Thumbnail for கன்னத்தில் விழுந்த ஒரு அறையின் விலை ஒரு கோடி malayalam movies in Mr Tamilan Voice Over Dubbed Tamil by Mr Tamilan Stories

கன்னத்தில் விழுந்த ஒரு அறையின் விலை ஒரு கோடி malayalam movies in Mr Tamilan Voice Over Dubbed Tamil

Mr Tamilan Stories

22m 7s4,003 words~21 min read
Auto-Generated

[0:00]I am Kathalan 2024 மலையாளப் படம். அருமையான படம். எல்லோருக்கும் இந்தப் படம் புரியுமா என்பது கேள்விக்குறி. நிறைய ஹேக்கிங் தொடர்பான நிறைய ஐடி டிபார்ட்மென்ட் தொடர்பான நிறைய விஷயங்கள் உள்ளே வரும். அதனால் இந்தப் படம் பிடிக்குமா புரியுமா என்பது கேள்விக்குறி. முடிந்தளவு இரண்டு வகை ஆட்களுக்கும் புரியும் வகையில் எளிமையாகத்தான் பின்னால் விளக்கியுள்ளேன். கேட்டுப் பாருங்கள், புரிந்தால் கமென்ட்டில் சொல்லுங்கள். புரியவில்லை என்றால் அதையும் கமென்ட்டில் சொல்லுங்கள். அடுத்த முறை இன்னும் சிறப்பாக விளக்குகிறேன். ஆனால் இந்தப் படம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றதாக இருக்கும். அது மட்டும் உறுதியானது. அப்புறம் என்ன என்பது வழக்கம்போல படம் பார்த்து தெரிந்து கொள்வோம். வாருங்கள் வீடியோவுக்குள் போவோம். இந்தப் படத்தின் ஆரம்ப காட்சியில் ஹீரோவை காட்டுகின்றனர். ஏதோ ஒரு நேர்காணலுக்காக தயாராகி வந்திருக்கிறான் என்று தெரிகிறது. நேர்காணலுக்குச் சென்று பங்கேற்கிறான். டெவலப்மென்ட் சம்பந்தமாக ஏதோ கேள்வி கேட்கின்றனர். அந்தக் கேள்விக்கு இவனிடம் சரியான பதில் இல்லை. ஏதோ தடுமாற்றத்துடன் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறான். அதுவும் இவன் செய்த ஒரு திட்டத்தைச் சொல்லியிருக்கிறான். எல்லா இன்ஜினியர்களும் எட்டாவது செமஸ்டரில் ஒரு திட்டம் செய்திருப்பார்கள். அந்தத் திட்டம் தொடர்பான கேள்விகள்தான் கேட்கப்படுகின்றன. அதற்கும் இவன் தடுமாற்றத்துடன் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறான். இந்தத் திட்டத்தை நீதான் செய்தாயா அல்லது பொழுதுபோக்கிற்காகச் சும்மா செய்து கொண்டிருந்தாயா என்று கேட்கின்றனர். இல்லை சார், நான்தான் செய்தேன் என்கிறான். சரி இது வேலைக்கு ஆகாது. வேறு ஏதாவது திட்டம் செய்தாயா என்று கேட்க, ஆம் சார் செய்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டு பைக்குள் கைவிடுகிறான். உள்ளே இருந்து ஒரு யூஎஸ்பி ஒரு பக்கம் இருக்கிறது. இன்னொரு பக்கம் ஒரு பஞ்சுப்பை போல இருக்கிறது. நன்றாகக் குத்துவதற்கு வசதியாக. என்னப்பா இது என்று கேட்க, வேலை தேடுபவர்கள் கொஞ்சம் பதற்றமாக இருப்பார்கள். அவர்களின் பதற்றத்தை அவர்களின் அழுத்தத்தைக் குறைக்கும் ஒரு ஐடியாதான் சார் இது என்று சொல்கிறான். எண்டர் பட்டனுக்குப் பதிலாக நீங்கள் கணினியில் இதை மாட்டிவிட்டு, எப்போதெல்லாம் எண்டர் தட்ட வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அப்போதெல்லாம் இந்த பையை நீங்கள் நன்கு நன்கு எப்படி வேண்டுமானாலும் குத்தலாம். பை கிழியாது. அவர்களின் டென்ஷன், அழுத்தம் எல்லாம் ஓரளவு குறையும் என்று எடுத்து சொல்கிறான். இதெல்லாம் ஒரு திட்டமா? உள்ளே வை தம்பி என்கின்றனர். பொதுவாக அரியர் வைத்துள்ள ஆட்களை நாங்கள் நேர்காணலுக்கு அழைக்கவே மாட்டோம். ஏதோ தெரியாத்தனமாக உனக்கு அழைப்பு வந்துவிட்டது. நீ கிளம்பு என்று அனுப்பி வைத்துவிட்டனர். நேர்காணல் நடந்தது கேம்பஸ் நேர்காணல். இவனது கல்லூரியில்தான் நடந்திருக்கிறது. நேர்காணலில் தடுமாறிவிட்டோமே என்று. இவன் செய்த அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு வெளியே வரும்போது ஒரு பையன் ஓடிவந்து, என் ஆளை ஹேக் செய்யச் சொன்னேனே, அவள் வேறு யாருடனாவது சாட்டிங் செய்து கொண்டிருக்கிறாளா என்று எனக்கு கொஞ்சம் சந்தேகமாக இருக்கிறது. அவளது இன்ஸ்டா கணக்கை ஹேக் செய்து கொடு என்கிறான். அதெல்லாம் அவ்வளவு எளிதல்ல. நிறைய பாதுகாப்புகள் இருக்கும். பிஷிங் செய்யலாம் என்கிறான். பிஷிங்கா? இந்த நேரத்தில் எதற்கு மீன் பிடிக்கச் சொல்கிறாய் என்று அவன் கேட்க, டேய் பிஷிங் என்றால் அது இல்லைடா. நாம் ஒரு லிங்க் அனுப்பி வைப்போம். அந்த லிங்க்கை தெரியாத்தனமாக அந்தப் பெண் கிளிக் செய்துவிட்டால், அப்புறம் அவளது இன்ஸ்டா கணக்கை நம்மால் எளிதாகப் பார்க்க முடியும். நீ எதிர்பார்க்கும் விவரங்கள் எல்லாம் அதில் பார்த்துவிட முடியும் என்று சொல்கிறான். அப்போது சரி, அந்த லிங்கை அனுப்பி நாம் பிஷிங் செய்வோம் என்ன என்று பேசிக் கொண்டிருக்கிறான். அடுத்து இவன் அதே கல்லூரியில் கருத்தரங்கு ஒன்று நடந்து கொண்டிருக்கும். அந்தக் கருத்தரங்கில் ஒரு பெண் பக்கத்தில் போய் உட்காருகிறான். நம்ம பையன் காதல் செய்யும் பெண் போல தெரிகிறது. நேர்காணல் எப்படிப் போனது என்று கேட்க, இல்லை, தடுமாறிவிட்டது என்கிறான். இங்கே, எல்லா பேருமே, இப்போது இந்த கேம்பஸ் நேர்காணல் நடக்கிறது பார்த்தீர்களா? அது ஒரு சாதாரண கம்பெனி அல்ல. க்ளவுட் டேட்டா என்ற ஒரு கம்பெனி. நிறைய மக்குகள் கூட வேலைக்கு எடுக்கிறார்கள். நேர்காணலில் தேர்வு செய்கிறார்கள். அந்தக் கம்பெனியிலேயே நீ தேர்வு ஆகவில்லை என்றால், உனக்கு வேலை கிடைப்பது கஷ்டம் என்கிறாற்போல் சொல்கிறாள். சரி கொஞ்சம் நேரம் வெளியே வா பேசுவோம் என்று சொல்லிவிட்டு அவளை வெளியே கூட்டி வந்து வெளியே வருகிறான். வெளியே வந்த பிறகு, நேர்காணலில் என்ன கேட்டார்கள், என்ன சொன்னார்கள் என்ற கதை அனைத்தையும் சொல்லிக் கொண்டிருப்பான். அப்புறம் வேறு ஏதாவது திட்டம் செய்தாயா என்று கேட்டார்கள். நான் இதைக் காட்டினேன் என்று அந்த பஞ்சுப்பையை எடுத்து காட்டுகிறான். இது ஒரு திட்டம் என்று இதை எடுத்துக்கொண்டு அவனிடம் காட்டியிருக்கிறாய். இனி உன்னை எந்த நேர்காணலுக்கும் அழைக்கப் போவதில்லை. இதையெல்லாம் போய் ஒரு விஷயம் என்று காட்டியிருக்கிறாய் பார்த்தாயா என்று அவளும் திட்டுகிறாள். அடுத்து என்ன செய்யப் போகிறாய் என்று கேட்கிறான். பெங்களூருவில் ஏதேனும் வேலை தேடிப் பார்க்க வேண்டும். அப்புறம் நீயும் இதற்கு முன்னால் சொல்லியிருக்கிறாயல்லவா பெங்களூருவில் ஐடி கம்பெனிகளில் வேலை பார்க்க வேண்டும், வைக்க வேண்டும் என்று. வாடி நாம் பெங்களூருவுக்குப் போவோம். ஒன்றாகவே வேலை தேடிப் பார்ப்போம் என்கிறாற்போல் கேட்கிறான். ஆனால் அவளோ அதெல்லாம் சரிப்படாது. இனி அப்படித்தான் என்கிறாள்.

[3:28]என்னை இப்படிப் பேசுகிறாய். நாம் ஏற்கனவே திட்டம் செய்தோமல்லவா என்று அவன் சொல்ல, நீதான் சொன்னாய் என்னிடம். என்ன சொன்னாய்? எட்டாவது செமஸ்டர் முடிவதற்குள் நான் கண்டிப்பாக எல்லா அரியர் பேப்பரையும் கிளியர் செய்துவிடுவேன் என்று சொன்னேன். கிளியர் செய்தாயா? அதேபோல கேம்பஸ் நேர்காணலிலேயே தேர்வு பெற்றுவிடுவேன், வேலை கிடைத்துவிடும் என்று சொன்னேன். வேலை கிடைத்ததா? எதுவும் நடக்கவில்லையல்லவா? அப்புறம் என்ன? இனி அப்படித்தான் என்று அவளும் சொல்கிறாள். சரி விடு, சரி பிடித்ததைச் செய். இந்தா இந்த பஞ்சுப்பையை நீயே வைத்துக்கொள் என்று அவளிடம் கொடுத்துவிட்டு, தேநீர் குடிக்கப் போகலாமா என்று கேட்கிறான். அதற்கெல்லாம் நேரம் இல்லை. கருத்தரங்கு வகுப்புக்காகத்தான் இங்கு வந்தேன். நான் போகிறேன் என்று போகிறாள். அப்புறம் இவன் நண்பனுடன் வண்டியில் ஏறி கிளம்பிக் கொண்டிருக்கிறான். எங்கே போகிறார்கள் என்று பார்த்தால் நம்ம ஹீரோவின் வீட்டுப் பக்கம்தான் போகிறார்கள். ஒரு குடியிருப்பில்தான் தங்கியிருக்கிறான். இவன் ஒரு கேட் வழியே போக, இன்னொரு கேட் வழியே ஒருத்தன் இவர்களைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே அங்கிருந்து போகிறான். அவனது வைஃபையைத்தான் நம்ம ஹீரோவுக்கே தெரியாமல் உபயோகிக்கிறான். வீட்டில் கணினி உபயோகிப்பதற்கு. ஒரு ரேம் வைத்திருந்திருப்பான். அதை கணினியில் மாட்டிவிட்டு, பவரை ஆன் செய்துவிட்டு, சிஸ்டத்தை ஆன் செய்துவிட்டான். எதற்கு அந்த நண்பன் இங்கு வந்திருக்கிறான் என்றால், ஒரு பெண்ணை, அவளது இன்ஸ்டாகிராம் கணக்கை ஹேக் செய்யச் சொன்னார்கள் அல்லவா? பிஷிங் செய்ய வேண்டும் என்று. அதற்காகத்தான் வந்திருக்கிறான். அவன் என்ன செய்கிறான் என்றால், ஒரு மெகா சேல் என்று போட்டு ஒரு போஸ்டரை அவளுக்கு அனுப்பி வைத்தாலே போதும், இலவசம் என்று சொல்லிவிட்டு ஆ என்று வாயைப் பிளந்துவிட்டு வந்து கிளிக் செய்வாள். நமது லிங்க்கைக் கொடுத்துவிடலாம். அதில் அவள் ஏதாவது உள்ளீடு செய்தால், ஐடி கடவுச்சொல் கிடைத்துவிடும் என்பது இவர்களின் திட்டம். அதை நம்ம ஹீரோ செய்து காட்டுகிறான். பார் என்று. நிறைய வேலைகள் பார்க்கிறார்கள். ஆனால் அதற்கெல்லாம் முன்னால் ஒரு வேலை நடந்திருக்கிறது பாருங்கள். அந்தச் சிரித்துக் கொண்டே ஒருத்தன் போனான் அல்லவா? அவனது வைஃபை கடவுச்சொல்லை மாற்றிவிட்டான் போல. வைஃபை கடவுச்சொல் இப்போது மாறிவிட்டது. ஐயோ, அப்ப நான் வேண்டுமானால் ஹாட்ஸ்பாட்டை ஆன் செய்யட்டுமா என்று இவன் கேட்க, அதெல்லாம் அவசியம் இல்லை. ஒரு நிமிடம் இரு என்று. வேறு ஒரு வைஃபை கருவியை வைத்திருப்பான். அதை எடுத்து, இணைத்து, அதையும் இதையும் என்று நிறைய வேலைகள் பார்த்து, மிக எளிதாக அந்தக் புதிய கடவுச்சொல் என்ன என்பதைக் கண்டுபிடித்துவிட்டான். பார்த்தால் இது அடுத்த அதிர்ச்சி. நம்ம ஹீரோவின் தங்கை பெயரில்தான் அவன் கடவுச்சொல்லையே வைத்திருக்கிறான். வைஃபை கடவுச்சொல்லாக.

[4:59]இவனுக்கு அது பெரிய அதிர்ச்சியாக இருக்கும். அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளாமல், அப்புறம், சரி இந்தா லிங்க் என்று லிங்கை அனுப்பி வைக்கிறான். இவன், அந்த நண்பன்தான் ஒரு போஸ்டர் தயார் செய்திருப்பான். இப்போது லிங்க் தயார். அவன் தயார் செய்த போஸ்டர் தயார். நான் அவளுக்கு அனுப்பப் போகிறேன் என்று அவளுக்கு அனுப்பி வைக்கிறான். அதை பார்த்த அடுத்த சில நிமிடத்தில் அழைப்பு வருகிறது. என்னடா என்று பார்த்தால், சேல் என்ற ஆங்கில வார்த்தையைக்கூடத் தவறாக எழுதியிருக்கிறாயேடா என்று அந்தப் பெண் திட்டுகிறாள். என்னையே ஏமாற்றுவதற்காகப் போலியா? எங்களது வாட்ஸ்அப் குழுவில் இப்படி வந்தால், அந்த லிங்க்கைக் கிளிக் செய்ய வேண்டாம் என்று அவேர்னஸ் மெசேஜ் எவ்வளவு வருகிறது தெரியுமா? என்று அந்தப் பெண் பதிவு செய்து அனுப்பி வைத்திருக்கிறாள் வாட்ஸ்அப்பில். உடனடியாக இவன் உஷாராகி. அப்படியே பதிலுக்குப் பாருங்கள். இவன் பதிவு செய்து அனுப்புகிறான். இப்படிப்பட்ட போஸ்டர் வந்தால் அதை கிளிக் செய்யாதே என்றுதான் நான் சொல்ல வந்தேன். அதற்குள் நீ முந்திக்கொண்டு மெசேஜ் அனுப்பிவிட்டாய். பார்த்து ஜாக்கிரதை. உன் குழுவில் மற்றவர்கள் இருந்தாலும் பகிர்ந்துகொடு. இப்படி ஷார்ப்பாக இருக்க வேண்டும் என்று போட்டு இவன் பதிவு செய்து அனுப்பி ஏதோ சமாளித்துவிட்டான். அவ்வளவுதான். திட்டம் தோல்வியா? எழுந்து கிளம்பு என்று நண்பனை விரட்டி விடுகிறான் நம்ம ஹீரோ. அப்படியே கேமரா ஃபோகஸ் ஆகி, மானிட்டரில் இவன் எழுதி வைத்திருந்த அந்தக் குறியீடு காட்டுகிறது. அடுத்து பார்த்தால், கல்லூரி முடியப் போகிறது போல. எல்லோரும் சேர்ந்து ஒரு குழுப் படம் எடுப்பதற்காக ஒன்றுகூடுகின்றனர். அங்கு வைத்து நாம் ஒரு செல்ஃபி எடுத்துக்கொள்ளலாமா என்று ஹீரோவுடன், ஹீரோயின், நண்பன் எல்லோரும் சேர்ந்து செல்ஃபி எடுத்துக்கொள்கிறார்கள். அப்புறம் மொத்தமாக சேர்ந்து ஒரு குழுப் படம். அடுத்து பார்த்தால், ஹீரோயினின் அப்பா ஒரு நிதி நிறுவனம் வைத்திருக்கிறார் என்று சொன்னோம் அல்லவா? அந்தக் கம்பெனியில்தான் ஐடி டிபார்ட்மென்ட்டில் பெண் வேலை பார்க்கப் போகிறாள். அந்த நிதி நிறுவனத்திற்கு ஒரு கிளை இருக்கிறது கொடுங்கல்லூர் கிளை என்று. அந்தக் கிளையில் ஏதோ பிரின்டர் பிரச்சனை போல. நம்ம ஹீரோவுக்குத் தெரிந்த ஒரு கணினி மையம், ஒரு கணினி கடை வைத்திருக்கிற அண்ணன். ஒரு கடைக்கார அண்ணன்தான் பிரின்டரை சரி செய்துவிட்டு பணம் கேட்கிறார். 900 ரூபாய் கேட்டதும், அங்கு வேலை பார்க்கும் அம்மா ஆடிப் போகிறது. 900 ரூபாயா? 450 ரூபாய்தானே என்று கேட்க, இன்று 450. போன தடவை வரும்போது பணம் கொடுக்கவில்லை அல்லவா? அதற்கு 450. மொத்தம் 900 என்கிறான். ஒரு 450 ரூபாய்தான் கொடுத்திருப்பார்கள் போல. அதை வாங்கிட்டு கீழே இறங்கும்போது நம்ம ஹீரோ தேநீர் குடித்துக் கொண்டிருப்பான். டேய் உன் ஆளின் கிளைதானே இது? உன் ஆளின் கம்பெனியின் ஏதோ ஒரு கிளைதானே இது? பணம் எல்லாம் சரியாக செட்டில் செய்யச் சொல். ஐடி-யின் தலைவராக வேறு உன் ஆளை உட்கார வைக்கப் போகிறார் அவளது அப்பா. ஏதாவது பார்த்து செய் என்கிறான் இவன் பேச, கூடவே, இருக்கும் எல்லா கிளையிலும், இந்த சிஸ்டம் மேலாண்மை வேலை ஏன் எனக்குக் கொடுக்கக் கூடாது? உன் பெண்ணிடம் பேசு என்கிறாற்போல் பேச, அட போப்பா உன்கிட்ட கொடுத்தால் அப்புறம் அனைத்தையும் மூடிட்டுப் போக வேண்டியதுதானே என்றதும், ஐயடா அந்தப் பெண்ணைக் கட்டிக்கொண்டு எல்லாம் உனக்குக் கிடைத்தால், அப்போதும் அனைத்தையும் மூடிட்டுப் போக வேண்டியதுதானே என்று இவன் விளையாடுவான். இதில் வேறு இவன் குடித்த தேநீருக்குக் கூடப் பணம் இல்லை போல. அவன்தான் செட்டில் செய்கிறான். எப்போது அழைப்பு செய்தாலும் பிசி பிசி என்று வருகிறதாம் அவளுக்கு. துண்டித்து துண்டித்து விடுகிறாள். என்னடா என்று பார்த்தால், உண்மையிலேயே இங்கு மீட்டிங்கில்தான் இருக்கிறார்கள். அப்பா, இவள், கம்பெனியில் இருக்கும் ஆட்கள் எல்லோரும் மீட்டிங்கில் இருக்கிறார்கள். ஒரு தாடிக்காரன் இருக்கிறான் அல்லவா? முகத்தில் லேசாகத் தழும்பு இருக்கும் போல. அவன்தான் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட். சிஏ. இந்தக் கம்பெனியின் நிதியைப் பார்த்துக்கொள்ளும் ஆள். அப்புறம் குண்டாகக் கண்ணாடி போட்ட ஒருத்தன் உட்கார்ந்திருக்கிறான் அல்லவா? அவன் ஐடி பையன். ஐடி டிபார்ட்மென்ட்டில் ஒரு ஆளாக இருக்கிறான். அந்த ஐடி டிபார்ட்மென்ட்டின் தலைவர் இப்போது நம்ம ஹீரோயின் வருகிறாள். செபி நிறைய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைக் கொண்டு வந்திருக்கிறது. ஐடி பக்கத்தில் பார்க்கும்போது நிறைய பாதுகாப்பு நமக்கு வேண்டும். அதற்காகத்தான் ஐடி டிபார்ட்மென்ட்டுக்குள் என் பெண்ணைக் கொண்டு வந்திருக்கிறேன் என்று பேசுகிறார் அவர். அடுத்து, நிதியாண்டு இறுதி வேறு வந்திருக்கிறது. செபி எதிர்பார்த்தது போல பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். அதற்கு பட்ஜெட் எல்லாம் ஒதுக்க வேண்டும் என்கிறாற்போல சிஏ கேட்க, சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் அந்தத் தாடிக்காரன் கேட்க, இது நிதியாண்டு இறுதி. நிதி வேலைகளைப் பார்ப்போம். அப்புறம் இந்த பட்ஜெட், பாதுகாப்பு இதெல்லாம் அப்புறம் பார்ப்போம் என்றார் பாஸ், அப்பா. அடுத்து, நண்பர்கள் சிலர் குளித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருத்தன் இந்தக் கல்யாணக் கொண்டாட்டத்திற்கெல்லாம் போய், வீடியோ எடுக்கும் வேலை பார்க்கிறான் போல. ஸ்டுடியோ வைத்திருக்கிறான் போல தெரிகிறது. அது சம்பந்தமாக ஏதோ பேசிக்கொண்டிருப்பார்கள். அப்புறம் அழைப்பு செய்ததற்கு இப்போதுதான் பெண்ணிடமிருந்து அழைப்பு வருகிறது. என்னடா துண்டித்துவிட்டாய், பிசி என்று தெரியாதா? அப்பாவுடன் ஒரு பெரிய மீட்டிங்கில் இருந்தேன். மீட்டிங் முடிவதற்கே இரண்டு மணிநேரம் ஆச்சு என்கிறாற்போல் அந்தப் பெண் சொல்லுவாள். அப்புறம் உனக்கு வேலை என்னாச்சு? ஏதாவது சேரப் போகிறாயா அல்லது இல்லையா என்று கேட்க, முயற்சி செய்து கொண்டிருப்பதாகச் சொல்கிறான். இந்தப்பக்கம் அந்த கணினி கடைக்காரன் பையனிடம் லேசாகப் பேசுகிறான். நாம் ஏன் இந்தக் கணினித் தொழிலையே பெரிதாகச் செய்யக் கூடாது? நீயும் சேர்ந்து கொள். லோக்கல் டிவி சேனல், சுற்றியிருக்கும் எல்லா பகுதிக்கும் நாம் விளம்பரம் செய்து, அப்படியே தும் தும் என்று பெரிதாகச் செய்யலாம் என்கிறாற்போல் கேட்க, நம்ம ஹீரோ விழிக்கிறான். சமீப நாட்களாக அவள் என்னுடன் பேசுவதே சரியாக இல்லை. எரிந்து எரிந்து விழுகிறாள். பைத்தியம் பிடிக்கிறாற்போல இருக்கிறது என்று புலம்பிக் கொண்டிருக்கிறான். போனில் பேசினால் அப்படித்தான்டா தெரியும். நேரில் பார்த்துப் பேசினால் சரியாகிவிடும். நேரில் பார்த்துப் பேசு, எல்லாம் சரியாகிவிடும் என்கிறாற்போல் கணினி கடைக்காரன் சொல்கிறான். அப்புறம் ஆபீஸில் இருந்து கொஞ்சம் சீக்கிரம் கிளம்ப வேண்டும். நண்பனைப் பார்க்கப் போகிறேன் என்கிறாற்போல். ஆட்டோ பிடித்துப் போய்க்கொள் என்று சொல்லும்போது, இல்லை இல்லை வேண்டாம். நீ கிளம்புகிறாய் அல்லவா? போகும் வழியில் என் பெண்ணை இறக்கிவிட்டுப் போ என்று சிஏவிடம் பாஸ் சொல்கிறார், அப்பா சொல்கிறார். சரி என்று அவனும் காரில் அந்தப் பெண்ணைக் கூட்டிச் சென்று கொண்டிருக்கிறான். காரில் போகும்போதே காரைக் கொஞ்சம் ஏற்றி குட்டியாக ஓட்டுகிறான் போல. சீட் பெல்ட்டை எடுத்து மாட்டிக்கொள்கிறாள். ஏன் அப்பாவின் கம்பெனிக்குள்ளேயே சேர்ந்தாய் என்று அவன் கேட்பான். வேறு கம்பெனியே கிடைக்கவில்லையா என்று கேட்பான். அவளிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. இல்லை சில கம்பெனிகளில் எனக்குப் பணி நியமனம் கிடைத்தது. ஆனால் வீட்டிலிருந்து ரொம்ப தூரமாகப் போவது எனக்கு ஒரு மாதிரி இருக்கிறது. எனக்கு எப்போதுமே வீட்டு நினைப்பு உண்டு. வீட்டையே நினைத்துக் கொண்டிருப்பேன் என்று சொல்ல, நானும் அப்பேற்பட்ட பையன்தான் என்று உடனே சிரிக்கிறான். அப்புறம் நண்பனைப் பார்க்கப் போனேன் என்று சொன்னான் அல்லவா? நம்ம ஹீரோவைப் பார்ப்பதுதான் வந்திருக்கிறாள். ஹீரோவை சிஏவிடமும், சிஏவை ஹீரோவிடமும் அறிமுகப்படுத்தி வைக்கிறாள். அப்புறம் இரண்டு பேரும் ஒன்றாகச் சேர்ந்து ஒரு கடையில் போய் உட்காருகிறார்கள். ஜூஸ் ஆர்டர் செய்திருப்பான். கட்லெட் ஆர்டர் செய்திருப்பான். சரி என்ன விஷயம் என்று கேட்க, தான் இப்படிப்பட்ட பிசினஸ் ஆரம்பிக்கப் போவதாகவும், அந்தக் கணினி கடைக்காரனுடன் சேர்ந்து பிசினஸை பெரிதாக, பெரிய லெவலில் டெவலப் செய்யப் போவதாகவும் பேசிக் கொண்டிருக்கிறான். உன் அப்பா பிசினஸ்மேன்தானே. அப்படிப்பட்ட நானும் பிசினஸ்மேன் ஆகிறேன் என்கிறாற்போல் பேசுகிறான். அதெல்லாம் நடக்கிற காரியம் இல்லை. ஒழுங்காக வேலைக்குப் போ என்கிறாற்போல் சொல்கிறாள். ஆனால் அவன் கேட்க மாட்டேன் என்கிறான். ஓ அப்ப முடிவு செய்துவிட்டாய். முடிவு செய்த பிறகு அப்புறம் ஏன் என்னிடம் பேசுகிறாய் என்று கோபப்படுகிறாள். போனைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய். எப்போது பார்த்தாலும் போன் போன் போன். கொஞ்சம் நேரில் மூஞ்சியைப் பார்த்துதான் பேசு என்று கோபப்படுகிறாள் அவள். சரி ஒரு கால் உன் அப்பா இந்தக் கல்யாணத்துக்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால், அப்ப என்னுடன் ஓடிப்போகத் தயாரா என்று கேட்க, அப்படி எல்லாம் ஓடிப்போய் எல்லாம் வர முடியாது. நீ இந்து, நான் கிறிஸ்தவன். நாம் நல்லபடியாகக் கல்யாணம் செய்துகொண்டால், இதுவே ஒரு பிரச்சனைக்குரிய கல்யாணம்தான். இதில் ஓடிட்டெல்லாம் வர முடியாது. ஒரு நல்ல வேலை இல்லை என்றால், உன்னை நம்பி எப்படி வர முடியும் என்று கேட்கிறாள். உன் அப்பா பிசினஸ் செய்கிறார் என்றால் என்னாலேயும் செய்ய முடியும் என்று இவன் வீசின போடுவான். என் அப்பாவின் பிசினஸை நீ பார்த்திருக்கிறாயா? எவ்வளவு பேர் வேலை பார்க்கிறார்கள் தெரியுமா என்று இவள் பதிலுக்குச் சொல்கிறாள். இங்க பாரு, நான் இப்போதே உன்னை வா ஓடிப்போகலாம் என்று சொல்ல வரவில்லை. ஆனால் ஓடிப்போகும் அந்த முடிவுக்குச் சம்மதமாக இருக்கிறதா என்று கேட்க வந்தேன் என்று சொல்ல, இந்தக் கட்லெட் கட்டுவதற்குக்கூட உன்கிட்ட பணம் இல்லையல்லவா? எப்படி இவள் பணம் கொடுப்பாள் என்று நம்பித்தானே கட்லெட்டை ஆர்டர் செய்தேன் என்று சொன்னதும், இவன் முகம் ஒரு மாதிரி அப்படியே வீங்கிவிடுகிறது. அழுகை வரவில்லை. அவ்வளவுதான் குறை. ரொம்ப அவமானப்பட்டுப் போனான். பையில் ஒரு 100, 150 ரூபாய் வைத்திருப்பான். மொத்தத்தையும் எடுத்து டேபிளில் வைத்துவிட்டு, விருட்டென்று நடந்து போய்விட்டான். ஐயோ அவசரப்பட்டுவிட்டோமே என்கிறாற்போல் இவளுக்கும் ஒரு மாதிரி ஆகிவிடுகிறது. இந்தப் பக்கம் நண்பனிடம் புலம்ப ஆரம்பிக்கிறான். காரில் ஒருத்தன் கொண்டு வந்து இறக்கிவிட்டால், சிஏ என்கிறார்கள். அப்படிலாம் பேச ஆரம்பித்ததும், கூட இருக்கும் நண்பன் நன்றாக ஏற்றி விடுகிறான். போச்சு போச்சு, அவர்கள் இரண்டு பேரும் காதல் செய்யப் போகிறார்கள். உன்னைக் கழற்றிவிடப் போகிறார்கள் என்று ஏத்திவிட ஆரம்பிக்க, இவன் ஒரு மாதிரி ஆகிறான். அன்றைக்கு அந்த இன்ஸ்டாகிராம் கணக்கை ஹேக் செய்வது பற்றி நான் கேட்டேன் அல்லவா? இந்நேரம் அதை ஹேக் செய்து நீ அறிந்திருந்தால், உன் ஆளின் இன்ஸ்டாகிராம் கணக்குக்குள் ஹேக் செய்து, அவர்களுக்குள் ஏதாவது இருக்கிறதா என்று உன்னால் பார்த்திருக்க முடியும் என்று லேசாக மண்டையைக் குழப்பிவிட்டான். உடனே இவன், இன்ஸ்டாகிராம் கணக்கை எப்படி ஹேக் செய்யலாம் என்று நெட்டில் ஒரு சாட் ரூமுக்குள் போய் இவனை மாதிரியே நிறைய புத்திசாலிப் பசங்கள் எல்லாம் இருப்பார்கள். அவர்களுடன் எல்லாம் விசாரித்துக் கொண்டிருக்கிறான். அவர்கள் சொல்கிற சில பயிற்சிகள் எல்லாம் எடுத்து படித்துக் கொண்டிருக்கிறான். எப்படி ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கை ஹேக் செய்வது என்று. அதே சமயத்தில் நண்பன் இந்தப் பக்கம் போன் செய்கிறான். என்னடா கண்டுபிடித்துவிட்டாயா என்று கேட்க, இல்லைடா இப்பதான் அது சம்பந்தமாகப் படித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்ல, இங்கு பார், படித்து எல்லாம் தெரிந்து கொண்டால் என்னிடம் சொல்லிவிடு அனைத்தையும். அதைவிட்டுவிட்டு திடீரென்று வால்ப்பேர் என்ன சில்பாவா? சில்பா 123 என்று போட்டான்டா. உள்ளே போயிடுச்சுடா என்று வந்து நாளைக்கு என்னிடம் கதை விடக் கூடாது. எப்படி கண்டுபிடித்தேன் என்று சொல்ல வேண்டும் என்ன என்று சொல்ல, ஆ சரி சரி வை என்று போனைத் துண்டித்துவிட்டு இவன் முழித்துக் கொண்டே இருக்கிறான். முயற்சி செய்து முயற்சி செய்து, எவ்வளவு நேரம் முயற்சி செய்தாலும் ஹேக் செய்ய முடியவில்லை. அப்படியே படுத்துக் கிடந்தவன், நள்ளிரவில் அவனுக்கு ஒரு யோசனை வருகிறது. சில்பா 123. ஏன் இந்த சில்பா 123-ஐயே கடவுச்சொல்லாக முயற்சி செய்து பார்க்கக் கூடாது என்ற ஒரு எண்ணம். அந்தப் பக்கம் பார்த்தால், அவள் அப்போதான் தூங்குவதற்காக வந்திருக்கிறாள். தூங்கப் போகிறாள். இவன் சில்பா 123 என்று இன்ஸ்டாகிராமில் போட்டுப் பார்க்கிறான். டப்பு என்று உள்ளே போய்விட்டது. இரவு 1:30 மணி இருக்கும். உள்ளே போய் சாட் ஹிஸ்டரியைத்தான் சரிபார்த்துப் பார்க்கிறான். அவள் அந்தப் பக்கம் தூங்கிவிட்டாள், போனை வைத்துவிட்டு. ஆனால் அதே சமயம் நம்ம சிஏ பயபுள்ளை தூங்காமல் முழித்துக் கொண்டிருக்கிறான். இவளுக்கு மெசேஜைப் போடுகிறான். தூங்கிவிட்டாயா என்று கேட்கிறான். அதுவும் இரவு 1:30 மணிக்கு. இப்படி இவன் ஆரம்பிக்கிறான் என்றால் என்ன அர்த்தம்? அந்தப் பெண்ணைக் காதல் செய்ய முயற்சி செய்கிறான் என்று அர்த்தம் அல்லவா? அதை இவன் தெரிந்து கொண்ட பிறகு, இவனால் சும்மா இருக்க முடியுமா? 1:30 மணிக்கு தூங்கிவிட்டாயா என்று கேட்கிறாயா? போய் உன் அப்பனிடம் கேள் என்று ஒரு போட்டோ மெசேஜை போட்டு அனுப்பி, அதைப் படித்துப் பார்த்ததும், கூடவே, அதையும் இதையும் என்று கெட்ட வார்த்தை வேறு போட்டு வைத்துவிட்டான். ஆடிப் போனான் ஆடி. சே காலைல எழுந்து அம்மாவிடம் மன்னிப்புக் கேட்கிறான். இரவு 1:30 மணிக்கு இந்த மெசேஜ் அனுப்பியிருக்கக் கூடாது. என் தவறுதான். உன் பிள்ளையைக் காப்பாற்றுவது போல என்னையும் காப்பாற்று தாயே என்று வேண்டிக்கொண்டுதான் கண்ணாடியைப் போட்டு உள்ளே போவான். இவளிடம் ஏதோ லேசாகப் பேச்சு கொடுக்கப் பார்ப்பான். இரவு ரெஸ்பான்ஸ் ஏதாவது இருக்கிறதா என்று. ஆனால் அவள் அந்த மாதிரி ஒரு சம்பவம் நடக்காததுபோலவே பேசிக் கொண்டிருக்கிறாள். அவன் முகத்தில் இந்த மாதிரி எந்த ஒரு வித்தியாசத்தையும் பார்க்காததுனால, தவறாக நினைக்காதே, இந்த மெசேஜைப் பார் என்று அவன் எடுத்து காட்டுகிறான். அதைப் பார்த்ததும் அவளுக்கு ஓ என்று அழுகை வருகிறது. இந்த மெசேஜை அவன் அனுப்பவில்லை என்பதை அவனும் புரிந்துகொள்கிறான். ஆனால் யார் அனுப்பினார் என்பது அவனுக்குத் தெரியவில்லை. ஏதாவது கேட்க வந்தால், அவள் அழுது கொண்டிருக்க, சரி சரி நான் கிளம்புகிறேன். இதற்காக நீ அழ வேண்டாம் என்று சொல்லிவிட்டு அவன் கிளம்பி விடுகிறான். இவளுக்குச் சந்தேகம் இருக்கும். நம்ம ஹீரோதான் செய்திருப்பான் என்று. ஹீரோவுக்கு அழைப்பு வருகிறது. எடுத்ததுமே இவன் நேற்று கொஞ்சம் இது ஆகிவிட்டது. மன்னித்துக்கொள் என்று ஆரம்பிப்பான். அப்ப நீதானே அதைச் செய்திருக்கிறாய் என்று சரியாகக் கேட்கிறாள். எப்போதோ உன்கிட்ட எனது இன்ஸ்டாகிராம் கடவுச்சொல்லைச் சொல்லியிருப்பேன். நேற்று உனக்கும் எனக்கும் சண்டை என்றதும், என் இன்ஸ்டாகிராம் கணக்குக்குள் கடவுச்சொல்லைப் போட்டு உள்ளே வந்திருக்கிறாய். என் நம்பிக்கையைக் கெடுத்துவிட்டாய். பாழாக்கிவிட்டாய். இனிமேல் உனக்கும் எனக்கும் பேச்சுவார்த்தை கிடையாது. வைடா போனை என்று போனைத் துண்டித்துவிட்டாள். அவ்வளவுதான். இவன் நொந்து போய் வருகிறான். இதைப் பார்த்த கடைக்காரன், என்ன உன் ஆள் ரொம்ப ஓவராகச் செய்கிறாள்? ஏதோ கடவுச்சொல்லை உள்ளே நுழைத்துவிட்டாள். அவ்வளவுதானே. என்னை முன்னால் ஒருத்தன் உன் ஆளுடன் சாட் செய்தானா இல்லையா என்று கேட்க, ஆம் என்கிறான். ஐயோ என்கிறான் அவர். சரி சாட் செய்தானா இல்லையா? யாரையாவது கெட்ட வார்த்தையால் திட்டினாயா என்ன? இவ்வளவு எதிர்வினையாற்றுகிறாய் என்று கேட்க, ஆம் திட்டினேன் என்று வேறு சொல்கிறான். விளங்கிப்போ என்கிறாராம் அவர். துண்டித்தால், அடுத்து, அப்பாவின் கம்பெனியில் இருக்கிற ஐடி பையனும் சிஏவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி இவன் அந்தப் பெண்ணைக் காதல் செய்யப் போகிறேன் என்று பேசிக் கொண்டிருக்க, ஐடி பையன், டேய் பார்த்துடா அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே ஆள் இருக்கப் போகிறது. நீ கட்டிக்கலாம் வைக்கலாம் என்ற நிலைக்குப் போய்க் கொண்டிருக்கிறாய் என்று சொன்னால், ஆம் வயது 30 ஆகிவிட்டது. வீட்டிலேயும் வரன் பார்க்கிறார்கள், கல்யாணம் செய்வோம் என்று இருக்கிறார்கள். நான் ஏன் இந்த பெண்ணைக் கட்டிக் கொள்ளக் கூடாது என்று பேசுகிறான். நான் சிஏ, சாதாரண வேலை இல்லை. எவ்வளவு பெரிய வேலை தெரியுமல்லவா என்று விளையாட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறான். சரி, அந்தப் பெண்ணுக்கு ஆள் இருந்தானா என்று ஐடி பையன் கேட்க, இங்க பார், நாங்கள் நிதி. எல்லாமே நம்பிக்கைதான் வாழ்க்கை என்று அவர் போடுவார். பாசிட்டிவாகத்தான் சிந்திப்போம் என்கிறான். டேய் நான் ஐடிடா. எப்போதுமே ஏதாவது தவறாக நடக்குமோ என்று யோசிக்கிறவர்கள்தான் நாங்கள் ஐடி பையன்கள். இங்க பார், எவனோ ஒருத்தன் அந்தப் பெண்ணின் கடவுச்சொல்லையே போட்டு உள்ளே வந்திருக்கிறான் என்றால், கண்டிப்பாக அது பாய்ஃபிரண்டாகத்தான் இருக்கும். விசாரி என்கிறான். சரி பாய்ஃபிரண்டாகவே இருந்துவிட்டுப் போகட்டும். அந்த பாய்ஃபிரண்டைக் கூடிய விரைவில் நான் முன்னாள் பாய்ஃபிரண்டாக மாற்றி காட்டுகிறேன் பார் என்று இவன் சபதம் போடுகிறான். துண்டித்தால், பழைய ஃபிளாஷ்பேக்கைக் நமக்குக் காட்டுகின்றனர். இவர்கள் இரண்டு பேரும் கல்லூரியில் ஒன்றாகப் படித்துக் கொண்டிருப்பார்கள். அப்புறம் கணினியில் உட்கார்ந்து தோண்டிக் கொண்டிருப்பான். இன்டர்நெட் எடுக்கவில்லை என்றால் ஒரு ஜுராசிக் பார்க், அதற்குப் பேர் என்ன டைனோசரா? டைனோசர் ஜம்ப் செய்து ஜம்ப் செய்து போகிறாற்போல் ஒரு கேம் இருக்கும். இன்டர்நெட் இல்லையென்றால் அந்த கேம் விளையாடிக் கொண்டிருக்கலாம். அதை விளையாடிக் கொண்டிருக்கிறான். என்னங்க இன்டர்நெட் இல்லையா என்று இவள் கேட்க, இல்லை இல்லை இன்டர்நெட் இருக்கிறது. நான்தான் கேம் விளையாடலாமே என்று லேனைப் பிடுங்கிவிட்டுவிட்டேன். நீங்கள் உட்காருங்கள் என்று உட்காரச் சொல்கிறான். அப்புறம் அவள் உட்கார்ந்தவள், நாம் ஒரே கிளாஸ்தான். தெரியும் அல்லவா என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறாள். இல்லை உன் பேர் சில்பா என்று எனக்குத் தெரியும் என்று அவன் சொல்வான். அப்புறம் சீனியர்கள் எல்லாம் ராகிங் செய்யப் போகிறார்கள். ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமான டான்ஸ் ஆடச் சொல்லியிருக்கிறார்களாம். இவளுக்கு ஒன்று சொல்லியிருக்கிறார்கள். இவருக்கு மரம் கல்லி என்று ஏதோ ஒரு டான்ஸ் சொல்லியிருக்கிறார்கள் போல. அதெல்லாம் ஆடுவோம். இல்லை என்றால் பிரச்சனை பெரியதாகிவிடும் என்கிறாற்போல சொல்லிக் கொண்டிருக்கிறாள். இவன் விழிக்கிறான். இதெல்லாம் ஃபிளாஷ்பேக். இப்போது நடப்புக்கு வந்தால், வீட்டில் உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறான். ஓ என்று. அம்மா வெளியே இருந்து டேய் சாப்பிடவில்லைடா. வாடா வாடா என்று கதவைத் தட்டினாலும், கதவைத் திறக்கவே இல்லை. உள்ளே உட்கார்ந்து அழுது புரண்டு கொண்டிருக்கிறான். சாப்பிடவில்லை, தூங்கவில்லை. அழுகை மட்டுமே ஓடிக் கொண்டிருக்கிறது. அவளுடன் தொடர்பில் இருக்கலாம் என்று பார்த்தால், எல்லாவற்றிலும் தடுத்து வைத்திருக்கிறாள் போல. இதில் காண்டானவன் அடுத்த நாள் எழுந்து முதல் வேலையாக ஒரு ஆட்டோவைப் பிடித்து, அவள் வேலை பார்க்கும் இவனது அப்பாவின் ஹெட் ஆபீஸ், அங்கேயே போய் இறங்குகிறான். சில்பாவின் நண்பன் என்று வரவேற்பில் சொல்லி, அவள் எங்கே என்று கேட்க, ஆபீஸுக்குள்ளேயே வந்து உட்காருகிறான். அவள் அரண்டு போகிறாள். இங்கு எதற்கு வந்தாய் என்று கேட்க, நீதான் எல்லாவற்றிலுமே என்னைத் தடுத்துவிட்டாய் அல்லவா? அதான் உன்னைப் பார்க்க வந்தேன் என்று சொல்லி உட்காருகிறான். என்ன பேச வேண்டியது கிடக்கிறது? அவ்வளவுதான் உனக்கும் எனக்கும் எல்லாம் முடிந்து போய்விட்டது. எனக்கு என்று ஒரு தனிமை இருக்கிறது. அதை மதிக்காதவன். என்னை நம்பாதவன் எனக்கு வேண்டாம் என்கிறாற்போல் பேசுகிறாள். இல்லை தெரியாமல் செய்துவிட்டேன். மன்னித்துக்கொள் என்று மன்னிப்புக் கேட்கிறான் நம்ம ஆள். மன்னிப்புக் கேட்டால், விடக்கூடிய காரியமா செய்திருக்கிறாய். இன்னும் இருக்கும் அரியர்ஸை கிளியர் செய்யவில்லை. ஒரு நல்ல வேலை இல்லை. படிக்க மாட்டேன், கிளியர் செய்ய மாட்டேன், வேலைக்குப் போக மாட்டேன். ஆனால் பெண் மட்டும் உனக்கு வேண்டுமாக்கும் என்று அவள் கேட்பாள். நான் ஒன்றும் உன் அப்பாவிடமிருந்து பணம் வாங்கிக் கொள்வதற்காக உன்னைக் காதல் செய்யவில்லை என்கிறான் இவன். இந்தப் பேச்சுக்கு மட்டும் ஒன்றும் குறைச்சல் இல்லை என்று சொல்லி முடிக்கவில்லை. அதற்குள் பார்த்தால், வெளியே இருந்து அப்பா உள்ளே வருகிறார். என்ன பிரச்சனை என்று. இல்லைப்பா ஒன்றும் இல்லைப்பா என்று இவள் சொல்லி சமாளிக்கப் பார்ப்பாள். வெளியே இருந்து அனைத்தையும் கேட்டுவிட்டேன். உன் அப்பன் ஒன்றும் ஒன்றும் தெரியாத அப்பா இல்லை. எழுந்து நீ கிளம்பு. எனக்குத் தெரிய வேண்டியது ஒன்றுதான். இதற்கு முன்னால் உங்களுக்குள் என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும். அது எனக்கு நான் கண்டுகொள்ளவில்லை. இப்போது சொல். உங்கள் இரண்டு பேருக்கும் மத்தியில் ஏதாவது இருக்கிறதா என்று கேட்க, இல்லைப்பா என்று சொல்லிவிடுகிறாள். அப்ப வீட்டுக்குப் போடா என்று பெண்ணை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, அவனை உட்காரச் சொல்லிவிட்டு இவரை உட்காருகிறார். பெயரென்ன என்று விசாரிக்க, பேர் விஷ்ணுவாம். சோ இவர்கள் இந்து. பெண் பேர் சில்பா. அப்ப இவன் கிறிஸ்தவன் ஆகிவிட்டது. இதுவே பெரிய இடி. அடுத்து, வெளியே இருக்கும்போது கேட்டேன். அரியர், வேலை இல்லை. ஆனால் காதல் கிதல் என்று மட்டும் திரிகிறாய். உன் வயதில் நான் எவ்வளவு வேலை பார்த்திருக்கிறேன் தெரியுமா? ஒரு காலத்தில் நான் எப்படி இருந்தேன் என்று நீ காதல் செய்த அந்தப் பெண்ணிடம் நீ கேட்டிருக்க வேண்டும். கேட்டிருக்க மாட்டாய். அதனால்தான் இவ்வளவு தைரியமாக என் ஆபீஸ் வரைக்கும் வந்திருக்கிறாய். ஒரு பெரிய வீட்டுப் பெண்ணை மடக்கிப் போட்டுவிட்டால், செட்டில் ஆகிவிடலாம் என்று பார்க்கிறாயா என்று கேட்பார். இல்லை இல்லை, உன் பணத்திற்காக ஒன்றும் நாங்கள் இதைக் காதல் செய்யவில்லை என்கிறான். ஆனால் இப்போது அவள் ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டாள் அல்லவா என்று அப்பா சொல்ல, சும்மா கோபத்தில் சொல்கிறாள். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு கண்டிப்பாக என்னை மன்னித்துவிடுவாள். அவள் இன்னும் என்னைக் காதல் செய்கிறாள் என்றுதான் சொல்வான். இங்க பார், ஒரு கால் அவள் உன்னைக் காதல் செய்வதாகவே இருக்கட்டும். அப்பா என்னை கல்யாணம் செய்து வைக்கிறாயா? இல்லை இந்தப் பையனுக்கு எனக்கு கல்யாணம் செய்து வைக்கிறாயா? இல்லை தூக்கு மரத்தில் தொங்கட்டுமா என்று கேட்டால், தாராளமாக தூக்கு மரத்தில் தொங்கு என்று சொல்வேனே ஒழிய, உன்னைப் போல ஒரு ஆளுக்கு என் பெண்ணை கல்யாணம் செய்து கொடுக்க மாட்டேன் என்கிறார். சார், உங்கள் விருப்பம் இருக்கிறதோ இல்லையோ, அவள் என்னைக் காதல் செய்தால், நான் கல்யாணம் செய்வேன் என்று சொல்லும்போது பொலீர் என்று ஒரு அறை விடுகிறார். எவ்வளவு தைரியம் ராஸ்கல். இன்னொரு தடவை என் ஆபீஸ் பக்கம் இது சம்பந்தமாக வந்தாய். அவ்வளவுதான். வெளியே போடா நாயே என்று துரத்திவிடுகிறார். பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தவன், அந்த அடியையும், அவமானத்தையும், அழுகையையும் மறக்கவே முடியாத மாதிரி ஒரு மாதிரி போய்க் கொண்டிருக்கிறான். பயங்கர கோபத்துடன் போய்க் கொண்டிருக்கிறான். இங்கே, அந்த கணினி கடைக்காரனின் கடைக்கு வந்துவிட்டு, என் கூட நிற்பாயா இல்லையா என்று கேட்கிறான். கடைக்காரனுக்கு என்ன நடக்கிறது என்றே புரியாமல், என்னடா கூட நிற்க வேண்டும்? என்னடா செய்யப் போகிறாய் என்று கேட்க, அந்த அப்பாவை அடிக்கப் போகிறேன் என்கிறான். இவன் அரண்டு போகிறான். எதை அடிக்கப் போகிறாய்? என்னாச்சுடா என்று கேட்க, மன்னிப்புக் கேட்கலாம் என்று பெண்ணைப் பார்க்கப் போனேன். அப்பா பொலீர் என்று என்னை அறைந்துவிட்டான் என்று கோபப்படுகிறான். பதிலுக்கு அறைந்தானா என்று கேட்க, இங்க பார், அவர்கள் எல்லாம் பெரிய பணக்காரர்கள். அப்படி எல்லாம் நாம் எளிதாகப் போக முடியாது. இந்தா தண்ணீர் குடி தண்ணீர் குடி என்கிறாராம் அவர். பக்கத்தில் ஆட்டோக்காரன் உட்கார்ந்திருப்பான். தெரிந்தவன். அவன் கன்னத்தைப் பார்க்கிறான். ஆம், ஒரு மாதிரி சிவந்து போய்தான் இருக்கிறது பாவம். அதே சமயம் போன் அழைப்பு வருகிறது. அந்தக் கம்பெனியின் ஒரு கிளை, கொடுங்கல்லூர் கிளை என்று சொன்னோம் அல்லவா? அந்தக் கிளையில் மறுபடியும் பிரின்டர் பிரச்சனை போல தெரிகிறது. வந்து சரி செய்யச் சொல்லி கேட்க, உடனே அவர் கிளம்புகிறார். கொஞ்சம் இரு. பொறுமையாக இரு. நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டு, கடைக்காரன், நானும் கூட வருகிறேன் என்று ஏறி வண்டியில் உட்காருகிறான். ச்சீ அதுக்கு பேர் என்னது பைக்கா? பைக்கில் உட்காருகிறான். அப்புறம் இரண்டு பேரும் ஒன்றாக அந்தக் கிளைக்குச் செல்கிறார்கள். கூடவே இவனும் போகிறான். பார்த்தால் அங்கு, கணினி வயர் பிடுங்கிக் கிடக்கிறது. நெட் எடுக்கவில்லை. பிரின்டரை சரி செய்வதற்காக அவர் போய்விட்டார். இவன் அவனிடம் போய், நான் அவர்கள் கணினியில் உட்கார வைப்பேன் என்கிறான். உடனே ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை சரிபார்க்க வேண்டும். கொஞ்சம் கணினி கொடுங்கள் என்று கடைக்காரன் சொன்னதும், ஒரு அம்மா எழுந்து கணினியைக் கொடுக்கிறது. ஏற்கனவே இன்டர்நெட்டில் இந்த கிளை இப்போது தொடர்பில் இல்லை. ஏனென்றால் லேன் வயர் பிடுங்கிக் கிடக்கிறது. ஆனாலும் அவர்கள் சரியாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்றால், லோக்கல் ஐபியில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம். பப்ளிக் ஐபி என்று சொல்வோம். அந்த ஐபி முகவரியை இவன் குறித்துக் கொண்டான். அது போதும் இவனுக்கு. அதே மாதிரி ஹெச்டிடிபிஎஸ் என்று சொல்வார்கள். எஸ்எஸ்எல் சர்டிபிகேட் என்று ஒரு பாதுகாப்புச் சான்றிதழ் வாங்க வேண்டும். அதைத்தான் நிதியாண்டு இறுதிக்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அன்றைக்கு அப்பன் சொன்னான். இன்னும் அந்தப் பாதுகாப்பை இவர்கள் பட்ஜெட் போட்டு எஸ்எஸ்எல் சான்றிதழ் வாங்கி எல்லாம் செட் செய்யவில்லை. அது இவனுக்கு வசதியாகப் போய்விட்டது. வெளியே வரும்போது கடைக்காரன், என்னடா செய்யப் போகிறாய் என்று கேட்க, இப்படிப்பட்ட பப்ளிக் ஐபி கிடைத்துவிட்டது. கடவுச்சொல்லைக் கண்டுபிடித்தால், உள்ளே போய் ஏதாவது செய்யலாம் என்கிறான். நன்றாக பலமாகச் செய்துவிடு மாப்பிள்ளை என்கிறார் அவர். அப்புறம் ஹீரோவின் வீட்டுக்கு வந்து, அந்த ஐபியைப் போட்டு, பாதுகாப்பு எதுவும் பெரிதாக இல்லை என்பதனால், கடவுச்சொல்லை மட்டும் கண்டுபிடித்தால் போதும். எப்படிடா கடவுச்சொல்லைக் கண்டுபிடிப்பாய் என்று கேட்க, கிட்டத்தட்ட, பெரும்பாலான மக்கள் இப்படிப்பட்ட கடவுச்சொல்லைத்தான் உபயோகிப்பார்கள் என்று சொல்லி, கிட்டத்தட்ட ஒரு ஒன்றரை கோடி கடவுச்சொல் இருக்கிறதாம். அந்த ஒன்றரை கோடி கடவுச்சொல் ஒரு தரவுத்தளத்தில் இருக்கிறது. அந்தத் தரவுத்தளத்தில் இருக்கும் ஒவ்வொரு கடவுச்சொல்லையும், அவர்களின் ஐபி முகவரியில் அட்மினிஸ்ட்ரேட்டர் என்பதுதான் யூசர்நேமாக இருக்கும் பெரும்பாலும். கடவுச்சொல்லில் இந்த ஒன்றரை, ஒன்றரை கோடியா அது? ஆம் ஒன்றரை கோடி கடவுச்சொல்லையும் வரிசையாக உள்ளீடு செய்து உள்ளீடு செய்து உள்ளீடு செய்து ஒரு புரோகிராமே கண்டுபிடித்துக் கொடுத்துவிடும். அந்த, அதற்கு அட்டாக் என்று சொல்வார்கள். அந்த அட்டாக்கை ஆன் செய்து விடுகிறான். அப்படியே ஓட ஆரம்பிக்கிறது. ஒவ்வொரு கடவுச்சொல்லாக உள்ளீடு செய்ய ஆரம்பிக்கிறது கணினி. ஓடி முடிந்ததும் சரியான கடவுச்சொல் கிடைத்துவிட்டால், நாம் பார்த்துவிடலாம் என்று இவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். எதிர்பார்த்தது போலவே சரியான கடவுச்சொல் கிடைத்துவிட்டது. என்ன கடவுச்சொல்லாக வைத்திருக்கிறான் என்று பாருங்கள். கீபோர்டில் 1234 என்று மேலே பட்டன் இருக்கும் அல்லவா? அந்த 1234-க்கு கீழே என்ன இருக்கிறது என்று பாருங்கள். சியூஇஆரா? கியூடபிள்யூஇஆர் என்று இருக்கும். எண்களில் ஒரு வார்த்தை, கீழே இருந்தால் அந்த எழுத்துக்களில் ஒரு வார்த்தை என்று 1க்யூ2டபிள்யூ3இ4ஆர் என்று கடவுச்சொல் வைத்திருக்கிறார்கள் போல. எளிதாகக் கண்டுபிடித்துவிட்டது. கடவுச்சொல் கிடைத்துவிட்டது என்று மகிழ்ச்சி அடைகிறான். அந்தக் கடவுச்சொல்லை வைத்து, இவன் கண்டுபிடித்த அந்த ஐபி முகவரி, யூசர்நேம் கடவுச்சொல். இதையெல்லாம், அந்தப் பிரின்டர் வேலை செய்யாமல் போனது அல்லவா? அந்தக் கிளையில் இவன் ஒரு கணினியில் உட்கார்ந்தான் அல்லவா? அந்தக் கணினியின் விவரம் எனக்கு வேண்டாம். ஏனென்றால், 100 கிளை இருக்கும். 100 கிளைகளுக்கும் தனித்தனி கணினி, தனித்தனி சர்வுகள் எல்லாம் இருக்க வாய்ப்பில்லை. ஹெட் ஆபீஸில் ஒரே சர்வம்தான் இருக்கும். அந்த ஒரே சர்வரைத்தான் 100 கிளை, 1000 கிளை இருந்தாலும் அணுகுவார்கள். அந்த ஒரு சர்வருடைய விவரம், அந்த 100 கிளையில் எந்த ஒரு கணினியில் உட்கார்ந்து வேண்டுமானாலும் நம்மால் கண்டுபிடிக்க முடியும். அந்த சர்வருடைய முகவரி, முகவரியைத்தான் யூசர்நேம் கடவுச்சொல்லுடன் நம்ம பையன் கண்டுபிடித்து வைத்திருக்கிறான். அதை உள்ளே நுழைத்து உள்ளே போனால், உள்ளே போக முடிகிறது. அதில் வாடிக்கையாளரின் விவரம், வாடிக்கையாளர் செய்த பரிவர்த்தனை விவரம், அந்த கோப்புறையை மொத்தமாக நிரந்தரமாக நீக்கிவிட்டுவிட்டான்.

[20:05]அதன் விளைவு அடுத்த நாள், இருக்கும் எல்லா கிளைகளிலும் பிரச்சனை வர ஆரம்பிக்கிறது. அவர்கள் மென்பொருளில் போய் பார்த்தால், நோ டேட்டாதான் வரும். வருபவர்களிடம் எல்லாம், மென்பொருள் வேலை செய்யவில்லை, மென்பொருள் வேலை செய்யவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எல்லா கிளையையும் அப்படியே தலைகீழாகப் புரட்டிப் போட்டது போல ஆகிவிட்டது. அதே சமயத்தில் அப்பா சர்ச்சில் உட்கார்ந்திருப்பார். இந்தக் கூத்து எல்லாம் அவருக்குத் தெரியாது. பிரச்சனை தலைக்கு மேல் போக, வேறு வழியில்லாமல், ஐடி பையனைத் தோண்டிக் கொண்டிருக்க, ஐடி பையன் ஒருத்தன், அந்தக் கணினியில் உட்கார்ந்திருப்பான் பாருங்கள் ஒருத்தன். ஐடி டிபார்ட்மென்ட்டின் தலைவர் அந்தப் பெண்தான் அல்லவா? சில்பா தானல்லவா? அவளிடம் போய் கேள் என்று சத்தம் போடுகிறான். போனில் வருபவர்களிடம் ஏன் சத்தம் போட்டு திட்டிக் கொண்டிருக்கிறாய்? அவ்வளவு பதற்றம் பரவிக் கொண்டிருக்கிறது. பெண் அப்பாவுக்கு போன் போட்டு பெரிய பிரச்சனை. நீங்கள் வந்தே ஆக வேண்டும் என்று அழைக்கிறாள். இவரும் வருகிறார். கூடவே, ஐடி மேலாளரையும் நான் வரச் சொல்லியிருக்கிறேன் என்கிறார்கள். ஐடி மேலாளரும் வருகிறார். என்ன பிரச்சனை என்று கேட்க, இங்க பாருங்கள். இது ஐடி டிபார்ட்மென்ட் பக்கத்தில் எந்தப் பிரச்சனையும் கிடையாது. யாரோ ஹேக் செய்திருக்கிறார்கள் என்று குண்டை தூக்கிப் போடுகிறான். எதை ஹேக்கா? ஆம். நான் தான் சொன்னேன் அல்லவா? பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். பட்ஜெட் வேண்டும் என்று கேட்டேன். நீங்கள் நிதியாண்டு இறுதி. அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டீர்கள் என்கிறான் அவன். இப்போது அந்த சர்வரைக் காட்டுகிறார்கள். இவர்கள் ஹெட் ஆபீஸில் ஒரு பழைய, பழைய, பழைய சர்வர் ஒன்றை இன்னும் ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு நாள் இந்த மாதிரி ஒரு ஹேக்கிங் நடக்காமல் இருந்தது பெரிய விஷயம் என்கிறான் ஐடி மேலாளர். இப்போது என்ன செய்ய வேண்டும் என்று கேட்க, அது ஒன்றும் பிரச்சனை இல்லை. பேக்கப் ஏதாவது இருக்கும். பேக்கப்பை வைத்து ஓட்டிக் கொள்ளலாம் என்று பேசினால், அங்கு இருக்கும் ஐடி பையன் ஒருத்தன், சார், பேக்கப் மென்பொருள் என்ன ஆகவில்லை சார் என்று ஒரு குண்டை தூக்கிப் போடுகிறான்.

[21:20]எதை பேக்கப் இல்லையா என்று இவன் ஆடிப் போகிறார். போன மாதம் வரைக்கும் பேக்கப் இருக்கிறது சார். இந்த மாதத்திற்குத்தான் சார் பேக்கப் இல்லை. ஒரு 20 நாட்களுக்கு முன்னாடிதான் சார் அது வேலை செய்யாமல் போனது பேக்கப் என்கிறான். அதெல்லாம் தினம் தினம் சரி செய்ய வேண்டாம் என்று சத்தம் போடுகிறான். செம பதற்றமாகிறான் ஐடி மேலாளர். அப்ப நம்ம சிஏ, அதெல்லாம் ஒன்றும் பிரச்சனை இல்லை. போன மாதம் வரைக்கும் டேட்டா இருக்கிறதல்லவா? பேக்கப் மூலமாக அதை மென்பொருளுக்குள் கொண்டு வர வேண்டும். அப்புறம் இந்த மாதத்திற்கு மட்டும் நாம் எல்லா கிளையிலும் என்ன உள்ளீடு செய்தாலும், பிசிக்கல் நகலை நாம் வைத்திருப்போம். சோ அந்த பிசிக்கல் நகலை வைத்து நாம் மறுபடியும் உள்ளீடு செய்து, இந்தப் பிரச்சனையில் இருந்து நாம் வெளியே வரலாம் என்று சிஏ ஐடியா கொடுக்கிறான். முதல் வேலையாக அதைச் செய்யுங்கள். தலைவலி தீரட்டும் என்கிறாற்போல அப்பா சொல்லிக் கொண்டிருப்பார். அப்புறம் கூடவே நான் சொன்ன அந்தப் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். அதற்கு பட்ஜெட் இந்தத் தடவையாவது கொடுப்பீர்களா என்று கேட்க, எவ்வளவு பணம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள். தயவுசெய்து சரி செய்து தொலையுங்கள். இந்தப் பிரச்சனை மறுபடியும் வரக் கூடாது என்று பதற்றமாகிவிட்டுப் போகிறார் அவர். ஆனால் அங்கு, அந்தப் பெண் ஒரு கேள்வி கேட்பாள். இதை ஒரு தனி ஆளால் செய்ய முடியுமா என்று. தனி ஆளோ அல்லது ஒரு குழுவோ. ஆம் இது சாத்தியம்தான் என்று ஐடி மேலாளர் சொல்லியிருப்பார்.

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript