Thumbnail for Over Trading நிறுத்த 8 வழிகள் | Mark Douglas Trading Psychology Tamil by AdhipathiFX

Over Trading நிறுத்த 8 வழிகள் | Mark Douglas Trading Psychology Tamil

AdhipathiFX

13m 9s1,531 words~8 min read
Auto-Generated

[0:00]Over trading, உங்க profit-டோட முதல் எதிரி. தேவையில்லாத நேரத்துல, தேவையில்லாத low quality trades எடுக்குறது. இத நீங்க சரி பண்ணாட்டி, நீங்க கொஞ்சம், கொஞ்சமா சம்பாதிச்ச profit, ரொம்ப சீக்கிரம் உங்க கைய விட்டு போயிரும். ஏன்னா, நீங்க எடுக்குற extra trades தேவையில்லாத trades தான் உங்க performance-ஜை கெடுக்குது. அதனால Over Trading-அ avoid பண்ணிட்டா, நீங்க புது strategy, புது skill கத்துக்கனும்னு அவசியமே இல்ல. உங்க கிட்ட ஏற்கனவே இருக்கிற strategy, skills வச்சே நீங்க ஜெயிச்சிருவிங்க. ஒரு நாளைக்கு 5 trades, 10 trades எடுத்தாதான் Over trading. நான் 2 trades தான் எடுக்குறேன். அது Over trading கிடையாது. அப்படி இல்ல. நீங்க முதல் trade, rules-ஜை check பண்ணி சரியா எடுக்குறீங்க. 2வது trade ஏனோ, தானோன்னு எடுக்குறீங்கன்னா, அந்த 2வது trade Over trading தான். அது ஏற்கனவே எடுத்த profit-அ, காலி பண்ணிட்டு போயிரும். நீங்க எல்லாத்தையும் சரியா பண்ணி ஒரு நல்ல Trade எடுத்திங்க. மார்க்கெட் நீங்க expect பண்ண மாதிரி தான் move ஆச்சு. Profit-ம் வந்துச்சு, நல்ல profit. ஆனா அடுத்த நிமிஷம் இன்னொரு Trade எடுத்தா, கொஞ்சம் extra சம்பாதிக்கலாம்னு நினைக்கிறீங்க. இங்கதான் problem ஆரம்பிக்குது. எந்த Plan-ம் இல்லை. setup இல்லை. just ஒரு thought-ஆனால ஒரு trade. உடனே Loss. அத easy-ஆ recover பண்ணலாம்னு justify பண்ணி இன்னொரு trade. அதுவும் Loss. Over Trading-ல எடுத்த 2 trades-ம் இப்ப Loss. இந்த 2 trades-க்கும் எந்த Real setup-ம் இல்ல. எந்த Edge-ம் இல்ல. இது முழுக்க அவசரப்பட்டு எடுத்த Impulsive trades. சில நிமிடங்களுக்குள்ள நீங்க discipline-ஆ சம்பாதிச்ச profit மொத்தமா மறைஞ்சா போயிடுச்சு. ஒரு Win அப்புறம் நீங்க Breakeven-ல கூட இல்ல. இப்ப Loss-ல இருக்கீங்க. மார்க்கெட் உங்களுக்கு துரோகம் பண்ணல. நீங்க உங்களுக்கே துரோகம் பண்ணி இருக்கீங்க. ஏன்னா உண்மை உங்களுக்கே தெரியும். நான் முதல் trade-ல stop பண்ணி இருந்தா, நான் என் boundaries-அ மதிச்சிருந்தா, இது ஒரு Winning day-ஆ இருக்கும். அதுதான் உங்கள உள்ளுக்குள்ளேயே நொறுக்குற pain. நீங்க screen-அ close பண்ணுவிங்க. ஆனா உங்க Mind close ஆகாது. அந்த 2 தேவையில்லாத trades மீண்டும் மீண்டும் நினைவில ஓடிக்கிட்டே இருக்கும். இந்த problem உங்களுக்கு trade பண்ண தெரியாததுனால இல்ல. அந்த moment-ல நீங்க உங்கள control பண்ண முடியல. அப்புறம் என்ன பண்றீங்க? நாளைக்கு நான் Over trade பண்ண மாட்டேன்னு promise பண்ணிக்கிறீங்க. ஆனா அது work ஆகாது. ஏன்னா இது will power problem இல்ல. உங்க mind-க்கு உள்ள நடக்கும் problem. இந்த Over trading-அ stop பண்ணனும்னா, நீங்க உங்க brain-அ dissect பண்ணனும். உங்க Thinking Patterns, உங்க Emotions, உங்க Behaviours, அந்த அவசரப்பட்டு எடுக்குற actions இதெல்லாம் சரி செய்யாம நாளைக்கு control பண்ணிக்கிறேன்னு சொல்றீங்கன்னா, நாளையும் இதே கதை தான் repeat ஆகும். ஒன்று. Over trading பிரச்சனை எப்போ வரும்? Over trading ஆரம்பத்திலேயே வர்ற problem இல்லை. நீ trading ஆரம்பிக்கும் போது ரொம்ப careful-ஆ இருப்ப. rules-அ follow பண்ணுவ. risk-அ மதிச்சு நடப்ப. ஆனா, ஒரு stage-க்கு அப்புறம் உனக்கு சில Winning trades வர ஆரம்பிக்கிறப்போதான் பிரச்சனையும் ஆரம்பிக்கும். அந்த success-அ எப்படி handle பண்ணனும்னு உனக்கு தெரியாது. இந்த stage-ல தான் இரண்டு Dangerous forces உன் mind-ல enter ஆகுது. ஒன்று. Euphoria அதிக உற்சாகம் அடையறது. என்ன யாரும் தடுக்க முடியாதுன்னு ரொம்ப தெனாவெட்டு வரும். இன்னொன்று, self sabotage நம்மள நாமே கெடுத்துக்குறது. இந்த 2 Forces நீ win பண்ண ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி வராது. ஆனா once அது வந்தாச்சுன்னா, அது உன் மொத்த Trading-யும் அழிக்க ஆரம்பிச்சிடும். கஷ்டப்பட்டு study பண்ணி trading கத்துக்குவிங்க. ஒரு கட்டத்துல சில Winning trades வரும். நல்ல confidence வரும். அதுக்கப்புறம் அதே confidence உங்கள destroy பண்ணும். திரும்பவும் நீங்க loss பண்ணுவிங்க. அதுக்கப்புறம் மீண்டும் கத்துக்குவிங்க. again win வரும். கூடவே தெனாவெட்டு வரும். திரும்பவும் விட்ருவிங்க. இந்த cycle தொடர்ந்து repeat ஆகிட்டே இருக்கும். problem என்னன்னா, நீ மார்க்கெட் கத்துக்க ஆர்வம் காட்டுற அளவுக்கு உன்ன பத்தி கத்துக்க மாட்ட. அதனாலதான் Over Trading ஆரம்பிக்குது. அதுவும் நீ winning stage-ல இருக்கும் போதுதான். இரண்டாவது. Over Trading-ஓட மூல காரணம் euphoria. தெனாவெட்டா இருக்கிறது. euphoria-னா ஒரு மிக அதிகமான நம்பிக்கையோட இருக்கும் நிலை. அந்த நிலையில் நீ இருந்தா எதுவும் தவறாக போகாதுன்னு உனக்கு தோணும். அது ஒரு feeling மட்டும் இல்ல. அது உன் கண்ணோட்டத்தையே முழுக்க மாத்திடும். அந்த moment-ல rules தேவையில்லைன்னு தோணும். discipline தேவையில்லைன்னு தோணும். எனக்கு எல்லையே கிடையாதுன்னு தோணும். அந்த சமயத்துல நீ எப்படி trade பண்ணுவேன்னு தெரியுமா? எதுவும் தவறா போகாதுன்னு நம்பிக்கையோட, அதுதான் உன்ன மெதுவா பெரிய பெரிய position எடுக்க வைக்கும். உன் trading rules-அ break பண்ண வைக்கும். சரியான confirmation இல்லாம trades எடுக்க வைக்கும். இது எல்லாம் நீ சுய நினைவோட பண்றது இல்ல. அந்த தெனாவிட்டு மனநிலை, உன்ன அந்த direction-ல அழைச்சிட்டு போயிடும். நீ Winning phase-ல இருக்கும்போது தான் இந்த problem அதிகமா இருக்கும். ஏன்னா அந்த time-ல இது problem ஆகுமானு கூட நீ யோசிக்க மாட்ட. அந்த தெனாவெட்டு feeling உனக்கு நல்லா இருக்கும். அது உனக்கு power கொடுக்குற மாதிரி இருக்கும். அதனால அத தடுக்கனும்னு கூட உனக்கு தோணாது. அதுதான் அதோட Danger. அதாவது நீ careful-ஆ இருக்கணும்ன்ற எண்ணமே சுத்தமா இல்லாம போயிடும். அதனாலதான் நான் சொல்றேன். Over Trading, force பண்ணி நடக்கிறது இல்லை. அது உனக்குள்ள இயல்பாவே தானா நடக்குது. ஏன்னா உன்னிடம் எந்த கட்டுப்பாடும் இல்லை. இந்த Euphoria-வ, தெனாவெட்டு மனநிலையை control பண்ண ஒரு simple ஆன Powerful ஆன method இருக்கு. அதுதான் Emotional Journal. ஒரு Winning Trade வந்த உடனே உங்க mind என்ன பேசுது? அது கவனிச்சு எழுதணும். Trade எடுக்குறதுக்கு முன்னாடி உங்க confidence level என்ன? Trade win ஆன பிறகு அது எப்படி change ஆகுது? இதெல்லாம் ரொம்ப உன்னிப்பா observe பண்ணி diary-ல record பண்ணனும். உதாரணத்துக்கு, ஒரு நல்ல profit வந்த உடனே mind இந்த மாதிரி பேசும். 30,000 profit வந்திருச்சு. மத்தவங்க ஒரு மாசம் சம்பாதிக்குறத நான் 1 மணி நேரத்துல சம்பாதிச்சிட்டேன். இனி Trading-ல என்ன யாராலும் stop பண்ண முடியாது. இந்த thoughts வந்ததுக்கு பிறகுதான் problem start ஆகுது. First இந்த மாதிரி thoughts வரும். உடனே Emotions high ஆகும். Next தெனாவெட்டு வரும். Finally ஒரு தேவையில்லாத impulsive trade எடுப்பீங்க. அதனால என்ன செய்யணும்? அந்த thought வந்த உடனே அதை மாத்தணும். நான் பெரிய genius இல்ல. இந்த win luck-ல கூட வந்திருக்கலாம். மார்க்கெட் condition-ஆனால கூட இருக்கலாம். அதனால மார்க்கெட் முன்னாடி நான் பணிவா இருக்கணும். இல்லைனா நான் தேவையில்லாம அடி வாங்க வேண்டி வரும். நியாயகம் வச்சுக்கோங்க. Winning trade dangerous இல்ல. Winning பிறகு வர்ற mindset தான் dangerous. control பண்ணா அதிக profit. control பண்ண முடியாட்டி profit காலி. மூன்றாவது. Boom மற்றும் Burst cycle. Over Trading தெளிவா தெரியும் நிலை. இது Cricket-ல நல்ல விளையாடுற ஒரு player திடீர்னு form இழந்து run எடுக்க முடியாமல் திணறது மாதிரி தான். நீ ஒரு கொஞ்ச நாளைக்கு consistent-ஆ win பண்ணுவ. எல்லாமே smooth-ஆ போகும். சில நேரம் நாட்கள் மட்டும் இல்ல. மாதங்கள் கூட நல்லா trade பண்ணுவ. ஒரு trade-க்கு அடுத்த trade, மீண்டும் ஒரு win, மீண்டும் ஒரு win, ஒரு பெரிய winning streak. இதுதான் Boom. அந்த phase-ல உனக்கு தோணும். நான் மார்க்கெட்ட நல்லா புரிஞ்சுகிட்டேன். இப்போ நான் control-ல இருக்கேன். ஆனா, ஒரு point அப்புறம் அந்த winning streak திடீர்னு break ஆகும். அதுவும் சாதாரண loss இல்ல. Heavy loss தொடர்ந்து losses வர ஆரம்பிக்கும். அது bad market condition-ஆனால இல்லை. அது self sabotage-ஆனால. நீ win பண்ணிக்கிட்டே இருக்கும் போது, மெதுவா உன் behaviour change ஆக ஆரம்பிக்கும். நீ அதிகம் trade பண்ண ஆரம்பிப்ப. Position size increase பண்ணுவ. rules-அ ignore பண்ண ஆரம்பிப்ப. அது கொஞ்சம் கொஞ்சமா build ஆகி build ஆகி ஒரு கட்டத்துல ஒரே ஒரு trade அல்லது சில trades-ல உன்னோட மொத்த profit-யும் wipe பண்ணிடும். இதுதான் Burst. மொத்த profit-யும் விட்டுட்டு நிக்கிறது. மீண்டும் பழைய நிலை. இந்த cycle மீண்டும் மீண்டும் repeat ஆகிட்டே இருக்கும். நான்காவது. இந்த Boom மற்றும் Burst cycle-அ உடைக்க என்ன செய்யணும்? அதுக்கு நீங்க உங்க Trading plan-ல இருக்க rules-அ ஒழுங்கா follow பண்ணனும். Feeling வச்சு trade பண்ணாதீங்க. நீங்க Feel பண்றதுக்கும் மார்க்கெட்டுக்கும் எந்த connection-ம் இல்ல. ஆனா நிறைய பேர் என்ன பண்றாங்கன்னா, அவங்கலோட Feeling சொல்றத வச்சு trade எடுக்குறாங்க. இப்போ மார்க்கெட் மேல போகும். இங்க bounce ஆகும் போல. இது Trading இல்ல. இது guessing. உங்க trading plan தான் சொல்லணும். எப்போ trade எடுக்கணும்? எப்போ trade எடுக்க கூடாது? அத உங்க Feeling சொல்ல கூடாது. சில Traders mobile phone-ல தான் full trading பண்றாங்க. chart open பண்ணி வேகமா ஒரு look, அதுக்கப்புறம் straight-ஆ entry. Rules check பண்ணவே மாட்டாங்க. ஒரு Trade idea கிடைச்சதும், Scanning process தான் முடிஞ்சிருக்கும். அதுக்கப்புறம் Analysis-னு ஒரு process இருக்கு. உங்க Trade idea சரியா? தப்பான்னு நீங்க Trading plan வச்சு check பண்ணனும். High probability-ஆ இருந்தா entry. Low probability-ஆ இருந்தா ignore பண்ணிட்டு wait பண்ணனும். நீங்க அத differentiate பண்ணாம Feeling-க்கு trade எடுக்க ஆரம்பிச்சீங்கன்னா consistency ஒரு போதும் வராது. Mobile phone-அ analysis-க்கு use பண்ணவே கூடாது. நீங்க Higher timeframe charts-ல பல hours முன்னாடியே analysis complete பண்ணனும். game plan ready-ஆ இருக்கணும். அதுக்கப்புறம் தான் Mobile-ல entry பண்ணனும். Stop loss move பண்றதுக்கு, அவசரத்துக்கு trade-அ close பண்றதுக்கு தான் Mobile. நீங்க அதுலயே analysis பண்றீங்கன்னா, நீங்க clarity-யையும் சேர்த்து lose பண்றீங்க. ஐந்தாவது. Anticipate பண்ணி trade எடுக்கணும். Best trade எதுன்னு தெரியுமா? நீங்க பல மணி நேரத்துக்கு முன்னாடி, சில நேரம் days முன்னாடியே anticipate பண்ணி wait பண்ணி எடுக்குற trade தான் அது. அந்த Setup slowly develop ஆகுறத நீங்க silent-ஆ follow பண்ணிட்டே வரணும். அவசரப்படக்கூடாது. Force பண்ணக்கூடாது. அது நல்லா ready ஆனதும்தான் Entry. இப்படி எடுக்குற trade தான் best-ஆ வரும். ஆறாவது. உங்க சூழ்நிலையை மாத்தணும். Over Trading-அ கட்டுப்படுத்த இன்னொரு வழி, தவறு செய்யக்கூடிய வாய்ப்புகளை குறைக்கிறது. ஒரு Win வந்தாலோ அல்லது 2 losses வந்தாலோ, நீங்க straight-ஆ, terminal-அ close பண்ணிடணும். laptop shutdown. Internet off. அதுக்கப்புறம் நீங்க வெளியே போய் walking போயிடணும். ஏன் தெரியுமா? அந்த moment-ல நீங்க trading desk-ல இருந்தா, நீங்க logic-ல இல்லை. Emotion-ல இருப்பீங்க. அதனால தான் நீங்க உங்களையே அந்த சூழ்நிலையிலிருந்து remove பண்ணிக்கிறீங்க. நீங்க serious-ஆ improve ஆகணும்னா, உங்க Trading app-அ hide பண்ணுங்க. Easy-யா open பண்ண முடியாத மாதிரி வைங்க. ஏன்னா impulse வந்தா நீங்க control பண்ண மாட்டீங்க. ஏழு. thrill-அ கட்டுப்படுத்த punishment எடுங்க. நிறைய பேர் overtrade பண்றாங்க. reason என்னன்னு தெரியுமா? Thrill of Action. trade எடுக்குற feeling, அந்த adrenalin. அதுக்காகவே trade எடுக்க ஆரம்பிக்கிறாங்க. அதுதான் dangerous. அதனால இதுக்கு ஒரு strong solution வேணும். நீ ஒரு நாள் overtrade பண்ணினா, அடுத்த நாள் உனக்கு trade பண்ண rights இல்ல. complete-ஆ மார்க்கெட்ல இருந்து வெளியே இருந்து சும்மா வேடிக்கை பாக்கணும். எந்த trade-ம் எடுக்க கூடாது. இப்போ உன் mind என்ன புரிஞ்சுக்க ஆரம்பிக்கும் தெரியுமா? இன்னைக்கு overtrade பண்ணினா, நாளைக்கு என்னால trade பண்ண முடியாதுன்னு. அதாவது நீ இன்னைக்கு எடுத்த impulsive decision-க்கு, நாளைக்கு cost pay பண்ணனும். இப்படி பண்ணும் போது, thrill குறைஞ்சு பொறுமையா இருக்க ஆரம்பிப்பீங்க. நீங்க trade எடுக்குறதுக்கு முன்னாடி இரண்டு தடவை யோசிப்பீங்க. இந்த trade தேவையான்னு. slow-வா focus change ஆகும். அவசரப்படுறதுல இருந்து desipline-க்கு. எட்டாவது. இன்னொரு powerful concept Trading தோழன். உங்க friend அல்லது family member யாராவது ஒருத்தரை involve பண்ணுங்க. நீங்க உங்க trading problems-ஜை அவங்க கிட்ட discuss பண்ணுங்க. ஒரு rule வைங்க. ஒரு win வந்தாலும், அல்லது ரெண்டு losses வந்தாலும் trading உடனே நிறுத்திறனும். நீங்க தொடர்ந்து trade பண்ணிட்டு இருந்தா, அவங்க உங்கள force பண்ணி கட்டுப்படுத்துவாங்க. அந்த Accountability தான் உங்கள save பண்ணும். இதே மாதிரி Revenge Trading பத்தி deep-ஆ analyse பண்ணி வீடியோ வேணும்னா comment பண்ணுங்க. இன்னொரு தடவை ஞாபகம் வச்சுக்கோங்க. ஒன்னு. Winning Trades வரும் போது, நீங்க ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும். உங்க thoughts-அ கவனமா observe பண்ணனும். ரெண்டாவது. Over Trading-ஓட மூல காரணம் euphoria. அதாவது தெனாவெட்டு மனநிலை. மண்டைக்கணம் வரும்போது அத நீங்க நல்ல பணிவான எண்ணங்களா மாற்றணும். மூன்று. Boom மற்றும் Burst cycle-அ உடைக்க Emotional Journal follow பண்ணனும். நான்கு. Feeling வச்சு trade எடுக்க கூடாது. Trading plan-அ strict-ஆ follow பண்ணனும். ஐந்து. Impulsive trade எடுக்காம முன்கூட்டியே anticipate பண்ணி trade எடுக்கணும். ஆறு. தவறு செய்யும் சூழ்நிலைகளை மாற்றி அமைக்கணும். ஏழு. Thrill behaviour-ஜை கட்டுப்படுத்த punishment எடுக்கணும். எட்டு. Improve ஆகுற வரைக்கும் ஒரு Trading தோழனை உதவிக்கு வச்சுக்கணும்.

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript