Thumbnail for தேவிகண்மணியின் நின் வதனம் மதுரமடி அத்தியாயங்கள் 16_20 by DEVI KANMANI TAMIL AUDIO NOVELS

தேவிகண்மணியின் நின் வதனம் மதுரமடி அத்தியாயங்கள் 16_20

DEVI KANMANI TAMIL AUDIO NOVELS

28m 34s3,081 words~16 min read
Auto-Generated

[0:00]ஹாய் பிரண்ட்ஸ் தேவிகண்மணியின் யூப் சேனலுக்கு உங்களை வரவேற்கிறோம்.நின் வதனம் மதுரமடி. அத்தியாயம் 16. மகளன் ஆக்ரோஷமான முகத்துடன் நின்றிருந்தான் வதனையின் முன்பாக. என்னை கேட்ட என்றவனின் குரலில் அத்தனை இருக்கத்தை இந்த இரு மாதங்களில் கண்டதே இல்லை பிரகல்ய வதனி. என்னை எதுக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க அவனுக்கு குறையாத அதே ஆக்ரோஷத்துடன் அவள் நின்றாள். வந்த தலைவலி பன்மடங்காகி இருந்தது மகளனுக்கு. நீ என்னவாவது யோசிச்சிருக்கியே அதை சொல்லு என்றான் பல்லை கடித்தபடி. என்னை பரிதாபப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களா சொல்லுங்க பரிதாபம்னா புரியல. நீ பரிதாபமான நிலையில இல்லையே அப்புறம் ஏன் இந்த கேள்வி. இல்ல எனக்கு தெரிஞ்சாகணும். சொன்னால்தான் விடுவேன் என்பது போல தீர்க்கமான பார்வை அவளிடத்தில். இவ்வளவு பேசுவியா நீ என்று எண்ணிக்கொண்டவன் இங்க வாடி என்று இரு கைகளையும் விரித்த நீட்ட மாட்டேன் என்பது போல அடமாய் நின்றாள் அவள். அவள் கேள்விக்கான விடையை அவள் முழுமை தெரிந்து கொள்ள வேண்டும் என்று பேச்சை வளர்த்தான். ஆமா பரிதாபப்பட்டு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன் என அவன் கூற வதனின் முகம் கோபமாய் மாறியது. ஏன் ஏன் பரிதாபம் என் மேல எதுக்கு பரிதாபப்படுற வேணாம் நீ வேணாம் உன் பரிதாபம் வேணாம் பாவப்பட்டு என்கிட்ட அன்பு காட்ட வேணாம். வதனிக்கு யாரோட பரிதாபமும் வேணாம் போயிடு போ போடா என அவன் சட்டை காலரை பற்றி அவள் கத்திய கத்தலில் சுமித்ரா விஸ்வநாதனுடன் மேலே வந்துவிட்டார். தாருணிக்காவும் அவர்களோடு வந்தவள் இருவரின் சண்டையை கண்டு முகம் மலர்ந்து பின் முகத்தை பதட்டமாக வைத்துக்கொண்டு பிரகா என்னடி ஏதாவது பிரச்சனையா ஏன் அழற முகம் ஏன் இப்படி இருக்கு என அவளை உலுக்கிவிட்டு பின் மகளனிடம் என் தங்கச்சியை என்ன சொன்னீங்க என்று எகினாள். அவர்களை திரும்பி ஒரு பார்வை பார்த்தவன் இது புருஷன் பொண்டாட்டி பிரச்சனை நாங்க பார்த்துப்போம் என்றதும் சுமித்ரா தருணியை வழுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு சத்தமில்லாமல் கீழே சென்றுவிட்டனர். மகளன் அக்கணமே உணர்ந்து கொண்டான் இது தருணியின் வேலை என்று. உன்னை பத்தின என் கணிப்பு தப்பா கிடைச்சே என்று எண்ணியவன் மீண்டுமாய் பிரகல்யாவை பார்க்க அவள் அங்கில்லை. அதற்குள் பிரகா வேகமாக உள்ளே சென்று கழுத்தில் காதில் கிடந்தது எல்லாம் கலற்ற துவங்கினாள். நாகலட்சுமி காபியோடு வந்தாள். பாப்பா கிட்ட பொறுமையா பேசுங்க தம்பி என்றவர் காபியை நீட்ட நான் பார்த்துக்கிறேன் என்று சாவகாசமாக காபியை அருந்து துவங்கினான். கழுத்தில் அவன் கட்டிய மஞ்சள் கயிறு மட்டும் கிடந்தது பிரகாவிற்கு. விருந்தென்று போட்ட தாலி சங்கிலியை கூட கலற்றி விட்டு மஞ்சள் கயிற்றில் போட்டு இருந்தாள் மாங்கல்யத்தை மட்டும். நான் இங்க இருந்து போறேன் என்றாள் எங்கோ பார்த்தபடி. ம்ம் போ என்றான் இரு வார்த்தையில். விறுவிறுவென திரும்பி நடந்தவளை கைபிடித்து தடுத்தவன் கழுத்துல கடக்கிற அதையும் கழட்டி வெச்சிட்டு போ என்றான் அவளை கூர்மையாக பார்த்தபடி. முடியாது தரமாட்டேன் என்றாள் அழுத்தமாக. அப்போ நானும் உன்னை அனுப்ப முடியாது. முடிஞ்சா என்னை மீறி போ பார்க்கலாம் என்றான் அவளை பார்த்தபடி. ஏன் என்னை பார்த்து நீ பரிதாபப்பட்ட மீண்டுமாய் அதே வார்த்தையில் வந்து நின்றாள். மரியாதை எல்லாம் எங்கடி என்றவனுக்கு சிரிப்பு வேறு வந்தது அவளது கோப முகத்தில். நீ எதுக்கு என்னை பார்த்து பரிதாபப்பட்டேன்னு சொல்லு எனக்கு வேணாம் பாவப்பட்ட சோறு வேணாம் அன்பு வேணாம் பாவப்பட்டு தர்ற பாசமும் வேணாம் வேணாம். நான் தான் பெத்தவங்களை கொன்னு சனியே எனக்கு இந்த பரிதாபம் எல்லாம் வேணாம் நான் வாங்க மாட்டேன். எனக்கு இது வேணாம் என்றாள் கதறி அழுதபடி. போதும் போதும் விடுவிடு ரிலாக்ஸ் உட்கார் என்று தன் மடியில் அமர்த்தியவன் ஏண்டா என்றான் சங்கடமாக அவளின் நிலை கண்டு. நான் அழகா இல்ல அசிங்கமா கருப்பா இருக்கேன் எனக்கு எதுவுமே வராது. படிப்பை தவிர வேற எதுவும் வராது நான் மோசம் நான் உருப்படாதவன் என் கூட இருந்தா அவங்களும் நல்லா இருக்க மாட்டாங்க. என்னை விட்டுடு நான் போறேன் என்று மீண்டுமாய் கதற மகளனுக்கு அதற்கு மேல் பொறுக்கவில்லை. அவளை தூக்கி நிறுத்தி தன் கைகளில் ஏந்திக்கொண்டான். விடு விடு என்னை விடு ம்ம்ம்ம் என்று திமறியவளை இறுக்கமாக பிடித்துக்கொண்டான். ப்ரூஸ் குட்டி என்னை பாரு கண்ண மட்டும் பார்க்கணும் பேசக்கூடாது எனபோதே பேச வந்தவளை மூச்சு பேசக்கூடாது அடி விழும் என மிரட்டி அவளை அமைதி படுத்தினான். முகமெல்லாம் வீங்குற அளவுக்கு அழறது தலை வலிக்குதுன்னு சொன்னேனே அதை கவனிச்சியா நீ உனக்கு உன் கோபம் பெருசு அப்படித்தானே. குச்சி கைய வச்சிட்டு எத்தனை அடி அடிக்கிற நீ இவ்வளவு கோபம் வருமா உனக்கு என்றவனை பார்த்தபடி இருக்க என்னடி நீ பாவப்பட்டவ ஆ. பத்து வயசுல இருந்து உன்னை பார்க்கிறேன் உன் மேல பரிதாபம் வந்திருந்தா உனக்கு பணமோ இல்ல சாப்பாடோ தந்திருப்பேன் உன் மேல வந்தது காதல் புரிஞ்சதா. 33 வயசு வரைக்கும் கல்யாணம் பண்ணாம உனக்காக காத்திருந்து கல்யாணம் பண்ணா எவ்வளவு திமிறா என்கிட்ட ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு கேட்ப. என்று கோபமாய் கேட்டுவிட்டான். காத்திருந்து கல்யாணம் பண்ணிக்கிட்டவர் தான் அவசரமாக கல்யாணம் பண்ணீங்களா மறு கேள்வி கேட்டாள். மக்கு பொண்ணே காதல்னு சொல்றேனே அது எப்படி என்னன்னு கேக்குறியா நீ எல்லாம் நான் தான் சொல்லி தரணுமாடி மறுபடியும் சுள்ளென விழுந்தான். வதனிக்கு அப்போதுதான் உறைத்தது அவன் கூறிய காதல் என்ற வார்த்தை. என்னை எல்லாம் யார் காதலிப்பா ஏன் நீ மனுஷி இல்லையா இப்போலாம் பூனைக்குட்டி நாய்க்குட்டியை கூட மனுஷங்க லவ் பண்றாங்க என்றான் கிண்டலாக. அதையெல்லாம் லவ் பண்ணுவாங்க ஆனா மனுஷன் கருப்பா குட்டையா குண்டா இருந்தா யார் திரும்பி பார்க்கிறார் இதுல எங்களை லவ் பண்றாங்கன்னு வேற நினைக்கணுமா நாங்க என்று கடுப்பாய் கேட்க நீ கேட்டது நியாயம் தான்.

[5:43]ஆனா மகளனுக்கு பிடிச்சவ நீதானே உண்மையாவா இந்த ரெண்டு மாசத்துல எந்த நாளிலயாவது அவசர கல்யாணம் பண்ண மாதிரி உன்கிட்ட நடந்திருப்பேனா நான் இல்லதான் ஆனா என்றவளை பேசவிடாமல் தடுத்துவிட்டது அவனின் செயல்கள். பேசிய இதழ்களுக்கு வன்மையான தண்டனை கலங்கிய கண்களுக்கு இதலொற்றலால் அர்ச்சனை அடித்த கைகள் அகப்பட்டு போனது அவனது கைச்சிறையில். ஊடலுக்கு பின்னான கூடல் வன்மையின் அரங்கேற்றம் மென்மை காட்டம என்றாலும் விடவில்லை. அவன் நினைவில் ஓடிய அவளின் பேச்சுக்கள். நன்றாக உறங்கி இருந்தாள் பிரகல்ய வதனி பேரழகி அவளின் பிறை நுதலில் உறக்கம் கலைக்காமல் முத்தமிட்டு முணுமுணுத்தான். குளித்து முடித்துவிட்டு வந்தவன் கீழே சென்றான். மகேந்திரனுக்கு கைபேசியில் அழைக்க உடனே அழைப்பு ஏற்கப்பட்டது. மகேன் உன் வைஃப் அழைச்சிட்டு தோட்டத்துக்கு வா என செய்தி மட்டும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்தான். மகேந்திரன் தருணியை பார்த்தவன் எழுந்து வா அண்ணா கூப்பிடுறாரு என்றான் கட்டளையாக. நான் ஏன் வரணும் நான் உங்க பொண்டாட்டி அவர் கூப்பிட்டா போறதுக்கு நான் ஒன்னும் அவர் வேலைக்காரி கிடையாது என்றாள் எரிச்சலாக. இனி சொந்தகாரியா கூட இருக்க முடியாதபடி செஞ்சிடுவார் தருணி. அவர் கூப்பிடும்போதே வா என்றான். இல்ல எனக்கு புரியல அதென்ன அவர் கூப்பிட்டா உடனே போகணும் அவர் திட்டுனா நான் கேட்டுக்கணும் இதென்ன ரூல்ஸ் நான் உங்க வைஃப். கண்டவங்க கட்டளைக்கெல்லாம் அடிபணிய முடியாது என்னால உங்க பேச்ச உங்க அப்பா அம்மா பேச்சை கேட்டு நடக்க சொல்றீங்களா செய்றேன். அவர் பேச்சை நான் ஏன் கேட்கணும் என்னால வர முடியாது அவ்வளவு தூரம் என்கிட்ட பேசியாகணும்னா அவரை இங்க என் வீட்ல வந்து மீட் பண்ண சொல்லுங்க. இன்னொரு முறை எனக்கு ரூல்ஸ் போட்டா நான் பாட்டுக்கு என் அம்மா வீட்டுக்கு போய்கிட்டே இருப்பேன் என்று கத்தினாள். மீண்டுமாய் அழைத்தான் மகளன். அண்ணா இதோ கிளம்பிட்டோம் என்றான் மகேந்திரன். போனை ஸ்பீக்கர்ல போடு என்று சொல்ல மறுக்காமல் போட்டான். தருணி பிரகா கிட்ட என்ன பேசுன என்று எடுத்ததும் கேட்க தருணிக்குள் உள்ளூர நடுக்கம் தான். நான் நானா நான் எதுவும் பேசலையே என்றாள் தடுமாற்றமாக. ஓகே ஃபைன் என்றவன் இன்னொரு தடவை அவகிட்ட நீ பேசக்கூடாது பேசினா மகளனோட ரியாக்ஷன் வேற மாதிரி இருக்கும். டு யூ அண்டர்ஸ்டாண்ட் அகைன் நீ பேசினா லிட்ரலி ஐ வில் பனிஷ் யூ என்று கடமையாக எச்சரித்தவன் மகேன் ஸ்பீக்கரை ஆஃப் பண்ணிட்டு உன் வைஃப் கிட்ட போனை குடு என்றதும் சொன்னது போல மகேந்திரன் செய்ய தருணி நடுங்கும் கைகளில் அதனை வாங்கிக்கொண்டாள். அதை கவனித்தவன் ஏதோ பிரச்சனை என்று உணர்ந்து கொண்டான் மகேன். இங்கே மகளனோ தருணியிடம் நீ என் பிரகா கிட்ட என்ன பேசுனேன்னு தெரியாது ஆனா அவ மனசுல தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கி இருக்கணும்னு மட்டும் தெரியுது. இப்போ உன்கிட்ட நான் ஒன்னு சொல்லவா என்று ஏழனத்துடன் கேட்க என்னது என்றாள் தடுமாற்றமாக. மகளனோட பொண்டாட்டியா பிரகல்ய வதனி வரணும்ங்கிறதுக்காக மட்டும்தான் தருணிகா சுமித்ரா தேவிக்கு மருமக ஆகி இருக்கா. இல்லனா உன்னை எல்லாம் என் தம்பிக்கு கட்டி வைக்க நான் முட்டாள் இல்ல அவனுக்கு உன்னை விட்டுட்டு வேற யாரையும் செலக்ட் பண்ணி கல்யாணம் பண்ணி வைக்க தெரியாமலும் இல்ல. வதனி என் வீட்டுக்கு வரத்தான் நீ பயன்பட்ட புரிஞ்சதா நீ பிறந்தது வேணும்னா உன் அப்பா அம்மாவால இருக்கலாம். ஆனா நீ வாழ்ந்தது வாழ்றது எல்லாமே பிரகல்யாவால மட்டும் தான் இதை உன்கிட்ட சொல்லி உன்னை கஷ்டப்படுத்த கூடாதுன்னு தான் நினைச்சேன். பட் நீ என் பிரகாவை அழ வச்சிட்டல யூ பே ஃபார் திஸ் டெஃபனிட்லி உனக்கு ஒரு விஷயம் தெரியுமா என மீண்டுமாய் கேட்டு அவளை அதிர வைத்தான். அத்தியாயம் 17 மகளன் உன்னிடம் இன்னொரு விஷயம் கூறவா என கேட்டு தருணியை அதிர வைத்திருந்தான். என்னது என்று தடுமாறி கேட்டவளுக்கு அதிரடியான சிரிப்பே பதிலாய் கிடைத்தது. நான் அதை இப்போ சொல்ல மாட்டேன் இனி ஒரு முறை வதனி கிட்ட ஏதாவது அவ இன்செக்யூரா ஃபீல் பண்ற மாதிரி பேசி இருந்த அப்ப சொல்லுவேன். கேட்டுட்டு நீயே சூசைட் பண்ணிக்கிட்டாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்லை இப்பவும் என் மனைவியை நல்லா பார்த்துகிட்டேன்ற ஒரே ஒரு எண்ணம் என் மனதில் இருக்கிறதுனால மட்டும் தான் நீ தப்பிச்சிருக்க.

[9:54]நெருப்போட எப்போதும் விளையாடக்கூடாது தருணி என்று இணைப்பை துண்டித்தான். தருணி வியர்த்து விறுவிறுத்து அமர்ந்திருந்தாள். மகே அண் என அவனை அழைத்திட சொல்லு தருணி என்றான் மகேந்திரன்.

[10:06]என்னை உங்களுக்கு அலைன்ஸ் பார்த்தது யாரு என்று தவிக்கும் மனதோடு கேட்க அண்ணன் தான் அவளை அதிர வைத்தான். ஏன் உங்க அப்பா அம்மா இருக்கும்போது அவரே ஏன் பொண்ணு பார்த்தார் ஏன்னா என்ன சொல்றது என் அண்ணன் தேர்வு செஞ்சா அது சரியா இருக்கும்னு நாங்க எல்லாரும் நம்புறோம் அதனாலதான் என்றான் இலகுவாக. சுயமா எந்த முடிவும் எடுக்க மாட்டீங்களா எல்லாம் உங்க அண்ணன் தானா என மனதில் மூண்ட எரிச்சலில் கேட்க சுயமா எப்ப முடிவெடுக்கணுமோ அதை நான் சரியா செய்வேன்.

[10:37]அவர் பேச்சை கேட்கிறதால உனக்கு என்ன பிரச்சனை என்றான் கோபத்தில். எனக்கு என்னவா அவரு என்னை என்ன நினைச்சிட்டு இருக்காரு உங்க வீட்டு வேலைக்காரினா என்று கூச்சல் போட இப்போ எதுக்கு கத்தி கூச்சல் போடுற தருணி. அமைதியா பேசு என்றான் பொறுமை இழந்து. உங்க அண்ணன் எனக்கு ஆர்டர் போடுறார் என் தங்கச்சி கூட பேசக்கூடாதுன்னு அவர் ஏன் சொல்றாரு என்றாள் ஆத்திரமாக. ஏன்னா அவங்க அவரோட வைஃப் அதுமட்டுமில்லாம அவங்க உன் தங்க கிடையாது அக்கா. தென் அவர் வைஃப் கூட யார் பேசணும் யார் பேசக்கூடாதுன்னு அவங்க ரெண்டு பேரும் தான் டிசைட் பண்ணனும் நானும் நீயும் இல்ல என்றவன் அவர் பேசக்கூடாதுன்னு சொல்றாருனா அப்போ அந்த அளவுக்கு ஏதோ நடந்திருக்கு அப்படித்தானே. நேத்து நடந்த சண்டைக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே என கூர்மையாக அவளை பார்த்தபடி கேட்க விஷயம் விபரீதமாக தன் பக்கம் திரும்புவதை உணர்ந்தவள் உடனே பேச்சை மாற்றினாள். அதெல்லாம் எதுவும் இல்ல அவர் அதிகாரமா பேசுறது எனக்கு பிடிக்கல அதான் சொன்னேன் என்பதோடு முடித்துக்கொண்டாள். முதல் நாள் வதனிடம் பேசியதெல்லாம் நினைவில் வந்து சென்றது அவளுக்கு. வதனி மகளனின் உடைகளை மடித்து வைத்துக் கொண்டிருந்தாள். பிரகா என்ன செய்ற என்றபடி வந்த தருணியை முகம் மலர வரவேற்றவள் சும்மாதான் தருணிகா துணி மடிக்கிறேன் உட்காருங்க இருங்க நான் தண்ணி எடுத்துட்டு வரேன் என்று எழுந்தாள். அதெல்லாம் வேண்டாம் உட்காரு என்று தருணி அறையை சுற்றி பார்வையை சுழற்றினாள். மணமக்களாய் மகளனும் வதனிமமும் எடுத்துக்கொண்ட புகைப்படம் அழகாய் ஜொலித்தது சுவற்றில். ஓ மாமா லேப்டாப் எல்லாம் யூஸ் பண்ணுவாரா விவசாயம் மட்டும் தான் தெரியும்னு நினைச்சேன் என பேச்சை துவங்கினாள் தருணி. நவீனரக மடிக்கணினியாக இருக்கவே மனதினுள் வியந்து போனாள் அவள். ம்ம்ம் கா பிஎச்டி பண்றாங்கல்ல அதுக்காக வச்சிருக்காங்க என்றாள் வதனி. பிஎச்டியா குழப்பத்துடன் கேட்க ஆமா அக்கா அக்ரி சம்பந்தப்பட்ட படிப்பு தான் படிக்கிறாங்க. அவங்க மும்பை ஐஐடில படிச்சவங்க அங்கேயே தான் பிஎச்டியும் பண்றாங்க என்றாள் அல்லட்டுக் கொள்ளாமல். இவ்வளவு திறமையானவனா வியந்தே போனாள் தருணி. அப்போதுதான் அங்கிருந்த கண்ணாடி அலமாரியில் இருந்த புத்தகங்களை கவனித்தாள் அத்தனையும் அறிவியல் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் தான். நாவல் படிக்கும் பழக்கம் கூட இருக்கும் என்பதை அவன் வைத்திருந்த பொன்னியின் செல்வன் வேள்பாரி படமிட்டு காட்டியது. அப்படியே அடுத்த பக்கம் பார்வையை சுழற்ற ரிம்லஸ் கண்ணாடி அணிந்து பார்மல் உடையில் கைகளை பேண்ட் பாக்கெட்டில் விட்டவாறு பக்கவாட்டில் நின்று போஸ் கொடுத்திருந்தான். நிச்சயம் 19 20 வயதில் எடுத்த புகைப்படமாக இருக்கக்கூடும். இப்போது உள்ள மகளன் கட்டை மீசை வைத்து கண்ணாடி இல்லாமல் விரைப்பாய் இருக்கிறான். ம்ம்ம் உன் வீட்டுக்காரர் செம ஸ்மார்ட் போல பிரகா என்று உதடு பிதுக்கியவள் ஆனால் அவருக்கு கொஞ்சம் கூட பொருத்தமில்லாத ஒன்ன இப்படி அவசர கல்யாணம் பண்ண வேண்டியதா போயிடுச்சே என்று உச்சு கொட்டினாள். அதுவரை புன்னகைத்திருந்த வதனின் முகம் அதை தொலைத்து வாடி போனது. சாரி பிரகா நான் இப்படி சொல்லக்கூடாது தான் ஆனா மனசே கேட்கல போ உனக்கே தெரியும் நீ எப்படி இருக்கன்னு. நீயே யோசிச்சு பாரேன் அவருக்கு நீ இணையானவளானு எனக்கு தெரிஞ்சு வேற வழி இல்லாம உன் கழுத்துல தாலி கட்டி இருப்பாரு. உன் கூட அவர் சந்தோஷமாவா இருக்காரு என்றாள் சற்று ஏழனமாக. இல்லக்கா அவர் என்னை நல்லா பார்த்துக்கிறார் என்றாள் வதனி வெள்ளந்தியாய். அது உன் மேல வந்த பரிதாபமா இருக்கும் பிரகா தாலி கட்டிட்டோம் வேற வழி இல்லைன்னு நினைச்சு வாழ்ந்துட்டு இருப்பாரு. மனச தொட்டு சொல்லே நீ அவரா இருந்தா உன்னை மாதிரி ஒரு பொண்ணுக்கு வாழ்க்கை தருவியான்னு என்றதும் வதனியின் முகம் இருகியது. அவளை பார்த்தும் பார்க்காதவாறு தருணி மேலும் பேசினாள். உனக்கே தெரியும் நீ என்னை விட பெரியவன்னு ஆனா பொண்ணு கேட்டு வந்தவங்க எல்லாரும் உன்னை விட்டு என்னை செலக்ட் பண்ணதுனால தான் முதல்ல எனக்கு கல்யாணம் பண்ணாங்க.

[14:28]ஏதோ இவருக்கு பார்த்த பொண்ணு ஓடிப்போகவும் பெரியம்மா உன்ன கொண்டு வந்து நிறுத்தி கட்டி வச்சிட்டாங்க அவங்களுக்கு மனசே இல்லதான். இவ்வளவு அழகான மாப்பிள்ளைக்கு உன்னை மாதிரி பொண்ண கட்டி வைக்க ஆனா என்ன செய்றது அந்த நேரத்துக்கு நீதான் கிடைச்ச. அதுமட்டுமில்லாம நீ அவங்க தங்கச்சி பொண்ணு அந்த பாசத்துல கட்டி வச்சிட்டாங்க போல இருக்கு அன்னைக்கு வந்தாளே அந்த பொண்ணு அவளை தான் மகளன் மாமாக்கு கட்ட நினைச்சாங்களாம். அவ அன்னைக்கு வராததால லக்கு உனக்கு அடிச்சிருக்கு என்று நீளமாக பேசி முடிக்க பிரகாவின் விழிகளில் கண்ணீர் குலம் கட்டி இருந்தது. அச்சச்சோ சாரி சாரி பிரகா நான் பாட்டுக்கு உண்மை எல்லாம் தத்து பித்துனு உளறிட்டேனே என்று பாவல காட்டியவளுக்கு பதில் கூட பேச இயலவில்லை பிரகாவால். ஆனாலும் பாறேன் பிரகா பரிதாபப்பட்டு பாவப்பட்டு யாராவது உனக்கு எல்லாம் தந்துடுறாங்க என் அப்பா அம்மா பாவம் பார்த்து எங்க கூடவே உன்னை வளர்த்தாங்க. படிக்க வச்சாங்க இப்போ என் கல்யாணத்துக்கு வந்து மகளன் மாமா பரிதாபப்பட்டு பாவப்பட்டு தாலி கட்டி நல்ல சொகுசான வாழ்க்கையை தந்திருக்காரு என்று உச்சுக்கொட்டியவள் பிரகல்யாவின் கலங்கிய முகம் கண்டு நிறைவாய் புன்னகைத்து சரி பிரகா நான் வரேன். மகேந்திரன் வந்துடுவார் அவர் வர நேரத்துல நான் இருக்கணும் இல்லாட்டி கோபம் வந்துடும் அவருக்கு. வந்ததும் என் பேஸ் பார்த்தாதான் அவருக்கு ஹாப்பியாவே இருக்கும் அவ்வளவு லவ் என் மேல என்றபடி கீழே சென்றுவிட்டாள். தருணி அனைத்தையும் நினைத்தபடி அமர்ந்திருந்தாள். எப்படியும் வதனி வீட்டை விட்டு சென்றிடுவாள் என எண்ணி இருக்க அவளோ இன்னும் வெளிவரவில்லை. மகளன் மிரட்டுகிறான் என்றால் இவள் எதுவும் சொல்லி இருப்பாள் இல்லை காலையில் நடந்த சண்டை வைத்து மகளன் பேசுகிறான். எப்படியும் கிளம்பி விடுவாள் என்று நினைத்திருந்தாள் ஆனால் அதன் பின் நடந்ததோ வேறாகிப் போனது. சடுதியில் மகளனின் வண்டி வீட்டு வாசலில் வந்து நின்றது. ஜன்னல் வழியே எட்டி பார்த்திட அவன் பக்கவாட்டில் மாடி ஏறுவது தெரிந்தது அவன் வேகத்தில். எப்படியும் சண்டை ஏதாவது வரும் என்று எண்ணி இருக்க சிறிது நேரத்தில் பிரகல்யாவும் அவனும் தயாராகி வெளியே வந்தனர். அவனின் முழங்கையை பிடித்துக்கொண்டு நடந்து வந்தாள் பிரகா மகளன் காதினில் ஏதோ கிசுகிசுக்க அவனை தோலில் அடித்தபடி சுணுங்கிக் கொண்டு நடக்க தருணிக்கு இங்கே மனமெல்லாம் புகைந்தது. இவ்வளவு பேசி இருக்கோம் ரெண்டு பேரும் கைகோர்த்து கொஞ்சிக்கிட்டு போறாங்க அப்படி என்னத்த கண்டான் இவக்கிட்ட என்று பொறுமினாள் உள்ளூர. வண்டியை எடுத்ததும் தருணியை சைட் மிரரில் பார்த்தான் மகளன். வேண்டுமென்றே பிரகாவின் கையை அவன் இடுப்பை சுற்றி போட்டான் தருணி ஜன்னல் கதவுகளை அடைத்து விட்டு போய்விட்டாள். இடியட் என்று முணுமுணுத்தபடி கிளம்பிவிட்டான் மகளன். மரகத நாயகி ஸ்வீட்டியை முறைத்துக்கொண்டு இருக்க அவளோ சாவகாசமாக கடலையை கொரித்துக் கொண்டிருந்தாள். என்னை விட அவ உங்களுக்கு முக்கியமா போயிட்டானா காட்டு கத்தலாக கத்தினாள். நாங்க சொல்ற பதில் உங்களுக்கு வருத்தமா இருக்குமா அதனால நாங்க சொல்லல என்றான் பிரபு. ஏண்டா இப்படி பண்றீங்க உயர் ரத்த அழுத்தம் வந்தது போல கத்தினான் அவர். உண்மை பக்கம் நிக்கிறோம் அது உங்களுக்கு பிடிக்கலன்னா நாங்க என்ன செய்ய என்று அழுது கொண்டாள் ஸ்வீட்டி. உண்மை பொல்லாத உண்மை நம்மளை ஏமாத்துறதுக்காக டிஎன்ஏ ரிப்போர்ட் எல்லாம் அவன் காசு தந்து வாங்கி இருப்பான். அவன் அனாததான் செய்வின வச்ச மாதிரி உங்களை ஆட்டி வைக்கிறான் நீங்களும் அதுக்கு தகுந்த மாதிரி ஆடுறீங்க என்று கத்திக்கொண்டிருக்க பிரபுவோ கைபேசியில் வந்த அழைப்பை ஏற்று சொல்லுங்க மாமா என்றபடி வெளியேறினான். சே அவன் தான் அவனே தான் அவனை ஏதாவது செய்யணும் என்று உள்ளூர புகைந்தவருக்கு மனதில் சிரித்த முகத்துடன் வந்து நின்றாள் பிரகல்யா வதனி. மரகத நாயகியின் முகம் வெற்றி களிப்பில் மின்னியது. உன் பலவீனத்தை நான் கண்டுபிடிச்சிட்டேன்டா என்று ஆங்காரமாக சிரித்தார் மரகத நாயகி. அத்தியாயம் 18 இறங்குங்க மேடம் பணிவாய் அழைத்தான் மகளன். ம் ஏன் இப்படி என்று சுழிங்கவளை கண் சிமிட்டி அழைத்துச் சென்றான். வெள்ளை உடையில் ஆ ஊ என்று சத்தமிட்டபடி கராத்தே செய்து கொண்டிருந்தனர் ஒரு கூட்டமாக. இப்போ கராத்தே நான் கத்துக்கணுமா எதுக்கு என விழிவிரித்தாள். ம்ம்ம் நான் கட்டிப்பிடிச்சு கிஸ் பண்ணதோ கட்டில் இருந்து எட்டி உதைக்க என அவன் சிரிக்காமல் சொல்ல ராஜா என்று இடுப்பில் கை வைத்து முறைத்தாள் அவனை. ஹஹஹா முறைக்காத வா கையை பிடித்து அழைத்துச் சென்றவன் அங்கே பயிற்சி தந்து கொண்டிருந்த பெண்ணிடம் அறிமுகம் செய்து வைத்தான். இனிமே நான் பார்த்துக்கிறேன் அண்ணா அண்ணி வாங்க என்று அழைத்துக்கொண்டு அப்பன். இன்றைக்கே வா ஆதங்கத்துடன் மகளினியை பார்த்திட இன்றைக்கே தான் போ ரெண்டு மணி நேரம் கழிச்சு நானே அழைத்துட்டு போறேன் என்று விடை பெற்றுக்கொண்டான். உடல்பலம் தேவையோ இல்லையோ இப்போதைக்கு அவளுக்கு தேவை உடல் பலத்துடன் கூடிய தன்னம்பிக்கை அதை இந்த தற்காப்புக் கலை தரும் என்று நம்பினான் மகளன். இப்போதெல்லாம் தருணி பிரகாவை சந்திக்க வருவதில்லை எங்கே பிரகா வீட்டில் இருந்தால் தானே சந்திக்க அதிகாலை எழுபவள் மகளனோடு இணைந்து யோகா செய்துவிட்டு சமையலை கவனிக்க செல்ல மகள் வயலுக்கு சென்றிடுவான். காலை மதிய உணவு வயலிலேயே இருவருக்கும் முடிந்து போகும். மாலை வீடு திரும்பியதும் கராத்தே வகுப்பிற்கு அனுப்பி வைப்பவன் பிறகு அவளுக்கு கணினி கற்பிக்க ஆரம்பித்திருந்தான். கற்பித்தல் கணினியோடு நிற்காமல் கட்டிலுக்கும் தொடர்ந்தது. எல்லோரிடமும் பேசும்போது கீச்சுக்குரலில் பேசுபவள் மகளனோடு பேசும்போது மட்டும் மிரட்டும் குரல் தான். அவனோடு சலசலக்க பிடித்திருந்தது அவளுக்கு. நான் போர் அடிக்கிறேனா ரம்பா மாதிரி பிளேட் போடுறேனா என்று கேள்வி வேறு கேட்டுக்கொள்ள சிரித்து மட்டும் வைப்பான். வாண்டு அண்ண சொல்லு அண்ண சொல்லு அவளை வம்பெடுப்பது மகளனுக்கு பிடித்தமான வேலை. நீங்க இருக்கீங்களே சுகமாய் அழுத்தி கொள்வாள். என்னை லவ் பண்ணேன்னு சொன்னீங்கல்ல அந்த கதையை சொல்லுங்க என்று வந்து நின்றாள் மாமா சொல்லு சொல்றேன் என்று முரண்டு பிடிப்பான். போயா யூவ் என்று திட்டிவிட்டு செல்பவள் அவனை பின்னிருந்து அணைத்து கழுத்தோடு கைகளை சுற்றிப் போட்டு தோளில் தாடை பதித்து காதோரம் குருகுறுப்பை மூட்டிவிட்டு முத்தமிட்டு செல்வாள். இருவருக்குமான உலகம் எப்போதும் வானுலக தேவதைகள் அலங்கரித்த சொர்க்கம் தான். மரகத நாயகியால் வதனியை நெருங்க கூட இயலவில்லை அந்த அளவிற்கு மகளன் அவளை தன் அகத்திற்குள் வைத்திருந்தான். ஊர்க்காரர்கள் மகளனை சந்திக்க வந்திருந்தனர். வாங்க எல்லாரும் என்று பொதுவாய் அழைத்தவன் நாகலட்சுமி டீ போடுங்க என்று குரல் கொடுத்தான். அதெல்லாம் வேண்டாம் சின்னையா என்றவர்கள் திருவிழா பற்றி பேச வந்தோம் சின்னையா என்றார்கள். வழக்கம் போல ஊர்க்கூட்டம் போட்டு பேசிக்கலாமே என்றதும் இல்ல சின்னையா இதுவர நீங்க கல்யாணம் ஆகாதவரு. அதனால எந்த முறையும் செய்யாமல் திருவிழா மட்டும் செஞ்சோம் ஆனா இந்த முறை பட்டம் கட்டிதான் திருவிழா நடக்கணும் இதுதான் பெரிய வீட்டு முறை என்றார்கள் வந்தவர்கள். அது அவன் அறியாததா தெரிந்து கொண்டுதானே பேச்சை வளர்த்தான். இல்ல எனக்கு கல்யாணம் ஆகி இருந்தாலும் ஏற்கனவே ராஜா பட்டத்தில் இருக்கிறவர் உயிரோடு தானே இருக்கிறார் அப்புறம் நான் எப்படி என்று தயங்கிட அவர் இதுவரை இங்க வரலையே தம்பி.

[21:32]அதுமட்டுமில்லாம சுமித்ரா அம்மா வேற கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க அவங்களுக்கு அடுத்த நிலையில் இருக்கிறது நீங்க தான் கண்டிப்பா நீங்க தான் பட்டம் கட்டிக்கணும் என்று கூற நீங்க ஒரு மனதா முடிவெடுத்தாலும் ராஜாவோட உடன் பிறந்தவங்க நான் பட்டத்துக்கு வர்றதை ஏத்துக்கலன்னா என்று கொக்கி போட்டான். அவங்க கிட்ட யோசனை கேட்கிறது வழக்கம் இல்லீங்களே என்ற ஊர் நாட்டாமை இந்த வருஷமாவது தம்பதி சமேதரா நின்னு திருவிழாவை நடத்தணும் சின்னையா என்றார் வேண்டுகோளாக. அதற்குள் தேநீரை எடுத்துக்கொண்டு வந்தாள் வதனி. வணக்கம் சின்னம்மா என அனைவரும் மரியாதை செலுத்த புன்னகையுடன் தலையசைத்தவள் தேநீரை கொடுத்தாள். வரவு செலவு கணக்கெல்லாம் எடுத்து வைங்க கோவில்ல வந்து பார்க்கிறேன் போன தடவை மாதிரியே இந்த முறையும் செலவு எல்லாம் என்ன சேர்ந்தது. ஊர்ல வரி போடும்போது குறைச்சு போடுங்க என்றான் முடிவாக. செஞ்சிடலாம் சின்னையா அப்போ நாங்க கிளம்புறோம் என்று விடை பெற்றுக்கொள்ள மரகத நாயகி வந்து நின்றாள். என் அண்ணன் இருந்த இடத்துல இவனை வைக்க நீங்க எப்படி முடிவெடுக்கலாம் என்று ஆங்காரமாய் கத்த நாயகிமா சின்னையா தான் இந்த வீட்டின் வாரிசு என்று நிரூபிச்சிட்டார். அதனால இந்த முறை அவர்தான் பட்டம் கட்டுவார் இது ஊர் கூடி எடுத்த முடிவு அப்புறம் நீங்க அசலூர்க்காரங்க ஆகிட்டீங்க இதுல முடிவை சொல்ல முடியாது என்று ஊர் நாட்டாமை தீர்க்கமாக உரைக்க எங்க அண்ணன் உயிரோடு இருக்கும்போது எப்படி இன்னொரு ஆளுக்கு பட்டம் கட்ட முடியும்.

[22:58]மீண்டுமாய் முறை உயிரோட இருந்தா பெரியய்யாவை வர சொல்லுங்க பட்டம் கட்டறோம் திருவிழாவை சிறப்பா எடுத்து நடத்த சொல்லுங்க என்று கூறிவிட்டார் பட்டென்று. வருவாயா வருவார் எங்க அண்ணன் இந்த நாய் அநாதன்னு காட்டவே அவர் திரும்ப வருவார் என்று சவால்ல சொல்ல மகளன் ஏழனமாக புன்னகைத்தான்.

[23:16]ஏய் ஏய் சிரிக்காதடா என்று எகிற உங்களை பார்த்து சிரிக்க எனக்கு ஒண்ணுமே இல்லையே மரகத நாயகி என இழுத்து அத்தை என்றான் எழலாக. டேய் என்று பல்லை கடித்தவரின் அருகில் சென்றவன் ஊர்க்காரர்களை பார்த்து வணக்கம் வைத்து நீங்க கிளம்புங்க இன்னும் கால் மணி நேரத்தில் அங்க இருப்பேன் என்று அனுப்பி வைத்தான். மரகத நாயகிடம் நான் ராஜாவாகுறதை யாராலும் தடுக்க முடியாது முடிஞ்சா செய்யுங்களேன் பார்க்கலாம் என்று சவால் விட்டான். வதனி காபியோடு மீண்டும் வந்தவள் வாங்க சின்னம்மா காபி எடுத்துக்கோங்க என உபசரிக்க அவரோ கடும் கோபத்தில் உன் காபியை இவன் தலையில் ஊத்து என்று வேகேட்டில் சொல்ல வதனியோ சாவகாசமாக எடுத்து காபியை குடித்தாள்.

[24:02]ஏய் அதை ஏன் தலையில் ஊத்த சொன்னாங்க என்றவனுக்கு புன்னகை அரும்ப அவளோ என் மனசுக்குள்ள தான இருக்கீங்க. தொண்டையில இறங்கும்போது நேரா தலையில பட்டுடும் என்றாள். சேட்டைக்கார பொண்ணே கண்ணம் வழித்து செல்லம் கொஞ்சியவன் கோவில் வரைக்கும் போயிட்டு வரேன் அதுக்குள்ள நான் சொன்னதை செய் என்று கீழ இறங்கிச் சென்றான். ஊர் பெரிய மனிதர்கள் சிலர் கோவில்ல அமர்ந்திருந்தனர் கணக்கு வழக்குகளை பார்த்து பேசிக்கொண்டிருக்க மகளன் வண்டியை நிறுத்திவிட்டு வந்து செல்ல அனைவரும் மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றனர். அவன் முகத்தில் ஒருவித கர்வப் புன்னகை உட்காருங்க என்றவன் கணக்கு வழக்குகளை சரிபார்த்துவிட்டு திருவிழா சம்பந்தமாக பேச துவங்கினான். நைட் 10 மணி ஆனா ஸ்பீக்கர் எல்லாம் ஆஃப் பண்ணிடணும் வரி எல்லாரும் கட்டணும் அதுக்கு தகுந்த மாதிரி போடுங்க. ரெண்டாவது தண்ணிய போட்டு எவனாவது அலப்பரை பண்ணா போன தடவை மாதிரி செவுல்ல நாலு அப்பு அப்பு விட்டுருவேன்னு ஆரம்பத்திலேயே எச்சரிக்கை பண்ணிடுங்க. ஆடல் பாடல் நிகழ்ச்சி ஒரு நாள் மட்டும்தான் கரகட்டம் உயிலாட்டம் எல்லாம் பாரம்பரியமா பண்றவங்க தான் வரணும். இந்த கரகட்டன்ற பேர்ல நாரசமா ஆடுற எந்த கோஷ்டியாவது உள்ள வந்தா தொலைச்சிடுவேன். அந்த மாதிரி கருமத்துக்கு இது ஊரில திருவிழா முடியுற வரை அன்னதானம் போடணும் தண்ணீர் பந்தல் அங்கங்க வச்சிருக்கணும். கடை போடுறவங்க விலையை பார்த்து வைக்கணும் அதிக ரேட் வச்சு வித்தா உடனே கடையை காலி பண்ண சொல்லுடுங்க. தேர் வரதுக்கு தகுந்த மாதிரி ரோட்டை சுத்தம் பண்ணிடணும். இளைஞர் நற்பணி மன்ற பசங்களை செய்ய சொல்லுங்க வேற என்ன விஷயம்னாலும் வயல்ல தான் இருப்பேன் பேசிக்கலாம் என்று முடித்தான். பட்டம் கட்டறதுக்கு ஒண்ணுமே சொல்லலையே சின்னையா என்று கேட்கவும் அது நீங்களா பார்த்து ஏற்பாடு செய்றதுதான். அதுல நான் கருத்து சொல்ல எதுவும் இல்ல நீங்க பார்த்து எப்படி செஞ்சாலும் சரி என்று சொல்லிவிட அவர்களும் சரி என்று சம்மதித்தனர். அண்ணே இந்த தடவையாவது ஊர் பசங்களுக்கு தகுந்த மாதிரி ஏதாவது ப்ரோக்ராம் ரெடி பண்ணுங்கண்ணே என்றார்கள் இளைஞர்கள். திருவிழாவை சிறப்பா நடத்தி காட்டுங்க மஞ்சள் நீர் அன்னைக்கு முழுசும் நீங்கதான் ப்ரோக்ராம் பண்றீங்க செலவு முழுதும் என்னோடது சரியா என்றதும் இளைஞர் கூட்டம் ஆர்ப்பரித்தது. பார்த்துக்கோங்க என்றவன் அங்கிருந்து செல்ல ஊர் பெரிய மனிதர்களும் இளைஞர்களும் மகளனை பாராட்டியபடி கலைந்து சென்றனர். மரகத நாயகிக்கு உள்ளமெல்லாம் கொதித்தது ஏதாவது இவனை செய்திட வேண்டும் என்று மனம் பரப்பரத்தது. சித்தி என்று அழைத்தாள் தருணிகா. திரும்பி பார்த்து முகம் சுருக்கியவரிடம் உங்ககிட்ட பேசணும் என்று அழைத்துக் சென்றாள். இருவரும் வெகு நேரம் பேசினர் இருவர் முகத்திலும் ஆங்காரமான சிரிப்பு மலர்ந்தது அது மகளனுக்கு ஆபத்து என்று சொல்லாமல் சொன்னது. ஏய் பொண்ணே கண்ணை கட்டி எங்க கூட்டிட்டு போற என்று கேட்டபடி அவளோடு நடந்தான் மகளன். கொஞ்ச நேரம் அமைதியா வாங்களேன் என அழுத்திக்கொண்டவள் நாற்காலியில் அவனை அமர வைத்தாள். கண்கட்டை அவிழ்த்துவிட்டவள் டட்டட்டாயிங் என எதிரிலிருந்த கேக்கை காட்ட என்னது இது என்றான் சிரிப்புடன். உங்க ப்ரூஸ்லியின் கைவண்ணம் எப்படி இருக்கு என்று எதிர்பார்ப்புடன் கேட்க நாற்காலி போன்ற அமைப்பில் ராஜா ராணி இருவரும் வீற்றிருப்பது போல வடிவமைத்திருந்தாள் கேக்கை. அத்தனை கலைநயமாய் இருந்தது அந்த கட்டிகை. வாவ் பொண்ணே கலக்குற போ ரொம்ப அழகா இருக்கு ஆமா இது ரெண்டும் யாரு என வேண்டுமென்றே வம்பு செய்ய ஆ இது முனிசாமி அது குப்பமா என்றாள் நொடிப்பாக. அட்டகாசமாய் சிரித்தவன் அழகா தான் இருக்காங்க யாரு உங்க ரிலேஷனா என விடாமல் வம்பு செய்து கொண்டிருந்தான் அவளை. மாமா என்றதும் அவளை தன் பக்கம் இழுத்தவன் எத்தனை தடவை கேட்டேன் வம்பு பண்ணவும் சொல்றியா நீ என்று தன்னோடு இருக்க அணைத்திருந்தான் அவளை. இருவரும்மா கேக் வெட்டி முடிக்க கொஞ்சலும் குலாவலுமாய் சென்றது பொழுது. வதனி அவன் நெஞ்சில் துயில் கொண்டிருக்க அவளின் உறக்கம் கலையாமல் படுக்க வைத்தவன் அறையை பூட்டிவிட்டு வெளியேறினான். தோட்டத்து வீட்டிற்கு சென்றவன் கதவை திறந்து கொண்டு ஒரு அறைக்குள் நுழைந்தான். வாங்க அண்ணா மகேன் வரவேற்க தலையசைத்தவன் அதை ஓபன் பண்ணு என்றான். மகேந்திரன் தரையில் இருந்த டைல்ஸை நகர்த்தி விட்டு அங்கிருந்த மரக்கதவை திறக்க அது படிக்கட்டு போல வழிக்காட்டியது. லாக் பண்ணிட்டு போ மகேன் என்றதும் சொன்னதை தட்டாமல் செய்தான் மகேந்திரன். டக் டக் என்ற ஓசையிலேயே அங்கே படுத்திருந்த உருவம் எழுந்து அமர்ந்தது. வணக்கம் ஷண்முகவேல் ராஜா சௌக்கியமா என்று மகளன் அதிகார குரலில் கேட்க எதிரிலிருந்த உருவம் நடுங்கியது.

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript