Thumbnail for உலகம் முழுக்க வழிபடப்படும் நம் தமிழ் கடவுள் முருகனின் வரலாறு | Murugan History in Tamil by Deep Talks Tamil

உலகம் முழுக்க வழிபடப்படும் நம் தமிழ் கடவுள் முருகனின் வரலாறு | Murugan History in Tamil

Deep Talks Tamil

17m 7s1,993 words~10 min read
YouTube auto captions
Transcript source

YouTube auto captions

This transcript was extracted from YouTube's auto-generated caption track. The transcript below is server-rendered so it can be read, searched, cited, and shared without opening the original YouTube player.

Timestamped outline
Pull quotes
[0:20]உலகத்தின் எந்த கோடியில் தமிழன் இருந்தாலும் நமக்காக என்றும் இவன் இருப்பான், நம்மை காப்பாற்றான் என்ற ஒரு நம்பிக்கை கந்தன் இவன்.
[0:20]தமிழைப் போல் என்றென்றும் இளமை குறையாமல் இருக்கும் குமரனிவன் இவனின் பெயரைக் கேட்டாலே நம் உடம்புக்குள்ளே ஒரு புத்துணர்ச்சியை பரவச் செய்யும் சேயோன் இவன்.
[0:43]இதுவரை நீங்கள் கேள்விப்படாத பல தகவல்களோடு நம் முருகனின் வரலாற்றை கேட்பதற்கு முன்பு Deep Talks Tamil YouTube சேனலை சப்ஸ்கிரைப் செய்து பெல் ஐகானையும் அழுத்தி விடுங்கள்.
[1:14]மூன்று புள்ளிகளைக் கொண்ட இந்த எழுத்தை கோடுகளை வைத்து இணைத்துப்பார்த்தால் நம் முருகனின் ஆயுதமான வேல் கிடைக்கும்.
Use this transcript
Related transcript hubs

[0:14]தமிழக்கும தமிழனுகும் வணக்கம்

[0:20]உலகத்தின் எந்த கோடியில் தமிழன் இருந்தாலும் நமக்காக என்றும் இவன் இருப்பான், நம்மை காப்பாற்றான் என்ற ஒரு நம்பிக்கை கந்தன் இவன். தமிழைப் போல் என்றென்றும் இளமை குறையாமல் இருக்கும் குமரனிவன் இவனின் பெயரைக் கேட்டாலே நம் உடம்புக்குள்ளே ஒரு புத்துணர்ச்சியை பரவச் செய்யும் சேயோன் இவன்.

[0:43]இவனால் தமிழழகா? அல்லது தமிழால் இவனழகா? என்று கேள்வி கேட்க வைக்கும் கடம்பன் இவன். எந்த தெய்வத்திற்கும் இல்லாத தனிநிலை ஆயுதமான வேல் கொண்டவன் இவன். இவன் வேறு அல்ல, நம் தமிழ் வேல் அல்ல, தமிழினத்தின் வேலன், அவன்தான் நம் முருகன். இதுவரை நீங்கள் கேள்விப்படாத பல தகவல்களோடு நம் முருகனின் வரலாற்றை கேட்பதற்கு முன்பு Deep Talks Tamil YouTube சேனலை சப்ஸ்கிரைப் செய்து பெல் ஐகானையும் அழுத்தி விடுங்கள்.

[1:14]தமிழ் எழுத்தில் இருக்கும் ஒரு சிறப்பு எழுத்துதான் நம் ஆயுத எழுத்து. மூன்று புள்ளிகளைக் கொண்ட இந்த எழுத்தை கோடுகளை வைத்து இணைத்துப்பார்த்தால் நம் முருகனின் ஆயுதமான வேல் கிடைக்கும். நம் ஆயுத எழுத்தே அவனுடைய ஆயுதம். அதுமட்டுமல்ல, முருகு கூற்று அண் அதுதான் முருகன். முருகு என்றால் அழகு. முருகு என்ற சொல்லும் மூன்று எழுத்து, தமிழ் என்ற சொல்லும் மூன்று எழுத்து. வல்லினம், மெல்லினம், இடையினம் என்ற மூன்று வகை நம் தமிழ் மொழியில் உண்டு. சொல்லப்போனால் தமிழ் என்ற சொல்லில் த வல்லினம், மீ மெல்லினம், ழ் இடையினம். அதுபோலவே முருகு என்ற சொல்லிலும் மூ மெல்லினம், ரு இடையினம், கு வல்லினம். தமிழே முருகனாகவும் முருகனே தமிழாகவும் பிரிக்க முடியாமல் இருக்கிறார்கள். தமிழகத்தில் வேறு எந்த கடவுளுக்கும் இல்லாத ஒரு சிறப்பு முருகனுக்கு இருக்கிறது. அதுதான் முருகனை தமிழ் கடவுள் என்று அழைப்பது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. தமிழர்கள் ஆதிகாலத்தில் இயற்கையை தங்கள் கடவுளாக வணங்கி வந்தார்கள். பிறகு அதிலிருந்து மேம்பட்டு தங்களை காத்த மக்கலையே இறைவனாக வழிபடத் தொடங்கினார்கள். நம்முடைய ஐந்திணையிலும் இவ்வாறான தெய்வங்கள் இருக்கின்றன. அதில் குறிஞ்சியின் தெய்வம் தான் நம் முருகன். நம் முன்னோர்களின் ஆதி வழிபாடு பெண் தெய்வ வழிபாடு. அந்த பெண் தெய்வம் காட்டிய வழியில் அவள் தந்த ஆயுதத்தை தாங்கி பல வீர தீர செயல்களை செய்தவன் தான் நம் முருகன். அவனே சேயோன், பெண் தெய்வ வழிபாட்டுக்கு அடுத்த நிலையில் மனித சமுதாயம் கண்டறிந்த வழிபாடுதான் நம் முருக வழிபாடு. தமிழ் கடவுள் என்று போற்றப்படும் முருகனின் வடிவத்தை ஆராய்ந்தால் குறிஞ்சி நில மக்களின் கருப்பொருளையும் அவர்களின் வாழ்வியலையும் அறிந்து கொள்ளலாம். அக்கால குறிஞ்சி நில மக்களின் பல வாழ்வியல் கூறுகள் வெளிப்படும். முருகனின் கையில் இருக்கும் அந்த வேல் குறிஞ்சி நிலத்தின் வேட்டு ஆயுதம். அவனுடைய பறவை மயில் அது குறிஞ்சி நில பறவை. அதேபோல் அங்கிருந்த மக்கள் மலை சரிவுகளில் தலையில் பாரத்தை வைத்து தூக்கி செல்ல முடியாது. அதனால் தோல்களில் மூங்கில் குச்சியில் இரண்டு முனைகளில் பாரத்தை கட்டி தூக்கிச் செல்வார்கள். அதுதான் காவடியின் வடிவமானது. முருகன் குறிஞ்சி நிலத்தின் ஆதி குடி தலைவனாகவும் திணை கடவுளாகவும் இருந்ததினால் குறிஞ்சி நிலத்திற்கு தொடர்புடைய வேல், மயில், காவடி என அனைத்தும் அவனது அடையாளமாக மாறிப்போனது. எவையெல்லாம் எந்த தினையின் கருப்பொருளோ அவையெல்லாம் அந்த நில தலைவனுக்கு அடையாளமாக ஆகி வரும். அதுதான் தமிழ் திணை விளக்கம். அதுதான் முருகனின் அடையாளமாகவும் மாறிப்போயின. ஆதியில் முருகன் குறிஞ்சி நிலத்தின் தலைவனாக இருந்து தன் மக்களை காத்து இருக்கிறான். அவர்களை வழி நடத்திருக்கிறான். வேட்டைக்கு சென்று அவர்களது பசியை போக்கி இருக்கிறான். மக்களை காக்கும்போது அல்லது வேட்டையின் போது அவன் வீரமரணமடைந்திருக்க வேண்டும். வீரமரணமடைந்தவர்களுக்கு தமிழக மக்கள் நடுகள் எடுத்து வழிபடுவார்கள். அதுபோலவே முருகனுக்கும் நடுகள் எடுத்து வழிபட்டிருக்க வேண்டும். அதற்கு பிறகு முருகன் முன்னோர்களைப் போலவே தெய்வமாக வழிபடப்பட்டான். இப்படித்தான் நடந்திருக்க வேண்டும். தமிழ் நிலத்தில் பழங்காலத்தில் நடுகள் வணக்கம் தவிர வேறு கடவுள் வழிபாடு எதுவும் இல்லை என்பதுதான் மாங்குடி கிழாரின் கருத்து. அடலருந்துப்பின் என தொடங்கும் புறநானூற்று பாடலில் தெளிவாக அவர் கூறுகிறார். மனம் பொருந்தாத பகைவரன் முன்னே நின்று அவர் படையெடுப்பை தடுத்து ஒளிரும் கொம்புகளுடைய யானைகளை கொன்று தாமும் விழுபுண்பட்டு இறந்தவர்களின் நடுகளை தவிர நெல்லை தூவி வழிபடுவதற்கேற்ற கடவுள்கள் வேறு எதுவும் இல்லை என்பதுதான் அவருடைய கூற்று. நடுக்கல் வழிபாடு தான் தமிழரின் ஆதி வழிபாட்டு முறை. அதன் வழியில் தான் முருகனையும் அவர்கள் தங்கள் முன்னோராக வழிபட்டனர். அவனே குறிஞ்சி நிலத்திற்கு தலைவனாகவும் பிறகு தெய்வமகுமனு ஆனான். குறிஞ்சி நில தலைவனான முருகனுக்கு குறிஞ்சிருக்கும் இடமெல்லாம் கோவில் எடுத்து வழிபட்டனர். அவனுக்கு எடுக்கப்பட்ட கோவில்களுக்கு முருகன் கோட்டம் என்று பெயர். அவனை யார் வேண்டுமானாலும் தொழலாம். அவன் கோவில்களுக்கு யார் வேண்டுமானாலும் உள்ளே போகலாம், தொடலாம், வணங்கலாம். தனிமனித பிறப்பு சார்ந்த கட்டுப்பாடுகள் கிடையாது. அவன் தமிழ் மக்கள் அனைவருக்கும் தெய்வமானான். கந்து வழிபாடு என்பது மரத்தை நட்டு நாம் விரும்பும் எந்த தெய்வத்தையும் வழிபடும் ஒரு மரபாகும். இதனுடைய வளர்ச்சியாக சாலுவன் குப்பத்தில் உள்ள சங்ககால முருகன் கோவிலை சொல்லலாம். 2004 ஆம் ஆண்டு தாக்கிய சுனாமியில் ஒரே ஒரு நல்ல விஷயம் நடந்தது. அதுதான் மணலுக்குள் புதை உண்டு போயிருந்த சங்க காலத்தை சேர்ந்த முருகன் கோட்டத்தை வெளிப்படுத்தியது. அங்கு கல் வடிவில் ஒரு வேல் இருக்கிறது. அதை கந்துவாக முருகனாக வழிபட்டு இருந்திருக்கிறார்கள். அதற்கு பிறகு பல்லவர்கள் காலத்தில் சிற்பக்கலை மென்மையடைந்த பிறகு இப்பொழுது நாம் வழிபடும் முருகனுடைய உருவம் அழகாக கிடைத்திருக்கிறது. இதிலும் பல்லவர்கள் உருவாக்கிய சோமாஸ்கந்தர் சிற்பம் தனி சிறப்புடையது. அது அந்த கால பண்பாட்டுடன் வழக்கத்துடன் கலந்திருக்கிறது. தமிழகத்திற்கு வந்த பௌத்த மற்றும் சமண மதங்களின் தாக்கத்தால் மக்கள் இல்லறத்தை விட்டு துறவரம் அதிகம் மேற்கொண்டார்கள். அவர்களை மீண்டும் இல்லறத்திற்கு இழுக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டது தான் இந்த சோமாஸ்கந்தர் திருவுருவம். அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் சோமாஸ்கந்தர் என்பது சிவன் மற்றும் பார்வதிக்கு நடுவில் சிறுவனாக முருகன் அமைந்திருக்கும் ஒரு திருவுருவம். அந்த திரு வடிவம் மூலம் பல்லவர்கள் மக்களுக்கு சொன்ன செய்தி ஒன்றே ஒன்றுதான். கடவுளே குழந்தை குட்டிகளுடன் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நீங்கள் எதற்காக துறவரம் மேற்கொண்டு வாழ்க்கை இழைக்கிறீர்கள் என்பதுதான். ஆக இவ்வாறுதான் சிவன் பார்வதிக்கு முருகன் பிள்ளையாக உருவாக்கப்பட்டிருக்கும் என்கின்ற ஒரு கூற்றும் இருக்கிறது. முருக வழிபாட்டின் ஆதி தோற்றத்தை யாராலும் வரையறுத்து கூற முடியாது. அந்த அளவிற்கு மனிதகுல தோற்றத்தின் பழமையானது முருக வழிபாடு. முருகன் மற்றும் முருக வழிபாடானது காலம்தோறும் மாறிக்கொண்டே இருக்கிறது. தொடக்கத்தில் குறிஞ்சி நில தெய்வமாக வழிபடப்பட்ட முருகன் பிறகு தமிழ் நிலம் முழுவதும் பெருங்கடவுளாக ஆனான். தொல்காப்பியர் முருகனை சேயோன் என்று சொல்கிறார். சங்க இலக்கியத்தில் குறிஞ்சி நிலமே கூடலுக்குரிய இடமாகும். கூடல் தான் குறிஞ்சி நிலத்தின் கருப்பொருள். தலைவன் திருமணத்திற்கு முன்பு தலைவியுடன் தனிமையில் கூடி மகிழ்ந்து வாழ்கிறான். ஆனால் அதற்கு பிறகு ஏதோ ஒரு சில காரணங்களால் அவனால் தன் தலைவியை தேடி வர முடியாமல் போகிறது. ஆனால் தலைவனை காண வேண்டும் என்ற ஏக்கத்தால் தலைவி உண்ணாமல் உறங்காமல் தவித்துப் போய் உடல் நலிந்து போகிறாள். தன் மகளின் இந்த நிலையை கண்ட தாய் அவளுடைய உடல் நலிவுக்கான காரணத்தை அறிய வேலனை அழைத்து குறி கேட்கிறாள். தன் மகளுக்கு பேய் பிடித்துவிட்டதோ என்று எண்ணிய தாய் பேய் ஓட்ட சொல்கிறாள். வேலனும் முருகனை தனக்குள் இறங்க செய்து அவளுக்கு பேய் ஓட்டுகிறான். தலைவியை இயல்பு நிலைக்கு கொண்டு வருகிறான். இந்த நிகழ்வுக்கு வெறியாடல் என்றும் வெறியாட்டம் என்றும் பெயர். இந்த வெறியாட்டு சடங்கானது மத்திய தரைகடல் தொல் குடிரினிடம் இருப்பதாக கூறுகிறார்கள் அறிஞர்கள். குறிஞ்சி நில தெய்வமான சேயோனின் சாமியாடி தான் இந்த வேலன். இங்கு வேலன் என்பவன் குறிஞ்சி நிலத்திற்கு தெய்வமான சேயோனின் பூசாரி ஆவான். தெய்வமேறி ஆடல் என்பது மந்திர சமய சடங்குகளில் ஒன்றாகும். இன்றைக்கும் தொடரும் இந்த நடைமுறை மனிதன் தன் வாழ்வில் தெய்வம் என்ற ஒன்றை கண்டுபிடித்த காலத்தில் இருந்து தொடர்ந்து வருகிறது. ஆக முருக வழிபாடானது ஆதிகாலத்திலிருந்து நம்மிடையே இருந்து வரும் ஒரு வழக்கம் என்பது உறுதியாகிறது. சங்க காலத்தின் இறுதி காலத்தில் தான் தமிழகத்தில் படையெடுத்த பிற மதங்களினால் முருகன் அதிகம் தத்தெடுக்கப்பட்டான். சங்க இலக்கியங்கள் சிலவற்றிலும் அது எதிரொலித்திருக்கிறது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. தமிழக மக்கள் அதிகம் வழிபடும் முருகன் தன் மதத்திலும் ஒருவன் என்று கூறினால் தான் மக்கள் அந்த புற மதங்களை பின்பற்ற ஆரம்பிப்பார்கள். அவ்வளவு ஏன் நம் நாட்டில் முருகனுக்கு என்றே ஒரு மதம் இருந்தது. ஆதிசங்கரர் சுமார் கிபி எட்டாம் நூற்றாண்டில் பல மதங்களை தள்ளி இந்து மதத்தின் தூண்கள் என்று கருதப்படும் ஆறு மதங்களை உணர்த்தி பக்தியின் அடிப்படையில் வழிபாடுகளை அமைத்து தந்தார். அந்த ஆறு மதத்தில் முருகனுக்கு என்றே ஒரு மதம் இருந்தது. அதுதான் கௌமாரம். முருகனையே பெரும் தெய்வமாக கொண்ட மதம் அது. தமிழ் நிலத்தில் மட்டுமல்ல ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு மதத்திலும் ஒவ்வொரு நாட்டிலும் வேறு வேறு பெயரால் முருகன் வணங்கப்பட்டிருக்கிறான். தமிழ் நிலத்தில் முருகனை கந்தன் என்று சொல்லி இருக்கிறார்கள். அதாவது கந்து என்பது கயிறு, கோல், வரம்பு, தூண் ஆகியவற்றை குறிக்கும் ஒரு சொல்லாகும். தன்னை வணங்குபவர்களை கட்டமைத்து காக்கும் கயிறு, கோல், தூண், வரம்பு போல இருந்து காப்பவனாக இருப்பதால் கந்த போன்ற தன்மையுடைய முருகன் கந்தன் என்று அழைக்கப்பட்டான். தமிழ்நாட்டுக்கே உரிய தனி கடவுளாக விளங்கி வந்த இந்த முருகன், இந்த கந்தன் காலப்போக்கில் தங்களுடைய கடவுளாக வட இந்தியர்கள் சித்தரிக்க முயன்றதன் விளைவாக முருகனுடைய பெயர்களிலும் முருக வழிபாட்டு முறைகளிலும் பல மாற்றங்களை செய்தார்கள். அந்த மாற்றங்கள் ஒன்றுதான் கந்தன் என்ற தூய தமிழ் பெயரை ஸ்கந்தன் என்று சமஸ்கிருத பெயரில் மாற்றினார்கள். ஆரியர்கள் உருவாக்கிய ஸ்கந்தனின் வரலாற்றில் அவனுக்கு தாய் கிடையாது, மனைவி கிடையாது. வேதங்களில் சொல்லப்படாத நம் தமிழ் முருகனை புராண கதைகளின் வழியாக சுப்பிரமணியன் என்று சொன்னார்கள். ஏன் அவ்வாறு செய்தார்கள் தெரியுமா? வைதீக மதம் பௌத்த சமணங்களுக்கு போட்டியாக பரவத் தொடங்கும் பொழுது மக்களின் ஆதரவு தேவை என்பதால் அதிகமான மக்கள் வழிபடும் முருகன் மேலேயே புதிய புராண கதைகளை ஜோடித்து ஆறு தலை, 12 கை என்று புது உருவம் கொடுத்தார்கள். ஆரியர்களின் கற்பனை கடவுள் வடிவத்தை தமிழர்களின் முருகன் மேல் திணித்து விட்டால் எது பழையது, எது புதியது என்று கண்டுபிடிக்க முடியாது. பண்பாட்டை சிதைக்க ஆரியர்கள் காலம் காலமாக பின்பற்றும் தந்திரம் இது. ஆனால் தமிழகத்தில் வணங்கப்படும் முருகனின் வரலாறு முற்றிலும் வேறுபட்டது. முருகன் தன் காதலி வள்ளியை உயிருக்கு உயிராக காதலித்தான். அவளுடைய விருப்பத்துடன் அவளை திருமணம் செய்து கொண்டான். ஆனால் ஆரியர்களின் புராண கதைகளில் அசுரர்களை தோற்கடித்ததால் சுப்பிரமணியனுக்கு வெற்றி பரிசாக தெய்வானையை இந்திரன் கொடுத்திருப்பான். முருகன் காதலித்து கைப்பிடித்த வள்ளி எங்கே, வெற்றி பரிசாக கொடுக்கப்பட்ட தெய்வானை எங்கே? ஆனால் இருவரும் எந்த புள்ளியில் இணைந்தார்கள் தெரியுமா? அதுதான் Survival of the Fittest தகுந்தன தப்பிப் பிழைக்கும். சமணம், பௌத்தம் செழிப்பாக வளர்ந்ததால் வேதத்தை முதன்மையாக கொண்ட ஆரியர்களுடைய வைதீகம் வீழ்ச்சுர ஆரம்பித்தது. வீழ்ச்சியிலிருந்து எப்படி தற்காத்துக் கொள்வது என்று அவர்கள் நினைத்ததுதான் தொல்குடி மக்களால் வழிபடப்பட்ட தெய்வங்களை தம் தெய்வங்களாக ஏற்றுக்கொண்டது வைதீகம். பிறகு பௌத்தம், சமணம் ஆகிய மதங்களுக்கு எதிரான போரிலும் வைதீகர்கள் வெற்றி பெற்றார்கள். ஒரு சில வட இந்திய முருகன் ஆலயங்களில் இன்றும் பெண்களுக்கு அனுமதி கிடையாது. ஆனால் தமிழகத்தில் அப்படி கிடையாது. தமிழர்களுடைய வழிமுறையில் முருகனின் அடையாளம் தமிழர்களின் பண்பாட்டை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. அதாவது பூஜை முறை, வள்ளி முருகன் காதல் கதை, வழிபாட்டு முறை அனைத்தும் தமிழர்களுடைய சாதி அமைப்பற்ற நிலையையும், பெண்களை மதிக்கும் தன்மையையும், காதலை கொண்டாடும் மனநிலையையும் வெளிப்படுத்துகிறது. நம் நாட்டில் மட்டுமல்ல இலங்கையில் கூட முருகன் கதை இருக்கிறது. ஆனால் அதில் கொஞ்சம் வித்தியாசம் இருக்கும். முருகன் வள்ளியை சந்தித்து காதல் கொண்டு அதற்கு பிறகு கரம் பற்றிய இடம் தொண்டை மண்டலத்தில் உள்ள வள்ளி மலை என்று நம் கதை சொல்லும். ஆனால் ஈழ தமிழர்களுடைய நம்பிக்கை வேறு மாதிரியாக இருக்கும். முருகன் பிறந்தது வேண்டுமானால் தமிழ்நாட்டில் இருக்கலாம். ஆனால் வள்ளியை காதலித்து மணம் முடித்தது தற்போதைய இலங்கையில் உள்ள கதிர்காமத்தில் தான் என்பதுதான் அவர்களுடைய நம்பிக்கை. எனவே முருகனை ஈழத்து மாப்பிள்ளை என்று சொல்வார்கள் ஈழத்தமிழர்கள். வேலவனுடைய வேலின் ஒளியாக திகழும் கிராமம் தான் கதிர்காமம் என்கிறார்கள். இலங்கையின் தென்கிழக்கு பகுதியில் அம்மாந்தொட்டையில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது கதிர்காமம் என்கின்ற கிராமம். வேட்டுவக் குலப் பெண்ணான வள்ளியை காதலித்து கரம் பிடித்த இடமாக அது சொல்லப்படுகிறது. இது ஈழ தமிழர்களுடைய ஒரு நம்பிக்கை. அதேபோல் தென்னிந்தியாவில் கேரளாவிலும் முருகனை குலதெய்வமாக முருகன் என்றும் சேயோன் என்றும் இன்றும் வணங்குகிறார்கள். முருகனை எப்படி தமிழகத்தில் சேயோன், ஆறுமுகன், குமரன், குகன், காங்கேன், சரவணண், வேலன், கந்தன், கார்த்திகேயன், சண்முகன், வடிவேலன், சுப்பிரமணியன், மயில்வாகனன், செவ்வேல், கடம்பன், வேலாயுதன், சிங்கார வேலன், ஆண்டியப்பன், கந்தசாமி, செந்தில்நாதன், வேந்தன், மலைஅரசன், மலைவேந்தன் போன்ற பெயர்களால் அன்போடு தமிழர்கள் அழைக்கிறார்களோ, அதேபோல் முருகனை வேறு பெயரில் உலகில் பல நாடுகளில் வேற்று மதத்தினரும் அவரவருடைய மொழிகளில் வணங்கி வருகிறார்கள். அதில் முக்கியமானவர்கள் புத்த மதத்தினர். வட இந்தியாவில் முருகனை ஸ்கந்தன் கார்த்திகேயன் என்றும், புத்த மதத்தில் போதி சத்துவர் என்றும், இலங்கையில் கதிர்காமர் என்றும், சீனாவில் வீத்துவோ தியான், வீத்துவோ பூசான் என்றும், ஜப்பானில் இதாத்தன் என்றும், கொரியாவில் வித சேயோன் என்றும், மங்கோலியாவில் அர்வன் கோயோன் நூத் என்றும், தாய்லாந்தில் பிராவத் போதி சத்துவா என்றும், திபெத்தில் தோங் துரக் என்றும், வியட்நாமில் விதா போதத் என்றும் முருகனை பல பெயர்களில் வணங்குகிறார்கள். முருகனை பௌத்தர்கள் தங்கள் காவல் தெய்வமாக வணங்குகிறார்கள். பௌத்தம் தமிழ்நாட்டில் பரவிய பொழுது பல்லவர்களின் ஆதரவு பெற்று விளங்கியது. பல்லவ மன்னர்கள் முதலில் குகை கோவில்களை உருவாக்கினர். பௌத்த மத கடவுள் இந்திரனுக்கு கோயில் எழுப்பினர். இந்திரன் இந்து மதத்தில் மட்டுமல்ல பௌத்த மதத்திலும் தேவர்களுடைய தலைவனாக வணங்கப்படுகிறான் என்பது குறிப்பிடத்தக்கது. பௌத்தர்கள் கந்தனை தேவர்களின் காவலனாக கருதுகிறார்கள். ஸ்கந்தனுக்கு தேவேந்திரன் தனது வஜ்ராயுதத்தை கொடுத்து அசுரர்களை கொல்வதற்கான அந்த படையின் தளபதியாக அதாவது சேனாதிபதியாக ஸ்கந்தனை இந்திரன் வைத்திருந்தான் என்று பௌத்த இலக்கியங்கள் சொல்கின்றன. தேவர்களை காத்து அசுரர்களை அழிக்கும் பணியில் உதவிய மாவீரன் என்பதால் ஸ்கந்தனுக்கு இந்திரன் தன் மகளை திருமணம் பரிசாக கொடுத்து தன் அருகிலேயே வைத்துக்கொண்டான் என்கிறது அந்த இலக்கியங்கள். வடநாட்டிலிருந்து பௌத்த சமயம் தமிழகத்திற்கு வந்து செழிப்பாக வளர்ந்து காஞ்சிபுரத்தில் இருந்த போதிதர்மர் வழியாக சீனா, ஜப்பான் என பரவிய பொழுது மண்ணின் கடவுளும் சேர்ந்தே பயணப்பட்டது. அவ்வாறு அந்த பயணத்தில் சரஸ்வதி, பிரம்மன், கணபதி ஆகியோருடன் நம் முருகனான ஸ்கந்தனும் இருந்தான். தேவ சேனாதிபதி ஸ்கந்தனுக்கு சீனாவில் வியோதுவோ என்று ஒரு பெயர் இருக்கிறது. ஜப்பானில் இதாத்தன் என்று ஒரு பெயரும் இருக்கிறது. அந்த இடத்திலும் தேவேந்திரனின் படைத்தளபதியே அவன் என்று சொல்கிறார்கள். தேவேந்திரன் அளித்த வஜ்ராயுதத்தை படுக்கை வசமாக தன் திருக்கரங்களில் ஏந்தி இருப்பான் அந்த முருகன். புத்தர் கோவில்களில் புத்தருக்கு நேரே ஸ்கந்தனுக்கு சன்னதி உண்டு. சீனாவில் கந்தன் புத்த வணங்களில் காவல் தெய்வமாக இருக்கிறான். புத்த தர்மத்தை தனக்கு பிறகு ஆசை இல்லாமல் பாதுகாக்கும்படி புத்தர் இவனுக்கு ஆணையிட்டதாக ஒரு வரலாறு இருக்கிறது. பௌத்த கடவுளான காவல் தெய்வம் என்ற ஒரு கருத்து சீனா, ஜப்பானில் இருப்பது போல கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் இருக்கிறது. இங்கு சுப்பிரமணியன் என்ற பெயரில் நாகங்கள் சூழ காணப்படும் முருகன் புதையின் காவலனாக இருக்கிறான். இங்கு ஸ்கந்தன் என்றும் சுப்பிரமணியன் என்று கூறப்படுவது எல்லாமே நம் முருகன் தான். இவ்வாறு உலகெங்கும் முருகனுக்கு ஓராயிரம் தனித்தனி கதைகள் இருக்கின்றன. தமிழ் சங்க இலக்கியங்களில் கடவுள் பற்றிய குறிப்புகள் ஆங்காங்கே கூறப்பட்டாலும் கடவுளை பாட்டுடைத் தலைவனாக கொண்டு பாடப்பட்ட முதல் இலக்கியம் திருமுருகாற்றுப்படைதான். ஆற்றுப்படை என்பது மக்கள் மிகுந்த மன வருத்தத்தில் இருக்கும் பொழுது ஆறுதலுக்காக தலைவனையோ அல்லது அரசனையோ தேடிச் செல்வது. இதேபோல் வறுமையில் வாழும் புலவர்கள் மற்றும் பாணர்களை இந்த அரசரிடம் செல்லுங்கள் உங்களுக்கு வேண்டியவை அனைத்தும் கிடைக்கும் என்று பொருநர் ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை முதலிய ஆற்றுப்படை நூல்கள் எழுதப்பட்டன. அதேபோல் ஆறுதலுக்காக முருகனை தேடிச் செல்லுங்கள். அவன் நம்முடைய துன்பங்கள் மற்றும் கவலைகள் அனைத்தையும் போக்குவான் என்று பாடுவதுதான் திருமுருகாற்றுப்படை. இதையெல்லாம் தாண்டி முருகன் தமிழ் கடவுள் தான் என்பதை இந்த ஒரு பாடல் வழியாக அறியலாம். அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும் வெஞ்சமரில் அஞ்சலென வேல் தோன்றும் நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும் முருகா என்றோதுவர் முன் - திருமுருகாற்றுப்படை அதுமட்டுமல்ல சிலப்பதிகாரத்தில் கூட தமிழ் கடவுள் முருகன் போற்றப்பட்டிருக்கிறான். திருமுருகாற்றுப்படை கிமு இரண்டாம் நூற்றாண்டு வாக்கில் எழுதப்பட்டது என்று சொல்கிறார்கள். அப்படி பார்த்தால் முருக வழிபாடு என்பது அதற்கு முன்பாலேயே எத்தனையோ ஆண்டுகளாக வழக்கில் இருந்திருக்க வேண்டும். ஆக இதை வைத்து பார்க்கும்பொழுது முருகன் என்பவன் தமிழ் கடவுள் என்பது உறுதியாகிறது. இப்படி வரலாற்றில் பின்னோக்கி சென்று தமிழர்களுடைய பாரம்பரியம், பண்பாடு, பழக்கவழக்கங்கள், அக்காலத்தில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகள் அனைத்தையும் முருகனுடைய வரலாற்றோடு தொடர்புபடுத்தி பார்த்தால் முருகன் தமிழ் கடவுள் என்பது தெளிவாக புரியும். தமிழ் முருகன், தமிழ் திருமாள், தமிழ் கொற்றவை தொன்மங்கள் யாவும் குறிஞ்சி, முல்லை மற்றும் பாலைநில மக்களை ஒட்டியே இருக்கும். நிலத்தின் ஆயுதங்களே அந்த தெய்வத்தின் ஆயுதங்கள். தமிழ் கடவுளான முருகனின் தொன்மங்கள் அனைத்தும் இயற்கையை அடிப்படையாக கொண்டுதான் இருக்கும். அதில் வடநாட்டவர் கூறுவதை ஒன்று மாயாஜாலங்கள் எதுவும் இருக்காது. நாம் இயற்கையில் ஊன்றி தேட தேட அதில் உள்ள பொய், புனைவுகள் அனைத்தும் விலகி உண்மை முருகனை அறியலாம். ஊன்றி தேடினால் அனைத்தும் நமக்கு கிட்டும். அதற்கு தமிழ் திருமாளும், தமிழ் முருகனும் நம் தமிழ் கொற்றவையும் உதவுவார்கள். இந்த பதிவு இதோடு முடியப்போவது அல்ல. முருகனைப் பற்றிய பல குறிப்புகள் எப்படி நம் தமிழ்நாட்டில் இருக்கிறதோ அதேபோல் வடநாட்டில் ஸ்கந்தனாக வழிபடப்படும் நம் முருகனைப் பற்றிய பல வரலாற்று குறிப்புகள் அங்கே இருக்கின்றன. அவை அனைத்தும் புராண கதைகளோடு முடிச்சிட்டு இருந்தாலும் அவன் தமிழ் கடவுள் என்பதற்கு பல ஆதாரங்கள் இருக்கின்றன. அந்த ஆதாரங்கள் என்னென்ன? அது இந்தியாவில் எங்கெங்கே இருக்கிறது என்கின்ற விஷயம் எல்லாம் அடுத்த பதிவில் பார்ப்போம் நண்பர்களே. முருகனை பிடிக்கும் உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் இந்த பதிவை பகிருங்கள். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் செய்து சப்ஸ்கிரைப் செய்யுங்கள். அதுமட்டுமல்ல உங்களுக்கு மிகவும் பிடித்த முருகன் கோவில் எது என்று கீழே கமெண்ட் பாக்ஸில் சொல்லுங்கள். பல முக்கியமான விஷயத்தை தெரிந்து கொள்ள Deep Talks Tamil Instagram பக்கத்தை பின்தொடருங்கள். Deep Talks Tamil நான் உங்கள் தீபன்.

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript