[0:00]எதற்காக சொல்லுகிறேன் என்றால் நமது ஆசையும் ஆவலும் காதலும் எவ்வளவு இருக்கிறதோ அதற்கு தக்க அல்லாஹ் அங்கே நமக்கு அமல் செய்கிற பாக்கியத்தை தந்திடுவான். எனவே இது ஒரு டூராக நினைச்சிடக்கூடாது. இது ஒரு ஜாலியான சப்பரா நினைச்சிடக்கூடாது. இது கஷ்டங்கள் பலதையும் எடுத்துக்கொண்டு கையில் உள்ள பணத்தையும் செலவு செய்து ரப்பினுடைய அருளை பெறுகின்ற ஒரு சபாரி இது. அப்படிப்பட்ட சபார் என்பதை மனதில் வைத்து தான் செல்லணும். இந்த சபார்ல முக்கியமான சில செய்திகளை எல்லாம் உங்களுக்கு சொல்றேன். ஒவ்வொரு முக்கியமான சின்ன சின்ன செய்திகளை சொல்லிடுறேன். பிறகு சட்டங்களை சொல்லி முடிச்சிடுறேன். இப்போ காபாவில் ரொம்ப முக்கியமானது என்னங்க? நாம உள்ள போற நேரத்துல இஹராம் உட உடுத்துறோம். இந்த இஹராம் இருக்கிறதே இஹராம் என்பது வேறு இஹராமுடைய உடை என்பது வேறு. இந்த இஹராமுடைய உடை என்பது தான் அந்த வெண்ணிற உடை மேலேயும் கீழேயும் உடுத்துகிற அந்த உடை. ஆனால் இஹராம் என்பது என்ன தெரியுங்களா? அவர் குளிச்சு இஹராமுடைய உடுத்தி இரண்டு ரக்காத்து தொழுது நியத்தை வச்சு தல்வியா சொன்ன மாத்திரத்துல அவர் மீது சில விஷயங்கள் கடமையாகும். உதாரணமா அவரு அத்தர் தடவக்கூடாது. முடி கலையக்கூடாது. நெகம் வெட்டக்கூடாது. அருவருப்பா பேசக்கூடாது. யாட்டியும் சண்டை சச்சரவு செய்யக்கூடாது. விவாதம் செய்யக்கூடாது. விரசமா பேசிடக்கூடாது தன் மனைவியா இருந்தா கூட. இந்த மாதிரி இருக்க வேண்டிய இந்த கட்டுப்பாடுக்கு பேர் தாங்க இஹராம். அந்த கட்டுப்பாடுக்கு பிறகு தான் இஹராம். நான் முடுத்து இருக்கிற உடை இஹராமுடைய உடை. ஆனால் அந்த கட்டுப்பாடு அந்த இஹராமுடைய உடைக்கு அல்லாஹ் தருகின்றார். இனி அடுத்தது என்ன தெரியுங்களா? தல்வியா. அந்த தல்வியாவை எழுதி வச்சு மனப்பாடம் செஞ்சு நல்ல முறையில சொல்றதுக்கான பிராக்டிஸ் எடுத்துக்கணும். அந்த தல்வியாவுடைய நிலை என்ன? அல்லாஹ் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களுக்கு காபாவை கட்டச் சொல்லி உத்தரவிடுகிறார். எப்பொழுது ஆதம் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்கள் கட்டிய காபா இருக்கிறதே அது நூஹ் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்கள் வரை நல்லா இருந்துச்சு. பிறகு நூஹ் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களுடைய காலத்துல நடந்த நிகழ்ந்த அந்த வெள்ளப்பெருக்கத்தில காபா காபா இடிக்கப்பட்டு கரைஞ்சிருச்சு மண்ணோடு மண்ணாக கரைஞ்சிருச்சு. ஆனால் அந்த வடிவம் மட்டும் இருந்துச்சு. கொஞ்சம் மணல் திட்டாக கொஞ்சம் மேடாக அந்த பக்கம் மட்டும் இருந்துச்சு. அப்ப நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம்ட்ட அல்லாஹ் சொல்லல கட்டுங்கன்னு சொல்லி. அதுக்கு பிறகு வந்த நபிமார்கள்டையும் சொல்லல அல்லாஹ் கட்டச் சொல்லி. ஒன்பதாவது தலைமுறையில ஹஜ்ரத் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களுக்கு உத்தரவிட்டான் அதை கட்டுங்கன்னு சொல்லி. அப்ப காபத்துல்லாவை கட்டி முடிச்சாங்க ஹஜ்ரத் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் தன்னுடைய மகன் இஸ்மாயீலையும் சேர்த்துக்கொண்டு. அப்பொழுது இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாத்துக்கு 100 வயசு ஹஜ்ரத் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாத்துக்கு 30 வயசு. அப்ப கார சட்டி சுமந்துகிட்டு வந்தாங்க. கல்லை தூக்கிகிட்டு வந்தாங்க இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம். ஒவ்வொன்னா எடுத்து வச்சு காபாவை கட்டி முடிச்சாங்க. காபாவை கட்டி முடிச்சவுடனே ரப்ப்ட்ட சொன்னாங்க நீ கட்ட சொன்னதை நான் கட்டிட்டேன். ஆனால் நீ நினைச்ச மாதிரி கட்டுறேனான்னு எனக்கு தெரியல. அதனால நீ ஏற்றுக்கொள் ரப்பே கொஞ்சம் குற்றங்குறைகள் இருந்தா நீ நினைச்ச மாதிரி இல்லைனா நீ மன்னிச்சுக்கிற ரப்பே நீ ஏற்றுக்கொள் ரப்பே. ரப்பனா தகப்பல் மின்னா இன்னக்க அந்த சமீல் அலிம் துஆ செஞ்சாங்க. துஆ செய்தவிட்டு பிறகு சொன்னாங்க யா அல்லாஹ் எனக்கு என் சந்ததிகளுக்கெல்லாம் இங்க எப்படி அமல் செய்யணும் போக்கு வரத்தை எல்லாம் கற்றுக்கொடு ரப்பேன்னு கேட்டாங்க. பிறகு இந்த பள்ளிவாசலை நான் கட்டிவிட்டேன் காபாவை இதற்கு ஒரு நல்லதொரு இமாமை நீ கொடுன்னு கேட்டாங்க. ஒரு நல்லதொரு இமாமை கொடு. அந்த இமாம் உன்னுடைய வேதத்தை வாசித்து மக்களிடத்தில் காட்டணும். அதனுடைய அர்த்தத்தை போதிக்கணும். அதனுடைய விளக்கத்தை சொல்லணும். அதனுடைய நுணுக்கத்தையும் சொல்லணும்.
[3:55]அப்படிப்பட்ட ஒரு இமாம் உள்ளங்களை சுத்தமும் படுத்தணும் அப்படி ஒரு குவாலிட்டியான ஒரு இமாமை கொடுன்னு கேட்டாங்க. அந்த துஆ தான் நான் வந்துருக்கேன்னு சொன்னாங்க ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். இப்ப இவ்வளவு முடிஞ்ச பிறகு ஒரு மனித சஞ்சாரம் இல்லாத பொட்டல் பூமியாக இருந்தது. ஒரு பசுமையும் இல்லாத அந்த பூமியில அல்லாஹ் கிட்ட கேட்டாங்க கட்டச் சொல்லிட்டேன் இனி நான் என்ன செய்யணும்னு கேட்டபோது அல்லாஹ் சொன்னான் நீங்க மக்களுக்கு அழைப்பு கொடுங்க. வந்து அவங்க ஹஜ் செய்வார்கள் ஹஜ் கடமை என்று சொல்லுங்க. யா அல்லாஹ் இங்க நின்டுகிட்டு சொன்னா எத்தனை பேருக்கு போய் சேரும். அதுவும் பொட்டல் பூமியில பாலைவன பூமியில யாருக்கு நான் சொல்றது சொல்லுவது தான் உங்க வேலை. அதை கொண்டு போய் சேர்க்கிறது என் வேலை நல்லா சொன்னான். உடனே இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்கள். அல்லாஹ் ஜல்ல ஷானஹூத்தாலா ஆழமுள்ள அருவாகில் இருக்கக்கூடிய அத்தனை அணுக்களையும் கேட்க வச்சான். அனைத்தையும் லப்பை சொல்ல வச்சான். இந்த உலகத்தில் உள்ள அத்தனையுமே லப்பை லப்பை லப்பை லப்பை லப்பை லப்பை லப்பை லப்பை என்று எல்லாரும் சொன்னாங்க. யார் யாருக்கெல்லாம் சொல்ற நசீப் அல்லாஹ் தந்தா அந்த நசீப் உள்ளவர்கள்ல நீங்க எல்லாம் வந்து இருக்கீங்க. நீங்க எல்லாம் லப்பை சொன்னவங்க தான். அதனால தான் அல்லாஹ் நசீப் ஆக்கி இருக்கிறான். அல்லாஹ் கடைசி வரைக்கும் நசீப் ஆக்கி கடைசி வரைக்கும் முழுமைப்படுத்தி நீங்கள் திரும்பி வருகின்ற வரையிலும் அந்த லப்பைக்குனுடைய அனைத்தையும் அல்லாஹ் உங்களுக்கு நசீப் ஆக்கி தருவானாக. ஏனென்றால் அந்த லப்பை சொன்னவர்களுக்கு தான் நசீப். சரி அந்த லப்பைக்கு ஒரு தடவை சொன்னா ஒரு தடவை நசீப். ஒருத்தர் ரெண்டு தடவை சொன்னா ரெண்டு தடவை நசீப். சஹாபிகள் கேட்டாங்க ஒருத்தர் பல தடவை சொன்னா பல தடவை நசீப். அப்படி எல்லாம் எத்தனையோ பேர் இருக்கிறாங்க ஹஜ்ரத் பாவா ஆதம் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் 40 ஹஜ் செய்தாங்க. ஏன் நமது காலத்திலே நமக்கு தெரிந்த எங்களோடு மிக நெருக்கமாக இருக்கிற எத்தனையோ ஆலிம்கள் கிட்டத்தட்ட 30 ஹஜ் செய்தவர்கள் இருக்கிறார்கள். 45 ஹஜ்கள் செய்தவர்கள் இருக்கிறார்கள். அப்ப இதெல்லாம் அவங்க லப்பை லப்பை லப்பை லப்பை லப்பை லப்பை லப்பை லப்பைனு சொல்லி இருப்பாங்க போல தெரியுது. அல்லாஹ் அவ்வளவு நசீப் ஆக்கினான். இன்னும் நம்முடைய தகுதியில எத்தனை தடவை சொன்னோம்னு நமக்கு தெரியல. முதல் தடவை சொன்னதுக்காக அல்லாஹ் நசீப் ஆக்கி இருக்கிறான். இன்னும் நம்முடைய தக்தீரில் பல தடவை சொல்லி இருந்தோம்னு சொன்னா பல தடவை அல்லாஹ் நசீப் ஆக்கிடுவான். அப்ப அப்படி லப்பைக்கின்னு சொன்னது தான் தல்வியா என்று சொல்லுகிறோம். லப்பைக் அல்லாஹ் ஹும்ம லப்பைக் லப்பைக் லா ஷரீக்க லக்க லப்பைக் இன்னல் ஹம்த வன்னா ஹுமத்த லக்கவல் முல்க் லா ஷரீக்க ஒருவர கேட்டார். இதை நான் தர்ஜூமா சொன்னால் தல்வியா ஆகுமா ஹஜ்ரத் கேட்டார். தர்ஜூமாவெல்லாம் சொல்லக்கூடாது. இப்படித்தான் சொல்லணும். ஏனென்றால் இது ஆலமி தரானா. உலகத்தில் உள்ள அத்தனை பேரும் சைனாவும் இப்படித்தான் சொல்லுவாரு. ஜப்பான்வாசி இந்தத்தான் சொல்லுவாரு. அவர் கருப்பராக இருந்தால் அவரும் சொல்லுவாரு. செப்பராந்தா அவரும் சொல்லுவாரு. துர்க்கியும் இப்படித்தான் சொல்லுவாரு. அத்தனை நபர்களும் ஒரே வார்த்தை எப்படி இருக்கும்னுன்றிங்க அந்த காட்சியை கண்குள்ளா காட்சியா இருக்குங்க. நான் தவாப் செய்துகிட்டு இருக்கிற நேரத்தில பின்னால இருந்து ஒரு அழகான குரல் லப்பைத் திரும்பவும் லப்பை. திரும்பி பார்த்தால் ஒரு சின்ன குட்டி பையன் அவ்வளவு அழகா செஞ்சுக்கிட்டு இருக்கான். அந்த காட்சியை அங்க தான் பார்க்க முடியும். அப்ப அந்த தல்வியா ரொம்ப முக்கியமானது. அந்த தல்வியாவை எழுதி மனப்பாடம் செஞ்சு வச்சுக்கிட்டு அதை நாம சொல்லிக்கிட்டே இருக்கணும் தல்வியாவை. அல்லாமா பிர் ஜுல்ஃபிகார் சாஹிப் நவரல்லாஹு மர்கதஹு அவர்கள் சொல்கிறார்கள். எந்த ஒரு மனிதர் பர்லான தொழுகைக்குப் பிறகு ஒரு தடவை தல்வியாவை சொல்லும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டாரோ அவர் ஹஜ்ஜ செய்யாமல் மரணிக்க மாட்டார். சரி ஹஜ் செய்தவர் தல்வியாவை சொன்னார் ஒவ்வொரு பர்லான தொழுகைக்குப் பிறகு ஒரு தடவை அவர் மீண்டும் மீண்டும் ஹஜ் செய்து கொண்டே இருப்பார். குறைந்தபட்சம் உம்ராவாவது அவருக்கு நசீப் ஆயிட்டே இருக்கும். அவர் மௌத் வரையிலும் அவருக்கு காபாவினுடைய தொடர்பிலேயே இருப்பார் என்று எழுதுறாங்க. அப்ப அந்த அமலை நாம செய்யணும். ஒரு தடவை தல்வியா அதெல்லாம் இன்னையிலிருந்து ஸ்டார்ட் பண்ணிடுறேன். அப்படின்னு சொல்றது தெரியுது. ஆனால் சொல்ல முடியாது நசீப் இருந்தா தான் சொல்ல முடியும். அல்லாஹ் அந்த நசீபை நமக்கு தந்தருள்வானாக. இவ்வளவு நான் சொல்றேன் நானும் ஆசைப்படுறேன் ஒவ்வொரு பர்லான தொழுகைக்கு பிறகும் ஒரு தடவை தல்வியாவை சொல்லிரணும்னு தான் ஆசைப்படுறேன். ஆனால் ஞாபகத்துக்கே வர மாட்டதுங்க. என்னைக்காவது ஒரு நாள் வாரத்துல ஒரு நாள் அல்லது என்னைக்காவது ஒரு நாள் திடீர்னு ஞாபகத்துக்கு வந்து சொல்லியுறேன். ஆனால் தொடர்ந்து சொல்லவே முடிய மாட்டேங்குது. அல்லாஹ் அதற்கும் நசீபை நமக்கு தரணும் அப்பதான் நசீபா. அப்ப இது தல்வியா. இனி அடுத்தது என்னங்க தவாப். ஒவ்வொன்னா சொல்லிட்டு பிறகு சட்டங்களை சுருக்கமா சொல்லி. சட்டம் ரொம்ப சுருக்கமானது. ஏனென்றால் ஹஜ்ஜனுடைய அமல்கள் மிக லேசான அமல். ஹஜ்ஜனுடைய சட்டங்களும் ரொம்ப லேசானது. பயமுறுத்திடுவாங்க சில பேர். அடடா என்னங்க இப்படி பண்ணி போட்டுட்டீங்க முடிஞ்சு போச்சுங்க உங்க ஹஜ்ஜு அல்லல்லா ஹஜ்ஜெல்லாம் ஒன்னு முடிச்சுங்க நீங்க இவ்வளவு செலவு பண்ணிட்டு வந்ததெல்லாம் வீணா போச்சுங்க அப்படின்னு. உண்டேன்னு ஆக்கிருவாங்க அதெல்லாம் ஒண்ணுமே இல்லைங்க. ஹஜ்ஜு ரொம்ப லேசான அமல்ங்க. நாம செய்கிற அமல்களிலேயே மிகச்சிறந்த அமல் ஹஜ்ஜு தான். ஹஜ்ஜுடைய அமலை போல சிறந்த அமல் லேசான அமல் வேற எதுவுமே கிடையாது. வெறும் இடங்கள்ல தங்குறதுதான். முஸ்தலிஃபாவில் தங்குவது, அரஃபாவில் தங்குவது, மினாவில் தங்குவது வெறும் அந்த இடங்கள புனிதா ஸ்தலங்கள்ல தங்கி அங்க நடந்த நிகழ்வுகளை நினைவில கொண்டு வரதுக்கு பிறகு தாங்க ஹஜ்ஜு. அங்க மினாவில் தங்கணும். அந்த ஷைத்தான்களுக்கு கல்லெறியிற போது இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் தான் நினைவில கொண்டு வரணும். இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் தன்னுடைய மகனை ஜபீஹுல்லாஹ் இஸ்மாயில் ஜபீஹுல்லாஹ் அவர்களை அல்லாஹ்வுடைய உத்தரவுக்கு இணங்க அறுக்கச் சென்றபோது தடை செய்தான் அல்லவா ஷைத்தான். என்று இப்படித்தானே என் வாழ்க்கையில நீ தடை பண்றன்னு சொல்லி அந்த எண்ணத்தில அடிக்கணும் அவனை. அங்க அந்த நினைவு வரணும் அதுதான் நோக்கம். பிறகு அரஃபாவில அரஃபால போய் ஹஜ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களை தன்னுடைய மனைவி ஹவ்வாவுடன் அல்லாஹ் இணைத்து வைத்தான். அல்லாஹ் மவுத் வரையிலும் என்னையும் என்னுடைய மனைவியையும் இணைத்து வைப்பாய் ரப்பே. என்னையும் என்னுடைய குடும்பத்தையும் சேர்த்து வைப்பாய் ரப்பே. வயோதிக காலத்தில என்னை பிரித்து விடாதே ரப்பே. என்னுடைய பிள்ளையை கல்யாணம் முடிச்சு கொடுத்திருக்கிறேன். அவங்க ரெண்டு பேருடைய கல்வையும் இணைச்சு வச்சிற ரப்பே என்ன இணைப்புகளை அங்க கேட்கலாம். அதே மாதிரி அந்த அரஃபால வச்சு என்னவை நினைக்கணும்ங்க. எதுக்குங்க அரஃபால போய் தங்க சொல்றான் அல்லாஹ். அந்த அரஃபாவில் வைத்து எதை நினைத்து பார்க்கணும்ங்க? நபி அவர்கள் ஹஜ்ஜத்துல் வதால செஞ்ச பயான் இருக்கு அல்லவா அதை அரஃபால வச்சு நினைக்கணும் இங்க கவனிங்க.
[10:48]அதாவது அரஃபாவில அரஃபாவில வச்சு நபி அவர்கள் அந்த அரஃபா பெருவளியில் வைத்து என்ன பயான் செய்தாங்களோ அதெல்லாம் நினைவுக்கு வரணும். அதனால அல்லாஹ் அரஃபால வச்சு அந்த பயானை வச்சிருப்பாங்க. அந்த பயான் செய்ய வைப்பாங்க அந்த பயானை கேட்கணும். அப்படி கேட்கிற நேரத்தில ஹுசூரே அங்க இருந்து பயான் செய்ற மாதிரி ஒரு உணர்வு ஏற்படணும். இல்லைன்னா அங்க எதுக்கு அல்லாஹ் மினால தங்க சொல்றான். மினாவில வைத்து இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாத்தினுடைய தியாகத்தை நினைத்துப் பார். அரஃபாவில் வைத்து நபி அவர்கள் செய்த பயானை நபி அவர்கள் செய்த குத்துபாவை உனது உனது வாழ்க்கையிலே உள்வாங்கிக்கொள். முஸ்தலிஃபாவிலே தங்கி அந்த இடத்தில் வைத்து மனிதனுக்கு எதுவுமே சொந்தமில்லை. வானத்தை பார்த்த வண்ணம் படுத்திருக்கிறாய். உன் பக்கத்திலே ஒருவர் உனது வலது பக்கத்திலே ஒருவர் எவருக்கும் எதுவுமே சொந்தமில்லை. நான் படுக்குற நேரத்தில கொஞ்சூனு இடா இருந்துச்சு. அதுல முஸ்தலிஃபால இப்படி படுத்திருந்தேன். எனக்கே இடம் இல்ல அந்த இடத்துல. காலையில எந்திருச்சு பார்க்கிறேன் என் பக்கத்தில பயந்த மாதிரி கண்ணம் கரேல்னு உடுத்திட்டு பெரிய ஆளை படுத்துக் கிடக்கிறார். இவர் எப்போ வந்தாரு எப்போ படுத்தாரு. நான் அப்ப நினைச்சேன் யா அல்லாஹ் இவரோடு மனைவி எப்படித்தான் வாங்குறாங்களோ தெரியலையே. ஏனா பயம் இந்த முகத்தை பார்த்தால் பயப்படுற மாதிரி. அப்ப நினைத்து பார்க்கிறோம் அப்படிப்பட்ட இடத்தில எந்த வகையான வித்தியாசம் இல்லாமல். எந்த வகையான உள்ளத்தில் கெட்ட எண்ணம் இல்லாமல் வானத்தை மட்டுமே பார்த்து மேடுபள்ளமான பூமியிலே குத்துகின்ற கல்லுகளுக்கு மேலே ஒருவன் படுத்திருக்கிறான் என்றால் எதுவுமே எனக்கு சொந்தம் இல்லை என் ரப்புதான் எனக்கு என்று அந்த முஸ்தலிஃபால வச்சு நினைவில வரணும். அதுக்காக தான் அந்த முஸ்தலிஃபா. இனி தவாஃப் இருக்க அல்லவா தல்வியாவை சொன்னேன் இஹராம் சொன்னேன். இனி அடுத்து என்ன இருக்கிறது? தவாஃப். இந்த தவாஃபும் மாதிரி ஒரு உயர்ந்த அமல் வேறு எதுவும் கிடையாதுங்க. அந்த தவாஃபிலே வைத்து ஒரு மனிதன் புத்தி சுவாதீனம் இல்லாத ஒரு மனிதனை தவாப் செய்ய வைத்தால் அவனுடைய அறிவு தெளிவாயிடும். ஒரு மனிதன் சிகர் செய்யப்பட்டவனை தவாப் செய்ய வைத்துவிட்டால் சிகர் எல்லாம் நீங்கிடும். அந்த தவாஃபில் வைத்து என்ன துஆ கேட்டாலும் கபூல் ஆயிடும். அந்த மாதிரி இடத்துல ரொம்ப கவனமா இருக்கணும் அந்த தவாப்ல வைத்து. சின்ன சின்ன நோட்டுகள் வச்சிருப்பாங்க. சின்ன சின்ன புக்குகள் வச்சிருப்பாங்க. அதுல முதல் சுற்றில் இது ஓது ரெண்டாவது சுற்றில் இது ஓது மூணாவது வாழ்நாள்ல அரபி வார்த்தையை உச்சரிச்சதே கிடையாது. அவர் கையில புக்க வச்சுக்கிட்டு தப்பும் தவறுமா சொல்லிக்கிட்டு கிடப்பார். வேணவே வேணாம் அந்த கஷ்டத்தை எடுக்காதீங்க. வெறும் சுப்ஹானல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் லா இலாஹ இல்லல்லாஹ் வல்லாஹு அக்பர் லா ஹவ்ல வலா குவத்த இல்லா பில்லாஹில் அலி இல் அழீம் இதைத்தான் நபி அவர்கள் சொல்லிக்கொண்டிருந்தாங்க. சஹாபாக்களும் இதைத்தான் சொல்லிக்கிட்டிருந்தாங்க. நாம புதுசு புதுசா ஓதுறோம்ன்ற பேர்ல அல்லது ஒருத்தர் சொல்லிக் கொடுக்க சொல்லிக் கொடுக்க பின்னால சொல்றாரு. அவர் ஒழுங்கா சொல்றாரு இவர் தப்பு தப்பா சொல்லிக்கிட்டு கிடப்பார். ஏங்க துஆ கபூலாக கிடக்குங்க தப்பு தப்பா சொல்ல வேணாங்க. வெறும் இதை சொன்னா போதுங்க. நாம மனசுல உள்ள எந்த துஆவும் வேணாலும் கேட்கலாம். எல்லாம் துஆவுமே கபூல் ஆயிடும். ஆனால் காபாவை பார்த்துகிட்டே இருக்கக்கூடாது. நபி அவர்கள் காபாவை பார்க்கவே மாட்டார்கள் தலையை கீழே போட்டு தான் தவாப் செய்வார்கள். ஏனென்றால் அந்த காபாவின் மீது இருக்கிற கண்ணியத்தினால் காபாவை பார்க்க மாட்டார்கள். நபி அவர்களுடைய அந்த சுன்னத்தை நாமும் பின்பற்றணும். இவர் நேரா போய் காபாவில் கை வச்சுக்கிட்டு ஒரு போட்டோ எடுங்க போஸ்ட் போடலாம். அப்படியே என்ன செஞ்சா காபாவில் கை வச்சு. ஏனென்றால் என் நண்பர்கள் நம்ப மாட்டாங்க நான் போனதை நான் காபாவை தொட்டுட்டு இருக்கிறேன்னு பார்த்தா அவங்க நம்பட்டேன்னு. ஒருத்தர் என்ன செஞ்சா டக்குனு கீழே உட்கார்ந்து நான் துஆ செய்றேன் நீங்க அவரை போட்டோ எடுங்கன்னு சொல்றாரு. உடனே அவர் போட்டோ எடுக்கிறாரு துஆ செய்றாரு. அந்த துஆ அவ்வளவு ஒரு மாதிரி செய்றாரு. உடனே போட்டோ எடுத்து முடிச்சுட்டு சிரிக்கிறாரு. என்னயா இப்ப தான அழுதா சிரிக்கிறேன்னா இந்த போஸ்ட்க்காக அழுதேன்னு சொல்றாரு. நவுதுபில்லாஹி மிந்தாலில். எங்க போய் என்ன வேலைக்க பார்க்கிறோம் அது எப்படிப்பட்ட இடங்க கணவனும் மனைவியும் தவாப் செய்துகிட்டு இருக்கிற நேரத்தில ரெண்டு பேரும் பேசிக்கிட்டாங்களாம். இவ்வளவு சுத்தமா இருக்கே இவ்வளவு அழகா வச்சிருக்காங்களே இந்த அரசு. இந்த அரசுக்கு கீழே இயங்குற மருத்துவமனைகளும் கூட சுத்தமா தான இருக்கும். தேவையே இல்லாத பேச்சு. ஏங்க மருத்துவமனைகளும் கூட சுத்தமா தான இருக்கும்னு பேசி இருக்காங்க. அன்னைக்கு பேசுன அன்னைக்கே ரெண்டு பேருக்கும் உடம்பு சரியில்லாமல் மருத்துவமனைக்கு போயிட்டாங்க. இதை எங்களுக்கு கூட வந்த காஜா அஜ்ரத் அவர்கள் சொல்லும்போது அங்க வச்சு கண்டதையும் பேசாதீங்க. எதை பேசினாலும் கபூல் ஆயிடும். உடனே அங்க கொண்டு போயி நீங்க மருத்துவமனை சுத்தமா இருக்குமா இல்லையான்னு கேட்டீங்களா பாருங்க மருத்துவமனை சுத்தமா இருக்குல்லன்னு பாத்துட்டு போகணும்னு பத்து நாள் அங்க தங்க வச்சு எல்லா ஹாஜிகளுடைய ஹஜ்ஜே முடிஞ்சு போச்சு. அவர் அதுக்கு பிறகு வெளியே வந்துருக்கார். ஆனால் நான் ஒரு துஆ செய்வேன் எப்பவுமே. எல்லா தவாப் எல்லாம் முடிச்சுகிட்ட பிறகு அமல்கள் எல்லாம் முடித்துக்கொண்ட பிறகு கடைசியாக ஒரு துஆ செய்வேன். யா அல்லாஹ் நான் செய்த அமல்கள் எல்லாம் கபூலா இருந்துச்சுன்னா எனக்கு ஒரே ஒரு நேமம் செய் ரப்பே. ஒரு எஹ்ஸான் என் மீது செய் ரப்பேன்னு சொல்லுவேன். என்ன எஹ்ஸான்னு கேட்டா அஜீஸியால தங்க போட்டுருந்தாங்க. இஷ்டபிரஹான் கேப்பானுங்க வண்டிக்காரனுங்க. திடீர்னு அஞ்சா ரியால் கேப்பான். திடீர்னு 10 ரியால் கேப்பான். திடீர்னு அவனுக்கு ஜான உதயம் வந்துச்சுன்னா குச்சவி நான் கூப்பாயிட்டு சொல்லுவான். ஒண்ணு வேணாம்னு சொல்லுவான். திடீர்னு ஒன்னு ஒரு ரியால் போதும்னு கேப்பான். இப்படி என்னென்னவோ வித்தியாசமா இருப்பான். யா அல்லாஹ் எனக்கு நான் வெளியில போகும்போது புன்சிரிப்போட சிரிச்சு என்ன வரவேற்பு உட்காருங்கன்னு சொல்லி ஒரு ரெண்டு ரியால் மட்டும் வாங்கிக்கிற மாதிரி ஏற்பாடு செய். ஹஜ்ஜு முடியிற வரைக்கும் ரெண்டு ரியால் தாங்க செலவு பண்ணேன். அந்த ரெண்டு ரியாலை தாண்டி செலவு செய்ய வேண்டிய தேவை வரல. அப்ப அந்த இடத்தில் வச்சு என்ன துஆ செஞ்சாலும் அல்லாஹ் கபூல் ஆக்குவான். அப்படிப்பட்ட இடம் தான் தவாப். ஆனால் அந்த தவாஃப்ல வச்சு நீங்க ஞாபகத்துல வைக்கணும். என் தந்தை அவர்கள் காபாவை பார்த்துகிட்டே உட்கார்ந்திருந்தாங்க. 120 ரஹ்மத்துகள் தனிப்பட்ட முறையில இறங்குகிறது. அதுல தவாப் செய்யறவர்களுக்கு 60 60 ரஹ்மத். அங்கே தொழக்கூடியவர்களுக்கு 40 ரஹ்மத். காபாவை பார்த்துகிட்டே இருந்தாலே 20 ரஹ்மத்ங்க. ஆனால் எதையும் பேசக்கூடாது. இக்ர்ல தான் இருக்கணும். பிக்ர்ல தான் இருக்கணும் உலகப் பேச்சுக்கள் பேசுற இடம் அல்ல. என் தந்தை அவர்கள் அமர்ந்திருக்கிறபோது ஒருவர் வந்து கேட்டிருக்கார் அஸ்ஸலாமு அலைக்கும். காபா மேல உங்களுக்கு ரொம்ப பாசம் போல தெரியுதுன்னு சொன்னாராம். ஆமாங்க ரொம்ப பிரியம் அதனால தான் பார்த்துகிட்டே இருக்கிறேன்னு. காபாவை போட்டு மிதிக்குறிங்க என்னத்தை பிரியம் அப்படின்னு சொன்னாராம். என்னங்க காபாவை போட்டு நான் மிதிக்கிறேன்னு சொல்றீங்க எங்கெங்க நான் மிதிக்கிறேன். உங்க லுங்கில பாருங்கன்னு சொன்னாராம். கீழ பார்த்தா காபா மார்க் லுங்கி காபா மார்க் லுங்கி அது இப்ப இருக்கா இல்லையான்னு தெரியல. அந்த காபாவுடைய படமே போடப்பட்டிருக்கு. அதுல கால் இருந்து இருக்கு. உடனே வந்து சொன்னவர் யார் இவர் மனிதரா இல்லை மலக்கா மலக்குகள் வந்து செல்கின்ற இடம் தான் தவாப் செய்யற இடம். ஹஜ்ரத் ஜிப்ரீல் நபி அவர்கள்ட்ட வரும்போது புஜத்துல அழுக்கா இருந்துச்சு. அப்ப நபி அவர்கள் கேட்டாங்க என்ன புஜத்துல அழுக்கா இருக்கேன்னு. இல்லை தவாப் செய்துகலாம்னு ஒரு ஆசை வந்துச்சு. தவாப் செய்ய போனேன். அந்த இடத்துல ஹஜ்ரத் கல்ல முத்தமிடலாம்னு தோணுச்சு. உள்ள போனேன் இந்த மாதிரி அழுக்காயிடுச்சுன்னு சொன்னாங்க. அப்ப இந்த மாதிரி மலக்குகளும் உள்ள இருக்கிறாங்கன்னு தெரிஞ்சுக்கங்க. நபி அவர்கள் சொன்னாங்க இதோ மூஸா அலைஹிஸ்ஸலாம் போயிட்டு இருக்காங்க மூஸா அலைஹிஸ்ஸலாம் போறாங்கன்னு சொன்னாங்க. சஹாபாக்கள் எங்க எங்கயா ரஸூல்லா என்ன கட் பண்ணிட்டார். வேகமா ஓடி போனா ஆளவே காணும். பிறகு ஹஜ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் தலையில இருந்து தண்ணி சொட்டிகிட்டே இருக்குது. இப்பதான் குளிச்சுகிட்டு வந்த மாதிரி போறாரு பாருங்கன்னு. உடனே பின்னாலேயே போனாங்க சஹாபாக்கள் கண்ணுல இருந்து மறைச்சிட்டாங்க. அப்ப மலக்குகள் வர்றாங்க. நபிமார்கள் வர்றாங்க பாக்கீஸா ரூஹே ஆத்தேஹி எல்லாரும் வந்துட்டு போற இடம் அது. அதனால ரொம்ப கவனமா இருக்கணும் அந்த இடத்துல நாம யாரையும் மட்டமா நினைச்சிடக்கூடாது. கவனக்குறைவா இருந்தரக்கூடாது இந்த பின்னால வண்டியை வச்சுக்கிட்டு வேகமா வருவாங்க. நம்ம ரொம்ப கவனமா போய்கிட்டு இருக்கணும் இல்லனா டக்குன்னு வந்து நம்ம கால்ல இடிச்சுருவாங்க. அப்படி கால்ல இடிச்ச மாத்திரத்துல கால்ல ரத்தம் வந்துரும். ரத்தம் வந்துட்டா உடனே நம்மளுடைய ஒது முறிஞ்சு போயிரும். ஒது முறிஞ்சு போச்சுனா நம்ம தவாப் செய்ய முடியாது. ஏனென்றால் தவாப் என்பது தொழுகைக்குச் சமமானது. எனவே அந்த இடத்தில் வைத்து ஒது முறிஞ்சா தவாப் செய்ய முடியாமல் போயிரும். மூன்று சுற்றுகள் வரையிலும் நீங்க அந்த ஒதுவோட நீங்க தவாப் செய்துட்டீங்கன்னு சொன்னா நான்காவது சுட்டிலோ அதற்கு மேலாகவோ உங்களுக்கு இது மாதிரி ஏற்பட்டுச்சுன்னு சொன்னா ஒது செஞ்சிட்டு வந்து மிச்சத்தை சுத்துனா போதுமானது. ஆனால் மூன்று சுற்றுக்குள்ளாக இந்த மாதிரி ஒது முறிஞ்சா அல்லது ரத்தத்தை வெளியாக்கிட்டோம்னு சொன்னா அந்த மாதிரி நேரத்துல மீண்டும் தொடக்கத்தில இருந்து தான் தவாப் செய்யணும். அதை நாம மனசுல வச்சுக்கணும். அதே நேரத்துல நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் அல்லவா அந்த தவாப் செய்யற இடத்துல நபி அவர்கள் சொல்லுகின்ற அந்த வார்த்தை எல்லாம் நமக்கு பயத்தை ஏற்படுத்துகின்றது. அப்படிப்பட்ட ஒரு இடம் தான் அந்த தவாப் செய்யற இடம். தவாப் செய்துகிட்டே இருக்கிறபோது டக்குன்னு நிறுத்திட்டாங்க யார் இதுக்கு மேல போகாதீங்க அப்படின்னு நில்லுங்கன்னு சொன்னாங்க. சஹாபிகள் எல்லாம் அப்படியே நின்னாங்க. கேட்டாங்க இந்த காபாவுடைய மதிப்பு என்னன்னு கேட்டாங்க. உலகத்திலயே இந்த காபாவுக்கு இருக்கிற மதிப்பு வேறு எதுக்குமே இல்லை யா ரசூல்லாஹ். அப்ப நபி அவர்கள் சொன்னாங்க இதைவிட மதிப்புமிக்க ஒன்னு இருக்குன்னு சொல்லிட்டாங்க. சஹாபிகள் உறைஞ்சு போயிட்டாங்க இதைவிட மதிப்பா அது என்னன்னு கேட்டாங்க. ஒரு முஃமினுடைய மானம் மரியாதை. அவனுடைய கௌரவம் கண்ணியம் இந்த காபாவை விட உயர்ந்தது. எனவே எந்த ஒரு முஃமினையும் கண்ணிய குறைவாக நடத்தி விடாதீர்கள். எந்த முஃமினையும் நீங்கள் கண்ணிய குறைவாக பார்க்காதீர்கள். எளிமைக்காரமாக நினைக்காதீர்கள். கேவலமாக பார்த்து விடாதீர்கள். அவன் இல்மில்லாதவன் என்றோ அவன் ஜாஹில் என்றோ அவன் ஒண்ணும் இல்லாதவன் படிப்பறிவு இல்லாதவன் அவனுடைய நடத்தை சரியில்லை என்றோ ஒருவன் ஏதேனும் குற்றமே செய்திருந்தாலும் அவனை குற்றவாளி என்றோ நீங்கள் எந்த வகையிலும் எவனையும் சாதாரணமாக கருதிடாதீங்க. அல்லாஹ்வினுடைய ஏற்பாட்டில் தான் எல்லாமே இருக்கு. ஒரு மனிதன் அந்த மனிதனில் முஃமினான மனிதனுடைய மானம் மிகவும் உயர்ந்ததுன்னு சொல்லி அந்த காபாவுக்கு முன்னால வச்சு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னதை நாம் நினைவில் கொள்ளணும்.
[21:54]இவைகள் அனைத்தையும் நாம் அறிந்து கொண்ட பிறகு ஒரு விஷயத்துக்கு வருகிறேன். பிறை எட்டாகிறது என்றால் அந்த எட்டிலே லுஹரிலிருந்து லுஹரு, அஸ்ரு, மஹரிபு, இஷா, பஜ்ரு ஐந்து நேர தொழுகையை மினாவில் தொழுவது சுன்னத்தாக இருக்கிறது. மனசுல நல்லா பதிய வச்சுக்கங்க. ஆனால் இப்ப இருக்கிற இடம் எங்க இருக்கிறோம்? மக்காவில காபாவில இருக்கிறோம். ஒரு ரக்காத் ஒரு லட்ச ரக்காத்ங்க. மனசு அங்கிருந்து விடுபட்டு போகும் மனசு வருமா? அல்லாஹ்வினுடைய வீடு. வீடு அதுலயும் அல்லாஹ்வினுடைய வீடு. அப்ப அல்லாஹ் சொல்றான் வீட்டை விட்டுட்டு நீ ஹிஜ்ரத் செய்ய வேண்டி இருக்கும். போய் டெண்ட்ல போய் தங்குன்னு அல்லாஹ் சொல்லுவான். சொன்னவுடனே அங்க போயிரணும். இரு நான் இருக்கணும் போனா போகணும். இரு நான் இருக்கணும் வெளியேறுனா வெளியேறணும் அது தாங்க ஹஜ்ஜு. அங்கே மினாவிலே போய் தங்கி அந்த ஐந்து நேர தொழுகையை தொழுகிறோமே அது சுன்னத்தான தொழுகை. அதிலே நான்கு நேர தொழுகை கிடைச்சிரும். லுஹரு கிடைக்கும் அஸ்ரு கிடைக்கும் மகரிபு கிடைக்கும் இஷா கிடைக்கும். ஆனால் பஜ்ரையும் தொழுதால் நல்லது சுன்னத்து. ஆனால் பஜ்ர தொழுதுட்டு போனோம்னா போய் சேர முடியாதுன்னு சொல்லி சர்வீஸ் காரனுங்க நைட்டே கிளப்பிடுவாங்க. வாங்க அரஃபாவுக்கு போலாம் அரஃபாவுக்கு போலாம்னு. உடனே அரஃபாவுக்கு போய் அங்க போய் பஜ்ரு தொழுற மாதிரி ஆகும். ஒன்னும் சண்டை எல்லாம் பண்ணிர வேணாம். விவாதம் எல்லாம் செஞ்சிர வேணாம். நீங்க முன்னால போங்க நான் பின்னால வரேன்னு எல்லாம் போய் சேர முடியாது. பிரச்சனையான விவாதம் எல்லாம் வேணாம். கூட்டிட்டு போறேன்னு சொன்னா போயிறனா நல்லாது. அப்பதான் அரஃபாவில காலையிலயே போய் சேர்ந்துருவோம். பிறை ஒன்பது அண்டு அரஃபாவில நாம இருக்கிறோம். ஆனால் அரஃபாவுடைய அமல்கள் தொடங்காது. லுஹருடைய நேரம் வந்துவிட்டால் அரஃபாவுடைய நேரம் வந்துவிட்டது. அதிலிருந்து அரஃபாவிலே நாம் தங்கி இருக்கிறோம் என்றால் லுஹரையை லுஹருடைய நேரத்தில தொழுதுக்கணும். அஸ்ரையை அஸ்ருடைய நேரத்தில தொழுதுக்கிட்டா போதும். ஏன்னா நம்ம இங்க இருந்து போறபோதே நாம 15 நாளைக்கு மேல தங்குறதா தான் போறோம். அதனால நம்ம முகீமுடைய அந்தஸ்து தான் தவிர முஸாபிர் அல்ல. எனவே லுஹரை லுஹருடைய நேரத்தில தொழுதுக்க வேண்டியது அஸ்ரை அஸ்ருடைய நேரத்தில தொழுதுக்க வேண்டியது. லுஹரை நாலாவே தொழுக வேண்டியது அஸ்ரை நாலாவே தொழுக வேண்டியது. இல்லை இல்லை நான் ரெண்டா தான் தொழுவேன்னு ஒருத்தர் சொன்னாருன்னா சண்டை எல்லாம் போடாதீங்க. பாவா நீங்க ரெண்டு தொழுதுக்கங்கன்னு விட்டுற வேண்டியதுதான். அவங்க கூட பிரச்சனை எல்லாம் பண்ணக்கூடாது. பிறகு அரஃபாவில தங்கி இருந்து சூரியன் மறைகிற நேரத்தில அங்க இருந்து வெளியே வந்தரணும். முஸ்தலிஃபாவிற்கு வந்துறணும். முஸ்தலிஃபாவில இரவு தங்குறது சுன்னத்துங்க. முஸ்தலிஃபாவிலே இரவு தங்குறது என்னங்க? சுன்னத். அப்ப வாஜிபுன்னு சொல்றாங்களே அப்படின்னா எப்போ வாஜிபுனா பஜ்ருடைய நேரம் வரும் பார்த்தீங்களா அந்த பஜ்ருடைய நேரத்தில இருந்து சூரிய உதயம் வரையிலும் உள்ள நேரத்தில தங்குவது வாஜிபாக இருக்கிறது. இரவெல்லாம் தங்குவது சுன்னத்தாக இருக்கிறது. இரவு 2:00 மணிக்கு போயிருறோம்னு சொன்னா அல்ஹம்துலில்லாஹ் அங்க இஷாவுடைய நேரத்தில மஹரிப தொழுதுட்டு இஷாவ ஜம்மு செஞ்சிரணும். அங்க ஜம்மு செஞ்சிரணும். இங்க நம்ம தனித்தனியா தொழுதுக்கலாம். இந்த முஸ்தலிஃபாவில் தங்கிய பிறகு அதற்கு அடுத்து அதற்கு அடுத்த நாள் வந்து பத்தாவது. பிறை பத்தன்று மூன்று வகையான அமல்கள் இருக்கிறது அல்லவா. ஒன்று ஜமராத். அந்த ஜமராத்திலே பெரிய ஷைத்தானுக்கு கல்லெறியணும். அதுக்கு பிறகு குர்பானி கொடுக்கணும் குர்பானி கொடுத்த தகவல் வந்த உடனே முடி எடுக்கணும். முடி எடுத்த பிறகு நேரம் எங்க வந்தர வேண்டியதுதான். தவாப் ஜியாரத்துக்கு வந்துற வேண்டியதுதான். அப்ப நம்ம இஹராமுடையல இருக்கிறதே மொத்தம் எத்தனை நாள் தாங்க. பிறை எட்டுல இஹராம்ல இருக்கிறோம். பிறை ஒன்பதுல இஹராம் இருக்கிறோம். பிறை பத்த அன்னைக்கே ஒரு 10:00 மணி 11:00 மணி வரைக்கும் தான் இஹராம். கிட்டத்தட்ட ரெண்டரை நாள் தாங்க இஹராம். அதுக்கு பிறகு இஹராம்ல இருந்து வெளியில வந்தரோமா? வெளியில வந்துட்டாலும் கூட நறுமணம் தடவிக்கலாம். இஹராம்ல இருந்து வெளியில வந்தா நறுமணம் எல்லாம் தடவிக்கலாம் எல்லாம் செய்யலாம். ஆனால் மனைவியோடு கூடுறது மட்டும் ஹலால் ஆகாது. அது எப்போ தவாபு ஜியாரத்தை செஞ்சு முடிச்சா தான் ஹலால் ஆகும். அதை நம்ம மனசுல வச்சுக்கணும். இப்ப ஹஜ்ஜனுடைய பர்லதுகள் எதுனா இஹராம் கட்டுவது நியத்து செய்வது. இரண்டாவது அரஃபாவில் தங்குவது. அரஃபாவில் தங்குவது. மூன்றாவது என்ன தெரியுங்களா? தவாப் ஜியாரத்தை செய்வது. இந்த மூணு தாங்க பர்ல். மற்றதெல்லாம் வாஜிபு தான். முஸ்தலிஃபாவில் தங்குவது வாஜிபு. மூணு ஷைத்தான்களுக்கு கல்லெறிவது வாஜிபு. அதேபோன்று குர்பானி கொடுப்பது வாஜிபு. முடி எடுப்பது வாஜிபு. சஃபாமருவாவுக்கு மத்தியில துங்கோட்டம் ஓட்டுறது வாஜிபு. பிறகு அங்கிருந்து வெளியே வருகின்ற நேரத்தில நான் போயிட்டு வரேன்னு ஒரு தவாப் செய்வோம் அல்லவா அந்த தவாப் வாஜிபு. இவ்வளவு தாங்க வாஜிபு. இவ்வளவுதான் பர்ல். இதை நம்ம மனசுல வச்சுக்கிட்டு செய்யணும். மற்றது எல்லாமே சுன்னத்து தாங்க. இப்போ ஒரு ஹாஜி குளிச்சுக்கிறாரு அப்படின்னா குளிக்க முடியலைனா ஒது கூட செஞ்சுக்கலாம். குளிக்கிறது சுன்னத்து தான். பிறகு ரெண்டு ரக்காத் நாபில் தொழுறது அதும் சுன்னத்து தான். பிறகு சொன்ன பிறகு ஒரு ஒரு தடவை தல்வியா சொல்றது சுன்னத். மூணு தடவை தல்வியா சொல்றது முஸ்தஹப் தான். பிறகு அங்கிருந்து அப்படியே புறப்பட்டு வந்தோம்னு சொன்னா காபாவுக்குள்ள நுழைஞ்ச மாத்திரத்துல ஒரு தவாப் செய்யறது தவாபுல் குதும் அது சுன்னத்து தான் வெளியூர் காரர்களுக்கு தான். செய்யலன்னு சொன்னா பாவம் இல்லை. அதற்காக எந்த பரிகாரமும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இன்னும் இந்த சுன்னத்துகளை இன்ஷா அல்லாஹ் அதற்கு அடுத்த உள்ள ஹஜ்ரத்துமார்கள் சொல்வார்கள். நான் ஒரே ஒரு செய்தியை சொல்லுகிறேன் காபாவை பார்த்த மாத்திரத்தில நாம் ஒரு துஆ செய்யணும். என்ன துஆ செஞ்சாலும் கபூல் ஆகுங்க. காபாவை பார்த்த மாத்திரத்துல. ஆனால் என்ன துஆ செய்யணும் தெரியுங்களா? ரெண்டு துஆ செய்யணும். ஒன்னு காபாவுக்கு செய்யணும் இன்னொன்னு நமக்கு செய்யணும். ஒரு துஆ காபாவுக்கு செய்யணுமே அது என்ன யா அல்லாஹ் இந்த காபாவுக்கு ரொம்ப கண்ணியம் தந்திருக்கிறேன். இன்னும் கண்ணியத்தை அதிகமாக்குன்னு கேட்கணும். இன்னொரு துஆ என்ன? யா அல்லாஹ் இந்த காபாவை யார் யாரெல்லாம் கண்ணியப்படுத்துறாங்களோ அவங்களை கண்ணியப்படுத்துன்னு கேட்கணும். அப்ப கிப்லாவை கண்ணியப்படுத்தினவங்களை தான் அல்லாஹ் கிப்லாவாக ஆக்குவான். நம்ம எத்தனையோ உஸ்தாத்மார்களுடைய பெயருக்கு பின்னால கிப்லா நாபத்து பரக்காத்தும் கிப்லா அதான கிப்லா இவர் எப்படி கிப்லான்னு சொன்னா எல்லா உலமாக்களும் அவர்ட்ட தான் வர்றாங்க. எல்லா மக்களும் அவரை நோக்குறாங்க என்றபோது அவர் என்னவாக்குறாரு கிப்லா ஆகுறாரு. அவர் எப்பொழுது கிப்லா ஆகிறார் கிப்லாவை மதித்தவர்களை தான் அல்லாஹ் கிப்லாவாக ஆக்குவான். ஏன் ஹஜ்ரத்மார்களுக்கு பின்னால கிப்லா போடுறாங்க ஒரு இன்ஜினியருக்கு பின்னால கிப்லா போடுவாங்களா. ஒரு டாக்டருக்கு பின்னால கிப்லா போடுவாங்கன்னா அவருக்கு கிப்லா தான். ஒரு டாக்டர் அத்தனை பேர் கிட்ட ஒப்புக்கொள்ளப்பட்டுட்டா அத்தனை பேரும் அவர்ட்ட தான் வருவாங்க. அவருக்கு கிப்லாங்க. ஒரு இன்ஜினியர் பர்கேஸ் காரா இருக்கிறாரு கற்புத்தளமா இருக்கிறாருன்னு சொன்னா அவரை நம்பி எல்லாரும் கட்டடம் இதை ஒப்படைச்சாங்கன்னா அவருக்கு கிப்லாங்க. வீட்ல பெண்கள்ல ஒரு சில பெண்கள் இந்த பொண்ணு தாலி கட்டினாதான் வாழ்க்கை நல்லா இருக்குன்னு அல்லாஹ் உருவாக்கிடுவான். அல்லாஹ் அந்த பொண்ணை கிப்லாவாக ஆக்கிடுவான். இப்படி அல்லாஹ் கிப்லாவை மதித்தவர்களை கிப்லாவாக ஆக்குவான். என் தந்தை அவர்கள் சொல்வார்கள் காபாவை பார்த்த மாத்திரத்தில இந்த துஆ செஞ்சுட்டு யா அல்லாஹ் இந்த மக்காவில எத்தனை நாள் நான் இங்க தங்குறேனோ அதுவரையிலும் உனக்கு கோபத்தை ஏற்படுத்துகின்ற எந்த செயலையும் செய்யாமல் என்னை பாதுகாத்து விடு ரப்பேன்னு கேட்க சொல்லுவார். அந்த மக்காவில 18 நாள் தங்குறோமா அந்த 18 நாளும் யா அல்லாஹ் உனக்கு கோபத்தை ஏற்படுத்துகிற எந்த செயலையும் செய்யாமல் என்னை பாதுகாத்து விடு. என்னுடைய வயோதிகத்திலே என் பிள்ளைகளிடத்தில் எதிர்பார்த்து என்னை வாழ வைக்காதே. என் தந்தை அவர்கள் சொல்லி தருவார்கள். கடைசி நேரத்தில் என்னுடைய காத்திமாவை மிக அழகாக ஆக்கி விடு. முடிவை அழகாக ஆக்கிக்கொடுன்னு கேப்பாங்க. இதை கேட்க சொல்லுவாங்க. இதை நாம காபாவை பார்த்த மாத்திரத்தில நாம கேட்கணும். இன்ஷா அல்லாஹ் பரிபூரணமான ஹஜ்ஜு செய்துவிட்டு வாருங்கள். நல்ல முறையில துஆ செய்து கொள்ளுங்கள். வீண் பேச்சுகளில் ஈடுபட வேண்டாம். அந்த பலா முசீபத்தில ஈடுபட வேண்டாம். அதிலே ஈடுபட்டால் எந்த அமலுமே செய்ய முடியாது. அரஃபா பெருவளியிலே வைத்து நீங்கள் குறைந்தது ஒரு ஆயிரம். குறைந்தது ஒரு ஆயிரம். இல்லை அதைவிட தாண்டி நீங்கள் எந்த அளவுக்கு சலவாத்தை சொல்ல முடியுமோ சொல்லி அதை கையில் வைத்துக் கொள்ளுங்கள். நபி அவர்களை சந்திக்க செல்லும்போது அதை நபி அவர்களுக்கு காணிக்கையாக ஆக்குங்கள். நபி அவர்களுக்கு ஸலாம் சொல்லுங்கள். நபி அவர்களுக்கு யார் யாரெல்லாம் உங்களுக்கு ஸலாம் சொல்லி அனுப்பிறார்களோ அனைவரின் தரப்பிலே நான் ஸலாம் சொல்லுகிறேன் என்று மொத்தமாக சொல்லிவிட்டு வாருங்கள். வல்ல ரஹ்மான் உங்களுடைய பயணத்தை இலேசாக்கி வெற்றியாக்கி பரிபூரணப்படுத்தி அருள் புரிவானாக.
[30:04]வா அஹர தாவானா அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு. வா அலைக்கும் அஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு. அல்ஹம்துலில்லாஹ். நமக்கெல்லாம் உம்ராவையும் ஹஜ்ஜையும் செய்த அனுபவ வார்த்தைகளையும் அதன் சிறப்புகளையும் மிகத் தெளிவாக நமக்கு எடுத்துரைத்த ஹஜ்ரத் அவர்களுக்கு அல்லாஹ் தாலா மென்மேலும் பரக்கத் செய்வானாக.
[30:35]அவருடைய பெயரும் பரக்கத் பரக்கத் பாஜில் பாக்கவி ஹஜ்ரத். அதேபோன்று பரக்கத்தான ஒரு வாழ்க்கையில் அல்லாஹ் தஆலா அவர்களை தலைக்கச் செய்வானாக. அல்ஹம்துலில்லாஹ். ஹாஜிகள் அவசியம் மனனம் செய்திருக்க வேண்டிய வார்த்தைகள் வாக்கியங்கள் துஆக்கள்.



