[0:08]ஓம் சரணாகத தீனார்த்த பரித்ராண பராயணி சர்வஸ்யார்த்திகரே தேவி நாராயணி நமோஸ்துதே. வணக்கம் நேயர்களே. இது மகாலட்சுமி ஜோதிடம் வழங்கும் காலச்சக்கரம். உங்கள் அன்பு ஜோதிடர் ஸ்ரீராம்ஜி பேசுகிறேன். அனைவரும் நன்றாக இருக்கிறீர்களா? நன்றாகத்தான் இருப்பீர்கள் நன்றாக இருக்க வேண்டும். இன்றைய காணொளியில் நாம் காண இருப்பது பணம் வரும் வழிகள். பணவர ஸ்தானங்கள் ஜோதிடத்தில் இன்னும் ஒரு பிரிவு. கேந்திரம் மற்றும் திரிகோணம் என்றால் என்ன? அவையின் வலிமைகள் எப்படிப்பட்டவை என்பதை நம்ம பார்த்தாச்சு. அதற்கடுத்ததா கேந்திரத்திற்கு அடுத்த நிலையான பணவர ஸ்தானம். இந்த பணவர ஸ்தானம்னா என்ன? இதன் மூலமா ஒரு மனிதனுடைய வாழ்வியல் எப்படி தீர்மானிக்கப்படுகிறதுங்கறத பத்தி பார்ப்போம். அதுக்கு முன்னாடி நம்ம சேனலை ஃபர்ஸ்ட் டைமா பார்க்கிறவங்களா இருந்தீங்கன்னா சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க, லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க. தொடர்ந்து இந்த அஸ்ட்ரோ ஸ்ரீராம்ஜி சேனல்ல வரக்கூடிய காணொளிகளை பார்த்து உங்களுடைய ஜோதிட அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள். பணபர ஸ்தானங்கள். முதல்ல கேந்திரம்னா என்னன்னு தெரிஞ்சுக்கணும். ஒன்னு, நாலு, ஏழு, 10. இது கேந்திர ஸ்தானங்கள் இல்லைங்களா? திரிகோணம்ங்கறது ஒன்னு அஞ்சு, ஒன்பது. இதற்கடுத்ததா ஒரு வலிமையான யோகத்தை அல்லது வாழ்வியலை நடத்திச் செல்லும் சூட்சமத்தை தரக்கூடிய இடம் பணவர ஸ்தானங்கள், பணபர ஸ்தானம். இந்த கேந்திர ஸ்தானங்களுக்கு அடுத்தடுத்த வீடுகள் தான் பணபர ஸ்தானங்கள். சரிங்களா? கேந்திர ஸ்தானங்கள் என்னென்ன? ஒன்னு, நாலு, ஏழு, 10. அப்ப ரெண்டு, ஐந்து, எட்டு மற்றும் 11. உங்க லக்னத்தில இருந்து ரெண்டு, ஐந்து, எட்டு மற்றும் 11 ஆம் இடம்ங்கிறதுதான் பணவர ஸ்தானங்கள். அதாவது பணம் வர சூட்சுமான இடங்கள். எந்த வழிகள்ல ஒருத்தருக்கு பணம் வரும்ங்கறத குறிப்பிடக்கூடிய ஸ்தானங்கள் அப்படின்னு எடுத்துக்கலாம். இதுல இரண்டாம் இடம், இரண்டாம் இடத்தின் மூலமா ஒருத்தருக்கு எப்படி பணம் வரும்? குடும்பம், தனம், வாக்கு. அப்ப ஒரு குடும்பத்தாருடைய ஒட்டுழைப்பு, குடும்பத்தாருடைய சிக்கனம், நடவடிக்கைகள், சொத்து சுகங்கள், பூர்வீகம், அதன் மூலம் கிடைக்கக்கூடிய வருமானம், ஜாதகரின் நாணயம், உழைப்பு, அதன் மூலம் கிடைக்கக்கூடிய வருமானத்தை இந்த இரண்டாம் இடம் எடுத்துக்கும். அதனாலதான் எந்த ஜாதகத்துக்கும் தனாதிபதி கெடக்கூடாதுன்னு சொல்லுவாங்க. இந்த தனஸ்தானம்னு சொல்லக்கூடிய இரண்டாம் இடத்திற்கு மறைமுகமாக அதாவது மறைமுகமாக உதவி செய்யக்கூடிய கிரகங்கள் சூரியன், குரு, சுக்ரன் மற்றும் புதன். சரிங்களா? இந்த சூரியன், குரு, சுக்கிரன், புதன், இரண்டாம் இடம்னு சொல்லக்கூடிய தனஸ்தானத்திற்கு மறைமுகமாய் வருமானம் தரும் வழிகளை குறிப்பவர்கள். சரிங்களா? பணம் வரும் ஸ்தானங்கள்ல இந்த இரண்டாம் இடம். இந்த இரண்டாம் இடம்ங்கிறது குடும்பம், தனம், வாக்கு ஸ்தானம். அப்ப இந்த இடத்தின் ஆதிபத்தியத்தை மறைமுகமா பெற கிரகங்கள் இவர்கள். அப்ப ஒரு மனிதனுடைய உழைப்பு, முயற்சி, குடும்பம், அவர்களால் ஏற்படும் ஒத்துழைப்பு, இந்த குடும்ப ஒத்துழைப்பினால் இவருக்கு கிடைக்கக்கூடிய பணம் வரும் வழிகளை குறிக்கிற இடம் ரெண்டு. ரெண்டாம் இடம் ஒருத்தர் கெட்டுப்போயிடுச்சு, ரெண்டாம் அதிபதி கெட்டுப்போயிடுறாருன்னா குடும்பத்துடைய ஒத்துழைப்பு இருக்காது. எவ்வளவு சம்பாதிச்சாலும் பத்தாது. இந்த குருபகவான் இரண்டாம் இடத்தையே ஆக்குபை பண்றாரானாலும் கூட, புதன் பண்றாரானாலும் கூட, சுக்ரன் பண்றாரானாலும் கூட குடும்பாதின்னு சொல்லக்கூடிய இரண்டாம் அதிபதி கெட்டுப்போயிருக்கக் கூடாது. குடும்ப அதிபதி தனக்காரகன் கெட்டுப்போய் ரெண்டுக்கு உடையவன் கெடும்போது இவர்கள் மறைமுகமாக உதவி செய்தாலும் குடும்பத்தின் ஒத்துழைப்பு இருக்காது. புரிஞ்சுதுங்களா? குடும்பத்தின் ஒத்துழைப்பு, குடும்பத்தாரால முன்னேற்றம், ஏண்டா வீட்டுக்கு போறோம்கிற மாதிரியான மனநிலையை கொடுத்துரும். ரெண்டாம் இடம் கெட்டுப்போயிடுச்சுனா, வெளியில சந்தோஷமா இருக்கும், வீட்டுக்கு வந்தா பிடிக்காம போயிடும். அப்ப பணம் வர்ற ஸ்தானங்கள்ல ரெண்டாம் இடம் ரொம்ப முக்கியம். எப்படி லக்ன கேந்திரம் திரிகோணங்கள் வலிமையோ அதேபோல குடும்ப ஸ்தானம்னு சொல்லக்கூடிய இந்த இரண்டாம் இடம் என்பது முக்கியம். மறைமுகமாய் இது மாரக ஸ்தானமும் கூட. அப்ப குடும்பங்கிற அமைப்பு ஒரு மனிதனுக்கு கெட்டா அனைத்து விதத்திலேயும் கெடுபலன்கள் நடக்கும். ஆக இரண்டாம் இடம் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. ரெண்டுக்கு உடையவர் கெடக்கூடாது. தனத்திற்கு காரக கிரகங்களும் கெடக்கூடாது. அடுத்தது பாத்தீங்கன்னா அஞ்சாம் இடம். நாலுக்கு அடுத்த வீடு ஐந்தாம் இடம். இந்த ஐந்தாம் இடம் மூலமா ஒருத்தருக்கு எப்படி பணம் வருது? பூர்வீக சொத்துக்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகள். பங்குச்சந்தை வர்த்தகங்கள், ரேஸ், சீட்டு, சீட்டாட்டம் இதெல்லாம் குறிக்கிற இடம் அஞ்சு. கேளிக்கை விடுதிகள் அதன் மூலம் பணம் வர்ற இடங்கள். கேளிக்கை விடுதிகள், பணம் வரும் இடங்கள், சீட்டாட்டம், ரேஸ், கிளப், உழைக்காமல் வர்ற பணம், அதிர்ஷ்டத்தினால் கிடைக்கிற பணம், அதிர்ஷ்டத்தினால் கிடைக்கிற பணம். அப்பா பூர்வீக சொத்து நிறைய சேர்த்து வச்சுட்டு போயிருப்பாங்க. பையன் எந்த வேலையும் செய்யாம ஜாலியா இருப்பாங்க. அந்த சொத்துக்கள் மூலமா இவருக்கு வருமானம் வந்துட்டே இருக்கும் இல்ல ஒரு ஒரு சொத்தா வித்து வித்து வாழ்நாள நடத்திட்டு போவான். இந்த இடத்தின் சூட்சமத்தை மறைமுகமாக குருவும், சுக்ரனும், புதனுமே மேற்கொள்கிறார்கள். இந்த இடத்திற்கும் மறைமுகமா அவர்களே ஆதிபத்தியம் பெற்று பூர்வ புண்ணிய யோகம் இருக்கிறதா என்பதை குறிப்பிடுகிறார்கள். இதுல திரிகோண ஸ்தானத்திலேயே அஞ்சாம் இடம் வரும். பணபர ஸ்தானத்திலேயே அஞ்சாம் இடம் வரும். இரண்டு ஸ்தான வலிமையை பெறும். அஞ்சாம் இடம் மிக முக்கியமானது லக்னத்துக்கு அடுத்தபடியா அஞ்சாம் இடம். அதுக்கு அடுத்தது ஒன்பதாம் இடம். அப்ப இந்த பணம் வரும் ஸ்தானங்கள் அதான் பணபர ஸ்தானங்கள். பணபர ஸ்தானங்கள்ல அஞ்சாம் இடம் முக்கியத்துவம் பெறும். நீங்க உழைக்காம உங்களுக்கு கிடைக்கக்கூடிய செல்வம், செல்வாக்கை குறிக்கிறது. இரண்டாம் இடம்ங்கிறது நீங்க உழைச்சு கிடைக்கக்கூடிய செல்வம் செல்வாக்கு, குடும்பத்தார் ஒத்துழைப்பினால் உங்களுக்கு கிடைக்கக்கூடிய செல்வம் செல்வாக்கை குறிப்பிடும். ஐந்தாம் இடம் உங்களுக்கு உழைக்காமலேயே கிடைக்கிற வசதி வாய்ப்புகள், கௌரவம், அந்தஸ்து, பொருளாதாரம், பூர்வீக சொத்துக்கள், அதிர்ஷ்ட வாய்ப்புகள். பர்டிகுலரா அதிர்ஷ்ட வாய்ப்புகள் இன்னைக்கு நிறைய பேர் பாத்தீங்கன்னா ஜாதகம் பார்க்கும்போது கேப்பாங்க எனக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் இருக்கா? குதிரை ரேஸ், லாட்டரி சீட்டு, குறிப்பா ஷேர் மார்க்கெட். இந்த ஷேர் மார்க்கெட்ல இன்வெஸ்ட் பண்றதுங்கிறது இன்னைக்கு ஒரு உலகளாவிய விஷயமா போயிட்டு இருக்கு. அப்ப ஷேர் மார்க்கெட் சம்பந்தமான கொஸ்டின அஞ்சாம் இடத்துல இருந்து எடுக்கணும். ஐந்தாம் இடத்தின் ஆதிபத்தியத்தை கொண்டு குருவின் நிலை கொண்டு, புதனின் நிலை கொண்டு, சுக்ரனின் நிலை கொண்டு எடுக்கணும். அப்ப ஐந்தாம் இடம் என்பது நீங்க அதிர்ஷ்டத்தால் பெரும் தனத்தை பணம் வரும் வழியை குறிப்பிடும். அடுத்தது எட்டாம் இடம். ஏழுக்கு ரெண்டு எட்டாம் இடம். இந்த எட்டாம் இடம் என்பது மறைமுகமான வழியில் உங்களுக்கு செல்வம் வர்றதை குறிக்கும். மறைமுகமான வழி, தீய வழிகள், தவறான தொழில்கள், ரெண்டாம் நம்பர் பிசினஸ், ஸ்பெக்குலேஷன், சூதாடுதல், பொய் சொல்லுதல், கட்டப்பஞ்சாயத்து, ரவுடிசம் அல்லது சட்டத்திற்கு புறம்பான வழிகள். எதிரியின் தனத்தை குறிக்கிற இடம் எட்டு. கோர்ட் கேஸ், வம்பு வழக்குகள்ல ஒருத்தர் வெற்றி பெறுகிறாரா? வம்பு வழக்குகள் மூலமாவே ஒருத்தர் வந்து பணம் சம்பாதிக்கிறாரா? வில்லங்கம் வீரச்சாமி நிறைய பேர் இருப்பாங்க. எதுக்கு எடுத்தாலும் கேஸ் போட்டுறது, கன்ஸ்யூமர் கோர்ட்டுக்கு போறது, அரசாங்கத்துக்கு எதிரா கேஸ போடுறது, பங்காளி கேஸ் போடுறதுன்னு கேஸ் போட்டு வெற்றி பெறற இடம் எட்டு. தீய வழிகளில் பணம் வரும் இடம் எட்டு. மறைமுகமான தொழில்களில் ஒருத்தருக்கு லாபம் இருக்கிறதா? ரெண்டாம் நம்பர் பிசினஸ்ல லாபம் இருக்கிறதா? ஸ்பெக்குலேஷன் மூலம் லாபம் இருக்கிறதா? கந்துவட்டி தொழிலின் மூலம் லாபம் இருக்கிறதா? பணத்தை போட்டு பணத்தை வாங்குறது லாபம் இருக்கா? எதிரியுடைய பணம் நமக்கு கிடைக்கிறதா? உழைக்காமல் வரும் திடீர் தன அதிர்ஷ்ட வாய்ப்புகளை குறிக்கிற இடமும் எட்டுதான்.
[7:46]திடீர் தனவரவு, திடீர் அதிர்ஷ்டம், லாட்டரி சீட்டு யோகம் இந்த மாதிரி மறைமுகமான வழிகள்ல மறைமுகமான வழிகள்ல பணம் சம்பாதிச்சு கொடுக்கிற அந்த ஆதிபத்தியத்தை மறைமுகமா உதவி செய்றவங்க சனி, ராகு, கேது.
[8:50]அடுத்து 11 ஆம் இடம். 11 ஆம் இடம்ங்கிறது லாபம், மேன்மை, அபிலாசைகள் பூர்த்தியாகும் இடம், பெரிய மனிதர்கள் தொடர்பு, எதற்கெடுத்தாலும் லாபம், எதுல வந்தாலும் முன்னேற்றம், எந்த முன்னேற்றமா இருந்தாலும் அதை நம்மை சார்ந்ததுதா இருக்கிறது, அதுல மேலும் மேலும் விருத்தி அடையிறதுங்கறதை குறிக்கிற இடம்.
[9:20]11 ஆம் இடம்ங்கிறது வந்து எல்லா கிரகங்களும் மறைமுகமா உதவி பண்ற இடங்கள். ஏன்னா எந்த ஜாதகம் எடுத்துக்கிட்டாலும் 11 ஆம் இடத்துல யார் இருந்தாலும் லாபம்தான். சூரியன் இருந்தால் லாபம் அரசாங்கத்தினால், சந்திரன் இருந்தால் லாபம் பிரயாணத்தினால், விவசாயத்தினால், வியாபாரத்தினால், குரு இருந்தால் லாபம் கல்வியினால், பெரிய மனிதர்களால். புதன் இருந்தால் லாபம் புத்திசாலித்தனத்தினால. சுக்ரன் இருந்தால் லாபம் வாழ்க்கை துணைனால, மனைவி ஆல அல்லது கணவனால் லாபம். சனி இருந்தால் லாபம் வேலைக்காரர்களால லாபம். வேலைக்கார உயிர் கொடுக்கிற வேலைக்காரங்க அமைஞ்சிருவாங்க. அதன் மூலம் கிடைக்கிற லாபம் பூமியில இருந்து கிடைக்கிற பொருள்களால் லாபம். ராகு இருந்தால் லாபம் திருட்டுத்தனத்தினால, ஏமாற்றுவதனால, பொய் சொல்றதுனால, பித்தலாட்டம் பண்றதுனால. கேது இருந்தால் லாபம் ஆன்மீகத்தினால மந்திர தந்திர அவசதத்தினால அப்ப அந்த வீட்டுக்கு யாருமே பகை இல்லை. 11 ஆம் இடத்தில் யார் அமர்ந்தாலும் லாபமே. அப்ப லாபம் எந்த வழியில வருது அப்படிங்கறதையும் எந்தெந்த வகைகளை மேற்கொள்ளலாம் என்பதையும் குறிப்பிடுற இடம் 11. இந்த திரிகோணம், கேந்திரம் இந்த இரண்டு நிலைகளுக்கு அடுத்ததா முக்கியத்துவமான நிலையை பெறுவது இந்த பணபர ஸ்தானம். கேந்திரங்களுக்கு பக்கத்து வீடு ஒன்று, நான்கு, ஏழு, 10 என்கின்ற கேந்திரங்களை கைக்கொள்ளும் போது இரண்டு, ஐந்து, எட்டு மற்றும் 11 ஆம் இடங்கள் உங்களின் தன வரவை தன யோகத்தை தீர்மானிக்கும் விதிகள் ஆகிறது. இதுல ரெண்டு அஞ்சு 11 எல்லாம் முக்கியமான ஸ்தானங்கள்ல வந்துரும். இரண்டாம் இடம் குடும்பம், வாக்கு, தன ஸ்தானம், அஞ்சாம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானமாய் வந்துரும், 11 ஆம் இடம் லாப ஸ்தானமா வந்துரும். எட்டு மட்டும் தான் கொஞ்சம் கிரிமினலிசம். பட் கிரிமினலிசமும் உலகத்துல இருக்குதானுங்களா. தவறான வழிகள்ல, தவறான தொழில்கள், தவறான தொழில்கள் மூலமாவே வாழ்க்கையில முன்னுக்கு வரக்கூடிய விதிகளும் சில ஜாதகத்திற்கு பொருந்தி வரும் விதிதான். ஒருவனுக்கு ஆயில் வேண்டும் இல்லைங்களா அந்த ஆயிலை குறிக்கிற இடம் எட்டு. அப்ப ஆயுள் ஸ்தானம் அதன் மூலம் வர்ற பணம் எதிரியின் தனம். கோர்ட்ல ஒரு கேஸ் போட்டுருக்காங்க அதுல ஜெயிப்பாங்களா இல்லையா எட்டாம் இடத்தை கொண்டு தெரிவிக்கணும். எட்டாம் இடத்தின் அதிபதி இவர்களுக்கு சுபத்துவம் பெற்றார்னா எதிரியின் தானம் இவங்களுக்கு வந்துரும். அப்ப கோர்ட் கேஸ் வம்பு வழக்குல ஜெயிச்சிருவாங்க. இன்னைக்கு 10 க்கு ஏழு பேர் வம்பு வழக்கு கோர்ட் கேஸ்க்கு போக வேண்டிய அளவுக்கு சூழ்நிலைகள் உருவாகிது. ஏன்னா நியாயம் குறைந்துவிட்டது அதர்மம் அதிகமா இருக்கு. அப்ப இந்த பணபர ஸ்தானங்களின் முக்கியத்தை உணர்ந்து கொள்ளுங்கள். பணபர ஸ்தானத்தின் முக்கியத்துவம் அவசியம் ஒவ்வொரு ஜோதிடத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்கின்ற நினைக்கிறவர்களுக்கும் நிச்சயமாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு விதியாகும். இதுல இரண்டாம் இடத்த குரு, சுக்கிரன், புதன் போன்றவர்கள் கைக்கொள்ளும்போது ஐந்தாம் இடத்தையும் அதே மாதிரியான சுபர்கள் கைக்கொள்ளும்போது சூரியனும் ஐந்தாம் இடத்திற்கு சம்பார்திய காரகன் என்கின்ற நிலையில் இரண்டாம் இடத்திற்கு மறைமுகமாக உதவி செய்வார்கள் என்கின்றபோது இந்த எட்டாம் இடங்கிற அசுப ஸ்தானத்திற்கு மட்டும் சனி, சனி, ராகு, கேது போன்ற பாவிகள் கைக்கொள்கிறார்கள். 11 ஆம் இடத்துக்கு பாவியா இருந்தாலும் சரி சுபரா இருந்தாலும் சரி மறைமுகமா உதவி புரிவாங்க. இந்த ஸ்தானத்தின் அதிபதிகள் உங்கள் ஜாதகத்தில் எந்த அளவுக்கு வலிமையாக இருக்கிறார்கள் என்பதை பொறுத்து உங்களின் பண வரவு பணபர ஸ்தானங்கள் வலிமை பெறும் என்று கூறி மீண்டும் ஒரு காணொளியில் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து அன்புடன் விடைபெற்றுக் கொள்வது உங்கள் அன்பு ஜோதிடர் ஸ்ரீராம்ஜி நன்றி வணக்கம்.



