Thumbnail for இந்து லக்ன ரகசியங்கள் சில புரிதல் | Indhu Lakinam by Astro Sriram JI

இந்து லக்ன ரகசியங்கள் சில புரிதல் | Indhu Lakinam

Astro Sriram JI

10m 0s1,181 words~6 min read
YouTube auto captions
Transcript source

YouTube auto captions

This transcript was extracted from YouTube's auto-generated caption track. The transcript below is server-rendered so it can be read, searched, cited, and shared without opening the original YouTube player.

Pull quotes
[0:08]இந்த ஹிந்து லக்னத்தில கிரகங்கள் அமர்ந்தால் மாபெரும் செல்வ வலிமையை, முன்னேற்றத்தை, பொருளாதார விருத்தியை கொடுக்கும்ங்கிற அந்த பொது விதியில இருக்கக்கூடிய சூட்சுமங்கள் என்ன அப்படிங்கிறதை இன்னைக்கு நம்ம பார்க்க போறோம்.
[0:08]அதுக்கு முன்னாடி நம்ம சேனலை ஃபர்ஸ்ட் டைமா பார்க்கிறவங்க நீங்கனா சப்ஸ்கிரைப் பண்ணுங்க, லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க.
[0:08]உங்களுடைய தனிப்பட்ட கேள்வி பதில் பகுதியும் தொடர்ந்து வந்திட்டு இருக்கும் அதையும் நீங்க பார்க்கலாம்.
[0:08]இந்த இந்து லக்னம் எப்படி கணிக்கிறாங்க என்கிறதுக்கு ஒரு சிறு விளக்கம் முதல்ல கொடுத்துடறேன்.
Use this transcript
Related transcript hubs

[0:08]ஓம் சரணாகத தீனார்த பரித்ராண பராயணி சர்வஸ்யார்திகரே தேவி நாராயணி நமஸ்துதே. வணக்கம் நேயர்களே! இது மகாலட்சுமி ஜோதிடம் வழங்கும் காலச்சக்கரம். உங்கள் அன்பு ஜோதிட ஸ்ரீராம்ஜி. பேசுகிறேன். அனைவரும் நலமுடன் இருக்கிறீர்களா? நன்றாகத்தான் இருப்பீர்கள். நன்றாக இருக்க வேண்டும். இன்றைய காணொளியில் நாம் காண இருப்பது ஹிந்து லக்னம் சில சூட்சுமங்கள். இந்த ஹிந்து லக்னத்தை பத்தி எல்லாருக்கும் தெரியும்னு நினைக்கிறேன். நம்மளுடைய இதுலயே ஒரு இதை பத்தின காணொளிகள் போட்டு இருக்கோம். இந்த ஹிந்து லக்னத்தில கிரகங்கள் அமர்ந்தால் மாபெரும் செல்வ வலிமையை, முன்னேற்றத்தை, பொருளாதார விருத்தியை கொடுக்கும்ங்கிற அந்த பொது விதியில இருக்கக்கூடிய சூட்சுமங்கள் என்ன அப்படிங்கிறதை இன்னைக்கு நம்ம பார்க்க போறோம். அதுக்கு முன்னாடி நம்ம சேனலை ஃபர்ஸ்ட் டைமா பார்க்கிறவங்க நீங்கனா சப்ஸ்கிரைப் பண்ணுங்க, லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க. உங்களுடைய ஜோதிட கேள்விகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள். ஜோதிட பொது கேள்விகளுக்கு காணொளிகள் தொடர்ச்சியாக வர இருக்கும். உங்களுடைய தனிப்பட்ட கேள்வி பதில் பகுதியும் தொடர்ந்து வந்திட்டு இருக்கும் அதையும் நீங்க பார்க்கலாம். இந்து லக்னம். இந்த இந்து லக்னம் எப்படி கணிக்கிறாங்க என்கிறதுக்கு ஒரு சிறு விளக்கம் முதல்ல கொடுத்துடறேன். சூரியன் முதலான ஒன்பது கோள்கள்ல ராகு கேது நீங்கலாக அதாவது சூரியன் முதலான ஒன்பது கோள்கள்ல ராகு கேது நீங்கலாக மற்ற கிரகங்களுக்கு ஒளி வீச்சின் அடிப்படையில் கலைகள் பிரிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் பார்த்தீங்கன்னா சூரியனுக்கு 30 கலைகளும், சந்திரனுக்கு 16 கலைகளும், சுக்கிரனுக்கு 12 கலைகளும், குருவுக்கு 10 கலைகளும், புதனுக்கு எட்டு கலைகளும், செவ்வாய்க்கு ஆறு கலைகளும், சனி பகவானுக்கு ஒரு கலையும் பிரிக்கப்பட்டிருக்கு. இது வந்து அவங்களுடைய கதிர்வீச்சு அளவு அப்படின்னு எடுத்துக்கலாம். இந்த இந்து லக்னம் எப்படி கணிக்கிறாங்கன்னு கேட்டீங்கன்னா, லக்னத்திற்கு ஒன்பதாம் அதிபதியும், லக்னத்திற்கு பாக்கியாதிலாம்னு சொல்லக்கூடிய ஒன்பதாம் அதிபதியின் கலையையும், ராசிக்கு ஒன்பதாம் அதிபதியின் கலையையும் கூட்டி, ரெண்டையும் கூட்டி, அதுல 12-ஐ கழித்துவிட்டு அல்லது 12-ஆல் வகுத்து விட்டு மீதி உள்ள கலைகளை ராசி முதலாவது எண்ணி எது வருதோ அதுதான் உங்களுக்கு இந்து லக்னம். புரிஞ்சுங்களா ஒரு உதாரணத்தை எடுத்துக்குவோம். இப்ப நீங்க வந்து கும்ப லக்னம். கடக ராசி. இப்படி வச்சுக்கலாம். இப்ப கும்ப லக்னத்திற்கு ஒன்பதாம் அதிபதியா வரக்கூடியவர் சுக்கிரன். துலாம். இந்த சுக்கிரனுடைய கலை என்ன? 12. கடக ராசி. இந்த கடக ராசிக்கு ஒன்பதாம் இடமா வரக்கூடியது குருவினுடைய வீடு. கடக ராசிக்கு ஒன்பதாம் இடமா வரக்கூடியது குருவுடைய வீடு. குருவினுடைய கலைகள் 10. இப்ப 10, 12 இரண்டையும் கூட்டினால் 22. 22-ஐ 12-ஆல அதாவது வகுத்துட்டோம்னா 12 போக மீதி இருக்கிறது 10. இந்த 10-ஐ சந்திரன் முதற்கொண்டு எண்ணும் போது மேஷம் இந்த கும்ப லக்னக்காரருக்கு இந்து லக்னமாக வரும். புரியுதுங்களா? கடகத்தில் இருந்து எண்ணி பத்தாவது வீடா எது வரும்? மேஷம் வரும். அப்ப இந்த கும்ப லக்னக்காரருக்கு கும்ப லக்னம் கடக ராசியில் பிறந்த இவருக்கு இந்து லக்னமாக வரக்கூடியது மேஷம். புரிஞ்சுங்களா? இப்ப இந்த மேஷம் இந்த வீட்டில் யார் இருக்காங்கங்கிறதை பொறுத்து உங்களுடைய செல்வ நிலை, வளர்ச்சி, முன்னேற்றம் தீர்மானிக்கப்படும் அப்படிங்கறது ஒரு பொது விதி. சரிங்களா? இன்னொரு உதாரணமும் பார்த்துடுவோம். ஏன்னா இந்த இந்து லக்னத்தைப் பத்தி கன்ஃபியூஸ் வரும். இப்ப இரண்டையும் கூட்டி 12 தான் வருது சார். இது நிறைய பேர் கேட்ட கேள்வி. ஜன்ம லக்னத்திற்கு ஒன்பதாம் அதிபதி மற்றும் சந்திரன் லக்னத்திற்கு ஒன்பதாம் அதிபதி இரண்டு பேரோட நம்பரையும் கூட்டினால் 12 தான் வருது. நீங்க 12-ஐ கழிச்சிடணும்னு சொல்றீங்களே இப்ப இந்து லக்னமா எது வரும் அப்படின்னு கேட்டா சந்திரன் எந்த வீட்டில் நிற்கிறாரோ அதுவே உங்களுடைய இந்து லக்னமாகும்.

[3:30]புரிஞ்சுங்களா? சந்திரன் வீட்டில் இருந்து ஜீரோ. அப்ப அதுவே இந்த லக்னமாக எடுத்துக்க வேண்டியதுதான். அங்கிருந்து எண்ணி ஆரம்பித்து வரக்கூடியதற்கு பதிலாக இதை வந்து நீங்க ஃபாலோ பண்ணிக்கலாம். சிலர் இதில் இன்னும் நுணுக்கமா சந்திரன் நின்ற வீட்டை ஒன்றுன்னு எடுக்கணுமே சார் அப்படின்னா அப்ப சந்திரனுக்கு 12-ஆம் வீட்டை இந்து லக்னமாகப் போட்டும் பலன் பார்க்கிறாங்க. ஆனால் இது அவ்வளவு துல்லியமா வரதில்லை என்கிறது என்னுடைய கருத்து. சோ சந்திரன் நின்ற வீட்டையே இந்து லக்னமாக எடுத்துக்கொள்வது சிறப்பாக இருக்கும். இந்து லக்னம் எப்படி கணிக்கிறாங்கன்னு சொல்லிட்டேன். சூரியன் முதல் நவ கோள்களில் ராகு கேது நீங்கலாக மீதி இருக்கிற கோள்களுக்கு இருக்கக்கூடிய எண் வலிமை சனிக்கொன்னு செவ்வாய்க்கு ஆறு, புதனுக்கு எட்டு, குருவுக்கு 10. சுக்கிரனுக்கு 12. சுக்கிரனுக்கு 12, சந்திரனுக்கு 16 கலைகளும், சூரியனுக்கு 30 கலைகளும் வலிமை கொண்டதாக எடுத்து இதுல லக்னத்திற்கு ஒன்பதாம் இடம், ராசிக்கு ஒன்பதாம் இடம் இந்த இரண்டு கிரகங்களுடைய கலைகளை கூட்டி, இந்த இரண்டு கிரகங்களுடைய கலைகளை கூட்டி அதை 12-ஆல் வகுத்த பின்பு மீதி இருக்கும் கலையை சூரியன் சந்திரன் இடத்திலிருந்து என்று எத்தனையாவது ராசியா வருகிறதோ அது இந்து லக்னம். சரிங்களா? சோ இந்து லக்னத்தில் அமர்ற கிரகங்கள் செல்வ நிலையை தருகிறதுங்கிறது ஒரு பொது விதி. இந்து லக்னத்தில் யார் அமர்ந்தால் மிகச் சிறந்த செல்வ நிலை தரும்? அதுதான் இன்னைக்கான சூட்சுமம். இயல்பால் பாவகிரகம் இயல்பால் பாவகிரகம் ஆனா லக்னத்துக்கு சுபகிரகம் இந்து லக்னத்தில் உட்காரும் போதுதான் மிகப்பெரும் வெற்றி இருக்கும். புரியுதா உங்களுக்கு? இப்ப ஒரு உதாரணம் எடுத்துக்குவோம். கடக லக்னத்துக்கு சுபர் யார்? செவ்வாய். செவ்வாய் எப்பேர்பட்ட கிரகம் இயல்பால் பாவகிரகம். இயல்பால் பாவகிரகம். அவர் வந்து உங்க லக்னத்துக்கு சுபராகி அவர் இந்து லக்னத்தில் உட்கார்ந்தால் உங்களுக்கு மாபெரும் வெற்றி இருக்கும். புரியுதுங்களா? இன்னொரு வாட்டி சொல்லிடறேன். இயல்பால் பாவகிரகமாக இருந்து உங்கள் லக்ன சுபராக அவர் வரும் போது அவர் இந்த லக்னத்தில் உட்கார்ந்தால் மாபெரும் வெற்றி இருக்கும். இதுதான் சூட்சுமம். அடுத்தது இயல்பால் சுபகிரகம், உங்கள் லக்னத்துக்கும் சுபகிரகம் அவர் இந்து லக்னத்தில் உட்கார்ந்தால் பரவாயில்லாம வெற்றி இருக்கும். பரவாயில்லாமதான் வெற்றி இருக்கும். லக்னத்துல இந்து லக்னத்துல சுபகிரகம் உட்கார்ந்திருக்க சூப்பரா இருக்குமா அப்படின்னு முடிவெடுக்கவே கூடாது. இயல்பால சுபகிரகம் உங்கள் லக்னத்துக்கும் சுபகிரகம் அவர் இந்த லக்னத்தில் உட்கார்ந்தால் பரவாயில்லை. இயல்பால சுபகிரகம் ஆனால் உங்கள் லக்னத்துக்கு பாவகிரகம் அவர் வந்து இந்து லக்னத்தில் உட்கார்ந்தால் இன்னும் சுமாரான பலன் இருக்கும். இதை எப்படி பிரிச்சிக்கலாம்னு கேட்டீங்கன்னா, இயல்பால் பாவி, உங்கள் லக்னத்துக்கான அவர் சுபர். இப்ப ரிஷப லக்னத்திற்கு, துலா லக்னத்திற்கு சனிதான் சுபர் ஆனால் சனி இயற்கையில பாவகிரகம். இல்லைங்களா? கடக லக்னம் சிம்ம லக்னத்திற்கு செவ்வாய்தான் சுபர். ஆனா செவ்வாய் இயற்கையில பாவகிரகம். இந்த நான்கு லக்னக்காரர்களுக்கு சனி பகவான் அல்லது செவ்வாய் இந்த லக்னத்தில் உட்காரும் போது மாபெரும் வெற்றி இருக்கும். இயல்பால நல்ல கிரகங்களான சுக்கிரன், புதன் அதாவது சுக்கிரன் தனித்த புதன், குரு, வளர்பிறை சந்திரன் இவர்கள் இந்து லக்னத்தில் வந்து உட்காரும் போது நார்மலான சுமாரான பலன் தான் இருக்கும். புரிஞ்சுங்களா? உங்கள் லக்னத்திற்கு சுபர்களாக இருந்து இந்து லக்னத்தில் அவர்கள் சுபர்களாகவே அமரும் போது மீடியமான பலன் இருக்கும். பாவகிரகம் தரக்கூடிய இந்து லக்ன வலிமை என்பது 100% இருக்கும். சுபர்கள் தரக்கூடிய இந்து லக்ன வலிமைங்கிறது 50% தான் இருக்கும். உங்கள் லக்னப்படியும் கெட்டவர் இயல்பாலையும் கெட்டவர். அவர் வந்து இந்த லக்னத்தில் உட்கார்ந்தால் பெரும் நன்மைகள் இருக்காது. புரிஞ்சுங்களா? இப்ப ஒரு மேஷ லக்னம். சனி இந்த லக்னத்திற்கு ஒரு மாதிரி நல்லவர் இல்லை பாதகாதிபதி. அவர் இயற்கையிலையும் கெட்டவர். லக்னத்துக்கும் கெட்டவர். லக்னத்தில் வந்து உட்காரார். இதே கடக லக்னத்துக்கு சனி பாவி, எதிரி. அவர் வந்து இந்த லக்னத்தில் உட்காரார்னா புகழையும் செல்வத்தையும் அழிச்சிடுவார். இது போக பார்த்தீங்கன்னா ராகு இந்த லக்னத்தில் அமரவே கூடாது. புரிஞ்சுங்களா? ராகு பகவான் உங்களுடைய இந்து லக்னத்தில் வந்து உட்கார்ந்தான்னா உங்கள் செல்வம், செல்வாக்கு, புகழ், அந்தஸ்து, கௌரவம் எல்லாத்தையும் காலி பண்ணி விட்டுடுவார். சோ இந்த லக்னத்தை கணிப்பதிலே இத்தனை சூட்சுமங்கள் உண்டு. இந்த லக்னம் எடுப்பது எப்படி? அது லக்னத்திற்கு ஒன்பதாம் அதிபதி, ராசிக்கு ஒன்பதாம் அதிபதியை கொண்டு அவர்களின் ஒளி அலை கலைகள், கதிர் வீச்சின் அடிப்படையில் கணிக்கணும். அந்த லக்ன ராசிக்கு உண்டான எண்ணை கூட்டின பிறகு அதை 12 கழித்துவிட்டு மீதி இருக்கும் எண்கள். 12-ஐ கழித்து விட்டு மீதி இருக்கும் எண்கள்ல லக்னம் ராசி முதலாவது எண்ணி எத்தனையாவது வீடா வருகிறதோ அதை எடுக்கணும். இன்னொரு உதாரணமும் சொல்லிடறேன். இப்ப நீங்க துலா லக்னம். துலா லக்னம் மகர ராசின்னு வச்சுப்போம். துலா லக்னத்திற்கு ஒன்பதாம் அதிபதி புதன். இவருடைய கலைகள் எட்டு. சரியா? மகர ராசி. மகர ராசிக்கு ஒன்பதாம் அதிபதியும் அதே புதன் தான். அவருடைய கலையும் எட்டு. அப்ப எட்டையும் எட்டு கூட்டினீங்கன்னா 16. இதுல 12 கழிச்சுட்டா மீதி இருக்கிறது நாலு. அப்ப மகர ராசியில இருந்து என்ன? மகரம், கும்பம், மீனம், மேஷம் உங்களுடைய இந்த லக்னமா வரும். மேஷம் வந்து உங்களுடைய இந்த லக்னமா வரும். துலா லக்னத்திற்கு லக்ன சுபர் சனி ஆனால் அவர் ஒரு இயற்கை பாவி. இந்த மாதிரி அமைப்புல சனி பகவான் போய் மேஷத்துல உட்கார்ந்தால் நீங்க சூப்பர் டூப்பர் ஹிட். புரியுதுங்களா? லக்ன சுபர் ஆனால் இயற்கை பாவி அங்க போய் உட்கார்ந்தால் சூப்பர் ஹிட். சரி, இயற்கை சுபர் சுக்கிரன் அங்க போய் உட்கார்ந்தாலும் பரவாயில்லை. புதன் ஒரு இயற்கை சுபர் அவர் அங்க போய் உட்கார்ந்தாலும் பரவாயில்லை. இதே துலா லக்னக்காரருக்கு துலா லக்னம் மகர ராசிக்காரருக்கு ராகு போய் ஏழாம் இடத்துல உட்கார்ந்தார். இயற்கை பாவி இந்த லக்னத்தில் உட்கார்ந்தார். கண்டிப்பா வந்து சிக்கலை உண்டாக்குவார். புரியுதுங்களா அந்த டிஃபரன்ஸ்? லக்ன சுபராக இருந்து இயற்கை பாவியாக இருந்து இந்து லக்னத்தில் உட்கார்ந்தால் சிறப்பு. இயற்கை சுபராக இருந்து போய் இந்து லக்னத்தில் உட்கார்ந்தாலும் ஓரளவுக்கு சிறப்பு. இயற்கை பாவிகள், லக்னத்துக்கும் பாவியாகி அங்க போய் உட்காரும் போது அவ்வளவு சிறப்புகளை தருவதில்லை. இப்ப துலா லக்னத்துக்கு இயற்கை பாவியா வந்து லக்ன பாவியா வரக்கூடியவர் செவ்வாய் தான். செவ்வாயோ சூரியனோ அந்த இடத்துல உட்கார்ந்தாங்கனா இந்து லக்னத்தின் மேன்மை அடிபட்டு போகும். இதுதான் ஒரு சூட்சுமம். குருவே வந்து ஏழாம் இடத்துல உட்கார்ந்தா கூட அவ்வளவு பெரிய கெடுதல்கள் இருக்காது. புதன் உட்கார்ந்தா பெரிய கெடுதல் இருக்காது. வளர்பிறை சந்திரன் உட்கார்ந்தா பெரிய கெடுதல்கள் இருக்காது. இங்கே இயற்கையில் ஒரு பாவகிரகமாக சந்திரனை வளர்பிறை தேய்பிறை கொண்டு அறிந்து கொள்ள வேண்டும். சந்திரன் தேய்பிறையில பஞ்சமிக்கு மேல போயிட்டாரு சஷ்டியை நெருங்கிட்டாருன்னா நல்ல பாவின்னு எடுத்துக்கலாம். அதே மாதிரி வளர்பிறையில அவர் வந்து பஞ்சமியில இருந்து அடுத்து தேய்பிறை பஞ்சமி வரைக்கும் சுபர்ங்கிற கணக்குல ஒளி வீச்சின் அளவுல எடுத்துக்கலாம்ங்கறதையும் தெரிஞ்சுக்கணும். சோ இந்து லக்னத்தில இருந்து இந்த குழப்பம் இதுதாங்கறத தெளிவுபடுத்திக்கிட்டு நம்ம சேனலை ஃபர்ஸ்ட் டைமா பார்க்கிறவங்கள சப்ஸ்கிரைப் பண்ணுங்கன்னு சொல்லிக்கிட்டு மீண்டும் ஒரு காணொளியில் உங்களை வந்து சந்திக்கும் வரை உங்களிடமிருந்து அன்புடன் விடைபெற்றுக்கொள்வது உங்கள் அன்பு ஜோதிடர் ஸ்ரீராம்ஜி நன்றி வணக்கம்.

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript