Thumbnail for கோடிகளில் புரளவைக்கும் கேள யோகம் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology by Sri Mahalakshmi Jothidam

கோடிகளில் புரளவைக்கும் கேள யோகம் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Sri Mahalakshmi Jothidam

17m 45s2,218 words~12 min read
YouTube auto captions
Transcript source

YouTube auto captions

This transcript was extracted from YouTube's auto-generated caption track. The transcript below is server-rendered so it can be read, searched, cited, and shared without opening the original YouTube player.

Pull quotes
[0:11]வணக்கம் நேயர்களே இது மகாலட்சுமி ஜோதிடம் வழங்கும் காலச்சக்கரம் உங்கள் அன்பு ஜோதிடர் ஸ்ரீராம்ஜி பேசுகிறேன்.
[0:11]இது எந்த லக்னக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும் இதன் சூட்சுமங்கள் என்ன என்பதைப் பற்றி விரிவாக பார்ப்போம்.
[0:11]ஏற்கனவே குரு ராகு கூடியிருந்த குரு சண்டால யோகத்தை பார்த்திருக்கிறோம் அதே மாதிரியான அதைவிட இன்னும் ஒருபடி மேல யோகத்தை தரக்கூடிய குரு கேது கூடி நிற்கும் கேளை யோகம்.
[0:11]தனத்துக்கு காரக கிரகம் ஆன அவர் யாருடன் சேர்ந்தாலும் பொருள் ஈட்டுவதில் ஒரு நுணுக்கத்தையும் சாமர்த்தியத்தையும் ஜாதகருக்கு கற்றுக் கொடுக்கவே செய்வார்.
Use this transcript
Related transcript hubs

[0:11]ஓம் சரணாகத தீனாத்த பரிரான பராயனே சர்வஸ்யார்த்திகரே தேவி நாராயணி நமஸ்துதே. வணக்கம் நேயர்களே இது மகாலட்சுமி ஜோதிடம் வழங்கும் காலச்சக்கரம் உங்கள் அன்பு ஜோதிடர் ஸ்ரீராம்ஜி பேசுகிறேன். அனைவரும் நலமுடன் இருக்கிறீர்களா? நன்றாக தான் இருப்பீர்கள் நன்றாக இருக்க வேண்டும். இன்றைக்கு நாம் காண இருப்பது குரு மற்றும் கேது இணைவால் ஏற்படும் கோடீஸ்வர யோகம். இது எந்த லக்னக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும் இதன் சூட்சுமங்கள் என்ன என்பதைப் பற்றி விரிவாக பார்ப்போம். ஏற்கனவே குரு ராகு கூடியிருந்த குரு சண்டால யோகத்தை பார்த்திருக்கிறோம் அதே மாதிரியான அதைவிட இன்னும் ஒருபடி மேல யோகத்தை தரக்கூடிய குரு கேது கூடி நிற்கும் கேளை யோகம். இதுக்கு பேரே கேளை யோகம்னு சொல்லுவாங்க அது குரு சண்டாள யோகம் இது கேளை யோகம். குருபகவான் ஒரு இயற்கை சுபர்ங்க. அவர் யாரோட சேர்ந்தாலும் பெரிய அளவுல பாதிப்புகளை ஏற்படுத்த மாட்டார். தனத்துக்கு காரக கிரகம் ஆன அவர் யாருடன் சேர்ந்தாலும் பொருள் ஈட்டுவதில் ஒரு நுணுக்கத்தையும் சாமர்த்தியத்தையும் ஜாதகருக்கு கற்றுக் கொடுக்கவே செய்வார். சீக்கிரமா இருக்கிறது எப்படின்னு கத்துக் கொடுப்பார். நேர்வழியில் எப்படி சம்பாதிக்கிறதுங்கிறதை கத்துக் கொடுக்கிற கிரகம் குரு. குருனாலே வந்து சுபர். நேதி, நேர்மை, நியாயம், தர்மம், பெரிய மனித தோரணை, புகழுக்கு கலங்கம் ஏற்படாமல் வாழ்வது எப்படி இதையெல்லாம் சொல்லித் தருபவர் குரு. அதனாலதான் ஒன்னு அஞ்சு ஒன்பதாம் ஸ்தானங்களில் குரு யாருக்கு சம்பந்தப்பட்டு இருந்தாலும் அவங்க வந்து நீதி நேர்மைக்கு பயப்படுவாங்க. சொன்ன வார்த்தை காப்பத்துறதுக்கு முயற்சி செய்வாங்க. வாக்கு தவறாமையை ஃபாலோ பண்ணுவாங்க குடும்பத்துக்கு நல்லா நடந்துகணும் இந்த சமுதாயத்துக்கு நல்லா நடந்துகணும். பெரும் பொருள் ஈட்டினாலும் கூட அதுல ஒரு நேர்மை இருக்கணும் நியாயம் இருக்கணும் தர்மம் இருக்கணும் மத்தவங்களுக்கு நம்மளால எவ்வளவு உதவி செய்ய முடியும்ங்கிறதை சிந்திச்சிட்டே இருக்கக்கூடிய கிரகம். அதனால குரு வலு பெறுவது பாதகாதிபதி ஜாதகங்களா இருந்தாலும் கூட நல்லதுதான் ஏன்னா ஒரு ஒழுக்கம் தவறாமைங்கிறது இருக்கும் அது ரொம்ப முக்கியம் இல்லீங்களா இன்னைக்கு சமுதாயத்தில இந்த மாதிரி நபர்களை கண்டுபிடிக்கிறதா ரொம்ப கஷ்டம். இதுல நல்ல இறை நம்பிக்கை தெளிந்த ஞானம் தெளிந்த முன்னேற்றம் தரக்கூடியவர் கேது. இப்ப இந்த கேதுவும் குருவும் இணையும்போது எப்படி இருக்கும் குருவும் கேதுவும் இணைவு இதுல ஒரு நுணுக்கமான விஷயத்தை எடுத்துக்கணும். இந்த குரு கேது இணைவு அப்படிங்கிறது பார்த்தீங்கன்னா ரெண்டு பேரும் சேர்ந்திருந்தால் மட்டுமே கிடைக்கப் பெற்றது. புரிஞ்சுதுங்களா ஒருத்தருக்கு ஒருத்தர் பார்த்துகிட்டா அப்படிங்கறது மாதிரி வராது. ஏன்னா கேது பகவான் நேரடியா ஏழாம் இடத்தை அல்லது ஐந்தாம் இடத்தையோ அல்லது ஒன்பதாம் இடத்தையோ பார்க்க மாட்டார். அவருக்கு சூட்சுமமான பார்வைகள் மட்டும் தான் இருக்கும். சூட்சுமமான பார்வைகள் என்னவென்றால் முன்னும் பின்னும் தான் இருக்கும் இடத்திலிருந்து முன்னும் பின்னும் மூன்றாம் இடத்தை பார்க்கும் தன்மை கேதுவுக்கு ராகுவுக்கு உண்டுங்கிறது இது ஆராய்ச்சிக்கு உட்பட்டது. இதை எல்லா ஜோதிடரும் ஒத்துக்குறது இல்லை நுணுக்கமா பலன் அறிய விரும்பறணும்னு ஆராய்ச்சி பண்ற சில ஜோதிடர்களே ஒத்துக்குவாங்க அந்த ஒத்துக்குற ஜோதிடர்களில் நானும் ஒருத்தன். ஆனால் குருபகவான் அஞ்சு ஒன்பது ஏழாம் ஸ்தானங்களை பார்க்கிறவர் அதனால குருவும் கேதுவும் நேரடியா பார்த்துக் கொள்வது என்பது நடவாது. புரிஞ்சதுங்களா இணைவு அப்படிங்கிறது மட்டும்தான் நடக்கும் அப்ப குருவுடன் கேது இணைந்து நிற்கும் ஸ்தானம். குருவுடன் கேது இணையும் போது இந்த கோடீஸ்வர யோகம் வரும். இதுல இன்னொரு நுணுக்கம் என்னன்னா எல்லாரும் கோடீஸ்வர ஆகத்தான் முயற்சி பண்றோம் ஆனால் எல்லாருக்கும் அது கிடைக்கிறது இல்லை. புரிஞ்சுதுங்களா அப்ப அந்த கிடைக்கும் யோகியதையை தருபவர் குரு கேது இணைவு. கேளை யோகம் என்று சொல்லக்கூடிய இந்த குரு கேது இணைவு எந்த மாதிரி பலன்களை தரும். முதல்ல குருவும் கேதுவும் ஒரே அணிங்க ஆப்போசிட் குரூப் கிடையாது. இது நம்ம எடுத்துக்கணும் இப்ப அருளணி பொருளணின்னு ரெண்டு இருக்கு இல்லையா சுக்ரன் தலைமையிலான ஒரு அணி அதுல வந்து சுக்கிரன், புதன், சன்னி, ராகுன்னு ஒரு குரூப் இருப்பாங்க. குருவின் தலைமையிலான ஒரு அணி இதில் வந்து குரு, சந்திரன், செவ்வாய், சூரியன் இருப்பாங்க இந்த கேது பகவான் பார்த்தீங்கன்னா அதிகமா ராகுவினுடைய அனியில் இணைய மாட்டார். காரணம் ராகுவும் கேதுவுமே நேர் ஆப்போசிட் கிரகங்கள் 180° தள்ளி இருக்கவங்க ஒரே அச்சில் சொல்லக்கூடியவர்கள் நேர் ஆப்போசிட்ல அப்ப ஆட்டோமேட்டிக்கா இவர் குருவுடைய அணியில் இணைஞ்சிடுவார். குருவினுடைய அணியில இருக்கக்கூடிய குரு பகவானோடும் சரி மற்றும் செவ்வாயுடன் சரி இவர் வந்து செவ்வாய் மாதிரியே செயல்படுவார்ங்கிற ஒரு விதியும் உண்டு. ராகு சனி போல செயல்படுவார் கேது செவ்வாய் போல செயல்படுவார்ங்கிற ஒரு விதியும் உண்டு ஆக இந்த குரு செவ்வாய் குரு கேது குரு கேது செவ்வாய் இந்த காம்பினேஷன் எல்லாம் எப்பவுமே ஒரு மாதிரி நல்லா இருக்கும். சந்திரனோட இணையும் போது அவர் மனக்குறைகளையும் சூரியனோட இணையும் போது கிரக தோஷத்தையும் தராதுங்கிறது ஒரு தனி டிபார்ட்மென்ட். அந்த வகையில அருள் அணி லக்னங்களுக்கு அதிகப்படியான நன்மைகளை இந்த குரு கேது இணைவு செய்யும். அருள் அணி லக்னங்கள் அருள் அணி லக்னங்கள் எது எவை? மேஷம், விருச்சிகம், தனுசு, மீனம், கடகம் மற்றும் சிம்மம். அப்ப இந்த ஆறு லக்னக்காரர்களுக்கு இந்த கேளை யோகம்னு சொல்லக்கூடிய கோடீஸ்வர யோகம் அதி அற்புதமான பலன்களை வாரி வழங்கும். புரிஞ்சுதுங்களா வேறு கிரகங்களின் தொடர்பு இல்லாமல் இவர்கள் ஒரு சுபருடைய வீடில இந்த மாதிரி இணைந்திருந்தால் உதாரணமாக கடக லக்னம் ரிஷபத்தில் குரு கேது. கண்டிப்பான கோடீஸ்வர யோகம் கடக லக்னத்திலேயே குரு கேது நிச்சயமான புகழ் மிக்க அந்தஸ்து மிக்க கோடீஸ்வர யோகம். கன்னியிலேயோ மிதுனத்திலேயோ சேரும் போதும் இந்த யோகம் பங்கப்படுவதில்லை. புரிஞ்சுதுங்களா கன்னியிலேயோ மிதுனத்திலேயோ சேரும்போது இந்த யோகம் பங்கப்படுவதில்லை. லக்னம் என்னங்கிறதை பொறுத்தே இது தீர்மானிக்கும். அப்ப எதிரணி லக்னங்களுக்கு இந்த அருள் அணி இல்லாத எதிரணி லக்னங்களான ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகர, கும்ப லக்னங்களுக்கு இந்த கோடீஸ்வர யோகம் எவ்வாறு வேலை செய்யும். இதில் ஒரு சூட்சுமம் எப்போதுமே எதிரிகள் நமக்கு வேலை செய்யணும்னா அவங்க மறைவு பெறணும். புரிஞ்சுதுங்களா அவங்க மறைவு பெற்ற நிலையில் இருந்தால் அந்த யோகத்தின் 70 80% பலன்கள் நமக்கு கிடைச்சிரும். உதாரணமா ஒரு மகர லக்னம். மகர லக்னத்தின் மறைவு வீடுகள் என்னென்ன மூன்று ஆறு எட்டு மற்றும் 12. இந்த ஸ்தானங்களில் பார்த்தீங்கன்னா இந்த எட்டாம் இடம் ஒன்றைத் தவிர்த்து மீதி மூன்று ஆறு பன்னிரண்டில இவர்கள் அமரும்போது கண்டிப்பா இந்த யோகம் இவங்களுக்கு நல்ல விதமா வேலை செய்யும். புரியுதுங்களா மூன்றாம் இடம் குருவோட வீடு அங்க குரு கேது கூடி நிற்கிறது ஆறாம் இடம் புதனுடைய வீடு அங்க குரு கேது கூடி நிற்கிறது. பன்னிரண்டாம் இடம் குருவோட வீடு அங்க கூடி நிக்கும் போது இந்த யோகம் நிச்சயமாக 90% நல்ல பலன்களை இவர்களுக்கு தன்னுடைய தசாபுத்தி காலங்களில் செய்துவிடும். குரு கேது கூடி நிற்கிற கோடீஸ்வர யோகத்தினுடைய இது என்னன்னா பெரிய மனசு தன்மை ஆன்மீக வழி நேர்வழியில் ஜெயிப்பது திரண்ட சொத்துக்கள் பிறப்பிலேயே உயர் குடியில பிறக்கறது. பிறப்பிலேயே உயர் குடியில் பிறந்துறது தாழ்வாக இல்லாமல் நல்ல ஒரு அந்தஸ்து வசதி வாய்ப்பு உள்ள வீட்டில் பிறந்துறது அந்த யோகத்தை அப்படியே கண்டினியூட்டி பண்ணி எடுத்துக்கிட்டு போறது. திரண்ட சொத்துக்கள் வெளிநாட்டு வாய்ப்புகள் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் தெய்வ அனுகூலம் நிரம்ப கிடைக்கக்கூடிய ஒரு அமைப்புங்க இது. தெய்வ அனுகூலத்தால் அந்த ஜாதகர் சாதிக்க முடியாத காரியமே இல்லை அப்படிங்கறது மாதிரியான சூழல் இருக்கும். புரிஞ்சுதுங்களா அப்ப அருள் அணி லக்னங்களுக்கு இவங்க வேலை செய்யணும்ங்கிற போது மறைந்து இருக்க வேண்டும். இதே ரிஷப லக்னத்துக்கு குரு கேது கூடி நிற்கிற யோகம் வேலை செய்யணும் நல்ல விதமா அப்படிங்கிற போது பார்த்தீங்கன்னா கடகத்தில் இருந்தா வேலை செய்யும். துலாத்தில் இருந்தால் நிச்சயமாக வேலை செய்யும். எட்டாம் இடமான தனுசுல இருந்தால் வேலை செய்யும். பன்னிரண்டாம் இடமான விருச்சிகத்தில் இருந்தாலும் வேலை செய்யும். புரிஞ்சதுங்களா அப்ப மறைமுக ஸ்தானங்களில் ஏற்படும் போது நல்ல பலன்கள் அதிகமாக பொருளணி லக்னங்களுக்கும் கிடைக்கும். அருள் அணி லக்னங்களுக்கு எந்த இடத்துல இருந்தாலும் இவங்களுக்கு அந்த யோகம் வேலை செய்ய கடமைப்பட்டது அதிகப்படியான பாதிப்புகள் இல்லாமல் கோளாறுகள் இல்லாமல் இணைந்திருக்க வேண்டும்ங்கிறது மட்டும் தான் அவசியம். அப்ப பொருளணி அருளணி ரெண்டு லக்னங்களுக்குமே ஒருவித சிறப்பை தந்துவிடும் யோகியதை குரு கேது கூடி நிற்கிற கேளை யோக கோடீஸ்வர யோகம் வேலை செய்கிறது என்றால் அது மிகையே அல்ல. இது எந்த மாதிரியான வாழ்வியல் முன்னேற்றங்களை தரும். மெயினா பார்த்தீங்கன்னா குரு தரும் முன்னேற்றம்ங்கறதே எடுத்துக்கிட்டோம்னா நேர்மையான வழி. நியாயமான வழி ஒரு தெளிந்த சிந்தனை யாரையும் வஞ்சிக்காமல் வாழ்க்கையில எப்படி அடுத்த கட்டத்துக்கு போறது. யாரையும் வஞ்சிக்கக்கூடாது நம்மளை யாரும் குற்றம் சொல்லிடக்கூடாது கௌரவத்துக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுத்து முன்னேறுறது ஆன்மீக நாட்டம். ஆன்மீக பெரியோர்களாகவே ஆகிவிடுவது இது கேதுவினுடைய இணைவினால் ஏற்படுறது. குலதெய்வத்தினுடைய அளவரிய அதாவது அளப்பெரிய முடியாத அளவுக்கான குலதெய்வ செல்வாக்கு. குலதெய்வத்தினுடைய இவங்களே கோவில் கட்டி கும்பாபிஷேகம் பண்ணிருவாங்க குருமார்களால் வணங்கப்படும் அளவுக்கு ஒரு வளர்ச்சி இருக்கும். குருமார்களால் வணங்கப்படும் வளர்ச்சி எதிர்கால திட்டமிடல் அடுத்தடுத்த அடுத்த என்னங்கறத ரொம்ப பிளான் பண்ணி முன்னேறி கொண்டுட்டு போயற கூடிய தன்மைகளை இந்த குரு கேது இணைவு கொடுக்கும். இந்த பூனையும் பால் குடிக்குமாங்கிற மாதிரி இருப்பாங்க ஆனால் அளப்பெரிய சாதனைகள் புரியும் வாய்ப்புகளை உருவாக்கி தரும். புரிஞ்சுதுங்களா இவர்களோடு பாவ கிரகங்கள் இணைந்தால் இப்ப சூரியன், செவ்வாய், சனி. இவங்கல்லாம் பாவிகள்னு நம்ம அறியப்படுறோம் இல்லைங்களா இந்த பாவிகளுடைய ராகு ராகு இணைய முடியாது சூரியன், செவ்வாய், சனி இந்த கிரகங்களுடைய தொடர்போ அல்லது இணைவோ இந்த குரு கேது கூடி நிற்கிற யோகத்துக்கு ஏற்படும். இந்த கேளை யோகத்துக்கு ஏற்படும் போது என்ன ஆகும் குறுக்கு வழியை நாட ஆரம்பிச்சிருவாங்க. வெற்றி நிச்சயம் எப்படி வேணாலும் வெற்றி அடையனும்ங்கிற அந்த எண்ணங்களை கொடுத்துவிடும். தீவிரவாத தன்மையோட செயல்படுவார்கள். லஞ்சம் எதிர்மறை சிந்தனைகள் குறுக்கு எப்படி போனாலும் ஜெயிச்சே தீரனும்ங்கிற மாதிரியான ஒரு மனநிலையை கொண்டு வந்துரும். இந்த கோடீஸ்வர யோகம்ங்கறது அப்பவும் வேலை செய்யும் ஆனால் நேர்மையான வழி குறையும். பாவ கிரகங்களுடைய இணைவு நேர்மையான வழியிலிருந்து இவர்களை விலக்கி வெற்றியை நோக்கி நகர்த்தி செல்லும். சாமதான பேத தண்டம்ங்கிற மாதிரி எந்த உபாயத்தையும் எடுப்பாங்க எந்தவிதமான வழிகளிலும் வாழ்வில் வெற்றி பெற்றாகனும்ங்கிற ஒரு சூழலை உருவாக்கிரும். புரிஞ்சுதுங்களா இப்ப 12 லக்னங்கள்ல எந்த லக்னங்களுக்கு இது ரொம்ப சிறப்பாக இருக்கும்ங்கிறதையும் ஒரு சின்ன ஹிண்டிங்கா கொடுத்துறேன். மேஷ லக்னம் ரொம்ப சிறப்பாக வேலை செய்யும். மேஷ லக்னக்காரர்களுக்கு இந்த குருவும் கேதுவும் இணைந்து மறைமுக ஸ்தானத்துக்கு போனாலும் கூட யோகம் தான். ஆறு எட்டு பன்னிரண்டாம் இடத்தில் மறைஞ்சாலும் இந்த யோகம் அவங்களுக்கு முழுமையாக வேலை செய்யும். ரிஷப லக்னக்காரர்கள் ரிஷப லக்னக்காரர்களை பொறுத்தவரைக்கும் பார்த்தீங்கன்னா அந்த ஒரு நெருக்கடியான சூழல் மூன்று, ஆறு, எட்டு, பதினொன்று, எட்டு, பன்னிரண்டு இந்த ஸ்தானங்களில் இருக்கும்போது நேரடியா நல்ல விதமா வேலை செய்யும். நேரடியான வழியில இப்ப வந்து அஞ்சாம் இடம் ஒன்பதாம் இடம் இந்த மாதிரி ஸ்தானங்கள்ல லக்னம் குரு கேது இணைவு ஏற்படும்போது சில பல சங்கடங்களுடனே இந்த யோகம் கிடைக்கப்பெறும். கொஞ்சம் சங்கடங்களோடு சேர்ந்து யோகம் இருக்கும் அது வந்து பாதி ஐம்பது ஐம்பது அப்படிங்கற மாதிரி சாய்ஸ் ஆயிடும் முன்னேறிட்டே இருப்பாங்க திடீர்னு சட்ட சிக்கல்களை சந்திப்பாங்க. பொருளாதாரத்தில் நல்ல ஒரு முன்னேற்றம் இருக்கும் குடும்ப வாழ்க்கையில் ஏதாவது ஒரு பாதிப்பை கொடுத்துரும். புரியுதுங்களா ஒன்றை கொடுத்து இன்னொன்றை கெடுப்பது அந்த மாதிரி வரும் மிதுன லக்னத்துக்கும் இதே மாதிரிதான் மறைந்து இருக்க வேண்டும் மறைந்திருக்கிற நிலையிலேயே அவர்கள் சுபத்துவம் பெறுவார்கள். ஆறாம் இடத்தில விருச்சிகத்திலேயோ அல்லது எட்டாம் இடமான மகரத்திலேயோ அல்லது பன்னிரண்டாம் இடமான ரிஷபத்திலேயோ இருக்கணும் இதுல எட்டாம் இடம் கூட மத்திய பலன் தான். விருச்சிகம் மற்றும் ரிஷபத்தில் முழுமையான ஒரு பலனை மிதுனம் கிடைக்கப்பெறும். கடகத்திற்கு கேட்கவே வேண்டாம் எங்கிருந்தாலும் சுபம் தான். குரு கேது கூடி நிற்க கடக லக்னக்காரர்கள் அனைத்து விதத்திலும் சுபத்தை கோடீஸ்வர யோகத்தை முன்னேற்றத்தை வாழ்வியலில் தெளிவான வாய்ப்புகளை பெறுவார்கள். சிம்ம லக்னக்காரர்களுக்கும் அதே மாதிரிதான் எந்த இடத்தில் இவர்கள் கூடி இருந்தால் குரு நீச்சம் அடைஞ்சிட்டார்னா என்ன ஆகும் சார்னா கேள்வியே இல்லை எந்த இடத்தில் கூடி இருந்தாலும் இவர்களுக்கு அந்த குரு கேது கூடி நிற்கும் யோகம் கேளை யோகம் கட்டாயம் வேலை செய்யும். ஏன்னா இவங்க அருளணி லக்னங்கள் இதுக்கு அவங்க கொடுத்தே ஆகணும்ங்கிறது இருக்கும் வேறு பாவிகளின் தொடர்பு இல்லாத நிலையில் அதி சிறப்பாக வேலை செய்யும். புரிஞ்சுதுங்களா வேறு பாவிகள் தொடர்பு இருக்கும்போது குறுக்கு வழியில் வேலை செய்யும். இதே யோகம் குறுக்கு வழியில் வேலை செய்ய ஆரம்பிச்சிரும். நெகட்டிவ்வான வழிகளில் பொருளை ஈட்டக்கூடிய வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்துவிடும். கன்னி லக்னக்காரர்களுக்கு முதல் கூறியது போலவே மூன்று எட்டு இந்த மாதிரி மறைவு ஸ்தானங்களில் இருந்து வேலை செய்யணும். மூன்று எட்டு பன்னிரண்டு இவங்களுக்கு ஓகே இதுலயும் மூன்றாம் இடம் எட்டாம் இடம் வெரி சிறப்பு. ஆறாம் இடத்துக்கு போகும்போது கும்பத்தில் இந்த குரு கேதுவினுடைய இணைவு இருக்கும் அது மத்தியமமான பலன்தான். அதான் ஒன்றைக் கொடுத்து இன்னொன்றை கெடுப்பது குடும்ப வாழ்க்கையின் நிம்மதியில் கை வைக்கிறது கௌரவம் புகழில் கை வச்சறது நல்லா சம்பாதிப்பாங்க ஆனா அந்த சம்பாத்தியத்துக்கு காரகமாக இருக்கக்கூடிய விஷயம் வந்து சட்டம் ஒத்துக்கொள்ளாத விஷயமா இருக்கும். அப்ப சட்ட சிக்கல்களை சந்திப்பது திடீர் விபத்துகள் கண்டங்கள் பேர் கெட்டுப் போய் சரியாவது இந்த மாதிரியான சூழல்களை உருவாக்கி மீள வைப்பார். துலா லக்னமும் சேம் அதே மாதிரிதான் மறைந்திருக்கும்போதே யோகம் இவங்களுக்கு மூன்று, ஆறு, எட்டாம் இடம், பன்னிரண்டாம் இடம் நாலுமே சுபத்துவம். ஆக விசேஷமான ஒரு அமைப்பை துலா லக்னம் பெறும் புரிஞ்சுதுங்களா ஏன்னா இவங்களுக்கு மூன்றாம் இடமும் சுபருடைய வீடு ஆறாம் இடம் சுபருடைய வீடு எட்டாம் இடம் சுபருடைய வீடு பன்னிரண்டாம் இடமும் ஒரு இயற்கை சுபர்களுடைய வீட்டுக்குள்ள வந்துடுறதுனால துலா லக்னக்காரர்களுக்கு துலா லக்னக்காரர்களுக்கு மூன்று, ஆறு, எட்டு பன்னிரண்டில் மறையும்போது அதி அற்புதமான யோகத்தை பெறும். விருச்சிக லக்னக்காரர்களுக்கு இந்த குரு கேது கூடி நிற்கும் கேளை யோகம் அனைத்து ஸ்தலங்களிலும் வேலை செய்யும். விருச்சிக லக்னத்தை பொறுத்தவரைக்கும் லக்னாதிபதி செவ்வாயும் கேதுவும் ஒரே குணம் ஒத்தவர்கள் ஆக இவர்களுக்கு எந்த இடத்தில் குரு கேது இணைந்திருந்தாலும் கேளை யோகம் வேலை செய்து நல்ல முன்னேற்றத்தை நிச்சயமாக பெற்றுத் தரும் என்றால் அது மிகையே அல்ல. தனுசு லக்னக்காரர்களுக்கு ஆட்டோமேட்டிக்கா எந்த இடத்தில் இருந்தாலும் குரு கேது கூடி நிற்கிற கேளை யோகம் நிச்சயம் புகழ், அந்தஸ்து, பெரும் செல்வம், செல்வாக்கு, ஆன்மீக வழியில் நாட்டம், அதன் மூலம் முன்னேற்றம்ங்கிற நல்ல பலன்களை கட்டாயம் கொடுத்துதான் தீரும். இவங்களுக்கு எட்டாம் இடத்திலேயே இருந்தாலுமே அந்த பலன்கள் நடக்கும். எட்டாம் இடத்தில் குரு இருக்கார்னா உச்சம் ஆயிடுவார் ஆட்டோமேட்டிக்கா. அப்ப லக்னாதிபதி உச்சம் பெற்று கேதுவுடன் இருக்கும் நிலையில மிக உயரிய அந்தஸ்துகள் கட்டாயம் கிடைத்தேயே தீரும் என்னா இரண்டாமிடத்தில் ராகு இருப்பார் அந்த மாதிரி ஒரு சூழல்ல இரண்டாமிடத்தில் இருக்கிற ராகுவினால் ஏற்படும் சிறு சில இடஞ்சல்களை தேவையற்ற வாக்குறுதிகளை கொடுத்துட்டு மாட்டிக்கிறது இந்த மாதிரியான ஒரு சில சந்திப்புகளையும் சங்கடங்களையும் சந்தித்தே தீர வேண்டியது இருக்கும். எல்லா யோகங்களிலும் இருக்கிற சூட்சுமம் இது தாங்க அதுக்கு ஆப்போசிட் ரியாக்ஷன் ஒன்னு இருக்கும் இல்லையா எவ்ரி ஆக்சன் ஈக்குவல்லி ஆப்போசிட் ரியாக்சன். புரிஞ்சுதா அதுவும் எதிர்கொள்ள தயாரா இருக்கணும் பணக்காரங்க எல்லாம் சந்தோஷமா இருக்காங்களான்னு அவங்கள்ட்ட கேட்டு பார்த்தா தான் தெரியும் எத்தனை பிரச்சனைகளை பேஸ் பண்ணிட்டு இருப்பாங்க. அதே மாதிரிதான் எந்த ஒரு யோகமும் முழுமையாக வேலை செய்யும்போது அதன் அவயோகங்கள்ங்கிற சின்ன சின்ன பார்ட் வேலை செய்யவே செய்யும். மகர லக்னக்காரர்களுக்கு ஆஃப்கோர்ஸ் மறையணும் ஒரு நெருக்கடியான சூழல்ல மட்டுமே இந்த குரு கேது கூடி இருக்கிற கோடீஸ்வர யோகம் இவங்களுக்கு வேலை செய்யும். அது மூன்று, ஆறு எட்டாம் இடத்தை தவிர்த்து பன்னிரண்டு இந்த ஸ்தானங்களில் அமரும்போது இவர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். அது இல்லாத திரிகோண ஸ்தானங்களில் குரு உதாரணமா மகர லக்னம் அஞ்சாம் இடத்தில் குருவும் கேதுவும் கூடி நிற்கிறார். நல்ல விஷயம் தான் லக்னத்தை குரு பார்ப்பார் வெற்றி வாய்ப்புகள் இருக்கும் புகழ் இருக்கும் கௌரவம் இருக்கும் அந்தஸ்து இருக்கும் பொருள் வாய்ப்புகள் கிடைக்கும் அதே நேரத்தில் குழந்தைகளால அவமானம். குழந்தைகள் வழியில் பிரச்சனை குழந்தை பிறக்காத தன்மை அல்லது ஊனமுற்ற குழந்தைகள் பிறக்கிறது கௌரவம் புகழ் அந்தஸ்துக்கு திடீர்னு ஏதாவது ஒரு கெட்ட பெயர் வரது இதையும் சேர்த்துதான் சந்திக்கிற மாதிரி வரும். புரிஞ்சுதுங்களா இதுவே மறைமுக ஸ்தானங்கள்ல அவர் அமர்ந்துட்டார்ன்னா இந்த இடஞ்சல்கள் இல்லாமல் அந்த யோகத்தை நீங்கள் முழுமையாக அனுபவிக்க முடியும். இதுதான் அதோட சூட்சுமம். உங்களுக்கு ஒரு எதிரி நல்லது செய்யணும்னா அவன் நெருக்கடையில் இருக்கணும் அதே மறையணும். வளக்குறைந்த நிலையில் நெருக்கடியான நிலையில் இருக்கும்போதான் அவங்களுக்கு அந்த நல்லது கிடைக்கும் கும்ப லக்னத்திற்கும் அதே மாதிரியான அமைப்புதான். மூன்றாம் இடம் மற்றும் ஆறாம் இடம் எட்டாம் இடம் பன்னிரண்டாம் இடத்தை தவிர்த்து மத்த ஸ்தானங்களில் இந்த யோகம் இவர்களுக்கு முழுமையாக வேலை செய்யும். நேரடியாக அவர்கள் வலுபெற்ற நிலையில் இருக்கும்போது யோகத்துடன் சங்கடமும் சேர்த்து கிடைக்கும். புரிஞ்சுதுங்களா மீன லக்னக்காரர்களுக்கு எந்த இடத்தில் அமர்ந்தாலும் குரு கேது கூடி நிற்பற கேளை யோகம் மிக அற்புதமாக வேலை செய்யும். சரி இந்த யோகம் வேலை செய்யும் இது என்ன தருது? புகழ் தரும் அந்தஸ்து சொத்து திரண்ட சொத்துக்கள் கொஞ்சம் அரைகுறையானது எல்லாம் கிடையாது. திரண்ட சொத்துக்கள் பெரிய மனிதரா அறியப்படுவது அரசியல் ஆதாயம் வெளிநாட்டு ஆதாயம் சக்சஸ்ஃபுல் பிசினஸ்மேன் எல்லாரோட ஜாதகத்தில இந்த கேளை யோகம் ரொம்ப அற்புதமா இருக்கும். ரொம்ப பெரிய உயரத்தை தொற்றவர்கள் ரொம்ப பெரிய வெற்றியாளர்கள் ஒரு ஆயிரம் பேர் எடுத்து அவங்க ஜாதகங்களை ரிசர்ச் பண்ணி பார்த்தீங்கன்னா இந்த குரு சண்டால யோகம் அல்லது குரு கேளை யோகம் கேதுனால கிடைக்கக்கூடியது இல்ல ராகுனால கிடைக்கக்கூடியது இது ரெண்டுல ஒன்னு இருக்கும். மிகப்பெரும் வெற்றியாளர்களுக்கு இது இருக்கு அவங்களுக்கு சின்ன சின்ன சர்க்கல்கள் இருந்தாலுமே அவர்கள் வெற்றியாளர்களே. இது தரும் புகழ் அந்தஸ்துங்கறது நிரந்தரமானதாகவும் இருக்கும். காலத்தால் அழியாத புகழ்ன்னு சொல்லுவாங்க இல்லையா காலத்தால் அழியாத புகழை பெறக்கூடியது இந்த குரு கேது கூடி நிற்கும் கேளை யோகம். இது எப்ப வேலை செய்யும் குரு திசை வரணும் அல்லது கேது திசை வரணும். வழக்கமா சொல்றதுதான் தசா நாதர்கள் வரும்போது அந்த யோகம் முழுமையாக உங்களுக்கு கைவரப்பெறும். அதே நேரத்தில் இது குரு திசையில் அதிகமா நன்மை செய்யுமா கேது திசையில் அதிகமா நன்மை செய்யுமாங்கிற ஒரு நுணுக்கமான கேள்விக்கு நிச்சயமா கேது திசைல தான் அதிகமான நன்மைகளை செய்யும். காரணம் கேதுவோட திசை அளவு ரொம்ப கம்மி ஏழு வருஷம் குருவோட திசை அளவு ரொம்ப ஜாஸ்தி 16 வருஷம். ஒரு யோகம் முழுமையாக வேலை செய்ய வேண்டும் என்கின்ற அவசரத்தில் ஏழு வருட குறுகிய காலத்திலேயே கேது வாரி வழங்கிட்டு போயிருவார். புரிஞ்சுதுங்களா அப்ப கேது திசையிலேயே அதிகப்படியான வெற்றிகள் கிடைக்கும் ஆனால் அதே நேரத்தில் கேது ஒரு இயற்கை பாவி. அதை நம்ம மறுக்க கூடாது சில சில சங்கடங்கள் சட்ட சிக்கல்கள் குடும்ப பிரச்சனைகள் வாழ்வியல் நோய் நொழிகள் இதையும் இந்த யோகத்தோடு சேர்த்து நீங்க அனுபவிக்கிற மாதிரியே வரும். குருபகவான் கொடுக்கும்போது அது எந்தவித பங்கமும் இல்லாமல் மெதுவாக நிதானமாக இருக்கும். உயர் குடியில் பிறப்பது படிப்படியா வளருவது நல்ல கல்வியை அடைவது நல்ல புத்திரர்கள் அடைவது திருமணத்தால் வாழ்க்கையில் முயற்சியில முன்னேற்றங்கள் அடையறது குழந்தைகளால் முன்னேற்றங்கள் அடையறது இந்த மாதிரி நீட்டா கொண்டுட்டு போய் விடுவார். கேது வந்து கொஞ்சம் விபரீதத்தை கொடுத்து யோகத்தை கொடுக்கக்கூடியவர் தான் இல்லையா உழைக்காமல் வர சொத்து திடீர்னு வரக்கூடிய தனவரவு. சொத்து பத்து சுகங்களால் லாபம் பூமியினால் லாபம் எப்பயோ எங்கயோ வாங்கி போட்டு இருக்கிற பூமி திடீர்னு கோடிக்கணக்கில் விலை போறது அந்த மாதிரியான திடீர் தனவரவு அதிஷ்டங்களை கொடுக்க கூடியவராக இருப்பார். மொத்தத்தில் மிக உயரிய வெற்றிகளை தரக்கூடிய குரு கேது கூடி நிற்கும் கேளை யோகம் உங்கள் ஜாதகத்தில் இருக்கிறதான்னு பாருங்க. நிச்சயமா அந்த யோகம் இருந்ததுன்னா கண்டிப்பான ஒரு வழியில ஏதாவது ஒரு சூழ்நிலையில் நீங்கள் வாழ்க்கையில் மேன்மை அடைந்து விடுவீர்கள். உயரத்தை எட்டி பிடித்து விடுவீர்கள் என்று கூறி மீண்டும் ஒரு காணொளியில் உங்களை வந்து சந்திக்கும் வரை உங்களிடமிருந்து அன்புடன் விடைபெற்றுக் கொள்வது உங்கள் அன்பு ஜோதிடர் ஸ்ரீ ராம் ஜி நன்றி வணக்கம்.

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript