[0:15]Hi everyone. Welcome to the first and foremost episode of Leadership Latte. I am Charan Pethimuthu, First MBA from KPR Business School Coimbatore. It has been told that the people call him a legend and face of Coimbatore. In addition, Kalinga University has awarded him a doctorate for women empowerment. Ananda Vikatan has also awarded him the title of self-made entrepreneur. Indian Cotton Federation has awarded him the Lifetime Achievement Award. He has also received the Star of India award from former Prime Minister Shri Devagowda Sir. Today, Dr. K.P. Ramasamy Sir, Chairman of KPR Group, is our first guest.
[3:10]வணக்கம் சார். வணக்கம். சார் நீங்க பிசினஸ் ஸ்டார்ட் பண்ணனும்னு முடிவு பண்ண அப்புறம், டெக்ஸ்டைல் இண்டஸ்ட்ரியை சூஸ் பண்ண ரீசன் என்ன சார்? பிசினஸ் ஸ்டார்ட் பண்ணனும்னு முடிவு பண்றதுக்கு முன்னாடி என்ன பிசினஸ் பண்றது அப்படின்னு சொல்லி ரொம்ப நேரம் திங்க் பண்ணனும். நமக்கு கைக்குள்ள இருக்கிறது என்னன்னு பார்த்தா என்னுடைய நேட்டிவ்ல அந்த காலத்திலயே சிறு பவர்லூம் தொழில் தான். சோ வில் கோ த்ரூ தட் அதையே போலாம்னு சொல்லிட்டு அதான் பிசினஸ் ஸ்டார்ட் பண்ணனும். பக்கத்துல என்ன இருக்கோ அதை பார்த்துட்டு அதையே ஸ்டார்ட் பண்ணிட்டோம். ஓகே ஓகே. ஓகே சார் இப்போ நீங்க பிசினஸ் ஸ்டார்ட் பண்ணனும்னு முடிவு பண்ணிட்டீங்க. அப்புறம் உங்களோட டார்கெட் ஆடியன்ஸ நீங்க எப்படி ரீச் பண்ணீங்க சார்? கஸ்டமர் எல்லாம் ஒன்னும் கிடையாது அப்போ. நான் வந்து வென் ஐ ஸ்டார்டட் மை பிசினஸ், ஐ ஸ்டார்டட் வித் ஜாப் வொர்க் ஒன்லி. ஓகே ஓகே. கஸ்டமர் எல்லாம் அன்னைக்கு கிடையாது. ஒன்லி ஜாப் வொர்க். ஜாப் வொர்க் எடுத்துட்டு வந்து அதாவது யான் எடுத்துட்டு வந்து அதை வந்து சாரியா மாத்தி அதை அவங்களுக்கு டெலிவரி கொடுப்போம். அதுல வந்து நமக்கு அந்த கூலி மட்டும் கொடுப்பாங்க. அதான் ஸ்டார்டிங். இனிஷியல் ஸ்டார்ட்அப் இஸ் தட் ஒன்லி. ஓகே ஓகே. ஓகே சார். ஸ்டார்ட்டிங்ல ஸ்மால் ஸ்கேலா இருந்த பிசினஸ, லார்ஜ் ஸ்கேல் கொண்டு வந்து ஸ்ட்ராடஜி எங்களுக்காக கொஞ்சம் சொல்ல முடியுமா சார்? ஸ்மால் ஸ்கேல் அப்படிங்கறது ரொம்ப ஸ்மால் ஸ்கேல் மீன்ஸ் இட்ஸ் கோயிங் டு பி எ வெரி ஸ்மால் ஸ்கேல். ஓகே ஓகே. எம்எஸ்எம்இ மாதிரி இல்ல அதைவிட கீழ. பட் பிக் ஸ்கேல் மாத்துறதுக்கு இட் வாஸ் டேக்கன் பார் மோர் தென் 15, 20 இயர்ஸ். நாட் ஈஸி திங். இன்னைக்கெல்லாம் வந்து இன்னைக்கு ஆரம்பிச்சாங்கன்னா கேன் சே ஐடி செக்டார்ல எல்லாம் இன்னைக்கு ஆரம்பிச்சா ஒரு வருஷம், ரெண்டு வருஷம், நாலு வருஷம் எல்லாம் மேல டக்கு டக்குன்னு போயிடுறாங்க. அன்னைக்கு அதெல்லாம் கிடையாது. அந்த அன்னைக்கு ஐடி ஐடி ஃபீல்டே கிடையாது. எஸ் சார். டெலிபோனுக்கே ரொம்ப கஷ்டம். நாங்க எல்லாம் ஆரம்பிச்சப்போ புதுசுல டிவி கிடையாது. போன் கிடையாது. ரொம்ப சிரமம். போன் வந்து இருக்கும். எங்க ரொம்ப லாங் பெரிய சிட்டிஸ்ல இருக்கும். எங்க ஏரியால அதெல்லாம் கிடையாது. சோ இட் வாஸ் டேக்கன் பார் லாங் டைம் 15, 20 இயர்ஸ் ஆச்சு. லார்ஜ் ஸ்கேல் பண்றது. ஓகே சார். ஓகே சார். ஸ்டார்ட்டிங்ல ஸ்மால் ஸ்கேலா இருந்த பிசினஸ, லார்ஜ் ஸ்கேலா கொண்டு வந்த ஸ்ட்ராடஜி எங்களுக்கு கொஞ்சம் சொல்ல முடியுமா சார்? அது நான் முதல்லயே சொன்னேன்ல ஃபர்ஸ்ட் வென் வி ஸ்டார்டட்னா தட் டைம் நம்ம வந்து வேஜஸ்க்கு தான் பண்ணனும். கூலிக்கு எடுத்து பண்ணனும். அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமா டெவலப் ஆனதுக்கு அப்புறம் ரா மெட்டீரியல் சோர்ஸ் பண்ணனும். டெக்ஸ்டைலுக்கு இம்பார்ட்டண்ட் திங் யான். அந்த யான் கோயம்புத்தூர் மார்க்கெட்ல நிறைய கிடைச்சது அப்போ. அதனால அது ஒன்னும் பிரச்சனை இல்லை. சோர்ஸ் பண்றது நோ பிராப்ளம் அட் ஆல். ஓகே சார். அடுத்து கேபிஆர் குரூப்ஸோட மிகப்பெரிய இனிஷியேட்டிவ் வந்து கேபிஆர் மில் எஜுகேஷன் சார். அதுல நீங்க பெண்களை வேலைக்கு வைக்கிறது மட்டும் இல்லாம அவங்களுக்கு எஜுகேஷனும் கொடுக்குறீங்க. சோ அந்த இனிஷியேட்டிவ் உங்களுக்கு எப்போ சார் வந்தது? அதாவது இன்னைக்கு இன்னும் சுருக்கமா சொல்லப்போனா இந்த படிக்காத பெண்கள் இந்த வசதி வாய்ப்பு இல்லாத குடும்பத்திலிருந்து வரக்கூடிய பெண்களுக்கு வந்து படிக்கிறதுக்கு வசதி வாய்ப்புகள் கிடைக்கல.
[6:11]அந்த மாதிரி பெண்கள் தான் நம்மகிட்ட வேலைக்கு வந்தாங்க. மில்லல வேலை செய்றதுக்கு, கார்மென்ட்ல வேலை செய்றதுக்கு நம்மள தேடி வந்தாங்க. அவங்கள்ல ஒரு சிலர் பார்த்தா ரொம்ப பிரில்லியன்ட் பிரைட்டா இருக்காங்க. அதாவது உங்களை எல்லாம் பிரைட்லின்னு சொல்லேன். யூ ஆர் ஆல்சோ பிரைட். ஈக்குவல் பிரைட் லைக் யூ ஒன்லி த பீப்பிள்ஸ் ஆர் வொர்க்கிங் தேர் இந்த மில் அண்ட் கார்மெண்ட்ஸ். அவங்கள்ல வந்து ஒரு பொண்ணு வந்து என்கிட்ட ரொம்ப ரிக்வெஸ்ட் பண்ணுச்சு. இந்த மாதிரி எனக்கு படிக்கிறதுக்கெல்லாம் ஆசையா இருக்குது. என்னைய படிக்க வைக்க முடியுமான்னு. அன்னைக்கு திங்க் பண்ணனும். சரி ஏன் இப்ப வந்து யூஎஸ் போனீங்கன்னா யூஎஸ்ல வந்து வென் யூ ஆர் ஸ்டடியிங், யூ ஆர் வொர்க்கிங். பார்ட் டைம் வொர்க் இருக்குது இல்லையா அங்க. அது மாதிரி வென் வி ஆர் தேர் வொர்க்கிங் ஒய் டோன்ட் தே கோ பார் ஸ்டடியிங் அப்படின்னு திங்க் பண்ணனும். அதனோட தாக்கம் தான் இந்த எஜுகேஷன். மில் எஜுகேஷன். ஓகே சார். இப்போ மில்ல வேலை பாக்குற பெண்கள் எல்லாருமே உங்களை உரிமையா அப்பான்னு கூப்பிடுறாங்க சார். அதைப்பத்தி நீங்க என்ன சார் ஃபீல் பண்றீங்க? நான் மில் ஆரம்பிச்சது 1996. அப்போ என்னுடைய ஏஜ் என்ன ஒரு என் பொண்ணு எல்லாம் என் பொண்ணுகளும் அந்த பொண்ணுகளும் சேம் ஏஜ். என் பொண்ணுக்கு ஒரு 20, 21, 22 இருந்திருக்கும். அந்த மில்ல வேலை செய்ய வந்த பொண்ணுகளுக்கு அதே ஏஜ். நான் வந்து அந்த பொண்ணு என் பொண்ணு மாதிரியே பார்த்தேன். அவங்க என்னை அப்பா மாதிரியே பார்த்தாங்க அவ்வளவுதான். வேற ஒன்னும் இல்லை. ஓகே சார். சார் நீங்க கேபிஆர் மில் எஜுகேஷன் மட்டும் இல்லாம செப்பரேட்டா காலேஜும் ரன் பண்ணிட்டு இருக்கீங்க சார். சோ டெக்ஸ்டைல் இண்டஸ்ட்ரில இருந்து எஜுகேஷன் செக்டார்க்கு இந்த டிராவல் எப்படி சார் இருக்கு? டெக்ஸ்டைல் இண்டஸ்ட்ரிஸ்ல நம்ம ஒரு அச்சீவ் பண்ணக்கூடிய ஸ்டேட்டஸ்க்கு வந்துட்டோம். நம்ம நமக்கு வந்து இந்த மக்கள் மூலமா நிறைய இன்கம் கிடைக்குது. நம்ம ஓரளவுக்கு குரோ ஆயிருக்கிறோம். சோ இந்த சொசைட்டிக்கு நம்ம என்ன கான்ட்ரிபியூட் பண்ணனும் அப்படின்னு நினைச்சதனுடைய விளைவுதான் இந்த காலேஜ் ஆரம்பிச்சது. திஸ் ஆல்சோ ஸ்டார்ட்டட் பார் 15 இயர்ஸ் பேக். ஸ்டெப் பை ஸ்டெப்பா இன்ஜினியரிங் காலேஜ் ஆரம்பிச்சோம். இப்ப ஆர்ட்ஸ் காலேஜ் ஆரம்பிச்சிருக்கிறோம். அகைன் பிரீவியஸ்லி வி ஸ்டார்டட் எம்பிஏ ஆல்சோ. பட் சம் ரீசன்ஸ் இட் வாஸ் ஸ்டாப்ட் அண்ட் அகைன் வி ரீஸ்டார்டட். தட் ஆல். சார் இப்போ இருக்க சிச்சுவேஷன்ல பார்ட்னர்ஷிப் ஃபர்ம் குள்ளயே மியூச்சுவல் கம்யூனிகேஷன் இல்ல சார். பட் கேபிஆர் இஸ் எ ஃபேமிலி ரன் பிசினஸ். சோ அதை நீங்க எப்படி சார் ஸ்மூத்தா கொண்டு போறீங்க? இல்ல எங்க ஃபேமிலியை பொறுத்தவரையில எல்லாரும் ஐ வி நம்ம ஒருத்தருக்கு ஒருத்தர் வந்து எந்த பிரச்சனையும் இல்லாத ஒன்ஸ் இன் எ மீட்டிங் போட்ட ஒன்ஸ் இன் எ மந்த் மீட்டிங் போட்டுக்கிறோம். எனி ப்ராப்ளம் வந்ததுன்னா ஆன் தி ஸ்பாட் வி ஆர் கோயிங் டு சார்ட் அவுட். சோ எவ்ரிதிங் கோயிங் ஸ்மூத். ஓகே ஓகே. சார் பூ கடைக்கு விளம்பரம் தேவையில்லை சார். அதே மாதிரி கேபிஆர்க்கும் விளம்பரம் இருந்து நாங்க பார்த்தது இல்ல சார். சோ இனிஷியல் ஸ்டேஜ்ல ப்ரமோஷன், அட்வர்டைஸ்மெண்ட் அது மாதிரி உங்களுக்கு பண்ணனும்னு தோணிருக்கா சார்? நம்ம முதல்லயும் பண்ணல இப்பவும் பண்றதில்லை. ஏன்னா நம்ம நம்ம தொழில் வந்து வி ஆர் எக்ஸ்போர்ட் இந்த கார்மென்ட்ஸ். எஸ் சார். வி ஆர் செல்லிங் தி யான் இன் தி மார்க்கெட். யான் மார்க்கெட்ல நம்ம குவாலிட்டி சூப்பர் குவாலிட்டி. அதனால நம்மள தேடி வந்து வாங்குறவங்க தான் அதிகம். நம்மளா தேடி போய் பார்க்கணுங்கிற அவசியம் இல்லை. எக்ஸ்போர்டுக்கு நம்ம இங்க இருந்து விளம்பரம் கொடுக்கணுங்கிற அவசியம் இல்லை. ஃபேசோன் ஆரம்பிச்சோம். அதுக்கு மட்டும் கொஞ்சம் விளம்பரம் கொடுத்திருக்கிறோம். மத்தபடிக்கு விளம்பரம் எதுவுமே பெருசா பண்றது இல்லை. ஈவன் வென் வி ஸ்டார்டட் திஸ் இன்ஜினியரிங் காலேஜ் தட் ஆல்சோ வி வாஸ் கிவன் சம் ஆட். நவ தட் ஆல்சோ வி ஆர் நாட் க்ளோஸ்ட் ரெடியூஸ்ட். விளம்பரத்தை குறைத்து விட்டோம் அவ்வளவுதான். ஓகே ஓகே. சார் இப்போ கோவிட் டைம்ல எல்லா பிசினஸுமே ஒரு டவுன்ஃபால்ல இருந்துச்சு சார். பட் ஆனா அப்படி இருந்தும் நீங்க வந்து உங்க எம்ப்ளாயிஸ்க்கு ஃபுல்லா ஃபுல் சேலரி கொடுத்திருக்கீங்க. சோ அந்த பினான்சியல் சிச்சுவேஷன் நீங்க எப்படி சார் ஹேண்டில் பண்ணீங்க? அதாவது டவுன்னு சொல்ல முடியாது. அந்த டைம்ல கொஞ்சம் ஸ்டாப் பண்ணி வச்சிருந்தாங்க. மில்களை வந்து யூ சுட் நாட் வொர்க் அப்படின்னு சொல்லி வச்சிருந்தாங்க. நம்ம என்ன பண்ணனும் எல்லாரத்தையும் இங்கயே நாம பிகாஸ் மத்தவங்க எல்லாம் என்ன பண்றாங்கன்னா எல்லாம் வொர்க்கவுட்ஸ் ஆல் ஆர் கமிங் பிரம் மெஜாரிட்டி ஆஃப் தி வொர்க்கவுட்ஸ் ஆர் கமிங் பிரம் ஹோம். ஹோம் ஆர் சம் நியர் பை ஏரியாஸ் தே யூஸ்டு கம். நம்ம பொறுத்த வரையிலும் எவ்ரிபடி வி ஆர் கீப்பிங் இன் தி ஹாஸ்டல். சோ எல்லாரத்தையும் ஹாஸ்டலாவே வச்சுக்கிட்டோம். யாரையும் வெளிய போறதுக்கு அலவ் பண்ணல. வெளியிலிருந்து உள்ள வரதுக்கு அலவ் பண்ணல. சோ அதனால நம்மள பொறுத்த வரையிலும் ஒரு 30,000 பேர் ஹாஸ்டலுக்குள்ளயே இருந்தாலும் அந்த 30,000 பேர்ல நாட் இவன் எ சிங்கிள் பெர்சன் கூட இந்த கோவிட்னால எபெக்ட் ஆகல. அடுத்தது பாத்தீங்கன்னா இன்குளூடிங் நம்ம காலேஜ் இன்ஜினியரிங் காலேஜ், ஆர்ட்ஸ் காலேஜ். அவங்க எல்லாருமே ஆன்லைன் கிளாஸ் எடுத்தாங்க. ஆன்லைன் கிளாஸ் எடுக்கும்போது நமக்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லாத நார்மலா எப்படி கிளாஸ் நடக்குமோ அதே மாதிரி ஒரு சின்ன டிஃபரன்ட். ஆன்லைனுக்கும், ஆஃப்லைனுக்கும் உள்ள வித்தியாசத்தை தவிர வேற எந்த வித்தியாசமும் ஃபீல் பண்ணல. சோ ஆட்டோமேட்டிக்கா எல்லாம் நடந்ததுனால எல்லாத்துக்கும் நாம் பேமெண்ட் கொடுத்துட்டோம். ஓகே ஓகே. சார் இன்னைக்கு புதுசா டெக்ஸ்டைல் இண்டஸ்ட்ரிகுள்ல வரவங்களுக்கு நீங்க கொடுக்கிற அட்வைஸ் என்னவா சார் இருக்கும்? ஆர்வமிருந்து பண்ணலாம்னு ஒரு முயற்சி இருந்ததுன்னா எந்த தொழிலை எப்ப வேணாலும் பண்ணலாம். டெக்ஸ்டைல் தொழில்னு இல்லை. எல்லா தொழிலுமே நல்லா இருக்கும். பட் யூ ஹவ் டு இன்வால்வ் இன் டெப்த். முழு ஈடுபாடோட முழு முயற்சியோட இறங்குனீங்கன்னா எல்லா தொழிலையுமே நல்லா பண்ணலாம். சார் இப்போ எங்களை மாதிரியான மேனேஜ்மெண்ட் ஸ்டூடண்ட்ஸ் அண்ட் எம்பிஏ படிக்கிறவங்களுக்கு நீங்க கொடுக்கிற அட்வைஸ் என்னவா சார் இருக்கும்?
[11:10]அருமையான அட்வைஸ். என்னன்னு கேட்டா நல்ல பசங்க நல்ல பொண்ணுங்க. நான் சொன்னேன்ல கொஞ்ச நேரத்துக்கு முந்தி இப்போதைக்கு நல்லா சாப்பிடுங்க. நல்லா படிங்க. நல்லா விளையாடுங்க. ஹெல்த்த நல்லா பார்த்துக்கங்க.
[11:39]ஹெல்த் இஸ் வெல்த். இன்னைக்கு வந்து ஹெல்த்துக்கு செலவு பண்ணக்கூடியது நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு எல்லாரும் பண்றாங்க. ஒரு ஹாஸ்பிடல்ல போய் பார்த்தீ நான் சினிமா தியேட்டர்ல முதல்ல ரொம்ப கூட்டம் இருக்கும்.
[12:00]இப்பவும் இருக்கு பட் அதைவிட அதிகமா ஹாஸ்பிடல்ஸ்ல இருக்கு. அதனால ஹெல்த்த ஃபர்ஸ்ட் மேக் பண்ணிக்கங்க. அதுக்கு அடுத்தது நல்லா குவாலிஃபைடா படிச்சு முடிச்சிருங்க. அதுக்கப்புறம் ஒன்றே செய் நன்றே செய். எந்த தொழில் உங்களுக்கு பிடிக்குது. உங்களுக்கு மனசுக்கு என்ன பிடிக்குது. இப்ப நான் வந்து டெக்ஸ்டைல் பண்ணிட்டேன் அப்படிங்கறதுக்காக என்னை ஃபாலோ பண்ணனும்ங்கிறது இல்லை.
[12:28]பக்கத்துல இருக்கறவங்க வந்து ஒரு டாக்டர் ஆகி ஹாஸ்பிடல் கட்டுறாங்க. அது மாதிரி நீங்க படிச்சு ஆகணும்ங்கிற அவசியம் இல்லை. உங்களுக்கு எது பிடிக்குது. உங்க தொழில் என்ன ஒரு ஐடி வேற எனி ஒரு கான்ட்ராக்ட் இது மாதிரி எத்தனையோ இருக்கு. அதுக்கு மேல இன்னும் வந்து நான் சொன்ன மாதிரி ஐஏஎஸ், ஐபிஎஸ். எம்பிஏ முடிச்சிட்டு ஐஏஎஸ், ஐபிஎஸ் இது மாதிரி கூட போலாம். அது வந்து ஒரு அருமையான வேலை. இது மாதிரி யூ ஹவ் டு டிசைட் யூ ஹவ் டு டிஃபைன் யுவர் லைஃப். அதை நீங்கதான் டிசைட் பண்ணனும். எந்த தொழிலை போனாலும் அந்த தொழிலுக்கு வளர்ச்சி இருக்குது. எப்பவுமே இருக்குது. இன்னும் உதாரணத்துக்கு சொல்லப்போனால் 1971ல நான் பவர்லும் மாறிப்பவும்போது நான் போய் ஒருத்தர் கிட்ட கேட்டேன். எங்க சொந்தக்காரர் அவரு பவர்லும் வச்சு ஓட்டிட்டு இருக்காரு. அவர்கிட்ட நான் போய் கேட்டதுக்கு அவர் சொன்னது என்ன தெரியுமா? டேய் இதெல்லாம் அந்த காலத்திலேயே முடிஞ்சு போச்சு. 71 65 66லயே முடிஞ்சு போச்சு. 71ல நீ வந்து பவர்லூம் போட போறேன். நீ எங்க போய் ஓட்ட போற அப்படின்னாரு. எனக்கு எப்படி முதல் கேள்விக்கு அவர் சொன்ன பதில் அதான். பட் டெடிகேட்டா போய் உட்கார்ந்து பண்ணேன். எஸ் ஐ சக்சீடட். அதுக்கப்புறம் ஸ்பின்னிங் மில் போடும்போது ஸ்பின்னிங் மில் போட்டவன் கோயம்புத்தூர்ல இருக்கிறவங்க எல்லாருமே ஒன்னொன்னா பூட்டிட்டு இருக்காங்க. நான் ஆரம்பிச்சது 1996. கோயம்புத்தூர் வந்து தென் இந்தியாவின் மான்செஸ்டர்னு சொல்லுவாங்க. அப்படிப்பட்ட இந்த ஊர்ல இருக்கக்கூடிய இவங்களே எல்லாம் ஒன்னொன்னா க்ளோஸ் பண்ணிட்டு இருக்காங்க மில்லை. இவன் போய் ஆரம்பிக்கிறேன் இதோட இவன் கதை முடிஞ்சது அப்படினாங்க. ஈவன் எங்க பிரதர்ஸ் தே ஹேவ் எ டவுட் இது போட்டா ஆரம்பிச்சா பண்ண முடியுமா அப்படின்னு டவுட் பட்டாங்க. ஆனா நான் இதை பண்ணியே ஆகணும்னு பண்ணேன். 1996 டூ இன்னைக்கு 28 வருஷம் ஆச்சு. இந்த 28 வருஷமா நான் லாபகரமாத்தான் ஓட்டிட்டு இருக்கிறேன். எத்தனையோ மில்கள் ஆரம்பிச்சாங்க, க்ளோஸ் பண்ணாங்க. ஆல்ரெடி ஆரம்பிச்சதும் க்ளோஸ் பண்ணிட்டு இருக்காங்க. முடியாத போறது இருக்குது. நல்லா பண்றவங்களும் வெரி ஃபியூ பீப்பிள்ஸ் ஆர் தேர். நம்ம மில் நல்லா ஓடிட்டு இருக்குங்கிறது காரணம் நம்மளட்ட டெடிகேஷன். அயராத உழைப்பு. டிசிஷன் மேக்கிங். கரெக்ட் டைம்ல ரைட்டான டிசிஷன் மேக் பண்ணனும். இன்னைக்கு பார்க்கலாம் நாளைக்கு பார்க்கலாம் நாளை மறுநாள் பார்க்கலாம்னு நினைச்சீங்கன்னா முடிஞ்சு போச்சு. ஒரு ஒரு எமர்ஜென்சி ஒரு டிசிஷன் எடுக்கணும் ஆன் தி ஸ்பாட் நீங்க டிசிஷன் எடுக்கணும். அந்த டிசிஷன் மேக்கிங் கெப்பாசிட்டி இருக்கிறவங்க தான் சர்வைவல் ஆக முடியும். சோ யூ ஹவ் டு டேக் தி டிசிஷன் ஆன் தி ஸ்பாட். ஆனா அந்த டிசிஷன் எடுக்கிறேன்னு தப்பான ஒரு டிசிஷன் எடுத்துடக்கூடாது. அது வந்து வேற ரூட்ல போயிரும். இட் ஹேவ் டு பி இன் எ ரைட் மேனர். அந்த அளவுக்கு கான்பிடென்ட். அந்த அளவுக்கு கான்பிடென்ட் ரிச் பண்ணீங்கன்னா எஸ் வெல்கம் வெரி குட். சார் ஓகே சார். இப்போ கேபிஆர் மில்ல வந்து வேர்ல்ட் வைடு ப்ராடக்ட் சப்ளை ஆகுது சார். ஃபார் எக்ஸாம்பிள் வால்மார்ட், ஹெச்அன்ட்எம் மாதிரியான கம்பெனிக்கும் கேபிஆர் மில்ல இருந்து தான் ப்ராடக்ட் போகுது. சோ கேபிஆர் வேர்ல்ட் வைடு ட்ரைட் அதை பத்தி நீங்க கொஞ்சம் சொல்லுங்க சார். நம்ம வால்மார்ட் கேம்கார்ட் இல்ல அது இல்லாம நிறைய கம்பெனிகளுக்கு பண்றோம். டெக்அத்லான்ட் இருக்கு, சிஎன்ஏ இருக்கு, எம் அன்ட் எஸ் இருக்கு, பிரைமார்க்கு இருக்கு. இது மாதிரி மொத்தம் 63 கண்ட்ரிக்கு இதுவரைக்கும் நம்ம எக்ஸ்போர்ட் பண்ணிட்டு இருக்கிறோம். முதல்ல ஆரம்பிக்கும்போது சின்ன லெவல்ல ஆரம்பிச்சோம். ஸ்டெப் பை ஸ்டெப்பா, ஸ்டெப் பை ஸ்டெப்பா இப்ப நாலு ஃபேக்டரி இருக்குது. அடுத்தது அஞ்சாவது ஃபேக்டரி ஆரம்பிக்க போறோம் கூடிய சீக்கிரம். இப்ப அஞ்சு ஃபேக்டரி பண்ணும்போது இன்னைக்கு பார்த்தீங்கன்னா நம்ம டர்ன் ஓவர் கார்மென்ட் அலோன் 2500 குரோர்ஸ் இப்ப நம்ம பண்ணிருக்கிறோம். அநேகமா திருப்பூர் ஏரியாவில இந்த கார்மென்ட் எக்ஸ்போர்ட்ல வி ஆர் தி நம்பர் ஒன் லீடர்னு நான் நினைக்கிறேன். இன்னும் வந்து இதுக்கு மேலயும் இன்னும் பண்ண போறோம். சோ அதனால
[16:29]ஆல் அரவுண்ட் தி வேர்ல்டு. எல்லாரருக்கும் நம்மளப்பத்தி தெரியுற அளவுக்கு ஒரு 63 கண்ட்ரில பண்ணிட்டு இருக்கிறோம். சோ இட்ஸ் கோயிங் குட். லண்டன்ல வந்து நாம ஆபீஸ் வச்சிருக்கிறோம். நம்ம ஸ்டாப் இருக்காங்க. சிங்கப்பூர்ல ஆபீஸ் இருக்கு. இதெல்லாம் பண்ணிட்டு இருக்கிறோம். நல்லா பண்ணிட்டு இருக்கிறோம். நல்லா போயிட்டு இருக்குது. குட். சார் லாஸ்ட் கொஸ்டின் சார். சார் இப்போ நீங்க இந்தியால 100 ரிச்சஸ்ட் மேனா இருக்கீங்க சார். அண்ட் அக்ராஸ் தி குளோப் ஒன் ஆஃப் தி இன்ஸ்பயரிங் பிசினஸ் லீடராவும் இருக்கீங்க. அண்ட் இவ்வளவு பெரிய லெகசிக்கு பின்னாடி ஒரு ஹம்பிள் பிகினிங் இருக்கும் சார். சோ எங்களுக்காக அதை கொஞ்சம் சொல்ல முடியுமா சார்? எப்படி சொல்றதுன்னு தெரியல. பட் 100த் ரிச்சஸ்ட் மேன் அப்படிங்கறது எனக்கு தெரியாது. ஐ டோன்ட் நோ. அந்த போப்ஸ் பேப்பர்ல வந்ததுனாலதான் எனக்கும் தெரிஞ்சது எல்லாத்துக்குமே தெரிஞ்சிருக்குது. ஐ டோன்ட் திங்க் சோ இன்னைக்கும் நான் வந்து 100த் ரிச்சஸ்ட் மேன் அப்படின்னு நான் நினைக்கிறதில்லை. நான் வந்து ஒரு 30 40 வருஷத்துக்கு முந்தி எப்படி இருந்தனோ அதே மாதிரிதான் இருக்கிறேன். ஹம்பிளாத்தான் இருக்கிறேன். எல்லார்ட்டயுமே நல்லாத்தான் இருக்கிறேன். நிர்வாகம் நல்லா பண்ணனும். எல்லாரும் நல்லா இருக்கணும். எல்லாருக்கும் நம்மளால முடிஞ்ச சப்போர்ட் பண்ணனும் அப்படிங்கறதுதான் என்னுடைய ஆசைகள். கண்டிப்பா நல்லா பண்ணலாம் பண்ணுவோம்.
[17:53]ஸ்டில் எனிபடி வான்ட்ஸ் டு ஆஸ்க் எனி கொஸ்டின் யூ ப்ளீஸ் கம் அவுட். இப்ப நீங்க வந்து எஜுகேஷன், டெக்ஸ்டைல் மேனுஃபாக்சரிங் யூனிட்ஸ்னு பல ஆங்கிள்ஸ்ல நீங்க வந்து டைவர்சிஃபை ஆகிருக்கீங்க. இதுல நீங்க நிறைய சேலஞ்சஸ் பேஸ் பண்ணிருப்பீங்க. இந்த மாதிரி சேலஞ்ச் இதுல வந்து உங்களுக்கு பெரிய சேலஞ்ச் எது அதை எப்படி ஓவர்கம் பண்ணீங்க சார்? சேலஞ்ச் இல்லாத தொழில் கிடையாது சேலஞ்ச் இல்லாத லைஃப் கிடையாது. யூ ஹேவ் டு ஓவர்கம் எவ்ரிதிங். எல்லாத்துக்குமே ஒரு ரிசல்ட் ரெமடி இருக்குது. அந்த ரெமடியை வச்சு யூ ஹேவ் டு கம் அவுட். சேலஞ்ச் இல்லாத லைஃப் இல்லை. சேலஞ்ச் இல்லாத தொழில் இல்லை. எதா இருந்தாலும் சேலஞ்ச்னு இருந்தே தீரும். ஏன் அவ்வளவு வேகமா பார்த்தீங்கன்னா இன்னைக்கு பார்த்தீங்கன்னா ஒரு குழந்தையை வளர்த்து ஸ்கூல்ல கொண்டு போய் விட்டு அந்த குழந்தையை படிக்க வச்சு ஒரு பெரிய ஆள் பண்றதுங்கறது இஸ் நாட் எ ஸ்மால் திங். பெரிய சேலஞ்ச் இப்ப உங்களை எல்லாம் ஸ்கூலுக்கு காலேஜுக்கு அனுப்பிச்சு விட்டு இருக்காங்க. அவங்க பேரண்ட்ஸ் எல்லாம் எவ்வளவு சேலஞ்ச் எடுத்திருப்பாங்க நீங்க நினைக்கிறீங்க. ஒரு ஒரு இடத்திலயும் சேலஞ்ச் இருக்குது. அதையெல்லாம் ஓவர்கம் பண்ணி வர்றதுதான் கெட்டிக்காரத்தனம். யூ ஹேவ் டு கம் அவுட். அதுல வந்து ஃபெயில் ஆயிட்டா பினிஷ். சார் ஷோவோட டைமிங் வந்து ஆக்சுவலா 3 ஓ கிளாக். ஆனா நீங்க வந்து 2 மினிட்ஸ் பிபோராவே வந்துட்டீங்க. சோ பங்ச்சுவாலிட்டி வந்து பிசினஸ்ல எவ்வளவு முக்கியம்னு நீங்க நினைக்கிறீங்க சார்? தட் இஸ் மை சக்சஸ். யுவர் கொஸ்டின் இஸ் ஆல்ரைட். எங்க போறதா இருந்தாலும் 3 மணின்னா ஒரு நிமிஷம் அல்லது ரெண்டு நிமிஷம் நான் முன்னாடி போயிருவேன். பின்னாடி எல்லாம் போகமாட்டேன். தேங்க்யூ சார். 100% எல்லாருமே பங்ச்சுவாலிட்டியை டைம் மெயின்டெயின் பண்ணுங்க. இதுல இன்னும் சொல்லப்போனா பேசிவிட்ட வார்த்தை, இழந்தவிட்ட காலம், தொடுத்துவிட்ட அம்பு இவைகளை திருப்ப பெறவே முடியாது. இன்னைக்கு இப்ப லூஸ் பண்ணிட்டீங்க. இந்த காலம் போனது போனதுதான். நாளைக்கு அகைன் திஸ் வோன்ட் கம் பேக். சோ முன்னெடுக்கக்கூடிய ஒரு ஒருத்தரும் இந்த பங்ச்சுவாலிட்டியை மெயின்டெயின் பண்ணியே ஆகணும். பண்ணீங்கன்னா தான் நல்லா இருக்கும். சார் உங்களை வந்து இங்க இருக்கிற நிறைய பேர் வந்து இன்ஸ்பிரேஷனா நாங்க பாத்துட்டு இருக்கோம். பட் உங்களுக்கு வந்து யாரு இன்ஸ்பிரேஷனா இருந்தாங்க அண்ட் எந்த ஒரு இடத்துல நீங்க அடுத்த ஸ்டேஜ்க்கு போகணும்னு நீங்க ஆசைப்பட்டீங்க? மைசெல்ப் இஸ் மை இன்ஸ்பிரேஷன். ஐ டோன்ட் ஹேவ் எனிபடிஸ் இன்ஸ்பிரேஷன். நான் யாரையுமே ஃபாலோ பண்றது இல்லை. என்னை நானே ஃபாலோ பண்ணிக்கிறேன். இட்ஸ் கோயிங் டு பி இன்பில்ட். சார் இப்ப எல்லாமே ப்ராப்ளம் வந்து எல்லாமே பிளான் போட்டுட்டு டிசைன் எடுத்தாலும் அது ஃபெயிலியர் ஆகாது சார்.
[20:17]ஆனா நீங்க எல்லாமே ஸ்பாட் டெசிஷன் எடுக்குறீங்க. அது எப்படின்னு சார் அது அந்த ஸ்கில் நாங்க எப்படிங்க சார் வளர்த்துக்கிறது. வருமுன் காப்போம். நாளைக்கு என்ன வரப்போகுது? இப்ப வந்து நான் சொல்லுவேன் எப்பவுமே இந்த கப் எடுத்துட்டு தம்பி இந்த கப் நல்லா இருக்குதுல? நல்லா இருக்கு. நல்லா இருக்குது சார். நல்லா இல்ல. அவ்வளவுதான். அதாவது நீ எதுவாக ஆக நினைக்கிறாயோ அதுவாக ஆகிவிடுவாய். இது இது வந்து நடக்கும்னு அப்படின்னு நினைச்சா நல்லா இருக்குதா? நல்லா இல்லையா? நல்லா இல்லை. யூ ஹேவ் டு மேனேஜ் அக்கார்டிங் டு தட். அதாவது என்னால முடியும் அப்படிங்கிற ஒரு முடிவு பண்ணி பண்ணிட்டீங்கன்னா கண்டிப்பா முடியும். எப்பவுமே பாசிட்டிவ் திங்கிங், பாசிட்டிவ் திங்கிங், பாசிட்டிவ் திங்கிங். ஐயோ இது என்னால முடியாது அப்படின்னு நினைச்சீங்கன்னு வச்சுக்கங்க. படுத்துக்கங்க சுருண்டு படுத்துக்கங்க. எஸ் ஐ கேன் டூ அப்படின்னு எந்திரிச்சு பாருங்க. எஸ் 100% யூ கேன் டூ தட். நம்மகிட்ட இல்லாத திறமை யார்கிட்டயுமே இல்லை. உலகத்துல வந்து எந்த ஒரு மனிதர்கிட்டயுமே திறமை இல்லாதவங்க கிடையாது. எல்லார்டயுமே திறமை இருக்கு. அந்த திறமையை வெளிக்கொண்டு வர்றதுதான் உங்க உங்ககிட்ட இருக்குது. அதை யூ ஹேவ் டு பிரிங் இட் அவுட். நான் வந்து பெரிய எம்பிஏ படிச்சவன் இல்லை. பெரிய படிப்பு கிடையாது. இன்னைக்கு இந்த அளவுக்கு உயர்ந்து இருக்கிறோங்கிறது உங்களுக்கு எல்லாத்துக்குமே தெரியும். நான் வந்து பெருசா என்னை பத்தி சொல்லிக்கிறதுக்கு ஒன்னும் இல்லை. நீங்க எல்லாம் என்னைப்பத்தி பெருசா சொல்றீங்க. ஓகே ஆல்ரைட் ஐ டூ ஐ டூ அக்செப்ட். பட் அதுக்கு என்னன்னு நினைச்சீங்கன்னா இன்னும் சுருக்கமா சொல்லப்போனா என்னுடைய சின்ன வயசு. நான் எய்த் ஸ்டாண்டர்ட் படிக்கிறேன். அப்ப வந்து என்ன ஏஜ் இருக்கும்? ஒரு 13, 14 இருக்குமா? என்னுடைய சொந்த மாமன் பையன் வேற யாரும் இல்லை. நம்ம மேடத்துட அண்ணன். எனக்கு சொந்தமா மாமா பையன். அவன் வந்து அவன் பிரண்ட்ஸ் அப்படி இப்படி சும்மா அவன் டிரஸ் கோடு அழகா இருக்கு. சைக்கிள் வருவேன். சும்மா அவன் கொஞ்சம் கலராவும் இருப்பேன். இந்த கையில வாட்ச் அந்த கருப்பு பட்டை போட்ட வாட்ச் இன்னைக்கு அதெல்லாம் ஒன்னும் இல்லை இன்னைக்கு. அன்னைக்கு பார்த்தீங்கன்னா அது ரொம்ப பெருசு. அப்படின்னு வருவாங்க. நம்ம பார்த்தா என்னமோ ஒரு வளப்பையை தோல்ல போட்டு சோத்து பொசி புடிச்சிட்டு இப்படி போயிட்டு இருப்போம். யூ கேன் சீ த டிஃபரன்ட். அன்னைக்கு நான் நினைச்சேன். நம்மகிட்ட காசு இல்லை. காசு இருந்தா எப்படி அவனைவிட ஓவர்டேக் பண்ண முடியும்? ஐ வான்ட் டு மேக் தி மணி. எஸ் ஐ டிசைடட் ஐ டிட் இட். அதான். புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். சின்ன வயசுல 13, 14 வயசுல நான் எடுத்த முடிவு. நான் இதை இந்த காசு பண்ணனும். காசு வேணும். அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை. பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை. அருள் அங்க உலகம் ஒன்னு இருக்குதேன்னு யாருக்கும் தெரியாது. ஹூ நோஸ்? பொருள் இந்த உலகத்துல வேணும். பொருள் வேணும். பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை. திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடுனாங்க. அந்த திரவியத்தை தேடணும். இது வந்து எஸ்பெஷலி ஃபார் எம்பிஏ ஸ்டூடண்ட்ஸ்க்கு. திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு. எங்க வேணா போங்க என்ன வேணா பண்ணுங்க. யூ ஹேவ் டு வின் த வேர்ல்ட். யூ ஹேவ் டு அச்சீவ் யுவர் லைஃப். அந்த லைஃபை அச்சீவ் பண்றதுக்கு பணம் வேணும். அதுக்கு தொழில் வேணும். அந்த தொழிலை வந்து டெடிகேஷனா பண்ணாதான் பண்ண முடியும். நிச்சயமா பண்ண முடியும்னு நினைக்கிறேன். என்னுடைய வாழ்த்துக்கள். டைம் எங்களுக்காக ஸ்பெண்ட் பண்ணதுக்கு ரொம்ப நன்றி சார். தேங்க்யூ. ஒரு மனிதனோட மன உறுதி எப்படி ஒரு ஒட்டுமொத்த சமூகத்தையும் மாற்றி அமைக்க முடியும்ங்கறதுக்கு நம்ம சார் ஒரு எக்சலன்ட் எக்ஸாம்பிள். ஆன் பிகாஃப் ஆஃப் கேபிஆர் பிசினஸ் ஸ்கூல் வி விஷ் அன்ட் வி பிரே திஸ் லெகசி வில் கன்டினியூ டு இன்ஸ்பையர் ஃபியூச்சர். இதே மாதிரியான வண்டர்ஃபுல் செஷன்ல மீட் பண்ணலாம். தேங்க்யூ.



