடைய சைக்கோட்டிக் நிலையிலிருந்து சிபிலிடிக் நிலை போயிருச்சுன்னு அர்த்தம். பாண்டுரங்கன் பேசுறேன். பேசுங்க சார். சோரா இருக்கிற ஒரு ஆள் வந்து ஒரு வியாதி வரும்போது டாக்டர் கிட்ட அவரே போவாரு. சைக்கோசிஸ் வரும்போது பாத்தீங்கன்னா அவர் இன்னொருத்தர் கொண்டு போகணும். சிபிலிடிக் இருக்கிறவர் வந்து இல்லை டாக்டர் கூப்பிட்டா கூட அவர் வரமாட்டார். ஏன்னா அவர் வந்து சொல்ல விரும்புறது இல்லை மறைக்கிறாரு. சோ இது வந்து நான் நினைக்கிறேன் மூணு ஸ்டேஜ். அப்படி இல்லை சார் அதுல கொஞ்சம் திருத்தலா இருக்கு திருத்தல்லாம் இருக்கு கொஞ்சம் மாத்தி சொல்லிருக்கீங்க. அப்படி இல்ல சார் அந்த மாதிரி இல்ல. சைக்கோட்டிக் தான் வந்து மறைக்கிறதுன்னு அர்த்தம். சைக்கோட்டிக் தான் மறைக்கிறது டெஸ்ட்ரக்டிவ் சிபிலிடிக்ங்கிறது வேற. நம்ம அதை பத்தி பேசுவோம் சார். கொஞ்சம் எடுத்த எடுப்பிலேயே அதுல போயிட வேண்டாம்ங்கறதுக்காகத்தான் இப்போதைக்கு வேண்டாம்னு சொன்னேன் நான். ஏன்னா கவரிங் பிக்சட் ஐடியா மாஸ்கிங் இது எல்லாமே சைக்கோட்டிக் பிஹேவியர். ஸ்ட்ரகிள்ங்கிறது சோரா. சிபிலிடிக்ங்கிறது டெஸ்ட்ரக்டிவ். இது எப்படி மனசு அளவுல நடக்குதுங்கறது ஒரு பெரிய ப்ராசஸ். இந்த ப்ராசஸை பத்தி நம்ம டீடைலாக பேசுவோம். பேசுவோம் டீடைலாக. சோரானா என்ன அதுல எப்படி அவங்களுக்கு அந்த சிந்தனை வரும்? சோரினம்ங்கிற ஒரு ஒரு ஓசோட இருக்கு பாத்தீங்களா அதுல இருக்கிற மைண்ட் சிம்டத்தை எல்லாம் எடுத்துக்கணும். அதை எடுத்து பார்த்துட்டா அது வந்து சோராவா அற்புதமாக பேசும். அற்புதமாக பேசும். மெடோரினத்துக்கு எடுத்துட்டீங்கன்னா அது அற்புதமாக நம்முடைய சைக்கோட்டிக் நேச்சரை பேசும். சிபிலினம் எடுத்துட்டீங்கன்னா அது அற்புதமாக அந்த சிபிலிட்டனுடைய மைண்ட் ட்ரேட்டை பேசும். அதிலிருந்து ஒன்னொன்றாக படிக்கணும். அப்படி படித்தால்தான் மியாசத்தை புரிந்து கொள்ள முடியும். இப்படிதான் ஸ்டெப் பை ஸ்டெப்பா போகணும். நம்ம மெதுவா படி படியாக போவோம் சார். உங்களுடைய கோஆபரேஷனோட தான் பாண்டுரங்கன் சாரோட கோஆபரேஷன் ஸ்ரீதர் சார் அப்புறம் எல்லாரோட கோஆபரேஷன் மூலமாகத்தான் நம்ம அடுத்த கட்டத்துக்கு போக முடியும். அதனால மியாசத்தை பற்றி இப்படியான ஒரு பாதையில போவது நல்லதுன்னு நான் நினைக்கிறேன். ஏன்னா நாமாக ஒரு கற்பனையை செய்வதை விட ஒரு பேஸோடு கற்பனை செய்து படிப்பது நல்லதுன்னு நான் நினைக்கிறேன். சார் வணக்கம் சார். வணக்கம் சொல்லுங்க சார். சிலருக்கு மட்டும் ஏன் சார் சைக்கோட்டிக்கா அந்த கண்டிஷன்ல நின்னுடுது. ஒவ்வொருத்தங்களும் வந்து சிபிலீஸா மாறுது அது ஏன் சார்? அதுதான் ரொம்ப முக்கியமானது. இப்ப எனக்கு ஒரு பிரச்சனை வருதுன்னு வச்சுக்கோங்க. பணம் பிரச்சனை வருதுன்னு வச்சுக்கோங்க. இல்லை உறவுகள்ல ஒரு சிக்கல் வருதுன்னு வச்சுக்கோங்க. அப்புறம் என்னுடைய தொழில் என்னுடைய அறிவுல ஒரு சிக்கல் வருதுன்னு வச்சுக்கோங்க. நான் இது எல்லாமே அக்சப்ட் பண்ணிக்கிட்டேன்னு வச்சுக்கோங்க. சரி ஏதோ ஒரு நடந்துருச்சு நடந்தது நடந்துட்டு போகட்டும். இனிமேல் நடக்காம பார்த்துக்குவோம் நம்ம வேலையை பார்ப்போம். இதை பெருசா போட்டு மனசுல ஸ்ட்ரகிள் பண்ண வேண்டாம் போராட வேண்டாம். நம்ம பேசாம இதை அப்படியே விட்டுருவோம் அப்படின்னு நினைச்சிட்டா அது சைக்கோட்டிக் கூட நின்னுரும். இதே ஐயையோ இப்படி ஆயிருச்சே இதை மீறாம விட முடியாது எப்படியாவது இதை மீறணும்ங்கிறது சோரிக் நேச்சர். போனது போச்சு அவ்வளவுதான். அவ்வளவுதான் முடிஞ்சது. இன்னும் மீளவே முடியாதுன்னு போச்சு. இது சிபிலிடிக். இப்படி ஒரு வார்த்தை கேட்டா இது மியாசத்துல சொல்ல தெரியணும் நமக்கு. உங்களை கொன்றுவேன் அப்படிங்கிறது என்னது? சடனா ஒருத்தன் கொல்லப்போறானா? இப்ப கொன்றுவேன்னு சொல்லிட்டு கொள்ள மாட்டான். டக்குனு எடுத்து கத்தியை எடுத்து குத்திடுவான் அது அக்யூட். உன்னை கொன்றுவேன் கொள்ளாமல் விடமாட்டேன்னு சொன்னா அது சோரினல். இவனை கொன்னுட்டா நம்ம கேஸ் புக் ஆயிடுமே. இதனால இவனை தெரியாமல் கொல்லுவோமே. உன்னை மறைந்திருந்து கொல்லுவோமே ஆளை வைத்து கொல்லுவோமே எவிடன்ஸ் இல்லாம அழைச்சு கொல்லுவோமேன்னு நினைச்சா என்ன ஆகும்? சைக்கோட்டிக் மாஸ்கிங். அவாய்டிங், அக்செப்டிங். இவனை கொன்னுட்டு நான் ஜெயில்ல போறதுக்கு பேசாம விட்டுருவோமேன்னு நினைச்சா அக்சப்டிங். இதெல்லாம் சைக்கோட்டிக். உன்னை கொல்லாம விட முடியாது. ஒன்னு இவன் இருக்கணும் இல்லாட்டி நான் இருக்கணும். இதுதான் சிபிலிடிக். இப்படி ஒவ்வொரு வார்த்தையும் மியாசமாக பேசத் தெரியணும் நமக்கு. இப்படி பேசியவர்கள் தான் நம்ம ஹோமியோபதியர்கள். எல்லாரும் இப்படி பேசி இருக்காங்க. ப்ரோபல் விஜயங்கள் ஒவ்வொரு ரூபிரிக்கை இப்படி பேசி இருக்கார். ஒரு பேஸ் வேணும் நமக்குள்ள ஒரு படிக்கிறதுக்கு ஒரு பேஸ் வேணும் நமக்குள்ள. அப்பதான் நம்ம அடுத்த கட்டத்துக்கு போக முடியும். அப்ப அடுத்த கிளாஸ்ல நம்ம என்ன பண்ணுவோம்னா இந்த பேத்தாலஜிக்கலா சில விஷயங்கள் பார்த்தோம் இல்லையா இதோட மைண்ட் பிக்சர் எப்படி இருக்கும் அப்படிங்கறத நம்ம பார்ப்போம். புரியுதுங்களா? சார் நான் ஒரு சின்ன ஒரு விஷயத்தை பதிவு பண்ணலாம்னு நினைக்கிறேன். சொல்லுங்க. சார் நீங்க சொன்னீங்க எனர்ஜி டீரேஞ்ச்மென்ட்னால ஏற்படுது அதாவது ஆற்றல் டீரேஞ்ச் ஆகுறதுனால நமக்கு இந்த மாதிரியான விஷயங்கள் ஏற்படுதுன்னு சொன்னீங்க. ஆற்றல் எப்படி எக்ஸ்பிரஸ் ஆகுது அப்படின்னு நம்ம ரொம்ப ஆழமா பார்த்தோம்னா நம்ம உணர்வுகள் மூலமாக தான் ஆற்றல் எக்ஸ்பிரஸ் பண்றோம். ஆனா எப்பவுமே பார்த்தீங்கன்னா ஒவ்வொரு மனுஷன்க்குள்ளயும் அந்த உணர்வோடயே ஒரு சில விஷயங்கள் டிராவல் ஆகும் சார். அது என்னன்னு பார்த்தீங்கன்னா கால் இவங்க என்ன சொல்லுவார்னா ஆழ்மன படிமங்கள் அப்படின்னு சொல்லுவாரு. அந்த ஆழ்மன படிமங்கள் எப்படி இருக்கும் அப்படின்னு நம்ம கொஞ்சம் டீடைலா அதை கொஞ்சம் யோசிச்சு பார்த்தோம்னா ஒவ்வொரு மனுஷனுக்குள்ளயும் ஒரு ஒரு சிம்பல் வந்து டிராவல் ஆகும் சார். அதாவது பர்சனல் சிம்பலாக இருக்கலாம் கலெக்டிவ் சிம்பலாக இருக்கலாம். அந்த சிம்பலை ஒட்டி தான் அவனுடைய ட்ரைட் வந்து எக்ஸ்பிரஸ் ஆகும். அந்த உணர்வோடயே அந்த ட்ரைட்டும் டிராவல் ஆகும் கடைசி வரைக்குமே. இந்த ட்ரைட் தான் வந்து மியாசமா நம்ம இந்த கேன்சரா இந்த மாதிரி சைக்கோசிஸா எக்ஸ்பிரஸ் ஆகுமா அப்படின்னு ஒரு பார்வை இருக்குமா சார் அப்படின்னு கேட்கிறவங்ககிட்ட. சரியான விஷயத்தை தொட்டு இருக்கீங்க. எனர்ஜி டீரேஞ்ச்மென்ட் தான் நோய்னா நம்முடைய நோயினுடைய உச்சபட்சம் எப்படின்னா ஆற்றல் வடிவத்துல தான் இருக்கும். இந்த ஆற்றல் தன்னை வந்து ரெண்டு வகையில வெளிப்படுத்தும். லோயர் ஆர்டர்ல பேத்தாலஜியாவும் ஹையர் ஆர்டர்ல உணர்வாகவும் வெளிப்படுத்தும். இதைப்பத்தி நான் கிளாஸ் எடுக்கணும் கட்டாயமாக அப்பதான் இது புரியும். செவரல் லெவல்ஸ் ஆஃப் ஹியூமன் பீயிங்க நான் எடுக்கணும். அதுல அந்த உணர்வு தளம் வந்து ரொம்ப முக்கியமானது. ஏன்னா ஆற்றல் வந்து தன்னுடைய வெளிப்பாடை முதல் உடலாக காட்டுவது தன்னுடைய உணர்வின் மூலமாக தான் காட்ட முடியும். அதுவும் குறிப்பாக வைட்டல் உணர்வின் மூலமாகத்தான் காட்ட முடியும். அந்த உணர்வுதான் ஹையஸ்ட் ஆர்டர். ஹையஸ்ட் ஆர்டர் ஆற்றல் வெளிப்படுத்தும் விதமும் உண்டு. அதை நம்ம பின்னாடி பார்ப்போம். ஆற்றல் எப்படி வெளிப்படுத்தும்ங்கிறதை பார்ப்போம். அந்த ஹையஸ்ட் ஆர்டர் உணர்விலிருந்து தான் அது எப்படி அந்த உணர்வு தன்னை வினைபுரியுது அப்படிங்கிறது தான் மியாசம். வாட் அப்படிங்கிறது சென்சேஷன் ஹவ்ங்கிறது மியாசம். எப்படி நாம அந்த உணர்வை வெளிப்படுத்துகிறோம். எனக்கு கொல்லணும்ங்கிற ஒரு இம்பல்ஸ் வந்துருது. ரைட்டுங்களா? கில்ங்கிற ஒரு இம்பல்ஸ் வந்துருது. அதை எக்ஸிக்யூட் பண்றது தான் மியாசம். அந்த கில்ங்கிற உணர்வு என்பது வைட்டல் உணர்வு அதை எக்ஸிக்யூட் பண்றது தான் மியாசம். அந்த அடிப்படையில் தான் இது நடக்குது. அப்ப இந்த சென்சேஷன் அண்ட் மியாசம் ஆர் இன்செப்பரபில் தே கனாட் பி செப்பரேட்டட். தே ஆர் த பேக்கேஜ் ஆப் ஒன் அண்ட் தி சேம் தட் இஸ் தி எனர்ஜி. எனர்ஜினுடைய வெளிப்பாடாக உணர்வுகளும் இந்த மியாசம் சேர்ந்துரும். அது ரியாக்ஷன் பேட்டனா இருக்கும். உணர்வு இல்லாம ரியாக்ஷன் இருக்காது வெறும் ரியாக்ஷன் மட்டும் இருக்காது. வெறும் ரியாக்ஷன் இல்லாம உணர்வு மட்டும் இருக்காது. இது ரெண்டுமே அவசியமானது. அப்ப ஆற்றலை புரிந்து கொள்வதற்கு இரண்டு கட்டுமானங்கள் நமக்கு அவசியமா இருக்கு. இந்த இரண்டு கட்டுமானங்களை தெரிந்தால்தான் ஆற்றலை புரிந்து கொள்ள முடியும். அப்ப ஆற்றல்னா என்னங்கறதை பார்க்கணும். அந்த ஆற்றல் எங்கிருந்து வருதுங்கறதை பார்க்கணும். அதனுடைய மேக்ரோ லெவலான அது வெளிப்பாடாக தெரியக்கூடிய அப்ஜெக்டிவ் சிம்டமான பேத்தாலஜி வரைக்கும் நமக்கு தெரியணும். அப்ப பேத்தாலஜி எப்படி ஒரு மாறி மெட்டீரியல் ஃபார்ம் எப்படி இம்மெட்டீரியலாக வந்து எனர்ஜியாக இருக்கு அப்படிங்கறதையும் நம்ம தெரிஞ்சுக்கணும். இப்படி தெரியும் போது தான் மியாசம் நமக்கு ஒரு புரிதலை கொடுக்கும். அதன் மூலமாக புதிய மியாச சிந்தனையா முறைக்கு நம்ம டிராவல் பண்ண முடியும். இன்னும் இதைப்பத்தி தான் பேசுறேன் இப்படி போங்கன்னு சொல்றேன் நான். மேடம் எனக்கு உதவி செஞ்சிருக்காங்க அவங்களுக்கு நன்றி. தேங்க்யூ சார். இந்த மூணு மியாசத்தை வச்சே சொல்லிட முடியாது. 18 மியாசம் இப்போதைக்கு தேவை நமக்கு. நம்ம கிட்டத்தட்ட ஒரு 13 12 15க்குள்ள தான் வந்திருப்போம் அதிகபட்சம் போனால். 18 கண்டுபிடிக்கணும் இன்னும் அதுக்கு மேல கூட வரலாம். அப்படி எல்லாம் வராதுன்னு பேசுவது எல்லாம் தவறு. அது எப்படி ஏன் வரணும்ங்கறதைப் பற்றி பேசுவோம். ஏன் வரக்கூடாதுங்கறதை பத்தியும் பேசுவோம். எல்லாத்தையும் ஓபன் டிபேட்டா மாத்துவோம். யாரையும் புண்படுத்தாமல் பேசி பழகுவோம். ஏன்னா எல்லா கருத்துக்களும் சிறப்பான கருத்துக்கள். எல்லா உண்மையை நோக்கி பேசும் கருத்துக்கள். அந்த கருத்துக்களினுடைய தொகுப்பாகத்தான் உண்மையை நோக்கி நம்ம போகணும். உண்மை என்பது நாம் அல்ல நம்மளோட கருத்தும் அல்ல. உண்மை உண்மையாகத்தான் இருக்கும். அதை நோக்கித்தான் நம்ம பயணிக்க முடியும். சரி சார் இதோட முடிச்சுக்குவோம் அடுத்த கிளாஸ்ல பார்ப்போம்.

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript