[0:00]வணக்கம் நான் உங்க ஜெயா இன்னைக்கு நம்ம இந்த வீடியோல ஹெர்மன் அவுட் எழுதின தி டிஸ்கவரி அப்படின்ற ஒன் ஆக்ட் பிளேயுடைய சம்மரியை பார்க்கலாம் வாங்க. ஜெர்மன் அவுட் வந்து ஒரு இங்கிலீஷ் ஆத்தர், ட்ரமாட்டிஸ், போயட் அண்ட் கிரிடிக். அவர் ரொம்ப ஃபேமஸானது ரெண்டு விஷயத்துக்கு. ஒன்னு வந்து அவர் எழுதின இந்த டிஸ்கவரின்ற பிளே தான். இது வந்து கிறிஸ்டம்பர் கொலம்பஸ்ோட டிஸ்கவரியை அவர் டிராமாவா எழுதி இருந்தாரு. அடுத்தது வந்து சான் டிகோ ஜூனிஸ் தியேட்டர் வந்து அவருடைய ஒன் ஆட் சில்ட்ரன்ஸ் பிளே ஆன தி பிரின்சஸ் இன் தி ஸ்லீப்பிங் வுட்ட 1953ல வந்து வெளியிட்டாங்க. அதுவும் அவருக்கு வந்து ரொம்ப புகழை தேடி தந்தது. கிறிஸ்டோபர் கொலம்பஸ் நமக்கு எல்லாருக்குமே தெரியும். அவர் வந்து 25 ஆகஸ்ட்ல இருந்து 31 அக்டோபர்க்குள்ள ஏதோ ஒரு நாள்ல 1451ல பிறந்து 20 வது மே 1506ல இறந்தாரு. அவர் வந்து ஒரு இத்தாலியன் எக்ஸ்ப்ளோர் அண்ட் நேவிகேட்டர். நேவிகேட்டர்னா கடல் வழி பயணத்தை மேற்கொள்றவங்கள நம்ம நேவிகேட்டர்னு சொல்லுவோம். அவர் கிட்டத்தட்ட நாலு வாயேஜஸ் அட்லாண்டிக் ஓஷன்ல பண்ணிருக்காரு. அது மாத்திரம் இல்லாம யூரோப்பியன்ஸ் வந்து மத்த நாடுகளை போய் பார்த்து அதை காலனைஸ் பண்றதுக்கும் அவர் ஒரு முன்னோடியா இருந்திருக்காரு. குறிப்பா அமெரிக்காவை. அவருக்கு வந்து உதவி செஞ்சதெல்லாம் ஸ்பெயின்ல இருந்த மன்னர்கள் தான், அதாவது கத்தோலிக் மன்னர்கள் தான். இவங்கதான் வந்து அவருடைய எல்லா பயணத்துக்கும் வேண்டிய செலவுகள் எல்லாம் ஏத்துக்கிட்டாங்க. இவர்தான் வந்து ஃபர்ஸ்ட் யூரோப்பியன். கரிபியனுக்கு போன ஃபர்ஸ்ட் யூரோப்பியன். சென்ட்ரல் அமெரிக்கா போன ஃபர்ஸ்ட் யூரோப்பியன். அது மாத்திரம் இல்லாம சவுத் அமெரிக்காவுக்கும் இவர்தான் போயிருக்காரு. இந்த டிராமால முக்கிய கதாபாத்திரங்கள் பார்த்தீங்கன்னா கிறிஸ்டம்பர் கொலம்பஸ், டிகோ, ஜுவன் அப்புறம் பிரான்சிஸ்கோ. இவங்க மூணு பேரும் வந்து அந்த கப்பல்ல இருக்கிற சேலர்ஸ் அப்புறம் பெட்ரோ இவரு வந்து ஒரு ஆபீசர். அப்புறம் பெப்பி இவரு வந்து ஒரு பேஜ் பாய். பேஜ் பாய்னா கப்பலை சுத்தம் பண்ற ஒரு மாலுமி. இது வந்து எப்படின்னா கிறிஸ்டோபர் கொலம்பஸ் உடைய டிஸ்கவரின்றோம் இல்லையா. அவங்க வந்து எப்படின்னா இந்தியாவுக்கு போறதுக்கான கடல் வழி பயணத்தை எப்படி மேற்கொள்றது அதுக்கான சீ ரூட் என்ன அப்படின்னு கண்டுபிடிக்கிறதுக்கு தான் அவர் பயணத்தை மேற்கொள்றாரு. அந்த பயணத்தோட கடைசி நாள் எப்படி இருந்தது அப்படின்றதை காட்டுறதுக்கு தான் வந்து இந்த டிராமா வந்து பண்ணி இருக்காங்க. இதுல எப்படின்னா கொலம்பஸ வந்து நிறைய கடல் வழி பயணத்தை வந்து எப்படி மேற்கொள்ளணும்னு நிறைய விஷயம் தெரிஞ்ச ஒரு ஆளா தான் ஹெர்மன் காமிச்சிருக்காரு. அது மாத்திரம் இல்லாம பிளேயோட ஆரம்பத்துல பார்த்தீங்கன்னா கூட பயணம் செய்யற அதாவது அங்க வேலை செய்யறவங்க எல்லாருமே க்ரூனா கப்பல்ல வேலை செய்யறவங்க எல்லாருமே வந்து எப்படின்னா ரெண்டு மாசமா பயணம் பண்ணிட்டு இருக்காங்க. அதனால அவங்களுக்கு பொறுமையே இல்லை. திரும்பி போகணும் அவங்க நாட்டுக்கு ஸ்பெயின் தான் அவங்க நாடு. அங்க போய்டனும்னு நினைக்கிறாங்க. ஏன்னா அவங்க என்ன நினைக்கிறாங்கன்னா ரெண்டு மாசமா ஒரே திசையை நோக்கி நாம போயினே இருக்கோம். ஆனா நம்மளால எந்த லேண்டையும் கண்டுபிடிக்க முடியல. அப்படின்னா என்ன இந்த பக்கமா எந்த லேண்டுமே இல்லை. நிலப்பகுதியே இல்லை. அப்ப இன்னும் போயினே இருக்கறதுல எந்தவித பிரயோஜனமும் இல்லை. அது மாத்திரம் இல்லாம இப்படியே போயிட்டு இருந்தா திரும்ப நம்ம தொலைஞ்சு போயிட்டோம்னா திரும்பி போகவே முடியாது. நம்ம குடும்பத்தை போய் பார்க்காமலேயே போயிடுவோமோ அப்படின்ற ஒரு பயம் எல்லாருக்கும் வந்துருச்சு. அதனால அவங்கலாம் வந்து எப்படின்னா திரும்பி பயணத்தை வந்து ரத்து செஞ்சுட்டு போயிடணும். ஆனா வந்து அவங்களால கொலம்பஸ் கிட்ட ஒன்னும் பண்ண முடியல. ஏன்னா கொலம்பஸ் வந்து ஃபுல் அத்தாரிட்டியா இருக்காரு. நான் சொல்றத நீங்க செய்யணும்ன்ற மாதிரி ஒரு மெஜஸ்டிக்கா இருக்காரு. அவரை எதிர்த்து அவங்களால ஒன்னும் பண்ண முடியல. அதே மாதிரி பார்த்தீங்கன்னா கொலம்பஸ்க்கு வந்து அங்க பயணம் செய்யறவங்க படுற கஷ்டத்தையெல்லாம் பார்த்து எந்தவிதமான சிம்பத்தியும் இருக்கிற மாதிரி அவருக்கு தெரியலை. யார் மேலயும் அவர் பரிதாபப்படுறதோ இல்ல அவங்க நிலையை புரிஞ்சுக்கிற மாதிரி தெரியல. அதனால அவங்களாம் வந்து ஒரு கலவரம் பண்ணனும். எதிர்த்து போராடணும் அப்படின்ற முடிவுல இருக்காங்க. ஆனா முடிவு எப்படி இருக்கும்ன்றது எல்லாருக்குமே தெரியும். ஏன்னா இன்னைக்கும் நம்ம கொலம்பஸை பத்தி பேசிட்டு இருக்கோம். அவர் வந்து வெற்றி வாகை சூடனும் அப்படின்றது தான் விதி விடிச்ச ஒரு விதியா இருந்திருக்கு. அதனால தான் வந்து அவங்களால வந்து ஒரு நிலத்தை யாருமே கால் பதிக்காத ஒரு நிலத்தை யாருமே காலனைஸ் பண்ணாத ஒரு இடத்தை வந்து கொலம்பஸ் கண்டுபிடிக்க முடிஞ்ச ஒரு. வெற்றியா வந்து இந்த டிராமால காமிச்சிருக்காங்க. ஏன்னா ஆரம்பத்திலேயே சொன்ன மாதிரி கொலம்பஸ வந்து ஒரு அத்தாரிடேட்டிவ்வாவும் ஒரு ஸ்ட்ரிக்ட்டான ஒரு பர்சனாதான் காட்டிருக்காங்க. அதே மாதிரி அவருக்கு அட்வென்சர்னா ரொம்ப பிடிச்சிருக்கும். அது மாத்திரம் இல்லாம அவருடைய குணமே எப்படின்னா ரிஸ்க் எடுக்கறதை வந்து ரொம்ப தைரியமா செய்யக்கூடிய ஒரு நபரைதான் காமிச்சிருக்காங்க. இந்த பிளேயில பார்த்தீங்கன்னா அவருடைய ஸ்ட்ரென்த்தையும் காமிச்சிருக்காரு ஹெர்மன் அதே சமயத்துல அவருடைய வீக்னெஸ்ஸையும் காமிச்சிருக்காரு. அதுக்கு மேல அவரை வந்து ஒரு பெரிய எக்ஸ்ப்ளோரரரா காமிச்சிருக்காரு. இது ஒரு ஒன் ஆக்ட் பிளே. இந்த பிளே ஃபுல்லாவே வந்து கப்பல். அந்த கப்பலோட பேரு வந்து சான்டா மரியான். இந்த சான்டா மரியான் கப்பல்ல நடக்குற மாதிரிதான் இருக்கு. பிளே வந்து ஆரம்பிக்கும் போது டிராமா ஆரம்பிக்கும் போது டிகோ, ஜான் ரெண்டு பேரும் வந்து அங்க ஒரு செயலர்ஸ். அவங்க இன்னும் ஒருத்தர் ரெண்டு பேரும் பேசிட்டு இருக்காங்க. யாரை பத்தி பேசிட்டு இருக்காங்கன்னா கொலம்பஸை பத்திதான் பேசிட்டு இருக்காங்க. டிகோ சொல்றாரு கொலம்பஸ் வந்து ரொம்ப அத்தாரிடேட்டிவ்வா இருக்காரு. அவருடைய பேச்சும் நடவடிக்கையும் அவருடைய செயலும் என்னால பொறுத்துக்கே முடியல. அவரால நம்மளுடைய நிலைமையை புரிஞ்சுக்கவே முடியல அப்படின்னு வந்து ரொம்ப கோபத்தை காட்டுறாரு. ஜானும் அவர் சொல்றத வந்து ஒத்துக்குறாரு. அவர் ரொம்ப இவரை அளவுக்கு வெளிப்படையா பேசலானாலும் அவருடைய மனநிலையும் அதேதான்றது நமக்கு புரியுது. அது மாத்திரம் இல்லாம அவங்க கூட இருக்க எல்லா சேலர்ஸ்க்கு வந்து திரும்பி போகணும் அப்படின்ற நிலைமையிலதான் இருக்காங்க. நிறைய பேர் இத வெளிப்படையாவும் சொல்லி இருக்காங்க. ஆனா கொலம்பஸ் ஒத்துக்குலன்றது நமக்கு தெரியுது. இவங்க பேசிட்டு இருக்கும் போது பெட்ரோன் ஆபீசர் அங்க வராரு. அவர் இவங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருக்கறத பார்த்துட்டு அவன்கிட்ட வராரு. பேசும் போது டிகோ அவனோட கோபத்தை வந்து வெளிப்படுத்துறான். இவங்க பேசிட்டு இருக்கும் போது கொலம்பஸ் அங்க வந்துட்டு டிகோவையும் ஜானையும் அங்க இருந்து போக சொல்லிடுறாரு. அதுக்கப்புறம் அவர் பெட்ரோவோட பேசிட்டு இருக்காரு. இவங்க பேசுறத பெப்பின் ஒரு பேஜ் பாய். பேஜ் பாய்னா கப்பல வந்து சுத்தம் பண்றவங்கள வந்து பேஜ் பாய்னு சொல்றோம். அவர் அந்த பையன் வந்து கேட்டுட்டு இருக்கான். அப்ப பெட்ரோ சொல்றாரு சேலர்ஸ் எல்லாம் ரொம்ப கோபமா இருக்காங்க. ஏன்னா இவங்க எல்லாம் வந்து சாதாரண மக்கள் உங்களை மாதிரி ஒரு எக்ஸ்ப்ளோரர் கிடையாது. அவங்க வந்து பணம் அவங்களுக்கு ஒரு வேலை கிடைச்சிருக்குன்னு தான் வந்திருக்காங்க. ஆனா ரெண்டு மாசமா வந்து நம்ம வந்து கடல் வழி பயணத்தை மேற்கொண்டுட்டு இருக்கோம். ஆனா நம்ம எங்க போக போறோம். இன்னும் எவ்வளவு நாள் போக போறோம்ன்றது தெரியாமலே போயிட்டு இருக்கோம். இன்னும் கொஞ்ச நாள் ஆச்சுன்னா அவங்க வந்து நிச்சயமா கலவரம் பண்ணுவாங்க அப்படின்னு சொல்றாங்க. அது மாத்திரம் இல்லாம அவங்களுக்கு வந்து எங்க வந்து இப்படியே போயிட்டு இருந்தா நம்ம எங்கயாவது தொலைஞ்சு போயிடுவோமோ திரும்பி நம்ம குடும்பத்தை பார்க்கவே முடியாதுன்ற பயமும் வந்துருச்சு அப்படின்னு சொல்றாரு. அதுக்கு மேல அவர் என்ன சொல்றாருன்னா இயற்கை வந்து எல்லாத்தையுமே மனுஷன் கிட்ட காமிச்சிடாது. மனுஷனுக்கு தெரியாத நிறைய ரகசியங்கள் இயற்கையில இருக்கு. இது வந்து மனுஷனுக்கு அப்பாற்பட்ட ஒரு அறிவு. இது நம்ம ஒத்துக்கணும் அப்படின்னு சொல்றாரு. ஆனா கொலம்பஸ் அதை ஒத்துக்க மாட்டேங்குறாரு. அவர் சொல்றாரு இந்த பயணமே கடவுளுடைய ஒரு விருப்பம் தான். கடவுள் தான் நமக்கு இந்த எண்ணத்தை கொடுத்தாரு. கடவுள் தான் நம்மள வழிநடத்தி போறாரு. அதனால கண்டிப்பா இதுல வெற்றி கிடைக்கும்ன்ற நம்பிக்கை எனக்கு இருக்கு அப்படின்னு சொல்றாரு. அப்ப என்ன ஆயிடுதுன்னா அங்க கொஞ்ச தூரத்துல வந்து இந்த சேலர்ஸ்லாம் பாடுற சத்தம் கேட்குது. அதனால கொலம்பஸ் என்ன சொல்றாருன்னா பெட்ரோ கிட்ட போய் அவங்கள எல்லாம் பாட்டு பாட வேண்டாம். வேலை செய்ய சொல்லு அப்படின்னு சொல்றாரு. அவர் போயிட்ட அப்புறம் பெப்பி வந்து கொலம்பஸ் கிட்ட வராரு. பெப்பியை பார்த்த உடனே கொலம்பஸ் வந்து பெப்பியை ரொம்ப பாராட்டுறாரு. அவர் சொல்றாரு கப்பலை நீ நல்லா சுத்தமா வச்சிருக்க. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு உன்ன அப்படின்னு சொல்றாரு. அப்ப பெட்ரோ வந்து திரும்பி வராரு. ஆனா சேலர்ஸ் இன்னும் பாடிக்கிட்டே தான் இருக்காங்க. பெட்ரோவோட பிரான்சிஸ்கோன்னு ஒரு சேலரும் வராரு. வந்து அவர் கொலம்பஸ் கிட்ட ரொம்ப கோபமா பேசுறாரு. அவர் சொல்றாரு உனக்கு பைத்தியம் தான் பிடிச்சிருக்கு. நீ ரொம்ப அத்தாரிடேட்டிவ்வா இருக்க. நீ எங்களெல்லாம் ரொம்ப கொடுமையா நடத்துற. நம்ம உடனே திரும்பி போகணும். இந்த பயணம் வெற்றி அடையுன்னு எனக்கு தோணவே இல்லை. எங்களுக்கெல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கு. எங்களுக்கு வந்து மன தைரியம் எல்லாம் போயிடுச்சு அப்படின்னு சொல்றாரு. அப்ப கொலம்பஸ் சொல்றாரு இது உங்களுடைய கடமை. நீங்க எல்லாத்துக்கும் ஒத்துன்னு தான் வந்திருக்கீங்க. அதனால நான் சொல்றத நீங்க கேட்டுதான் ஆகணும். ஏன்னா நீங்க வந்து பயணம் தொடர்றதுக்கு முன்னாடியே எல்லாத்துக்கும் ஒத்துக்கிட்டீங்க. உங்களுக்கு வந்து தேவையான உணவு எல்லாமே இங்க கொடுக்கப்படுது. நாங்க சொல்ற வரைக்கும் நீங்க போயினே தான் இருக்கணும். நாங்க சொல்ற வழியிலதான் போகணும். திரும்பி எப்போ போகணும்ன்ற முடிவை நான் தான் எடுப்பேன் அப்படின்றாரு. ஆனா பிரான்சிஸ்கோ சொல்றாரு இல்ல. நாங்க எல்லாம் ஒத்துன்னு தான் வந்தோம். ஆனா இப்ப எங்களுக்கு பொறுமை இல்லை. எங்க பொறுமை எங்க கையை விட்டு போயிடுச்சு.
[8:29]எங்களுக்கு எல்லாருக்குமே இப்ப எங்க குடும்பத்துக்கிட்ட போய் ஆகணும். கப்பலை திருப்பியே ஆகணும் அப்படின்றாங்க. ஆனா கொலம்பஸ் அவங்கள எல்லாம் பார்த்து பயப்படுற மாதிரி இல்லை.
[8:42]அவர் தைரியமா நிக்கிறாரு. அவர் வந்து நிக்கிற விதத்திலயும் பேசுறதுலயும் நமக்கு தெரிஞ்சிடுது. நான் தான் உங்க அதிகாரி. நான் சொல்றது கேட்டுதான் நீங்கலாம் நடக்கணும்ன்ற மாதிரிதான் அவர் இருக்காரு. சில சேலர்ஸ் வந்து அவர் கிட்ட போய் அவரை தாக்குறதுக்கு தயார ஆகறாங்க. ஆனா பெப்பி வந்து நடுவுல நின்னு கொலம்பஸ் கிட்ட அவங்க போக முடியாம தடுத்துறாரு. இதை பார்த்த உடனே கொலம்பஸ் வந்து ரொம்பவும் ரொம்ப எமோஷனலாறாரு. எமோஷனல் ஆகி மனித இனம் இன்னைக்கு வரைக்கும் எப்படி இந்த உலகத்துல தலைச்சிருக்குன்றதை பத்தி ஒரு பேச்சு கொடுக்கிறாரு. அவர் என்ன சொல்றாருன்னா இந்த உலகத்துல எல்லாமே டெம்பரரிதான். மனுஷன் மட்டும் தான் நிலையா வாழ்வான். அவனுடைய கனவுகள் மட்டும் தான் இங்க வாழும் அப்படின்னு பேசுறாரு. அவருடைய பேச்சை கேட்ட உடனே சேலர்ஸ்க்கு எல்லாம் ரொம்ப கில்ட்டியா ஆயிடுது. நம்ம தவறா வந்து நினைச்சிட்டோம் இவரை. இவருடைய எண்ணங்கள் வந்து ரொம்ப உயர்ந்தது அப்படின்னு நினைச்சுட்டு அவங்க திரும்பி அவங்களுடைய வேலையை பார்க்க போறாங்க. அப்ப கொலம்பஸ் சொல்றாரு நான் பேசிட்டே இருக்கும் போது ஒரு ரெண்டு நிமிஷத்துக்கு முன்னாடி தூரத்துல ஒரு எதையோ ஒன்னு பார்த்தேன் அப்படின்னு சொல்லிட்டு ஒரு இடத்தை காட்டுறாரு. அவங்க அங்கேயே பார்த்துட்டு இருக்கும்போது திரும்பி அந்த இடத்துல இருந்து ஒரு வெளிச்சம் வருது. வெளிச்சம்னா அந்த இடத்துல நிலம் இருக்குன்னு அர்த்தம். இத வந்து மத்தவங்களும் பாக்குறாங்க. பார்த்த உடனே அவங்களுக்கு ரொம்ப சந்தோஷமா ஆயிடுது. ஏன்னா ரெண்டு மாசமா அவங்க மேற்கொண்ட பயணம் வெற்றி அடைஞ்சிடுச்சு. அவங்க ஒரு நிலப்பகுதியை பார்த்துட்டாங்க. அதனால அவங்களுடைய பயணம் வந்து வெற்றி அடைஞ்சிடுச்சு. எல்லாரும் ஓனு சத்தம் போட்டு அவங்க சந்தோஷத்தை வெளிப்படுத்துறாங்க. அதே மாதிரி டிராமாவும் வந்து கொலம்பஸ் எல்லாருக்கும் ஆர்டர் கொடுக்கிற மாதிரி மாறி அதோட முடியுது. இந்த டிஸ்கவரின்ற பிளே வந்து கொலம்பஸ மேன் ஆஃப் டிஸ்கவரியா காட்டுது. அவர் வந்து நிலத்தை மாத்திரம் கண்டுபிடிக்கல. அவர் நிறைய விஷயங்களையும் பத்தியும் வந்து அவர் வெளியே சொல்லி இருக்காரு. அவர் என்ன சொல்லி இருக்காருன்னா ஒவ்வொருத்தவங்களுக்கும் ஒவ்வொரு எண்ணம் இருக்கணும். ஒரு விஷன் இருக்கணும். அதை நோக்கி அவங்க பயண பண்ணனும். மத்தவங்களுடைய சப்போர்ட்டிலேயே அவங்க வாழக்கூடாது. அதே மாதிரி இந்த டிராமால பார்த்தீங்கன்னா லாயல்டின்றது இந்த சீவிட்ஸ் மாதிரிதான். அது வந்து ஆரம்ப காலத்துல பார்த்தீங்கன்னா டிசிப்ளினா இருந்த மாதிரி இருந்தாலும் கொஞ்ச நேரத்துல பலூன் மாதிரி வெடிச்சு போயிடும். கடைசி வரைக்கும் மனுஷன் கிட்ட இருக்கக்கூடியது நம்பிக்கை ஒண்ணுதான். அதே மாதிரி கொலம்பஸ்ல பார்த்தீங்கன்னா கடைசி வரைக்கும் அவர் தைரியசாலிதான் இருக்காரு. அது மாத்திரம் இல்லாம அவர் ஒரு வெற்றியை கூட கடவுளோட ஆசீர்வாதமா தான் சொல்றாரே தவிர தன்னோட வெற்றியா அவர் சொல்ற மாதிரி இந்த டிராமால காட்டல. இது ரொம்ப வந்து சக்சஸ்ஃபுல்லா ஓடுன ஒரு டிராமா. ஹெர்மனுக்கு வந்து ரொம்ப பேர் கொடுத்த ஒரு டிராமா. உங்களுக்கு இதை பத்தி வேற எதாவது சொல்லணும்னு நினைச்சீங்கன்னா கீழ கமெண்ட் பாக்ஸ்ல எழுதுங்க. இந்த வீடியோவை லைக் பண்ணுங்க, உங்க பிரண்ட்ஸோட ஷேர் பண்ணுங்க. சப்ஸ்கிரைப் பண்ணாதவங்களாம் ப்ளீஸ் சப்ஸ்கிரைப் பண்ணுங்க. நன்றி.



