Thumbnail for null by null

20m 17s1,860 words~10 min read
YouTube auto captions
Transcript source

YouTube auto captions

This transcript was extracted from YouTube's auto-generated caption track. The transcript below is server-rendered so it can be read, searched, cited, and shared without opening the original YouTube player.

Timestamped outline
[0:03]Section 1

அன்பே தெய்வம். அப்பளம் பப்படம். நம்ம சாப்பிடுறோம் இல்லைங்களா அப்பளம், பப்படம். இது எப்படி தயாரிக்கிறாங்க? இது நல்லதா கெட்டதா? இதுல டூப்ளி...

[10:22]Section 2

எனவே நண்பர்களே, நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், அப்பளத்துல பெருசா எந்த ஒரு கலப்படமும் இதுவரை நடக்கவில்லை. கலப்படம் என்று ச...

[13:58]Section 3

நண்பர்களே. கடைசியாக சொல்றேங்க. இது என்ன கன்குளூஷன்னா அப்பளம் மிகவும் நல்லது அனைவரும் சாப்பிடுங்கள் மிகவும் நல்லது. அப்பளம் தயாரிக்கும் பொ...

[17:16]Section 4

இதுல குறை கிடையாது. நண்பர்களே, இதுபோன்ற ஒவ்வொரு விஷயத்திலும் உள்ள உண்மைகளை தேடி கண்டுபிடித்து அதை உலக மக்களுக்கு சொல்வதுதான் நான் பல வருட...

Pull quotes
[0:03]அதிலிருந்து எப்படி நம்ம தப்பிக்கிறது அப்படிங்கற முழு விவரத்தையும் இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம்.
[0:03]உளுந்து, தேங்காய் எண்ணெய், சோடியம் பைகார்பனேட் எனப்படும் சோடா, கல்லுப்பு, அதுக்கப்புறமா சாதாரண தண்ணீர்.
[0:03]இப்படி இரண்டு வகையான அப்பளங்கள் நமது தமிழ்நாட்டில் பாரம்பரியமாக பல வருடமாக செய்து சாப்பிட்டு இருக்காங்க.
[0:03]அப்பளம் ஆரோக்கியமான ஒரு அழகான ஒரு விஷயம் நல்லா மொறுமொறுன்னு சாப்பிடும்போது டேஸ்டா இருக்கு நல்லா இருக்கு.
Use this transcript
Related transcript hubs

[0:03]அன்பே தெய்வம். அப்பளம் பப்படம். நம்ம சாப்பிடுறோம் இல்லைங்களா அப்பளம், பப்படம். இது எப்படி தயாரிக்கிறாங்க? இது நல்லதா கெட்டதா? இதுல டூப்ளிகேட் இருக்கா, ஒரிஜினல் இருக்கா? இது எப்படி எப்படி எல்லாம் வந்து கெமிக்கல் கலக்க வாய்ப்பு இருக்குது? அதிலிருந்து எப்படி நம்ம தப்பிக்கிறது அப்படிங்கற முழு விவரத்தையும் இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம். அப்பளம் பப்படம். ஆமாங்க. நாம நிறைய தெரிஞ்சுக்கிறோங்க. பல வெளிநாட்டுல இருக்க பல்வேறு விஷயங்கள் தெரிஞ்சுக்கிறோம். சாதாரணமா சாப்பிடுற அப்பளத்தின் மூலப்பொருள் கேட்டாவே பல பேத்துக்கு தெரியலைங்க. எனவே தயவு செய்து எந்த ஒரு விஷயமா இருந்தாலும் அது சம்பந்தமா கொஞ்சம் சிந்திங்க. சிந்திக்கும் பொழுது அதுல இருக்க உண்மைகள் நமக்கு புரிய வரும். அப்போ நம்ம யாரும் ஏமாத்த முடியாது. அப்பளம், அப்பளத்துடைய மூலப்பொருள் என்னன்னு கேட்டீங்கன்னா, உளுந்து. தேங்காய் எண்ணெய், சோடா, கல்லுப்பு, தண்ணி. இவ்வளவு தாங்க. அதாவது அப்பளம் தயாரிக்கிறதுல ரெண்டு முறை இருக்கு. மதுரை பக்கத்துல ஒரு முறையில் தயாரிக்கிறாங்க. சென்னை பக்கத்துல இன்னொரு முறையில் தயாரிக்கிறாங்க. மதுரை பக்கம் இருக்கிற அப்பளம் வந்து கொஞ்சம் மஞ்சளா இருக்கும். சென்னை பக்கத்துல தயாரிக்கிற அப்பளங்கள் கொஞ்சம் வெள்ளையா இருக்கும். மதுரையில் எப்படி தயாரிக்கிறாங்கன்னா, உளுந்து, தேங்காய் எண்ணெய், சோடா. சோடா அப்படிங்கறது என்னன்னு கேட்டீங்கன்னா, சோடியம் பைகார்பனேட் சோடா. இங்க பாருங்க. நமக்கு இந்த அப்ப சோடா பயன்படுத்துறோம் இல்லையா? இட்லி தோசைக்கு மாவு அரைக்கும் போது அந்த சோடா வேற இந்த சோடா வேற. ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு. உளுந்து, தேங்காய் எண்ணெய், சோடியம் பைகார்பனேட் எனப்படும் சோடா, கல்லுப்பு, அதுக்கப்புறமா சாதாரண தண்ணீர். ஹேண்ட்மேட். கையில மேனுவலா செய்யறது இது வந்து மதுரை மெத்தட். சென்னையில எல்லாமே அதே தாங்க. சோடாவுக்கு பதுவா சிப்பி சுண்ணாம்ப பயன்படுத்துறாங்க. இந்த சோடா பயன்படுத்தும் பொழுது கொஞ்சம் மஞ்சளா வருது. சிப்பி சுண்ணாம்ப பயன்படுத்தும் பொழுது வெள்ளையா வருது அவ்வளவுதான் வித்தியாசம். இப்படி இரண்டு வகையான அப்பளங்கள் நமது தமிழ்நாட்டில் பாரம்பரியமாக பல வருடமாக செய்து சாப்பிட்டு இருக்காங்க. இது மிகவும் நல்லது அப்பளம் சாப்பிடுறது ரொம்ப நல்லது. அப்பளம் ஆரோக்கியமான ஒரு அழகான ஒரு விஷயம் நல்லா மொறுமொறுன்னு சாப்பிடும்போது டேஸ்டா இருக்கு நல்லா இருக்கு. இதுல என்னென்னவெல்லாம் குளப்பணி வருதுன்னு பார்க்கலாம். இப்போ உளுந்துன்னு சொன்னேன் பார்த்தீங்களா, உளுந்துக்கு பதுவா என்ன பண்றாங்களாமா, பச்சரிசி மாவ கலக்குறது. இல்லைனா ஜவ்வரிசியை கலக்கிறது, ஜவ்வரிசி மாவை கலக்கிறது. இல்லைனா கான்ப்ளவர்னு சொல்றாங்க இல்லைங்களா சோள மாவை கலக்குறது. இதாங்க கலப்படம். இங்க பாருங்க இந்த கலப்படத்தால ஒன்னும் ஆபத்துலாம் கிடையாது. உளுந்துக்கு பதுவா பச்சரிசி தானே பயன்படுத்துறாங்க. பச்சரிசி உடம்புக்கு நம்ம பயன்படுத்துற நல்ல பொருள் தானே? நல்ல கவனிங்க. உளுந்து பயன்படுத்துவது பாரம்பரிய முறை. உளுந்து காஸ்ட்லி. விலை ஜாஸ்திங்கறனால என்ன பண்ணிட்டாங்க, கலப்படம்ங்கறது கெட்ட விஷயம் இல்லைங்க. உளுந்து கொஞ்சம் விலை ஜாஸ்தியா இருக்குறனால உளுந்துக்கு பதுவா உளுந்து 100%ல ஒரு ஐந்து முதல் 40% வரை ஒருவேளை பச்சரிசி மாலையோ இல்ல கான்ப்ளவர் அப்படிங்கற சோள மாவையோ, இல்ல ஜவ்வரிசி மாவையோ கலக்கும் பொழுது, மேனுபாக்சரிங் காஸ்ட்னு சொல்றாங்க இல்லைங்களா, அதை தயாரிப்பதற்கான அந்த செலவு குறைகிறது. இதுதான் கலப்படம் பண்றாங்க. இதுக்காக நீங்க பயப்பட வேண்டியதில்லை. செலவு குறைப்பதற்காக இதுபோன்ற பொருட்கள் கலக்கப்படுகிறது. அதை வந்து 10 முதல் 40 சதவீதம் கலக்குறாங்களாம். புரிஞ்சுக்கங்க. இப்படி கலக்குறதுனால நமக்கு ஆபத்துலாம் கிடையாது. தப்பு கிடையாது. ஆனா, தன்மை மாறுது அவ்வளவுதான். அவங்க பாவம், மேனுபேக்சரிங் பண்றவுடைய செலவை குறைச்சு லாபம் அதிகமா எடுக்கறதுக்காக அந்த டெக்னிக் பயன்படுத்துறாங்க. எதுக்கு சொல்ல வரணும்னா இது தவறு இல்லை ஆனால் புரிந்து கொண்டு ஓஹோ இதுல வந்து ஒரு 40% பச்சரிசி மாவு கலந்து இருக்காங்கனு தெரிஞ்சு சாப்பிடுங்க. ஆனால், என்ன சொல்ல வரேன்னா, பாரம்பரிய முறை என்பது 100% உளுந்து இருக்க வேண்டும். பச்சரிசி மாவோ, கான்பிளோரோ, ஜவ்வரிசி மாவோ கலக்காமல் செய்வதுதான் பாரம்பரிய முறை. அப்படின்னு தெரிஞ்சுக்கங்க. இப்படி கொஞ்சம் கலக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு. அடுத்தது தேங்காய் எண்ணைக்கு பதிலாக பாமாயில் சேர்த்துக்கிறார்கள். பலரும் சொல்லுகிறார்கள் பாமாயில் உடம்புக்கு கெடுதல் என்று நான் எங்கேயுமே எப்பொழுதும் அதை சொன்னது கிடையாது. புரிஞ்சுக்கங்க. தேங்காய் எண்ணெய் நல்லதுங்க, நல்லெண்ணெய் நல்லதுங்க, விளக்கெண்ணெய் நல்லதுங்க, பாமாயில் நல்லதுதான். பாமாயில் சரியான முறையில் தயாரித்தால் நல்லது. பாமாயில் செய்யும்போது அந்த மேனுபேக்சரிங் செய்முறை தவறாக இருப்பதால் பாமாயில் கெட்டது என்று கூறுகிறார்கள். அப்படின்னு பார்த்தா தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெயை நீங்க கடையில வாங்குறீங்க இல்லைங்களா அது எண்ணெயே கிடையாது. லிக்விட் பாரஃபின் அப்படிங்கிற ஒரு பொருள். புரிந்து கொள்ளுங்கள் பாமாயில் கெட்டது கிடையாது. பாமாயில் கெமிக்கல் கலந்து கொடுப்பதுதான் கெட்டது. டிரடிஷனல் மெத்தட்ல பாரம்பரிய முறைப்படி பாமாயில் தயாரித்து பயன்படுத்தினால் உடம்புக்கு நல்லது. அப்போ தேங்காய் எண்ணெய் பயன்படுத்துறதுக்கு பதிலாக அப்பளம் தயாரிக்கும் போது பாமாயில் பயன்படுத்துகிறார்கள்.

[6:24]சில இடங்கள்ல சுத்தமான தேங்காய் எண்ணெய்ல பயன்படுத்துறாங்க. நல்லது. சில பேர் அது காஸ்ட்லியா இருக்குது. விலை ஜாஸ்தியா இருக்குதுங்கறனால விலையை குறைப்பதற்காக சுத்தமான பாமாயில் பயன்படுத்துறாங்க அது நல்லது. நல்லா கவனிங்க. நீங்க பாமாயில் பயன்படுத்துறீங்களா தேங்காய் எண்ணெய் பயன்படுத்துறீங்களாங்குறது முக்கியமில்லை. அதன் குவாலிட்டிதான் முக்கியம். ஆனா சுத்தமான தரமுள்ள ஒரு தேங்காய் எண்ணெயில் தயாரிப்பதுதான் பாரம்பரியம். பாமாயில் பயன்படுத்தும் போது பாரம்பரியம் கிடையாது. தவறு கிடையாது ஆனால் கெமிக்கல் உள்ள பாமாயில பயன்படுத்தும்போது தவறாகிறது. அதேபோல் கெமிக்கல் உள்ள ஒரு தேங்காய் எண்ணெயை பயன்படுத்தும் பொழுது அது தவறாகிறது. மீண்டும் சொல்கிறேன் அனைவரும் புரிந்து கொள்ளுங்கள். தேங்காய் எண்ணெயா பாமாயிலான்னு முக்கியமில்லை. அதன் குவாலிட்டிதான் முக்கியம். ஒருத்தரு நல்ல தரமான பாமாயிலல அப்பளம் தயாரிக்கிறார். அது நல்லது. ஒருத்தர் தரம் கெட்ட அது தேங்காய் எண்ணெயே இல்ல லிக்விட் பெரஃபைன் அதுல தேங்காய் எண்ணெய்ன்னு சொல்லிட்டு அப்பளம் தயாரிக்கிறார். அப்ப எது கரெக்ட்ங்க? மீண்டும் சொல்கிறேன், சுத்தமான தேங்காய் எண்ணெயில் செக்கு எண்ணெயில அப்பளம் தயாரிப்பது சிறப்பு. ஃபர்ஸ்ட் பாயிண்ட் என்ன? ஃபர்ஸ்ட் என்ன சொன்னேன்னா, 100% உளுந்து இருந்தால் அது பாரம்பரியம். அரிசியோ, அரிசி மாவோ, ஜவ்வரிசி மாவோ இல்ல வந்து கான்பிளவரோ கலப்பது பாரம்பரியம் இல்லை. அது தவறும் கிடையாது. காஸ்ட் வைஸ் பண்றாங்க. ரெண்டாவது சுத்தமான தேங்காய் எண்ணெயில் தயாரிப்பது பாரம்பரியம். பாமாயில் கலக்குறது பாமாயில்ல செய்யறது வந்து விலை குறைப்பதற்காக செய்கிறார்கள். அட்லீஸ்ட் அதையாவது நல்ல பாமாயில்ல தயாரிக்க வேண்டும். அடுத்தது. கல்லுப்பு. கல்லுப்புக்கு பதுவா பொடி உப்பை அப்பளம் தயாரிக்கும் போது யாரும் பயன்படுத்துவதில்லை. இதற்காக நான் வாழ்த்துக்கள் சொல்றேங்க. நான் ஆராய்ச்சி பண்ணி பார்த்ததுல கல்லுப்பு எல்லாரும்மே அப்பளம் தயாரிக்கிற அத்தனை பேரும் 100-க்கு 100% கல்லுப்பை பயன்படுத்துகிறார்கள். தயவுசெய்து அதை பயன்படுத்துங்கள் மாறிவிடாதீர்கள். அடுத்தது இந்த சோடா அப்படிங்கிற சோடியம் பைகார்பனேட் பயன்படுத்துறாங்க. சில பேர் சொல்றாங்க இந்த சோடா பயன்படுத்துறது வந்து தவறு. அது கெமிக்கல் தானே அப்படிங்கறீங்க ஒத்துக்குறேன். இப்ப நம்ம இட்லி தோசை சாப்பிடும் பொழுது கொஞ்சம் சோடா போடுறோமா இல்லையா? அது பெரிய தவறுலாம் இல்லைங்க அது ஒரு ப்ராசஸ். அந்த மாதிரி அப்பளம் தயாரிக்கும் பொழுது சோடியம் பைகார்பனேட் என்ற இந்த சோடா பயன்படுத்துவது பெரிய தவறெல்லாம் கிடையாதுங்க அந்த ப்ராசஸ் அப்படித்தான் இருக்கும். நீங்க தேங்காய் எண்ணெயில ஒரு அப்பளம் தயாரிச்சீங்கன்னா, அடிக்கு வச்சீங்கன்னா ஒட்டிக்குங்க நீங்க பிரிக்கவே முடியாது. சோ, அப்போ இந்த சோடா பயன்படுத்தும் பொழுது அப்பதான் உங்களுக்கு வந்து ஒட்டாம இருக்கும். அதனால சோடா பயன்படுத்துவது மதுரையில் உள்ள மக்கள் ஒரு பழக்கம். சிப்பி சுண்ணாம்பு பயன்படுத்துவது சென்னையில் வட்டாரத்தில் உள்ள பழக்கம். சோடாவை விட சிப்பி சுண்ணாம்பு நல்லது கம்பேர் பண்ணும் பொழுது. அதுக்காக சோடா ரொம்ப கெட்டதுலாம் கிடையாதுங்க. சோடாவை விட சிப்பி சுண்ணாம்பு நல்லது. ஆனா இப்ப இங்க என்னன்னா இந்த சிப்பி சுண்ணாம்பு கெமிக்கலா மாத்திட்டாங்க. அது ஒரிஜினல் கிடைக்குதாங்கறது தெரியல யோசிக்கணும். எனவே. சோடா பயன்படுத்தி தயாரிக்கும் அப்பளத்தை விட சிப்பி சுண்ணாம்பில் தயாரிக்கும் அப்பளம் சிறந்தது. அதற்காக நான் சோடால தயாரிக்கிற அப்பளம் கெட்டதுன்னு சொல்ல வரல புரிஞ்சுக்கோங்க. சோடாவில் தயாரிக்கும் அப்பளத்தை விட சிப்பி சுண்ணாம்பில் தயாரிக்கும் அப்பளம் ஒருபடி சிறந்தது. அந்த சிப்பி சுண்ணாம்பும் கெமிக்கல் இல்லாமல் ஒரிஜினலாக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியமானது.

[10:22]எனவே நண்பர்களே, நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், அப்பளத்துல பெருசா எந்த ஒரு கலப்படமும் இதுவரை நடக்கவில்லை. கலப்படம் என்று சொல்லி செலவை குறைப்பதற்காக வேறு ஒரு பொருள்களை உள்ளே போடுறாங்களே தவிர. அதனால பெரிய ஆபத்து கிடையாது என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஹேண்ட்மேட். அந்த காலத்துல கையில செஞ்சாங்க. இப்ப மிஷின்ல செய்றாங்க. அப்போ கையில் செய்வது மிக மிக மிக சிறந்தது. மிஷின்ல செய்யறது கெட்டது இல்லை. கையில் செய்வதை விட கொஞ்சம் தரம் குறைந்தது.

[10:58]இவ்வளவுதாங்க அப்பளத்துல இவ்வளவுதாங்க விஷயம். உளுந்து, தண்ணி, சோடா, தேங்காய் எண்ணெய், கையில செஞ்சதா மிஷின்ல செஞ்சதா. உளுந்துல செய்யாமல் வேற பொருளை கலக்கும் பொழுது அதோட குவாலிட்டி கொஞ்சம் குறையுது. தேங்காய் எண்ணெயில தயாரிக்காமல் பாமாயில தயாரிக்கும் பொழுது கொஞ்சம் குறையுது. சிப்பி சுண்ணாம்புல செய்யாமல் சோடால செய்யும் பொழுது கொஞ்சம் குறையுது. கையில செய்யறதை விட மிஷின்ல செய்யும்போது குறையுது. அவ்வளவுதான் பெரிய இதுல பெரிய ஒரு தவறு எங்கேயும் நடந்துவிடவில்லை இதுவரை. ஆனாலும். ஒரே ஒரு விஷயம், என்ன மிகப்பெரிய தவறு நடக்குதுன்னா, அப்பளத்துடைய சைஸ். அதோட அளவை பெருசு செய்வதற்கு சில உடம்பை பாதிக்கும் கெமிக்கல் பயன்படுத்துகிறார்கள். இங்க தாங்க வருது. அதனால என்ன சொல்ல வரோம்னா அப்பளம் எந்தளவுக்கு சிறியதாக இருக்கிறதோ அதை பயன்படுத்துங்கள். எந்தளவுக்கு பெரியதாக இருக்கிறதோ அப்பளம் பெரிதாக வேண்டும் என்றால் அதற்கு கெமிக்கல் பயன்படுத்த வேண்டும். இந்தியால. நான்கு முதல் ஐந்து இன்ச் வரைக்கும் அப்பளம் தயாரிக்கிறாங்களாம் பயன்படுத்துறாங்க. வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் அப்பளங்கள் நான்கு முதல் 6.5, 6.5 இன்ச் வரைக்கும் கேக்குறாங்களாம். அப்போ இந்த அப்பளத்தை பெருசு பண்றதுக்காக கெமிக்கல் பயன்படுத்தப்படுகிறது. இது உடம்புக்கு கேடுதல். எனவே எந்த அளவுக்கு பெரிய அப்பளம் பயன்படுத்துறீங்களோ அந்த அளவுக்கு கெமிக்கல் இருக்குன்னு அர்த்தம். இதுதான் ரொம்ப முக்கியம். எந்த அளவுக்கு சின்னதா இருக்குதோ அது நல்ல அப்பளம் கெமிக்கல் பயன்படுத்தாத அப்பளம். அப்புறம் ஒரு அப்பளத்துல கெமிக்கல் இருக்கா இல்லையானு எப்படி கண்டுபிடிக்கிறது நல்லதா கெட்டதா எப்படி கண்டுபிடிக்கிறதுக்கு சில சோதனைகள் இருக்கு. அந்த அப்பளத்தை சாப்பிடும் பொழுது யாருக்காவது தொண்டையில் வலி வந்தால் அதில் கெமிக்கல் இருக்குன்னு அர்த்தம்ங்க சிம்பிளா கண்டுபிடிச்சுடலாங்க. நீங்க அப்பளம் சாப்பிட்டு பாருங்க சாப்பிடும் பொழுது சாப்பிட்டு முடிச்சு உன்னையோ தொண்டையில ஒரு மாதிரி. கரகரன்னு இருக்குது இல்ல ஒரு வலி வருது. தொண்டையில் ஒரு சின்ன பிரச்சனைனா கெமிக்கல் உள்ள அப்பளங்கள் உடனடியாக உங்களுக்கு தொண்டையில் பிரச்சனை ஏற்படுத்தும். கெமிக்கல் இல்லாத அப்பளங்கள் தொண்டைக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுத்தாது. இதுதான் முதல்ல கண்டுபிடிக்கிற டெக்னிக். ரெண்டாவது. அளவு. அளவு எந்த அளவுக்கு பெரிதாக இருக்கிறதோ அவ்வளவு கெமிக்கல் இருக்குன்னு அர்த்தம். மூணாவது எக்ஸ்பைரி டேட். ஒரிஜினல் சுத்தமான நல்ல அப்பளம் நான்கு மாதம் வரை வைத்துக்கொள்ளலாம். கெமிக்கல் இருக்கிற அப்பளம் சீக்கிரம் கெட்டு போயிரும். இப்படி இந்த மூன்று விஷயத்தை வைத்து தொண்டை வலி, அளவு, எக்ஸ்பைரி டேட் இதை வைத்து நீங்கள் நல்ல அப்பளம் கெட்ட அப்பளம் கண்டுபிடிக்க முடியும். ஒருவேளை நாலு மாசத்துக்கு மேல கூட இந்த அப்பளத்தை வச்சுக்கணும்னா உப்பு கொஞ்சம் தூக்கலா போட்டா போதுங்க. உப்பின் அளவை அதிகரிக்க அதிகரிக்க அப்பளத்தின் எக்ஸ்பைரி டேட் அப்படிங்கிற கெட்டுப்போகும் நேரம் அதிகமாகிறது.

[13:58]நண்பர்களே. கடைசியாக சொல்றேங்க. இது என்ன கன்குளூஷன்னா அப்பளம் மிகவும் நல்லது அனைவரும் சாப்பிடுங்கள் மிகவும் நல்லது. அப்பளம் தயாரிக்கும் பொழுது 100% உளுந்தில் தயாரித்தால் பாரம்பரியம். அதில் பச்சரிசி மாலையோ ஜவ்வரிசி மாலையோ கான்பிளவரோ கலந்தால் காஸ்ட் குறையும் ஆனால் ஆபத்து இல்லை. தேங்காய் எண்ணெயில் முழுமையா தயாரிக்கும் பொழுது அது பாரம்பரியம். ஆனால் பாமாயிலோ வேற ஏதோ ஆயிலோ கலக்கும் பொழுது அது கொஞ்சம் சற்று தரம் குறைகிறது. முடிந்தவரை தேங்காய் எண்ணெயில் தயாரியுங்கள். சோடாவுக்கு பதிலாக சிப்பி சுண்ணாம்பை பயன்படுத்துங்கள். அதற்காக சோடா பயன்படுத்துவது தவறல்ல. சோடாவை விட சிப்பி சுண்ணாம்பு ஒருபடி மேல். கையில் செய்யும் அப்பளங்கள் மிகவும் தரமானது. எனவே முடிந்தவரை கையில் செய்யுங்கள். மிஷின் அப்பளங்களை தவிருங்கள். இப்ப கம்பெனியெல்லாம் உருவாகி மிஷின்ல அடிச்சு அடிச்சு இறக்குறாங்க. மிஷின் அப்பளத்தை விட ஒரு இயந்திரத்தால் உருவாக்கப்பட்ட அப்பளத்தை விட ஹேண்ட்மேடுக்கு பவர் ஜாஸ்தி. எனவே கையில் தயாரிக்கும் அப்பள கம்பெனிகளுக்கு அந்த அப்பளங்களுக்கு கொஞ்சம் விலை அதிகமாக இருந்தாலும் கொடுத்து வாங்குங்கள். மிஷின் மேட் அப்பளங்களை தவிருங்கள். தொண்டையில் வலி வரும் அப்பளங்களை உடனே கம்ப்ளைன்ட் செய்து அந்த கடைக்கு போய் இந்த அப்பளம் சாப்பிட்டேன். இது வந்து சைஸ் ரொம்ப பெருசா இருக்குது தொண்டையில் வலி வருது இது விற்காதீங்கன்னு சொல்லி கடையில் வாங்க விடாமல் செய்யுங்கள். நண்பர்களே. அப்பளம். பாருங்க அப்பளத்துல இவ்வளவு விஷயங்க. இது போன்ற விஷயத்தை எனக்கு கற்றுக் கொடுத்தவர் மதுரையை சேர்ந்த திரு துரை அவர்கள். இந்த நேரத்துல மதுரை எனது நண்பர் துரை அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேங்க. அவர் தான் எனக்கு தொலைபேசி மூலமா பல மணி நேரம் நான் இதை புரிய வைக்கிறதுக்காக எனக்கு நிறைய விஷயங்கள் சொல்லிக் கொடுத்தார். எனவே நண்பர் துரை அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அப்புறம் இந்த அப்பளத்துக்கும் பப்பளத்துக்கும் என்ன வித்தியாசம்னு பார்க்கலாம்ங்க. தமிழ்நாட்டுல பயன்படுத்துறது அப்பளம். இந்த கேரளா பக்கம் போய் பாருங்க பப்படம். ரெண்டுக்கும் பெரிய வித்தியாசம்லாம் இல்லைங்க. எல்லாம் அதே டெக்னிக்தான். காலையில மாவு பிசைந்து மதியத்துக்குள்ள காய வச்சு சாயந்திரத்துக்குள்ள வெயில்ல போட்டு ஒரே நாளில் தயார் செய்தால் அதற்கு பேரு பப்படம். ஒரு நாள் ஃபுல்லா நல்லா ஊற வச்சு அடுத்த நாள் வெயில்ல வச்சு அடுத்த நாள் மூன்றாவது நாளும் வெயிலில் வைத்து இரண்டு நாள் சூரியனில் வைத்து ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து மூன்று நாட்கள் தயாரித்தால் அதற்கு பேரு அப்பளம்.

[16:35]ஒரே நாளில் தயார் செய்து உடனே வெயில்ல காய வச்சு உடனே எடுத்துவிட்டால் பப்படம். அது கொஞ்சம் இன்னும் கொஞ்சம் சாஃப்டா இருக்கும். இது கொஞ்சம் ரஃப்பா இருக்கும் அவ்வளவுதாங்க. சிலருக்கு அந்த சாஃப்டா பிடிக்கும் பப்படம். சிலருக்கு அப்பளம் பிடிக்கும். பப்படத்தை விட அப்பளம் ஒருபடி மேல் அப்படி வச்சுக்கோங்க.

[17:16]இதுல குறை கிடையாது. நண்பர்களே, இதுபோன்ற ஒவ்வொரு விஷயத்திலும் உள்ள உண்மைகளை தேடி கண்டுபிடித்து அதை உலக மக்களுக்கு சொல்வதுதான் நான் பல வருட வேலையாக வைத்திருக்கிறேன். இதன் மூலமாக நானும் பல விஷயம் கற்றுக் கொள்கிறேன். உங்களுக்கும் பல விஷயம் கற்றுக் கொடுக்கிறேன். எனவே இது போன்ற விஷயங்கள் உங்கள் ஊரில் யாராவது தெரிந்தவர்கள் இருந்தால் இல்ல உங்களுக்கு தெரிந்தால் எப்படியாவது எங்ககிட்ட வந்து சேத்துருங்க. இதை உலக மக்களுக்கு சொல்வோம். சில மருத்துவர்கள் அப்பளம் சாப்பிடாதீர்கள். அதனால் வந்து ஹார்ட்ல பிராப்ளம் வரும் உடம்புக்கு நோய் வரும்னு சொல்லுவாங்க. அப்படி எல்லாம் கிடையாது. அப்பளம் உடம்புக்கு மிகவும் ஆரோக்கியமானது. அப்பளம் சாப்பிடுவதால் எந்த ஒரு நோயும் வராது. மகிழ்ச்சியா தான் இருக்கும் நல்லதுதான். நான் சொன்ன மாதிரி கெமிக்கல் இருக்கிற பெருசா இருக்கிற தொண்டைக்கு வலி வர அப்பளத்தை மட்டும் அவாய்ட் பண்ணுங்க. அப்பளம் ஆரோக்கியமானது. அப்புறம் இந்த டெல்லி அப்பளம்னு சொல்லி இந்த எக்ஸிபிஷன் பொருள்காட்சில எல்லாம் போகும்போது பெருசா கொடுப்பாங்க. கண்டிப்பாக கெமிக்கல் பயன்படுத்தினால்தான் அவ்வளவு பெரிய அப்பளத்தை உருவாக்க முடியும். அது சும்மா ஜாலியா என்னைக்காவது ஒரு நாள் வருஷத்துக்கு ஒருக்கா போறோம். ஆசையா வாங்கி சாப்பிடலாங்க ரெகுலரா சாப்பிடக்கூடாது. அதை சில பேர் வாங்கிட்டு வந்து வீட்ல வச்சு டெய்லி பெருசு பெருசா அப்படி செஞ்சு சாப்பிட வேண்டாம். அது சும்மா ஒரு ஜாலி. டெல்லி அப்பளம் சாப்பிடலாம். ஜாலிக்காக சாப்பிடுங்கள் ஆரோக்கியத்துக்காக அல்ல. டெல்லி அப்பளத்தை எங்கயாவது எக்ஸிபிஷன்ல பொருள்காட்சியில போய் ஏதாவது சுற்றுலா போகும் பொழுது ஜாலியா ஒரு நாள் வாங்கி சாப்பிடுங்க. பெரிய அதுவும் ஆசைக்காக ஜாலிக்காக மனசுக்காக ஆரோக்கியத்துக்காக கிடையாது. அதற்காக ஐயையோ டெல்லி அப்பளம் சாப்பிடக்கூடாது கெமிக்கல் அப்படின்னு அவாய்ட் பண்ணாதீங்க. அது சும்மா ஒரு ஜாலிக்காக என்னைக்காவது ஒரு நாள் சாப்பிடுறோம். அதனாலலாம் பெரிய நோய் எல்லாம் வராது. ரெகுலரா சாப்பிடக்கூடாது. ஆசைக்காக ஜாலிக்காக ஒரு ஃபன்னுக்காக சாப்பிடலாம். நண்பர்களே. நமது அம்மி இயற்கை அங்காடில 100% உளுந்து, 100% உளுந்து, தேங்காய் எண்ணெய் மட்டுமே பயன்படுத்தி கல்லுப்பு பயன்படுத்தி எந்த ஒரு கெமிக்கலும் போடாமல் சைஸ் இன்கிரீஸ் பண்ணாமல் தொண்டை வலி வராமல் பாரம்பரிய முறைப்படி ஒரு அப்பளம் தயாரிக்கச் சொல்லி

[19:30]எனது நண்பர்கள்கிட்ட கேட்டு அதை சரியா தயாரிக்கிறாங்கன்னு செக் பண்ணி அந்த அப்பளத்தை நாம அம்மி இயற்கை அங்காடியில கொடுக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கோம். நீங்களும் இனிமேல் எல்லா ஆர்கானிக் ஷாப்லயும் எல்லா ஊர்களிலும் எல்லா கடைகளிலும் அந்த கடக்கார்ட்ட போய் இந்த வீடியோவை காமிச்சு அவங்க விக்கிற அப்பளம் நல்ல அப்பளமா இருக்கிற மாதிரி பார்த்துக்கங்க. இப்படி ஒவ்வொரு பொருளாக தேடி தேடி நாம் ஒழுங்கு செய்துவிட்டால் கண்டிப்பாக இந்த உலகத்தில் நல்ல பொருள்கள் மட்டுமே கிடைக்கும். வாருங்கள் அப்பளத்தை ஒழுங்கு செய்வோம். அப்பளம் விஷயத்தில் எனக்கு கற்றுக்கொடுத்த மதுரை துரை அவர்களுக்கு நன்றி பாராட்டி இந்த பதிவை நான் முடிவுக்கு கொண்டு வருகிறேன். நண்பர்களே அப்பளத்தில் உள்ள உண்மையை புரிந்து கொண்டு அப்பளம் சாப்பிடுங்கள் ஆரோக்கியமாக வாழுங்கள்.

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript