Thumbnail for ட்வின் டவர் தாக்குதலின் கதை | September 11 | Twin Towers Crash | News7 Tamil by News7 Tamil

ட்வின் டவர் தாக்குதலின் கதை | September 11 | Twin Towers Crash | News7 Tamil

News7 Tamil

22m 12s2,091 words~11 min read
YouTube auto captions
Transcript source

YouTube auto captions

This transcript was extracted from YouTube's auto-generated caption track. The transcript below is server-rendered so it can be read, searched, cited, and shared without opening the original YouTube player.

Pull quotes
[0:10]2001 செப்டம்பர் 11 ஆம் தேதி, உலகின் தூங்கா நகரம் என்று வர்ணிக்கப்படும் அமெரிக்காவின் நியூயார்க் நகரம் காலையில் வழக்கம் போல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
[0:10]வீதிகளில் வாகனங்களின் படையெடுப்பு ஹான் சப்தங்கள், டாக்ஸிகளின் ரிங்காரம் என அன்றாட பணிகளில் மக்கள் ஈடுபட்டிருந்த நேரம்.
[0:10]விண்ணை முட்டும் அளவிற்கு ஓங்கி உயர்ந்து காணப்பட்ட அந்த உலக வர்த்தக மையக் கட்டிடங்கள் அன்றைய பொருளாதார நிலையை நிர்ணயிக்க தயாராகிக் கொண்டிருந்தன.
[0:10]110 மாடிகள் கொண்ட உலக வர்த்தக மையக் கட்டிடத்தின் வடக்குக் கட்டிடத்தின் 93 மற்றும் 99 மாடிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் திடீரென விமானம் ஒன்று அதிபயங்கர வேகத்துடன் மோதி வெடித்து சிதறியது.
Use this transcript
Related transcript hubs

[0:10]2001 செப்டம்பர் 11 ஆம் தேதி, உலகின் தூங்கா நகரம் என்று வர்ணிக்கப்படும் அமெரிக்காவின் நியூயார்க் நகரம் காலையில் வழக்கம் போல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. வீதிகளில் வாகனங்களின் படையெடுப்பு ஹான் சப்தங்கள், டாக்ஸிகளின் ரிங்காரம் என அன்றாட பணிகளில் மக்கள் ஈடுபட்டிருந்த நேரம். விண்ணை முட்டும் அளவிற்கு ஓங்கி உயர்ந்து காணப்பட்ட அந்த உலக வர்த்தக மையக் கட்டிடங்கள் அன்றைய பொருளாதார நிலையை நிர்ணயிக்க தயாராகிக் கொண்டிருந்தன. சரியாக காலை 8 மணி 46 நிமிடங்கள். 110 மாடிகள் கொண்ட உலக வர்த்தக மையக் கட்டிடத்தின் வடக்குக் கட்டிடத்தின் 93 மற்றும் 99 மாடிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் திடீரென விமானம் ஒன்று அதிபயங்கர வேகத்துடன் மோதி வெடித்து சிதறியது. சற்றும் எதிர்பாராத வகையில் சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் அண்ணாந்து பார்க்க, விமானம் ஏதோ விபத்தில் சிக்கிக் கொண்டதாக எண்ணி பீதி அடைந்தனர். 81 பயணிகள், 11 பணியாளர்களுடன் பாஸ்டனின் லோகன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நோக்கி புறப்பட்ட அமெரிக்க ஏர்லைன்ஸ் போயிங் 767 விமானம்தான் அது. விமானம் மோதி அந்த பிரம்மாண்ட கட்டிடம் தீ பிடித்து கருப்புடன் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியதை கண்ட மக்கள். என்ன நடக்கிறது என்றே தெரியாமல் வீதிகளில் அலறியடித்து ஓடினர். அதே சமயம் தாக்குதலுக்கு உள்ளான அந்தக் கட்டிடத்தில் இருந்த நூற்றுக்கணக்கான மக்கள் தீயில் கருகிக் கொண்டிருந்தனர். 18 நிமிடங்கள் கழித்து 56 பயணிகள், ஒன்பது பணியாளர்களுடன் அதே பாஸ்டன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட யுனைடெட் ஏர்லைன்ஸ் 175 போயிங் 767 ரக விமானம் காலை 9 மணி 3 நிமிடத்திற்கு உலக வர்த்தக மையத்தின் தெற்கு கட்டிடத்திற்குள் மோதி வெடித்தது. அமெரிக்காவின் ஆளுமையை உலகிற்கு பறைசாற்றிக் கொண்டிருந்த அந்த கம்பீர கட்டிடங்கள் சீட்டுக் கட்டு போல சரிந்தன. அப்போதுதான் நியூயார்க் நகர மக்கள் ஏதோ அசம்பாவிதம் நடக்கிறது என்பதை உணர தொடங்கினர். மளமளவென்று இரண்டு கட்டிடங்களும் இடிந்து விழுந்த நிலையில் வானை கருப்புகை சூழ்ந்தது. கட்டிடங்கள் இடிந்து கிளம்பிய பெரும் புழுதி தெருக்களை மூடி மறைத்துக் கொள்ள இருண்ட கண்டத்திற்குள் மூழ்கியது போன்று மாறியது அன்று நியூயார்க் நகரம். இந்த கோர சம்பவத்தை தொலைக்காட்சிகள் நேரலையில் ஒளிபரப்பிக் கொண்டிருக்க வல்லரசு நாடான அமெரிக்காவில் ஏதோ அசம்பாவிதம் நடக்கிறது என்பதை மட்டும் உலக மக்கள் யூகிக்க தொடங்கினர். பதற்றமும் பரபரப்பும் அமெரிக்க மக்களையும் உலக நாடுகளையும் தொற்றிக் கொண்ட அந்த வேளையில் மூன்றாவதாக அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பெண்டகனும் தாக்குதலுக்கு உள்ளானது அந்நாட்டையே நிலைகுலைய வைத்தது. நாட்டின் பாதுகாப்பு அரணாக விளங்கிய பெண்டகன் தாக்கப்பட்டபோதுதான் இது தீவிரவாதத்தின் கோரமுகம் என விழித்துக் கொண்டது அமெரிக்கா. தீவிரவாதத்தின் இது போன்ற கோர தாண்டவத்தை உலகம் அதுவரை பார்த்திருக்காது. கண்ணிமைக்கும் நேரத்தில் கவளிகரம் செய்யப்பட்ட அந்த வானுயர கட்டிடங்கள் மீதான தாக்குதல்கள் மொத்த உலக நாடுகளையும் மக்களையும் அல்கொய்தாவின் வீரியத்தை உணர வைத்தனர். சம்பவம் நடந்த போது புளோரிடாவில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர் குழந்தைகளுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்தார் அமெரிக்க அதிபர் புஷ். தாக்குதல் நடந்த தகவலைப் பற்றி அதிபர் புஷ்ஷிடம் வெள்ளை மாளிகை உயர் அதிகாரி ஆன்ரூ கார் சொன்ன போது சற்றுக் நேரம் அமைதி காத்தார் புஷ். தொடர்ந்து மாணவர்களிடம் பேசிக் கொண்டிருந்த புஷ் பிறகு பள்ளியை விட்டு புறப்பட்டு சென்றார். ஒசாமா பின்லேடன் தலைமையிலான அல்கொய்தா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 19 அடுத்தடுத்து மூன்று தாக்குதல்களை அரங்கேற்றியதை அறிந்து கொண்டது அமெரிக்கா. கடத்தப்பட்ட நான்காவது விமானம் வெள்ளை மாளிகையை தாக்குமோ என்கிற அச்சம் மக்களை தொற்றிக் கொள்ள பென்சில்வேனியா மாகாணத்தில் ஷாங்க்ஸ்வில்லை என்கிற இடத்தில் வெட்ட வெளியில் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் இருந்த பயணிகள் தீவிரவாதிகளுடன் கடுமையாக சண்டையிட்டதால் விமானம் நிலைதடுமாறி வயல்வெளியில் விழுந்து நொறுங்கியதாக தகவல்கள் வெளியாகின. அமெரிக்க வரலாற்றின் மாபெரும் வீரத்தீர செயலாக அமெரிக்க பயணிகளின் அந்த போராட்ட நிகழ்வு அறிவிக்கப்பட்டது. தீவிரவாதிகளுடன் சண்டையிட்டு மரணமடைந்த மக்களின் உண்மையான தேசபக்தியை மெச்சி விமானம் விழுந்து நொறுங்கிய வயல்வெளிக்கு சென்று முதலில் அஞ்சலி செலுத்தினார் அதிபர் புஷ். அந்த நான்காவது விமானத்தை கடத்திய தீவிரவாதிகள் எங்கு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர் என்கிற கேள்விக்கு இதுவரை விடை கிடைக்கவே இல்லை. உலக வர்த்தக மையம் பென்டகன் மீதான தீவிரவாத தாக்குதல்களில் சுமார் 3000 உயிர்கள் மடிய 6000 பேர் காயமுற்றனர். அடுத்த சில மணித்துளிகளில் தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக அல்கொய்தா அமைப்பு பகிரங்கமாக அறிவித்தது. பாலஸ்தீனை ஒடுக்க இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு தருவது, ஈராக் மீதான பொருளாதார தடைகள் காஷ்மீரில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவு தந்தது சவுதி அரேபியாவில் அமெரிக்கப் படைகள் முகாமிட்டது என்பன போன்ற அடுக்கடுக்கான காரணங்களை தாக்குதலுக்கான பின்னணியாக அடுக்கியது அல்கொய்தா. இதனை அடுத்து அல்கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனை கலை எடுக்க களமிறங்கியது அமெரிக்க ராணுவம். தீவிரவாதத்திற்கு எதிரான சர்வதேசப் போரை பிரகடனப்படுத்தினார் அதிபர் புஷ். யாருமே நுழைய முடியாத இந்து குஷ் மலை பள்ளத்தாக்கில் பதுங்கியிருக்கும் பின்லேடனை ஒப்படைக்குமாறு ஆட்சி பீடத்தில் இருந்த தாலிபான்களை எச்சரித்த அதிபர் புஷ், 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 7 ஆம் தேதி ஆப்கான் மீது போர் தொடுத்தார். பிரிட்டனும், கனடாவும் முதலில் ஆதரவு அளிக்க நேட்டோ படைகளும் அமெரிக்காவுடன் கைகோர்த்தன. தாலிபான்கள் விரட்டி அடிக்கப்பட்டு ஆப்கானிஸ்தானை தன்வசப்படுத்தியது அமெரிக்கா. நீண்ட நெடிய தேடுதல் வேட்டை நடத்திய போதிலும் முக்கிய குற்றவாளியான ஒசாமா பின்லேடனை பிடிக்க முடியாமல் வெறுமனே திரும்பியது அமெரிக்க ராணுவம். தாலிபான்கள் வீழ்ந்து போர் முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட போதிலும் ஆப்கனில் இன்னமும் தாலிபான்களின் தாக்குதலுக்கு அப்பாவிகளும் ராணுவ வீரர்களும் பலியாகிக் கொண்டுதான் இருக்கின்றன. ஒரு பக்கம் பின்லேடனை பிடிக்க முடியாமல் போன நிலையில் மற்றொரு பக்கம் ஈராக் அதிபர் சதாம் உசேன் மீது பார்வையை திருப்பியது அமெரிக்க அரசு. பேரழிவு ரசாயன ஆயுதங்களை குவித்து வைத்துள்ளதாக குற்றம் சாட்டி 2003 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி ஈராக் மீது போர் தொடுத்த அமெரிக்க, பிரிட்டன் கூட்டுப் படையினர். ஒரு வழியாக ஈராக்கை கைப்பற்றினர். பல மாத தேடுதல் வேட்டைக்கு பின் 2003 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி திக்ரிக் நகரில் பதுங்கு குழியில் பதுங்கி இருந்த சதாம் உசேனை கைது செய்தனர். நீதிமன்ற விசாரணைக்கு பின் 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி சதாம் உசேனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஆனால் உலக வர்த்தக மைய தாக்குதலுக்கு பின் தீவிரவாதத்திற்கு எதிரான சர்வதேச போர் என்ற பெயரில் மறைமுகமாக மதவாத தீவிரவாதத்தை கையில் எடுத்து விட்டதாக அமெரிக்கா மீது விமர்சனங்கள் எழத் தொடங்கின. உலக வர்த்தக மைய தாக்குதலுக்கு அல்கொய்தா தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டாலும் விமான எரிபொருளால் இவ்வளவு பேரழிவு எப்படி சாத்தியமாகும் என்கிற சந்தேகங்களை கிளப்பினார்கள் சிலர். பிரம்மாண்ட கட்டிடங்களை வெடிகள் வைத்து அருகில் உள்ள கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் எப்படி இடிக்கப்படுகிறதோ அதே போன்று உலக வர்த்தக மைய கட்டிடங்கள் சரிந்தது அந்த ஐயங்களுக்கு பெரும் தீனி மூட்டின. இது திட்டமிட்ட வெடிகுண்டு தாக்குதல் என்றும், இதில் அமெரிக்கர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றெல்லாம் செய்திகள் வெளிவந்தன. தாக்குதலில் ஒரு யூதர் கூட ஏன் கொல்லப்படவில்லை? அன்றைய தினம் டாக்ஸி டிரைவர்களாக இருந்த அரேபியர்கள் யாரும் சம்பவம் நடந்த பகுதியில் ஏன் இல்லை? இது தீவிரவாதிகளின் திட்டம் இல்லை என்றும் இஸ்ரேலிய உளவு அமைப்பான மசாத்தின் பின்னணி வேலை என்றெல்லாம் செய்திகள் பலவாறு பரவின. அமெரிக்கா மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்தும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் கசிந்தன. இவ்வாறு பல வேறு விதமான வதந்திகள் சர்ச்சையை கிளப்பும் கருத்துக்கள் உலக வர்த்தக மைய தாக்குதல் சம்பவங்களை சுற்றிக் கொண்டே இருந்தன. விமான விபத்துக்கள் என்றால் மிக முக்கிய ஆதாரமாக கருதப்படுவது கருப்பு பெட்டி. ஆனால் இரட்டைக் கோபுர தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட விமானங்களின் கருப்பு பெட்டிகள் தீயில் அழிந்து விட்டதாக அமெரிக்கா தெரிவித்தது. சந்தேக நெருப்புக்கு எண்ணெய் ஊற்றியது. சுமார் 3000 டிகிரி செல்சியஸ் ஆன இரும்பின் உருகுநிலை கொண்ட கருப்பு பெட்டி எப்படி சுமார் 1000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் உருகியது என்ற கேள்வியும் எழுந்தது. தாக்குதல் விவகாரம் பிரச்சனைகளை வேறு விதமாக திசை திருப்ப உலக வர்த்தக மைய தாக்குதல் சம்பவம் குறித்து விசாரிக்க 2002 ஆம் ஆண்டு ஆணையம் அமைத்தது ஐக்கிய நாடுகள் சபை. நியூஜெர்சியின் முன்னாள் ஆளுநர் தாமஸ் கேனின் தலைமையில் உருவாக்கப்பட்ட அந்த ஆணையம் 2004 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி அன்று தனது அறிக்கையை வெளியிட்டது. இதில் உலக வர்த்தக மைய தாக்குதலில் ஈடுபட்டது அல்கொய்தா தீவிரவாதிகளே என்று உறுதி செய்யப்பட்டது. மேலும் பாதுகாப்பு அம்சங்கள் உளவுத்துறையின் செயல்பாடுகளை நவீனப்படுத்துவது வருங்காலத்தில் தீவிரவாத சம்பவங்களை தடுக்கும் வழிமுறைகள் போன்றவை இந்த அறிக்கையில் இடம்பெற்றிருந்தன. இந்த விசாரணை ஆணையத்தின் அறிக்கை உலக வர்த்தக மைய தாக்குதல் பின்னணியில் உலா வந்து கொண்டிருந்த பல்வேறு பொருள்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. பல இடங்களில் ஒசாமா பின்லேடனுக்கு வலை வீசியும் கிடைக்காத நிலையில் செய்வதறியாது தின்றி வந்த அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ-வுக்கு 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பின்லேடன் பதுங்கி இருக்கும் இடம் குறித்து முதல் ரகசிய தகவல் கிடைத்தது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து வடக்கே சுமார் 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அபோடாபாத் நகருக்கு உட்பட்ட பிலால் என்கிற ஊரில் பின்லேடன் பதுங்கி இருக்கிறார் என்பதுதான் அந்த தகவல். பெரும் சுவர்கள் அரணாக அமைந்த பாழடைந்த அடுக்குமாடி குடியிருப்பில் பின்லேடன் தங்கி இருப்பதாகக் கூறப்பட்டது. பின்லேடன் தங்கள் நாட்டில் இல்லை என பாகிஸ்தான் மறுத்து வந்த நிலையில் இந்த முறை அந்நாட்டை நம்பக் கூடாது என்று தீர்மானித்தது அமெரிக்கா. பின்லேடன் தங்கியுள்ள வீட்டில் எந்தவித நவீன தொலைத்தொடர்பு வசதிகளும் இல்லை. காரணம் தொலைத்தொடர்பு சாதனங்களின் அலைக்கட்டைகள் சமிக்கைகள் மூலம் தன்னை தேடிக் கொண்டிருக்கும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டுபிடித்து விடும் என்பதுதான் பின்லேடனின் இந்த முடிவுக்குக் காரணம். வெறும் கடித போக்குவரத்து மூலமே வெளி உலகத்துடன் தொடர்பு வைத்துக் கொண்டிருந்தார் பின்லேடன். வெளியாட்கள் யாருக்கும் வீட்டிற்குள் வர அனுமதி இல்லை. வழக்கமான வீடுகளை போன்று அல்லாமல் அக்கம் பக்கத்து வீட்டினரை தொடர்பு கொள்ளாமலேயே அந்த வீட்டில் சிலர் தங்கியிருந்தனர். இதனால் அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ-வின் சந்தேகம் வலுவடைய ரகசிய உளவாளிகள் மூலமும் தங்களது உள்ள அதிநவீன செயற்கைக் கோள்கள் வழியாகவும் கண்காணிக்கத் தொடங்கியது அமெரிக்கா. பல மாத தொடர் கண்காணிப்புகளுக்கு பின் அந்த வீட்டில் பின்லேடன் இருப்பதை உறுதி செய்த அமெரிக்கா அடுத்ததாக பின்லேடன் மீதான தாக்குதலுக்கு திட்டங்களைத் தீட்டியது. இதற்காக அமெரிக்காவின் முன்னணிப் படையான நேவி சீல் படையிலிருந்து ரகசியப் படையும் உருவாக்கப்பட்டது. நெப்டியூன் ஸ்பியர் என ஆபரேஷனுக்கு பெயரிடப்பட்டது. நேவி சிறப்பு போர் பிரிவான சீல் டீம் சிக்ஸ் எனும் படையிலிருந்து 25 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அமெரிக்க ராணுவத்தின் 160 ஆவது சிறப்பு விமானப்படை பிரிவிலிருந்து அதிநவீன ஹெலிகாப்டர்கள் கொண்டுவரப்பட்டன. உலகின் அதி பயங்கரவாதியான பின்லேடனை பிடிக்க செல்லவிருப்பதாக சம்பந்தப்பட்ட நேவி சீல் படையினருக்கு பிரத்யேக தாக்குதல் பயிற்சிகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. பின்லேடனை உயிருடன் தான் பிடிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. சுட்டுப் பிடித்தால் பின்லேடன் கொல்லப்பட வேண்டும் என்பதுதான் நேவி சீல் படையினருக்கு பிறப்பிக்கப்பட்ட பிரதான கட்டளை. ஒருவேளை திட்டம் தோல்வி அடைந்தால் எப்படி சமாளிப்பது? பாகிஸ்தான் மண்ணிலிருந்து பத்திரமாக வெளியேறுவது எப்படி என்பது குறித்தெல்லாம் நேவி சீல் படைப்பிரிவினருக்கு அறிவுரைகள் கொடுக்கப்பட்டன. தாக்குதல் நடத்துவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக பின்லேடன் பதுங்கி இருந்த வீட்டருகே ஒரு ரகசிய தற்காலிக வீட்டை அமைத்தது சிஐஏ. பின்லேடனை கண்காணிக்கும் பணிகளுக்காக பல மில்லியன் டாலர் தொகை செலவிட வேண்டி இருப்பதால் பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிதிகள் திருப்பி விடப்பட்டு இந்த நிதி செலவினங்களுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியதாக கூறுகிறது வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை. ஒரு நாட்டிற்குள் புகுந்து மற்றொரு நாட்டின் ராணுவம் தாக்குதல் நடத்துவது அவ்வளவு எளிதல்ல. அதிலும் இஸ்லாமிய நாடான பாகிஸ்தானுக்குள் புகுந்து அந்நாட்டிற்கே தெரியாமல் எப்படி தாக்குதல் நடத்துவது என்ற சிறப்புத் திட்டம் ஒன்றை தயாரித்தது அமெரிக்கா உளவுத்துறை. பிற நாடுகளின் ராடார்களின் கண்களுக்கு சிக்காமல் நழுவி பறக்கும் பிரத்யேக ஹெலிகாப்டர்களை தாக்குதலுக்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. உலக வர்த்தக மைய தாக்குதல் நடந்து சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் பின்லேடனின் மறைவிடத்தை கண்டுபிடித்திருப்பதால் இந்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதில் குறியாக இருந்தது அமெரிக்கா. 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆபரேஷன் நெப்டியூன் ஸ்பியர் தொடர்பான ரகசிய நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது சிஐஏ. அபோடாபாத் நகருக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவதற்கு முன் ஒத்திகை செய்து பார்க்க முடிவெடுத்து வடக்கு கரலோனியாவில் உள்ள ஹார்வே பாயிண்ட் என்கிற இடத்தில் பின்லேடன் தங்கியிருந்த வீட்டின் மாதிரி ஒன்று வீடு ஒன்று கட்டப்பட்டது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா அமைத்திருந்த பக்ராம் விமானப்படை தளத்திலும் பின்லேடன் வீடு போன்ற மற்றொரு மாதிரி நிர்மாணிக்கப்பட்டது. ஜலபாத் விமானப்படை தளத்திலிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு மாதிரி பின்லேடனை வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வெற்றிகரமாக ஒத்திகை செய்து முடித்தனர் நேவி சீல் படையினர். தாக்குதல் நடத்தும் சமயத்தில் அக்கம் பக்கத்து வீடுகளுக்கு சேதமோ பாதிப்புகளோ ஏற்பட்டால் நிலை மோசமாகி அமெரிக்க ராணுவத்திற்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி விடும் என்பதால் அனைத்து விஷயங்களிலும் விளக்கெண்ணையை ஊற்றிக் கொண்டு கண்கொத்திப் பாம்பாய் பார்த்துக் கொண்டது சிஐஏ. அமெரிக்க தேசியப் பாதுகாப்பு கவுன்சிலின் ரகசிய கூட்டம் ஐந்து முறை கூடி விவாதித்தது. அமெரிக்க உளவுப்பிரிவு தேசிய பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட முக்கிய அமைப்புகள் கலந்து கொண்டு தாக்குதல் திட்டத்திற்கு இறுதி வடிவம் கொடுத்தன. 2011 ஏப்ரல் 29 ஆம் தேதி பின்லேடன் மீதான தாக்குதலுக்கு உத்தரவு பிறப்பித்தார் அதிபர் ஒபாமா. 2011 மே 2 ஆம் தேதி நள்ளிரவு நேரம் பாகிஸ்தானை ஒட்டிய ஆப்கான் எல்லையிலிருந்து பாகிஸ்தான் ராணுவ ராடர்களின் கண்களில் மண்ணைத் தூவி உள்ளே நுழைந்தன அமெரிக்க ஹெலிகாப்டர்கள்.

[13:48]சரியாக நள்ளிரவு 1 மணிக்கு ஊரே அடங்கி இருந்த அந்த நேரத்தில் அந்த மர்ம வீட்டிற்குள் இறங்கி நேவி சீல் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அடுத்த சில நிமிடங்களில் துப்பாக்கிகள் சரமாரியாக வெடித்தன. இருப்பினும் பெரியதாக ஒளி இல்லை. சைலன்சர் பொறுத்தப்பட்டிருந்ததால் வெடி சத்தம் வெளியே கேட்கவில்லை. நிராயுதபாணியாக இருந்த பின்லேடன் தலையில் குண்டு பாய்ந்து கொல்லப்பட்டார். பின்லேடனை காப்பாற்ற மனித கேடயமாக அவரை மறைத்து நின்ற பெண்ணும் துப்பாக்கி குண்டுக்கு பலியானார். தாக்குதலில் நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் மரணமடைந்தனர். மடிந்தான் பின்லேடன் என நேவி சீல் படையினர் ஒரு பக்கம் மகிழ்ச்சி அடைந்தாலும் மற்றொரு பக்கம் முக்கியப் பணி காத்திருந்தது அவர்களுக்கு. உலகின் பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்புகளுடன் பின்லேடனுக்கு உள்ள தொடர்புகளை குறித்த தகவல்களையும் ரகசிய ஆவணங்களையும் கண்டறிவதுதான் அது. சுமார் 40 நிமிடங்கள் வீட்டின் அனைத்து அறைகளையும் மூளை முடுக்குகளையும் சல்லடை போட்டு சலித்தது நேவி சீல் படை. உதவிக்கு அழைத்து வந்த மோப்ப நாயும் தன் பங்கிற்கு தடயங்களை சேகரித்தது. நூற்றுக்கணக்கான மென்பொருள் தகவல் சேமிப்பு ஹார்ட் டிஸ்குகளும் இந்த சோதனையில் சிக்கின. வந்த வேலையை கட்சிதமாக முடித்துக் கொண்டு பின்லேடன் உடலுடன் மீண்டும் புறப்பட்டன இரண்டு ஹெலிகாப்டர்கள். அப்போது திடீரென ஒரு ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அந்த ஹெலிகாப்டரை வெடிக்க செய்து விட்டு கிளம்பியது அமெரிக்க ராணுவம். காரணம் தாக்குதல் நடந்த சுவடுகளும் அந்த ஹெலிகாப்டரின் ரகசியங்களும் பாகிஸ்தானுக்கு கிடைத்துவிடக் கூடாது என்பதே நோக்கமாகும். இந்த அனைத்து நிகழ்வுகளையும் வெள்ளை மாளிகையின் முக்கிய அறை ஒன்றிலிருந்து நேரலையில் பார்த்துக் கொண்டிருந்தார் அதிபர் ஒபாமா. அவருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் மற்றும் தேசிய பாதுகாப்பரையின் மூத்த அதிகாரிகள் சில மட்டுமே உடன் இருந்தனர். பின்லேடனின் சடலம் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவ முகாமிற்று கொண்டு செல்லப்பட்டு அந்த உடல் பின்லேடன் உடையதுதானா என பரிசோதிக்கப்பட்டது. மரபணு சோதனை நடத்தப்பட்டதுடன் பின்லேடனின் முந்தைய புகைப்படங்களை வைத்து அடையாளங்களை சரி பார்த்தது சிஐஏ. பல்வேறு சோதனைகளின் முடிவில் அது பின்லேடன் உடல்தான் என்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அல்கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் அமெரிக்க ராணுவத்தால் கொல்லப்பட்டதாக அமெரிக்க மக்களுக்கும் உலக நாடுகளுக்கும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் அதிபர் ஒபாமா. பின்லேடன் உடலுக்கு இஸ்லாமிய முறைப்படி சடங்குகள் நடத்தப்பட்டு வெள்ளை துணியால் போர்த்தி படகில் வைத்து கடலில் மூழ்கடிக்கப்பட்டதாகவும் உடற் கூறு எதுவும் செய்யப்படவில்லை என்றும் அறிவித்தது அமெரிக்க ராணுவம். அதே சமயம் பின்லேடன் கொல்லப்பட்டதற்கான வலுவான புகைப்படங்கள் எதையும் அமெரிக்க அரசு வெளியிடவில்லை. இது பல்வேறு யூகங்களுக்கும் வதந்திகளுக்கும் வித்திடும் என்பதால் பின்லேடன் மரணம் குறித்த அனைத்து தகவல்களையும் ரகசியமாகவே வைத்திருந்தது அமெரிக்க அரசு. தாக்குதல் நடந்து ஐந்து தினங்களுக்கு பின் மே 6 ஆம் தேதி பின்லேடன் இறந்துவிட்டதை அல்கொய்தா அமைப்பு தனது இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அமெரிக்காவின் இந்த செயலுக்கு பழிக்குப்பழி வாங்குவோம் என்றும் கொக்கரித்தது அல்கொய்தா. பின்லேடனின் உடலை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யாமல் கடலில் வீசியதை ஒரு தரப்பினர் கடுமையாக கண்டித்து விமர்சனங்களையும் முன்வைத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே வேளையில் தங்கள் நாட்டிற்குள் அமெரிக்க ராணுவப் படைகள் புகுந்து தங்களுக்குத் தெரியாமல் பின்லேடனை சுட்டுக் கொன்றுவிட்டு உடலை எடுத்துச் சென்றது பாகிஸ்தானுக்கு பெரும் அவமானத்தையும் பேரதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. பாகிஸ்தானின் இறையாண்மையை அமெரிக்கா சிதைத்து விட்டதாக ஆட்சியாளர்கள் வசபானித்தாலும் அமெரிக்காவுக்கு எதிராக அவர்களால் பெரிதாக ஒன்றும் செய்து விட முடியவில்லை. தங்கள் நாட்டிற்குள் புகுந்து பின்லேடனை அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொன்றது குறித்து புலன் விசாரணை செய்ய நீதிபதி ஜாவித் இக்பால் தலைமையில் குழுவை அமைத்தார் பாகிஸ்தானின் அப்போதைய பிரதமர் யூசுப் ரசா கிலானி. பாகிஸ்தான் ராணுவம் மற்றும் உளவுத்துறையின் ஒட்டுமொத்த தோல்வியே அமெரிக்க ராணுவம் உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தியதற்கு காரணம் என அறிக்கை வெளியிட்டு கண்காட்டி வேலையை முடித்துக் கொண்டது பாகிஸ்தான் அரசு. எதுவாக இருந்தாலும் சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுப்பது இந்தியாவின் குற்றச்சாட்டு உலக அரங்கில் மெய்ப்பிக்கப்பட்ட நிகழ்வு பாகிஸ்தானுக்குப் பெருத்த தலைகுனிவை ஏற்படுத்தியது. தீவிரவாதத்திற்கு ஆதரவான பாகிஸ்தானின் உண்மை முகமும் வெளிச்சத்திற்கு வந்தது. இப்படி உலக வர்த்தக மைய தாக்குதலுக்குக் காரணமான ஒசாமா பின்லேடன் வேட்டை முடிவுக்கு வந்தது அமெரிக்காவிற்கும் அந்நாட்டு மக்களுக்கும் மகிழ்ச்சி அளித்தாலும் அல்கொய்தா அமைப்பின் இரண்டாம் நிலைத் தலைவரான அல் ஜவாரி பொறுப்பேற்றுக் கொண்டது மீண்டும் தலைவலியை ஏற்படுத்தியது. எகிப்திய நாட்டில் பிறந்த அல் ஜவாரின் மறைவிடத்தை அமெரிக்காவால் சரியாக கண்டறிய முடியவில்லை. அல் ஜவாரியின் தலைக்கு அமெரிக்க ராணுவம் 25 மில்லியன் டாலர் பரிசு தொகையை அறிவித்துவிட்டு அமைதி காத்து வருகிறது. காரணம் பின்லேடன் மறைவுக்கு பின் பெரிய அளவில் அல் ஜவாரி தலைமையிலான அல்கொய்தா எங்கும் தாக்குதல்கள் நடத்தவில்லை என்பதுதான். எனினும் ஒவ்வொரு ஆண்டும் உலக வர்த்தக மைய தாக்குதல் நினைவு தினம் அனுசரிக்கப்படும் போது அல்கொய்தா தீவிரவாத அமைப்பையும் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியை சூழ்ந்திருந்த நினைவுகளும் நிழலாடி விட்டு செல்கின்றன. பின்லேடன் கொல்லப்பட்டதால் உலகிலிருந்து தீவிரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டதாக உலக நாடுகள் முடிவுக்கு வரவில்லை. அல்கொய்தா நிதி உதவியுடன் ஆங்காங்கே இயங்கிக் கொண்டிருக்கும் சில தீவிரவாத அமைப்புகள் இன்னமும் ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் அவ்வப்போது தாக்குதல்களை நடத்திக் கொண்டுதான் இருக்கின்றன. அண்மையில் அல்கொய்தாவின் வேட்டைக்கு அமெரிக்காவுடன் கைகோர்த்த பிரிட்டனின் லண்டன் உள்ளிட்ட நகரங்கள் தீவிரவாத தாக்குதலுக்கு இலக்காகின. இந்தியா, பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, ஏமன், நைஜீரியா, சோமாலியா, ஏமன், எகிப்து, லிபியா போன்ற நாடுகள் தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் 10 நாடுகள் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆதிக்க சக்திகளால் சமூகத்தில் ஒடுக்கப்பட்டு உரிமைகள் மறுக்கப்பட்ட தரப்பினரே தங்களது உரிமைக்காக குரல் கொடுத்து ஆயுதம் ஏந்தும் நிலை ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த ஆயுதப் போராட்டம் எந்த வழியிலும் பிரச்சனைகளுக்கு தீர்வாகாது என்பதற்கு பல சரித்திர சான்றுகள் உள்ளன. ஆயுதத்தால் அதிகாரத்தை கைப்பற்ற முடியாது. ஆயுதம் ஏந்தியவனுக்கு ஆயுதத்தாலையே மரணம் என்ற உண்மையை நம் முன்னோர்கள் சொல்லி விட்டு சென்றது இன்றளவும் மெய்ப்பிக்கப்பட்டே வருகிறது. அதற்கு ஒசாமா பின்லேடனின் வாழ்க்கையும் அவரது மரண சம்பவமுமே சிறந்த எடுத்துக்காட்டுகள்.

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript