[0:00]நம்ம எல்லாருக்குமே வந்து முருகன் அப்படின்னு சொன்னாலே தமிழ் கடவுள், தமிழ் தலைவன் அப்படின்னுலாம் வந்து ஒவ்வொருத்தங்க ஒரு ஒரு விஷயத்தை வந்து முருகனோட அசோசியேட் பண்ணிப்பாங்க. எஸ்பெஷலி தமிழ்நாட்டுலயும், கேரளாலயும் வந்து முருகனோட பயங்கரமா அசோசியேட் ஆகும். ஆனா முருகனை பத்தி நம்மளுக்கு எத்தனை விஷயம் தெரியும் அப்படின்னு கேட்டா நம்மளுக்கு ரொம்ப கம்மியாதான் தெரியும். நீங்க நல்லா யோசிச்சு பாருங்க நம்மளுக்கு ஜீசஸ் பத்தியோ, ராமரை பத்தியோ இல்ல அல்லாஹ்வை பத்தியோ தெரிஞ்சதை விட முருகனை பத்தி கம்மியாதான் தெரியும். சுத்தி ஆயிரம் கோவில் இருக்குது. ஆனா அந்த இதிகாச கதைகள் எல்லாம் என்ன சொல்லுது? பின்னாடி இருக்கிற மித்தாலஜி எல்லாம் என்ன இருக்குது அப்படிங்கறதுதான் இன்னைக்கு வீடியோல நம்ம பார்க்கப்போறோம். ஒரு சின்ன இன்ட்ரஸ்டிங்கான கேள்வி உங்ககிட்ட கேக்கணும்னா, தைப்பூசம் எதுக்கு செலப்ரேட் பண்றாங்கன்னு உங்களுக்கு தெரியுமா? தைப்பூசம் லீவ் வந்துருச்சு சூப்பர் ஜாலினுலாம் சொல்றோமே பட் எதுக்கு செலப்ரேட் பண்றாங்க? சரி அதைக்கூட விடுங்க. முருகன் வந்து சூரனை கொன்னாச்சு. அதனால வந்து பயங்கரமா சூர சம்ஹாரம்லாம் நடக்கும், பயங்கரமா திருவிழாலாம் நடக்கும்னு தெரியும். அதுக்கப்புறம் முருகன் என்ன பண்ணாரு? ஏன்னா இதெல்லாம் முருகன் பண்றப்போ ஸ்டில் ஹி வாஸ் அ டீனேஜர்னு உங்களுக்கு தெரியுமா? அலெக்சாண்டர் வந்து முதன்முதல்ல படையை போய் வந்து தோற்கடிச்சிட்டு வர்றப்போ ஹி வாஸ் அ டீனேஜர். பட் அதுக்கப்புறம் அலெக்சாண்டரோட கதைன்னு ஒரு மிகப்பெரிய கதை இருந்துச்சுல. அந்த மாதிரி முருகனோட கதையில வந்து நம்மளுக்கு ப்ராபப்லி அவரோட சின்ன வயசு கதை மட்டும்தான் தெரியும். அதுக்கப்புறம் ஏகப்பட்ட கதைகள் இருக்குது. இன்னைக்கு வீடியோல என்ன பார்க்கப்போறோம்னு பார்த்தீங்கன்னா, கம்ப்ளீட்டா இந்த மித்தாலஜி, நம்ம அதிகமா முருகனை வந்து சொல்லிட்டு இருக்கறதுனால, இந்த முருகனை பத்தி முழுசா தெரிஞ்சுக்கணும் அப்படிங்கறதை வந்து நான் தேடி போய் பார்த்தப்போ நிறைய கேரக்டர்ஸ்லாம் புதுசு புதுசா இருந்துச்சு. முருகனோட சீஃப் கமாண்டர் அதாவது தளபதி யாருன்னு தெரியுமா? வீரபாகு அப்படிங்கிற ஒரு கடவுள். இந்த வீரபாகு வந்து எல்லா முருகன் கோவில்லயும் சில இருக்குது. ஆனா நம்ம கவனிக்க மாட்டோம். வீரவாகுதேவர் அப்படிங்கறவங்க வந்து ஒரு மெசஞ்சரா இருந்திருக்காங்க. அப்படி சொல்லிட்டு நம்ம சொல்லிட்டே போகலாம். சிங்கமுகன் அப்படின்னு ஒரு எனிமி இருந்திருக்காங்க. தரகாசுரன் இருந்திருக்காங்க, சூரபத்மன் இருந்திருக்காங்க. சோ ஒரு பயங்கர ஃபாசினேட்டிங்கான ஸ்டோரி ஒரு ஹீரோ ஸ்டோரி இருந்துச்சு. பட் நம்ம நிறைய பெருசா எக்ஸ்ப்ளோர் பண்ணது இல்லை. இன்னைக்கு வீடியோல அதைத்தான் எக்ஸ்ப்ளோர் பண்ண போறோம். யார் இந்த முருகன்ங்கறத நம்ம தெரிஞ்சுக்க போறோம். ஏன் இவ்வளவு வெறியா சாமி கும்புடுறாங்க? நீங்க மலேசியா, தமிழ்நாட்டுல ஓகே நம்ம கும்புடுறோம். விட்டுருங்க. ஆனா மலேசியாவுக்கு போன தமிழர்களா இருக்கட்டும், சவுத் ஆப்பிரிக்காவா இருக்கட்டும், பிஜியா இருக்கட்டும், இந்த உலகத்துல எந்த மூலைக்கு போனாலும் அங்க இருக்குற தமிழர்கள் யாரை கும்புடுறாங்களோ இல்லையோ முருகனை பத்தி விடவே மாட்டேங்குறாங்க, புடிச்சிக்கிறாங்க டைட்டா. அப்படி முருகன் என்ன பண்ணிட்டாரு? எதனால அங்க இருக்கறவங்க இவ்வளவு ஃபாசினேட்டிங்கா ஃபேனா இருக்காங்கன்னு கேட்டீங்கன்னா, முருகனும் அதுக்கேத்த மாதிரி நிறைய சமயங்கள் டிவோட்டீஸ்க்கு பண்ணிருக்காரு. இதிகாச கதைகள் படியே. சோ அது என்னங்கறத பார்க்க ஆரம்பிப்போம். பட் அதை பார்க்க ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி நீங்க இன்னும் இந்த சேனலை சப்ஸ்கிரைப் பண்ணலைன்னா சப்ஸ்கிரைப் பண்ணுங்க. அப்பதான்தான் இந்த மாதிரி மித்தலாஜிக்கல் வீடியோஸ் கூட உங்களுக்கு பார்க்க பிடிக்கும்னு YouTube-ம் புரிஞ்சிக்கும். எனக்கும் இந்த மாதிரி நிறைய மேக் பண்ண தோணும். அண்ட் அப்பதன்தான் MG ஸ்க்வாட்ல இத்தனை பேர் இருக்குறப்போ இந்த மாதிரி ரேரான கதைகளை உங்ககிட்ட சேர்க்கவும் தோணும். நவ் லெட்ஸ் கெட் ஸ்டார்டட். ஹலோ எவ்ரிஒன், நான் மதன் கௌரி அண்ட் ஹலோ மை டியர் MG ஸ்க்வாட்.
[2:27]ஃபர்ஸ்ட் விஷயம் என்ன அப்படின்னு பார்த்தீங்கன்னா, நம்ம எல்லாருக்குமே தெரிஞ்ச ஒரு பேசிக்கான ஸ்டோரி வந்து முருகன் வந்து சிவனுக்கும் பார்வதிக்கும் பொறக்குறாங்க. பொறந்ததுக்கு அப்புறம் வந்து ஹிமாலயாஸ்ல இருக்காங்க. இருக்குறப்ப வந்து வீட்டுக்குள்ள பிரச்சனை வருது. அண்ணனை வந்து எல்லாருமே இந்த பெட் பேரண்டிங்னு சொல்லுவாங்கள அப்பா அம்மா வந்து பையன் அண்ணன் மேலேயே நிறைய ஃபோக்கஸ் பண்றாங்க. தம்பி இருந்துகிட்டு பரவாயில்லை நான் தனியாவே பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டு கிளம்பி வந்துடுறாரு. வந்த இடம்தான் நம்ம பழனி. இங்க செட்டில் ஆயிடுறாரு. அண்ட் இங்கதான் வந்து செட்டில் ஆனதுக்கு அப்புறம்தான் இவர் தமிழ் கடவுள் ஆனாறா அப்படின்னு கேட்டீங்கன்னா கிடையாது. இந்த மொத்த கதையுமே பார்க்கிறப்போ நார்த் இந்தியால இருந்து சவுத் இந்தியா வரைக்கும் எல்லா இடத்துலயும் தமிழ் ரெஃபரன்ஸ் தான் இருக்குது. அவங்க இமயமலையை வந்து பக்கத்து வீட்டு இடம் மாதிரி தான் சொல்றாங்க. இன்ஃபேக்ட் நீங்க ஒரு லைன் பார்த்தீங்கன்னா, அந்த ஸ்கந்தபுரணம்மா கந்தபுராணம்னு தமிழ்ல நம்ம சொல்லலாம். இதுல எல்லாம் பாத்தீங்கன்னா சரவண பொதிகை அப்படின்னு சொல்றாங்க. சோ இந்த சரவண பொதிகை லேக்ல வந்து முருகன் குளிப்பாரு அப்படின்னு ஒரு ரெஃபரன்ஸ் போட்டுருக்காங்க. சரவணப் பொய்கை. இந்த சரவணப் பொய்கை இது எங்க இருக்குன்னு கேட்டீங்கன்னா, எனக்கு தெரிஞ்சு ஆவினன்குடி பழனியில நான் கொஞ்ச நாள் இருந்திருக்கேன். சோ பழனி கிட்ட வந்து இருக்குன்னு சொல்லுவேன். பட் இந்த சரவணப் பொய்கை எங்க இருக்குன்னு பார்த்தீங்கன்னா, இமயமலையில இருக்கிற ஒரு லேக்கோட பேரு வந்து சரவணப் பொய்கை அப்படின்னு இருந்துச்சு. அங்கதான் முருகன் குளிப்பாருன்னப்போ அங்க வரைக்கும் தமிழ் தான் பேசிட்டு இருந்தாங்களா? இதிகாசங்கள் படி சொல்றேன். அந்த கல்ச்சர் படியே அவங்க அங்க தமிழ் பேசின மாதிரி ரெஃபரன்ஸ் இருக்குது. பட் எனிவே கம்மிங் பேக் டு ஸ்டோரி என்னன்னு பார்த்தீங்கன்னா, இங்க வந்துடுறாங்க. இங்க வந்ததுக்கு அப்புறம் வந்து சவுத் இந்தியாவை பிரிடாமினன்ட்டா மூணு பேர் வந்து ஆட்சி செஞ்சுட்டு இருக்காங்க. யார் யாரு அப்படின்னு பார்த்தீங்கன்னா, இந்த கதைதான் நம்மளுக்கு தெரியாது. இந்த கதை தெரியும் கிளம்பி வந்த கதை தெரியும். இதுக்கப்புறம் நான் சொல்றேன். மூணு பேர் வந்து பிரிடாமினன்ட்டா ஆட்சி செஞ்சுட்டு இருக்காங்க. முதல் பர்சன் யாருன்னு பார்த்தீங்கன்னா, சூரபத்மன் அப்படின்னு சொல்லப்படுறவங்க. இரண்டாவது யாருன்னு பார்த்தீங்கன்னா, தரகாசுரன் அப்படின்னு சொல்லப்படுறவங்க. அண்ட் மூன்றாவது யாருன்னு பார்த்தீங்கன்னா, சிங்கமுகன் அப்படின்னு சொல்லப்படக்கூடியவங்க. இந்த இந்த மூணு பேர்ல வந்து சூரபத்மன் அண்ட் தரகாசுரன் வந்து ரொம்ப என்ன சொல்ல பாகுபலி படத்துல வர்ற இந்த பல்வால் தேவன் மாதிரி ரொம்ப ரகடான ரூலர்ஸ்னு சொல்றாங்க. மக்கள்லாம் வந்து ரொம்ப ஹேப்பியாலாம் இல்லை. அவங்க வந்து அவங்களோட டாமினன்ஸை காமிக்கிறதுல மட்டும்தான் இருந்திருக்காங்க. ஆனா இந்த சிங்கமுகன் அப்படின்னு சொல்லப்படற இந்த ஒரு கேரக்டர் வந்து ஆப்போசிட் சைடுல இருந்தாலும் மக்களை வந்து ஆட்சி செய்யற சைடுல வந்து ரொம்ப ரூடா இருந்தா கூட வந்து சிங்கமுகன் அப்படின்னு சொல்லப்படக்கூடிய இந்த ஒரு மன்னன் வந்து ஓரளவுக்கு சென்சிபிலான மன்னனாவும் இருந்திருக்காங்க. ஓகே மக்கள்கிட்ட இதெல்லாம் கொடுக்கணும். இந்த அளவுக்கு அவங்களை ஹேப்பியா வச்சுக்கணும்ங்கற ஒரு கன்சிடரேஷனும் இருந்திருக்குது. சோ மூணு பேர் வந்து ஒரே கிளான் தான் ஓகேவா? ஒரே கூட்டத்துல இருக்குறவங்கதான். ஒண்ணாதான் வந்து ஆட்சி செஞ்சுட்டு இருக்காங்க. மூணு பேரு ரொம்ப ரகடான ஆட்கள் ஓகேவா? இதுக்கு நடுவுல முருகன் வந்து இங்க வந்துடுறாரு. அண்ட் முருகன் வந்து நம்மளோட தமிழ்ல வந்து திணை அப்படின்னு சொல்லிட்டு பிரிப்பாங்க. லேண்ட்மாஸ்லாம் பிரிச்சு வைப்பாங்க. சோ முருகன் வந்து யாரா கேரக்டர் காமிக்கிறாங்கன்னு பாத்தீங்கன்னா, அவர் வந்து காட்டுக்குள்ள இருந்த ஒரு பர்டிகுலர் பர்சன். மலையிலும் காடுகளிலும் இருந்த ஒரு பர்டிகுலர் பர்சன். ஜெனரலா ஹீரோன்னு சொன்னா அவங்க வந்து ஒரு மிகப்பெரிய இவங்களுக்கு என்ன சொல்ல ராஜாக்களுக்கும் மிகப்பெரிய அரண்மனையில பொறந்திருப்பாங்க. இன்ட்ரடக்ஷனே வந்து பாகுபலி படத்துல வர்ற மாதிரி ராமருக்கு பாத்தீங்களா அந்த மாதிரிதான இன்ட்ரடக்ஷன் இருக்கும். பட் முருகனுக்கு அந்த மாதிரி எல்லாம் கதையில இல்லை. அவங்க சிவன், பார்வதின்னு சொல்றாங்களே தவிர அவரோட மோஸ்ட் ஆஃப் தி ஸ்டோரிஸ் எப்படி இருக்குன்னு பார்த்தீங்கன்னா, அவர் காட்டுக்குள்ள எப்படி போயிட்டு இருந்தாரு, இப்படி வேட்டையாடிட்டு இருந்தாரு, மக்களோட மக்களா இருந்தாரு. இன்ஃபேக்ட் அப்போ இருந்த தமிழ் லிட்ரேச்சர்ல இருந்த கடவுள் எல்லாம் பார்த்தீங்கன்னா, மோஸ்ட்டா நம்ம இப்ப கும்புடுறதே கிடையாது. மாயோன் அப்படின்னு சொல்றாங்க. நம்ம விஷ்ணுவை வந்து மாயோனா அடாப்ட் பண்ணியாச்சு. ரெண்டாவது வந்து முருகன் குறிஞ்சி நிலம் அதெல்லாம் சொல்றாங்க. மூணாவது என்ன அப்படின்னு பார்த்தீங்கன்னா கொற்றவை அப்படின்னு சொல்லப்படுற சாமி. அவங்களை நம்ம இப்ப எல்லாருமே மறந்தே போயாச்சு. பொன்னியின் செல்வன் படத்துல அந்த கொற்றவை ரெஃபரன்ஸ் நிறைய வரும். வார் காட் அவங்க. போருக்கு வந்து போகக்கூடிய ஒரு பர்டிகுலர் கடவுள். அப்புறம் வந்து இந்திரனை கும்ட்டுருக்காங்க. வருணா பகவானை கும்ட்டுருக்காங்க. அப்புறம் வந்து அக்னியை கும்ட்டுருக்காங்க. அதாவது நீர் நெருப்பு ஆகாயம்னு எர்த்ல இருக்கிற பேசிக்கான எலிமெண்ட்ஸையும் அதுபோக வந்து மனிதர்களோட பேசிக்கான எமோஷன்ஸையும் தான் வந்து அந்த காலகட்டத்துல கும்ட்டுருக்காங்கன்னு தெரியுது. ஏன்னா இந்த கந்தபுராணம் வாசிக்கிறப்ப இதுதான் மெஜாரிட்டியா இருக்குது. மாயோன் அப்புறம் வந்து முருகன் குறிஞ்சி மலைகளில் வாழற ஒருத்தங்க. கடல்கிட்ட வாழக்கூடியவங்களுக்கு வருண பகவான். அதே மாதிரி வந்து நெருப்பை கும்ட்டுருக்காங்க. சோ இதைத்தான் வந்து இங்க இருக்கிற தமிழக மக்கள் வந்து கும்ட்டுருக்காங்கன்னு நமக்கு தெரியவருது. பட் எனிவே இதுல வந்து முருகனும் இருக்காரு. இங்க வந்து இங்க மக்கள்லாம் சாமிகும்புட்டுட்டு இருக்காங்க. அப்ப வந்து இவங்கல்லாம் யாரோட டிவோடீஸா இருந்திருக்காங்கன்னு பாத்தீங்கன்னா, மாயோனோட டிவோடீஸா மேஜர் காடா வந்து மாயோன் அப்படிங்கறவங்க இருந்திருக்காங்கன்னு சொல்றாங்க. இந்த மாயோன கும்புட்டுட்டு இருக்குறப்ப முருகனும் இங்க வர்றாங்க. சோ ஹி இஸ் லைக் சம்ஒன் ஒரு டீனேஜர் காட்டுக்குள்ள சுத்திட்டு ஃபன் பண்ணிட்டு ஒரு நல்ல ஹேண்ட்சம் லூக்கிங் ஒரு ஸ்மார்ட்டான ஒரு பர்டிகுலர் பர்சன். அவங்க வந்து இங்க இருக்குறப்போ இங்க இந்த மூணு பேர் வந்து பயங்கரமா டாமினேட் பண்ணிட்டு இருக்காங்க. பயங்கரமா மக்கள்லாம் சந்தோஷமா இல்ல அப்படின்னு தெரிஞ்சிட்டு இருக்குற நேரத்துல என்ன நடக்குதுன்னு பார்த்தீங்கன்னா, பொதுமக்கள் நிறைய பேர் அவங்க எடுத்துட்டு போயிடுறாங்க. சின்ன சின்ன குருநில மன்னர்கள்லாம் இருப்பாங்கல்ல, அவங்கல்லாம் மூணு பேரும் கொண்டு போய் அவங்கல்லாம் பயங்கரமா தொல்லை பண்ணிட்டு இருக்காங்க. சோ அந்த நேரத்துல முருகன் என்ன பண்றாருன்னு பார்த்தீங்கன்னா, சோ முருகன் வந்து இப்ப அவருக்குன்னு ஒரு கேங் வந்திருச்சு. அவருக்குன்னு ஒரு பன்ச் ஆஃப் பீப்பிள் இந்த ரையாட்ஸ்லாம் நடக்கும்ல அதுக்குன்னு ஒரு தலைவன் இருப்பான் தெரியுமா? ஜெயிச்சா வந்து ஆட்சி. இல்லனா தீவிரவாதின்னு சொல்லுவாங்கள அந்த மாதிரி வந்து அந்த நடுவுத்தற இடத்துல அந்த போருக்கு போயிட்டு இருக்கற மாதிரி வந்து ஹி ஹேஸ் அ பன்ச் ஆஃப் பீப்பிள் அண்ட் அதுக்கு வந்து தலைவனா முருகன் இருக்காரு. அதுல வந்து ஒரு பர்டிகுலர் பர்சன் இருக்காங்க. சீஃப் கமாண்டரா வந்து வீரபாகு அப்படின்னு சொல்லப்படற ஒருத்தங்க இருக்காங்க. அதே மாதிரி வந்து அவங்களோட மெயின் மெசஞ்சரா வந்து வீரவாகுதேவர் அப்படின்னு ஒருத்தர் இருந்திருக்காரு. சோ முருகன் என்ன பண்றாருன்னு பார்த்தீங்கன்னா, முதல்ல வந்து வீரபாகுதேவர் அப்படிங்கிறவர் வந்து அனுப்பி விடுறாங்க. சூரபத்மனோட கிங் அண்ட் அவங்களோட அவங்களோட ஆட்சி செய்ற அரண்மனைக்கு அனுப்பிச்சு விடுறாங்க. சூரபத்மன் எங்க இருந்தாங்க? எந்த ஊர்க்காரங்க அப்படின்னு கேட்டீங்கன்னா, அதுக்கு ஒரு ஊர் இருக்குது. அந்த ஊர் என்னன்னு பார்த்தீங்கன்னா, விக்ரம கேந்திரம் அப்படிங்கிற ஊரு ஈஸ்ட் கடல்ல இருக்கும் அப்படிங்கறாங்க. ஈஸ்ட் சீ எதுன்னு எனக்கு தெரியலை. ஏன்னா இது வந்து இப்ப நம்ம டெக்னிக்கலா இந்தியன் மேப் பார்க்கிறப்போ ஈஸ்ட் சீ வந்து நம்ம பே ஆஃப் பெங்கால் சொல்லலாம். பே ஆஃப் பெங்கால்ல வந்து அந்த அவங்களோட இடம் இருந்துச்சு. சூரபத்மன் அவங்க வந்து அந்த கடலுக்குள்ளதான் அவங்க ஆட்சி செஞ்சிருந்தாங்க. கடலுக்குள்ள இருந்த ஒரு பர்டிகுலர் மன்னன். இந்த ஆர்ட் எல்லாம் பாத்தீங்கன்னா கூட கடலுக்குள்ள இருக்கிற ஒரு சாமியா தான் காமிப்பாங்க. ஐ மீன் கடலுக்குள்ள இருக்கிற ஒரு அசுரனா காமிக்கிறாங்க. சோ கடலுக்குள்ள வந்து சூரபத்மன் வந்து விக்ரம கேந்திரம் அப்படிங்கிற ஒரு இடத்துல வந்து ஆட்சி செஞ்சுட்டு இருக்குறதா சொல்றாங்க. இந்த விக்ரம கேந்திரத்துக்கு வந்து முருகன் வந்து தன்னோட சீஃப் மெசஞ்சரா வீரபாகுதேவர் வந்து அனுப்பிச்சு விடுறாங்க. சோ அங்க போன இடத்துல வந்து இவங்க என்ன பண்றாங்கன்னு பாத்தீங்கன்னா, வீரபாகுதேவரையே வந்து சிறை பிடிச்சிடற பாக்குறாங்க. புடிச்சிட்டு என்ன முருகன் என்ன சின்ன பசங்களா? நீங்க என்ன விளையாட்டு காமிக்கிறீங்களா? நான் யார் தெரியுமா சூரபத்மன் எவ்வளவு பெரிய ஆளு? என்னை நீங்கல்லாம் வந்து போட்டுருவீங்களா தெரியுமா அப்படின்னா அப்படிலாம் பேசுறாரு. அடுத்து வந்து என்னடா மெசஞ்சரே பிடிச்சிட்டாங்கன்னு சொல்லிட்டு தன்னோட சீஃப் கமாண்டரான வீரபாகுவை வந்து முருகன் அடுத்து அனுப்பிச்சு விடுறாரு. இப்ப என்னன்னா சீ என்னோட பொதுமக்களுக்கு பிரச்சனை பண்ற இருந்தா. நான் உன்கிட்ட பேசுறதுக்கு ஒரு மெசஞ்சரை அனுப்பிச்சேன். அவங்கள எல்லாம் ரிலீஸ் பண்ணனும்னு தான் சொன்னேன். உன் கூட சண்டை போடுறதுக்குலாம் எனக்கு ஆசை இல்லை. அவங்களை ரிலீஸ் பண்ண சொன்னப்ப என்னோட மெசஞ்சரையும் நீ புடிச்சு வச்சிக்கிட்ட. இப்ப என்னோட படை தளபதி அனுப்புறேன். சோ முருகனுக்கு வந்து ஒரு ஒன்பது பேர் வந்து முருகனோட சீஃப் கமாண்டர்ஸ்னு சொல்றாங்க. நவவீரர்கள்னு அவங்களுக்கு பேராம். சோ அந்த நவவீரர்கள்ல சீஃப் வீரர் யாருன்னு பார்த்தீங்கன்னா, வீரபாகுங்கறவரு. சோ வீரபாகுவே முருகன் அனுப்புறாரு. சோ நம்பர் 2 இன் செயின் ஆஃப் கமாண்ட். சோ இவங்கல்லாம் வந்து இப்ப ஒரு அன் ஆர்கனைஸ்டு ஆர்மிங்குட நம்ம சொல்லலாம். இல்ல ஒரு குட்டி லெவல் ஆஃப் ஆர்கனைஸ்ட் ஆர்மி அப்படின்னு கூட சொல்லலாம். ஒரு மேசிவ் லெவல்ல இல்லனா கூட சின்ன லெவல் ஆஃப் ஆர்மி அப்படின்னு கூட சொல்லலாம். அப்போ அவங்களோட சீஃப் கமாண்டரே அனுப்பிச்சு விடுறாரு. வீரபாகு அங்க போய் வந்து பேசுறாராம். எங்க அந்த கடலுக்குள்ள இருக்கிற வீரமா கேந்திரம் அப்படிங்கிற ஒரு இடத்துல வந்து போய் பேசுறாராம். அங்க பேசுறப்போ இந்த மாதிரி என்னோட மெசஞ்சரை புடிச்சிட்டீங்க. அவங்களை எல்லாம் விட்டுருங்க. நீங்க விடலைனா நாங்க சண்டைக்கு வருவோம். தயாரா இருந்துக்கோங்க அப்படின்னப்ப அங்க இருக்கறவங்கல்லாம் பயங்கரமா சிரிச்சு அவமானப்படுத்தி இருக்காங்களாம். இன்ஃபேக்ட் இங்க ராமாயணத்துல வந்து ஆஞ்சநேயருக்கு உட்காறதுக்கு இடம் கொடுக்கலை. அவரே வாலை வச்சு ஒரு இடம் உருவாக்குனாருன்னு சொன்ன மாதிரி ஒரு ரெஃபரன்ஸ் இங்கயே இருக்குது. சோ வீரமாகேந்திரத்துக்கு போயிருந்தப்போ வீரபாகு அவங்களுக்கு வந்து இடமே கொடுக்கலை. உட்காரதுக்கு சீட்டே கொடுக்கலை. சோ இவங்க வந்து அப்படிலாம் அலட்சியப்படுத்துனாங்க. அதெல்லாம் தாண்டி வீரபாகு வந்து அவங்ககிட்ட இருந்தாலும் மெசேஜ்ஜ கன்வே பண்ணாரு. அவங்க கேட்டுட்டு என்னடா புடி பசங்களை என்ன மிரட்டுறீங்களா அப்படின்னு சொல்லிட்டு வீரபாகுவை புடிச்சு ஜெயில் பண்ணுங்க அப்படின்னு கமெண்ட் பண்ணிட்டாங்களாம். வீரபாகு வந்து ஆனா அதெல்லாம் தாண்டி அந்த இடத்திலேயும் தப்பிச்சு வந்துட்டாங்களாம்.
[9:58]வர்ற வழியில வந்து ஏகப்பட்ட பேரை வந்து இவங்க கொண்டுட்டு வர்றாங்க. அவங்ககிட்ட இருக்குற ஒரு சின்ன பேட்ச் ஆஃப் பீப்பிளோட ஏன்னா தளபதி. போய் இருக்குறது மெசஞ்சர் இல்லை. தளபதி போறப்போ குட்டி அர்மியோட போவாங்கல்ல. அந்த குட்டி அர்மியை வந்து முருகனோட ஆர்மி வந்து முருகனே அங்க கிடையாது. ஆனா வீரபாகுவும் அந்த நவவீரர்கள் இருப்பாங்கல்ல அவங்கள்ல சில பேரும் அவங்களுக்கு இருந்த குட்டி ஆர்மியை வச்சுக்கிட்டு இந்த சூரனோட நிறைய ஆர்மி பீப்பிளை அடிச்சு துவம்சம் ஆக்கிட்டு அங்க இருந்து தப்பிச்சு இங்க வந்துடுறாங்களாம். வந்ததுக்கு அப்புறம் வந்து போர்னு சொல்லி டிக்ளேர் பண்ணிட்டாங்க. இதை நிறைய பேர் எங்க கனெக்ட் பண்றாங்கன்னு பாத்தீங்கன்னா, நம்ம ஊர்ல அறுபடை வீடுகள் அப்படின்னு சொல்லுவாங்க. அறுபடை வீடு அப்படின்னா ஆறு படை வீடு அப்படிங்கறது வந்து சிக்ஸ் வார் கேம்ப் அப்படின்னு கூட சொல்றாங்க. ஆறு இடத்துல வார் கேம்ப் வச்சிருந்தாங்க. நவவீரர்கள் இருந்தாங்க. ஒவ்வொருத்தங்க ஒவ்வொரு இடத்துல இருந்து வார் கேம்ப் வார்க்கு போகுறதுக்கு பேஸ் கேம்ப் வைப்பாங்கல்ல. உக்ரைன், ரஷ்யால எல்லாம் பார்த்தீங்கன்னா, பேஸ் கேம்ப் ஒரு ஒரு இடத்துல ஒரே நேரத்துல இப்போ இப்படி என்டர் ஆக மாட்டாங்க. ஒரு ஒரு இடத்துல இருந்து பன்ச் ஆஃப் அட்டாக் இருக்கும்ல. அந்த மாதிரிலாம் கூட நிறைய பேர் கம்பேர் பண்ணுவாங்க. பட் அதுக்குள்ள நம்ம பெருசா போவேணாம். அது வந்து அந்த வேர்ட் பிளே. வார்த்தையில இருக்கிற பிளே. இப்ப கோயில்ங்கிறது வந்து மன்னன் வாழ்ற இடம்னு கூட ஒரு தியரி இருக்குது. ஏன்னா கோனா மன்னன், இல்லனா இல்லம். சோ அப்ப கோயில்ங்கிறது மன்னன் வாழ்ந்துட்டு இருந்ததுதான் வீடு. சோ அதுக்குள்ள வந்து சாமி இருந்தாங்களே தவிர அது மெயினா மன்னன் வாழ்றதுக்கான இடம் அப்படின்னு சொல்லுவாங்க. ஆட்சி செய்யறதே சாமீங்கறதுனால வந்து அப்படி வைப்பாங்க. சோ இதெல்லாம் வந்து வேர்ட் பிளே. தமிழ்ல வந்து இதெல்லாம் பார்க்கறப்போ ஆயிரத்தில் ஒருவன் படம் பார்க்கற மாதிரி இருக்கும். அப்பலாம் எப்படி இவங்க இதெல்லாம் இன்டர்பிரிட்டேஷன் தான். ஏதோ ஒரு பன்ச் ஆஃப் தியரீஸ் இருக்குது. ஒரு பன்ச் ஆஃப் புக்ஸ் இருக்குது. அதை ஒவ்வொருத்தன் ஒவ்வொரு விதமா இன்டர்பிரேட் பண்றதுதான். சோ எனிவே கம்மிங் பேக் டு டாபிக் என்னன்னு பார்த்தீங்கன்னா, சூரபத்மனுக்கு வந்து சமகாண்டு. என்னடா சின்ன பசங்க நம்ம கூட சண்டைக்கு வராங்கன்னு சொல்லிட்டு மொத்த படையோட சூரபத்மன் இறங்குறாங்க. இறங்குறப்போ வந்து இந்த ஒரு பர்சன் மட்டும் சிங்கமுகன் அப்படிங்கறவங்க வந்து சொல்றாங்க இந்த போர் வேணாம். ஏன் அவங்க சின்ன பசங்க. நம்ம பெரிய ஆட்கள். நம்மளுக்கு வந்து அவங்களை இக்னோர் பண்ணிட்டு போறது ஈஸி. அவங்க சொன்னாங்க வம்பு இழுத்தாங்கன்னா இந்த சண்டைக்கு போகவே வேணாம் அப்படிங்கறதை சொல்றாங்க. இருந்தாலும் சூரபத்மன் இருந்துகிட்டு ஏ எப்ப பார்த்தாலும் லாஜிக் பேசிட்டு இருக்க இறங்கியாச்சு செய்யணும் அப்படின்னு முடிவு பண்ணிட்டு ஃபைட்டுக்கு போறாங்க. போன இடத்துல கொஞ்ச நாளிலேயே எதிர்பார்க்காத விதமா தரகாசுரன் அப்படின்னு சொல்லப்படக்கூடியவங்க இவங்க வந்து சூரபத்மனோட ரொம்ப க்ளோஸான ஒரு பர்டிகுலர் பர்சன். நான் சொன்னேன்ல மூணு பேர் ஆட்சி செய்வாங்கன்னு. அதுல செகண்ட் இன் கமாண்ட் யாருன்னு பார்த்தீங்கன்னா, தரகாசுரன் தான். தரகாசுரனை முருகனோட கேம்ப் வந்து அடிச்சு கொன்றுறாங்க. எதிர்பார்க்கவே முடியலை ஓகேவா. எல்லாருமே வந்து ஷாக் ஆயிடுறாங்க. என்னடா சின்ன பசங்கன்னு நினைச்சா தரகாசுரனே துவம்சம் பண்ணிட்டாங்கன்னு சொன்னவுடனே இப்ப மறுபடியும் சிங்கமுகன் வந்து என்ன அட்வைஸ் பண்றாங்கன்னா சூரபத்மன்கிட்ட வேணாம்.
[12:26]விட்டுரலாம். இவங்களை இதுக்கு மேல நம்ம பகச்சுக்க வேணாம். அந்த முருகன்ங்கறவங்க வந்து ஏதோ சின்ன பையன்னு நம்ம நினைச்சுட்டு இருந்தோம். பட் ஹி சீம்ஸ் டு பி ஸ்மார்ட்டர். சோ அதனால வந்து இதை ரொம்ப சீரியஸான ஒரு போராக கொண்டு போக வேணாம். இக்னோர் பண்ணலாம் அப்படிங்கறாங்க. சூரபத்மனுக்கு வந்து இட்ஸ் அ ஈகோ ஹிட் இட்ஸ் அ பர்சனல் லாஸ். இல்லை நம்ம கண்டிப்பா சண்டைக்கு போகணும்னு சொல்லிட்டு ஃபுல் ஃபுளோவோட இறங்குறாங்க. முருகனுக்கு ஆனா பக்குவம் இருக்குறது யாருன்னு பார்த்தீங்கன்னா, மக்களோட படை தளபதிகள். மக்களுக்கு அன்புகட்டபுளான கவர்ன்மெண்ட் தான. சோ மக்களே வந்து நிறைய இடத்துல ரிவால்ட் பண்ண ஆரம்பிக்கிறாங்க. மக்கள் படை ஒன்னா சேருது முருகன் அவர்களோட அண்ட் அதுல பார்த்தீங்கன்னா ஃபைனலி வந்து முருகன் வந்து கம்ப்ளீட்டா அந்த போரை வந்து ஜெயிக்கிறாங்க. எல்லாரும் சிங்கமுகன் இறந்து போறாங்க. சூரபத்மன் கடைசில பாக்கி இருக்காங்க. அப்போ சூரபத்மன் வந்து கடைசில போய் தஞ்சம் புகுறாரு. எங்க போர் களத்துல இருந்து தப்பிச்சு ஓடுறப்போ ஒரு மரத்துக்குள்ள போய் அவங்க ஒழிஞ்சிக்கிட்டாங்க. அது ஒரு மாமரமாம். சோ மாமரத்துக்குள்ள போய் ஒழிஞ்சிக்கிட்டாங்களாம். அப்போ வந்து முருகன் கடைசில வேல் இருக்கும்ல அதை வந்து அவங்களோட அம்மா கொடுத்த வேல். சோ அவங்களோட பார்வதி இருக்காங்கல்ல அவங்கதான் வேல் கொடுத்தாங்களாம். அதை கொடுத்த நாள்தான் வந்து தைப்பூசம்மா. சோ ஒரு மிகப்பெரிய பிரச்சனை வாழ்க்கையில இருக்குது. மக்களுக்கு இருக்குது. அதை வந்து அடிச்சு நகத்தணும்னு சொல்லிட்டு ஒரு சின்ன பையன் கிளம்பி போறாங்க. அப்படி கிளம்பி போறதுக்கு இந்தா இந்த ஆயுதத்தை எடுத்துட்டு போன்னு அவங்க அம்மா கொடுத்தாங்களாம். இது எவ்வளவு ஒரு எக்சைட்டிங்கான ஒரு ஸ்டோரியா இருக்குது. மோட்டிவேஷன் ஸோன்ல இருக்குல்ல. அந்த வேல் கொடுத்த நாள்தான் வந்து இந்த தைப்பூசம்னு சொல்லி தைப்பூசத்தை செலப்ரேட் பண்றாங்க. சோ இந்த வேல் அது பொறந்த நாள் அப்ப என்னன்னு கேட்டீங்கன்னா அது கார்த்திகை. அது வேற செலப்ரேஷன். வெளக்குலாம் ஏத்துவாங்கள அது வேற. சோ இந்த வேல் கொடுத்தனாலதான் தைப்பூசம் விக்டரி ஆஃப் குட் அகைன்ஸ்ட் ஈவில் செல்ஃப் மோட்டிவேஷன் நான் வந்து எனக்கு இருக்குற பிரச்சனைகளை எல்லாம் அடிச்சு தூக்குவேன் அந்த ஸோன். சோ முருகன் வந்து அந்த வேலை வச்சுக்கிட்டு ஃபைனலி அந்த மரத்துக்குள்ள ஒழிஞ்சுருக்காங்கன்னு தெரிஞ்சவுடனே இங்க இருந்து வேலை விட்டு அந்த மரத்தை ரெண்டா பிளவுபட்டு, அதுல இருக்குற சூரபத்மனை சாகடிக்கிறாங்க. அண்ட் அதோட வந்து விக்டரி ஆஃப் குட் வெர்சஸ் ஈவில். அதுல வந்து மரத்திலயே வந்து ஒரு சேவல் இருந்துச்சு. அந்த மரத்திலயே ஒரு மயில் இருந்துச்சு. அது ரெண்டுமே வந்து அதாவது மனிதர்கள் மட்டும் இல்ல. அந்த அனிமல்ஸ் கூட கடைசில சூரபத்மன் ரொம்ப பேடான ஒரு ரூலரை வந்து அழிச்சதுக்கு முருகன் கூட வந்து சேர்ந்துகிட்டாங்க. அதுதான் அந்த சேவல் கொடி அண்ட் மயில் வாகனம் எப்பவுமே கூட இருக்குறது அப்படின்னு வந்து ஒரு கதை சொல்லி முடியுது. சோ இதுதான் வந்து முருகனோட லேட்டர் பீரியட் ஆஃப் தி ஸ்டோரி. அந்த மொத்தமா இந்த சூர சம்ஹாரம்ங்கறது இதுதான். இதுக்கு அப்புறம் அவங்க என்ன பண்ணாங்கன்னு கேட்டீங்கன்னா, இதுக்கப்புறம் கிளை கதைகள் நிறைய இருக்குது. சோ முருகன் வந்து காவடி தூக்குறது இருக்குல்ல. அதுக்கு ஒண்ணு பார்த்தீங்கன்னா, இடும்பன்னு அப்படிங்கறவங்க வந்து முருகனோட ஒரு நல்ல ஃப்ரெண்ட். சோ இடும்பன் வந்து முருகன் கிட்ட ஒரு ரெக்வஸ்ட் வைக்கிறாங்க. சோ இடும்பன் வந்து ஒரு காவடி தூக்கிட்டு வந்துருக்காங்க ரொம்ப நாளுக்கு. சோ அவங்க என்ன ரெக்வஸ்ட் வைக்கிறாங்கன்னா என்னோட நண்பன் முருகன். நான் உன்கிட்ட ஒண்ணு கேக்குறேன். என்னை மாதிரி உன்னை நிறைய பேர் பார்க்க வரப்போறாங்க. இந்த நாட்டுல தமிழ்நாட்டுல இந்த இந்திய நாட்டுல தமிழகம் அப்படின்னு நம்ம சொல்லலாம். நிறைய பேர் வரப்போறாங்க. உன்னை மலையேறி இந்த பழனிமலை ஏறி வந்து பார்க்கிறப்போ இல்ல எந்த மலையினாளும் ஏறி வந்து பார்க்கிறப்போ அந்த காவடியை தூக்கிட்டு வர்றான்ல அது ரொம்ப வெயிட்டா இருக்கும். அந்த வெயிட்டா காவடியை தூக்கிட்டு வரவனுக்கு என்னானாலும் அவங்க என்ன கேக்குறாங்களோ அதை நீ பூர்த்தி செய்வேன்னு சொல்லிட்டு எனக்கு ஒரு ப்ராமிஸ் பண்ணிட்டான்னு சொல்லிட்டு இடும்பன் அப்படிங்கிற ஒரு ஃப்ரெண்ட் வந்து முருகன்கிட்ட கேட்டதுக்கு முருகன் வந்து சரி உனக்காக நான் இதை பண்றேன்னு சொன்ன உடனே அன்னையில இருந்து இன்னைக்கு வரைக்கும் மக்களோட நம்பிக்கை என்னன்னா காவடியை தூக்கிட்டு போய் நம்ம வேண்டுதலை வச்சிருந்தோம்னா அங்க முருகன் வந்து அதை சாட்டிஸ்ஃபை பண்ணுவாங்கன்னு ஒரு நம்பிக்கை. மலேசியால நீங்க பாத்தீங்கன்னா, 18th செஞ்சுரில இங்க இருந்து நிறைய பேர் வந்து அங்க வேலை பார்க்க போயிருந்தாங்க. அவங்க வந்து 18th செஞ்சுரிலயே மலேசியால கடரத்துல பாத்தீங்கன்னா, இங்க இருக்கிற மலை மலையிலதான் வந்து முருகன் இருப்பாங்க.
[15:32]அந்த மாதிரி அங்க மலேசியால எந்த மலை இருக்குன்னு பார்த்து வாட்டர் ஃபால் கிட்ட வேலை வச்சு கும்புட ஆரம்பிச்சிருக்காங்க. இன்னைக்கு பத்மலை இருக்குது. அந்த மாதிரி மிகப்பெரிய மலேசியால இந்த இடம் வந்துருச்சு. இங்க மலேசியா மட்டும் இல்ல ஸ்ரீலங்காவா இருக்கட்டும். அதே மாதிரி வந்து நீங்க பிஜி, சவுத் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் இந்த மாதிரி நிறைய இடம் சொல்லலாம். எங்கெங்க தமிழர்கள் வந்து லேபர்ஸா போனாங்களோ எங்கெங்க தமிழர்கள் வந்து பிசினஸ் பண்ண போனாங்களோ சைனால முருகன் கோவில் இருக்குது. எந்த ஊருக்கு போனாலும் அது எல்லாம் மோஸ்ட்டா 18th செஞ்சுரி அதாவது ஒரு லாஸ்ட் 500 இயர்ஸ்ல எங்க எப்பப்போ மைக்ரேட் ஆனங்க எஸ்பெஷலி 500 இயர்ஸ்க்கு முன்னாடி இருந்து 300 இயர்ஸ்க்கு முன்னாடி வரைக்கும். 15th செஞ்சுரில இருந்து 18th செஞ்சுரி வரைக்கும் மைக்ரேட் ஆன தமிழர்கள் தான் இன்னைக்கு உலகம் ஃபுல்லா இருக்காங்க. அவங்க எல்லாருமே யாரை கும்புடுறாங்களோ இல்லையோ அவங்க கன்வெர்ட் ஆகி கூட போயிருக்கட்டும். கிறிஸ்டியனா இருக்கலாம். முஸ்லிமா இருக்கலாம். ஆனா என்னானாலும் அந்த முருகனோட ரிலேஷன்ஷிப்பை மட்டும் அவங்க விடவே இல்லை. அவங்க எங்க போனாலும் முருகனுக்குன்னு ஒரு கோவில் வச்சுக்கிட்டு தைப்பூசத்தை அவங்க கண்டிப்பா செலப்ரேட் பண்றாங்க. அது வந்து மோர் தன் ரிலிஜியங்கறதை தாண்டி இன்னைக்கு வந்து அது ஒரு கல்ச்சுரல் விஷயமா இருக்குது. அது தமிழ்நாட்டுக்குள்ள இருந்து பார்க்கறப்போ அது ரிலிஜியஸ் விஷயமா தெரியலாம். பட் அதை தாண்டி ஒரு குளோபல் பர்ஸ்பெக்டிவ்ல பார்க்கறப்போ அது தமிழர்களுக்கான ஒரு அடையாளம் ஆ போகுது. அண்ட் முருகனை வந்து இன்னும் மோர் பியூட்டிஃபுல்லான விஷயம் என்னன்னு பார்த்தீங்கன்னா, நார்த் இந்தியால பெருசா கும்புடவே மாட்டாங்க. தட் மேக்ஸ் முருகன் மோர் ஆஃப் அ சவுத் இந்தியன் காட். நார்த் இந்தியால இருக்குற எல்லா கதையிலயும் பார்த்தீங்கன்னா, முருகன் வந்து பெருசா ஃபோக்கஸே கிடையாது. விநாயகர், சிவன், பார்வதிங்கறதோட முடிஞ்சுரும். இங்கதான் நம்ம முருகன் மேல வந்து ஃபுல் ஃபோக்கஸ் வச்சிருப்போம். சோ தமிழ் கடவுள்னு சொல்றதுல இருந்து இங்க இருக்குற முப்பாட்டன்னு சொல்றதா இருக்கட்டும் எல்லாமே வந்து அங்க போய் முடியுது. சோ இதுதான் முருகனோட நம்ம நிறைய பேருக்கு தெரியாத போர்ஷன். அதுக்கப்புறம் அவங்க நிறைய விஷயங்களை வந்து சொல்லித் தர்றாங்க. மக்களுக்கு வந்து ஒரு டீச்சரா அவங்க நிறைய இடத்துல இருந்திருக்காங்க. முருகன் வந்து கைட் பண்ணிருக்காங்க. மெண்டாரா இருந்திருக்காங்க. அந்த மாதிரிலாம் நிறைய கதைகள் கிளைக்கதைகள் நிறைய இருக்குது. பட் அது ஒரு ஒரு ஏரியாவுக்கு ஏத்த மாதிரி மாறிட்டு இருக்குது. பட் எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது என்னன்னு பார்த்தீங்கன்னா, இந்த திணைகளை பத்தி வாசிக்க முடிஞ்சுச்சு. இதெல்லாம் வாசிக்கிறப்போ தமிழ்நாட்டுல யாரெல்லாம் கும்புட்டுருக்காங்க பல செஞ்சுரிஸ்க்கு முன்னாடினு தேடுறப்போ இன்னைக்கு நம்ம மெயினா பார்க்கிற சாமி யாரையுமே அவங்க அந்த காலகட்டத்துல பெருசா கும்புட்டது இல்லை. அட்லீஸ்ட் அந்த ஃபார்ம்ல கும்புட்டது இல்லை. மேஜரா வந்து இந்திரன் வந்து ஒரு பெரிய கடவுளா இருந்திருக்காங்க. இன்னைக்கு இந்திரனுக்கு எங்க கோவில் இருக்குன்னு கூட எனக்கு தெரியல. முருகன் மட்டும்தான் வந்து இன்னமும் கண்டினியூ ஆயிட்டு இருக்காங்க. பட் முருகனை இக்னோர் பண்ணிட்டு நீங்க பார்த்தீங்கன்னா, மாயோன். மாயோனுக்கு நம்ம இன்னும் பெருசா நம்ம ஃபோக்கஸ் பண்றது இல்லை. விஷ்ணு உள்ள கொண்டு வந்தாச்சு. அடுத்து யாருன்னு பாத்தீங்கன்னா, கொற்றவை நம்ம சாமி கும்புடுறது கிடையாது. வருண பகவான் நம்ம கும்புடுறது கிடையாது. அப்புறம் வந்து நெருப்புக்கு நம்ம பெருசா கும்புடுறது கிடையாது கரெக்டா. அக்னி. சோ இது எதையுமே விட்டுட்டு கடைசில இன்னமும் சர்வைவ் ஆகி நம்ம வந்து புடிச்சுட்டு இருக்குற ஒரு சாமி அந்த முந்தைய தமிழகத்துல இருந்து இன்னைக்கு வரைக்கும்னு பாத்தீங்கன்னா, அது முருகன் மட்டும்தான். சோ இதெல்லாமே வந்து ஒரு எமோஷனலான விஷயமாகி நிறைய பேர் வந்து இந்தியாவுக்கு வெளியில இருக்கறவங்க இந்தியாவுக்குள்ள இருக்கறவங்களை விட வெளியில இருக்கறவங்க தைப்பூசத்தை ரொம்ப பயங்கரமா செலப்ரேட் பண்ணிட்டு இருக்காங்க. இந்த டிராவல் ளாக்ஸ்லாம் இருப்பாங்கல்ல அவங்களோட வீடியோஸ்லாம் தமிழ்நாட்டுல இருந்து போறவங்களோட வீடியோஸ்லலாம் எடுத்து பார்த்தீங்கன்னா, எந்த கண்ட்ரிக்கு போனாலும் அங்க ஒரு தமிழ் கம்யூனிட்டி இருந்துச்சுன்னா அங்க கண்டிப்பா ஒரு முருகன் கோவில் இருக்குது. அதெல்லாம் பார்க்கவே கொஞ்சம் எக்சைட்டிங்கா இருந்துச்சு. சோ எனிவே அதைத்தான் நான் உங்ககிட்ட சொல்லணும்னு நினைச்சேன். சரி இந்த மாதிரி வேற எதாவது டாபிக் நான் பேசனு நினைச்சீங்கன்னா அது என்னங்கறத கமெண்ட்ல சொல்லுங்க. இந்த வாரம் ஃபுல்லா ராமர், அயோத்தி மசூதி, பாபரி மஸ்ஜித், முருகன்னு சொல்லி ஒரு மாதிரி சாமி சம்பந்தமாவே போயிட்டு இருக்குது. மாறும்னு நினைக்கிறேன். பார்ப்போம் எப்படி மாறுதுன்னு. பட் வேற எதாவது டாபிக் நான் பேச நினைச்சீங்கன்னா அது என்னங்கறத கமெண்ட்ல சொல்லுங்க. நீங்க பர்சனலா என்ன ஃபாலோ பண்ண நினைச்சீங்கன்னா எந்த சோசியல் மீடியால இருந்தாலும் மதன் கௌரி சொல்லி சர்ச் பண்ணுங்க. யூ ஷுட் பி ஏபில் டு ஃபைண்ட் மை ப்ரொஃபைல். லவ் யூ ஆல், டேக் கேர், பாய். சியர்ஸ் எம்ஜிஸ்.



